தித்திக்கும் நினைவுகள்-7

 


அத்தியாயம் -7

அடுத்த நாள் காலை போன் ரிங் அடிக்க எடுத்தாள் சாதனா. எதிர்புறம் அசோக் அழைத்து இருந்தான்.

''சொல்லு அசோக்''

''ஏய் கார்த்திக் டென் ஓ கிளாக் நேரம் கொடுத்து இருக்கார் ரெடி ஆகிடு. அப்பறமா அவரும் அதே ஹோட்டலில் தான் இருக்கார் சோ நீ அங்கே இரு'' என்றான் அசோக்

'' ஓகே ஓகே வை நான் ரெடி ஆகறேன் வை'' என் துண்டித்து மணியை பார்க்க அது ஏழு காட்டியது. ஓஹ் காட் கௌதம் எழுந்து இருப்பாரோ சே முதலில் குளித்து கிளம்பி முன்ன நிற்கலாம் என்று ரெடி ஆனாள்.

எந்த டிரஸ் ஐயோ இப்ப பார்த்து ரெட் சுடி எடுத்துக்கொண்டு வரலை கௌதமிற்கு ரெட் கலர் ரொம்ப பிடிக்குமே என்று வருந்தி தனது ப்ளூ ஜீன்ஸ் ஒயிட் குர்தி எடுத்து அணிந்தாள். வேகமாக ஒரு போனி டெய்ல் மாட்டி அதற்கேற்றவாறு சின்னதாக முத்து செட் கம்மல் ஒயிட் வாட்ச் முத்து பிரேஸ்லேட் அணிந்து ஐலைனர்-இல் பொட்டு வைத்து கதவை திறக்க ,

ப்ளூ ஜீன் பிஸ்தா க்ரீன் ஷர்ட்டின் கை பட்டனை மாட்டியவாறு, கேசம் அலைபாய நின்றிருந்தவனை தெவிட்டாமல் பார்த்து கொண்டு இருக்க, ''டீ டிபன் ஆர்டர் தரவா இல்லை கீழே போய் சாப்பிடலாமா?'' என்ற கேள்வியில் சுதாரித்தவள் ''கீழேயே போயிடலாம்'' என்றாள்.

கீழே இருந்த உணவகத்தில் டீ வந்தவுடன் இரண்டு செட் நெய் தோசை ஆர்டர் செய்துவிட்டு அங்கிருந்த நாளிதழைப் புரட்டினான்.

டீ பருகியவாறு கால் மேல் கால் போட்டு அவன் நாளிதழை படிக்க, அவனை பார்த்தவாறே டீ சுவைத் செய்தாள்.

''ஸ்... ஆ...'' என்றே நாக்கு சுட்டவுடன் தான் சூடாக இருக்கும் டீயை கண்டு அவனையும் பார்த்தாள். அவனோ நாளிதழை கண்ணை பதித்தே மற்றொரு கையில் இருந்த டீயை மேஜையில் வைத்து விட்டு, ஜக்கில் இருந்த நீரை கண்ணாடி டம்ளரில் ஊற்றி அவளிடம் பார்வை பதிக்காமலே நீட்டினான்.

அவன் தன்னை பார்க்காமல் நாளிதழ் கண் பதித்த போதிலும் தன்னை கவனிக்க செய்கின்றான் என அறிந்து அந்நீரை வாங்கி குடித்தாள். இவர் எதுக்காக வந்து இருக்கார் என்றே கேட்கவில்லை கேட்போமா ? என்று யோசிக்க உணவு வர பேசாமல் உண்டனர்.

சாதனா மொபைல் அடிக்க எடுத்தவள் ''அசோக்''

''நான் ஹோட்டலில் வந்துட்டு இருக்கேன் நீ எங்க இருக்க?''

''சாப்பிடறேன் டா கீழே தான் இருக்கேன்''

''ஓகே ஓகே மெயின் எண்ட்ரன்ஸ்ல வெயிட் பண்ணு பைவ் மினிட்ஸ்ல வந்துடறேன்''

''சரி வா'' என கட் செய்து கௌதமிடம் ''அசோக் வந்துட்டான்...அந்த கார்த்திக் இங்க தான் தங்கி இருக்கான் சோ வேலை ஈஸி''

''சரி நீ வேண்டுமென்றால் கிளம்பு லக்கேஜ் அப்பறம் எடுத்துக்கோ'' என்றான்.

''பில் வரலையே''

''நான் கொடுத்துப்பேன் கிளம்பு'' என்றான். அவனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே போனாள்.

மெயின் கேட் வந்து நின்ற பின் அசோக் வர சற்று தாமதம் ஆனதும் சே இந்த அசோக் வேற லேட் பண்றான். பேசாம கௌதம் மாமாவோட இன்னும் கொஞ்ச நேரம் இருந்து இருப்பேன்.

சற்று நேரம் எடுத்து வந்தான் அஷோக. 'சாரி சாதனா பைக் பெட்ரோல் போட்டு வந்தேன். போகலாமா ?'' என்று லிப்ட்டில் ஏறினான்.

லிப்ட் நின்றதும் நேற்றைய இடம் போலவே வந்து விட்டோமோ என்றே எண்ணி கொண்டு வந்தாள். கௌதம் அருகே இருந்ததால் சரியாக நம்பர் பார்க்காத சாதனா எந்த அறை என்றே தெரியாமல் நேற்றைய அறைக்கே வந்து சேர்ந்தாள்.

'இந்த இடம் நேற்று தங்கிய இடம் மாதிரியே இருக்கு. இங்க எல்லா அறையும் ஒரே மாதிரி இருக்குமோ? என்றே யோசிக்க கௌதம் புன்னகையோடு அவள் முன் நின்றான்.

''சாரி லேட் பண்ணிட்டேனா?'' என்றே கேட்க

''இல்லை சார் ஷார்ப் டென். ஐ அம் அசோக் அண்ட் திஸ் இஸ் சாதனா'' என்றே அறிமுகப்படுத்த அவளோ இமைக்க மறந்து திகைத்து இருந்தாள்.

''ஹாய் ஐ அம் கௌதம் கார்த்திக்'' என்று கைகளை அசோக்கிற்கு தந்து அவளிடமும் நீட்டினான்.

''சாதனா என்ன யோசிக்கற கையை கொடு'' என்றே மெல்லிய குரலில் அசோக் சொல்ல விதிர்த்து கையை கொடுத்தாள்.

''உட்காருங்க'' என்று இருக்கைகளை காட்டினான் கௌதம்.

''சார் நீங்க யங் ஏஜ் என்று தெரியும் ஆனா இவ்ளோ யங் அண்ட் ஸ்மார்ட் என்று தெரியாது''

''தேங்க்ஸ்.... அசோக் ப்ளீஸ் கால் மீ கௌதம் ஆர் கார்த்திக். சார் வேண்டாம்''

''ஓகே முதலில் இன்டெர்வியூ முடிச்சிடட்டுமா?''

''ஓஹ் எஸ்''

''சாதனா கேள்வி ஆரம்பி''

''அசோக்... நீயே கேட்டுடறியா? ப்ளீஸ்'' என்றாள். அவளின் தடுமாற்றம் கண்டு,

''ஏய் சாதனா என்ன இப்படி சொதப்பற?'' என்று அசோக் திட்டினான்.

''அசோக் நோ ப்ரப்ளம் அவங்க ஏதோ குழப்பத்துல இருக்காங்க நீங்களே கேளுங்க''

''சார் கொஸ்டின் எல்லாம்..'' என்ற போதே கௌதம் ''நேம்'' என்றதும் "சாரி கார்த்திக் கேள்வி எப்பவும் இவ தான் கேட்ப்பா நான் ஜஸ்ட் போட்டோ ஸ்டில்ஸ் தான். ஏன் இன்னிக்கு என்று தெரியலை''

''நல்லா சொதப்பறோம்'' என்று அசோக் வருந்தினான்,

''ஏய் கூல் மேன். இது என்ன அரசியல் மீட்டிங்கா யங்ஸ்டர் தானே நாமெல்லாம்... உங்களுக்கு என்ன என் ஆர்டிகள் தானே சொல்றேன் எழுதிக்கோங்க'' என்றான்.

மனதில் கௌதம் இவள் என்ன எப்படி முடிவு செய்து இருக்கா என்றே தெரிலையே... என்ன பார்த்து திகைச்சு இருக்கா... அப்போ அந்த பொண்ணு சொன்னது போல ஒழுக்கம் கெட்டவன் என்றே முடிவு செய்துவிட்டாளா? என்று வருந்தி பேச ஆரம்பித்தான்.

''நான் கௌதம் கார்த்திக். B.E இன்ஜீனியரிங் முடிச்சு இருக்கேன். சென்னையில் ஒர்க் பண்றேன். எனக்கு கிராமம் ரொம்பவே பிடிக்கும். பிகாஸ் நான் பதினான்கு வயது வரை இருந்தது எல்லாம் செங்கல்பட்டு மதுராந்தகம் தாண்டி இருக்கற ஒரு கிராமத்தில தான்.

''அங்க வயல் தோட்டம் கிணறு ஊஞ்சல் அரசமரம்'' என்று சொல்லி அவளை பார்த்தான்.

''அரசமரம் இதெல்லாம் பார்த்து ரசிச்சு வாழ்ந்தவன். எனக்கு இப்பவும் அரசமரம் என்றால் ஒரு ஈர்ப்பு'' சாதனா அவனையே இமைக்க மறந்து பார்த்திருந்தாள்.

என்னோட பதினைந்து வயது முதல் சென்னை வாசம். அதுக்கு பிறகு கிராமமே போகலை. படிச்சு முடிச்சு இன்ஜினீயரா ஒர்க் பார்த்து இருந்தேன்.

அப்ப தான் என் ஆச்சி அவங்க நிலம் காஞ்சிப்புரத்தில் இங்க சும்மா தரிசா இருக்கறதை  சொல்லி சொல்லி புலம்பிகிட்டே இருப்பாங்க.

அப்போ யோசிச்சது தான் ஏன் நாமளே ஒரு விவசாய குடும்பத்தை அங்கேயே இருக்க வச்சி அவங்களை ஒர்க் பண்ண சொல்லி சம்பளம் கொடுத்தா என்ன என்று?

சோ அதையே நடை முறை படுத்தினேன். என் நேரம் எனக்கு அப்படி இரண்டு குடும்பம் கிடைச்சது அவங்களுக்கு தேவையான வசதி பண்ணி கொடுத்து அவங்களை பராமரிக்க இருக்க வைத்தேன்.

ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்க. எல்லாமே இயற்கை உரம் போட்டு வளர்த்ததில் செழுமையா வளர ஆரம்பிச்சது.

இங்க தெரிஞ்சவங்ககிட்ட முதலில் சந்தையில் கொடுத்தேன் பிறகு அவங்களே ரெகுலரா வாங்கிட்டாங்க.

என் நண்பர் மூலமாக உங்களுக்கு தெரிஞ்சு இப்ப பேட்டி எடுக்கறீங்க. இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. பட் நீங்க எங்ஸ்டர் ஒரு மோட்டிவ் என்று சொல்லியதால் இப்போ உங்க முன்னால்...'' என்று முடித்தான்.

''சார் செம... சாரி கார்த்திக் சூப்பர் நாங்களே கேள்வி கேட்டாலும் இவ்ளோ தெளிவா கேட்டு இருப்போமோ என்று டவுட் நீங்க கோர்வையா சொல்லிட்டீங்க''

''நீ சொல்லலாம் நீங்க எதுக்கு?''

''எனக்கு கூட ஆசை ஆனா எனக்கு நிலம் எல்லாம் இல்லை என்ன பண்ண'' என்றே சிரித்தவன் சாதனா அப்பொழுதும் அமைதியாக இருப்பதை அறிந்து கௌதம் ஜூஸ் என்று நீட்டினான்.

''நைஸ் டாக் அண்ட் நைஸ் டூ மீட் யூ கார்த்திக்''

''எஸ் நைஸ் மீட்டிங்...'' என்றான் அவளை பார்த்து

''கார்த்திக் ஸ்டில்ஸ் எடுத்துக்கவா''

''பிளஷ்சர்...'' என்று சொல்ல அஷோக் கௌதமை புகைப்படம் எடுத்து கொண்டான்.

''ஓகே கார்த்திக் என் நம்பர் உங்ககிட்ட இருக்கு சேவ் பண்ணிக்குங்க நானும் சேவ் பண்ணிக்கிட்டேன் எனக்கு ஒரு பிரென்ட் கிடைச்ச பீல் இருக்கு''

''எஸ் எனக்கும்'' என்று சொன்னான்.,

''ஓகே நானும் என் ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் அப்படியே ஒரு டூர் கிளம்பறோம் சென்னையில் மீட் பண்ணலாம். உங்க ஆர்டிகளோட இன்னும் சில நாள்ல வரும் இன்றைய விவசாயத்தில் இளைஞரின் பங்கு' வரும்'' என்று கை குலுக்கி முடித்து ''ஏய் சாதனா நீ எப்படி?'' என்றான்.

''வந்த எனக்கு போக தெரியும் போ டா'' என்றாள்.

''அதானே நீ தான் விஜய சாந்தியாச்சே ஊருக்கு போயிட்டு கால் பண்ணு... பை சாதனா பை கார்த்திக்'' என்று கிளம்பினான். கூடவே சாதனாவும் கிளம்பினாள். அவனோடு லிப்ட் வரை வந்தவள் மாலதிக்கு கால் செய்ததாள்.

அது மணி அடித்துக் கொண்டே இருக்க அவளை தவிர அங்கே யாருமில்லை என்று மீண்டும் போன் செய்தாள்.

''ஹாய் சாதனா என்ன விஷயம்'' என்ற அடுத்த நொடி

''எருமை மாடு, பண்ணி, குரங்கு, கௌதம் மாமா உன்னை பார்த்து வழிஞ்சாரா டி?'' என்று திட்டி தீர்த்தாள்

''ஏய் யாரு டி கௌதம்'' என்றாள் குழப்பமாய்.

''அதான் போன வாரம் இன்டெர்வியூ எடுக்க போறதா சொல்லி இருந்தியே கார்த்திக் கௌதம் கார்த்திக்''

''ஆமா. அவன் வழிஞ்சான்''

''வாயை மூடு வந்தேன் கொலையே பண்ணிடுவேன். கௌதம் கார்த்திக் என் மாமா. என் அத்தை பையன். அவர் யாரையும் அப்படி பார்க்க மாட்டர். உண்மைய சொல்லு''

''ஏய் ஏய்.... உன் அத்தை பையனா? சாரி டி. நிஜத்தை சொன்னா என்னை திட்ட கூடாது''

''சொல்லு''

''ஆக்சுவலா நான் தான் அவன்கிட்ட வழிஞ்சேன். அவன் என்னை கண்டுக்கவே இல்லை. நீ போறதா சொன்னதும் என்னை பற்றி உங்கிட்ட ஏதாவது சொல்வானோ என்று நான் முந்திகிட்டேன்''

''இப்படி யார்கிட்டயாவது சொல்லி வச்சிருக்கியா எருமை?''

''இல்லை. நீ தான் போக போறதா தெரிந்தது அதான் உங்கிட்ட மட்டும்''

''போனை வை உன்னை சென்னைக்கு வந்து கவனிச்சுக்கறேன்'' என்று பொ ந்து தள்ளினாள்.

''ஏய் ஏய் அதான் சாரி கேட்டுட்டேன்ல''

''வை டி குரங்கு'' என்று போனை கட் செய்து திரும்ப கௌதம் நின்றிருந்தான். போனையும் அவனையும் மாறி மாறி பார்த்தவள் ''ச..சாரி'' என்றாள்.

''தேங்க்ஸ் சொல்லிடு. உன் பிரென்ட் அவ பேரு தெரியலை அவங்களுக்கு தேங்க்ஸ் சொல்லிடு'' என்றான் நடந்தவாறு,

''எ... எதுக்கு?''

''ஹ்ம் நீ உன் அத்தை பையன் கௌதம் என்று சொன்னது அவளால் தானே''

''புரியலை''

''நீ என்னை பார்த்த பிறகு கௌதம் மாமா என்று சொல்லியது இப்ப தான் இதுவரை நீ என்னை மொட்டையா தான் பேசிட்டு இருந்த'' என்றதும் அவளுக்கு புரிந்தது.

''மன்னிச்சுடுங்க கௌதம் மா.. மாமா எனக்கு உங்களை பார்த்ததும் மீண்டும் அப்படி கூப்பிட தயக்கமா இருந்துச்சு. ரொம்ப நாள் ஆச்சா''

''ரொம்ப வருஷம்'' என்று திருத்தினான்.

''எஸ் ரொம்ப வருஷம் கழிச்சு. அதுவும் இல்லாம நான் காரில் செய்த அலப்பறை.........., இப்பவும் உங்களை கார்த்திக் என்ற பெயரில் மறந்து திட்டிட்டு இருந்தேன்......'' என்று அசடு வழிந்தாள்.

''நீ தான் உன் கௌதம் மாமா அப்படி இல்லை என்று சொல்லிட்டியே. சொன்னது மட்டுமா என் கூட தங்கி அதை ஊர்ஜிதப்படுத்தி இருக்கியே'' என்றான் கர்வமாய்.

''நீங்க நிஜமாவே கண்ணியமானவர் என்று எனக்கு தெரியும். அதனால் தான்''

''அந்த எண்ணத்திற்கும் நம்பிக்கைக்கும் தான் தேங்க்ஸ். உன் பிரென்ட்டை லெப்ட் ரைட் வாங்கிட்ட போல'' என்றான் மென்னகையோடு,

''ஹலோ ஒட்டு கேட்டீங்களா?''

''சே சே நீ திரும்பி இருந்தப்ப உன்னை கூப்பிட்டேன் நீ கவனிக்கலை. சரி அருகே வந்து சொல்லலாம் என்று வந்தேன் நீ உன் தோழியை தாளிச்சுட்ட''

''எப்போ கூப்பிட்டீங்க?''

''நீ போனை காதில் வைத்து இங்க அங்க நடந்துகிட்டு இருந்தப்ப சனா சனா என்று ஏழெட்டு தடவை கூப்பிட்டேன்''

''நான் சாதனா''

''ஹ்ம் தெரியும் ஆனா எனக்கு சனா தானே?'' என புருவம் உயர்த்தி முறுவலுடன் கேட்க தானாக தலையை தாழ்த்தி வெட்கம் கொண்டாள்.

இந்த வெட்கம் தாண்டி நீ என் சனா என்று சொல்லுது. சொல்ல வைக்குது. பதினாலு வயதில் இதே வெட்கம் தான் உன்னிடம் கண்டேன் என மனதில் பேசினான்.

''நீங்க தான் கார்த்திக் என்று ஏன் சொல்லலை?''

''நீ திட்டறது என்னை தான் என்று எப்படி சொல்றது. உனக்கு என் முழு பெயர் மறந்து இருக்கும் என்று எனக்கு தெரியாது''

''எனக்கு கௌதம் மாமா என்று கூப்பிட்டு தான் மனசுல பதிஞ்சு இருக்கு''

''நீ கூப்பிட்டதே கிடையாதே?''

''அது அப்போ சின்ன வயசுல. இப்போ எப்படி கூப்பிடறது என்று கொஞ்சம் நெர்வ்ஸ்''

''ஓகே உனக்கு எப்படி கூப்பிடனும் என்று தோணுதோ அப்படியே பேசு கூப்பிடு''

''தேங்க்ஸ்'' என்றாள் முறுவலுடன்.

''தென் வாட் நெக்ஸ்ட்?''

''ரிடர்ன் டூ சென்னை பஸ்ல வேற ப்ரோக்ராம் இல்லை''

''ஓகே உன் திங்க்ஸ் எடுத்துக்கோ''

''நீங்க?''

''எனக்கு நாளை வரை வேலை இருக்கு. முடிஞ்சதும் கிளம்புவேன். நீ கிளம்புமுன் சொல்லு நானே பஸ்ல ஏற்றி விடறேன்''

''இப்ப கிளம்பறேன் எனக்கு அங்க வேலை இருக்கு''என்றப்பின் பச் கூடவோரு நாள் இருந்திருக்கலாம் என நினைத்தாள்.

அவளை கூட வந்து வழி அனுப்பி வைத்தான். இருவருக்குள்ளும் மழை சாரலாய் நினைவுகள் தெளித்தது.

-நினைவுகள் தொடரும். 

-பிரவீணா தங்கராஜ்.

Comments

  1. சஸ்பென்ஸா வச்சு நல்லா வழிய வைச்சிட்டான்....
    அசட்டுத்தனத்தை தான்.

    ReplyDelete
  2. Nallaa bulb kuduththuttaan 😛😛😛😛

    ReplyDelete

Post a Comment

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...