தித்திக்கும் நினைவுகள்-9

 


அத்தியாயம்-9

பைக்கில் கௌதம் மற்றும் ஜோதி போய் கொண்டு இருக்கும் போது அவர்களை குறுக்கே வந்து நின்றது ஒரு ஸுகூட்டி.

சடேன் பிரேக் போட்டு நிறுத்தி கோவமாக திட்ட வாயை திறந்தான் கௌதம் அந்த நேரம் முகத்தை பார்க்க அவன் சனா நின்றிருந்தாள்.

''ஹாய் அண்ணி நீங்களா? நல்ல வேளை அண்ணா திட்டறதுக்குள் தப்பிச்சீங்க'' என்றதும் அவனை பார்க்க சாதனா உடனே ஜோதியை பார்த்து,

''உன்னை பார்த்ததும் தான் வண்டியை குறுக்கே நிறுத்தினேன். ஆமா எங்க இந்த பக்கம்'' என்றாள்.

''அண்ணி சின்னதா ஷாப்பிங்'' என்றதும் ஜோதியை பார்த்தவள் அவளின் நடை உடை பேச்சு வித்தியாசம் உணர்ந்தாள்.

''ஓஹ் உங்க அண்ணா பர்ஸ் காலி பண்றியா?''

''போங்க அண்ணி'' என்றாள் ஜோதி

''ஜோதி அண்ணி வரும் வரை அண்ணா உனக்கு செலவு பண்ண என்னவாம் அவளுக்கு'' என்று கௌதம் கேட்க இவன் யாரை அண்ணி என்று சொல்கின்றான் என்று தவித்தவள் பேச்சினில் திகைத்தாள்

''எப்போ வந்த ஜோதி வீட்டுக்கு வரவே இல்லை'' என்று பேச்சை ஆரம்பித்தாள்.

''அண்ணி நான் இங்க தான் அண்ணா வீட்ல இருந்து காலேஜ் போறேன் சிவா அண்ணா சொல்லவில்லை யா?''

''இல்லை'' அவனுக்கு காதல் கதை சொல்றதுக்கே நேரமில்லை என்று மனதினுள் எண்ணினாள்.

''அண்ணி இங்க தானே உங்க வீடு?'' என்று ஜோதி கேட்டாள்.

''அடிப்பாவி தெரிஞ்சும் வரமா இருந்து இருக்க?'' என்று சனா சண்டை பிடிக்க நின்றாள்.

''அச்சச்சோ அதெல்லாம் இல்லை இப்ப தான் யோசிச்சேன் ஆனா எனக்கு உங்க வீட்டுக்கு வழியெல்லாம் தெரியாது'' என்று சமாளித்தாள்.

''சரி அப்போ இப்ப வாங்க'' என்று ஆவலாக கௌதமை பார்க்க ஜோதியும் அண்ணாவை தான் பார்த்தாள்.

''குட்டிம்மா போகலாமா வேண்டாமா டா?'' என்றான் குறும்போடுசனாவை அளவிட்டு அவளின் செல்ல கோபத்தை ரசித்தபடி இருந்தான்.

''அண்ணா போகலாம் ப்ளீஸ்'' என்றாள் ஜோதி. சனாவும் கண்களால் இறைஞ்சினாள்.

அவளின் ஸ்கூட்டியை பின் தொடர்ந்தான். இரு தெரு தள்ளி அவள் வீட்டுனுள் நுழைந்து அவனை வரவேற்க துவங்கினாள்.

''வாங்க.... வா ஜோதி'' என்று அங்கிருந்த அவளது துப்பட்டாவை எடுத்து அறையில் வைத்து சோபாவில் இருக்கு அவளின் id கார்டு எடுத்து ஹாங்கரில் மாட்டினாள்.

''உட்காருங்க...." என்று அவனுக்கு கையை காட்டி ''ஜோதி உட்காரு இதோ வந்துடறேன்'' என்று கிட்சேனுள் நுழைந்தவள். தனக்கு காபி டீ போடா தெரியாது என்று அறிந்து தலையில் அடித்து கொண்டு பிரிட்ஜில் இருக்கும் appy ஜூஸ் எடுத்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி தட்டில் எடுத்து வந்து நீட்டினாள்.

''டீ கிடைக்கும் என்று பார்த்தேன்'' என்று அவள் கையில் குடிக்கும் நோக்கத்தோடு சொன்னான்.

''ஐயோ அண்ணா அண்ணிக்கு சுட தண்ணி கூட வைக்க தெரியாது'' என்று போட்டு கொடுத்ததும் சாதனா முகம் கருத்து விட்டது.

''அண்ணி அண்ணாவுக்கு எல்லாம் சமைக்க தெரியும் தோசை உப்புமா சிக்கன் குழம்பு மீன் ப்ரை ...'' இன்னும் சொல்லிக் கொண்டே போனாள்.

''குட்டிம்மா யாருக்காவது ஒருத்தருக்கு சமைக்க தெரிஞ்சா போதும் டா'' என்றதும் சாதனா கருத்த முகம் சட்டென ஒளி பெற அவனை பார்த்தது.

''யாரு... ஜோதியா வந்து இருக்கறது. யார் கூட வந்த என்று மாடி படி வளைவில் கேட்டுக்கொண்டே வந்த தாமரைக்கு

''அண்ணா கூட அத்தை'' என்றாள் ஜோதி.

''சிவா'' என்று கௌதம் முன் வர அவனை கண்டதும் ''இவன் தான் அண்ணனா?'' என்ற அலுப்பு தெளிவாக ஜோதிக்கு புரிந்தது.

''அம்மா ஜோதி சென்னையில் தான் இருக்கலாம். இங்க தான் படிக்கறா?'' என்று சாதனா கூறினாள்

''தெரியும் தெரியும் சிவா சொன்னான். ஏன் ஜோதி சென்னையில் படிக்கணும் என்றதும் அத்தை வீட்டுக்கு வர வேண்டியது தானே. ஏன் கண்டவங்க வீட்ல போய் படிக்கணும்'' என்ற பேச்சில் சுருக்கென நிமிர்ந்தான் கௌதம்

''அது என் அண்ணா வீடு'' என்ற ஜோதி பதிலில் சாந்தம் ஆனான்.

''ஜோதி நீ கிளம்பு ஏதோ எக்ஸாம் படிக்கணும் என்று சொன்னளே...'' என்று சாதனா கண்களில் போ என்பது போல சொல்ல அவளுக்கு தனது அண்ணா இங்கு இந்த பேச்சை கேட்டு இருக்க பிடிக்காமல் ''அண்ணா கிளம்பலாம்'' என்றாள்.

வெளியே வந்து அவனுக்கு மரியாதையை தர விருப்பம் இன்றி ''ஜோதி போய் போன் செய்'' என்றதும் ''சரி அத்தை'' என கிளம்பினாள்.

''ப்ளீஸ் அம்மா பேசியதை மனசுல வச்சிக்காதீங்க'' என்ற அவளின் பேச்சினை அவன் கண்டு கொண்டதாக தெரியவில்லை. ஜோதி ஏறியதும் கை அசைத்து வழி அனுப்பியவள். 'சே இந்த அம்மா நல்லா போயிக்கிட்டு இருந்ததை ஸ்பாயில் பண்ணிட்டாங்க' என்று கலங்கினாள். அவரா ஏதோ சொன்னார். வீட்ல ஒருத்தருக்கு சமைக்க தெரிஞ்சா போதும் என்று அப்படினா என்ன அர்த்தம்? அது எனக்கான பேச்சு தானா?

அடுத்த நாள் மாலதியிடமும் சொல்லி குறைபட்டாள். அவன் ஏதோ நல்லவிதமாக பேச தனது தாய் தான் இடைக்காக பேசி சொதப்பியதும்... இன்னும் தான் அவனிடம் போனில் பேச முடியாமல் தவிர்ப்பதும்....

''ஏய் எதுவும் இந்த கீர்த்திகிட்ட சொல்லிடாதே டி. அப்பறம் அவ சிவாகிட்ட சொல்லிடுவா'' என்று சொல்லியும் விட்டாள்.

''ஆமா உனக்கே இது என்ன என்று புரியலை இதுல அவகிட்ட வேற என்னனு சொல்ல. முதலில் நீ விரும்பறியா?''

மவுனமாக இருந்தவள் ''நீ சொன்னது உண்மை மாலதி நான் எப்போ இருந்து விரும்பறேன்னு தெரியலை. கௌதம் மாமா வராததால் போகாம இருந்தேனே அப்போ இருந்தேவா இல்லை அவரை ரவீந்தர் மாமா இறந்தப்ப பார்த்த அந்த நாளில் இருந்தா இல்லை அதன் பிறகா என்று புரியலை பட் மனசுக்குள் வந்துட்டார்''

''ரொம்ப தான் மரியாதை பலமா இருக்கு கார்த்திக் உனக்கு இது ஓவர் டா'' என்று சொல்லியவளை முறைத்து பார்க்க மாலதி அங்கு இல்லை. இவளுக்கு பயந்து அவளது கேபினுக்கு சென்று இருந்தாள்.

அங்கு கௌதமிற்கு ஜோதியிடம் இருந்து சனா எண்ணை வாங்க விருப்பம் இல்லை. அவளாக இரண்டு முறை பார்த்து இருக்கின்றான். ஏன் அவனோடு தங்கியே இருக்கின்றாள். அப்பொழுது கொடுக்கவில்லை. இப்பொழுதும் எண்ணை பரிமாறி கொள்ளவில்லை. அன்று காஞ்சீபுரத்தில் இருந்து அவள் பஸ்ஸில் அனுப்பிய பிறகு போய் சேர்ந்தது விட்டதாக சொல்லுவாள் என்று ஆவலாக இருந்தான். ஆனால் அவளிடம் இருந்து அழைப்பும் குறுஞ்செய்தியும் வரவில்லை என்ற போதே அவள் சிவாவிடம் சொல்லி இருப்பாள். சிவா அதற்கு இவளை திட்டி இனி கௌதம்மிடம் பேசாதே என்று சொல்லி இருப்பான் என்று எண்ணி இருந்தான்.

தவறியும் அவளுக்கு அவன் எண் தெரியாது என்று நினைக்கவில்லை. ஏன் என்றால் அசோக்கிடம் அவன் எண் இருக்கு என்பதால்...

இப்படியே சில நாட்கள் செல்ல மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு வந்தது.

அந்த ஹோட்டலில் அங்கே டேபிளில் மீன் சிக்கன் மட்டன் இறா எல்லாம் குடும்பமாக வகை வகையாக சமைக்கப்பட்டு ருசிப்பார்க்க எடுத்து வந்து வைத்துவிட்டு சென்றார் வெய்ட்டர். உணவு உண்ணுவதில் மும்முரமாக இருந்தார்கள் கௌதம் மற்றும் அவன் நண்பர்களான நிஷாந்தினி, சத்யா, சுந்தர், ரேஷ்மி சாப்பிட்டு கொண்டே அரட்டையில் மூழ்கினார்கள்.

அப்பொழுது, ''கௌதம் உடனே பார்க்காதா உனக்கு ரைட் சைடுல மூணு பேரு உட்கார்ந்து இருக்காங்க அதுல ஒரு பொண்ணு உன்னையே முறைச்சு பார்க்கறா'' என்று நிஷாந்தினி சொன்னாள்.

''முறைக்கறாளா? இருக்காதே எப்பவும் அவனை யாராவது பொண்ணுங்க சைட் தானே அடிப்பாங்க'' என்றான் சத்யா.

''அதான் டா வித்தியாசமா இருக்கு அதனால தான் சொன்னேன்'' என்று நிஷாந்தினி சொல்லி முடிக்க தனது கூலிங் கிளாஸ் அணிந்து அவள் சொன்ன பக்கம் பார்க்க அங்கே முறைத்து கொண்டு இருந்தது சாட்சாத் சாதனா தான்.

-நினைவுகள் தொடரும். 
-பிரவீணா தங்கராஜ். 

Comments

  1. ஹ...ஹ... அவ முறைக்கிறதே சைட் அடிக்கிற மாதிரி தான் தெரியும்.

    ReplyDelete

Post a Comment

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...