தித்திக்கும் நினைவுகள்-17

 


அத்தியாயம்-17

சியாமளா போன் செய்து வளர்மதி கர்ப்பமாக இருப்பதை அறிவிக்க எல்லோரும் மகிழ்ந்தார்கள். கௌதம் நேரமிருக்கும் போது வருவதாக கூறிட சிவாவிற்கு வளர்மதிக்கு போனில் வாழ்த்தை தெரிவித்தான்.

சனாவிற்கு கௌதம் எப்பொழுது செல்வானோ அப்பொழுது சொல்ல சொல்லி ஜோதி கேட்டிட ஜோதி கண்டிப்பாக சொல்வதாக கூறி இருந்தாள்.

அன்று வேதாவும் ஜோதியும் அழைத்து கொண்டு ஊருக்கு சென்றான். அவனின் கார் ஓட்டும் கேப்பில் ஜோதி சனாவிற்கு செல்வதை கூறியதும் அடுத்த நொடி அவளும் கிளம்பினாள் தாமரையோடு.

தங்கள் கிராமத்திற்கு வந்ததும்''அம்மா வாசனை மூக்கை துளைக்குது'' என்று ஜோதி கிட்சனுள் வந்தாள்.

''வாங்கம்மா" என்று வேதாவையும் "வா கௌதம்" என்று தட்டில் முறுக்கையும் செம்பில் நீரையும் எடுத்து வந்து கொடுக்க பெற்று உண்ண ஆரம்பித்தான்,

''ஜோதி போய் வளருக்கு கொடுத்துவிட்டு வா'' என்று சொன்னதும்

''வந்ததும் வேலை வாங்குற அம்மா போ'' என்று அலுத்து கொண்டாலும் வளரை தேடினாள்.

''அண்ணி அண்ணி.. என்று அறைக்கு வர வளரு வாமிட் செய்து களைத்து நிற்பதை கண்டாள்.

''நீ எப்ப வந்த ஜோதி?''

''இப்ப தான் அண்ணி. கௌதம் அண்ணா வேதா ஆச்சி வந்து இருகாங்க. இந்தாங்க அம்மா உங்களுக்கு கொடுத்துவிட்ட முறுக்கு''

''இரு நானே ஹாலுக்கு வர்றேன்'' என்று அசதியோடு வந்தவள் வேதவள்ளியின் அருகே வந்து பாட்டி என்று ஆசிர்வாதம் வாங்கினாள்.

''நல்லா இரு நல்லா பிள்ளையை பெற்று எடு இது எத்தனாவது மாசம்'' என்று வாழ்த்தினார். 

''மூணு மாசம்....'' ஆச்சி "முறுக்கு சாப்பிடு" என்றே நீட்டினார்,

''ஐயோ அத்தை தினமும் ஒன்னு சுட்டு கொடுத்து எனக்கு சாப்பிட்டு வாமிட் பண்ணவே நேரமிருக்கு'' என்று மறுக்க,

''நீ வாமிட் பண்ணினாலும் எல்லாம் சாப்பிடு நீ என்ன ஒரு உசிரா இரண்டு உயிர்ல" என்ற வேதா சொல்ல,

''ஹெர்ட்டி கங்கிரஜிலேஷன் வளர்'' என்று கௌதம் கூறிட ''தேங்க்ஸ் மாமா'' என்றாள்.

''ஆமா சிவா எங்க?'' என்றான்.

''வயலுக்கு போனார். அப்படியே அப்பாவை பார்க்க போயிருக்கார்''

''ஓகே நானும் கொஞ்சம் வெளியே சுற்றி பார்த்துவிட்டு வர்றேன்'' என்று சொல்லி விட்டு அரசமரத்தடி தேடி சென்றான். அவனின் சனா பெயரை சுமந்த மரத்தின் மேலே அவனையும் சுமக்க செய்த மரம் ஜில்லென்ற காற்றில் அமைதிக்கிட்ட கண் அயர்ந்தான்.

நேரமாக அவனாகவே மாலையில் வீட்டை நோக்கி நடந்தான்.

ஹாலில் நுழையும் போதே சனா இருப்பதை உணர்ந்தான். அது தனது பிரம்மை என்று நினைக்க ''அண்ணி இந்தாங்க காபி'' என்று ஜோதி சொல்லியதும் சனா வாங்கிட அது தனது பிரம்மை இல்லை என்று உறுதியாக ரௌத்திரமாக முகம் போனது.

சனா ஜோதி மட்டுமே இருக்க ஜோதி அறையில் நுழைய அவனும் பின்னாலே சென்றான்.

''ஜோதி நீ என்ன பண்ற என்று தெரியுமா எதுக்கு அவளுக்கு இன்போர்ம் பண்ணின?'' என்று தங்கையை அதட்டினான்.

''அண்ணா சாதனா அண்ணி பாவம்.. அவங்க உங்களை ரொம்ப..'' என்றதும் கையை ஓங்க சிவா வளர் அறைக்குள் வர அப்படியே நிறுத்தினான்.

அவன் ஜோதியை அடிக்க வருகின்றான் என சிவா அறிந்தும் அமைதியாக இருக்க, கௌதம் தானாக கையை கீழே இறக்கி கட்டிலில் தொப்பென அமர்ந்தான்.

முன்பு இருந்த சிவா இதை பார்த்தால் தன் தங்கை ஜோதியை அடிக்க கையை ஓங்கிய கௌதமை எதிர்க்க சென்றிருப்பான் ஆனால் இப்போ சிவா பொறுமையாக இருந்தான் கௌதம் நல்லதுக்கு தான் எதையும் யோசிப்பான் என நம்புவதால்...

''என்னாச்சு அண்ணா... ஏதாவது பிரச்சனையா?'' என்றான் பவ்வியமாக,

''சே சே அதெல்லாம் இல்லை'' என்று ஜோதியிடம் அமைதியாக பார்த்தான்.

''அண்ணா நீ அடிச்ச கூட பரவாயில்லை சாதனா அண்ணி பாவம் உன்னை விரும்பறதை ஏன் அவாய்ட் பண்ற'' என்று ஜோதி கேட்டு நிறுத்தினாள்.

''இங்க பாரு குட்டிமா அவ மேல எனக்கு லவ் இல்லை. புரியுதா.... நீ இப்படி செய்தா அவளுக்கு தேவையில்லாத ஆசை வளர்க்காதே'' என்று அமைதியாக பதமாக சொன்னான்.

''உன் மனசுல அண்ணி இருக்காங்க நீ பொய் சொல்ற...'' என்று பிடிவாதம் பிடித்தாள்.

''இல்லை டா'' என்றான் கௌதம்..

''ஜோதி போ அம்மாவுக்கு உதவி செய்'' என்று சிவா சொல்லிட சிவாவை பார்க்க அவன் 'நான் பேசறேன்' என்று கண்ணில் அசைத்து சொல்லிட ஜோதி சென்றாள்.

சிவா கௌதம் இருவரும் ஒரே அறையில் கொஞ்ச நேரம் அமைதியாக இருக்க, சிவாவுக்கு எல்லாம் புரிந்தது. சாதனா கௌதமை விரும்புகிறாள் கௌதம் அண்ணா மறுக்கின்றான் ஜோதி சாதனாவிற்கு உதவுகிறாள் என்று.

இது எப்பொழுது இருந்து என்று யோசித்தவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை... ஆனால் தந்தை இறந்த அன்று சனா கெளதம் அண்ணா இருவருமே ஒன்றாக வர வைத்தது தான் அப்பொழுது இருந்தே தோன்றியதா....? இல்லை அதன் பின் பேசி பழகியதால் எதுவாக இருந்தும் என்ன....

தனது காதல் கௌதமிற்கு தெரிந்தது சாதனாவால் ஆக சாதனா அண்ணா இருவருக்குள்ளும் ஏதோ உள்ளது.

''அண்ணா நீ சாதனாவை விரும்பறியா? அப்படினா சொல்லு'' என்று தம்பி உடையான் என்பதாக கேட்டான்.

''ஜோதி உளறறா அப்படி எல்லாம் இல்லை சிவா''

''ஓகே அண்ணா அப்படி ஏதாவது என்றால் சொல்லு சாதனா ரொம்ப நல்லவ அவ மனசை காயப்படுத்ததே''

''இல்லை டா என் மனசுல யாருமில்லை. போர்ஸ் பண்ணாதே'' என்றான்,

''ஓகே போர்ஸ் பண்ணலை'' என்று சிவா கூறினான்.

''சரி நான் மாடில இருக்கேன்'' என்று கௌதம் வேகமாக மாடியேறி விரைந்தான்.

இதையெல்லாம் தாமரை கேட்டு கொண்டு இருந்தாள். நல்ல வேளை கௌதம் என்னை போட்டு கொடுக்கலை என்று மகிழ்ந்தார். இவன் இங்கே இருப்பதால் தான் அவள் உடனே கிளம்ப சொன்னாளா? என்று பொறுமினாலும் உள்ளுக்குள் இவன் இந்த அளவு தான் சொல்லிற்கு மதிப்பு கொடுத்தது வியப்பாகவும் இருந்தது.

''அண்ணி அழாதீங்க அம்மா இல்லை அத்தை யாராவது பார்க்க போறாங்க'' என்று ஜோதி சாதனாவை தேற்றினாள்.

''சாரி ஜோதி இனி உன்னை இதுல இழுக்க மாட்டேன். என்னால உனக்கு கஷ்டம்.  உன் அண்ணாகிட்ட திட்டு வாங்காதே இனி அவர்கிட்ட என்னை பற்றி பேசாதே'' என்று அழுதவளின் குரலில் கௌதமிற்கு கத்தியால் இதயத்தை கீறியது போன்ற வலி உருவாயின.

'சனா முடியலடி உன்னை காயப்படுத்தி பேசி அந்த இடத்தை விட்டு வந்துடுவேன் இப்போ உன்னை கண்டு என்னால முடியலை... நானே உன்னை இப்படி காயப்படுத்துவேன் என்று கனவுல கூட நினைச்சது இல்லை.

உன் அம்மா கட்டி கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிச்சா எதிர்த்து நின்று இருப்பேன் இப்படி காலில் விழுந்து கேட்ட பிறகு எப்படி டி.... நான் வேற என்ன செய்ய சனா... என்னை விட்டுட்டு நீ வேறுயாராவது லவ் பண்ணி இருக்கலாம்'

கௌதமோ மாடியிலிருந்து புலம்பினான்.

இரவு உணவினை ஜோதி எடுத்து வந்துவிட கௌதம் சாப்பிட்டான். பெயருக்கு தான்.

அதிகாலை நான்கு முப்பதுக்கு எழுந்தவன் ஜன்னலை பார்க்க ஏதோவொரு அமைதி தாக்கியது. இங்கிருந்தால் எப்படியும் பிரச்சனை வந்திடுமோ என்றோ, சனா கஷ்டபடுவது காண கூடும் என்றோ, கவலை கொண்டவன் அந்நேரமே காரினை எடுத்து கொண்டு வெளியேறினான்.

சிவாவிற்கு மட்டும் மெசேஜ் செய்து தனக்கு வேலை இருப்பதால் உடனே சென்று விட்டதாக கூறியிருந்தான். அன்றே அங்கு இருந்தால் ஒரு வேளை தீர்வு கிட்டி இருக்கும்........ விதி இன்னும் நேரமெடுத்து....

சிவாவிற்கு புரிந்தது. கௌதம் அண்ணா இங்கிருந்து தப்பிக்க எண்ணி ஓடி இருக்கின்றான் என்று இருந்தும் அவனின் எண்ணத்தை கட்டுப்படுத்தி பேசவும் மனமில்லை.

காலை எழுந்தப் போது கௌதமில்லை என்று தாமரை மகிழ சாதனா வருத்தத்திலும் கவலையில் துடித்தாள்.

இப்படி சனாவை புறக்கணித்தே கிடந்தான். ஆனால் சனா மனதில் இம்மி அளவும் அவனை மறக்கவில்லை. மாறாக தாமரைக்கு தான் மகளின் வாழ்வு பாழ் ஆவதை நேரில் பார்க்க முடியாமல் தவித்தாள். உடல் மெலிய துவங்க தாமரை எவ்வளவு வற்புறுத்தியும் சனா தன்னை தானே வருத்திக் கொள்ளவே செய்தாள்.

நாட்கள் யாருக்காகவும் நிற்காமல் செல்ல, அன்று அசோக் தூரத்திலே கௌதமை கண்டு பேச வந்து கொண்டு இருந்தான்.

''ஹாய் கௌதம் எப்படி இருக்கீங்க?'' என்று அஷோக் கௌதம் அருகே வந்தான்.

''பைன் அசோக் நீங்க எங்க?'' என்றவன் அவனின் பின்னால் சனா இருக்கிறாளா என்று கண்களால் தேடினான்.

''ஜஸ்ட் ப்ரெண்ட்ஸ் கூட... ஆனா நீங்க எதிர்பார்க்கற ப்ரெண்ட் வரலை'' என்றான் அசோக் பூடகமாக.

''வாட் நான் யாரை எதிர் பார்க்கறேன் அசோக்'' என்று கடுப்பை மறைத்தான்.

''ரொம்ப நடிக்காதீங்க கௌதம் உங்க சனாவை தான் சொன்னேன்'' என்றான்

''அசோக் அவ என் ரிலேட்டிவ்'' என்றான்.

''நான் லவ்வர் என்று சொல்லவே இல்லையே.... நீங்களா ஏதோ....'' என்று அசோக் நக்கலோடு சொல்ல கௌதமிற்கு அசோக் உண்மை தெரிந்தே பேசுகின்றான் என புரிந்து போனது.

''ஓகே அசோக் நான் கிளம்பறேன்'' என்று நழுவ முயன்றான்.

''என்ன கௌதம் இங்க இருந்தா ஏதாவது உளறிடுவோமா என்ற பயமா?'' என்ற நக்கல் கேள்வியில்

''சே சே அப்படி இல்லை உங்க பிரெண்ட் ஊர் எல்லாம் என்னை விரும்பறதா சொல்லி என் நேமை ஸ்பாயில் பண்றா அதுக்காக நான் என்னை விளக்கி சொல்லணும் என்று அவசியம் இல்லை'' என்றான் காட்டமாக.

''இதுக்கே இப்படியா? ஸ்பாயில் என்று சொல்றிங்க அவ இன்னும் என்ன என்னவோ சொன்னாளே... அதெல்லாம்?'' என்று மடக்கினான்.

''வாட்?'' என்று புரியாமல் நின்றான் கௌதம்.

''ஓஹ் உங்களுக்கு முழுசா சொல்றேன் தெளிவா. நான் உங்க சனாகிட்ட ப்ரொபோஸ் பண்ணினேன்'' என்று அடிக்கண்ணால் கௌதமை பார்க்க அவனோ கொலை வெறியில் இருந்தான். அவனை கட்டுப்படுத்திக் கொண்டு,

ஆனால் ''கங்கிராட்ஸ் உங்க சாய்ஸ் குட்'' என மனதை மறைத்து சொன்னான்.,

''வெயிட் வெயிட் பொறுமையா எல்லாம் சொல்றேன் லாஸ்ட்ல சொல்லுங்க. அப்புறம்....'' என்று சீரியசாக மாறினான்.

''அவ உங்களை விரும்பறதா சொன்னா அத மட்டும் சொல்லலை நீங்க ஒரு நைட் அவளோட தங்கியதை கூட சொன்னா'' என்று நிறுத்தினான்

''அசோக் அவ காஞ்சிபுரத்துல நீ... கூட...'' என்று தெளிவுப்படுத்த முயன்றான்.

''ஹ்ம் எனக்கு தெரியும்''

''நீங்க நினைக்கற மாதிரி தவற எதுவும் இல்லை'' என்றான் கௌதம் அதை கூறவே பாதி கூனிகுறுகி விட்டான்.

''அதுவும் தெரியும். ஆனா அவ உங்க மேல வச்சி இருக்கற காதலை என்னை மாதிரி அவளை பொண்ணு பார்க்க வர்றவங்க எல்லாரும் நம்பமாட்டாங்க.'' என்றான் வார்த்தையில் அழைத்தம் தந்து.

''என்ன கௌதம் அமைதியா இருக்க? சொல்லு நான் உன் சனாவை எப்பவும் விரும்ப மாட்டேன்''

''அசோக் அவ மேல என் நகம் கூட படலை. ''

''நான் அவ பிரென்ட் அதனால அவளை எளிதில் புரிஞ்சுக்கிட்டேன். ஆனா வர்ற போறவன் கிட்ட எல்லாம் அவள் அப்படி சொல்லி தான் ஓட வைப்பதாக சொல்றா... உனக்கு உன் சனா அப்படி செய்தா ஓகே வா'என்று கேட்டு வைத்தான்.

''அசோக் கொள்ளாதே. ஏன் அவ இப்படி யோசிச்சா ஸ்டுபிட். அசோக் நீ அவளை நல்லா புரிஞ்சு வச்சிருக்க நீயே அவளை கல்யாணம் செய்துக்கோ என்னை தவிர யாரு வேண்டுமென்றாலும் அவளுக்கு ரொம்ப பொருத்தமா தான் இருப்பாங்க'' என்றான் எங்கோ பார்த்தபடி.

''ஏன் சாதனா சாகறதுக்கா?'' என்றதும் கௌதம் அவனின் சட்டை காலரை பிடித்திருந்தான்.

''என்னை விடு இப்பவே அவளை போய் பாரு அந்த நிலைமையில் தான் இருக்கா? ஒழுங்கா சாப்பிடறதில்லை. வேலை செய்யறதில்லை. எப்பவும் ஏதோ புருஷனை பறிக்கொடுத்தவ கணக்கா திக்குல சுத்தறா.'' என்று அசோக் சென்றிட அங்கேயே சிலையென நின்றிருந்தான்.

'என்ன இது அவளோடு ஒரே அறையில் சும்மா தாங்கியதை அவள் இப்படி சீரியசாக எடுத்து அவளின் தலையில் மண்ணை வாரி கொள்கின்றாள். யாரிடம் சொன்னாலும் அவர்கள் இதை தவறாக தானே எடுத்துக்கொள்ள செய்வார்கள்.

நானே அன்னிக்கு தங்க வச்சது தப்பு தான். என்ன இருந்தாலும் கல்யாணம் ஆகாத ஆண் பெண் தங்கறது சரி இல்லை தான்....

சே இந்த அறிவு முன்ன இல்லாமல் போச்சு அவ கூட இருக்கா என்று அன்னிக்கு அவ்ளோ சந்தோஷப்பட்டேன் இன்னிக்கு அதே எனக்கு திரும்ப துக்கமா மாறுமா......

சனா நிச்சயம் இப்படி பேசுவா அவள் அப்படி தைரியமா பேசுற ஆளு தான் ஆனா இது ரொம்ப தப்பாச்சே....

அவளிடம் அப்படி பேசிடாதே என்று சொன்னா அதற்கு நேர் மாற பேசவும் செய்வா... இப்போ என்ன செய்யறது.

அப்போழுதே சனாவை பார்க்க துடித்த இதயத்தை கடினப்பட்டு வென்று வீட்டிற்கு சென்றான்.

வேதவள்ளி வந்ததும் வராததும் கௌதம்மிடம் ''சம்பந்தி போன் செய்தாங்க ஊரில் வளர்மதிக்கு வளைக்காப்பு வைக்க போறாங்களாம். ஏழாம்மாதம் ஆரம்பமானது என்று...

வர்ற ஞாயிறு தான் விழாவென அறிவிக்க போகலாம் ஆச்சி என்று கூறினான்.

இமை மூடி அமர்ந்தவனின் கண்ணில் சனா முன் வந்து நின்றாள். 'நானும் வருவேன் என்ன டா பண்ணுவ' என்றே சிரிப்பது போல இருக்க 'உன்னை யாருக்கும் தெரியாமல் பார்த்துவிட்டு திரும்பிடுவேன் சனா' என்று சொல்லி கொண்டான்.

பார்ப்பது மட்டுமே போதும் எனக்கு என்ற மனதை தேற்றியிருந்தான்.

நினைவுகள் தொடரும் 

பிரவீணா தங்கராஜ் 

Comments

  1. சனாவை பார்த்த பிறகு கௌதம் மனசு மாருமா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

தித்திக்கும் நினைவுகள்-1