தித்திக்கும் நினைவுகள்-16
அத்தியாயம்-16
கௌதம் அண்ணா ஏதேனும் திட்டிவிடுவார்களோ என்று ஜோதி பயப்பட அவன்
ஒன்றும் சொல்லவில்லை. அறையில் வேகமாக சென்று விட்டாள். கௌதம் அவன் அறைக்கு சென்று
கதவை மூடும் சமயம் வேதவள்ளி வந்து நின்றாள்.
''என்ன டா என்னதான் பிரச்சனை?'' என்று வீட்டுக்கு பெரியவராய் கேடடார்.
''அதெல்லாம் ஒன்னுமில்லை ஆச்சி சாதனா முட்டாள் தனமா உளருறா ஜோதி
வேற சப்போர்ட்'' என்று மறுத்தான்.
''ஏன்டா மழுப்பற அந்த பொண்ணு உன்னை அளவுக்கு அதிகமா விரும்பறா'' என்று சாதனாவிற்கு ஆதரவாக பேசினார்.
''சரி அப்படியே இருக்கட்டும். எனக்கு பிடிக்கலை அதான் பிரச்சனை'' என்று சொன்னான்.
''நான் நம்ப மாட்டேன்'' என்றார் வேதா.
''ஆச்சி...?''
''உன்னை வளர்த்தவ டா எனக்கு உன் முகமே சொல்லிடும் உன் விருப்பு
வெறுப்பை'' என்று பேரனை புரிந்தவராய் நின்றார்.
''ஆச்சி நான் அவளை விரும்பலை''
''சரி உன் போனில் ஏதோ அவ போட்டோ இருக்கு என்று ஜோதி சொன்னா போனை
கொடு நான் ஜோதிகிட்ட காட்டி கேட்டுக்கறேன்'' வேதவள்ளி கையை நீட்டியபடி இருப்பதை கண்டு வேறு வழியின்றி போனை
எடுத்து காட்டினான். அதில் சிவப்பு சேலை உடுத்தி சாதனா சிரிப்பது கண்ணில் பட்டது.
''அப்பறம் என்ன டா அவளை கட்டிக்க என்ன'' என்று கேட்டார்.
''இதுக்கு மேல கேட்காதீங்க ஆச்சி ப்ளீஸ் என்னால முடியாது'' என்று மடியில் சாய்ந்து கலங்கியவனை வேறு எதுவும் வேதாவும்
கேட்டு தோண்டவில்லை.
தனது பேரன் எதையும் தெளிவாக யோசிப்பவன் அவனே கலங்கினால் ஏதோ
ஒன்று இருக்கும் அவனே இதில் இருந்து மீளட்டும் அப்படி இல்லை என்றால் பிறகு நாம்
என்ன ஏது என்று விசாரிக்கலாம் என்று விட்டு பிடித்தார்.
அங்கு சனா தான் மிகவும் கலங்கி நொறுங்கி போனாள். மாலதி எப்படி
தேற்றுவது என்று புரியாமல் விழித்தாள். கொஞ்ச நாள் போகட்டும் எந்த தவறுக்கும்
காலம் மன்னிக்கும் அதுவரை பொறு அப்பறம் கொஞ்ச நாள் கழிச்சு போய் மீண்டும்
பார்க்கலாம் என்று சொன்னதும் சரியென தலை ஆட்டினாள்.
சனாவிற்கு வெளியே சரி என்று சொல்லி விட்டாலும் உள்ளே தினமும் 'ஏன்' என்ற கேள்வி வண்டாய் குடைந்தது. அவளால் சரியாக சாப்பிட முடிய
வில்லை.
அன்று அலுவலகத்தில் இருந்து கிளம்பியவள் சற்றே தள்ளாடி மயங்கி
சரிந்தாள். ஏற்கனவே கீர்த்தி மாலதி சென்றுவிட்டதால் அசோக் தான் நீரை எடுத்து
முகத்தில் அடிக்க,
விழித்து எழுந்தாள்.
''என்ன ஆச்சு சாதனா மயங்கி விழுந்துட்ட'' என்றான்.
''அது கொஞ்சம் ஸ்ட்ரெஸ்''
''உனக்கு ஓகே னா நான் இன்னிக்கு டிராப் பண்றேன். நீ இன்னும்
கொஞ்சம் அசதியா தான் இருக்க'' என்றதும் சரியென ஒப்பு கொண்டாள்.
அஷோக்கிற்கே ஆச்சரியம் இவ விஷயசாந்தி ஆச்சே 'டேய் எனக்கு போக தெரியும் நீ உன் வேலையை பாரு' என்று தானே கேட்பா என குழம்பி இருந்தாலும் அவள் சரி என்றதும்
அவனே பைக்கில் அவளை அழைத்து சென்றான்.
முதல் முறையாக சாதனா ஒரு பையனோடு வருவதை கண்டு தாமரை அவளை
வறுத்து எடுக்க செய்வாள் ஆனால் இன்றோ கௌதம்மை தவிர வேறு யாராக இருந்தாலும்
பெண்ணுக்கு பிடித்தால் கட்டி தரலாம் என்று தாமரை நினைத்து மனமார வரவேற்றாள்.
''அம்மா இது அசோக் என் கூட வேலை செய்யறவன்'' என்று அறிமுகப்படுத்தி ''அசோக் அம்மா'' என்று சொல்லி ''உள்ள வா'' என்று உட்கார வைத்தாள்.
''வாங்க தம்பி... சாதனா நான் காபி கலக்கறேன் நீ பேசிட்டு இரு'' என்று கிட்சேனுள் சென்று வேகமாக கலக்கி கொண்டு வந்தார்.
''ஏன் சாதனா நீ ஒரே பொண்ணா?''
''ஏன் டா தங்கச்சி யாராவது இருந்தா சைட் அடிக்கலாம் என்று
வந்தியா?''
என்று காபியை கொடுத்து பழைய படி
கலாய்க்க ஆரம்பித்தாள்.
''நோ நோ'' என்று பதறினான். அதனை தாமரை கவனித்து
''ஒரே பொண்ணு தான் தம்பி அதான் ஓவரா செல்லம்'' என்று தாமரை பேசிட,
''ஆன்ட்டி ஆபிஸ்ல கூட செம வாய்.... ஆனா தைரியமான பொண்ணு ஆன்ட்டி.
எங்க எம்.டி கூட வ்ராங் ரைட் என்று வாதாடற ஒரே பொண்ணும் இவ தான்'' என்று காபி மிடறாய் பருகியவன்
''ஏன் சாதனா ஆன்ட்டி செமயா காபி கலந்து கொடுக்கறாங்க அப்பறம் ஏன்
சரியா சாப்பிடாம மயங்கி விழுந்த?'' என்று சொல்லிட தாமரைக்கு அவள் மயங்கி விழுந்தால் என்றதும் மனம்
வலித்தது. தனது மகளை இந்த பையன் நன்கு புரிந்து வைத்து இருக்கின்றான் என அறிந்து
மகிழ்ந்த வேலையில் என்ன இது என்று அதிர்ந்தார் தாமரை.
''ஆமா ஆன்ட்டி ஸ்கூட்டி எடுக்கும் போது மயங்கிட்டா''
''எங்க இப்போ எல்லாம் ஒழுங்கவே சாப்பிட மாற்றா'' என்று காந்தன் நுழைந்து நிற்க ''அப்பா இது அசோக்''
''காபி கொடுத்தியா''
''ஆச்சு ப்பா. அசோக் அப்பா''
''ஹாய் அங்கிள்''
''வணக்கம் தம்பி...''
''ஓகே சாதனா வீட்டுக்கு கிளம்பறேன் பை'' என்று அசோக் கிளம்பியதும் காந்தன் மகளின் பக்கம் வந்து ''ஏன் சாதனா சிவா கல்யாணம் பண்ணிகிட்டதால நீ உன்னை
வதைச்சுக்கிறியா?''
என்று கேட்டதும் சாதனாவிற்கு சிரிப்பு
தான் வந்தது.
''ஐயோ அப்பா அதெல்லாம் இல்லை அவன் எனக்கு பிரென்ட் அவ்ளோ தான்
சிவாவை போய் நான் லவ் பண்ணுவேனா''
''அப்பறம் ஏன் டா ஒரு மாதிரி இருக்க?'' என்று தந்தையாய் மகளின் பொலிவு குறைவாக தோன்ற கேட்டார்.
''அச்சோ அப்பா ஆபிஸ் ஒர்க் ஹேவிப்பா அதான் நீங்க ஏன் கண்டதையும்
நினைக்கறீங்க?
சிவா அவளை கல்யாணம் பண்ணலானாலும் நான்
அவனை கல்யாணம் பண்ண மாட்டேன்.''
''அப்போ ஒர்க் தானா?''
''ஆமா அப்பா''
''ஓகே அப்போ லீவு போட்டு இரு... நாளைக்கு போகாதே ரெஸ்ட் எடு'' என்றார் காந்தன்.
''சரிப்பா லீவு போட்டுடறேன்'' என்று புன்னகைக்க, தாமரைக்கு தன்னால் தான் சாதனா இப்படி இருக்கின்றாள் என்ற
உறுத்தல் ஆரம்பமானது.
அடுத்த நாள் சாதனா வேலைக்கு செல்லவில்லை. அவளுக்கும் ஒரு நாள்
சோம்பலாக இருக்க வீட்டிலே இருந்தாள்.
சாதனா வராமல் போகவும் போன் சுவிட்ச் அப் என்று வரவும் அசோக்
என்ன என்று அறிய அவளது வீட்டிற்கே வந்தான். காந்தன் இன்னும் வரவில்லை தாமரை எங்கோ
கிளம்பி கொண்டு இருக்க வந்து நின்றான்.
''வாப்பா சாதனா உள்ளே இருக்கா. சாதனா நான் இப்போ வெளிய
கிளம்பறேன்''
''அம்மா நான் பார்த்துக்கறேன் நீங்க கிளம்புங்க'' என்றே சாதனா சொல்லிட தாமரை கிளம்பினாள்.
''என்ன டா? ஏதாவது வேலையா?''
''அதெல்லாம் இல்லை நீ வரலை. போனும் சுவிட்ச் ஆப் அதனால பார்க்க
வந்தேன்''
''அடேங்கப்பா என் மேல பாசமா வந்து எல்லாம் விசாரிக்கற'' என்று உட்கார் சிப்ஸ் எடுத்து கிட்டு வர்றேன்'' என்று உபசரித்தாள்
''சிப்ஸ் எடுத்துக்கோ டா'' என்று தட்டில் வைக்க, அதை எடுத்து உண்டபடி தனக்கு கொஞ்ச காலத்தில் தோன்றிய
எண்ணத்தை சாதனாவிடம் கூற முனைந்தான்.
''சாதனா நான் நம்ம ஆபிஸ்ல ஒரு பொண்ணை விரும்பறேன்...'' என்று சாதனாவின் தாய் தந்தை இல்லாததால் கூற துவங்கினான்.
''வாவ் யாருடா அது?''
''அது... அது... அவள் இன்னிக்கு லீவு அதான் ஏன்னு கேட்க வந்தேன்'' என்றதும் சாதனா அவனை முறைக்க அவன் தனது இரு கன்னத்திலும் கையை
வைத்து மறைத்து கொண்டு சொல்லிட, சிரிப்பு வந்து சிரித்தாள்.
''டேய்.... எனக்கு அப்படி தோணலை நான் பிரென்ட்டா பழகறேன் அப்படி
இப்படி சொல்ல விரும்பல.
நான் ஒருத்தரை விரும்பறேன் சோ என்னால முடியாது'' என்று நேரிடையாக சொன்னாள்
''சாதனா நீ அவசர பட வேண்டாம் யோசிச்சு சொல்லு பொய் பேசாதே''
''எனக்கு யோசிக்கணும் என்று அவசியமே இல்லை. நிஜமா சொல்றேன். நான்
விரும்பற ஆள் கூட உனக்கும் தெரியும்'' என்றாள் பூடகமாக.
''யாரு?''
''கௌதம் கார்த்திக்'' என்றவளின் கண்களும் கன்னமும் மலர்ந்தது.
''எப்படி நீ அவர்கிட்ட... ஓஹ் நீங்க ரெண்டு பேரும் சொந்தம்ல....
அவரும் உன்னை விரும்பறாரா? அன்னைக்கு உன்னையே பார்த்தாரே அதான் காரணமா?'' என்று கேட்டான்.
''தெரிலை ஆனா இப்போ அவருக்கு என் மேல கோவம் தான்'' என்றவள் குரல் சட்டென கலங்கியது.
''அப்போ நீ என்னை...'' என்றதும் சனா அழுத்தமாக
''ப்ளீஸ் நிறுத்து அசோக். கௌதம் தான் என் புருஷன் அதுல எந்த
மாற்றமும் இல்லை'' என்றாள் வேகமாக
''சாதனா நீ.... என்னை கொஞ்சம் யோசிக்கலாம். உன்னை வெறுக்கறவரை
விட்டுட்டு உன்னை நேசிக்கிற என்னை விரும்பலாம்.'' என்று வேறு விதமாய் மாற்ற முயன்றான்.
''நானும் கௌதமும் ஒரே நைட் ஒரே ரூம்ல இருந்து இருக்கோம்'' 'கடவுளே இவனுக்கு இப்படி தான் சொல்லி புரியவைக்கணும் சாரி கௌதம்' என்று மனதினுள் சொல்லி அவனை ஏறிட, ஷாக் ஆகி நின்றான் அசோக்.
கொஞ்ச நேரம் சுதாரித்தவன் ''பொய்'' என்றான்.
''காஞ்சிபுரம் போனப்ப நான் ஹோட்டலில் இருந்தேனே அப்போ அவர் கூட
தான் இருந்தேன் வேணுமென்ன ஆமாவா இல்லையா என்று கௌதம் கிட்டயே கேளு. அவர் சொல்றது
கேட்க விரும்பலை என்றால் ஹோட்டல் ரிஸ்ப்ஷனிஸ்ட்கிட்ட கேளு அவங்க தான் ரிலேட்டிவ்
என்று கௌதம் கூட தங்க சொன்னதே. அடுத்த நாள் அதே ரூம்க்கு நீ கூப்பிட்டு போனதும்
தான் ஷாக் ஆனேன். ஆனா அப்போ கூட நான் என் கௌதம்மை தான் பேட்டி எடுக்க வந்தேன்
என்று தெரியாது அதனால தான் அவர் எனக்காகவே அவரா பேசி கட்டுரை முடிச்சார் ''
அமைதியாக யோசித்தவன் "ஓகே நான் லவ் பண்ணு என்று டார்ச்சர்
தர மாட்டேன். பட் நீ கௌதம் கூட இருந்தப்ப சேப்பா தான் இருந்துருப்பா எனக்கு
நம்பிக்கை இருக்கு. நீ அப்படிபட்ட பொண்ணு இல்லை கௌதமும் அப்படிபட்டவர் இல்லை.
ஏன்னா உனக்கு கெளதம் கார்த்திக் தான் அடுத்த நாள் பேட்டி எடுக்க போறதா இருந்தா நீ
தனியா இருக்கும் பொழுது அவர் சொல்லி இருப்பார் பட் அவர் உன்னை தனித்து தங்க
வச்சதிலே தெரியுது அவர் கண்ணியம் காத்திருந்தார் என்று...'' என்று கூறவும் ஆமோதிப்பதாய் தலையசைத்தாள்.
''தேங்க்ஸ் டா என்னை புரிஞ்சு என்னை லவ் டார்ச்சர் செய்ய
மாட்டேன் என்று சொன்னதுக்கு என் மேல அவர் மேல நம்பிக்கை வைத்ததுக்கும்''
''என்ன டா இவன் உடனே பல்டி அடிச்சுட்டான் என நினைக்காதே. அன்று
ஹோட்டலில் சாப்பிட போனப்ப கௌதம் ப்ரெண்ட்ஸ் கூட இருந்தப்ப அவர் கண்களில் ஒரு காதல்
இருந்தது அத அப்போ என்னனு தோணலை இப்போ உணரறேன் அது அவர் உன்னை விரும்பறார் என்று
அதனால தான்''
''பாரு டா. அது தெரிஞ்சும் என்கிட்ட லவ் சொல்லற உனக்கு என்ன
தைரியம்'' என்று பேப்பரால் அவன் மீது தூக்கி அடித்தாள்
''ஆசை தான் உனக்கு என் மேல லவ் வந்துடும் என்று . ஆமா உங்க வீட்ல
தெரியுமா?'' என்று சுவாதினமாக கேட்டான்.
''ஏன் டா போட்டு கொடுக்கவா?''
''அடிப்பாவி அதெல்லாம் இல்லை நான் நல்ல பிள்ளை ம்மா'' என்றான். சாதனா அமைதியாக.
''அம்மாவுக்கு தெரியும் இருந்தாலும் அம்மாவுக்கு கௌதம்மை
பிடிக்காது. அப்பாவுக்கு தெரியாது. தெரிந்தால் என்ன முடிவு எடுப்பார் என்று
தெரிலை. எப்பவும் அப்பா எனக்கு அகைன்ஸ்ட்டா நடக்க மாட்டார்'' என்றாள் நிதானமாக.
''ஓகே உன் காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள். நல்ல வேளை அறை
வாங்குவேன்னு நினைச்சேன் பட் இல்லை'' என்று சிரித்தான்,
''தேங்க்ஸ் டா புரிஞ்சுக்கிட்டதுக்கு அம்மா கூட புரிஞ்சுக்கலை
அவங்க பிடிவாதம் எதுக்கோ. நான் அவங்க மாப்பிள்ளை பார்த்தா கட்டிப்பேன் என்று
நினைக்கறாங்க வர்றவன்கிட்ட இப்போ உங்கிட்ட சொன்னதை சொன்னா தலை தெறிக்க ஓடுவாங்க
அப்போ இருக்கு அவங்களுக்கு.... அதான் அவங்க கெளதம் போட்டோ கிழிச்சு போட்டதுக்கு
தண்டனை'' என்றாள் கோபமாக.
''அடிப்பாவி அப்படி எல்லாம் சொல்லிடாதே எல்லாரும் என்னை மாதிரி
நினைக்க மாட்டாங்க கேட்கறவங்க தப்பா தான் நினைப்பாங்க'' என்று கூறினான்.
''அம்மா ஆரம்பிச்சா அப்படி பண்ணலாம் என்று ஐடியா டா'' என்று உரைத்தாள்.
''அம்மா தாயே உன் ஐடியாவை மாத்து.... சரி நான் கிளம்பறேன் பை''
''பை டேய் லவ் சொல்லிட்டோம் ரிஜெக்ட் பண்ணிட்டேன்னு பேசாம
இருக்காதே'' என்று மொழிந்தாள்.
''ஒய் நீ கல்யாணத்துக்கு சொல்லு முதல் ஆளா வந்து கட்டு கட்டறேன்.
இந்த அசோக் அப்ப தெரியும்'' என்று பைக்கில் கிளம்பினான்.
இங்கு கௌதமோ சனா ஒருத்தியின் நினைவை மறக்க போராடினான்.
முடியவில்லை.....
அவளை பார்க்க பேச துடித்தாலும் தாமரை காலில் விழுந்த கோலமே
மனதை அரிக்க சனாவை பற்றி என்ன கூடாது என்று தவிர்க்க பார்த்தான் எல்லாம் முடியாமலே
போனது.
கௌதம் தனது காதலை மறுத்தாலும் அவனின் முகம் சோர்வாக இருப்பதாக
ஜோதி மூலம் சனா அறிந்தே இருந்தாள். கௌதம் அவளும் அவனும் சேர்ந்து எடுத்த
புகைபடத்தை பிரேம் செய்து தனது கபோர்ட் அறையில் உள் பக்கம் மாட்டி இருந்தான்.
தினமும் அதனை அணைத்து உறங்குவான் காலையில் பத்திரமாக எடுத்து பூட்டியும் வைப்பான்.
பின்னர் ஜோதிக்கு தெரிந்தால் அதையும் சனாவுக்கு தெரிவிப்பாள்
என்றெண்ணி தவிர்த்தான். இப்படியாக நாட்கள் போனது தான் மிச்சம்......
நினைவுகள் தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
வெரி வெரி நைஷ்மா சூப்பர் மா💐💐💐
ReplyDelete