தித்திக்கும் நினைவுகள்-6

 


அத்தியாயம்-6

கண்களை மெல்ல திறந்தவள் ஏதோ நிழல் போல படிந்திருப்பதை கண்டு மேலும் நன்றாக கண்களை திறந்து பார்க்க தன்னை சுற்றி ஒரு வலை இருப்பதை கண்டு அதை மேலே எடுத்துவிட்டு முகம் அலம்பி ப்ரெஷ் செய்து நிற்க, சூடான ஏலக்காய் டீ தயாரித்து ஆவி பறக்க கௌதம் எடுத்து வந்தான்.

''ஐயோ அண்ணா ஏன் நீங்க எடுத்துட்டு வந்து இருக்கிங்க நானே வருவேனே'' என்று ஜோதி கூறினாள்.

''இது இந்த செல்ல தங்கச்சிக்கு இந்த கௌதம் அண்ணாவே தயாரித்த ஏலக்காய் டீ'' என நீட்டினான். ,

''அண்ணா உங்களுக்கு டீ போடா தெரியுமா?'' வியப்புடன் கேட்க,

''எல்லாம் தெரியும். ஸ்பெஷலி நான்வெஜ்''

''அண்ணா நம்பவே முடியலை. நீங்க நிமிர்ந்து நின்று பார்த்தப்ப பயம் தான் வந்துச்சு அப்படி ஒரு ஆளுமையோட இருந்திங்க முகம் எல்லாம் இறுகி கண்கள் சிவந்து கோவமான முகம்'' என்றாள்

''இப்போ...?'' என்றான் தலை சாய்த்து.

''சான்ஸ்சே இல்லை உங்களை கட்டிக்க போற அண்ணி கொடுத்து வச்சவங்க'' அவள் அண்ணி என்றதும் அவன் மனம் சனாவை தான் எண்ணியது.

''அது என்ன வலை அண்ணா?''

''கொசு வலை டா குட்டிம்மா. ரூம் பிடிச்சிருக்கா?'' என்று தோளில் கைப்போட்டு பேசியபடி ஹாலுக்கு வந்தான்.

''ரூம்மா அது செமயா இருக்கு அதுவும் அங்கிருக்கற பையின்ட்டிங் சூப்பர் அண்ணா''

''சரி வா ஹாலுக்கு போகலாம் அப்பறம் ஆச்சி பார்க்கலாம்''

''ஆச்சி?''

''உனக்கு அத்தை என்று சொல்லி இருப்பாங்களே'' என்றான்.

''பயமா இருக்கு திட்டுவாங்களா?''

''நான் இருக்கேன் அப்பறம் பயம் ஏன் குட்டிம்மா''

இருவரும் பக்கத்துக்கு அறைக்கு சென்று கதவை திறந்தான்.

நெற்றியில் விபூதி அணிந்து நூல் சேலை அணிந்து ஒரு மூதாட்டி படுத்திருக்க கண்டாள்,

''என்ன வேதா இன்னுமா தூக்கம்?'' என்றான்

''அடேய் நீ எப்போ வந்த காலையிலா இராத்திரிலயா?'' என்றார் மூதாட்டி

''பேரன் வந்ததே தெரிலை இதுல பேத்தி வந்தது எப்படி தெரியும்?''

''நீ ஜோதியை அழைச்சுட்டு வருவதா சொன்னாலே எங்க டா அவ?''

''வேதா உன்னை பார்த்து ஜோதிக்கு பயம்'' என பின்னால் இருந்த ஜோதியை முன்னுக்கு இழுத்தான்.

''என்னை பார்த்தா? ஏன் இங்க வா'' என்றதும் ஜோதி அருகே வர அவளை கண்கள் சுருக்கி மேலும் கீழும் பார்த்து,

''அடேய் நீ சொன்னது போல தான் இருக்கா? நான் இவ வயசுல இப்படி தான் இருந்தேன். என் சாயலில் பெத்து இருக்கான் உன் அப்பன். என்னடா கண்ணு என்னை பார்க்க பயமா? இங்க பாரு உன் அண்ணனை என்னை பேரை வச்சி கூப்பிடறான்'' ஜோதிக்கு ஆச்சரியமாக இருந்தது. அத்தை திட்டுவார்கள் என்று இருக்க அவர்களோ தன்னை ஆசையாக வரவேற்கின்றார்களே என்று.

''ஏன் டி ம்மா என்கூட பேச கூடாது என்று இருக்கியா என்ன?''

''அத்தை... அப்படி இல்லை''

''நீ என்னை ஆச்சி என்றே கூப்பிடு. என்னை கண்டு பயப்படாதே சரியா''

''ஹ்ம் '' என்றாள்.

''சரி வேதா நீ இதுவரை பேசியதே போதும் ரொம்ப பேச வேண்டாம். அப்பறம் மூச்சு வாங்கும். நான் குட்டிம்மா கூட போய் டிரஸ் எல்லாம் வாங்கணும் போய் ரெடி ஆகு'' என்றதும்

''எனக்கு எதுக்கு அண்ணா?'' என்று தவிர்த்தாள்.

''அண்ணா வாங்கி தருவது எல்லாம் என் குட்டிம்மாவுக்கு தான். சரி நீ வீட்டுக்கு போன் செய்து பேசிக்கோ'' என்று நகர்ந்தான்.

காலையில் சாப்பிட்டு கிளம்பி மதியம் முடியும் வரை அவளுக்கு தேவையான ஆடைகளை எடுத்து அங்கே தைக்க கொடுத்ததும் சில சுடிதார்களை ரெடிமேட் ஆடையாகவும் எடுத்தான். அண்ணா போதும் என்பதை அவன் கேட்பதாகவே இல்லை.

அருகே இருக்கும் ஒரு உயர் தர ஹோட்டலில் சாப்பாடை முடித்து விட்டு நகை கடைக்குள் நுழைந்தான்.

''அண்ணா இங்க எதுக்கு?'' என்றாள் கொஞ்சம் தயக்கத்துடன்.

''குட்டிம்மா நீ இப்படி ஜிமிக்கி கம்மல் போட்டு கொண்டு காலேஜ்க்கு போன நல்லா இருக்காது. லைட் வெயிட் கம்மல் தான் பெஸ்ட் அதுவும் இல்லாம இப்படி பெரிய செயின் எல்லாம் போட்டுட்டு போனா பட்டிக்காடு என்று கேலி செய்தாலும் செய்வாங்க'' என்று சொல்லிட

தனக்கு அதிகமாக செலவு செய்வதை எண்ணி தயங்கினாள்.

''இங்க பாரு அண்ணா இவ்ளோ நாள் யாருக்கும் எதுவும் வாங்கி கொடுத்ததில்லை. முதல் முறையா என் தங்கச்சிக்கு என்று வாங்கி தர்றேன் ப்ளீஸ் டா'' என்றதும் ஆச்சி திட்டுவாரோ என்ற பயப்பட்டாள்

''நானாவது பரவாயில்லை வேதா வந்திருந்தாங்க உன் கல்யாணத்துக்கும் சேர்த்து இப்பவே வாங்கு என்று என்னை விரட்டி இருப்பாங்க'' என்றதும் சிரிக்க அவனின் சிரிப்பில் நிஜமாகவே பயம் களைந்தாள்.

ஒரு வழியாக எல்லா ஆடைகளையும் வாங்கி காரில் வர இரவானது. இரவு உணவை ஹோட்டலில் சாப்பிடலாம் என்று கௌதம் சொல்ல வேண்டாம் அண்ணா வீட்ல போய் சாப்பிட்டுக்கலாமென சொல்லி விட்டாள்.

வீட்டுக்கு வந்ததும் அவன் கையாலே தோசை வார்த்து அவளுக்கு நீட்டினான்.

''அண்ணா நிஜமா வர்ற அண்ணி கொடுத்து வச்சவங்க நீங்களே சமைச்சு அண்ணிக்கு ஊட்டி விடுவீங்க போல'' என்றதும் அவனுக்கு சனா நினைவே தாக்கியது. இது என்ன ஜோதி அண்ணி என்று கூறும் போதெல்லாம் எனக்கு சனா நியாபகம் வருது. இரவில் அதை பற்றியே சிந்திக்கலானான்.

காலையில் அலுவலகம் செல்லும் போது ஜோதியையும் அவனே அழைத்து சென்று கல்லூரியில் விட்டுவிட்டு மாலை "ஆட்டோவில் வந்துடு குட்டிம்மா'' என்றான்.

இப்படியாக ஜோதி கல்லூரிக்கு செல்லவும் மாலை வேதவள்ளியோடு அரட்டையும் படிப்பும் சியாமளவிடம் போனில் பேசியும் இரவு கௌதமோடு சாப்பிட்டு வாயாடி பொழுதைப் போக்கினாள்.

ஒரு பக்கம் கிராமத்தில் வீட்டினை ஆல்டர் செய்ய அங்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்படியாக செல்ல அன்று காஞ்சிபுரத்தில் ஒரு பெரும் புள்ளியானா ஒரு சாமியார் இறக்க அதனை நேரில் போட்டோ கட்டுரை எடுக்க சாதனா சென்றாள்.

அவளுக்கு உதவியாக அசோக் என்பவனும் சென்றிருந்தனர். அசோக் அங்கே தனது நண்பன் இருப்பதாக சொல்லி அங்கே தங்குவதாக சாதனாவை ஒரு தங்கும் வசதி கொண்ட ஹோட்டலில் இறக்கி விட்டு கிளம்பிவிட்டான்.

அவன் சென்ற கொஞ்ச நேரத்திலே ஒரே கலவரம். அந்த சாமியார் மரணம் இயற்கையா? கொலையா? என்று அங்கே கோஷ்டி மோதலில் இருந்தது.

''மேம் இங்க ரூம் கிடைக்கும் என்று நம்பி என் பிரென்ட் கிளம்பிட்டான். இப்போ வெளியே வேற ஒரே கலவரம். ப்ளீஸ் இங்க தங்க எப்படியாவது ரூம் அரேஞ்சு பண்ணி தாங்க'' என்று சாதனா கெஞ்சினாள்.

''இங்க பாருங்க மிஸ் இங்க ரூம் இருந்தது எல்லாம் ஜஸ்ட் அரை மணி நேரம் முன் தான் புக் ஆச்சு. இப்போ ஒரு ரூம் கூட காலியா இல்லை. எனக்கு உங்க நிலைமை புரியுது. பட் நான் என்ன செய்ய நான் ஜஸ்ட் ரிசப்ஷனிஸ்ட் என்னால என்ன செய்ய முடியும்'' என்றாள் ரிசப்ஷன் பணிப்பெண்.

இருவரின் உரையாடலை கலைக்கும் விதமாக 'சாதனா'' என்ற குரல் கேட்க அது கௌதம் குரலாயிற்றே... என்றே திரும்ப நிமிர்த்த நடையோடு அவளை நெருங்கிருந்தான்.

'கௌதம் மாமா...' என்ற குரல் அவளுக்கே கேட்காது சொல்லி முடிக்க

''நீ எங்க இங்க''

''அது என் ஜாப் விஷயமா''

''ஓஹ் ஒன் செகண்ட் ரூம் கன்பார்ம் ஆகிடுச்சா என்று பார்த்துக்கறேன்'' என்று ரிசப்ஷனிஸ்ட் பெண்ணிடம் ''ஆன்லைன் புக் பண்ணியது நேம் கௌதம்'' என்றே சொல்லிட ''வெயிட் சார்'' என்றே அவள் கணினியை பார்க்க ''சார் இந்தாங்க உங்க ரூம் கீ'' என்று நீட்டினாள்.

''தேங்க்ஸ் என்றே பெற்று கொள்ள திரும்ப ''சார் நீங்க ரெண்டு பேரும் ரிலேட்டிவ் வா?'' என்றதற்கு கௌதம் சாதனாவை பார்க்க சாதனாவே ''ஆமாம்'' என்றாள்.

''மேம் நீங்க சார் கூடவே தங்கிக்கலாமே? வெளிய வேற ஒரே பிரச்சனை. நைட் வேற நீங்க வெளிய போறது சேப் இல்லை'' என்றதும் என்ன என்பது போல சாதனாவை பார்த்தான்.,

''அது வந்து இங்க ரூம் புக் பண்ண வந்தேன். எல்லா ரூமும் ஆட்கள் இருக்காங்க ப்ரீ இல்லை என்றார்கள் வெளிய வேற ஒரே கலாட்டா அதான் ரூம் எப்படியாவது கேட்டுட்டு இருந்தேன். நீங்க எனக்கு தெரிஞ்சவர் என்றதும் அவங்க உங்க கூட தங்க சொல்லறாங்க'' என்று தயங்கி கூறினாள்.

இரண்டு நொடி யோசித்தவன் ''உனக்கு ஆட்சபனை இல்லை என்றால் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை சாதனா'' என்றதும் அவளுக்கு தர்ம சங்கடமாக இருந்தது. இருந்தும் வேறு வழி இல்லை என்ற பட்சத்தில் ''ஓகே நோ ப்ராப்ளம்'' என்றதும் அங்கிருந்த பெண்மணியிடம் ஒரு நன்றி தெரிவித்து அவனோடு நடந்தாள்.

அவனின் அருகே நடக்கும் போது தலையை நிமிர கூட மறந்து வைத்தாள்.

அறைக்கு வந்த பிறகு உள்ளே ஒரு அறை இருப்பதை கண்டு நீ ப்ரெஷ் ஆகிட்டு வா சாப்பாடு ஆர்டர் தந்துடறேன். நீ சாப்பிட்டியா?" என்றான்.

''இ...இல்லை'' என்றாள் தயக்கத்துடன்.

''ஓகே நான் ஆர்டர் தந்துடறேன்'' என்று போனில் கீழே இருக்கும் உணவகத்துக்கு போன் செய்து ஆர்டர் தந்துவிட்டு முகம் அலம்பினான். நல்ல வேளை அறையில் ஒரு பாத்ரூமும் ஹாலில் ஒரு பாத்ரூமும் இருக்க செய்தது. உணவு வந்ததும் அவள் தயங்கி வர,

''உட்கார்'' என அவள் அமர ஒரு இருக்கையை இழுத்து போட்டான்.

அவளுக்கு அவனே பரிமாறினான். ''இந்த அசோக் போன் கூட சுவிட்ச் ஆப் இருக்கு . ஒழுங்கா அவன் பிரென்ட் வீட்டுக்கு போனானா என்று தெரியவில்லை''

''நீ ஏன் அவன் கூட போகலை'' என்று கேட்டான்.

''அவன் ப்ரெண்ட் பேச்சுலர். அதனால தான் அவன் மட்டும் கிளம்பிட்டான். என்னை இங்க இறக்கி விட்டுட்டு தான் கிளம்பினான். எனக்கு தான் ரூம் கிடைக்கலை'' என்று சாப்பிட்டு முடிக்க,

''தேங்க்ஸ்''

''எதுக்கு?''

''தங்க ...அனுமதிச்சதுக்கு''

''நீ என் ச... என் ரிலேட்டிவ் இது கூட செய்ய மாட்டேனா? நான் ரிலேட்டிவ் தானே? என்றே கேள்வி எழுப்ப, தலை குனிந்தபடி ''ம்'' என்றாள்.

''தேங்க காட் நீ அந்த ரிசப்ஷனிஸ்ட் முன்ன உன் அம்மா மாதிரி கண்டவங்க தெரியாது என்றே சொல்லிடுவனு நினைச்சேன் நாட் பேட். என் கூட என்னை நம்பி தங்கவே செய்யற'' என்றான்.

எப்படி நான் ஒரு ஆடவனோடு தங்க ஒப்புக் கொண்டேன். கௌதம் என்பதாலா? ஆம் இதில் என்ன ஐயம் என்றது மனசாட்சி.

''நான் நீங்க என்பதால் தான் தங்க யோசிக்கலை . இல்லை என்றால் எப்படி யாவது ரிசப்ஷன் ரூம்ல சேரில் இருந்தே கூட இரவை ஓட்டி இருப்பேன்'' என்று அவனோடு மட்டும் தான் என்பதை தெளிவாக்கினாள்

''தென் இந்த ஊருக்கு எதுக்கு வந்த?''

''இங்க இறந்தார்ல சாமியார் அவரை போட்டோ வித் கவர் ஸ்டோரி அது ரெடி ஆகிடுச்சு. பட் ரொம்ப நாளா கார்த்திக் என்று ஒருத்தன் பேட்டி எடுக்க இருந்தோம் அவன் இங்க நாளைக்கு நேரம் ஒதுக்கி தந்து இருக்கான். சென்னை தான் ஆனாலும் இங்க வந்து இருக்கான் அதனால இங்கயே பேட்டி முடிச்சுட்டு வர சொல்லிட்டாங்க. என் பேட் லக் ரூமே கிடைக்கலை''

பேட் லக்கா எனக்கு குட் லக் என்றே மனதில் எண்ணியவன்.

''என்ன பேரு சொன்ன?''

''கார்த்திக். யங்கஸ்ட் மேன் சாப்ட்வெர் இன்ஜினீயர். ஆனாலும் இங்க காஞ்சிபுரத்துல இடம் வாங்கி ஆள் வச்சு விவசாயம் பண்றான். சோ மற்ற இளைஞருக்கு ஒரு ரோல் மாடல் என்ற விதமா ஒரு சின்ன கட்டுரை''

''ஓஹ் ஐ சீ. எப்போ மீட் பண்ண போற?''

''தெரியலை நாளைக்கு அசோக்கிட்ட சொல்றேன் என்று சொல்லி இருக்கான்''

''அவன் இவன் என்று சொல்ற சின்ன பையனா?''

''இல்லை கல்யாணம் செய்யற ஏஜ். இருபத்தி ஏழு என்று நினைக்கறேன். என் பிரென்ட் மாலதி அவகிட்ட அவன் வழிஞ்சு பேசியதா சொன்னாள். அதான் மரியாதை கொடுக்க தோணலை''

முகம் இறுகி போனான் கௌதம். அவனுக்கு கால் வர,

''ஓகே சாதனா நீ ரூமில் போய் தூங்கு இந்த வாட்டர் பாட்டில் எடுத்துக்கோ. லாக் பண்ணிக்கோ. குட் நைட்'' என்றே போனை ஆன் செய்தான்.

தலையை ஓகே என்று செய்து உள்ளே நுழைந்ததும் அறை கதவைச் சாற்றினாள்.

'சே இன்னும் கொஞ்ச நேரம் பேசி இருக்கலாம் இந்த கால் வந்து கெடுத்துடுச்சு. பேசிய வரை அந்த யூஸ்லேஸ் கார்த்திக் பற்றி பேச்சா போயிடுச்சு' என்றே கவலை கொண்டாலும் இன்று அவளுக்கு மறக்க முடியாத நாளாகவும் இருந்தது.

யாரிந்த மாலதி சே நல்லா ஸ்பாயில் பண்ணி வச்சி இருக்காளே?ஆனாலும் என் சனா என்னோடு தங்க தயங்காமல் வந்தாளே அதுவே அவனுக்கு சந்தோசம் தந்தது. சனா அவனோடு தங்குகிறாள் என்றால் அவள் என் மீது எப்பேர்பட்ட நம்பிக்கை வைத்து இருக்க வேண்டும் என துள்ளினான்.

-நினைவுகள் தொடரும். 

-பிரவீணா தங்கராஜ் 

Comments

  1. எதுக்கு இப்படி கண்ணாமூச்சி ஆட்டம். மனசுல இருக்கிறதை பட்டுன்னு வெளியே சொல்லிடலாமே.

    ReplyDelete

Post a Comment

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...