தித்திக்கும் நினைவுகள்-10

 


அத்தியாயம்-10

சட்டென்று கண்ணாடியை கழற்றியவன் ''நிஷா அது...'' என்று எழுந்தவன் ''இரு பேசிட்டு வர்றேன்'' என்று சாதனா பக்கம் நடந்தான்

சுந்தரோ ''டேய் தெரிந்த பெண்ணா?'' என்றான். அவனின் கையை பற்றி ,

''ஆமா டா மாமா பொண்ணு'' என்று கையை பிரித்து அவளிடம் வந்து நின்றான்.

''ஹாய் சாதனா...''

''ஹாய் கார்த்திக்... நீங்க எங்க இங்க?'' என்று பதில் அசோக்கிடம் இருந்து வந்தது.

''எல்லாம் சாப்பிட தான்'' என்றான்.

''உங்களை மீட் பண்ணனும் என்று இருந்தேன். உங்க கட்டுரை பார்த்திங்களா?''

''ஓ பார்த்தேன். இன்பாக்ட் அதுக்கு தான் ட்ரீட்''

''ஹலோ அது வந்து ஒரு மாதத்துக்கு மேல இருக்குமே?'' என்றான் அசோக்.

''பட் என் ப்ரெண்ட்ஸுக்கு இப்போ தானே தெரிஞ்சுது. அதுவும் ஆபிஸ்ல ஒருத்தர் பார்த்து இவங்ககிட்ட காட்டியதால்''

''என்ன டா மாமா பொண்ணு கூட பேச போறேன் என்று வந்துட்டு இங்க பையனோட பேசற?'' என்றான் சத்யா கௌதம்தோளில் தட்டியவாறு.

''ஹாய் இது என் பிரென்ட் சத்யா இது சுந்தர் இது ரேஷ்மி இது நிஷாந்தினி'' என்றதும் எல்லோரும் கோரஸாக ''ஹலோ'' என்றனர்.

''யாரு மாமா பொண்ணு கீர்த்தியா?'' என்று விழித்தான் அஷோக்

''சாதனா...'' என்று அவளையே இமைக்க மறந்து பார்த்தான்.

''சாதனா சொல்லவே இல்லை'' என்றான் அசோக்.

''அன்னைக்கு இவரை தான் பேட்டி எடுக்கிறோம் என்று தெரியாது ஷாக் ஆகிட்டேன்'' என்றாள் அதே முறைப்போடு,

''ஏய் அதுக்கு அப்பறம் கூட சொல்லலை'' என்றான் அசோக்.

''அசோக் நீங்க உங்க பிரென்ட் கூட ட்ரிப் போயிட்டீங்க அவசரம் என்று'' சொல்லியதும் ''ஓஹ் ஆமாம்''என்று சொன்னாலும் அதுக்கு பிறகு ஏன் சொல்லவில்லை என்று குழம்பி அப்பறம் கேட்டுக்கலாம் என்று விட்டுவிட்டான்.

''கௌதம் சாதனாவை தெரியும் இது கீர்த்தி'' என்று அறிமுகப்படுத்தினான் அஷோக்.

''மாலதி வரலையா?'' என்றதும் மேலும் சாதனா அவனை கூடுதலாக முறைத்தாள்.

''இல்லை அவளுக்கு உடம்பு சரியில்லை'' என்றாள் கீர்த்தி.

''ஆமா கௌதம் உங்களுக்கு முறை பையனா? இப்படி முறைச்சுக்கிட்டு இருந்திங்க'' என்று நிஷாந்தினி கேட்க, அதே முறைப்போடு அவனை பார்த்து ''அத்தை பையன்'' என்றாள்.

நிஷாந்தினி தனது தோளில் கையை ஊன்றி பேசுவதை தனது தோளில் சாய்ந்து இருந்ததையும் பார்த்து தான் அவள் முறைக்கின்றாள் என்று அறிந்து மெல்ல நிஷாந்தினியை கையை எடுத்து ''நீங்கலாம் சாப்பிடுங்க பேசிட்டு வர்றேன்'' என்றான்.

மற்றொரு சேரில் சாதனா அவனும் அமர்ந்து ஜூஸ் பருகியவாறு இருந்தனர்.

''என்ன கோவம் என் மேல?'' என்றான் கௌதம்.

''அதெல்லாம் இல்லை'' என்று கோபமாக தான் கூறினாள் சாதனா.

''பொய் நீ என்னை முறைச்சிகிட்டு தான் இருக்க இப்ப கூட'' என்று சுட்டிக்காட்டினான்

''இல்லை'' என்று வீம்பாய் மறுத்தாள்.

''அங்க இருக்கற எல்லோரும் எனக்கு ப்ரெண்ட்ஸ் மட்டுமே நிஷாந்தினி உட்பட புரியுதா'' என்றான் கௌதம்.

அப்பொழுதும் அவள் முறைக்க, ''உனக்கு அசோக் மாதிரி'' என்றதும் சிறு அமைதிக்கு பின் கௌதமை முறைப்பதை நிறுத்தி விட்டு காதலோடு கண்ணை கலக்க, பார்வைகள் மட்டுமே பேசிக்கொண்டது.

''டேய் வெய்ட்டர் வந்தாச்சு பில் கொடுக்க வா டா'' என்றதும் புன்னகையோடு ''சரி நான் கிளம்பறேன் சனா'' என்றான். இரு குழு நபர்களும் கைகளை அசைத்து பை என்றே சென்றார்கள்.

''ஏன் சாதனா கார்த்திக் உன் மாமா பையன் என்று சொல்லவே இல்லை'' என்று அஷோக் விடாது கேட்டான்.

''சொல்லணும் என்று தோணலை மாலதிக்கு தெரியும்'' என்று சொல்லிட அமைதியாக அவன் கீர்த்தியை ட்ரோப் செய்தான். சாதனா அவள் ஸ்கூட்டியில் பறந்தாள்.

அங்கு கௌதம் காரில் அவனது நண்பர்கள் பட்டாளம் அவனை விடுவதாக இல்லை.

''டேய் மச்சான் என்னடா பார்வை எல்லாம் பலமா இருக்கு'' என்றான் சுந்தர்.

''அதெல்லாம் ஒன்னும் இல்லை'' என்று மழுப்பி சிரித்தான் கௌதம்.

''எதெல்லாம் டா'' என்றான் சத்யா. தான் மாட்டி கொண்டது நன்கு உணர மென்னகை புரிந்தான்.

'' டேய் இது வரை எல்லா பொண்ணுங்களையும் திரும்பி பார்த்து இருக்கானா டா இன்னிக்கு என்ன என்றால் எழுந்து போய்... இடையில் சுந்தர் ''ஏய் என் கையை விடுவித்து கொண்டு போனான்''

''ஆமாம் அவனா எழுந்து போய் அவளை பார்த்து பேசறான். ஆனா அந்த பொண்ணு இவனை முறைக்கிறா? சார் அதையும் ரசிச்சு பார்க்கறார்'' நிஷாந்தினி எடுத்து கொடுத்தாள்.

''ஏய் அவள் நீ கௌதம் மேல கையை வச்சி பேசிட்டு இருந்ததை தான் பார்த்து முறைச்சா'' என்று சரியான பாயிண்ட் எடுத்து விட்டாள் ரேஷ்மி.

''அதுகூட ஓகே ரேசு இவன் அதுக்கு நைஸா என் கையை தள்ளி விட்டுட்டு போய் சாப்பிடுங்க என்று சமாளிச்சான் பாரு எனக்கு கன்பார்ம் ஆகிடுச்சு'' என்று நிஷாந்தினி சொல்லிட,

''ஹலோ ஹலோ ரொம்ப ஓட்டாதீங்க இப்ப தான் ரொம்ப வருஷம் கழிச்சு அவளை என் அப்பா டெத்ல பார்த்தேன். எனக்கு என்னமோ மனசுக்கு பண்ணுது ஒத்துக்கறேன் ஆனா அவளுக்கு என்ன என்று தெரியாம எப்படி லவ்னு ஓட்டறிங்க?'' என்று நண்பர்களின் எண்ணவோட்டத்தை நிறுத்தினான்.

''டேய் ஒரு பொண்ணுக்கு தெரியும் அவ உன்னை விரும்பறா. நான் உன் தோளில் சாய்ந்ததுக்கும் கை போட்டதுக்கு என்னமா முறைக்கற நான் இன்னிக்கு பஸ்பம் ஆகி இருப்பேன். நிச்சயமா இது லவ் தான். நானும் ரேஷ்மியும் எவ்ளோ நாள் பழக்கறோம் இப்படி எங்களுக்கு தோணுதா இது லவ் இருந்தா தான் டா புகைச்சல் வரும்'' என்றதும் கௌதம் மனம் துள்ளியது. இதற்கு முன்பிருந்தே இதயம் அவளிடம் சரணடைகின்றதே அவன் இதயத்திற்கு தெரியாத. இன்று அவளுக்குள்ளும் அந்த அழகிய உணர்வு 'இருக்கும்' என்ற தோழிகளின் வார்த்தையில் மிதமிஞ்சிய ஆனந்தம் கொண்டான்.

''மச்சான் போன் பண்ணி இப்பவே கேளு டா'' என்றான் சத்யா.

''அவ நம்பர் என்கிட்ட இல்லை. அவ பிரென்ட் அசோக் நம்பர் தான் இருக்கு''

''ஏன் டா''

''போகட்டும் எனக்கு ஒரு சின்ன கிளாரிபாக்ஷன் இருக்கு அது தெரியாம மனசை குழப்ப மாட்டேன்''

''டேய் அவன் தெளிவா இருக்கான் விடுங்க டா. இன்னோர் நாள் ட்ரீட் இருக்கு பட் கொஞ்ச நாள் ஆகும் போல'' என்றாள் நிஷாந்தினி.

''மச்சான் நீ ஜெயிச்சாலும் தோற்றாலும் எங்களுக்கு ஒரே ட்ரீட் அது வேணும் டா'' என்றான் கையை முழம் போட்டவாறு.

''அடேய் ...'' என்று சிரிப்புடன் கடந்தனர்.

கௌதம் மனதில் சிவா மனதில் ஏதேனும் ஆசை இருக்குமா? அவன் தான் சனா பின்னால் கையை பற்றி கொண்டு அழைத்து செல்வது தனியாக பேசுவது என்று இருக்கான். சனா அவனிடம் கொஞ்சம் இடைவெளி கொண்டு இருப்பது புரிகின்றது. அதே போல என் மனம் போலவே அவளும் என்னை விரும்புகின்றாள் அவளின் பார்வையே அதற்கு சாட்சி... சிவா மனசில் மட்டும் என்ன இருக்கு? என்று புரிலை... அவன் மனம் கோணமல் எப்படி இதை கையாள போகின்றேன்.... தாமரை அத்தை வேறு என்னை பார்த்தாலே பிடிக்க மாட்டேங்குது... என்று யோசிக்க மனமோ சனாக்கு உன்னை புடிச்சு இருக்கு அத மட்டும் யோசி... என்று சொல்ல அவனாயும் அறியாமல் புன்னகை உதிர்த்தது.

''மாலதி இன்னிக்கு கௌதம் பார்த்தேன் பேசினேன்...'' என்று மறுபக்கம் சாதனா மாலதியிடம் ஆர்ப்பாட்டத்தோடு கூறினாள்.

''ஹ்ம் லவ் சொல்லிட்டியா....'' என்றாள் ஜுரதோடு மாலதி

''இல்லை...'' என்று குரல் குறைந்தது.

''சரி போன் பேசினியா?''

''இல்லையே....''

''அடிபவி எதை செய்யனுமோ அதை செய்யலை... எனக்கு உடம்பு சரியில்லை ஒரு வார்த்தை கேட்டியா... போன் செய்து தேவையில்லாததை பேசற வை டி போனை'' என்று கட் செய்து தூங்க இங்கு சனா 'யெஸ் மாலதி சொன்னது போல போன் செய்வோம் என்று கௌதமிற்கு கால் செய்தாள்.

அன்றைய மாலை பொழுதில் சாதனா தானாகவே கௌதமிற்கு கால் செய்தாள். நம்பரில் இருந்து வருவதை கண்டு கடைசி நம்பர் பார்த்து எடுத்தவன்.

''ஹலோ'' என்றதும்

''நான் சனா பேசறேன்'' என்ற குரலில் மகிழ்ச்சியில் திளைத்தவன்.

''வாட் எ சர்பிரைஸ். என்ன விஷயம்'' என்றான்.

''ஜோதிகிட்ட பேசலாம் என்று...'' இழுக்க,

''அவள் இன்னிக்கு அவ ப்ரெண்ட்ஸ்சோட மூவி பார்க்க போய் இருக்கா கொஞ்சம் லேட் ஆகும் வந்ததும் பேச சொல்லவா'' என்றான்.

''ம் சரி'' என்று சொல்லியதும் கட் செய்தான். 'அடப்பாவி ஆசையா போன் செய்தா கட் செய்துட்ட என்று திட்டி கொண்டு இருக்க, அவனோ வேகமாக அந்த நம்பர் இதுக்கு முன் வந்த நம்பர் போல இருக்கே என்று கால் பதிவில் பார்க்க அது ஒரு மாதத்திற்கு முன் சரியாக சொன்னால் காஞ்சிபுரம் சென்று வந்த ஒரு வாரத்தில் இருக்க அவன் மனம் குத்தாட்டம் போட்டது.

அவனுக்கு அவள் போன் செய்து இருக்கின்றாள் ஏனோ அதன் பின் பேச முயலவில்லை என்பது புரிய, குறுந்செய்தியில்,

''நம்பர் தெரிஞ்சே என் கூடபேசாம இருந்தியா?'' என்று அனுப்பினான்.

''சாரி தவறு தான் எனக்கு கொஞ்சம் பயம் இருந்துச்சு'' என்று அவளும் அனுப்ப, எதுக்கு பயம் என்னிடம் என்று எண்ணியவன் அதை போனில் கேட்க கால் செய்தான்.

ஒரே ரிங்கில் எடுத்தவளிடம் ''என்ன பயம் என்கிட்ட? சிவாகிட்ட பேசும் போதெல்லாம் பயப்படற மாதிரி தெரியலையே? பின்ன என்கூட ஏன்?'' என்று அவள் மனதில் சிவா எந்த இடம் தான் எந்த இடம் என்று அறிய ஆவலுடன் கேட்க, அவளோ அடேய் மடையா அவன் என் பிரெண்ட் மாதிரி நீ அப்படியா என்று மனதில் சொல்லி கொண்டவள் அதை அவனிடமே கூட கூறி இருக்கலாம்.

ஆனால் அவளோ ''நான் உங்களையும் சிவாவையும் வேற வேற பார்க்கலை இரண்டு பேருமே அத்தை மகனா தான் பார்க்கின்றேன். என் அம்மாவுக்கு தான் வேறுபாடு எனக்கும் இல்லை சியாமளா அத்தைக்கும் இல்லை'' என்று முடிக்க, பேச்சு வேறு திசைக்கு போனது.

''அத்தை திட்டுவாங்க என்று பயமா?'' என்றான் கௌதம்

''அதுவும் தான்'' என்றவள் அவனிடம் சரளமாக பேசினாள்.

''அன்னைக்கு ஹோட்டலில் என்னோட தங்கியதை அத்தைகிட்ட சொல்லலையா?'' என்று கேட்டான். 

''இல்லை யார்கிட்டயும் சொல்லலை. அம்மா கண்டிப்பா தப்பா தான் பேசுவாங்க. அவங்களை பற்றி தான் தெரியுமே. நீங்க ஆச்சிகிட்ட'' என தயங்கினாள்.

''சொல்லலை. தப்பா எல்லாம் நினைக்க மாட்டாங்க ஆனா வேண்டாம் என்று தோணுச்சு''

''ஜோதி வந்துட்டா நான் உனக்கு அவள் நம்பர் சென்ட் பண்றேன்'' என்று பேசி வைக்க, நம்பர் சென்ட் பண்ணியதும் அவளுக்கு அழைத்தாள்.

''ஏய் ஜோதி இது யார் நம்பர்?''

''அண்ணி இது அண்ணா எனக்கு வாங்கி கொடுத்த சாம்சங் போன்'' என மகிழ்ந்தாள்.

''சிவா என்கிட்ட சொல்லவே இல்லை'' என்று சாதானா கேட்டாள்

''அண்ணி கௌதம் அண்ணா வாங்கி கொடுத்தாங்க''

''ஓஹோ. பரீட்சை எப்படி பண்ணி இருக்க?''

''சூப்பரா எழுதி இருக்கேன். அண்ணி ஊருக்கு வருவீர்களா லீவுக்கு போவேன்''

''ஹ்ம் ட்ரை பண்றேன் ஜோதி''

''ட்ரை எல்லாம் இல்லை நீங்க வர்றீங்க'' என்ற பேச்சில் கௌதம் அவள் ஊருக்கு போனால் தானும் போக வேண்டும் என்று முடிவே செய்து இருந்தான்.

அங்கு சனாவோ கௌதம்மிடம் இன்று ஹோட்டல் சந்திப்பு போன் பேச்சு இரண்டிலும் மனம் நிறைந்தவளாக அவள் கப்போர்ட் திறந்து அவன் பேட்டி வந்த புத்தகத்தை எடுத்து புரட்டினாள். அதில் அன்று அணிந்த பிஸ்தா க்ரீன் சட்டை கொண்ட புகைப்படம் இருக்க அதனை ஆயிரம் முறை எடுத்து பார்த்து ரசித்தாள்.

அது மட்டுமா முதல் முறையாக அவன் காரில் இருந்து இறங்கி கழற்றி கொடுத்த சட்டையினை எடுத்து கன்னத்தில் வைத்து பின்னர் அதற்கு முத்தமும் வழங்கினாள்.

நாட்களில் பெரிதாக எதுவும் நிகழ்ந்துவிடவில்லை எனினும் இனிமைக்கு பஞ்சமின்றி கௌதம்முடன் பேசிட குறுஞ்செய்தி அனுப்பிட என்று பேசி மனதில் புத்துணர்வை எழுப்பியது.

நினைவுகள் தொடரும். 

பிரவீணா தங்கராஜ். 

Comments

  1. ரெண்டு பேரு மனசுலேயும் காதல் இருக்குது. ஆனா, ரெண்டு பேருமே வெளியே காட்டிக்க மாட்டேங்கறாங்க. அப்படித்தானே. ஆனா, எது தடுக்குதுன்னு புரியலையே.

    ReplyDelete

Post a Comment

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...