தித்திக்கும் நினைவுகள்-1
தித்திக்கும் நினைவுகள்
அத்தியாயம் - 1
முதலில் சிறுத் தூரலாய் தூறிய வானம் சட்டென சடசடவென
பெருந்தூரலாய் மாறிக் கொண்டுயிருந்தன. அப்பொழுது தான் தானும் வருவதாய் கூறிய
கீர்த்தி போனில் ''சாரி டி நான் வரலை. நீ இன்னிக்கு போ நான் நாளைக்கு வந்திடறேன்.
உனக்காக கார் அங்க வெயிட்டிங்ல இருக்கு. கார் நம்பர் மெசேஜ் பண்ணிவிடறேன்.'' என்றாள்.
''என்ன கீர்த்தி இப்படி பண்ற... நானும் அப்போ நாளைக்கே கிளம்பி
இருப்பேன் எதுக்கு இப்படி அவசரமா என்னை கிளம்ப சொன்ன எருமை'' என்று சாதனா பொருந்தி தள்ளினாள்
''நோ நோ இப்பவே நீ போற ப்ளீஸ் கார் வெயிட்டிங்ல இருக்கு ஏறிட்டு
கால் பண்ணு''
என அவள் திட்டியும் பொருட்படுத்தாமல்
வைக்க,
தனது ஆட்டோவில் இருந்து அங்கிருந்த காரை
கண்டு நம்பர் சரியா என்று ஒரு முறை செக் செய்து கொண்டே ஆட்டோவிற்கு பணம் கொடுத்து
விட்டே மழைக்கு அஞ்சி வேகமாக காரில் ஏறினாள் சாதனா.
காரில் சிறு பிரச்சனையை சரிச் செய்துக் கொண்டு தூறலில் கொஞ்சம்
நனைந்து அடர் கேசம் சிலுப்பி கொண்டு அப்பொழுது தனது காரில் ஏறிய பெண்ணைக் கண்டு
புருவம் சுருக்கினான். மழையில் யாரேனும் பெண் ஆணிடம் பணம் கரக்க இப்படி வந்து
ஏறிவிட்டாளோ என்று திட்ட முனைய... அவனும் காரில் ஏறிய தருணம் அவனுக்கு அலைப்பேசி
அழைப்பு வரவே எண்ணை கண்டு முதலில் அட்டேன் செய்தான்.
''சொல்லு'' என்று மொட்டையாக கேட்டான். அந்த குரலில் எவ்வித உணர்வும்
இல்லை.
''உங்க கார் அங்கேயே தானே இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்க
சாதனா வருவா தயவு செய்து அவளையும் அழைச்சிக்கிட்டு வர சொன்னாங்க'' என்று தகவலை மட்டும் உதிர்த்து வைத்திட , திரும்பியவன் கோவத்தோடு 'இது வேறயா?' என்று அலுத்துக் கொண்டு அப்ப இந்த பொண்ணு பணம் பறிக்க வந்தவ இல்லை. அவன் அனுப்பியவளா என்று எண்ணி ''சாதனா'?'' என்றான்.
''ம்... ஆமா வண்டியை எடுங்க'' என்றாள். மகாராணி போல உத்தரவிட்டு
இவன் காரில் ஏறிவிட்டு இவனையே வண்டியை எடு என்கின்றாளே என்ற
எண்ணத்தில் அவளை உக்கிரமாக முறைத்துப் பின்னர் அவனே இது நான் யோசிக்கும் நேரமில்லை
என்று நினைவு வர வண்டியை இயக்கினான்.
நான் இப்போ என்ன பண்ணிட்டேன் இப்படி முறைக்கின்றான் கேப் ஏறி வழக்கமா
சொல்ற மாதிரி தானே சொன்னேன் என்றஉ சலித்துக் கொண்டு தனது தோழிக்கு போன் செய்தாள்.
''ஹாய் காரில் ஏறிட்டியா?'' என்று கீர்த்தி கேட்டாள்.
''ஓஹ் எஸ். ஆமா நீ வரலை எந்த ஊர் என்றும் சொல்லவில்லை. எனக்கு
தலையும் புரியலை வாலும் புரியலை'' என்றாள் சாதனா
''கண்டிப்பா அங்க போனதும் தெரிஞ்சுப்ப''
''நம்ம கட்டுரைக்கு ஒரு கிராமம் போய் பேட்டி எடுக்கணும் அது எந்த
கிராமம் என்று சொல்ல ஏன் டி இவ்ளோ பில்டப்? நீ தான் கடைசி நிமிஷத்துல சொதப்பிட்ட ஏன் வரலை? எந்த இடம் போறோம் என்றாவது சொல்லு கீர்த்தி'' என்றவளின் பேச்சினை ரீவ்யூ வழியாக அவளை புரியாத பார்வை
பார்த்தான் அவன்.
''நீ போனதும் தெரிந்து கொள்வ. இப்ப ஆளை விடு. அங்க போய் சேர்ந்த
பிறகு கால் பண்ணு''
என்று கீர்த்தி வைத்தாள்
''ஏய் கீர்த்தி குரங்கு...'' என்றே கத்தி இவள் எல்லாம் ஒரு ஜெர்னலிஸ்ட் என்றே முனுமுனுத்து
கொண்டே காரில் லாவகமாக சாய்ந்து அமர்ந்தாள். கீர்த்தி மீண்டும் யாருக்கோ தொடர்புக்
கொண்டு
''சிவா நீ சொன்ன மாதிரி அவளை காரில் ஏற்றி விட்டுட்டேன். அவள்
அங்கு வந்ததும் போன் செய் ஒகே பை'' என்றே அணைத்தாள்.
தான் முன் பின் தெரியாத ஒருவனோடு பயணிக்கின்றேன். அவன் வேறு
தன்னை முறைக்கின்றான். அவனிடம் எனக்கு மட்டும் பேச ஆவலா என்ன? நானும் பேச போவதில்லை. அவனும் பேசுவதாக தோன்றவில்லை. தூங்கவாது
செய்யலாம் ஆனால் போகுமிடம் அறியாமல் எப்படி?
ஜன்னலை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள். சிறிது நேரத்தில்
ஜன்னல் காற்றில் இதத்தில் அவளையும் அறியாது உறங்கிப் போனாள்.
காரினை இறுக்கமாக பிடித்து முகத்தைக் கனலாக கொண்டு மவுனமாக ஒரு
எந்திரம் போல வண்டியை செலுத்தினான். அவன் போக போகும் இடம் அப்படி. அவன் மட்டுமே
செய்ய வேண்டிய கடமைக்காக செல்கின்றான்.
பதினான்கு
வயது வரை வாழ்ந்த ஊரினை மறந்து இருந்தவன் இப்பொழுது மீண்டும் அடி எடுத்து வைக்க
போகின்றான். வேகமாகவே வண்டியை செலுத்தினான். அப்பொழுது அந்த சாலையை கடக்கும் நாய்
ஒன்றால் கீறிச்சிட்டு வண்டியை நிறுத்தினான். நாய் மெல்ல அஞ்சியே பின்னர் அது
சாலையை கடந்தது. அந்த பிரேக்கில் கண் திறந்தவள் ஜன்னலை பார்க்க சிறிது மழை விட்டு
இருந்தது. தற்போது மெல்லிய தூறல் மட்டுமே.
'சே என்ன நான் இப்படியா தூங்குவேன். யாரோ ஒருவனோடு எங்கே பயணம்
என்று கூட அறியாமல் ஏறின கொஞ்ச நேரத்தில் தூக்கம்' மனதில் அவளையே அர்ச்சித்து கொண்டாள். கார் ஓட்டுபவனை
பார்த்தால் அதே இறுக்கமான முகம் சிவந்த கண்கள் அப்படியே இருந்தன.
இவன் மட்டும் சிரித்து கொஞ்சம் மென்மையாக பார்த்தால் இவனை
ஆணழகன் என்றே கூறலாம். அவ்வளவு கம்பீரமான கலையான முகம்.
ஜன்னலில் கையை நீட்டி அதில் விழும் மழைத்துளியை ரசித்தாள்.
சில்லென்ற காற்று அவளின் முகத்தில் மோதி குளிர்வித்தது. போக போக ஊரின் பெயரை படித்துக் கொண்டே சென்றாள். எதுவும்
மனதில் பதியவில்லை. இவனிடம் கேட்கலாமா? வேண்டாம் 'உற்' என்று இருக்கின்றான். நாம் கூகிளில் லொகேஷன் பார்க்கலாம் என்று
பார்க்க 'ஓ காட்' என்று வாய்விட்டே கூறியவளை திரும்பி பார்த்து மீண்டும்
திரும்பி காரை ஓட்டினான்.
தான் போகுமிடதிற்கு இவளை எதற்காக அழைத்து வர சொல்கின்றான்.
தெரிந்த பெண்ணா?
ஆனால் இவள் பேசுவதில் அந்த இடதிற்கு
போவது போல் இல்லையே?!
யாரிவள்? பெயர் ஏதோ சாதனா என்றானே!
அவனின் எண்ணங்கள் அவளின் பெயரை நினைவேடுகளில் புரட்டி எடுக்க, சாதனா... இவளா? இவளா சாதனா...? என்றே அவளை மறுமுறை ஆராய்ந்தான். அவளோ தீவரமாக லொகேஷனில் எந்த
பாதை வழியே செல்கின்றது என ஆராய்ந்தாள்.
'சாதனா... சாதனா...' என மனதிற்குள் இருமுறை கூறிக் கொண்டான்.
லொகேஷன் பார்க்க அவள் செல்ல கூடாத இடமும் அதுவும் ஒரே பாதையை
காட்டியது. கீர்த்தி எப்படி இந்த பக்கம் உள்ள ஊரை தெரியும்? இல்லை இது வேறு ஏதோ என்ற உடனே கீர்திக்கு கால் செய்ய அது
ஸ்விட்ச் ஆப் என்று வர தனது தாய் தாமரைக்கு போன் செய்ய அது தொடர்பு எல்லைக்கு
அப்பால் உள்ளது என வந்ததும் வண்டியை திருப்ப சொல்லிவிடலாமா? அவனோ உற் என்று இருக்கின்றான் கோவபடுவானோ? ஆனால் கௌதம் வராத அந்த ஊர் இருக்கும் பக்கம் கூட அவள் போக
விரும்பவில்லை. தானாக அவள் தலை இடம் வலம் பலமாக ஆட்டினாள்.
அவளின் முகம் மாற்றம் கண்டு எதற்கு போகின்றோம் என அறிந்து
கொண்டாளா?
என நினைத்தவன் அவளிடம் அபொழுதும் பேச
முன் வரவில்லை.
அவள் திகைத்து நோக்கிக் கொண்டு இருக்கும் போதே அந்த ஊருக்குள்
காரை திருப்பினான். அவள் ஏதோ பேச வருவதற்குள் அந்த வீட்டின் முன் பந்தல் இருப்பதை
கண்டவள் அதிர்ந்தாள். அங்கிருந்த அழுகை குரல்கள் நெஞ்சைப் பிசைந்தது.
யாரோ இறந்து இருக்கின்றார்கள் யார்? அதுவும் கௌதம் வீட்டின் முன் நெஞ்சு வேகமாக துடிக்க, தனது அன்னை தாமரை தந்தை காந்தன் அத்தை ஷ்யாமளா என இருப்பதை
ஜன்னலில் இருந்தே அறிந்தாள். கார் நிற்க தானாக இறங்கியவளை நோக்கி சிலர் ஓடி வந்து
காரை ஒட்டியவனை கண்டு,
''இப்ப தான் வர வழி தெரிஞ்சதா ஐயா...'' என்றே கேட்க, அவர்களுக்கு பதில் அளிக்க இயலாமல் கண்களை மெல்ல மூடி திறந்தவன்
அவர்களை அணைத்து விலகி நிற்க வைத்தான்.
தனது சட்டையின் பட்டனை கழற்றி சட்டையினை சாதனாவிடம் கொடுக்க
அவள் கைகள் தானாக அதனை வாங்கி மெல்ல சத்தமே இல்லாமல் 'கௌதம் மாமா' என்றே உச்சரித்தாள்.
அவர்கள் இருவருமே சடலத்தின் அருகே வந்து சேர்ந்தே தொட்டு
கும்பிட்டனர். கௌதம் மற்றவர்களிடம் ''மற்ற ஏற்பாடுகள் ரெடியா இருந்தால் ஆரம்பிக்கலாம்'' என்றதும் சடலத்தினை எடுக்க ஏற்பாடுகள் நடந்தன.
தனது அத்தை சியாமளா அருகே அமர்ந்தவள் அவர்கள் கைகளை பற்றி அழக்
கூட முடியாமல் திகைத்தாள்.
கௌதம் சிலரிடம் தலையை ஆட்டி அசைப்பது புரிந்தது . வேகவேகமாக
ரவீந்தர் தனது முதல் மனைவி மேகலை அருகே சமாதி எழுப்பி மண்ணில் அடைக்கலம் ஆனார்.
அன்றே சமாதி எழுப்ப சொல்லியும் விட்டான்.
இத்தனை காலமாக பார்க்க ஏங்கிய முகம் இப்படி பட்ட சூழ்நிலையில்
சந்திப்பால் என்று கனவிலும் நினைக்க முடியவில்லை ஆனால் நிஜத்தில் இப்படி ஒரு
நிகழ்வு. தந்தை இறந்த செய்தி அறிந்து கரோட்டி வந்தவனிடத்தில் நான் எப்படி நடந்துக்
கொண்டேன். கீர்த்தி தன்னிடம் முதலிலே சொல்வதற்கு என்ன? கீர்த்திக்கு யார் சொல்லி இருப்பார்கள். சிவா சிவாவே தான் ஏன்
இந்த சிவா என்னிடமே சொல்லி இருந்தால் பரவாயில்லையே. இப்பொழுது கௌதம் என்னை எப்படி
நினைப்பார்.
சடங்கெல்லாம் முடிந்து குளித்து வந்தவனிடம் சிவா ''உங்க லக்கேஜ் மாடியில் வச்சிட்டேன்'' என்றான். அதற்கு ஒரு ''ம்'' என்றான். மாடியினை இரண்டே தாவலில் சென்று கதவைச் சாற்றிக்
கொண்டான்.
நினைவுகள் தாக்கம் ஒன்றன் பின் ஒன்றாக மோத பெரும்பாடு பட்டு
தலையை உலுக்கினான். தந்தை இறந்து அவரை பார்க்க கூட பிரிய படாத தான் இன்று அவருக்கு
செய்யும் அனைத்தும் செய்தது உறவின் பிரிவை யாராலும் தடுக்க முடியாது என்றே ஆழ
புரிய வைத்தது.
-நினைவுகள் தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
ஆரம்பமே சஸ்பென்ஸா ஆரம்பிச்சிருக்காங்க
ReplyDeleteகௌதம் ஏன் ஊரை விட்டு போனான் ? சாதனாங்கிற பேரு தெரொயுது. ஆனா ஏன் இவ தான் சாதனான்னு தெரியலை ? நிறைய கேள்விகள்... விடைகளுக்காக ஆவலுடன் கா த் திரு க் கி நோ த்.
தினசரி பதிவு வரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும் நன்றி டியர்.
Deleteசஸ்பென்ஸ் ஆபோச்சு வெரி நைஷ்மா
ReplyDeleteதாங்க்ஸ் மா
DeleteAarambame very interesting sis, superrrrr 👌
ReplyDeleteதேங்க்யூ 💕💟
DeleteMoththamaa padikkalaammba nenachen. Oru curiosity la aarambichchitten..arumaiyana pathivu dear 👍👍🙏
ReplyDelete😊😊😊சந்தோஷம் சிஸ்டர். பிடிச்சிருக்கா.
Delete