Posts

Showing posts from September, 2018

காதலின் கோட்பாடுயவை

உந்தன் இதயத்தை என்னுடையது என்றும் எந்தன் இதயத்தை உன்னுடையது என்றும் மாற்றிக் கொள் நான் தொலைத்து விட்டதாக எண்ணி தேடிக் கொண்டு தவிக்கின்றேன் நீ திருடி விட்டதாய் எண்ணி பொத்தி வைத்துக் கொள் பார்க்கும் மற்றவர்களுக்கு நான் யாரோவென கடந்துவிட நீ யாரோவென காட்டிக் கொள் ஏனென்றால் காதலின் கோட்பாடுயவை. - பிரவீணா தங்கராஜ்.

கண்ணாமூச்சி ஏனடா

ஒவ்வொரு முறையும் கோகுலக் கண்ணனே உன் பாதம் பதித்து தான் வரவேற்கிறேன் நீயோ ஒவ்வொரு முறையும் மாயக் கண்ணனாய் மறைந்துக் கண்ணாமூச்சி களித்து விளையாடுகின்றாய் பேதை நெஞ்சம் உந்தன் வருகைகாக மட்டுமல்ல இராதை வந்தாலும் கொண்டாடி மகிழக் காத்திருக்கின்றேன் கண்ணனாய் கண்ணாமூச்சியாடுகிறாய் இராதையாய் வர மறுத்து ஏய்த்திட இந்த தேவகி மட்டும் அத்திரு மரத்தை சுற்றியே வலம் வருகிறேன் விழி நீர் மட்டும் துணையாக.          - பிரவீணா தங்கராஜ்.

என் உலகத்தில்...

பம்பரமாக சுற்றிக் கொண்டுயிருக்கின்றேன் அடுதல் அறையில் சாட்டையாக சொற்கள் மட்டுமே உப்பு சப்பில்லாதக் குறைபாட்டை உணர்த்தும் நீ சுவையாக செய்யும் பொழுது மட்டும் சொற்களில் சுவைக் கூட்டுவதை மறந்துவிடுகிறாய் சரி அதனால் என்ன விடு சிறிதே சிரித்துப் பேசி இளைப்பாறலாம் இளநகையாய் முத்துக்களா சிதறிவிடும் முகநூலில் திறந்து படித்து மென்நகைச் செய்கின்றாய் வியப்பைக் காட்டுகிறாய் சோகமெனில் உச்சுக் கொட்டி வருந்துகிறாய் உன் கைக்கு எட்டிய தூரத்தில் தான் கட்டியவள் இருப்பதை மறந்து அவளை கவலை கொள்ள வைத்தே காதல் கீதம் இசைக்க மறுத்து மறுக்கிறாய் அலுவலகம் எனும் தினப் போருக்கு முதுகில் சுமந்த பையோடு மடிக்கணினியை உன் காதலியாய் சுமக்கின்றாய் போதும் சற்றே என் உலகுக்கு வா கடுகு தாளித்து போடுகையில் எண்ணெய்பட்ட கைகளுக்கு உச்சு கொட்டி செல் நிற்காமல் ஓடும் கடிகாரமாக உன் செல்ல மகளின் நிகருக்கு நானும் மாறுவதை கண்டு வியப்பு காட்டு பள்ளி செல்ல தயாராகும் மற்றொரு வாலுக்கு தேவையானதை தேடி எடுத்து இயம்பும் போது ஒரு அடடா என்று மென்புன்னகை செய் கிடைக்கும் சின்ன சின்ன நேரங்களில் சிறு இடை பற்றி இதழ் ம

மனம்

அதிகாலை எழுந்ததும் அலைவரிசையில் மாற்றி மாற்றி இமைக்காது தன் ராசிக்கு சொல்லும் கூற்றையெல்லாம் செவி சாய்த்து ஏற்று உடுத்துமாடை கூட செவ்வனே அதன் சொல்படியே அணிந்து நாள் பார்த்து நேரம் பார்த்து வாஸ்துபடிக் கட்டிய வீட்டிலிருந்து நல்லநேரம் பார்த்தே வெளியேறும் அச்சமயம் எங்கிருந்தோ தன் துணையை தேடி ஓடிய பல்லியின் மதில் பிடி தளர்ந்து வெண் நரையில் கருமை சாயம் பூசிய தலையில் சரியாக விழ பல்லி பலன்களில் சற்று அஞ்சியே இதுவரை கட்டிக்காத்த ஜோதிடம் வாஸ்துகளெல்லாம் பொய்யாக மாற கடவதென புலம்பி ஒரே நொடியில் மாறுகின்றது மனம். - பிரவீணா தங்கராஜ்.

மணல்கள் கற்கண்டாய்

Image
கடற்கரை மணல்கள் கற்கண்டாய் மாறிட கடலலையோ தேனாய் மிதக்க இயற்கையோ குழப்பத்தில் சிந்திக்க எனக்கு ஐயமில்லை மகளே உன் கைப்பட்டு விளையாடிய தருணமது. - பிரவீணா தங்கராஜ்.

சிலந்தியே...! - காதல் பிதற்றல் 39

எல்லா மூலையிலும் தூசு தட்டி அவனை நீக்கிட தான் பார்க்கின்றேன் என்னையும் அறியாது மீண்டும் அதேயிடத்தில் எல்லா மூலையிலும் வலைப்பின்னி நடுவே மன்னனாய் அமர்ந்து கர்வத்தோடு சீண்டுகின்றாய் வலைப்பின்னும் சிலந்தியே...! - பிரவீணா தங்கராஜ்.

👸 மகள் என்னும் வரம் 👸

Image
மென்பாதங்கள் மடியில் உதைத்து மொட்டாய் பூமிக்கு வந்த பொக்கிஷமவள் கண்ணனின் குறும்பைக் கொண்டு பிறந்த ராதை அவள் அல்லி ராணி பட்டம் பெறும் அடம் பிடிக்கும் கள்ளியவள் ஒரே இடத்தில் அமர்ந்திடாது சிறகை விரிக்கும் வண்ணத்துப்பூச்சியவள் மென் பாத கொலுசுகள் சலசலத்திடும்  வீணையவள் சீனிப் பெட்டி எடுத்துத் தின்னும் நவீன கண்ணனின் குறும்பை எடுத்து இயம்பும் சூட்டிகையவள் இரு சக்கர வாகனத்தைக்  கூட பறக்கும் ரதமாக மாற்றிடும் தேவதையவள் அவள் குறும்பைக் குறிப்பெடுக்க வானத்தின் வெள்ளை தாள் போதாது என் செல்ல மகளே... வரமாக வந்த தேவதையே...!                    -- பிரவீணா தங்கராஜ் . 

மொழிகள் தேவையில்லை

மொழிகள் தேவையில்லை விழிகளிருக்கும் பட்சத்தில் காதலின் பரிபாஷை பேசுவதற்கு...                   -- பிரவீணா தங்கராஜ் .