என் உலகத்தில்...

பம்பரமாக சுற்றிக் கொண்டுயிருக்கின்றேன்
அடுதல் அறையில்
சாட்டையாக சொற்கள் மட்டுமே
உப்பு சப்பில்லாதக் குறைபாட்டை
உணர்த்தும் நீ
சுவையாக செய்யும் பொழுது மட்டும்
சொற்களில் சுவைக் கூட்டுவதை மறந்துவிடுகிறாய்
சரி அதனால் என்ன விடு
சிறிதே சிரித்துப் பேசி
இளைப்பாறலாம் இளநகையாய்
முத்துக்களா சிதறிவிடும்
முகநூலில் திறந்து
படித்து மென்நகைச் செய்கின்றாய்
வியப்பைக் காட்டுகிறாய்
சோகமெனில் உச்சுக் கொட்டி வருந்துகிறாய்
உன் கைக்கு எட்டிய தூரத்தில் தான்
கட்டியவள் இருப்பதை மறந்து
அவளை கவலை கொள்ள வைத்தே
காதல் கீதம் இசைக்க மறுத்து மறுக்கிறாய்
அலுவலகம் எனும் தினப் போருக்கு
முதுகில் சுமந்த பையோடு மடிக்கணினியை
உன் காதலியாய் சுமக்கின்றாய் போதும்
சற்றே என் உலகுக்கு வா
கடுகு தாளித்து போடுகையில்
எண்ணெய்பட்ட கைகளுக்கு
உச்சு கொட்டி செல்
நிற்காமல் ஓடும் கடிகாரமாக
உன் செல்ல மகளின் நிகருக்கு
நானும் மாறுவதை கண்டு வியப்பு காட்டு
பள்ளி செல்ல தயாராகும்
மற்றொரு வாலுக்கு தேவையானதை
தேடி எடுத்து இயம்பும் போது
ஒரு அடடா என்று மென்புன்னகை செய்
கிடைக்கும் சின்ன சின்ன நேரங்களில்
சிறு இடை பற்றி இதழ் முத்திரை ஒன்றை
கன்னத்தில் பதித்து விட்டு செல்
நீ தயாராக கிளம்பும் முன்
உனக்கு பிடித்த பாழச்சாறு
நீட்டி மையலோடு பார்க்கும் எனக்கு
ஒரு கண் சமிக்ஜை காட்டு
மாலை வெய்யோன் ஆழிக்குள் சென்று
காதலில் திளைக்கும் நேரம் வரை
நீ செய்து விட்ட
சிறு சிறு சீண்டல் போதும்
நான்கு சுவர் கொண்ட என் உலகத்தில்
அந்நினைவுடன் கடந்திட ...
                                     - பிரவீணா தங்கராஜ் . 












 

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...