ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1
🍓👩1
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் தூண்டும் நேரம் ,
இருந்தும் ஆராதனா அவளின் கைகளை கூட பற்ற விடாமல் தூரத்திலே இருந்து
பேசிக்கொண்டே இருந்தாள்.
உதய்க்கு தான் மற்ற நேரமாக இருந்தால் பேசாதே என்றே தடுப்பான்.
ஆனால் ஆராதனா பேசும் விஷயம் தங்கள் கல்யாண கனவுகள் பற்றி என்பதால் மட்டுமே
கேட்டு கொண்டு இருந்தான்.
''உதய் கல்யாணம் சிம்பிளா நெருங்கிய சொந்தம் வரை கூட செய்யலாம் ஆனா
இவள் என்னுடையவன் என்னுடையவள் என்று அருகே அருகே நின்று ஒரு பெரிய வரவேற்பு
கொடுக்கணும். வந்து இருக்கற உறவு கெஸ்ட் என்று யாராவது சில பேர் நம்மளை
பார்த்து பெஸ்ட் பேர்... சூப்பர் ஜோடி... என்று சொல்லி போறதை கேட்டு வரும்
பாரு ஒரு பீல் அது வேண்டும்...''
''சரிங்க மேடம் அப்பறம் கல்யாணம் பற்றி பேசிட்டிங்க குழந்தை எத்தனை பெற்றுக்க போறிங்க அதையும் சொல்லிடுங்க அப்போ தானே.. ''
''ஹ்ம்ம் உன்னை... என்றே துரத்த மணலில் அவளின் ஓட்டத்தில் அவன்
வேண்டுமென்றே பிடிபடுவது போல ஓட ஆராதனா பிடிப்பதில் தீவரமாக இல்லாமல்
தங்கள் அருகே இருக்கும் மணல் வீட்டை கவனிக்க செய்தாள்.
''ஆரு என்னை துரத்திக்கிட்டு வந்து ரொமான்ஸ் பண்ணுவ என்று பார்த்தா இப்படி மணல் வீட்டை வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க?''
''உதய் எல்லா வீட்டை விட இந்த மணல் வீடு ஸ்பெஷல் தெரியுமா? சுலபமாக
கட்டிடலாம் அதே போல சுலபமா கலைச்சிடலாம்... உதய் எனக்கு கடல் பக்கத்தில்
இப்படி ஒரு வீடு வாங்கணும் என்று ரொம்ப நாள் ஆசை நாம வீடு வாங்கறதா இருந்தா
கடல் பக்கத்தில இருக்கற வீடா வாங்கணும் ஓகே வா'' என்றே அங்கிருந்த
குழந்தைகளின் விளையாட்டில் எட்டி இருந்தே கவனித்தாள்.
''அம்மாடி என்னால அவளோ ரேஞ்சுக்கு வாங்கி கொடுக்க முடியாது ம்மா...
ஆனா உனக்காக வருஷத்துக்கு ஒரு முறைக்கு இரண்டு முறை பீச் ஹவுஸ் புக் பண்ணி
உன் ஆசையை நிறைவேற்றுவேன்... மணி இப்போவே நேரமாச்சு போகலாமா...?''
''ஹ்ம்ம் போகலாம்'' என்றே எழுந்திருக்க தள்ளாடி எழ உதய் கைகளை நீட்டினான். அவ்ளோ தானாக எழுந்திட செய்தாள்.
''ஏன் ஆரு கை புடிச்சவது எழுந்துக்கலாம்ல? ஏன் இப்படி பண்ற? நான் என்ன பேட் பாய்யா?''
''சே சே அப்படி இல்லை உதய்... கடற்கரை என்றாலே காதல் ஜோடி சில்மிஷம்
அப்படி தான் சொல்றாங்க எதுக்கு அப்படி பேர் வாங்கணும் கொஞ்சம் டிஸ்டன்ஸ்
மைண்டன் பண்ற குட் லவ்பைர்ட்ஸ் கூட இருக்காங்க என்று நம்மளை மாதிரி
இருக்கறவங்களை பார்த்து சொல்லனும்னு அதுக்காக நாம ஒரு எடுத்துக்காட்டா
இருப்போம்''
''அதுக்கு நான் தான் கிடைச்சேனா ஆரு....? நீ எவ்ளோ அழகு தெரியுமா?
உன்னை நாள் முழுக்க பார்த்துகிட்டே இருந்தாலும் சலிக்காது.. அம்மாகிட்ட
எப்படியோ ஓகே வாங்கி ஆறு மாசத்தில் கல்யாணம் நமக்கு ஆனா நீ இன்னமும்
அப்படியே கை கூட பிடிக்க விட மாற்றா...'' என்றே கதைகள் பேசிக்கொண்டே நடக்க
துவங்கிட தூரத்தில் இரு கண்கள் இவர்களை பார்த்து கொண்டு பின் தொடர்வதை
அறியாமல் இருந்தார்கள்.
அந்த கண்களுக்கு சொந்தமானவனுக்கோ போன் வர எடுத்து அட்டேன் செய்தபடி ஆராதனவை பார்த்து கொண்டிருந்தான். .
''பாஸ் எங்க இருக்கீங்க இன்னும் ஹாப் ஹவர்ல பார்ட்டி நினைவு இருக்கா
பாஸ்?'' என்றே கேட்க இங்கு இருப்பவனோ ''ஹ்ம்ம்...'' என்றே பதில் அளித்ததும்
அந்த பக்கம்
''பாஸ் நீங்க மேடம் இருக்கற இடத்திலா இருக்கீங்க...?'' என்று கேட்டதும்
''எப்படி சுந்தர்? சரியா சொல்லிட்ட...?'' என்றே கேட்க சுந்தரோ மனதில்
கழுதை கேட்டா குட்டி சுவர்...என்றே எண்ணியவன் மனதில் தனது பாஸ்ஸை கழுதை என்றே
நினைத்து சே சே அவர் லையன் மேடம் கிட்ட இருந்தா தான் அப்படி.... என்றே
மனசாட்சி பதிலில்
''பாஸ் நீங்க மீட்டிங் பார்ட்டி என்று எல்லாத்தையும் மறந்து பேசறீங்க
என்றாலே தெரியலை அந்த ஆராதனா மேடம் பக்கத்துல தான் இருப்பீங்க.... ஏன் பாஸ்
அவங்க காதலிக்கறாங்க என்று தெரிந்தும் அவங்க பின்னாடி சுத்தறீங்க எனக்கு
பிடிக்கலை பாஸ்... அவங்களுக்கு இன்னும் ஆறு மாசத்தில் கல்யாணம் நீங்க
மறக்கறதா சொல்லி இருக்கீங்க அப்பறம் என்ன?'' என்றான் சுந்தர் என்னவோ உரிமையாக.
''சுந்தர் என்ன என்றே தெரிலை எனக்கு மதியம் சாப்பிட்டு
முடிச்சதிலேருந்தே என் கண்கள் துடிக்குது ஏதோ ஆராதனாவுக்கு ஏதாவது
பிரச்சனையோ என்றே மனசு தவிச்சுது அதனால தான் அவளை பார்க்க வந்துவிட்டேன்''
''ஹ்ம்ம் அங்க ஆராதனா மேடமும் உதய்யும் லவ் பண்றதை வேடிக்கை
பார்த்துகிட்டு இருக்கீங்க... ஏன் பாஸ் இப்படி இருக்கீங்க முதலில் அவர்களை
தொடர்வதை நிறுத்திட்டு பார்ட்டிக்கு வாங்க'' என்றே வைத்தான்.
சுந்தர் தனது
பாஸ் வெற்றி செல்வனை அதட்டுவது இந்த விஷயத்தில் மட்டுமே... மற்ற
எல்லாவற்றிலும் பெர்பெக்ட் என்று பேர் வாங்கும் வெற்றி செல்வன்... ஆராதனா
விஷயத்தில் தான் இப்படி...
ஆராதனாவை வெற்றி செல்வன் ஒரு கம்பெனி மீட்டிங்கில் ஊட்டி சென்ற
பொழுது காலேஜ் டூர் வந்த ஆராதனாவை கண்டான். தனது மொத்த சொந்தமும் அவள்...
அவளை பார்த்த அன்று முதல், தான் ஆண் தனக்கும் காதல் மோகம் வரும் என்றே
உணர்ந்தான். தனது மனதில் அவளின் முகம் கல்வெட்டாய் பதிய சுந்தரிடம் அவளை
பற்றி அறிய ஏற்பாடு செய்தான்.
சுந்தரும் டிடேடிவ் ஏஜென்சி மூலம் எல்லாம் அறிந்து வந்து கொடுத்தான்.
ஆராதனா படிப்பு பிறப்பு தாய் தந்தை பணி கூட யார் யாரெல்லாம்
இருக்கின்றார்கள் தற்பொழுது எங்கே இருக்கின்றாள் அவளின் தோழி வட்டம்
உறவுகள் வட்டம் என்றே எல்லாம் அறிந்து வந்து கொடுத்த ஏஜென்சி அவள் காதலன்
உதய் ஆறு மாதம் ஊருக்கு சென்றதால் அதனை பற்றி அறியாமல் தெரிவிக்க
மறந்தார்கள்.
அந்த ஆறு மாதம் வெற்றிக்கு எல்லாமே ஆராதனா என்றே எண்ணி மனம்
முழுக்க அவளுடன் வாழ துவங்கினான். மனதில் அவள் காதலி என்றே சொல்லி பழகி விட
திடிரென காதலை சொல்லும் அன்று உதய் வந்து சேர்ந்தான். ஏற்கனவே ஆராதனா உதய்
என்பவனை அவர்களுக்குள் இருவீட்டின் திருமணம் ஏற்பாடு செய்து நாள்
குறித்தும் முடிந்ததை எண்ணி தான் ஒருவன் இருப்பதையே மனதில் காதல்
சுமந்தத்தையோ கூட சொல்லி கொள்ளாமல் மறைவாகவே அவளை தொடர்ந்தான்.
சுந்தர் எவ்வளவு கேட்காமல் இன்றும் தேடி வந்துவிட்டான் . தனது
கண்கள் துடிப்பதால் தனக்கு மனதில் நெருக்கம் ஆராதனா அவளுக்கு ஆபத்து என்றே
வர இன்றும் அவர்கள் காதல் கோட்டையை கண்டு வருந்தினான்.
வெற்றி செல்வன் தமிழகத்தின் நம்பர் பத்து இட எண்ணிக்கைக்குள் இருக்கும் தொழிலதிபர். எதிலும் கண் பார்வையில் காரியம் முடிப்பவன்.
''உதய்... உதய்...'' என்றே அலறல் கேட்டு இருக்க தனது காரில் ஏறி இருந்த வெற்றிக்கு ஆராதனா குரல் கேட்க எட்டி பார்த்தான்.
அங்கோ ஒருவன் உதயை பின்னால் இருந்து தள்ளிவிட்டு ஆராதனாவுக்கு
கர்ச்சிப் அழுத்தி காரில் தள்ளினான். காரில் தள்ளும் பொழுதே அந்த கார்
தலையில் இடிக்க, பிடித்து தள்ளிய பொழுது அங்கிருந்த தண்டால் கருவியில்
வயிற்றில் குத்தி காரின் உள் மயங்கி சரிந்தாள்.
உதய் எழுந்து வந்து பிடிக்க கார் புறப்பட்டது. சுற்றி முற்றி
தேடிட வெற்றி தனது காரினை முன் வந்து நிறுத்தினான். ''ஏறு'' என்றே சொல்லிட
உதய் முகம் கூட சரியாக பார்க்காமல் ஏறினான்.
''ஐயோ யாருனே தெரிலேயே... எதுக்கு ஆராதனாவை மயக்கம் கொடுத்து
கூட்டிட்டு போறாங்க? கடவுளே எனக்கும் அவளுக்கு கல்யாணம் வேற இருக்கு இப்போ
போய் இதெல்லாம் நடக்குது'' என்றே புலம்பல் வெற்றி காதில் விழ வில்லை வேகமாக
பின் தொடர்ந்தான்.
என்னதான் பின் தொடர்ந்தாலும் அவர்கள் ஏற்கனவே பிளான் போட்டு
ஆராதனாவை கடத்தியதால் ரூட் எல்லாம் கடந்து வேகமாக பறந்தார்கள். வெற்றி தான் அதற்கு
ஈடு கொடுத்து ஓட்டினான். காரில் இருப்பது அவனின் உயிருக்கு சமம் என்று யார்
சொல்லுவார்கள்.
கொஞ்சம் தூரம் சென்றதும் மூன்று தெரு இருக்கும் சாலையில்
மறைந்தது. மூன்றுமே முட்டு சந்து என்று கூகிள் பார்த்து அறிந்த வெற்றி
மூன்றிலும் காரினை செலுத்தினான். முதல் இரண்டு சந்தில் அந்த கார்
இருப்பதற்கு அறிகுறியே இல்லாமல் போக மூன்றாவது சந்தில் இருக்க வேண்டும்
என்றே கடவுளிடம் வேண்டி கொண்டான். வேண்டுதல் போலவே ஆராதனாவை கடத்திய கார்
இருந்தன. அங்கே சென்றதும் காரினை நிறுத்தி பார்க்க அங்கே மூன்று அடுக்கு
கொண்ட லாட்ஜ் இருந்தன.
அங்கு அமர்ந்து இருந்த வயதான ஆளிடம் விசாரித்தான். முதல் கட்டிடத்தில்
எல்லோரும் வெளியே சென்றதாகவும் இரண்டு மூன்று கட்டிடம் மட்டுமே ஆட்கள்
சிலர் இருப்பதாகவும் இப்பொழுது வந்த நபர் எந்த அறை என்று தெரியாது நீங்களே
தேடுங்க என்றும் சொல்லிவிட்டு அவரும் தேடினார்.
''உதய்.. நீங்க இரண்டாம் கட்டிடம் முழுதும் தேடுங்க நான் மூன்றாம்
கட்டிடம் தேடறேன்'' என்றே சொல்லிவிட்டு தேடினான். cctv இருந்தால் அதில்
பார்த்து இருக்கலாம் இதுவோ நடுத்தர லாட்ஜ் என்றதால் இல்லை...
வெற்றிக்கு காலையில் இருந்து மனம் துடித்ததும் மதியம் கண்கள்
துடிப்பதும் எண்ணி பதட்டம் கூடியது. ஆராதனா எங்க இருக்கா என்றே அசுர
வேகத்தில் ஒவ்வொரு கதவை தட்டி எட்டி பார்க்க இல்லை என்றே இருக்க மனம்
துடித்தது.
இறுதியாக ஒரு கதவை தட்டி எட்டி பார்க்க ஆராதனா கட்டில் கிடத்திய
நிலையில் மயக்கம் கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ந்து உள்ளே வர மறைவில்
இருந்தவனோ வெற்றி தலையில் அடிக்க வெற்றி விழுந்தான். உடனே வெற்றி முகத்தில்
அருகே கர்சீப் கொண்டு போக அவனோ சுதாரித்து சுவாசிக்க மறுத்தான்.
அப்பொழுதும் அவனின் சில நொடி சுவாசிக்க நேர கண்கள் தெளிவற்று கீழே விழுந்தான்.
நிமிர்ந்து பார்த்தவனின் பார்வை ஆராதனாவை ஒருவன் நெருங்குவது மட்டுமே
தெரிய கண்கள் அருவியாய் நீர் சுரக்க மற்றவனின் அடியில் மீண்டும் கீழே
விழுந்தான் வெற்றி.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
Nice
ReplyDeletethanks a lot
DeleteSuperb
Deleteசூப்பர் மா 👌👌👌
ReplyDelete😳😳😳
ReplyDeleteSuper
ReplyDelete