ஸ்டாபெர்ரி பெண்ணே- 16

   🍓16
                    காலையில் எழுந்ததும் ஆராதனாவுக்கு மனமே கனத்தது. ஏன் என்று தெரியவில்லை... வெற்றி எப்பவும் போல தன்னை மிடுக்காக தனது நிலையை மறைத்து கொண்டான். ஆராதனவால் தான் முடியவில்லை.
             வெற்றியோ ஆராதானாவுக்கு மேலே கனத்து இருந்தான். அவனுக்கு எது நடந்தாலும் கஷ்டம் என்ற நிலை.. தன்னை ஆராதனா விட்டு சென்றாலும் வலி அவளை உதய் மறுத்து உண்மை சொன்னாலும் வலி என்றே இருந்தான்.ஆனால் எப்பொழுதும் போல இயல்பாக இருக்க முனைந்தான்.
           உதய் எண்ணுக்கு அழுத்தி தொடர்பு கொண்டாள்.
     புது எண் என்றதும் உதய் எடுத்து பேசிட அவனின் குரலில் ஆராதனா அப்படியே பேச மறந்தாள். பேச மறந்தால் என்றதைவிட அவளுக்குஅவனோடு பேச பிடிக்கவில்லை என்பதே உண்மை.
       வெற்றியை பார்க்க அவளின் பார்வை உணர்ந்தவன் போனை வாங்கி
     ''மிஸ்டர் உதய்....''
     ''எஸ் நீங்க?''
      ''உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. நீங்க சென்னை வந்தாச்சா?''
       ''யா இன்னும் இருபது நிமிடத்தில் வந்துடுவேன்... நீங்க... யாரு?''
      ''நான் யாருனு நான் சொல்ல முடியாது... உங்க ஆரு உங்ககிட்ட பேசணும்... என்று சொன்னாங்க'' என்றே முடிக்க ஆராதனவோ கடுப்பில் நின்றாள். மனதில் பேச்சை பாரு உங்க ஆரு என்று சொல்றான் அவனுக்கு என் மேல அப்போ லவ் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.... என்றே எண்ணினாள்.
       ''ஹலோ.. ஹலோ... ஆராதனா ஆராதனா இருக்காளா?''
       ''ஹ்ம்ம் அவங்களுக்கு நினைவு திரும்பிடுச்சு... உங்ககிட்ட பேசணும் என்று சொல்லிட்டு இருந்தாங்க அதான்... நேரில்...''
       ''இன்னும் முப்பது நிமிடத்தில் நேரா வர்றேன்... எங்க சந்திக்கலாம்?''
      ''பீச்...'' என்றான்.
      ''பீச்சா....? ஹ்ம்ம் சரி வந்துடறேன்'' என்றே அனைத்தவன் தனது தாய் மற்றும் தான் கல்யாணம் செய்ய போகும் பெண்ணை கண்டான்.  யாருக்கும் தெரியாமல் அமைதியாக இருந்தான். அன்றே ஆராதனா கண்டு பார்க்க பேச போக முயன்றான் ஆனால் எங்கே என்றே அறியாமல் திணறினான். இன்று ஆராதனா அவளே பேச வருகின்றாள் என்றதும் நிம்மதி அடைந்தான்.
            ஆராதனா உங்கிட்ட நினைவு தெரிந்து பேசி என் திருமணம் நடக்கணும் என்றே துடித்தேன் அப்போ தான் உனக்கு நான் துரோகம் செய்ய வில்லை என்றே எண்ணி நிம்மதி அடைய முடியும்... இல்லை என்றால் என் மனமே உன்னை ஏமாற்றியதாக சொல்லி என்னை சாக அடிச்சிடும் என்றே எண்ணி கொண்டு இருந்தான்.
         இதே எண்ணம் அவளை பார்த்த பிறகும் தோன்றுமா? என்பது காலத்துக்கு வெளிச்சம்.
          ரயில் இருந்து எல்லோரும் கீழே இறங்கி கொண்டு இருந்தார்கள். தனக்கு அலுவலக விஷயமாக கால் வந்தது போயாக வேண்டும் என்றும் மதியம் வந்திடுவேன் என்றே கிளம்பினான்.
      நேராக பைசென்ட் நகர் பீச் வந்து நின்றான். அங்கும் இங்கும் ஆராதனா இருக்கிறாளா என்றே கண்டான். இல்லை என்றதும் காலையில் வந்த எண்ணிற்கு போன் செய்தான்.
      ''ஜெஸில்... உதய் தான் வந்துட்டார் போல.''. என்றே வெற்றி சொல்லி போனை எடுத்தான்.
       ''நாங்களும் வந்துட்டோம் உதய்... எங்க இருக்கீங்க? என்று கேட்டு இடத்தை அறிந்து நடந்தான்.
        ஆராதனா கூடவே வந்தால் ஆனால் அவளின் மனமோ இங்கு வருவதற்கே முரண்டியது. உதயை பார்த்து பேசி தெளிவுப்படுத்த தோண்றிய எண்ணம் அவனை பார்க்க கூட பிடிக்காமல் உறுத்தியது.
      ஆராதனாவை தூரத்தில் கண்டதும் உதய் மனம் அலை மோதியது. ஆராதனவோ அமைதியின் மொத்த உருவமாக தலையை ஏறிட்டு கூட பார்க்காமல் நடந்து வந்து கொண்டு இருந்தாள்.
      மூவரும் ஒரே இடத்தில் வந்து சேர்ந்ததும்...
      ''ஹாய் நான் தான் போனில் பேசியது... உங்க ஆரு...'' என்றே கையை நீட்டி அவளை காண்பித்து கூற சட்டென ஏறிட்டு பார்த்தாள் வெற்றியை... அவனோ கல்லை தின்றாலும் ஓகே என்பது போல இருந்தான்.
      ''ஆரு எப்படி இருக்க?'' என்றான் உதய்... அப்பொழுது தான் உதய் இருப்பதை உணர்ந்து தலையை ஆட்டினாள்.
       ''என்கிட்ட பேசணும் என்று சொன்னியாம்... நானும் உங்கிட்ட பேசணும்...'' என்றே நிறுத்தினான்.
    வெற்றியோ ரொம்ப நல்லவனாக ''நீங்க பேசுங்க நான் இங்க இருக்கேன் என்றே நகர்ந்தான். ஆராதனாவுக்கு வெற்றி மேல் கோவம் கோவமாக வந்தன... இருந்தும் அமைதியாக இருந்தாள்.
      ''என்ன ஆரு வந்ததிலருந்து எதுவும் பேச மாட்டேன்கிற...?'' என்றான்.
      ''உத.. உதய்... உனக்கு கல்யாணம் என்று கேள்விப்பட்டேன்... ரொம்ப சந்தோசம்..'' என்றாள்.
       ''என்னை மன்னிச்சுடு ஆரு.... உனக்கு அன்னிக்கு... ?'' என்றே திணறினான்.
      ''மன்னிச்சுடறேன்... அன்னிக்கு என்ன நடந்தது என்று மட்டும் சொல்லு.. எனக்கு காரில் ஏற்றியதும் மயங்கிட்டேன்... கண் விழிச்சா அவரை தான் டாக்டர் காட்டினார்... நீ எங்க போன ஏன் விட்டுட்டு போன? அதை அவர் தான் செய்தாரா? சொல்லு'' என்றாள்.
       ''அவரா அது... நான் கவனிக்கலை அன்னிக்கு முகம் எல்லாம் ரத்தம் அதனால சரியா பார்க்க முடியலை...''
      ''எனக்கு என்ன ஆச்சு? எதுக்கு என்னை விட்டு போன?''
      ''ஆராதனா என்னை மன்னிச்சுடு அது மட்டும் போதும் ஏன் எதுக்கு என்று எல்லாம் கேட்காதா...'' என்றான் உதய்.
      ''இங்க பாரு உதய் என்னை காதலிச்சது நீ... என்னை கல்யாணம் செய்துக்க போறதா சொல்லிட்டு இருந்தது நீ... அன்னிக்கு என்ன நடந்துச்சு என்று தெரிஞ்சவனும் நீ தான்... சொல்லு...''
      ''தெரிஞ்சு என்ன செய்ய போற விடு.... ஏன் அவர் சொல்லவில்லையா? அவருக்கும் தெரியுமே''
      ''அவர் சொல்ல மறுக்கின்றார் எனக்கு அவரிடம் கேட்பதை விட என்னை ஒன்றை வருஷமா விரும்பியவன் நீ தீடிரென எனக்கு ஒரு விபத்து என்றதும் ஹாஸ்பிடல் வரை வந்தவன் அதன் பிறகு மாயமானது எதுக்கு என்று நீயே சொல்?''
      ''அது உனக்கு தெரியவேண்டாம் ஆரு அப்படியே விடு''
     ''இங்க பாரு உதய் எனக்கு உங்கிட்ட பேசிட்டு நேரம் போறது வரலை... எனக்கு நீ ஏன் விட்டுட்டு போன எனக்கு என்னாச்சு? அதை கேட்க தான் வந்ததே... நீ கல்யாணம் செய்ய போறதை எல்லாம் கேட்கலை... இப்போ நீ சொல்லல.. உன் வீட்டுக்கு வந்து உன் அம்மா அப்பா உறவுக்காரர்கள் எல்லோர் மத்தியிலும் கேட்பேன்''
     ''அப்படி எல்லாம் செய்துடாதே.. உனக்கு தெரிந்தால் நீ தான் தாங்கிக்க கஷ்டப்படுவ... அதனால சொல்றேன்... ப்ளீஸ்... உனக்குன்னு புது பிறவி எடுத்து எல்லாம் மறந்து நீ வாழனும் என்று தான் உன்னை அங்க விட்டுட்டு வந்தேன்... வேற தவறான எண்ணம் இல்லை'' என்றான் உதய்.
     ''அப்போ எனக்கு என்ன ஆச்சு?''
     ''அதை ஏன் கேட்கற? ப்ளீஸ்... விடேன்.''
     ''உதய்..... நீ என்னை விரும்பியது உண்மை என்றால் என்கிட்ட நீ எதனால் என்னை விட்டுட்டு போன எதுக்கு? நீ உன் அம்மா சொல்லிய பொண்ணை கல்யாணம் செய்ய போற இந்த இரண்டுக்கும் பதில் சொல் போறேன்'' என்றாள் பிடிவாதத்துடன்.
               ஆராதனா பேசியது எல்லாம் வெற்றி காதில் விழுந்தது. அவள் இவனின் காதில் விழ வேண்டும் என்றே எண்ணி கத்தி பேசி இருப்பாள் போல அது தான் உண்மை.
       ''ஆரு உனக்கு என் காதல் மேல சந்தேகமா...?'' அவளோ என் காதல் மேலயே சந்தேகம் வந்துடுச்சு... நான் உன் மேல நிஜமா காதலிச்சேனா இல்லை நீ ப்ரொபோஸ் பண்ணிய காரணத்தால் நானும் திருமணம் செய்து கொள்வோம் என்ற காரணத்தால் ஓகே சொன்னேனா... அல்லது உண்மையிலே உன் மீது காதல் இருக்கா என்றே தெரியாம குழம்பி போய் இருக்கேன் என்றே எண்ணினாள் மனதில்.
      ''ஹ்ம்ம் ஆமா சொல்லு... எதுக்கு என்னை விட்டுட்டு போன? எனக்கு என்னாச்சு? எதனால் நீ வேற கல்யாணம் செய்ய போற..? நீ என்ன பேசினாலும் இதுக்கு பதில் தெரியாம இங்க இருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட்டேன்'' என்றாள் அதே பிடிவாதத்துடன்.
       கால் மணி நேரம் சென்றதும் உதய் சொல்லியதாக தெரியவில்லை ஆராதனாவும் விடுவதாக தெரியவில்லை... வெற்றி மட்டும் இருவரையும் கண்டு செய்வதறியாது முழித்தான்.
       உதய் வேறு வழியில்லாமல்... தன் காதலை இவள் சந்தேகிக்கும் பொருட்டு அதனை சொல்ல முயன்றான்.

-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ்.

உதய் சொல்வானா மாட்டானா.🤔 யோசிச்சு வைங்க வர்றேன்.

Comments

  1. சொன்னாலும் கஷ்டம்...சொல்லாட்டியும் கஷ்டம்....🙄🙄🙄🙄🤐

    ReplyDelete
  2. Next enna tha nadakkum...
    Enna solluvan udhay

    ReplyDelete

Post a Comment

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1