ஸ்டாபெர்ரி பெண்ணே- 6
🍓6
அதிகாலையில் ஜாக்கிங் உடையில் வெற்றி பீச் ரோட்டில் ஓடி முடித்து களைத்து வர ஆராதனா கோவமாக இருந்தாள்.
''ஹாய் ஜெஸில் என்ன கோவமா இருக்கற மாதிரி இருக்கு?'' என்றே ஷூ கழட்ட
''செல்வா செய்யறதை செய்துவிட்டு பேசாதீங்க... பாவம் நான் வீட்டிலே
இருந்து கஷ்டமா இருக்கு உங்க கூட ஜாக்கிங் வரலாம் என்றே இருந்தேன். நீங்க
விட்டுட்டு போயிட்டீங்க... எனக்கு தனியா வீட்டில் போர் அடிக்கு தெரியுமா?''
என்றே கோவத்தில் ஆரம்பித்து சோகத்தில் முடித்தாள்.
''சாரி ஜெஸில் நாளைக்கு உன்னையும் கூட்டிட்டு போறேன்'' என்றே சொல்லி மழுப்பினான்.
''நான் எப்படி பேசுவேன்? உங்க கிட்ட கோவமா வா? இல்லை நார்மலாவா?
அப்படி இல்லனா வாயடியா? சொல்லுங்க செல்வா?'' நொடிக்கு நொடி முக மற்றம்
கொண்டு கேட்டாள்.
''நீ அருவி மாதிரி சலசலன்னு பேசுவ.. கேட்க கேட்க கேட்டுட்டே இருக்கலாம் என்று தோணும்....'' ரசனையோடு சொன்னான்.
''அப்போ நீங்க எப்படி?'' என்றாள் புருவம் உயர்த்தி.
''கேட்டு இருப்பியே என்ன சொல்லி இருக்காங்க'' வீட்டில் அவள் வாட்ச்
மேன் லட்சுமிம்மா மற்றொரு பனி பெண் என்றே அவள் கேட்டு கொண்டு இருந்ததை
பார்த்து இவன் கேட்டான்.
''ஓஹ் வீட்டில் இருக்கும் எல்லோரையும் கேட்டேன். எல்லோரும் அமைதியான
முதலாளி என்று மட்டும் சொல்லிட்டு நழுவறாங்க'' என்றே சொல்ல சிரித்து
கொண்டான்.
''நீ வாய் ஓயாம பேசறதை நான் இமைக்காம பார்த்து ரசிப்பேன். நீ என்ன
நினைத்து கேட்க வருவியோ அதனை நான் ஏற்கனவே நிறைவேற்றி வைப்பேன்.
மொத்தத்தில் உனக்கு மட்டும் நான் கடல் அலை போல உங்கிட்ட பேச விரும்புகிறவன்
தான். அதுக்காக இப்போ எல்லாம் பேசி முடிக்க முடியாது. உனக்கு இன்னும்
கொஞ்ச நாள் போகட்டும் நீ ரெஸ்ட் எடுத்து நல்லா ஆகு அப்பறம் எல்லாம்
பேசலாம்'' என்றே சொல்லி மாடிக்கு விரைந்தான்.
செல்வா எனக்கு நீ ஸ்பெஷல் அப்படி தானே? அதன் அர்த்தம் அப்படி தானே?
இல்லை உனக்கு நான் ஸ்பெஷல்லா? ஐயோ செல்வா எனக்கு ஏன் நினைவு போச்சு பாரு
உன்கூட எப்படி பழகி இருந்தேனே தெரிலை... சே.. என்றே சிணுங்கி தனியாக
புலம்பினாள்.
வெற்றி அலுவலகம் செல்ல முகம் வாடி அவனே பார்க்கும் ஆராதனாவை
கண்டு நாளைக்கு அவளுக்கு போர் அடிக்காம இருக்க ஏதாவது வாங்கி கொடுக்கணும்
என்றே யோசித்தான்.
''செல்வா.. நேற்றே கேட்கணும் என்று இருந்தேன். உன் அறையில் போய்
இருக்கவா? அதாவது முன்ன அது தான் என் அறை என்று சொன்னிங்க எனக்கு பழைய
அறைக்கு போனா நினைவு வர சான்ஸ் இருக்குல அதனால கேட்கறேன்'' என்றே கேட்டு முடித்தாள்.
''போய் பாரு...'' என்றே சொல்லியதும் தேங்க்ஸ் செல்வா என்றே சொல்லிட காரில் ஏறி விடை பெற்றான்.
நீ என்ன தான் என் அறையில் இருந்தாலும் உனக்கு பழைய
நினைவு வராது ஆராதனா அதனால தான் தாராளமா போ என்றே சொல்லிட்டேன். ஆனா உன்
நினைவு தரும் இடம் எதற்கும் நான் உன்னை கூட்டிட்டு போக மாட்டேன். என்
சுயநலம் என்று கடவுள் நினைச்சாலும் பரவாயில்லை... அங்க போய் உதய் நினைவு
உனக்கு வந்து கடைசியில் நீ கடத்தப்பட்டு அதுக்கு பின் நடந்த நிகழ்வு நீ
மயக்கத்தில் இருந்ததால் அறியாமல் போனாலும் டாக்டர் சொல்லியதையும் மீறி
உனக்கு மயக்கத்தில் உனக்கு நடந்த கொடுமை நீ அறிந்து போனாலோ இல்லை உதய்
தெரிவித்தாலோ உன்னால தாங்க முடியாது. அதுக்கு நீ நினைவு தவறிய பெண்ணாகவே
இருந்துவிட்டு போ இப்போ இருக்கற ஜெஸில் சிரிப்பு மட்டும் எனக்கு போதும்'
என்றே வெற்றி மனதிற்குள் சொல்லி கொண்டான்.
அவன் போய் பாரு என்றதும் முதல் ஆளாக அறையினை அளந்தாள். போட்டோ
மட்டுமே ஓரளவு பார்த்த உடை கடிகாரம் செயின் என்றே தோன்ற மற்ற இடம் எல்லாம்
பழகியது போல இல்லை என்றாலும் அவளுக்கு ஏதோ அதில் பூர்வ ஜென்ம பந்தம் போல
தனக்கு சொந்தமான இடம் என்றே உள்ளுணர்வு சொல்லியது. வெற்றி எப்பொழுதும்
ஜன்னல் அருகே அமர்ந்து வேடிக்கை பார்த்து பேசும் அவ்விடம் அவளுக்கும் அது
பிடித்தமானதாக மாறியது. கப்போர்ட் எல்லாம் பூட்டி இருக்க ஒன்றும் திறக்காமல்
போனது. அவனின் மெத்தையில் உறங்கி போனாள்.
சாப்பிடும் நேரம் லஷ்மி அம்மா வந்து கூப்பிடும் பொழுதே எழுந்து
சுற்றி பார்த்துவிட்டு கீழே இறங்கினாள். அப்பொழுது காலையில் தோட்டத்தில்
பறித்து வைத்த ரோஜா மட்டும் அவள் எழுந்திடவும் அவன் கட்டிலில் அங்கே விழுந்தது.
சாப்பிட பின்னர் வெற்றி அறைக்கு போக தோன்றாமல் பழைய ஸ்டோர் ரூம்
அறைக்கு சென்றாள். அங்கே ஏதேனும் நினைவு தரும் விஷயம் இருக்கும் என்றே...
ஆனால் அங்கோ அப்படி ஒன்றும் இல்லை... சுற்றி தேடி முடித்து
அங்கிருந்த போட்டோ ஒன்றை மட்டும் எடுத்து கொண்டு வந்து துடைத்து
மாட்டினாள்.
ஹாலில் மாட்டியதும் அங்கிருந்த ஆட்கள் குசுகுசுவென பேசி கொள்வது தெரிய இவள் பார்த்ததும் அமைதியாக சென்று விட்டார்கள்.
அறைக்கு வந்து கதவை சாற்றி 'டேய் செல்வா நீ ஒரு புரியாத புதிர்
என்றால் இங்க ஒர்க் பண்றவங்க அதுக்கு மேல இருக்காங்க... யாரையும் பார்த்த
மாதிரி இல்லை... ஹ்ம்ம் என்ன பண்ண வசியம் பண்ற மாதிரி இருக்கற உன்னையே
மறந்து போய் இருக்கேன் இவங்க எல்லாம் எந்த மூலைக்கு...' என்றே இருந்தவள்
தான் என்ன படித்தோம் என்றே யோசிக்க அதுவும் நினைவு இல்லை.. சரி சமையல்
எதாவது தெரியுமா? என்றே யோசிக்க அதுவும் நினைவு தோன்றாமல் போக தனியாக
இருந்தால் பைத்தியம் போல தோன்ற எழுந்து லட்ஷுமி அம்மா அருகே வந்தாள்.
''லட்சுமிம்மா நான் இதுக்கு முன்ன ஏதாவது சமைச்சேனா?'' என்றே கேட்க அன்னம்லட்சுமி திருதிருவென முழிக்க
''சொல்லுங்க லட்சுமிம்மா?'' என்றே கேட்க
''பாப்பா நீ கிச்சனில் எதுக்கு வரணும் வெற்றி ஐயா பார்த்தார் திட்டுவார். நீ அதனால எதையும் செய்யாதே'' என்றே விரட்ட
''போங்க லட்சுமிம்மா... எனக்கு போர் அடிக்கு எனக்கு ஈவினிங் ஸ்னாக்ஸ் ஏதாவது சொல்லி கொடுங்க...''
''ஐயையோ வேண்டாம் பாப்பா''
''செல்வாக்கு செய்து தரணும் என்று ஆசையா இருக்கு'' என்றே சொல்லியதும்
லட்சுமிம்மா என்ன நினைத்தாரோ இரு ப்ரெட் பஜ்ஜி செய்ய சொல்லி தருகின்றேன்.
நீ நான் சொல்ல சொல்ல செய் பாப்பா'' என்றே சொல்லியதும் செய்து முடித்தாள்
ஆராதனா.
ஏழு மணிக்கு வந்த வெற்றி முதலில் பார்த்தது தட்டில் பஜ்ஜி வைத்து கொண்டு வாசலில் நின்ற ஆராதனாவை தான்.
''என்ன நீ செய்தாயா ஜெஸில்...?'' என்றே கேட்க ஹ்ம்ம் என்றே தலையை
அசைத்தாள். வாங்கி உண்டு திரும்ப அங்கே தனது அன்னை தந்தை புகைப்படம் இருக்க
அருகே போனான்.
''இதை யாரு....?'' என்றே கேட்டு முடிக்கும் முன்
''செல்வா நான் தான் ஸ்டார் ரூமில் இருந்து எடுத்துட்டு வந்தேன்'' என்றதும் வெற்றி மவுனமாக அறைக்கு சென்றான்.
இரவு உணவு உண்ணவும் வரவில்லை. ஆராதனாவுக்கு கவலையோடு இரண்டு தோசை உண்டு முடித்து எழுந்தாள்.
இந்த போட்டோ அவருக்கு புடிக்காதா லட்சுமிம்மா?'' என்றே கேட்க
''அப்படி சொல்லிட முடியாது. நம்ம வெற்றி ஐயா அப்பா அம்மா இருவருமே
சொந்த உறவுகள் தான். அக்கா மகளை தான் வெற்றி அப்பா திருமணம் முடிச்சது.
திருமணம் ஆனா புதிதில் எல்லோரும் போல இனிமையா வாழ்ந்தாங்க... கொஞ்ச காலம்
போன பிறகு வெற்றி ஐயா பிறந்து வளர்ந்தார். அப்போ தான் வெற்றி ஐயாவை
பார்த்துக்க ஒரு பொண்ணு நியமிச்சாங்க... அந்த பொண்ணு வெற்றி அப்பாவை
விரும்புச்சு... வெற்றி அப்பா விரும்பலை... ஆனா வெற்றி அம்மா இவங்க இரண்டு
பேருமே விரும்பறாங்க என்றே எண்ணி அதுக்கு தான் இடைஞ்சலா இருக்க கூடாது
என்று விஷம் குடிச்சுட்டாங்க... உயிர் போகும் நேரம் ஐயா என்ன நினைச்சாரோ நீ
இல்லாமல் என்னாலயும் வாழ முடியாது என்று வெற்றி ஐயா சின்ன பிள்ளை என்று
கூட பார்க்காமல் அவரும் மீதி விஷம் குடிச்சு இரண்டு பேருமே
இறந்துவிட்டாங்க.
வெற்றி ஐயாவோட அப்பாவை விரும்பிய பெண் அதுக்கு பிறகு தான் தவறை
உணர்ந்து இருந்தா... வெற்றி பேரில் இருக்கும் சொத்து முழுதும் பதினெட்டு
வயசு முடியும் பொழுது கைக்கு கிடைக்கும் அதனால சொத்து யாருக்கும் சேரம
போனது. வந்த உறவு சொத்து கிடைக்காது என்றே விட்டுவிட்டு போயிட்டாங்க.
வெற்றியை அதுக்கு பிறகு அந்த பெண்ணே பார்த்துகிட்டு வளர்ந்தாங்க.
வெற்றிக்கு வளரும் பொழுதே அந்த பெண் உண்மையான பாசத்தோடு வளர்க்கிறது
புரிந்தது. வெற்றிக்கு பதினெட்டு வயசு முடியும் சமயம் அந்த வளர்ந்த
பெண்ணும் கடிதம் எழுதிவிட்டு இறந்துடுச்சு''
''என்ன கடிதம்? ஏன் இறந்ந்தாங்க?எப்படி?''
''அந்த பெண்ணாலே தான் வெற்றி அம்மா அப்பா இறந்ததால் அப்போவே அந்த
பெண்ணும் இறக்க தான் முடிவு எடுத்துச்சாம் ஆனா வெற்றியை வளர்க்க யாரும்
முன் வரலை என்று தெரிந்ததும் வெற்றியை வளர்த்து ஆளாக்கும் வரை உயிர்
இருப்பேன் அதுக்கு பிறகு இறந்துவிடுவேன் என்றே சொல்லி எழுதிய கடிதம். அந்த
அளவு வெற்றி அப்பா மேல அந்த பொண்ணுக்கு ஒரு தலையா காதல்.... ஹ்ம்ம் என்ன
செய்ய விதி யாரையும் வாழ விடலை... தனது அப்பா அம்மா தன்னை பற்றி யோசிக்காம
இறந்துவிட்டாங்க என்றே கோவத்தில் அப்பா அம்மா போட்டோ எல்லாம் பார்க்கவே
பார்க்காது. அதனால தான் ஸ்டோர் ரூமில் போட்டு வச்சது...'' என்றே எழுந்து
போக
அப்போ செல்வாவுக்கு அவங்க அம்மா அப்பா பிடிக்காதா? என்றே
போட்டோவில் இருவரையும் பார்க்க ஒருவருக்கொருவர் ஆழமான அன்பில் யோசிக்காமல்
முடிவெடுத்த காதல் மட்டுமே அவளுக்கு தோன்றியது.
வெற்றியோ அறையில் அவளின் தலையில் இருந்து உதிர்ந்த ரோஜாவை பார்த்து பார்த்து ஏதேதோ சிந்தனையில் உறங்கினான்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
யாரும் பிளாக் ல கமெண்ட்ஸ் போடலை.. மீ சோகம்
அத்தை மகன் என்று சொல்லி மாமன் மகளாக அவளை அடையாளப் படுத்தி விட்டாய்.... உண்மை என்றும் மறையாது.... ஜாக்கிரதை.
ReplyDeleteவிரைவில் மாட்டுவான் sis
Deleteஅச்சோ...பாவம்.
DeleteNice update
ReplyDelete