ஸ்டாபெர்ரி பெண்ணே- 12

 🍓12
          இரவில் ஆராதனாவிற்கு பொட்டு தூக்கம் கூட இல்லை... எதுக்கு இந்த செல்வா இப்படி என்னை கேட்கணும் நல்லதோ கெட்டதோ என்னை விட்டு போக மாட்டியே ஜெஸில்... என்று... எனக்கு ஒன்றும் புரியலை...
               எல்லோரும் பழைய நினைவு மறந்தா அவர்களுக்கு நினைவு வரவழைக்க தான் முயற்சி செய்வாங்க ஆனா இந்த செல்வா மட்டும் அதை பற்றி யோசிக்க மாட்டேன்கிறார்.... ஏன் என்னை கூட யோசிக்க விட மாட்டேன்கிறார்... அப்போ எப்படி எனக்கு என் நினைவுகள் தெரிய வரும்?
                நான் எப்படி பட்ட பெண் நல்லவளா? கெட்டவளா? மென்மையானவளா? கோவப்படுவேனா? எல்லோரிடமும் பழகும் குணமா? எடுத்தெறிந்து பேசுபவளா? எனக்கான உறவுகள் நட்புகள் இருக்கா? இல்லை வெற்றி செல்வன் மட்டும் தானா? எதுக்கு வெற்றி என்கிட்ட இயல்பா பேசவே மறுக்க மாட்டேன்கிறார்? அவரை பொறுத்தவரை என்னை இப்படியே இருந்து கூட ஏற்றுக்கொள்ள தயாரா இருக்கார். எதுக்கு பழைய நினைவு கூடாது என்றாலும் சம்மதமா இருக்கார்? அப்போ எனக்கு தெரிந்து கொள்ள கூடாத பழைய நினைவுகள் சில கசப்பானவையா? அப்படி என்ன நடந்து இருக்கும்?
           ஆனா இது எல்லாவற்றிலும் ஒரு உண்மை மட்டும் எனக்கு புரியுது. செல்வா என்னை விரும்புகின்றார்.... அதே போல என் மனம்......
            ஆமா என் மனம் செல்வாவை தான் விரும்புது. முன்ன நான் அவரை விரும்பினேனா இல்லையா எனக்கே தெரிலை... ஆனா அவரோட அன்பு கண்ணில் வழிந்த காதல்... பாசம் நான் முழிச்சு பார்த்த பொழுதே கண்டேன்... அவருக்கு என் நினைவு போனா கூட பரவாயில்லை என் உயிர் பிழைச்சது போதும் என்று தான் டாக்டர் கிட்ட அடிக்கடி சொல்லிட்டு இருந்தார் என்று டாக்டர் சொன்னாங்க....
            அப்போ அவருக்கு என் நினைவு திரும்பினாலும் திரும்பா விட்டாலும் பிரச்சனை இல்லை அப்படி தானே?
          அவரின் கண்ணில் அன்று பார்த்த உணர்வுகள் எல்லாம் நான் பிழைச்சா போதும் என்றே இருந்தது... அப்படி எனக்கு என்ன ஆச்சு? யாரோ என்னை காரில் தள்ளி விட்டார்கள் அப்போ தலையில் இடிச்சது பின்னர் எதுலயோ மோதி என் வயிற்றில் குத்தியது அவ்ளோ தான் நினைவு இருக்கு?
            அதுக்கு பிறகு கடற்கரையில் ஒரு உருவம் என் உயரத்தில் கொஞ்சம் கூடுதல் அதோட நடந்து வர்றேன்... ஆனா அது என் வெற்றி செல்வன் இல்லை.... அந்த உருவத்தின் முகமும் சரியா நினைவு இல்லை மங்களா... தான் தெரியுது.
       சரி இப்போ என்ன தான் பிரச்சனை... செல்வா மனசில் நான் இருக்கேன் என் மனசில் அவர் இருக்கார்... ஆனா இதை எப்படி சொல்றது? என்றே போனை எடுத்து ஒரு ஸெல்ப்பில் வைத்து விட்டு யோசிக்க செய்தாள்.
       முன்ன மாதிரி லெட்டர் கொடுக்கலாமா? சே கம்ப்யூட்டர் காலத்தில் கடிதமா?வேண்டாம்... முகநூலில் மேசஞ்சர்ரில் சொல்லிடலாம்? ஹ்ம்ம் ஹ்ம்ம் வேண்டாம் அவர் என்ன முகம் தெரியாத நபரா? இல்லை வெளி நாட்டில் இருக்காரா? அதுவும் வேண்டாம்... என்ன செய்ய ஆராதனா உன் மூளை அடிபட்டதால் வேலை செய்யலையா? என்றே குறுக்கும் நெடுக்கும் நடந்தவள்.
           ரோஸ்.... சே அதுவும் வேண்டாம்... பசங்க பொண்ணுங்க கிட்ட ரோஸ் சொல்லி ப்ரொபோஸ் பண்ணுவாங்க பொண்ணுங்க பண்ணினா நல்லா இருக்காது....
          நாளைக்கு எப்படியாவது செல்வாக்கிட்ட என் லவ் சொல்லணும் என்றே கண் மூடி உறங்க செய்தாள்.
       ''செல்வா எப்பவும் போல உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கணும்'' என்றே ஆராதனை சொல்ல
       ''இன்னிக்குமா சரி கேளு...'' என்றே வெற்றி அலுப்புடன் படியில் நின்று கேட்க
        ''இல்லை ரூமில் கேட்கறேன்... வாங்க... ''' என்றே கையை பற்றி அழைத்து சென்றாள். கதவில் வந்ததும்
       ''செல்வா நீங்க கதவை திறந்து முதலில் போங்க...'' என்றே சொல்லி இமைகள் அலைபாய அவனை காண அவனோ புரியாமல் மென்புன்னகையோடு கதவை திறந்து அறைக்கு வந்து நிற்க அடுத்த நொடி அவனின் மேலே பூக்களும் வண்ண காகிதங்களும் சேர்ந்து தலையில் விழ அதில் ஒரு இதய வடிவ பலூன் ஒன்று ஐ லவ் யூ... யூ லவ் மீ? என்றே கேட்டு ஒரு கேள்வி குறியோடு இருக்கும் பலூன் அவனின் முன் விழ அதனை பிடித்து பார்த்தவன் அப்படியே படித்து ஆராதனாவை பார்க்க அவளோ நெஞ்சு கூட்டில் இதய ஒலி அவனுக்கு கேட்கும் அளவிற்கு நின்று இருந்தாள்.
        வெற்றி செல்வன் புன்னகையோடு அவளை பார்க்க கன்னங்கள் சிவக்க தலையை குனிந்தவள் ஓட பார்க்க வெற்றியோ பலூனை தூக்கி எரிந்து அவளின் கைகளை பற்றி இழுக்க அவனின் மேலே விழுந்தாள் ஆராதனா.
       ''இதை சொல்ல உனக்கு இவ்ளோ நாள் தேவை பட்டுச்சா.... நானும் உன்னை தான் விரும்பறேன் ஜெஸில்... எப்போ கல்யாணம் செய்து கொள்ளலாம்.. என்றே இதழை நோக்கி குனிய
    ''ஐயோ இப்போ வேணாம் கல்யாணத்துக்கு அப்பறமா...'' என்றே சொல்லி முகத்தை மூட அவனோ
       ''நோ ஜெஸில் இப்போ ஒன்னு ப்ளீஸ்... உன் செல்வா உங்கிட்ட கேட்கறேன் கொடுக்க மாட்டியா...'' என்றே கேட்க அதிர்ந்து எழுந்தாள் ஆராதனா.........
       'சே கனவா....? அம்மாடி... இதுக்கே வேர்த்துடுச்சு.... என்றே நீரை பருகி முடித்து யோசித்தாள்.
       செல்வா இப்படி என்னிடம் பழகவே மாட்டார்.... எதுக்கு தான் எனக்கு இப்படி புத்தி போயிடுச்சோ... ஆனா இந்த ப்ரோபோசல் நான் ட்ரை பண்ணலாம்... நல்லா தான் இருக்கு ஆனா அதுக்கு செல்வா வீட்டில் இருக்க கூடாது சோ காலையில் செல்வாகிட்ட என் லவ் சொல்ல முடியாது... மாலையில் செல்வா வருவதற்குள் ஏற்பாடு செய்துடலாம்... எஸ்... அப்படியே செய்துடலாம்.... என்றே எண்ணியவளுக்கு தூக்கம் எல்லாம் வரவே இல்லை... நாளைக்கு எப்படி அவனுக்கு சொல்லி புரிய வைக்க என்றே யோசித்து நேரம் தாண்டியே உறங்கினாள்.
            இங்கு செல்வாவோ 'ஏண்டி உன்னை பார்த்தேன் ஏண்டி என் கண் முன்னால உனக்கு கெட்டது நடக்கணும் அதை பார்த்தும் என்னால தடுக்க முடியலையே...
         உதய் எப்படியோ விட்டுட்டு புது மாப்பிள்ளையாய் ரெடி ஆகிட்டான். என்னால அப்படி இருக்க முடியலையே...
             எனக்கு முன்னவே உன்னை தூரத்தில் பார்த்தால் மட்டும் போதும் என்று தானே இருந்தேன்... இப்போ அருகே இருக்க ஆனா ஒவ்வொரு நாளும் எப்போ உனக்கு நினைவு திரும்பி என்னை விட்டு போயிடுவ என்றே எண்ணி பயமா இருக்கு...
          உதய் வேற கல்யாணம் செய்து கொள்ள போறான் உனக்கு அது தெரிந்தாலும் கேள்வி கேட்பியே... அது என்கிட்ட பதில் இல்லையே... என்னால உனக்கு நடந்த கொடுமையை கண்டிப்பா சொல்ல மாட்டேன். ஆனா உனக்கே நினைவு தெரிந்து நீயா தெரிந்து கொண்டாள்...
          ஐயோ முடியல ஜெஸில்... எது என்றாலும் என் கூடவே இரு டி... எனக்கு அது போதும்... என் இந்த சாம்ராஜ்யத்தை ஆள எனக்கு வாரிசு இல்லை என்றாலும் பரவாயில்லை... என் ஜெஸில் எனக்கு போதும்... என்று நிம்மதியா இருப்பேன்... ஆனா உனக்கு நினைவு திரும்பினா.... கடவுளே... என்றே புலம்பி போய் அவனும் நெடு நேரம் தாண்டியே உறங்கினான்.
                 உதய்யோ போனில் அவன் திருமணம் செய்ய போகும் பெண்ணிடம் இயல்பாக பேசவும் முடியாமல் பேசாமல் இருக்கவும் முடியாமல் திண்டாடினான். ஆரு எங்க இருக்க? நீ நல்லா தான் இருக்க? உன் மனசுக்கு நீ எங்க போனாலும் நல்லா தான் இருப்பம்மா என்னால தான் முடியலை... எனக்கு இந்த மாசம் கல்யாணம் ஆனா என்னவோ மாதிரி இருக்கு.. ஏதோ தப்பா இருக்கு... ஆராதனா உனக்கு எது என்றாலும் நான் உன்கூட இருந்து இருக்கனும் அதான் ட்ரு லவ்.. என்ன இருந்தாலும் நான் தப்பு தான் செய்யறேன்... உன்னை விரும்பிட்டு உன்னை அம்போன்னு விட்டுட்டு நான் கல்யாணம் செய்துக்க போறேன்...  என்றே அவனும் புலம்பி கொண்டே இருந்தான்.
                மூவரின் எண்ணமும்  ஒரே நாளில் நாளை இரவுக்குள் பதில் தெரிந்து விடும் என்று அறியாமல் விடியல் அவர்களை எழுப்பியது.

-தொடரும்.

-பிரவீணா தங்கராஜ்.

Comments

  1. ஆஹா!... சஸ்பென்ஸ்ல வைச்சுட்டிங்களே சிஸ், மண்டையை உடைச்சு க்கலாம் போல இருக்கு.சீக்கிரம் next epi please

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு