ஸ்டாபெர்ரி பெண்ணே-26(முடிவு)

  🍓 26
              உதய் தான் போனில் கேட்டு கொண்டு இருந்தான். வெற்றி ஆராதனா தாய்மை செய்தியை உறுதி செய்ததையும் சொன்னான். உதய் மனம் நிஜமாகவே மகிழ்ச்சி உற்றது.
           உண்மையான அன்புக்கு தீங்கு செய்ய தோணாது.. நல்லதை தான் அவர்களுக்கு வழங்க தோன்றும்..அதே தான் உதய் செய்தான்.
            என்ன தான் அவள் தாய்மை அடைய மாட்டாள் என்று அறிந்து விலகியது தனது காதலில் சறுக்கல் வந்தன. அதனால் தான் வெற்றி உண்மையான அன்பு காதல் எல்லாம் ஆராதனாவுக்கு எத்தகைய நிலை என்றாலும் கூடவே நின்றான். இதோ இப்பவும்...
             வாழ்வில் சிலர் இவருக்காக இவர்கள் என்று கடவுள் எழுதி இருப்பதும் ஒரு வித காரணத்திற்காக தான். அதே போல வாழ்வில் எந்த காரணமும் நமக்கு கஷ்டம் கொடுத்தாலும் இறுதியில் நன்மைக்கு தான் முடியும் என்றே எண்ணினான்.
       கடவுள் எழுதும் கதைக்கும் நல்ல முடிவை தான் எதிர்பார்ப்பார் என்றே எண்ணி அவனின் மகி கையினை பற்றி கொண்டான்.
                                                     FEW YEARS LATER
       ''செல்வா.... செல்வா... இன்னும் என்ன செய்யற... கிளம்ப வேண்டாமா...? நல்ல நேரத்தில் போகணும் செல்வா...'' என்றே ஆராதனா கூப்பிட மாடியில் இருந்து அப்பா மகன் இருவரும் ஒரே உடையில் இறங்கி கொண்டு இருந்தார்கள்.
         வெற்றி செல்வன் மகன் தமிழ் செல்வன் தந்தை போலவே மிடுக்காக வந்து நின்றான்.
        வெற்றியோ ஜெஸில் சொருகிய சேலை முந்தானையில் கொஞ்சம் கீழே இறங்கிய இடையை பார்த்து கொண்டு மெல்ல அருகே வர
      ''ப்பா கொஞ்சம் தள்ங்க... என்றே அவர்களின் மகள் தவமலர் வந்து நின்றாள். இருவரின் நடுவில்.... பின்னர் வெற்றியை பார்த்து
      ''ப்பா நேரம் அச்சு வாங்க... குட்டி பாப்பா நமக்காக வைட்டிங்'' என்றே மழலையில் சொல்ல ஜெஸில் மீது இருந்த காதலோடு இருவரையும் தூக்கி கொண்டு போகலாமா...'' என்றே ஆராதனாவை பார்த்து கண் சிமிட்டினான்.
                வெற்றி செல்வன் ஆராதனாவுக்கு ஒரு மகன் தமிழ் செல்வன் 4வயதும்  ஒரு மகள் தவமலர் 3 வயதும்... இருக்க இப்போ அவங்க ஒரு ஆசிரமத்துக்கு போய் எட்டு மாத குழந்தை தவநிலாவை தத்து எடுக்க கிளம்பி கொண்டு இருக்கின்றார்கள்.
            ஆராதனா வெற்றி இருவருக்கும் குழந்தை இல்லாமல் போனால் ஒரு குழந்தையை தத்து எடுக்க திட்டமிட்டார்கள். ஆனால் குழந்தை பிறந்த பிறகும் அதே கருத்து இருவருக்கும் இருப்பதால்.. இதோ தவநிலா எடுக்க கிளம்பி விட்டார்கள்.
         எல்லோரும் சிறு வயது வயதில் இருந்தே வளர்த்தால் குழந்தைகளுக்கும் தவநிலா தத்து பிள்ளை என்பது தோன்றாது என்றே எண்ணி இப்பொழுதே இம்முடிவை எடுத்தார்கள்.
                       இரண்டு மணி நேரம் பின்னர் வெற்றியின் இரு கைகளில் தமிழ் மற்றும் தவமலர் இருக்க ஆராதனா கையில் தவநிலா இருக்க வாசலில் நிற்க வைத்து லட்சுமி அம்மா ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள்.
        
                                  சுபம்.......................

 இப்படி போட்டுட்டு போயிடலாம் என்று தான் இருந்தேன்... இருங்க ஒண்ணே ஒன்னு பாக்கி... இரவில் எல்லோரையும் உறங்க வைத்து அவர்களின் மெத்தையில் படுக்க வைத்து ஆராதனா வெற்றி தோளில் சாயா... லேப்டாப் மடித்து வைத்து ஆராதனா பக்கம் பார்வை திருப்பி அவளை நெஞ்சோடு சேர்க்க
     ''என்ன மேடம் ஏதோ எப்பவும் கேட்கற கேள்வி கேட்கற தோரணையில் வந்து இருக்கற மாதிரி இருக்கு...'' என்றே உதட்டில் கை வைக்க
      ''ஹ்ம்ம் ஆமா...''
      ''அடிப்பாவி இன்னும் கேள்வி தீர்ந்தபாடு இல்லையா...? சரி கேளு....''
      ''அது என்ன உங்க பையன் பொண்ணுகளுக்கு மட்டும் தமிழ் பேர் வச்சி இருக்கீங்க... என்னை மட்டும் ஜெஸில் என்று கூப்பிடறீங்க....?'' என்றே கேட்க
       ''ஹ்ம்ம் அது அப்படி தான்.. எனக்கு தமிழ் பெயர் பிடிக்கும் டி அதான் ஆனா உன் பெயருக்கு நான் ஏற்கனவே விளக்கம் சொல்லிட்டேன் அதனால இப்போ விளக்கு மட்டும் அணைச்சுட்டு அப்பறம் பதில் சொல்றேன்...'' என்றே ஆராதனாவை நெருங்க
       ''ப்பா எங்களுக்கு தூக்கம் வரலை ஒரு கதை சொல்லுங்க...'' என்றே தமிழ் வந்து நிற்க.. பின்னாடியே தவமலர் வந்து வெற்றி மடியில் ஏறி கொண்டாள்.
          ஆராதனா கள்ள சிரிப்பு சிரிக்க
     ''சிரிக்காத ஜெஸில்...  என் நிலைமை அப்படி...பட்டு குட்டி உங்களுக்கு கதை சொல்லலை டிவியில் காட்டறேன்'' என்றே எண்சான்ட்டெட்(ENCHANTED) கதையா DVD யில் போட்டுவிட்டு எல்லோரும் சேர்ந்து பார்க்க துவங்கினார்கள்.
           நடுவில் நடுவில் அவன் தோளில் மற்றொரு குழந்தையாக அவனின் ஜெஸில் தொத்தி கொண்டாள்.
                                                   🍓..............சுபம்...........🍓   
                                                                                               --- பிரவீணா தங்கராஜ்  

 
         மேலே முடிவு கொடுத்தவை நிதர்சன வாழ்வியலோடு யோசித்தது. கீழே ரீடர்ஸ்காக........... மற்றும் ஜெகதீஷ் செய்த காரணம் மற்றவர்களுக்கு அறியாமல் போக கூடாது என்றும் வெற்றி கைகளால் அல்லது ஜெகதீஷ் இறப்பு அவன் கண் முன்னால் நிகழ வேண்டும் என்றே எண்ணி எழுதியது.
                                                                            🍓26


                  போன் ஆன் செய்து வெற்றி மகிழ்ச்சியை உதையிடம் பேச ஆரம்பிக்கும் முன்னரே உதய் அங்கு முனகும் கத்தல் மட்டுமே கேட்டது.
     ''ஹாய் வெற்றி... என்ன உன் பொண்டாட்டி அம்மாவாக போறாளா...? அது எப்படி டா இவன் விரும்பியவளை கல்யாணம் செய்து சரியா ஒரு மாசத்திலே அம்மாவாகறா...'' என்றே அப்பக்கம் பேசிட
      ''ஹலோ யார் நீ... என்ன பேசற.. தெரிந்து பேசரியா? இல்லை யாருகிட்ட பேசரும் என்றாவது தெரிந்து பேசு''
       ''அதெல்லாம் நல்லாவே தெரியுது வெற்றி ஜேகே முதலாளி வெற்றி செல்வன். இந்த முறை அவார்ட் கூட வாங்கி இப்போ அப்பா என்ற ப்ரோமஷன் ஆனா வெற்றி கூட தான் பேசறேன்... நான் யாருனு தெரிலை ல... ஜெகதீஷ் டா... இது போதுமா...?''
     ''ஜெகதீஷ் நீ உயிரோடவா இருக்க?''
     ''என்னை அவமானம் செய்தவர்களை சும்மா விட்டுட்டு செத்துடுவேனா? நோ வே... உடனடியா நீ, அப்பறம் உதய் ஆரு ஆரு உருகற அவள்', இரெண்டு பேரும் என் ஓல்ட் பாக்டரி வாங்க ஏதாவது புத்திசாலித்தனமா பண்ண போக நினைச்ச இந்த உதய் புதுசா கல்யாணம் ஆகி இருக்கற இந்த பொண்ணை நாசம் பண்ணிடுவேன்'' என்றே சொல்லி வைத்தான்.
               வெற்றிக்கு ஒரு பக்கம் நிம்மதி ஒரு பக்கம் குழப்பம் என்றே இருந்தது.
         ஆராதனா நாசம் செய்தவனை, செய்ய தூண்டியவனை தன் கையில் சாகடிக்க முடியவில்லை என்ற வருத்தம் இன்னும் இருக்க... ஜெகதீஷ் எப்படி விமான வெடித்து உயிர் திரும்பினான் என்றே குழப்பம் ஒரு பக்கம் என்றே இருந்தவன் நேராக ஜெஸில் தனது வீட்டில் விட்டுவிட்டு பத்திரமாக இருக்க சொல்லி தனது பிஸ்டல் எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
      ஜெஸில் எங்கே போற செல்வா என்றதற்கு வந்து சொல்றேன் ப்ளீஸ் டா என்றே நெற்றியில் இதழ் பதித்து சென்றான்.
      ஜெகதீஷ் சொன்னதை போலவே அவனின் இடத்திற்கு வந்து நின்றான்.
            ஆராதனா இல்லாமல் போகவே வெறி பிடித்து நின்றான் ஜெகதீஷ்.
    ''எங்க டா அவ?'' என்றே ஜெகதீஷ் கேட்டு முடிக்க வெற்றி செல்வனோ பாதி முகம் அடிபட்டு தையல் போட்ட முகத்துடன் இருக்கும் ஜெகதீஷ் கண்டதும் ஒரு நொடி அதிர்ந்து பின்னர் உதயை பார்க்க அவனோ நெற்றியில் ரத்தம் வழிய முகம் வீங்கி இமை திறக்க முயன்று முடியாமல் தோற்றுப்போய் இருந்தான்.
               காலையில் கல்யாண கோலத்தில் இருந்தவன் மதியம் இங்கு எப்படி வந்தான்? என்றே யோசனையில் துவங்க கொஞ்சம் தள்ளி மகி வாயில் கை கால்கள் கட்டிய நிலையில் மயங்கி கிடந்தாள்.
      ''என்ன டா கல்யாண கோலத்தில் இருந்தவன் இங்க எப்படி வந்தான்... செத்து போனவன் உயிரோட இருக்கான் என்றே குழம்பி போய் நிற்கறியா வெற்றி...
       சொல்றேன் எல்லாம் சொல்றேன்...
          இதோ இந்த உதய் அன்னிக்கு என்ன அடிச்சுட்டு போயிட்டான். யாரோ ஒரு எட்டு வயசு பொண்ணு என் காரில் விழுந்ததுக்கு என்னை இவன் நான் கட்டிக்க போற பொண்ணு முன்னாடி அடித்து விட்டான். அவ ஒரு மிடில் கிளாஸ் ஆளு என்னை அடிச்சதை ஏற்றுக்க முடியாம கல்யாணத்தை நிறுத்திட்டா....
                அதுக்கு அவ அப்பா என் தாத்தா கூட சம்பந்தம் வைக்கணும் என்று வற்புறுத்தியதும் என்ன சொன்ன தெரியுமா நான் வேண்டாமாம்... அந்த பொண்ணு உயிரோட இருக்கா ஹாஸ்பிடல் போகணும் என்று சொல்லி என்னை அப்போ காப்பாற்றிய வினித் செத்துப்போன பொண்ணை ஒரு குளத்தில் தூக்கி போட்டுட்டு கிளம்பின அவனை கல்யாணம் செய்துக்கறேன் என்றே சொல்லிட்டா... அதுக்கு என் சிற்றப்பா பையன் வினித்தும் சம்மதம் சொல்லிட்டான். ஆனா அடிவாங்கியவன் நான் வேண்டாமாம்... எல்லாம் பணம் ஒன்று சேருகின்றது என்றே எல்லோரும் எப்படி இருக்காங்க...?
          நான் மட்டும் என்ன செய்ய? என்ன அடிச்ச இந்த உதய்யை நானும் அசிங்க படுத்த நினைச்சேன். அவன் விரும்பற பொண்ணை கல்யாணம் செய்யும் பொண்ணை அசிங்க படுத்த தேடினேன். பார்த்தேன் இவனை பாலோவ் செய்ய சுப்புவை அனுப்பினேன். அவனுங்களும் கடத்தியதா சொன்னாங்க அப்போ என்னால வர முடியாத சூழ்நிலை...
           அவளை அப்டியே அடைச்சு வைங்க வந்து நாசம் பண்றேன் என்றே சொன்னேன். ஆனா அவனுங்க அடுத்த நாளே செத்து போய் இருக்காங்க... எப்படி உதய் சாகடிச்சான் என்றே இவனிடம் கேட்டா வாயவே திறக்கலை... இதோ இவளை நாசம் பண்ணுவேன் என்றதும் அவ்ளோ தூரம் அடிவாங்கி இருந்தவன் சொல்றான் சுபு கடத்தியது ஆராதனவையாம்.. நீ அதனால ஆராதனவை காப்பாற்றி அவனுங்களை சாகடிச்ச என்றே சொல்றான் ரொம்ப கஷ்டப்படுத்தி கேட்டதும் சொல்றான் ஆராதனாவை அந்த இரெண்டு பெரும் நாசம் பன்னிட்டாங்க வெற்றி ஆராதனாவை விருப்பி இருக்கார் அதனால அதை தாங்க முடியாம ஆக்சிடேன்ட் மாதிரி மாற்றி அவனுங்களை மேல அனுப்பிட்டார் என்று உண்மை சொல்றான்.
          அன்னிக்கு நான் மட்டும் சூழ்நிலை சரியா அமைந்து இருந்தா ஆராதனாவை நான் நாசம் பண்ணி இருப்பேன் சே எனக்குன்னு அமையுது பாரு சூழ்நிலைகள்.
       வினித் ஜமுனா திருமணம் பார்க்க பிடிக்காமல் மும்பை போக இருந்தேன் விமான விபத்து ஆச்சு...   
            விமான விபத்து ஆகும் நேரம் எல்லோரும் பாராச்சூட் எடுத்து தயாரா இருந்தோம் பாதி வெடிஞ்ச நிலையில் என்னோட இன்னும் நாலு பேர் குதிச்சாங்க... எல்லோரும் விழுந்தது பாறையில்.... நானும் தான்... அதுல என் முகம் பாதி இப்படி ஆகிடுச்சு.... கொஞ்சம் முயன்று என்னை சரி பண்ணி பக்கத்து இடத்துக்கு வந்து சிகிச்சை எடுத்துக்கிட்டேன். என் வீட்டில் போன் செய்து சொல்லலாம் என்றால் அங்க நான் இறந்து கிடந்தாலும் பரவாயில்லை என்று என் சிற்றப்பா வீட்டில் என் தம்பி வினித் ஜமுனா இரண்டு பேருக்கும் அன்னிக்கு தேதி குறித்த அதே நாளில் வினித் ஜமுனா திருமணமா விபத்து நடந்தும் கேன்செல் ஆகலை... என் வெறி அதிகமா ஆச்சு...
      நான் உயிரோட வந்ததை யாருக்கும் தெரிவிக்கலை... நேர வீட்டுக்கு போனேன் யாருக்கும் தெரியாமல் கார் பிரேக் கட் பண்ணிட்டேன். என் கண் முன்னால வினித் ஜமுனா இருவரும் அதில் பயணம் செய்து என் கண் முன்னால மரத்தில் மோதி இறந்து போனதை பார்த்தேன் நிம்மதி பத்தலை... உதய் இவன் முகம் முன்ன வந்து என்னை இம்ஸை பண்ணுச்சு.. அடுத்து இவனை தேடி வந்து பார்த்தால் இவன் கல்யாணா கோலத்தில் இருக்கான்.
                 நீயே சொல்லு நான் இப்படி பாதி முகம் செத்து இருக்கேன் இவன் கல்யாண கோலத்தில் எனக்கு எப்படி இருக்கும்..?!
     ஆனா ஒன்னு உதய் நானே எதிர் பார்க்கலை கல்யாணம் முடிந்த கையோட நீ ஹனிமூன் தனியா போக போற செய்தி எனக்கு சந்தோசம் கொடுத்தது. என்ன பார்க்குற உன் அம்மா ஆராதனா மயங்கி விழுந்ததும் உன்னை ஹனிமூன் அனுப்ப பிளான் போட்டு உன்னை அனுப்பியதும் நீ சந்தோஷப்பட்ட ....
          நானும் தான் அதான் பின்னாடியே வந்து அடிச்சு இங்க இழுத்துட்டு வந்துட்டேன். இப்போ எல்லோரும் நீங்க ஹனிமூன் போனதா நினைச்சுகிட்டு இருப்பாங்க பட் நீ இங்க செத்து குழிதோண்டி மூட போறேன். இதோ இந்த பொண்ணு நாசமாகி பிறகு உனக்கு துணையா அதே குழியில் அனுப்பிடுவேன். அடுத்து வெற்றி நீ அந்த ஆராதனா கூட்டிட்டு வருவ என்றே இருந்தேன்... பட் பரவயில்லை உன்னை சாகடிச்சுட்டு அவளை பார்த்துக்கறேன்... என்றே சொல்ல வெற்றி அவனின் பிடியில் மின்னிய கத்தியை எட்டி உதைத்து அவனை பந்தாடினான்.
      சரமாரியாக அடித்து துவைத்து பின்னர் எழுந்து நிற்க வைத்து பிஸ்டலை எடுத்தான்.
        இதனை ஜெகதீஷ் எதிர்பாராமல் திடுக்கிட்டான். அவன் கணக்கின் படி மகி மயக்கத்தில் இருக்கின்றாள் இன்னும் மூன்று மணி அளவு எழுந்து கொள்ள மாட்டாள். உதய் ஆள் ரெடி கால்களை முட்டியில் அடித்து கைகளை கட்டி வைத்து இருக்கின்றான். வெற்றி மட்டும் தான் அவனை வீழ்த்திடலாம் என்றே தவறாக கணக்கிட்டான். ஆராதனா விஷயத்தில் வெற்றி நல்லது கெட்டது பார்க்காமல் கோவம் வரும் என்று அறிந்து இருக்கவில்லை... பிஸ்டலை ஜெகதீஷ் பார்த்தபடி பேசினான்.
    ''ஆராதனா கடத்தியவர்கள் என் கையால கொள்ள முடியலை என்றே வருத்தம் எனக்கு எவ்ளோ இருந்தது தெரியுமா? அதுக்கு காரணமே நீ என்ற பொழுதும் நீ என் ஆராதனாவை ஒன்றும் பண்ணலை என்றே சமாதானம் செய்து கொண்டேன். நீ இறந்ததும் சரி விதி என்றே தேற்றி கொண்டேன். ஆனா நீ ஒரு எட்டு வயசு குழந்தை கொன்று இருக்க... நல்லதோ கெட்டதோ உன் தம்பி என்றும் பார்க்காமல் அவனையும் அவன் மனைவியும் கொன்று இருக்க... இதுல உதய் மகி காயப்படுத்தி இருக்க... இதெல்லாம் விட என் ஜெஸில் என் முன்ன எப்படி நீ பேசலாம் என்றே சொல்லி சுட ஜெகதீஷ் தட்டி விட பிஸ்டல் உருண்டது.
     ''ஜெகதீஷ் அதை எடுக்க ஓட அங்கிருந்த மழை தேங்கி பசை பிடித்த இடம் வழுக்கி எதிரில் விழுந்தான். விழுந்தவன் வயிற்றில் அங்கு கூர் கொண்ட துரு பிடித்த இரும்பு நெஞ்சில் குத்தி கொள்ள வலியில் துடித்தான்.
                       இறக்கும் தருவாயில் எதுவும் அறியாது அன்று உருட்டி விட பட்ட குழந்தையின் பிம்பம் மட்டுமே தோன்றி கண்ணீர் துளிர்த்தது.
     ''என் கையால் சாவு இல்லாமல் இப்பவும் தப்பிச்சுட்ட சே..'' என்றே வெற்றி பிஸ்டலை எடுத்து பாண்டில் சொருகினான். உதய் கை தாங்கலாக பிடித்து காரில் அமர வைத்து மகியை தூக்கி கொண்டு பின் பக்கம் ஏற்றினான்.
     ''சாரி வெற்றி நான் என்னை காயா படுத்தினா தாங்கி இருப்பேன் அவன் மகியை நாசம் பண்ணிடுவேன் என்றே கேட்டு என் வாயில் உண்மை வரவழைச்சுட்டான்...''
     ''உன் நிலைமையில் நானும் அதே தான் செய்து இருப்பேன் விடு உதய்.... மகிக்கு ஏதாவது?''
      ''இல்லை உதய் அவள் காரிலே தூங்கிட்டு இருந்தா நான் தான் காரை நிறுத்தி அவன் முன்ன வரவும் கதவை திறந்தேன் என்ன அடிச்சுட்டு அவளிடம் மயக்கம் மருந்து கர்சீப் அழுத்தினான். அவளுக்கு எதுவும் தெரிய வாய்ப்பு இல்லை...''
     ''குட்... நான் ஹாஸ்பிடல் அட்மிட் பண்றேன் வண்டி விபத்தில் காயமாச்சு சொல்லிடு... நீ சரி ஆகும் வரை மகி கூடவே இருந்து பார்த்துக்க சொல்லு உன் வீட்டில் சொல்ல வேண்டாம்... குணமான பிறகு ஹனிமூன் முடிச்சு நிம்மதியா திரும்புங்க... தென் உனக்கு நார்த் போஸ்டிங் ஆபிஸ்ல சொல்லி இருக்கேன் உனக்கு இனி தான் சொல்லுவாங்க.. வாங்கிட்டு நார்த் போயிடுங்க கொஞ்ச நாள் இங்க வேண்டாம்'' என்றே சொல்ல உதய் என் அலுவலகம் போஸ்டிங் கூட இவனால் மாற்ற முடியுமா என்றே எண்ணி பார்க்க
     ''சாரி உதய் நீ இங்க இருந்தா ஆராதனா சந்திக்க வாய்ப்பு இருக்கு அதான் அப்படி செய்தேன்.'' என்றான் வெற்றி.
       ''நல்லது வெற்றி... இனி கொஞ்ச நாள் இல்லை நான் இங்க திரும்ப வருவதே இல்லை... என்னால இனி நிம்மதியா இங்க இருக்க முடியாது... ஆராதனா வாழ்க்கை தான் என்னால அழிஞ்சது மகி வாழ்க்கை கூடாது'' என்றே கண்ணீர் விட்டான்.
      ''தப்பு உதய்... நீ செய்தது எல்லாம் சரி தான்.. செய்யறதும் சரி தான்... ஆனா அதை கொஞ்சம் உறுதியோடு தைரியமா செய்... இப்படி அடிக்கடி சந்தர்ப்பம் வந்தா  ஓடாதே... எப்பவும்...'' என்றே சொல்ல உதய் அமைதியாக தலையை அசைத்தான்.
             சொல்லியது போலவே மருத்துவமனை சென்று விட்டுவிட்டு மகி கண் திறக்கும் வரை இருந்து விட்டு அகன்றான்.
                                                          FEW YEARS LATER

      ''செல்வா.... செல்வா... இன்னும் என்ன செய்யற... கிளம்ப வேண்டாமா...? நல்ல நேரத்தில் போகணும் செல்வா...'' என்றே ஆராதனா கூப்பிட மாடியில் இருந்து அப்பா மகன் இருவரும் ஒரே உடையில் இறங்கி கொண்டு இருந்தார்கள்.
          வெற்றி செல்வன் மகன் தமிழ் செல்வன் தந்தை போலவே மிடுக்காக வந்து நின்றான்.
                 வெற்றியோ ஜெஸில் சொருகிய சேலை முந்தானையில் கொஞ்சம் கீழே இறங்கிய இடையை பார்த்து கொண்டு மெல்ல அருகே வர
       ''ப்பா கொஞ்சம் தள்ங்க... என்றே அவர்களின் மகள் தவமலர் வந்து நின்றாள். இருவரின் நடுவில்.... பின்னர் வெற்றியை பார்த்து
     ''ப்பா நேரம் அச்சு வாங்க... குட்டி பாப்பா நமக்காக வைட்டிங்'' என்றே மழலையில் சொல்ல ஜெஸில் மீது இருந்த காதலோடு இருவரையும் தூக்கி கொண்டு போகலாமா...'' என்றே ஆராதனாவை பார்த்து கண் சிமிட்டினான்.
                      வெற்றி செல்வன் ஆராதனாவுக்கு ஒரு மகன் தமிழ் செல்வன் 4வயதும் ஒரு மகள் தவமலர் 3 வயதும்... இருக்க இப்போ அவங்க ஒரு ஆசிரமத்துக்கு போய் எட்டு மாத குழந்தை தவநிலாவை தத்து எடுக்க கிளம்பி கொண்டு இருக்கின்றார்கள்.
                   ஆராதனா வெற்றி இருவருக்கும் குழந்தை இல்லாமல் போனால் ஒரு குழந்தையை தத்து எடுக்க திட்டமிட்டார்கள். ஆனால் குழந்தை பிறந்த பிறகும் அதே கருத்து இருவருக்கும் இருப்பதால்.. இதோ தவநிலா எடுக்க கிளம்பி விட்டார்கள்.
           எல்லோரும் சிறு வயது வயதில் இருந்தே வளர்த்தால் குழந்தைகளுக்கும் தவநிலா தத்து பிள்ளை என்பது தோன்றாது என்றே எண்ணி இப்பொழுதே இம்முடிவை எடுத்தார்கள்.
             இரண்டு மணி நேரம் பின்னர் வெற்றியின் இரு கைகளில் தமிழ் மற்றும் தவமலர் இருக்க ஆராதனா கையில் தவநிலா இருக்க வாசலில் நிற்க வைத்து லட்சுமி அம்மா ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள்.
      
                   சுபம்....................... இப்படி போட்டுட்டு போயிடலாம் என்று தான் இருந்தேன்... இருங்க ஒண்ணே ஒன்னு பாக்கி... இரவில் எல்லோரையும் உறங்க வைத்து அவர்களின் மெத்தையில் படுக்க வைத்து ஆராதனா வெற்றி தோளில் சாயா... லேப்டாப் மடித்து வைத்து ஆராதனா பக்கம் பார்வை திருப்பி அவளை நெஞ்சோடு சேர்க்க
       ''என்ன மேடம் ஏதோ எப்பவும் கேட்கற கேள்வி கேட்கற தோரணையில் வந்து இருக்கற மாதிரி இருக்கு...'' என்றே உதட்டில் கை வைக்க
      ''ஹ்ம்ம் ஆமா...''
     ''அடிப்பாவி இன்னும் கேள்வி தீர்ந்தபாடு இல்லையா...? சரி கேளு....''
     ''அது என்ன உங்க பையன் பொண்ணுகளுக்கு மட்டும் தமிழ் பேர் வச்சி இருக்கீங்க... என்னை மட்டும் ஜெஸில் என்று கூப்பிடறீங்க....?'' என்றே கேட்க
       ''ஹ்ம்ம் அது அப்படி தான்.. எனக்கு தமிழ் பெயர் பிடிக்கும் டி அதான் ஆனா உன் பெயருக்கு நான் ஏற்கனவே விளக்கம் சொல்லிட்டேன் அதனால இப்போ விளக்கு மட்டும் அணைச்சுட்டு அப்பறம் பதில் சொல்றேன்...'' என்றே ஆராதனாவை நெருங்க
       ''ப்பா எங்களுக்கு தூக்கம் வரலை ஒரு கதை சொல்லுங்க...'' என்றே தமிழ் வந்து நிற்க.. பின்னாடியே தவமலர் வந்து வெற்றி மடியில் ஏறி கொண்டாள்.
ஆராதனா கள்ள சிரிப்பு சிரிக்க
       ''சிரிக்காத ஜெஸில்... என் நிலைமை அப்படி...பட்டு குட்டி உங்களுக்கு கதை சொல்லலை டிவியில் காட்டறேன்'' என்றே எண்சான்ட்டெட்(ENCHANTED) கதையா DVD யில் போட்டுவிட்டு எல்லோரும் சேர்ந்து பார்க்க துவங்கினார்கள்.
                            நடுவில் நடுவில் அவன் தோளில் மற்றொரு குழந்தையாக அவனின் ஜெஸில் தொத்தி கொண்டாள்.
                                                   
                                                      🍓👩 ..............சுபம்........🍓👩


                                                                                                           -பிரவீணா தங்கராஜ்

              உங்கள் கருத்துக்களை வழங்கி நிறை குறை கூறுங்க. நன்றி.

 

Comments

  1. Semma story sisy congrats. மேலும் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...