ஸ்டாபெர்ரி பெண்ணே - 9

 🍓9       
                     அதிகாலை எழுந்து பார்க்கும் பொழுது தன்னவளை அணைத்து உறங்கியது கண்டு வேகமாக பதறி எழுந்திட அந்த பதட்டத்தில் ஆராதனா உறக்கம் கலந்து இமை திறந்தாள்.
      ''சாரி சாரி ஜெஸில்.....'' என்றே சொல்லியவனின் பேச்சை கேட்காமல்
      ''முதலில் இங்க இருந்து வெளியே போங்க செல்வா'' என்றே ஆராதனா சொல்ல அவள் தன் மீது கோவத்தில் இருக்கின்றாள் என்றே எண்ணி மீண்டும்
       ''சாரி ஜெஸில் நேற்று கையை பிரித்து வெளியே போக தான் நினைச்சேன் நீ வலியில் என் கையை அதிகமா அழுத்தி பிடிச்சுக்கிட்டு அதனால் தான் போகலை இங்கயே...'' என்றவனின் விளக்கம் கேட்டும்
       ''ஐயோ செல்வா என் டிரஸ் எல்லாம் ஸ்பாயில் ஆகி இருக்கு அதனால சொன்னேன் போங்க வெளியே எனக்கு இப்போ வயிறு வலி இல்லை கொஞ்ச நேரத்தில் வந்திடுவேன்'' என்றே சொல்ல வெற்றி வேகமாக வெளியேறினான்.
          ஆராதனா எழுந்து குளித்து தனது மெத்தையின் கவரை மாற்றி பின்னரே வெளியே வந்தாள். தான் வெற்றியை எப்படி அருகே இருக்க விட்டோம். அதுவும் இந்த நேரத்தில்.. என்றே ஆராதனா சிந்திக்க அதே சிந்தனை தான் வெற்றி மனதிலும் ஓடியது.
         உதய் ஆராதனா கையை பிடிக்க போனாலே மறுத்துவிடுவா... என் கையை பிடிச்சுகிட்டா அவளின் அறையிலே என்னை அணைச்சுக்கிட்டு எப்படி படுக்க செய்தா? உதய்யை விட என் மேல அவளுக்கு காதல் வந்து இருக்குமோ? என்றே எண்ணி மகிழ ஆராதனாவும் அதே போல தான் எண்ணி மகிழ்ந்தாள்.
        எனக்கு வயிறு வலி ன்றதும் எப்படி துடிச்சார். எனக்கு ஒன்று என்றதும் அவர் கலங்கி போனார்... அப்போ வெற்றி என்னை உயிராக உயிரா காதலிக்கிறார் அப்படி தானே? அப்படி இல்லை என்றாலும் நான் வெற்றியை காதலிக்கறேன் அது உண்மை. இப்போ எப்படி அவரிடம் சொல்வது? அவருக்கு ஏற்கனவே ஒரு காதலி இருப்பாங்களா? அவர் என்கிட்ட எதையும் சொல்ல மாட்டேன்கிறார். அப்போ எனக்கு எப்படி பழைய நினைவு வரும் முதலில் எனக்கு பழைய நினைவு வரணும் அதுக்கு நான் இங்க இருந்து வெளியே சுற்றி பார்க்கணும்.
              இருவருமே யோசனையில் இருக்க பேச மறந்து போனர்கள். சாப்பிடும் பொழுது........
      ''செல்வா எனக்கு வெளி உலகம் பார்க்கணும் என்னை...''
     ''ஜெஸில் உனக்கு உடல்நிலை சரியானதும் கூப்பிட்டுக்கிட்டு போறேன்'' என்றே உணவை விழுங்க அங்கே அதிக நேரம் இருக்காமல் ஓடினான்.
      ஆராதனா இங்கும் அங்கும் அலைந்து தீவிரமாக யோசித்தாள். முன்பே தான் செல்வாவை விரும்பி இருப்பேனோ? இல்லை என்றால் அவர் இப்படி எனக்காக உருகுவாரா? இல்லை என்றால் அவர் என்னை விரும்பி இருப்பார் அதனால் கூட என்னை கண்ணும் கருத்தாகவும் பார்த்து கொண்டு இருக்கலாம் எதுவா இருந்தா என்ன அவரிடம் என் காதலை சொல்ல நேரம் பார்ப்போம் என்றே மதியம் சாப்பிட்டு உறங்கினாள்.
                 மாலையில் வந்து அவளின் உடல் நிலை கேட்டு சாப்பிட்டு சென்றான். வாரங்கள் செல்ல செல்ல ஆராதனாவிடம் இருந்து விலகி சென்றான் வெற்றி. அவளுக்கு தனது கடந்த காலம் நினைவு வந்தால் இப்பொழுது நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் கூட அப்படியே இருக்கும் என்று டாக்டர் சொல்ல தான் உரிமையை எடுக்க நினைவு வந்து அவள் தன்னை தவறாக நினைக்க வாய்ப்பு இருக்கு என்றே தள்ளி நின்றான்.
                இந்த இடைவெளி ஆராதனாவிற்கு மனம் வலிக்க செய்தது. ஒரு வாரம் செல்ல ஆராதனாவிற்கு அவனின் செய்கை கொல்ல அவளாகவே அவனிடம் கேட்க செய்தாள்.
      ''செல்வா உங்களிடம் ஏதாவது நான் தவறா பேசிட்டேனா? இல்லை எல்லை மீறி நடந்துக்கிட்டேனா? ஏன் இப்படி விலகி நடக்கறீங்க? நான் கேள்வி கேட்டு தொல்லை செய்யறேன் என்று இப்படி மாறிட்டீங்களா?''
      ''என்ன ஜெஸில் இப்படி பேசற? அதெல்லாம் இல்லை... கொஞ்சம் வேலை அதிகம்''
      ''பொய் சொல்லாதீங்க செல்வா சுந்தர் கூட தினமும் நான் போனில் உங்களை விசாரிப்பேன் நீங்க முன்னை விட இப்போ வேலைய குறைச்சுக்கிட்டிங்க என்றே சொல்றார்...''
        ''அவனுக்கு என்ன தெரியும் ஒர்க் ப்ரெஸ்ஸர் எனக்கு தான்.... இப்போ இல்லை.... நீ என்ன பேசணும் பேசு கேட்கறேன் இல்லையா பதில் சொல்றேன்''
        ''இல்லை நான் எதுவும் கேட்க மாட்டேன்...ஆனா என்னை வெளியே கூட்டிட்டு போறிங்களா? இல்லை உங்களுக்கு ஒர்க் அதிகமா இருந்தா நான் மட்டுமாவது போகவா?'' என்றே கேட்க நினைவு தெரிந்து அவள் தன்னை என்ன நினைத்தாலும் பரவாயில்லை இப்பொழுது இருக்கும் ஜெஸில் மனம் வாடக்கூடாது என்றே எண்ணினான்.  அவனே
       ''உனக்கு உடம்பு நல்லா ஆனதும் கூப்பிட்டு போறேன் ஜெஸில்''
      ''ஐயோ செல்வா எனக்கு அது போன வாரமே சரியாகிடுச்சு....'' என்றே சொல்லி நாக்கை கடித்து முடிக்க
       ''சரி நாளைக்கு வெளியே முழுதும் போகலாம் ஓகே வா?'' என்றே சொல்லி உறங்க சென்றான்.
       உதய்-க்கு அதே மாதத்தில் தனது தாயின் வற்புறுத்தலில் அவர்களின் சொந்த உறவில் பெண் பார்த்து முடிக்க முடிவு எடுத்து இருந்தார்கள். ஆராதனா பாட்டிக்கு அவள் வேறொரு இடத்தில வேளைக்கு சென்றதாகவும் தன்னை திருமணம் செய்ய மறுத்து விட்டதாகவும் சொல்லி விட்டான்.
           ஆராதனா ஏற்கனவே வெளியூருக்கு சென்று வேலை பார்ப்பதாக சொல்லி இருந்ததால் அவளை தேடவில்லை. போனும் புது இடம் சென்றதும் அனுப்புவதாக சொன்னால் அனுப்பவில்லை என்றே சொல்லி விட்டான்.
      ஆராதனாவை துரத்தி துரத்தி விரும்பியது உதய் தான் அதனால் அவள் உதயை மறுத்தது யாருக்கும் பெரிதாக தோன்றவில்லை. உதய் இப்படி எல்லோரிடமும் சொல்லி விட்டாலும் அதனை மற்றவர்கள் ஏற்றுக் கொண்டாலும் உதய் மனம் உள்ளுக்குள் வலிக்கவே செய்தது.
                     அவனுக்கு ஆராதனாவை மறக்க கொஞ்சம் கடினமாக தான் இருந்தது. அவன் ஒன்றும் கழட்டி விட எண்ணி காதலிக்க வில்லை உண்மையான காதலை தான் அவளிடம் செலுத்தினான். ஆராதனா கூட அவனின் கனிவை.. பழகும் தன்மை... கண்டே சம்மதம் தெரிவித்து இருந்தாள். ஆனால் பார்த்த நொடி உதய் ஆராதனா மேலே எழுந்த காதல் போல இல்லை பழக பழக அவனின் மீது ஏற்பட்ட நல்ல குணத்தில் தோன்றியது. சொல்ல போனால் ஆராதனா பாட்டி காமாட்சி திருமணம் என்றே சொல்லி ஆரம்பிக்க உதய் காதல் சொல்லும் பொழுது அதனை மறுக்க அவளுக்கு தோன்றவில்லை.
          தன்னை முதல் பார்வையிலே நினைவு தப்பிய வேலையிலும் முதல் சந்திப்பில் வெற்றி செல்வன் மனதை தாக்குவான் என்றே அறிந்து இருந்தால் ஆராதனா உதய் காதலை ஏற்றுக் கொண்டு இருக்க செய்வாளா என்பதே சந்தேகம் தான். அப்படி காதலை கண்ணில் கொண்டு நிறுத்தி இருந்தான் வெற்றி செல்வன.
             இருவருமே காலையில் இருந்தே கிளம்பி சென்றார்கள். முதலில் ஒரு தீம் பார்க் சென்றிட அங்கு சிறு குழந்தை போல எல்லா ராட்டினத்திலும் ஏறி மகிழ்ந்தாள்.
          பின்னர் அங்கே மதிய உணவும் உண்டு மாலையில் திரும்ப வழியில் எல்லா தெருவிலும் பீச் சந்திப்பு இருக்க கண்டவள் காரை நிறுத்த சொன்னாள். உதய் ஆராதனா பெரும்பாலும் சென்ற இடம் பீச் என்பதால் வெற்றியோ அங்கே நிறுத்த மறுத்தான் ஜெஸில் முகம் வாட என்ன ஆனாலும் சரி என்றே நிறுத்தினான். அதில் மகிழ்ந்தவள்
      ''தேங்க்ஸ் செல்வா சோ ஸ்வீட்'' என்றே கன்னத்தில் கிள்ளி சொல்ல அவனுக்கு தான் இதயம் பறக்கவும் செய்தன அதே நேரத்தில் சிறகு இல்லாமல் இருப்பதாகவும் தோன்றின.
           அலையில் சிறிது நேரம் விளையாடியவள் அசதியில் அமர கொஞ்சம் போல இமை மூடினாள். அந்த இமையில் ஆராதனா அருகே ஒரு ஆடவன் அவளின் உயரம் கொண்டு சற்றே தள்ளி நின்றே பேசியபடி வருவதை நிழலாக கண்டாள். அந்த முகம் செல்வாவாக எண்ணி பார்க்க மூளை மறுத்தது. செல்வாவின் உயரத்தின் அளவை விட குறைவு தனது உயரத்தின் அளவை கொண்டு இருக்க குழம்பி போனாள் ஆராதனா.
          அதையும் மீறி யோசிக்க யோசிக்க தலை வலிக்க செய்தது போல தோன்ற இமையை திறந்தாள் எதிரே புன்னகையோடு ஐஸ் கிரீம் கையில் வைத்து கொண்டு வெற்றி நின்று கொண்டு இருந்தான்.
       ''செல்வா எனக்கு சின்னதா ஒரு நிகழ்வு வருது ஆனா முகம் சரியா தெரிய மாட்டேங்குது''
       ''என்ன நிகழ்வு?'' என்றே கோன் சுற்றி உள்ள பேப்பரை பிரிக்க செய்ய
       ''அது வந்து செல்வா இதே போல இதுக்கு முன் நானும் நீயும் கடலில் கால் வைத்து நடந்து வந்து இருக்கோமா? ஏன்னா அப்படி தான் மங்களா நிகழ்வு தெரியுது''
       ''அதுல முகம் தெரியலையா ஜெஸில்'' என்றான் நொடியில் பூத்த வியர்வை துடைத்தபடி.... 

தொடரும். 

பிரவீணா தங்கராஜ். 

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு