ஸ்டாபெர்ரி பெண்ணே -13

 🍓13
              காலையில் ஜாக்கிங் முடிந்து வந்தவன் நேராக குளித்து முடித்து ஆபிஸ் கிளம்பி வந்தான்.
      அதே நேரம் ஆராதனாவும் வந்து சேர்ந்தாள்.
         ''செல்வா... ?''
        ''கேளு ஜெஸில்'' என்றே சுருதி குறைந்தே கேட்க
        ''ஹ்ம்ம் நான் எதோ கேட்க போறேன்னு தெரியுதா?''
       ''அதான் ஒரு நாளைக்கு ஒரு கேள்வி பதில் பத்து கேட்டு என்னை இம்ஸை படுத்தறியே...'' என்றான் புன்னகையோடு அதில் சலிப்பு இல்லை. 
       ''நான் இம்ஸையா.... அப்பறம் கவனிச்சுக்கறேன்.... நீங்க என்ன கம்பெனி நடத்தறீங்க...?''
      அதுவா... லெதர் பேக்டரி... மில்க் ப்ரோடுக்ட் எக்ஸ்போர்ட் செய்யறது... அப்பறம் சில்க் திரேட்ஸ் என்று மூணு நாலு கம்பெனி...ஏன் உனக்கு வேலை வேணுமா? ஆனா நீ கம்ப்யூட்டர் தானே... ஹ்ம்ம் ஓகே ஒர்க் கம்ப்யூட்டரில் பீட் பண்ணி தர்றியா ?'' என்றான்
     ''இல்லை இப்போ எனக்கு ஒர்க் பண்ற ஐடியா இல்லை செல்வா... எனக்கு என்னை பற்றி தெரியணும்.... இல்லையா.. நம்ம... ஹ்ம்ம் ஒண்ணுமில்லை''
      ''சரி கிளம்பறேன் ஜெஸில் மாத்திரையை எல்லாம் நேரத்துக்கு சாப்பிடு ஓகே பை'' என்றே கிளம்பினான்.
      அவன் சென்ற பின்னர் வேகமாக கிளம்பினாள். ஐயோ பலூன் வாங்கணும் ரோஸ் வாங்கணும் அப்பறம் கலர் பேப்பர் வாங்கணும் அப்பறம் எப்படி மேல ரெடி பண்ணி வைக்கணும்... நிறைய ஒர்க் இருக்கு... முதலில் போய் வாங்கி கொண்டு வருவோம்...என்றே சிறு குழந்தை போல ஓடினாள்.
            சாப்பிடும் நேரம் சரியாக வந்து அமர்ந்தாள். எல்லாம் அப்படியே வைத்து விட்டு சாப்பிட்டாள். பின்னர் மாத்திரை எப்பொழுதும் போல் விழுங்க அரை மணி நேரத்தில் அவளை அறியாமல் உறங்க செய்தாள்.
           மாலை நான்கு மணிக்கு எழுந்தவள் காபி லட்சுமி அம்மாவிடம் வாங்கி பருகி முடித்து வெற்றி அறைக்கு சென்று கதவை திறந்து அவன் மெத்தையின் அருகே வரும் நேரம் கொட்டும் படி செட் செய்து பார்த்தாள்.
          எல்லாம் சரியாக செய்து முடித்தவள் கீழே வந்து அமர்ந்தாள்.
       எப்போ வருவான் வெற்றி என்றே இருக்க அவளின் அறையில் சென்று தன்னை அலங்கரிக்க செய்தாள். அலங்கரித்து முடித்தும் அவன் வரும் அறிகுறி இல்லாமல் போக  அன்று ஸெல்ப்பில் வைத்த போனை எடுத்தாள்.
      அவள் போனில் ஒரு போட்டோ கூட இருக்கமலா போகும் என்றே யோசித்தவள் ஹாலில் வந்து அமர்ந்து 'ரீஸ்டோர் ஆப்'  டவுன்லோட் செய்து முடித்து ஏதேனும் புகைப்படம் வருமா என்றே பார்க்க அதில் அவளின் புகைப்படம் வர துவங்கியது.
           ஒவ்வொன்றாக பார்க்க பார்க்க கண்கள் பெரிதானாது... அவள் முகம் மலர்ந்து ஆபிஸ் எல்லோரிடமும் செலஃபீ எடுத்த புகைப்படம் அவள் பாட்டி கூட எடுத்த புகைப்படம் என்றே வர அவர்களின் முகம் எல்லாம் ஒவ்வொன்றாய் நினைவு வந்தன.
            அடுத்து பார்த்த போட்டோவில் அதிர்ந்தாள். ஆம் உதய் போட்டோ தான். அதுவும் ஆராதனாவை காதலோடு பார்க்கும் போட்டோ... அதனை பார்த்ததும் அவளின் கடந்த கால நிகழ்வுகள் எல்லாம் வந்து போனது. தலையில் ஏதோ பிரளயமே தோன்றி வெடிக்க தலையில் பிடித்து அமர்ந்தாள். அவளின் முன் இதுக்கு முன் நடந்த நிகழ்வும் அதன் பின் வெற்றியோடு தான் நடந்து கொண்ட நிகழ்வும் எல்லாம் தோன்றி மறைந்தது.
              அதே நேரத்தில் வெற்றி செல்வன் வரும் காலடி ஓசை கேட்க அவளையும் அறியாமல் திரும்பினாள். அவன் அருகே வந்து
     ''என்ன ஜெஸில்... என்ன பண்ணிட்டு இருக்க?'' என்றான் எப்பொழுதும் போல மென்மையாக... அவளோ எழுந்து நின்று
      ''ஆராதனா..... என் பேர் ஆராதனா... ஜெஸில் இல்லை....'' என்றே கத்தி சொல்லி அழுதபடி அவனை பார்க்க
       ''என்னாச்சு ஜெஸில்... எதுக்கு அழுவுற... நான் உன்னை ஜெஸில் என்று தானே கூப்பிடுவேன்... மற்றவர்களுக்கு தான் ஆராதனா எல்லாம்....'' என்றே அருகே வர அவளோ இரண்டடி பின் நகர்ந்தாள்.
      வெற்றிக்கு அவள் பின்னடைவதே ஏதோ புரிய துவங்கியது. அவளை உற்று நோக்கினான். கையில் போன் கண்ணில் கண்ணீர் என்றதும் அவளுக்கு நினைவு வந்துடுச்சா....? எப்படி...? ஒரு போட்டோ கூட இல்லாமல் டெலிட் பண்ணி தானே கொடுத்தேன்... என்றே யோசிக்க
       ''என்னடா நாம ஒரு போட்டோ கூட அதுல இல்லாமல் டெலீட் பண்ணி கொடுத்தோமே அப்பறம் எப்படி? என்று யோசிக்கறீங்களா வெற்றி செல்வன்'' என்றாள்.
              வெற்றி கட்டிய மனக்கோட்டை எல்லாம் மணற்கோட்டையாக உடைந்தது. செல்வா செல்வா என்று குழந்தவள் வெற்றி செல்வன் என்கின்றாளே. 
     ''ஜெஸில்.. உனக்கு நினைவு திரும்பிடுச்சா...?'' என்றே மெதுவாக கேட்டான்.
     ''ஆராதனா... ஜெஸில் இல்லை... உதய்-கு ஆரு போதுமா... எனக்கு நினைவு திரும்பியதற்கு அடையாளம்.... யார் நீங்க...? உங்களை நான் இதுக்கு முன்ன பார்த்ததே இல்லை... அப்பறம் எப்படி நான் ஹாஸ்பிடலில் கண் முழிச்ச பொழுது நீங்க தான் இருந்திங்க... உதய் இல்லை... உங்க சட்டை எல்லாம் ரத்தம் இருந்துச்சு உங்க தலையில் அடிபட்டு இருந்துச்சு... என்னை எதுக்கு உங்களுக்கு தெரிந்த பெண் என்று இங்க கூட்டிட்டு வந்திங்க.... இவ்ளோ நாள் உதய் ஏன் என்னை தேடலை... அவனை என்ன செய்த... சொல்லு...'' என்றே சட்டை பிடித்து கத்த துவங்க... லட்சுமி அம்மா எட்டி பார்க்க வெற்றி இமையை மூடினான்.
              இத்தனை வருடம் இருந்த அனுபவமோ வீட்டில் ஏதோ பிரச்சனை என்றே உணர்ந்து வேகமாக கூடை எடுத்துக் கொண்டு காய்கறி வாங்க செல்வதாக கிளப்பி விட்டார்கள்.
        ''சொல்லுங்க... எனக்கு இன்றே சொல்லி முடிங்க...'' என்றே வீடே அதிரும் வகையில் கத்த துவங்கினாள் ஆராதனா.
      இமையை மெல்ல திறந்தவன் அவளின் கண்களில் கலந்து சொல்ல துவங்கினான்.
         ''நான் ஆபிஸ் விஷயமா ஊட்டி வந்த அப்போ உன்னை பார்த்தேன். நீ அப்போ டூர் வந்த... எனக்கு அப்போ பார்த்த பொழுது என் மனசில் கல்வெட்டாய் மாறி போன....
              கண்ணை மூடினா நீ இமையை திறந்தா நீ... சுவரெங்கும் நீ என்னை சுற்றி நீ... ஏன் என் மெத்தையிலும் நீ தான் தெரிந்த... என் உணர்வை நான் ஆண் என்ற கர்வத்தை என் காதலை... காமத்தை... தூண்டியது நீ... அதனால உன்னை பற்றி தெரிந்துக்க ஆசைப்பட்டேன்.
          சுந்தர் கூப்பிட்டு ஒரு டிடெக்ட்வ் ஏஜென்சி மூலமா உன்னை பற்றி தெரிஞ்சுக்க ஏற்பாடு செய்தேன்.
              நீ வந்த ட்ராவில்ஸ் மூலமா எந்த ஊர் எந்த காலேஜ் என்று தெரிந்தது. காலேஜில் ஒருத்தர் மூலமா உன் பயோடேட்டா வாங்கினேன். உன் அம்மா அப்பா சொந்த ஊர்... படிப்பு என்றே புரிஞ்சது. படிப்பு முடிந்த கையோட நீ வேலை செய்த.... அந்த இடம்... உன்னை சுற்றி ப்ரெண்ட்ஸ் உன்கூட யார் யார் இருக்காங்க என்று எல்லாம் எல்லாம் தெரிந்து கொண்டேன்.
            ரொம்ப நாள் உன்னை தூரத்திலே இருந்து பார்த்து ரசித்து காதலை வளர்த்தேன்.
          ஒரு நாள் என் காதலை சொல்ல வந்தேன்... அப்போ தான் உதய் வந்து நின்றான். எப்பவும் வீடு விட்டா ஆபிஸ் ஆபிஸ் விட்டா வீடு என்றே போன நீ அவனை பார்க்க பீச் வந்து இருந்த... அப்போ தான் தெரிந்தது.... நீயும் அவனும் விரும்பறீங்க என்று...
        உதய் ஆறு மாசமா ஊரில் இல்லை என்பதால டிடெக்டீட் ஏஜென்சிக்கு இதை பற்றி தெரிலை... எனக்கும் தெரிய படுத்தவில்லை...
         அவன் மட்டும் உன்னை விரும்பி இருந்தா நான் உன்னை இந்த நேரம் திருமணமே பண்ணி இருப்பேன். ஆனா நீயும் அவனை விரும்பின... நீ விரும்பி கிடைக்காமல் உன் மனம் வாடி போனா என்னால தாங்க முடியாது... என் ஜெஸில் ஆசைப்பட்ட வாழ்க்கை அவளுக்கு கிடைக்கணும் என்றே விலகிப் போனேன்.
        தூரத்தில் இருந்தே உன்னை பார்த்தேன். உன் திருமணம் ஆகும் வரை பார்க்கும் உரிமை இருக்கு தானே...?!
         அப்போ தான் அன்னிக்கும் பார்க்க வந்தேன். நீயும் உதையும் பேசி முடித்து நடந்து போனீங்க அப்போ ஒருத்தன் உதய்ய தள்ளி விட்டு உன்னை காரில் தள்ளினான். உனக்கு காரில் தலையில இடிச்சுது அவன் கர்சீப் வைத்து அழுத்தியதும் நீ மயங்கின மறுபடியும் காரினுள் தள்ளினான்.
            நீ மயங்கிட்ட... நான் கார் எடுத்து கொண்டு உன்னை தொடர்ந்தேன். உன் உதய் கூட தான். கொஞ்ச தூரம் போனதும் ஒரு இடத்தில... கார் நின்றுடுச்சு. அ...ங்க... ஒரு க... இல்லை உன்னை கட்டி வச்சி இருந்தாங்க உன்னை அவிழ்க்க போனப்ப என்னை அடிச்சாங்க அதுல தான் என் தலையில் அடி பட்டது. அப்பறம் ரத்தம் சட்டையெல்லாம்... நானும் உதையும் உன்னை அங்க இருந்து கூட்டிட்டு ஹாஸ்பிடல் வந்து சேர்த்தோம்.
         டாக்டர் பார்த்து முடிச்சாங்க அடுத்த நாள் தான் உனக்கு நினைவு எல்லாம் போயிடுச்சு என்றே சொன்னார். நீ யாருனு உனக்கே தெரிலை... அதனால இங்க கூட்டிட்டு வந்தேன்....'' என்றான்.
     ''உதய்யை என்ன செய்த?'' என்றாள். ஒரு விரக்தி சிரிப்போடு ''ஒன்னும் செய்யலை...'' என்றான் வெற்றி. இத்தனை நாள் தான் அவளிடம் நடந்ததை வைத்து சின்ன நம்பிக்கை கூடயின்றி கேட்பவலை என்ன செய்ய? 
      ''அப்போ ஏன் அவன் என்னை கூட்டிட்டு போகலை?''
     'அதை... நீ அவனிடம் தான் கேட்கணும்...'' என்றே சொல்லி முடிக்க
      ''கேட்பேன்... கண்டிப்பா கேட்பேன்...'' என்றே விருட்டென்று கிளம்பினாள்.
      ''ஜெஸில்.....'' என்றே வெற்றியின் குரல் கேட்டும் நிற்காமல் போனாள். அவனோ தொப்பென அமர்ந்தான்.
           நினைவு தெரிந்ததும் அவனை தேடி போயிட்ட ஜெஸில் நான் இந்த இரெண்டு மாதமா உன் மீது செலுத்திய அன்பு கொஞ்சம் கூட உண்மை என்று தோணலையா.........? என்றே அப்படியே அமர்ந்தான். பின்னர் உதய் அவளை பார்த்தால் என்ன நடக்கும்? அவன் அவளிடம் எல்லாம் சொல்லிடுவானா...? ஐயோ கடவுளே..... ஜெஸில் எல்லாம் தெரிந்தால் உயிரோட இருப்பாளா? நான் என்ன செய்வேன். என்னை அவள் என் பக்கம் நியாயத்தை கூட சொல்ல விடலை........... அவளிடம் நான் ஏதாவது தவறாக நடந்தேனா? இல்லையே... பிறகு ஏன் என் பேச்சை கூட கேட்கவில்லை? என்றே இடிந்து அமர்ந்தான்.

-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ்.

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1