ஸ்டாபெர்ரி பெண்ணே -2
🍓 2
வெற்றி மனம் 'ஆராதனா... ஆராதனா...' என்றே துடிக்க பொறுத்துக் கொண்டு எழ
முயன்றான். இம்முறை வேறு ஒருவன் வந்து கன்னத்தில் அறைந்திட மயக்கம் மருந்தின் வினையால் கீழே விழுந்தான்
வெற்றி. முழுதும் சுவாசிக்கவில்லை என்றாலும் அதன் தன்மை காட்டும் தானே. இம்முறை ஏற்கனவே அறைந்தவன் இம்முறை ஆராதனாவை நெருங்கி இருந்தான். உயிர்
போகும் அளவிற்கு துடித்து கொண்டு இருந்தது வெற்றி மட்டுமே ஆராதனா சுய
நினைவு இன்றி மயக்கத்தின் பிடியில் பிணம் போல கிடந்தாள்.
கதவு திறந்து உதய் வரும் நேரம்
''டேய் இவன் இங்க இருக்கான் அப்போ இது யாரு? இவனை தானே காயப்படுத்த
சொன்னாங்க... போச்சு ஏற்கனவே சும்மா மிரட்ட சொன்னான் இவளை பார்த்தும்
சும்மா விட முடியுமா என்று தப்பு பண்ணிட்டோம் இவனின் காதலியை தானே
பயமுறுத்த சொன்னான்'' என்றே ஒருவனின் கேள்வி மற்றவன் பதில் கூறும் முன்னே
உதய் அவர்களில் ஒருவனை அடிக்க செய்ய அவன் விழுந்த வேகம் தண்ணிர் ஜக்
உடைந்து கீழே இருக்கும் வெற்றி மேலே தெளிக்க வெற்றி எழுந்தான். தனது முன்னே
ஆராதனா இருக்க அவளை கைகளில் ஏந்தினான். உதய் இருவரையும் உள்ளே வைத்து
பூட்டி விட்டு ஆராதனா பின்னால் ஓடி வந்தான்.
இதுவரை முகம் பார்க்காமல் இருந்த உதய் ஆராதனாவை தூக்கி கொண்டு வரும்
பொழுதே கவனித்தான். முகமெங்கும் ரத்த சிவப்பு கொண்டு யாரென்று தெரியாத
உருவம். இருந்தும் ஆராதனாவை வாங்க மனமின்றி வந்த காரில் அவளை கிடத்தி அருகே
இருந்த ஹாஸ்பிடலை தாண்டி கார் செல்ல உதய் மெல்ல பேச்சை ஆரம்பித்தான்.
''ஹாஸ்பிடல் போகலையா? எந்த பக்கம் போறிங்க?'' என்றே கேட்க
''அந்த ஹாஸ்பிடல் ட்ரீட் மென்ட் பார்க்கும் முன் போலீஸ்
கூப்பிடுவாங்க. ஆராதனாவுக்கு ட்ரீட் மென்ட் உடனே பார்க்கணும் எனக்கு தெரிந்த
ஹாஸ்பிடல் போறேன் கொஞ்சம் தூரம் தான்'' என்றே சொல்லியதும் உதய்-க்கு
அதுவும் சரியாக தோன்றியது.
போனில் சுந்தருக்கு கால் செய்து அந்த ஹாஸ்பிடல் உடனே டாக்டர் வர சொல்லிடு என்றே தெரிவித்து முடித்தான். போனதும் ட்ரீட்மென்ட் நடந்தது.
மூன்று மணி நேரம் சிகிச்சை முடிய வெற்றிக்கு தலையில் கட்டுக்கள் போட்டு அவனுக்கும் சிகிச்சை எடுக்கப்பட்டது.
போனில் சுந்தரை அழைத்து அவனிடம் ஒரு வேலையை ஒப்படைத்தான்.
மணிகள் நகர டாக்டர் வெளியே வந்து பேச துவங்கினார்.
''நீங்க அந்த பெண்ணுக்கு என்ன வேணும்?'' என்றே அப்பெண்மணி கேட்க
எனக்கு அவள் உயிர் டாக்டர் என்றே சொல்ல வாயை எடுத்தவனின் பின்னால் இருந்து
உதய்
''அவளை நான் கல்யாணம் செய்துக்க போறவன் டாக்டர். என்கிட்ட சொல்லுங்க'' என்றே முன் வர அமைதியாக வெற்றி பின்னடைந்தான்.
''ஓகே அவங்க வீட்டில் ரத்த பந்தம் யாராவது அதவாது அப்பா அம்மா?''
''அப்பா அம்மா அவளின் பள்ளி காலத்தில் இறந்து விட்டாங்க டாக்டர்
அவளுக்கு ஒரே ஒரு பாட்டி தான். ஒரு விதத்தில் எங்களுக்கு துரத்து உறவு
இன்னும் சிக்ஸ் மந்த்ல அவளுக்கும் எனக்கும் மேரேஜ் பிக்ஸ் ஆகி இருக்கு
அவளுக்கு என்ன ஆச்சு டாக்டர்... என்கிட்ட தாராளமா சொல்லுங்க ப்ளீஸ்'' என்றே
கேட்க வெற்றிக்கு அவர் என்ன சொல்ல போகின்றார்கள் என்று அறிந்தமையால்
அமைதியாக உள்ளுக்குள் அழுது கொண்டு இருந்தான்.
''சார் முதலில் உட்காருங்க'' என்றே அமர வைத்து அவங்களை நீங்க மேரேஜ்
பண்ண போறதா சொல்றிங்க? லவ் மேரேஜ் ஆர் அரேஞ்டு மேரேஜ்?''
''லவ் மேரேஜ்''
''நீங்க அவங்களை எவ்ளோ விரும்பறீங்க?''
''இந்த உலகத்தில் அவள் என்றால் எனக்கு அவ்ளோ புடிக்கும் மேம்... என்
அம்மாகிட்ட கூட சண்டை போட்டு மேரேஜ்-க்கு ஓகே வாங்கி இருக்கேன்''
''ஹ்ம்ம் குட் அப்பறம்...''
''மேம் நீங்க அவளுக்கு என்ன ஆச்சு சொல்லுங்க ப்ளீஸ் லேட் பண்ணாதீங்க'' என்றே பதறியவன்
''அவங்களை இரண்டு பேர் மிஸ் பீஹவ் பண்ணி இருக்காங்க... அவங்க இப்போ
கன்னிப்பெண் இல்லை...'' என்றே நிறுத்த உதய்-க்கு கண்கள் அருவியாக பொழிந்தன.
வெற்றிக்கோ தான் அங்கே இருந்தும் இப்படி ஆகியதில் அந்த இருவரையும் கொலை
செய்யும் ஆத்திரத்தில் இருந்தான்.
''நல்ல வேளை அவங்களுக்கு மயக்கத்தின் வீரியத்தில் தனக்கு என்ன
நேர்ந்தது என்று கூட அந்த பொண்ணுக்கு தெரிய வாய்ப்பு இல்லை'' என்றதும்
இருவருமே நிம்மதி உணர துவங்கினார்கள்.
''அது மட்டுமில்லை... அவங்களை எதிலோ தள்ளி விட்டு இருப்பாங்க போல...
அதில் அவங்க வயிற்று பகுதி ரொம்ப தாக்கி கர்ப்பப்பை பாதிக்க பட்டு
இருக்கு... அதனால அவங்க தாய்மை அடைவது கஷ்டம். சொல்ல போன நூற்றுக்கு பத்து
சதம் தான் வாய்ப்பு இருக்கு... மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டா ஒரு வேளை
வாய்ப்பு இருக்கும். மற்ற படி அவங்க ஓகே தான்'' என்றே நிறுத்த தனது உலகம்
எல்லாம் அழிந்தது போல உணர்ந்தான் உதய்.
வெற்றியோ என் ஆராதனா உயிர் கிடைச்சு இருக்கு அது போதும் மற்றது எதுக்கு? என்றே நிம்மதி அடைந்தான்.
வேகமாக ஒரு நர்ஸ் வந்து ''டாக்டர் அந்த பொண்ணு நான் யார் எங்க
இருக்கேன்? எனக்கு எப்படி அடி பட்டுடுச்சு என்று கேள்வி மேல கேள்வி
கேட்கறாங்க? என்ன செய்ய?' என்றே சொல்ல டாக்டர் கொஞ்சம் இருங்க அவர்களை செக்
பண்ணிட்டு வருகின்றேன்'' என்றே சொல்லி வேகமாக ஓடினார்.
''நான் யார்? எனக்கு என்ன ஆச்சு? எது கேட்டாலும் இந்த நர்ஸ் முழிச்சு முழிச்சு பார்க்குறாங்க'' என்றே சொல்ல டாக்டரோ
''ரிலாக்ஸ் ம்மா ஒன்னுமில்லை சின்னதா அடிப்பட்டு விழுந்துவிட்ட
ஒன்னுமில்லை'' என்றே ஒரு ஊசியினை செலுத்த மயங்கி சரிந்தாள் ஆராதனா.
மடமடவென மீண்டும் சில டெஸ்ட் எடுக்கபட்டது.
கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்த டாக்டர் உதயை பார்த்து
''அவங்க தலையில் அடிபட்டதால் பழசை மறந்து இருக்காங்க... அவங்களுக்கு
தான் யாரு என்றே தெரிலை... மருந்து கொடுக்கறேன்.. பழைய நினைவுகள்
வருவதற்கு... அவங்களை அவங்க விரும்பும் இடம் அழைத்து செல்லுங்க... ஏற்கனவே
பழகிய இடம் கூப்பிட்டு போனளே பெட்டர்... அப்பறம் நீங்களா எதையும் சொல்லி
நினைவு படுத்தாதீங்க... அவங்க கன்னிப்பெண் இல்லை என்பதை நீங்க சொல்வதாக
இருந்தா சொல்லுங்க இல்லையா விட்டுடுங்க. என்னை பொறுத்தவரை அவங்களுக்கு
நடந்ததை எதையும் சொல்லிடாதீங்க.. ஒரு பெண்ணா சொல்றேன்'' என்றே விலகி
நடந்தார்கள்.
இப்பொழுது முடிவு எடுக்கும் இடத்தில் உதய் இருந்தான். வெற்றிக்கு
இதில் என்ன செய்வது? அவளிடம் எதையும் கூறாமல் அவளை மணந்து சந்தோசமாக
பார்த்து கொள்ள வேண்டும்... அது போதுமே.. ஆனால் இந்த முடிவு
எடுக்க வேண்டியது தான் அல்ல உதய்.
உதய் என்ன முடிவு எடுப்பான் என்றே வெற்றி அவனேயே பார்க்க உதையோ
கண்கள் நீராக பொழிந்தது. தனது கண்களை தொட்டு பார்த்தான் இதுவரை இருந்த
அழுகை ஆராதனா நலம் என்றதால் நின்று இருந்தது. பின்னர் எதற்கு உதய்
அழுகிறான்? என்றே யோசிக்க ஒரு வேளை அவள் கன்னி பெண் அல்ல என்பதால? இல்லை
குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத சுழலா? அல்லது உதையை அவளுக்கு நினைவு இல்லை
என்பதலா? என்றே குழம்பியவன் உதையின் மீது கண்கள் அகலாமல் பார்க்க உதய்-க்கு
கால் வந்தன. அதில் உதய் கலைந்தான்.
''ஆஹ் அப்பா சொல்லுங்க?''
''எங்க டா இருக்க? ஆராதனா போன் பண்ணினேன் போனே எடுக்கலை... நாளைக்கு
கல்யாண சேலை எடுக்க போறதை சொல்லணும் அவ உன்கூட இருக்காளா?'' என்றே கேட்க
''இந்த கல்யாணம் நடக்காதுப்பா...'' என்றே குண்டை தூக்கி போட்டான்.
''என்னடா சொல்ற? அவளுக்காக உன் அம்மாகிட்ட சண்டை எல்லாம் போட்ட...
இப்போ இப்படி சொல்ற? என்ன ஆச்சு? ஆராதனா இருக்காளா?'' என்றே கேட்க
''ஆராதனா ஒரு விபத்தில்..... விட்டுடுங்க ப்பா அவள் இனி
கிடைக்க மாட்டாள்... உங்க மருமகள் அவள் இல்லை. அம்மா சொல்ற பெண்ணை கல்யாணம்
செய்துக்கறேன்... இனி என்கிட்ட இதை பற்றி கேட்காதீங்க'' என்றே அழுது
தீர்க்க வெற்றிக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் இப்படி பேசினான். வெற்றியால் வேடிக்கை மட்டும் pபார்க்க முடிந்தது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
ரீட் பண்ணாறவங்க இங்கேயும் கமெண்ட்ஸ் கொடுத்தா நல்லா இருக்கும். haha
Us daily um unda sis
ReplyDeleteyes daily ud
DeleteVery nice
ReplyDeleteவெற்றியைப் பார்த்து ஒரு கேள்வி, "என்ன செய்ய போகிறாய்?"
ReplyDeletehaha அதான் யோசனை பண்ணிட்டே இருக்கான். மிக்க நன்றி
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAda kadangaaraa...
ReplyDelete