ஸ்டாபெர்ரி பெண்ணே-24

   🍓24
              உதய் யோசிப்பதை அறிந்து வெற்றி நிதானமாக
     ''இங்க பாரு உதய்... என் ஜெஸிலை இப்படி செய்தது யாருனு  சொல்லு... நீ சொல்லாவிட்டாலும் என் வரவேற்பு வீடியோ பார்த்து நானே தெரிந்துப்பபேன்... நீயே சொல்லிட்டால் எனக்கு வேலை மிச்சம்''
      ''இல்லை எனக்கு பயமா இருக்கு நீங்க அவங்க கொன்றதே என்னால ஜீரணிக்க முடியலை... இதுல அவன் பேரை சொல்லி... அவனையும் நீங்க எதாவது பண்ண போக... கடைசியா பாதிக்கப்படுவது என்னவோ ஆராதனா தான்''
     ''என் பணபலத்தில் இதை எல்லாம் நானே சரி பண்ணி விடுவேன்.. எனக்கு இது பெரிய பிரச்சனையே இல்லை... யாருனு சொல்லு... அதுபோதும்''  பதிலுக்காய் குறியாக இருந்தான். 
      ''மன்னிச்சுடுங்க எனக்கு அவன் பெயர் எல்லாம் தெரியாது...'' என்றே உதய் சொல்ல
     ''உதய்... அவனை காப்பாற்ற நினைக்கறியா?'' என்றே வெற்றி குரல் கேட்டு நடுங்கி போனான்.
     ''இல்லை வெற்றி.. நிஜமாவே எனக்கு பேர் எல்லாம் தெரியாது... நீங்க வீடியோ காட்டுங்க நான் அதுல யாருனு சொல்லிடறேன்....''
            உடனே தாமதிக்காமல் வெற்றி வரவேற்பு வீடியோ பார்க்க வரவேற்பு வீடியோவை பார்க்க நியமித்த ஸ்டூடியோவுக்க சென்றனர்.
                   ஒவ்வொன்றாய் ஓட விட்டு பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
       உதய் வருகை வந்ததும் இன்னும் கூடுதலாக வெற்றி முகம் ஆர்வமாக வீடியோ பார்த்தான்.
        ''சார் சார்... இதோ இவன் தான் என்கிட்ட தகராறு செய்து போனது... என்கிட்ட பேசியது...'' என்றே சொல்ல
      ''ஜெகதீஷ்.....'' என்றே கூறியவன் கொஞ்சம் யோசிக்க துவங்கினான்.
      ''சார்..வெற்றி சார்... இவன் எப்படி பட்ட கேரக்டர்... நல்லவனா? இல்லை...?''
      ''ஹ்ம்ம் உலகத்தில் எல்லோரும் நல்லவன் தான் உதய் தனக்கு என்று வரும் பொழுது எடுக்கும் சுயநல நடவடிக்கையில் கெட்டவனா மாறிடறாங்க... என்னையே எடுத்துக்கோங்க... கண்ணன் சுப்பு இருவருக்கும் மரணத்தை கொடுத்து இருக்கேன் அவங்களை பொறுத்தவரை நான் கெட்டவன் தானே...''
      ''ஜெகதீஷ்... அப்போ கொல்ல போறிங்களா...?'' என்றான் அதிர்ச்சியின் உச்சியில்
       ''சந்தேகமே இல்லை... ஆனா இவனும் பண பலத்தில் எல்லாம் சாதிக்கறவன்...  அதான் யோசனை.. என் ஸ்கெட்ச் மிஸ் ஆச்சு என்றால் அப்பறம் அவனும் இதில் மோதுவான்... அவனுக்கு அப்பறம் ஆராதனா பற்றி விஷயம் தெரிய வாய்ப்பு வருமே என்று கொஞ்சம் கவலை...'' என்றே யோசனையில்.... மூழ்கினான்.
             அதற்குள் இருவருமே கிளம்ப செய்தார்கள். ஸ்டுடியோ எடுத்தவரிடம் ஒரு புகைப்படத்தை காட்டி ''இந்த போட்டோ இந்த ஜன்னல் அளவு வேணும்... அதையும் ரெடி பண்ணிடுங்க'' என்றே கூறி கிளம்பினான்.
        உதய் அப்படியே கிளம்ப ஆயத்தமாக ''வீட்டுக்கு வந்து சாப்பிட்டு போ உதய்...'' என்றே சொன்னதும் தயங்கியவன் பிறகு வர ஒப்பு கொண்டான்.
             வெற்றியோடு காரில் அமர்ந்து அமைதியாக வந்தான். வெற்றி காதில் ஹெட் செட் போடு கொண்டு சுந்தருக்கு கால் செய்தான்.
      ''சுந்தர்.... உனக்கு ஜெய் கம்பெனி முதலாளி ஜெகதீஷ் தெரியுமா?''
      ''எஸ் சார்... அவரும் உங்க வரவேற்புக்கு வந்தார்'' என்றே சுந்தர் சொல்ல உதய்க்கு தான் முகம் கலவரமானது. என்னடா இது இவன் இப்பவே ஜெகதீஷ் பற்றி கேட்டு தொலைக்கறான்.. என்றே ஆச்சரியமாக பார்த்தான்.
       ''சுந்தர்... எனக்கு அவனோட ப்ரோக்ராம் ஷட்டுள் வேணும்....''
       ''எதுக்கு சார்?''
       ''சொன்னா சொன்னதை மட்டும் செய் சுந்தர்....''
       ''சார் அவங்க பிஏ கிட்ட கேட்டால் அவர் எதுக்கு என்று கேட்பார் சார்... காரணம் இல்லாமல் சொல்ல மாட்டாங்க...'' என்றே தயங்க
      ''ஜஸ்ட் ஒரு பிசினெஸ் டீல் மட்டும் சொல்லி கேளு... முக்கியமா ப்ரோக்ராம் தெரிஞ்சுக்கோ...''
      ''சரி சார்...'' என்றே வைக்க வெற்றி நிமிர்ந்து நின்று உதையை பார்த்தான்.
       ''என்ன உதய் என்ன பார்த்தா பயமா இருக்கா?''
       ''ஆமா சார்... சார் இவ்ளோ பாசம் ஆராதனா மேல வச்சி இருந்து எப்படி சார் நான் அவளை மேரேஜ் பண்ணும் என்று சுத்தறப்ப என்னை சும்மா விட்டீங்க?'' என்றே கேட்க
        ''ஜெஸில் அப்போ உன்னை விரும்பினா... உன்னை விசாரிச்சேன்.. உன் குணம் நல்லது என்று தெரிய வந்தது அதான்.. பாரு இப்போ கூட அவளுக்கு நடக்கும் நிகழ்வை சொல்லாமல் அவளை விட்டுட்ட... அன்னிக்கு ஆராதனா உன்கூட பேச வரும் அன்று கன் எடுத்து வந்தேன். ஒரு வேளை  உண்மை நீ சொல்லி உயிர் விட நினைச்சா நானும் அவளோடவே இறந்துட எடுத்துட்டு வந்தேன்... பட் நீ சொல்லலை தேங்க்ஸ்... உதய்...''
      ''சாக துணிஞ்சிட்டீங்களா?'' என்றே அதிர்ந்து ''நான் ஒன்று கேட்டால் தவறா எடுத்துக்க மாட்டீங்களே?'' என்றே கேட்டான் உதய்.
     ''கேளு......''
     ''நிஜமாவே அவளோட கற்பு போனதால் நான் அவளை விட்டு விலகலை... தாய்மை அடைய மாட்டாள் என்றே சொல்லியதால் தான் அப்படி விலகி போனேன்... உங்களுக்கு ஆசை இல்லையா?  உங்களை அப்பா என்று அழைத்து வீட்டில் குறும்பு செய்து வரவேற்கர குழந்தையை...?''
       ''இருக்கு உதய்... நிறையவே... ஆனா எனக்கு தான் ஜெஸில் ஒரு குழந்தையா பார்க்குறேன்... அவளை விடவா ஒரு குழந்தை எனக்கு கிடைச்சிட போகுது'' என்றே சொன்னவன் ''இனி ஆராதனா விஷயம் பேச வேண்டாம்... வீட்டுக்குள் போனதும் வேற பேசிப்போம்....'' என்றே சொல்ல உதய் வெற்றி வீட்டின் முன் நின்று இருந்தான்.
     ''வீடு ரொம்ப அழகா இருக்கு சார்.... ''
     ''தேங்க்ஸ் உள்ள வாங்க...'' என்றே சொல்லிவிட்டு நுழைந்தான்.
               உள்ளே ஆராதனா ஜாக்கிசான் பார்த்து கொண்டு இருந்தாள்.
        ''இந்த ஜாக்கி ஏன் தான் இப்படி சொதப்பறானோ...'' என்றே டிவியில் இருக்கும் டயலாக்  சொல்ல
      ''ஒய் ஜெஸில் கார்டூன் பார்த்துகிட்டு இருக்க... எப்போ தான் வளருவ?'' என்ற குரல் கேட்டு
      ''போ செல்வா போர் அடிக்கு லட்சுமிம்மா கடைக்கு போயிருக்காங்க'' என்றே அவனை அணைத்து சொல்ல
    ''ஜெஸில் திரும்பி பார் யாரு வந்து இருக்கா என்று'' என்றே சொல்ல ஆராதனா திரும்ப உதய் நின்று இருந்தான்.
      ''வாங்க உதய்...'' என்றே முழித்து செல்வாவை முறைத்தாள்.
                     முதலில் சொல்ல வேண்டியது தானே டா என்பது போல... வரவேற்று பின்னர் ஆராதனா கையில் உணவு பரிமாற டிவியில் பிளாஷ் நியூஸ் போட்டு விட்டு சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள்.  
         பிரேக்கிங் நியூஸ் இன்று சென்னையில் இருந்து மும்பை சென்ற விமானம் நடு வானில் தீவரவாதிகளில் ஹய் ஜாக் செய்யப்பட்டது பின்னர் பழுது காரணமாக தரை இறங்க முடியாமல் விபத்தில் சிக்கியது. விபத்தில் சென்ற பயணியர் எல்லோரும் இறந்து விட்டதாக ஆய்வு அறிக்கை கூறப்படுகின்றது. அதில் ஏழு திவரவாதிகள் சேர்த்து விமானத்தில் பயணித்த பயணியர் இறந்தார்கள். பயணியர் பட்டியல் என்றே பெயர்கள் சொல்லி அவர்கள் புகைப்படம் வந்து கொண்டு இருந்தன...
      ''சார்...'' என்றே உதய் குரல் கேட்டு டீவியை பார்க்க அங்கே...........

-தொடரும்.

-பிரவீணா தங்கராஜ்

ஹாய் இந்த கதையில் இரு முடிவ இருக்கு. 

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...