ஸ்டாபெர்ரி பெண்ணே- 19
🍓19
தனது தாயின் பட்டு புடவை நகை என்று எடுத்து வந்து கொடுத்து போட்டோ ஒன்றை எடுக்க அணிந்து வர சொன்னான்.
''செல்வா இது எல்லாம் கிராண்ட்டா இருக்கு சிம்பிள்ளா இல்லையா?'' என்றாள்.
''ஜெஸில் நீ நான் நாளைக்கு மார்னிங் பேப்பரில் ஜோடியா போட்டோ
கொடுத்து நமக்கு திருமணம் என்றே அறிவிக்க போறோம் அதுல இது வேணும் ஜெஸில்...
கல்யாணம் தான் நாம யாருக்கும் தெரியாம சட்டுனு முடிவு எடுத்தோம் ஆனா அதனை
தெரிவிக்க இப்படி செய்தால் தான் நல்லா இருக்கும் டா'' என்றே சொல்ல சரி
என்றே அறைக்கு சென்று அணிவித்து வந்தாள். கூடவே லட்சுமி அம்மா துணைக்கு
சென்றார்கள்.
புடவை அணிந்து நகைகளை பூட்டியதும் அழகு தேராக இருந்தாள் ஆராதனா...
''இந்த அம்பாள் நேரில் வந்த மாதிரி இருக்கு அவளோ தெய்விக முகம் உனக்கு'' என்றே லட்சுமி அம்மா கூற
''போங்க லட்சுமிம்மா எனக்கு இது மாதிரி போட்டு பழக்கமா இல்லை...
கையில் வங்கி ஒட்டியாணம்.... அது இது என்று வெயிட்டா இருக்கு...'' என்றே
சொல்லியவள் கதவை செல்வா தட்ட
''வந்துட்டேன் செல்வா... '' என்றே கதவை திறந்தாள்.
''ஆராதனாவை கண்டு இதுவரை இப்படி பார்க்க தெவிட்ட தெவிட்ட இருக்கும்
அழகாக தோன்றியது அவனுக்கு.... அவன் தன்னை இமைக்காமல் பார்ப்பதை கண்டு
வெட்கம் கொள்ள அது இன்னும் அழகை கூட்டியது.
சுந்தர் ஒரு போட்டோகிராப்பர் அழைத்து வர அவரோ செல்வாவுடம்
நெருக்கமாக நின்று போட்டோ எடுக்க "ஜெஸில்... ரொம்ப கொல்ற டி... இந்த அழகு
எல்லாம் இவ்ளோ நாள் எங்க இருந்தது'' என்றே கேட்க இருவரின் பார்வை சந்திப்பு
கேமரா உள் வாங்கியது.
மதியம் மேல் வெற்றி தனது வரவேற்பு நிகழ்வை எண்ணி அதற்கான வேலைகளை கொஞ்சம் பார்க்க சென்றான்.
ஆராதனாவுக்கு செல்வா கட்டிய தாலியினை வருடி கொண்டே இது வெற்றி கட்டிய தாலி என்ற பெருமையோடு பூரித்தாள்.
இதை நான் எதிர்பார்க்கவே இல்லை... ஆனா உதய் என்னை மறுத்து
போன பொழுது என் மனம் கொஞ்சம் கூட கவலை கொள்ளவில்லை. ஆனா செல்வா என்னை
நிராகரிப்பர் என்று எண்ணமிட்ட பொழுதே எனக்கு உயிர் பிரியும் வலி வந்ததே...
என் மனம் காதலில் திளைத்தது செல்வாவிடம் தான்.
செல்வா உன் அன்பு என்னை எப்படி மாற்றி இருக்கு பார்...... என்றே எண்ணி கொண்டு இருக்க
லட்சுமி அம்மா இனிப்பு செய்து கொடுக்க அதனை ரசித்து உண்டாள்.
வெற்றி மகிழ்ச்சியோடு வந்து நின்றான்.
''ஹாய் ஜெஸில்.... எனக்கு...'' என்றே குழந்தை போல ஆஹ் காட்டி கேட்க அவளின் எச்சி பருகிய ஸ்பூன் கொண்டு கொடுக்க தயங்கினாள்.
''லட்சுமிம்மா நிறைய செய்து இருக்காங்க எடுத்துட்டு வர்றேன்'' என்றே எழ போனாள்.
''ஜெஸில் நான் நீ சாப்பிடதை கேட்டேன்...'' என்றான் அதே
மென்னகையோடு... தடுமாறி விழித்தவள் அவன் சிறுபிள்ளையாய் கேட்டு அப்படியே
பார்க்க நெளிந்தபடி அவள் ஸ்பூனில் பாசிபருப்பு பாயசம் எடுத்து ஊட்டி
விட்டாள்.
''தேங்க்ஸ் ஜெஸில்.....'' என்றே அவளின் கண்களில் காதல் ரசாயனத்தை விழியாளே செலுத்தினான்.
அவளாகவே எழுந்து அவளின் அறைக்கு சென்றாள். சிரித்துக் கொண்டே
திரும்பியவன் பேச வந்த பேச்சை மறந்து போனதை எண்ணி அவளின் அறைக்கு சென்றான்.
இம்முறை கதவை தட்டவெல்லாம் இல்லை.
அதற்கு பதிலாக கதவை உள்பக்கம் தாழிட்டான்.
''செல்வா என்ன செய்யற...? வெளிய லட்சுமிம்மா இருக்காங்க'' என்றே சொல்ல,
''இருக்கட்டும்... நான் கேட்க வந்ததை கேட்டுட்டு சமத்தா போயிடுவேன்....'' என்றே சொல்லி அவளை கண்டான்.
''சீக்கரம் சொல்லு'' என்றாள் ஆராதனா.
''ஜெஸில் கல்யாணம் முடிந்த அன்று இரவு தானே முதலிரவு ஏற்பாடு
செய்வாங்க? அப்போ இன்னிக்கு ஏற்பாடு செய்யவா?'' என்றான் அவளின் முதுகில்
பின் வந்து...
''செல்வா.... நான் ஒன்னு சொன்னா தவறா நினைக்க மாட்டிங்களா?''
''என்ன ஜெஸில் உனக்கு நேரம் வேண்டுமா? மனம் மாற...''
''இல்லை....என் மனம் ஏற்கனவே மாறி தான் இருக்கு... என்னை முழுதும் உன் பக்கம் சாய்துவிட்டாய்.... ''
''அப்போ...''
''இரு செல்வா... தாலி தான் நேரம் காலம் பார்க்காமல் கட்டி
கொண்டோம்.... ஆனா அதற்கு நேரம் பார்த்து....'' என்றே திணறியவள் நிற்க
''ஓகே ஜெஸில்... நேரம் பார்க்கறேன்.... இன்னிக்கு நீ எப்பவும் போல
இரு... உன் செல்வா உன்னை தொந்தரவு செய்ய மாட்டான்'' என்றே சொல்லிட
''தேங்க்ஸ் செல்வா'' என்றே சொன்னதும்
''ஹ்ம்ம் இனி தனியா நாம இருக்க வேண்டாம் கிளம்பறேன்'' என்றே வெளியேறினான்.
ஆராதனா சிரிப்பது செல்வாவுக்கு மனம் நிம்மதி அளித்தது.
இங்கு உதய்-க்கு ஆராதனாவை
பார்த்ததும் பேசியதும் மனம் இருப்புக் கொள்ள வில்லை... என்ன தான் ஆராதனா
தாய்மை அடையாவிட்டாலும் அது குறையாக கருதாமல் தான் அவளை ஏற்று இருக்க
வேண்டுமோ? வெற்றி ஒரு தலையாக காதலித்தவர் அவரே இந்த முடிவு செல்லும்
பொழுது தங்கள் இருவரும் காதலித்த காதலுக்கு அர்த்தம் இல்லாமல் போனதே...
அப்படி என்றால்.. என் காதல் வெற்றியின் காதலில் தோற்றுவிட்டதா...?! என்றே
எண்ணி கலங்க தான் முடிந்தது.
இனி பேசிய பேச்சிக்கு ஆராதனா நிச்சயம் தன்னை மன்னிக்க மாட்டாள் ஏற்றுக்கொள்ளவும் மாட்டாள்.
தன்னை தாக்கா வந்தவர்கள் யார்? தன்னை பழி தீர்க்கும் நபர்
யாராக இருக்கும்? தான் ஒன்றும் பெரிய ஆளும் இல்லை சாதாரண 20000 சம்பளம்
கொண்ட பிரஜை மட்டுமே... அப்படி இருக்க என் காதலியை மானபங்க படுத்தி என்னை
கஷ்டப்படுத்த நினைக்கும் நபர் யார்? என்றே யோசிக்க துவங்கினான்.
அவனுக்கு யாரும் அப்படி தோன்றவில்லை..... ஆனால் ஆராதனாவை கடத்திய
ஒருவன் அப்படி தான் பேசினான். இவன் இங்க இருக்கான் இவன் கண் எதிரில் தானே
அந்த பெண்ணை கடத்தி காயப்படுத்த சொன்னார்கள்' அதற்கு இன்னொருவன் டேய்
நாம்மளை சும்மா மிரட்ட தான் சொன்னார் இவன் எதிர்க்க... இப்படி ஆப்பிள்
மாதிரி இருக்கற பெண்ணை மிரட்டி மட்டும் விட்டுட்டு போக முடியுமா....? இந்த
விஷயம் செய்ய சொன்னவனுக்கு தெரிந்தாலும் நமக்கு ஆபத்து தான்' என்ற சொல்லே
உறுத்தியது.
சுந்தர் இரவோடு இரவாக தினசரி பத்திரிகை எல்லாவற்றிலும் முதல்
பக்கத்தில் கீழே வெற்றி செல்வன்-ஆராதனா இருவரின் புகைப்படம் போட்டு
திருமணம் ஆனா செய்தியை வெளியிட்டது. வரும் ஞாயிறு வரவேற்புக்கு அதிலே
அழைப்பு விடுத்தும் இருந்தன.
எல்லாம் ஒரு தரம் பார்த்தவன் போட்டோ எடுத்து வெற்றிக்கு அனுப்பி சரி பார்த்துக் கொண்டான்.
- தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
முகநூலில் ஆதரவுக்கு நன்றி. இங்கயும் கொஞ்சம் கமெண்ட்ஸ் பண்ணுங்க. ❤🙏
Comments
Post a Comment