ஸ்டாபெர்ரி பெண்ணே- 17
🍓17
''இங்க பாரு ஆராதனா அன்னிக்கு இதே போல நாம பேசிட்டு கிளம்பினோம்
அப்போ என்னை ஒருத்தன் பின்னாடி இருந்து தள்ளி விட்டான். நான் விழுந்து
திரும்பும் பொழுது அவன் உன்னை காரில் தள்ளி விட்டான் அதுல உனக்கு தலையில்
அடிபட்டுச்சு.. அப்புறம் அவன் உன் முகத்தில் கர்சீப் வைத்து அழுத்திட நீ
மயங்கின உன்னை காரில் தள்ளி கூட்டிட்டு போனான். அவ்ளோ தான் அப்பறம் நான்
அவரும் சேர்ந்து உன்னை தேடிட்டு காரில் பின் தொடர்ந்தோம்.
ஒரு அறையில்.... உன்னை அடைச்சாங்க அவர் காப்பாற்ற போனப்ப அவரை
அடிச்சாங்க அடுத்து நான் வந்தேன் இருவரையும் அடிச்சு முடிச்சு உன்னை
ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனோம்.
அங்க உன்னை பரிசோதிச்சு பார்த்தப்ப.... '' என்றே தயங்கினான்.
வெற்றிக்கு கண்கள் எங்கோ வெறித்தது. மீண்டும் அந்த இறந்த கயவர்கள் கொள்ளும் வெறியில் இருந்தான்.
''அங்க இருந்த டாக்டர் உன்னை பரிசோதித்து... சொன்னாங்க... உன்னை
கடத்த முயன்றவர்கள் தள்ளியதில் உனக்கு வயிற்றில் அடிபட்டது... அதுல நீ
தாய்மை அடையும் பாக்கியம் பெற முடியாது என்றே சொன்னாங்க...'' என்றான். ஆராதனா கண்கள் கலங்கி அருவியாய் பொழிந்தது.
''அப்போ உள்ள நீ... நான் யார்? எங்க இருக்கேன்? என்று தெரியாம
பேசின... அப்போ தான் டாக்டர் உன்னை பார்த்துவிட்டு உனக்கு பழைய நினைவு
போனது என்றும் சொன்னாங்க...'' என்றான்.
ஆக தனக்கு தாய்மை போனதால் உதய் விட்டுவிட்டான் என்றே உணர்ந்தாள். கண்களை அழுத்த துடைத்தாள்.
''என்னை மன்னிச்சுடு ஆரு என் அம்மா பற்றி உனக்கே தெரியும்... உன்னை
கல்யாணம் பண்ண சம்மதம் வாங்கியதும் முதலில் என்ன சொன்னாங்க 'சரி கல்யாணம்
பண்ணி உன்னை போல உன் நிறத்தில் அழகா குழந்தை பெற்று கொடு... என்று
ஆசிர்வாதம் செய்தாங்க நினைவு இருக்கா? அப்படி ஒரு ஆசையில் உன்னால நிறை
வெற்ற முடியாது என்னும் பட்சத்தில் அவங்க என்ன செய்வாங்க எனக்கு திரும்ப
கல்யாணம் செய்ய பார்ப்பாங்க... உன்னை தினம் தினம் குற்றி பேசுவாங்க
அதுக்கு...''
''அதுக்கு என்னை கல்யாணம் செய்யாமலே விட்டுடலாம் அப்டி தானே...'' என்றாள் உதய் ஹ்ம்ம் என்றே தலையை அசைத்தான்.
''ரொம்ப தேங்க்ஸ் உதய்... ''
''ஆராதனா நினைவு வராமல் நீ புது மனுசியா வாழ்ந்து புது வாழ்கை
துவங்குவ... என்னால உனக்கு எதுவும் தெரிய கூடாது என்றே இருந்தேன்...
அதுக்கு தான் உன்னை விட்டு போனேன்'' என்றதும்
''நல்லது... உதய்.. எனக்கு எனக்கு தேவையான பதில் கிடைச்சது இது போதும்.... நீ கல்யாண வேலையில் இருப்ப இனியும் உன்னை தொந்தரவு செய்ய
மாட்டேன்.... வர்றேன்'' என்றே காரின் இடம் நோக்கி விரைந்தாள். அவளின்
முகபாவத்தில் அழுகையை அடக்க பாடுபட்டது புரிந்தது.
வெற்றி நிம்மதி உணர்வோடு உதய் நோக்கி வந்தான்.
''தேங்க்ஸ் உதய்... அவளிடம் மறைச்சதுக்கு... எங்கே நீ ஏதாவது சொல்லி அவள் வேற முடிவு எடுத்துடுவாளோ என்றே பயந்தேன்''
''நீ..ங்க...?''
''ஹ்ம்ம் அவளை ஒரு தலையாய் அவளுக்கே தெரியாம காதலிச்சவன்...
அன்னிக்கு உங்களை தூரத்தில் இருந்தே பார்த்தேன்... அதனால தான் அவங்க
கடத்தியதும் உடனே வந்து சேர்ந்தேன்''
''நீங்க... ஆருவை இன்னமும் காதலிக்கறிங்களா?'' என்றே உதய் கேட்க
அவனை வினோதமாக பார்த்தான் வெற்றி. அவனின் பார்வை உணர்ந்து உதய்
''இல்லை கல்யாணம் செய்யாமல்... குழந்தை கிடைக்காமல்...''
''உங்களுக்கு ஆரு கிடைக்கும் பொழுது தவறவிட்டுட்டீங்க... எனக்கு
கிடைக்கவே மாட்டாள் என்ற நிலையில் வந்து சேர்ந்து இருக்கா... அப்படி இருக்க
அவளின் தாய்மை விட அவளின் உயிர் மட்டும் திரும்ப கிடைச்ச நிம்மதி
எனக்கு....''
''அவளை இரண்டு பேர்... உங்களுக்கு... நீங்க அங்க தானே இருந்தீங்க?''
''தெரியும்... அதே நாளில் அவங்க பிணமா போன நிகழ்வு தான் உங்களுக்கு
தெரியாது... என்றே சொல்ல திடுக்கிட்டான். அன்றைய செய்தியை அடுத்த நாள்
பேப்பரில் போட்டு இருப்பாங்க'' என்றதும் .
''அவங்க யாரு என்று தெரியுமா?'' என்றான் வெற்றி
''இல்லை... ஆனா என்னை காயப்படுத்த நினைச்சு அவளை...'' என்றே உதய் அமைதியாகிட
''நீங்க இனியும் ஆராதனா பார்த்தாலும் உண்மையை சொல்லாதீங்க ப்ளீஸ்...'' என்றான் வெற்றி
''இல்லை என் உயிர் போனாலும் சொல்ல மாட்டேன். ஆனா அவளை நான் மணக்க
செய்யாமல் விட்டு சென்றதற்கு அது காரணம் இல்லை எல்லோரும் எதிர் பார்க்கும்
தந்தை பதவி அவளால் எனக்கு கிடைக்காது என்ற சுயநலத்தில் தான்...'' என்றதும்
''நல்லது... ஒன்றை மறந்துவிட்டிங்க உதய் இதே தவறு திருமணம் முடிந்து
அவளுக்கு தாய்மை கிடைக்கவில்லை என்றால் நீங்க என்ன நிலையில் இருப்பிங்க
என்று யோசிக்க மறந்துட்டீங்க.. ஆனா எனக்கு ஆராதனா தாய்மை அடையலனாலும் அவள்
என்னை மணந்தாலே போதும்... அவள் ஏற்கணும் ஏற்றுப்பா என்றே என் காதல் மேல
நம்பறேன். நீங்க கிளம்புங்க.... ஊரில் இருந்து போன் செய்ததும் அப்படியே
வந்துவிட்டிங்க... ஆராதனா வேற என்ன நிலைமையில் இருக்கா என்றே தெரியாது நான்
கிளம்பறேன்'' என்றே வெற்றி விடை பெற்றான்.
''வெற்றி சார் என் திருமணத்திற்கு முடிந்தா ஆருவை கூட்டிட்டு வாங்க என்றான் திகதி(தேதி) சொல்லி .
இருவரும் வெவ்வேறு திசை நோக்கி கிளம்பினார்கள்.
காரில் ஆராதனா அழுவதை கண்டு அவளை தேற்ற வழியின்றி காரை எடுத்தான்.
காரில் ஏறியதும் பேண்ட் பாக்கெட்டில் இருந்து பிஸ்டல் ஒன்று இருக்க அதனை
ஜெஸிலுக்கு தெரியாமல் காரில் மறைத்தான். எங்கே உதய் உண்மை சொல்லி ஆராதனா
தவறாய் முடிவெடுத்து விட்டால் தானும் தனது தந்தை போல அவள் கண் முன் உயிரை
விட வேண்டும் என்றே எடுத்து வந்தான். நல்ல வேளை உதய் ஆராதனாவிடம் அவளின்
கசப்பை சொல்லவில்லை என்றே நிம்மதி கொண்டான்.
வீடு வந்து சேரும் வரை அழுகை குறையவில்லை.... போகும் பொழுது ஆராதனா
தன்னோடு மீண்டும் வருவாள் என்பதே ஐயத்துடன் தான் வெற்றி நினைத்தான். ஆனால்
மீண்டும் தன்னோடு வந்து இருப்பவளை கண்டு அவளின் அழுகை மட்டுமே போக்க
முடியாமல் தவித்தான்.
அறைக்குள் சென்று மெத்தையில் கண்ணீர் சிந்தினாள்.
கொஞ்ச நேரம் பார்த்தான் வெற்றி செல்வன். அவளின்
அழுகை முடிந்தபாடு இல்லை என்றதும் அவளின் அறைக்கு தட்டி சென்றான்.
அவன் வருகை அறிந்து எழுந்து அமர்ந்தவள் கண்ணீரை துடைத்தாலும் வருவதை கண்டு அமைதியாக இருந்தாள்.
''ஜெஸில்.... உனக்கு நீ விரும்பியது போல நினைவு தவறிய அன்று நடந்த
நிகழ்வை சொல்லிட்டான்.. இதுக்கு தான் உனக்கு தெரியவேண்டாம் என்றே
தவிச்சேன். வேற எதுக்காகவும் இல்லை ஜெஸில்...'' என்றான்.
''உங்களுக்கு ஏற்கனவே எனக்கு அம்மாவாக தகுதி இல்லை என்று டாக்டர் சொல்லியது தெரியுமா?''
''ஹ்ம்ம் தெரியும் அப்பறம் அவங்க ஒன்றும் தகுதியே இல்லை என்று
சொல்லலை.... வாய்ப்பு குறைவு நூற்றுக்கு பத்து விழுக்காடு தான் என்று
சொன்னாங்க....'' என்றான்.
கண்கள் மெல்ல நீரை நிறுத்தி படபடவென இமைகள் அடித்துக்
கொண்டன.... அவள் ஏதோ கேட்க வந்து தவிப்பது புரிந்தது வெற்றிக்கு.....
''எதையும் நினைச்சு கலங்காதே ஜெஸில் உனக்கு எப்பவும் துணையா நான்
இருப்பேன். இரண்டு நாளா நாம இரண்டு பேருமே சரியா தூங்கலை... நீ இந்த பிரட்
பால் குடிச்சுட்டு மாத்திரை சாப்பிடு.. தூங்கு.. மற்றதை காலையில் பேசுவோம்''
என்றான்.
அவளும் அதே போல செய்து மெத்தையில் படுத்தாள். வெற்றி போர்வை போற்றி விட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
மாத்திரையின் உபயத்தில் உறங்க செய்தாள் ஆராதனா. வெற்றியும் ஜெஸில்
தனது வீட்டிற்கு வந்து விட்டதை எண்ணியும் அவளுக்கு நடந்த நிக்ழ்வை உதய்
சொல்லவில்லை என்றே நிம்மதியாக உறங்கினான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Comments
Post a Comment