ஸ்டாபெர்ரி பெண்ணே-22

 🍓 22
                 ஆராதனாவோ தனது ஆடையின் பாரத்தை தாங்கி கொண்டு உணவினை உன்ன வெற்றி கண் இமைக்காமல் அவளையே பார்த்து இருந்தான்.
      ''செல்வா... இப்படி அடிக்கடி எதுக்கு என்னை விழுங்கற மாதிரி பார்க்கற? சாப்பிடு'' என்றாள் ஆராதனா.
      ''ஜெஸில் எனக்கு உன்னை பார்த்துகிட்டே இருந்தா பசியே தெரிலை''
      ''ஐயோ சினிமா வசனமா? சாப்பிடுங்க... அப்பறம் பேசுவோம்''
       ''ஏன் ஜெஸில் புட் புடிச்சு இருக்கா?''
       ''செம டேஸ்ட்... எல்லாமே எனக்கு புடிச்ச ஐட்டம்... செல்வா... இது உங்க ஏற்படா?''
        ''ஹ்ம்ம்...''
       ''ரொம்ப அற்புதம்.. எனக்கு எல்லாமே நிறைவா இருந்துச்சு... உங்க கையை பற்றி இருக்கும் பொழுது எனக்கு ஒரு கர்வம் கூட இருந்துச்சு... எனக்கு பிறந்த ராஜகுமரன் அப்படி ஒரு கர்வம் செல்வா...''
      ''எனக்கும் ஜெஸில்...'' என்றே மையலில் பார்க்க
     ''தம்பி நானும் கிளம்பறேன்...'' என்றே லட்சுமி அம்மா நின்று இருந்தார்கள்.
     ''சரிங்கம்மா...' என்றே வெற்றி சொல்ல லட்சுமிம்மா தயங்கி தயங்கியே நிற்க
      ''என்ன லட்சுமிம்மா சொல்லுங்க'' என்றே ஆராதனா கேட்க
      ''இல்லை தாயி நீங்க இரேண்டு பேரும் சேர்ந்து நின்றா திருஸ்டி கழிச்சு வீட்டுக்கு போலாம் என்றே இருந்தேன். என்றே சொன்னார்.
     ''அதுக்கா இப்படி தயங்குறீங்க செய்யுங்க... ம்மா எங்களுக்கு நீங்க தான் இந்த வீட்டில் பெரியவங்க'' என்றே சொல்லியதும் நொடியும் தாமதிக்காமல் சுற்றி திருஷ்டி கழித்து மனம் குளிர்ந்தார்.
     ''இப்போ வீட்டுக்கு வாங்க தம்பி... நான் கிளம்பறேன்... நாளைக்கு லீவு எடுத்துக்கறேன்..'' என்று சொல்லியதும் ஏன் என்றே வெற்றி கேட்க லட்சுமி அம்மாவோ தூரத்து உறவு ஒருவரை காண போவதாக சொல்லி கிளம்பினார்கள்.
       தனித்து இருந்த வீட்டில் ஹாலில் நுழைந்தார்கள்.
                       தனிமை அது இனிமை தான் உன் போன்ற மனம் பிடித்த பெண் மணம் முடிக்க என்றே வெற்றி சொல்ல
     ''வெற்றி நான்...'' என்றே பேசாமல் அவளின் பழைய அறைக்கு பார்வை பார்க்க...
       ''மிஸ்ஸஸ் வெற்றி செல்வன்... உங்க அறை மேலே இருக்கு...'' என்றே கண்களில் சுட்டியும் கட்டினான்.
       ''செல்வா... அது...''
      ''நீ தானே நாள் பார்த்து இருக்க சொன்ன...செய்தாச்சு... நல்ல நாள் தான்''
                    பேசாமல் இருக்கும் மடமை போல ஆராதனா இருந்தாள்.
       ''உனக்கு நேரம் வேண்டும் என்றால் காலம் முழுக்க காத்திருக்கின்றேன் ஜெஸில்.. பட் இனி நம்ம அறையில் இரு... ப்ளீஸ்....'' என்றே சொல்ல நிமிர்ந்தவள் முறுவலித்து அவனை வேகமாக கட்டி கொண்டாள்.
      ''ஏதேது இப்படி கட்டி ஒட்டி கொண்டால் என் நிலைமை திண்டாட்டம் தான்.. அப்பறம்....'' என்றே சொல்ல முடியாமல் ஆராதனா கைகள் வெற்றி வாயினை மூடினாள்.
      ''போதும்... போதும்... ரூமுக்கு போங்க... வர்றேன்'' என்றே சொல்லி செல்ல விசில் அடித்தபடி மாடிக்கு சென்றான்.
           வெற்றி செல்வன் போவதையே பார்த்தவள்.....
          'போதும் செல்வா நீ காத்திருந்தது... எனக்கு தாய்மை கிடையாது என்றே தெரிந்தும் நீ என்னை ஏற்று கொண்ட... உன்னை இதுக்கும் மேல என்னால் கஷ்டப்படுத்த முடியாது. உன் சந்தோசம் தான் என் சந்தோசம்... என்றே அவன் அவள் மனம் மாறி சம்மதம் என்றால் அணிந்து சுட்டிக்காட்ட ஒரு சேலை கொடுத்தான் அதனை அணிந்து தயாரானாள்.
     'நீ சம்மதம் என்றால் அணிந்து கொள்ள சொன்னாய் இப்போவே அணிந்து கொண்டேன் என்றே அலங்காரம் செய்தாள்.
          கைகள் தான் அலங்காரம் செய்தன... மனமோ இதற்கு என் மனம் உடல் உடன்படுமா? என்றே புரியாமல் கேள்வி கேட்டு கொண்டன. வெற்றி முழு சம்மதம் என்ற பின் தான் அணிய சொன்னான். அவசரப்பட்டு அணிந்துவிட்டேனா? வேறு உடை மாற்றிடலாமா? என்றே சிந்தைகள் பலவாறு ஓடின...
           ஆனால் வெற்றியை காக்க வைக்கவும் மனம் முரண்டியது. முழு மூச்சாக அலங்கரித்து முடித்து வெளியே வந்தாள். பாலை சூடுபடுத்தி வெற்றி அறைக்கு மெல்ல நடந்தாள்.
        அறையின் கதவை திறக்க வெற்றியோ வேக வேகமாக கட்டிலில் சுற்றி அலங்கரித்த பூவை எடுத்து கொண்டு இருந்தான். ஆராதனா முகம் பார்க்காமலே...
      ''சாரி ஜெஸில்... லட்சுமி அம்மா நல்ல நாள் என்று சுந்தரை வச்சி கட்டிலை அலங்கரிச்சு இருக்காங்க... எனக்கு தெரியாது... ஐ அம் சாரி என்றே திரும்ப அவள் அணிந்த புடவை கட்டிலில் அலங்கரித்த நிகழ்வுக்கு சம்மதம் என்றே சொல்ல மலரை கீழே வைத்தவன்.
           காலையில் லட்சுமி அம்மா அவளிடம் மாத சுழற்சி நாட்களை கேட்டதும் தான் அதற்கு அது முடிந்து பத்து நாட்கள் என்றே கூறியதும் நினைவில் தோன்றி மறைந்தன. செல்வாவோ....
      ''ஜெஸில்... இந்த சேலை... அப்படினா... உனக்கு...?'' என்றே நிறுத்தி அவளின் முகம் காண அவளின் முகமோ வேர்த்து போய் இருந்தன.
      ''ac ரூமில் எதுக்கு வேர்குது... ஜெஸில்... என்னாச்சு... ? நான் உன் செல்வா தான்.... உன்னை கஷ்டப்படுத்தி பார்க்க மாட்டேன்... ப்ரோமிஸ்... இங்க உட்கார்'' என்றே மெத்தையில் அமர வைத்தான்.
       இதுக்கு முன் இதே மெத்தையில் வெற்றி கையை பற்றி இழுத்து அமரவைத்து உணவை ஊட்டி விட்டு இருக்கின்றாள் அப்பொழுது இல்லாத பயம் இப்பொழுது சூழ்ந்தது. அது பெண்மைக்கே உண்டான பயம்...
      ''எதுக்கு இந்த சேலை கட்டின... சேலை பிடிச்சதாலா?'' என்றே குழந்தையிடம் கேட்பது போல கேட்க ஆராதனா முறைத்தாள்.
      ''எல்லாம் உன்னை காக்கா வைக்க கூடாது என்றே கட்டினேன் செல்வா... எனக்கு உன்னை பிடிக்குது... ஆனா எனக்கே உண்டான பயம் மட்டும் இருக்கு... அதான்''
      ''ஹ்ம்ம்'' என்றே சிரித்தவன் சரி அதுக்காக எல்லாம் ஏற்றுக்க முடியுமா?''
      ''ஹ்ம்ம்.... தெரிலை செல்வா எனக்கு உன் அணைப்பில் ஏதோ நிம்மதி வருது. அதை நீ அருகே இருக்கும் பொழுது எல்லாம் உணருகிறேன்...''
       வெற்றி ''ஜெஸில்.... தேங்க்ஸ் டி... ''என்றே இறுக அணைத்து கொண்டான். அவனின் கைகள் இடையில் இறுக கழுத்திலே சூடாக மூச்சு காற்று வேறு அவளை மேலும் அவனோடு ஒன்ற செய்ய அவனோ அவளின் விலகல் இல்லாமல் போக மேலும் அவளோடு முன்னேறினான்.
       சிப்பி போன்ற இமையில் முத்தம் வைக்க உதடுகள் தானாக நடுங்கியது. அதுவும் அதன் துணையை சேர்ந்தால் ஒரு வேளை நடுக்கம் கொள்ளாமல் இருக்கும் போல வெற்றி அவளின் உதட்டில் இதழ் பதிக்க நடுக்கம் கைகளில் ஏற்பட்டது. தானாக கையை பற்றியவன் கூடலில் தொடர அதிகாலை வரை விட மனமின்றி பிடித்து இருந்தான்.
         தன்னவள் தனக்கு கிடைத்த பெரும் நிம்மதியில் செல்வா உறங்க
தனக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் நிம்மதி ஆராதனாவுக்கும் எழுந்தன.
      சுருள் சுருளான மெத்தை போன்ற நெஞ்சு முடியில் கன்னம் வைத்து ஆழ்ந்த உறக்கத்தில் ஆராதனா இருக்க பொம்மை கட்டி கொண்டு உறங்கும் சிறுவனாக வெற்றி இருந்தான்.
           உதய் அப்பொழுது தான் அவனை அறிந்து முடித்தான். தன்னிடம் அடிவாங்கியவன்.... ஆம் ஒரு சாலை விபத்தில் ஒரு குழந்தை மீது காரினை ஏற்றி தன்னிடம் அடிவாங்கியவன். ஆனால் அன்றே அவனோடு இருந்த மற்றொருவன் விளக்கி குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி சமாதானம் படுத்தினான். இதில் பெரும் பகை எங்கே...? ஒன்றும் புரியவில்லை ஆனால் இன்று அவன் பேசிய தோரணை வஞ்சம் போலவே இருந்தன... என்றே எண்ணியவன் எதற்கும் காலையில் வெற்றிக்கு சொல்லி யாரவன் என்றே தெரிந்து கொள்வோம் என்றே நினைத்தான்.
           இங்கு மறுபக்கம் 'சே அவன் என் கண் எதிரில் போறான் அன்னிக்கு மாதிரியே சும்மா வேடிக்கை தான் பார்க்க முடிஞ்சது.... இதுல வெற்றி கெஸ்ட் வேற... என்றே அங்கிருந்த பூஜாடியை தட்டி விட்டான் ஜெகதீஷ்.
           உதய் மற்றும் ஜெகதீஷ் வாழ்வில் அன்று நடந்தவை..........
                 ஜெகதீஷ் தான் திருமணம் செய்ய போகும் பெண் மற்றும் அவளின் அப்பா மற்றும் தனது சிற்றப்பா மகன் வினித் நால்வரும் காரில் பயணம் செய்தபடி இருக்க ஜெகதீஷ் கார் ஓட்டினான்.
      அது நெடுஞ்சாலை என்பதால் காரினை வேகமாகவே ஓட்டினான். ஒரு திருப்பத்தில் ஒரு சிறுமி இடையில் வர காணாமல் மோதி விட்டான். உடனே கூட்டம் கூடியது.
           உதய் அந்த நேரம் பார்த்து வர குழந்தை உயிர் கண்டு காரில் இருந்த ஜெகதீஷ் இழுத்து எல்லோர் எதிரிலும் அடித்து விட்டான். ஜெகதீஷ் சாதாரணமாவே அடிவாங்கினாலே வஞ்சம் தீர்த்து இருப்பான். அதுவும் தன்னை திருமணம் செய்யும் பெண் ஜமுனா முன் அடிக்கவே மிகவும் குனி குறுகி விட்டான். தான் ஏதேனும் செய்ய போக கூடியிருந்த மக்கள் அடித்தாலும் அடிப்பார்கள் என்றே அமைதி கொண்டான். ஆனால் உதய்யிடம்
           ''நீ ஒரு நாள் ஏன் என்னை அடிச்ச என்று பீல் பண்ண வைப்பேன்... மைண்ட் இட்...'' என்றே கர்ஜித்து சொல்ல
          அந்த நேரம் வினித் ''சார் விடுங்க குழந்தைக்கு உயிர் இருக்கு... நாங்களே மருத்துவமனைக்கு  கூட்டிட்டு போறோம் கூடவே வேண்டுமென்றாலும் வாங்க'' என்றதும் எல்லோரும் விலகி நின்று சரி என்றே சொல்லி அமர்த்தினர்.
       வினித் குழந்தையை தூக்கி கொண்டு காரில் பின்னாடி படுக்க வைத்து எல்லோரிடமும் இருந்து விடை பெற்றான். உதய் கூட உயிர் இருக்கு என்றதும் நிம்மதியோடு கிளம்பினான் ஜெகதீஷ் முறைப்பை பொருட்படுத்தாது.
            ஆனால் காரில் நேராக சென்ற வினித் ஜெகதீஷ் பார்த்து விட்டு பின்னால் திரும்பி ஜமுனாவை பார்த்துவிட்டு வண்டியை ஓட்டினான். கொஞ்ச தூரம் சென்ற பின் வண்டியை நிறுத்தினான்.
    ''வினித் என்ன நிறுத்திட்ட ஹாஸ்பிடலுக்கு போ'' என்றான் ஜெகதீஷ்
    ''எதுக்கு செத்து போனவளுக்கு எப்படி உயிர் கொடுப்ப?'' என்றதும் ஜெகதீஷ் அதிர்ச்சிஆனான்.
     ''நீ அங்க உயிர் இருக்கு என்றே சொன்னியே''
     ''என்ன பண்ண சொல்ற அப்படி சொன்னதால் தான் நீ தப்பித்த.. இல்லை அவன் உன்னை ஜெயிலில் களி தின்னா வச்சி இருப்பான்... ஏதோ சட்டுனு அப்படி பேசி இங்க கூட்டிட்டு வந்துட்டேன்... இப்போ இந்த உடலை என்ன செய்ய?'' என்றதும் முழிக்க
      ''டேய் எனக்கு ஒன்றுமே புரியல நீயே ஒரு சொலுஷன் சொல்லு'' என்றதும்
      ''ஏதாவது போற இடத்தில குளம் இருந்தா இல்லை கடல் இருந்தா போட்டுடலாம்.. தவறி விழுந்து இறந்து இருக்கும் என்றே போயிடும்'' என்றதும் சரி என்றே தலை அசைத்தான்.
         ஏனோ ஜெகதீஷ் மனம் எல்லாம் அதிர்ச்சியில் எதையும் முடிவெடுக்க முடியாமல் போனது.
               வினித் சொல்லியது போலவே அங்கிருந்த கொஞ்சம் தள்ளி இருந்த குளத்தில் குழந்தையை உருட்டி விட்டுவிட்டு காரில் திரும்பி பார்க்காமல் கிளம்பினார்கள்.
        இதெல்லாம் பார்த்த ஜமுனா மனம் முரண்டியது.
                  ஒரு மிடில் கிளாஸ் ஆளு அடிச்சு இருக்கான் இவன் சும்மா நின்று இருக்கான். அந்த சூழ்நிலையில் எப்படி வெளியே வர என்று தெரியாமல் இருக்கான்.. இந்த வினித் தான் சாதுரியமாக நடந்து அழைத்து வந்து விட்டான். இல்லை ஜெகதீஷோடு தானும் சிறைக்கு போக வேண்டியது கூட நேர்ந்து இருக்கலாம் என்றே எண்ணி இருக்க தனது தந்தை கல்யாண தேதி கேட்க வர அவளோ ஜெகதீஷ் வேண்டாம் என்றே மறுத்தாள். பின்னர் மகள் நடந்த நிகழ்வில் எடுத்து சொல்லி ஜெகதீஷ் வேண்டாம் என்றதும் ஜெகதீஷ் தாத்தா மனம் வாடுவார் அதிலும் செல்வ சீமான் என்றே மூளை சலவை செய்ய ஜமுனாவோ அப்ப ஜெகதீஷ் சிற்றப்பா மகன் வினித் பேசி முடிங்க எனக்கு ஜெகதீஷ் வேண்டாம் என்றே சொல்லி விட்டாள்.

         இதை கேட்ட ஜெகதீஸ் அவரிடமே ஏன் என கேள்வி கேட்க 'ஒரு மிடில் க்ளாஸ் ஆளுகிட்ட கூட  வீரம் காட்ட முடியலை என்று என் மகள் உன்னை வெறுக்கறா அதனால் என்றதும் வினித் இதற்கு சம்மதிக்க மாட்டான் என்றே நினைக்க அவனோ பணம் வரும் செல்வம் கூடும் என்றே ஜமுனாவை திருமணம் புரிய ஒப்பு கொண்டான்.
            ஜெகதீஷ்க்கு தான் திருமணம் செய்ய போகும் பெண் தன்னை விடுத்தது அவளின் அப்பா ஒரு செயலை கூட சாதுரியமா முடிக்க தெரிலை என்றே இகழ்ந்தது இதில் தன் சிற்றப்பா மகன் வேறு தன் கூடவே இருந்து ஜமுனாவை திருமணம் செய்ய ஒப்பு கொண்டது என்றே இருக்க தொழிலில் அவன் தாத்தா இவனை விடுத்து வினித் முக்கியத்துவம் கொடுக்க என்றே எல்லாம் சேர்ந்து உதய் மேல் பகை உருவாகியது.
         தான் எப்படி திருமணம் செய்ய போகும் பெண் முன் குனி குறுகி நின்றது போல அவனை சார்ந்த பெண்கள் மத்தியில் அவன் அதே வலியை அனுபவிக்க வேண்டும் என்றே எண்ணி கொண்டான்.
   ஜெகதீஷ் நேரம் அடுத்த வாரத்திலே உதய் ஒரு பெட்ரோல் பாங்க் அருகே பார்க்க நேர்ந்தது . உடனே கண்ணன் சுப்பு என்றே ஆட்களை தேடி பிடித்து உதய் பாலோவ் செய்து அவன் விரும்பும் பெண் அல்லது அவன் யாரிடம் அதிக உரிமையாக இருக்கிறானோ அந்த பெண்ணை இழுத்து வந்து அடைத்து தனக்கு கால் செய்ய சொல்லி இருந்தான்.
          கண்ணன் சுப்பு இருவருமே அதே போல ஆராதனாவை கடத்தி அடைத்து விட்டார்கள். ஆராதனா அழகு இருவரையும் கொல்ல, தவறு செய்து விட்டார்கள். ஜெகதீஷ் அந்த நேரம் வர இயலாது போனது. அவனுக்கு மங்களூரில் ஒரு மீட்டிங் போகவே ஆராதனாவை பார்க்கவில்லை.
        ஜெகதீஷ் மனம் அன்னிக்கு கண்ணன் போன் செய்து பொண்ணை கடத்திட்டோம் சார் என்ன செய்ய என்று கேட்க தான் வரும் வரை மயக்கநிலையில் வைத்திருக்க சொன்னான். அதன் பின் கால் செய்ய போன் எடுக்கவில்லை.. மறுநாள் பேப்பரில் இருவரும் உயிர் இழந்த செய்தியே இருந்தது.
      உதய் எப்படி? அவன் பார்க்க அப்படி ஒன்றும் தைரியசாலியாக தெரியவில்லை... என்றே குறுக்கும்  நெடுக்கும் நடந்தான்.
             இதில் தொழிலில் போட்டியாக கருதும் வெற்றியுடைய கெஸ்ட் வேறு தெரிய.  

ஏற்கனவே வெற்றி அதிக அழுத்தம் கொண்ட ஆள்... அவனோடு பனிப்போர் இருக்க உதய் வேறு என்றே எண்ணி கொண்டு இவர்களை அழிக்க வழியினை தேடினான்.

           ஒன்றை மாற்ற முடியுமா இவன் உதய் பழிவாங்க நினைத்து இருக்க ஆராதனாவை கடத்தியது ஜெகதீஷ் என்று வெற்றிக்கு தெரிந்தால் இதுவரை நாயகனாக பார்த்த வெற்றி அவனுக்கு வில்லனாக மாறும் நிலை வரும் என்றே எதிர்பார்க்கவில்லை அது விதி....
           இதை எதையும் உணராத காதல் ஜோடி ஜெஸில் செல்வா தங்கள் புது உலகம் படைத்து இன்பத்தில் லயித்து உறங்கி கொண்டு இருந்தார்கள்.

-தொடரும்

-பிரவீணா தங்கராஜ்.

Comments

  1. Ippodhan nimmadhiya irrukku.. naan vetri dhan kadatha solli irrupanonu ninaichen.. Nalla velai

    ReplyDelete

Post a Comment

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1