ஸ்டாபெர்ரி பெண்ணே-10

 🍓10
               ஆராதனவோ மெல்ல சிணுங்கி குழந்தை போல முகம் வைத்து
 ''இல்லையே.... நீ எவ்ளோ உயரம் ஆனா என் பக்கத்தில் என் உயரம் அளவு வரை தான் தெரிந்த'' என்றே சொல்லியதும் வெற்றிக்கு புரிந்து போனது. முகம் தெரியவில்லை என்றதும் நிம்மதியுடன்
               கடவுளே உதய்-க்கு இப்படி தீம் பார்க் போறதே பிடிக்காது பயம் அதனால ஆராதனா கூட அவன் போனதே இல்லை அதனால் இன்று இப்படி முழு நேரமும் அங்கே அவனின் நினைவு வராமல் தப்பித்தோம். இப்போ இங்க கடலில் கொஞ்ச நேரம் தான் இருந்தா ஆனா உதய் நினைவு வந்து இருக்கு கடவுளே இப்போ நான் என்ன பண்றது... என்ன சொல்லி இவளின் பேச்சை மாத்தறது? அப்படியே மாற்றினாலும் கேட்பாளா? அவளுக்கு இப்போ தான் முதல் நினைவா இது தோண்றி  இருக்கு... அப்பறம் எப்படி? இறைவா உதய் நினைவு வந்தா கூட பரவாயில்லை... ஆனா அவளுக்கு நடந்த கசப்பான நிகழ்வு மட்டும் அவளுக்கு நினைவே வர கூடாது... என்று இருக்க
       ''செல்வா.....செல்வா.... போதும் சிலை மாதிரி போஸ் கொடுத்தது... கிளம்பலாம் எனக்கு ரொம்ப பசிக்குது... அதனால தான் மூளை வேலை செய்ய மாட்டேங்குது கொஞ்சம் சமோசா வாங்கி கொடுங்களேன்'' என்றே சிணுங்கியவளை கண்டு
      ''மோட்டு பட்லு கார்ட்டூன் கேரக்டர் டயலாக் தானே...?'' என்றே செல்வா கேட்க
     ''ஏய் செல்வா நீயும் பார்பியா?'' என்றே கேட்க அவனோ அவளை  செல்லமாக முறைத்து
      ''நீ தான் டெய்லி கார்டூன் பார்க்கறியே எனக்கு அது எல்லாம் காதுல விழுது அதனால தானே சொன்னேன். நான் எல்லாம் டிவி பார்க்கிறதே கிடையாது... ஒன்லி இங்கிலிஷ் மூவி'' என்றே கலரை தூக்கி சொல்ல
      ''இங்கிலிஷ் மூவி என்றால் எந்த மாதிரி...?'' என்றே முகத்தை உற் என்றும் நெற்றி சுருக்கி கேட்க
      ''ஏய் அடிங்க என்ன பார்த்தா எப்படி தோணுது... ஐ அம் எ குட் பாய்... சயின்ஸ் பிக்ஷன்... ஜேம்ஸ் பாண்ட் மூவி, பையிட் மூவி... ரேஸிங் கார் மூவி அப்படி தான்''
       ''சார் தமிழ் படம் எல்லாம் பார்க்க மாட்டிங்களா?'' என்றே ஆராதனா கேட்க
      ''ஹ்ம்ம் பார்ப்பேன் ஷங்கர் மூவி மணிரத்தினம் சார் மூவி... இப்படி''
     ''அப்போ கார்ட்டூன் பாட்டு இது எல்லாம்...?''
     ''கார்ட்டூன் உன்னால பார்க்கலை... கேட்கறேன்... பாட்டு காரில் போகும் பொழுது வரும் பொழுது கேட்பேன்''
      ''செல்வா ரொம்ப குளிருது..'' என்றே நடுங்க அவனுக்கு என்ன செய்வதே தெரியாமல் வீட்டுக்கு சீக்கரம் போகிடலாம் என்றே சொல்லி வண்டியினை ஓட்ட அவளோ அவனின் தோளில் அமர்த்தலாக சாய்ந்து உறங்கினாள்.
             அடிப்பாவி இப்படி கொள்ளுற... நான் தாங்குவேனா? உதய் நினைவு வேற உனக்கு கொஞ்சமா வந்து இருக்கு அதுக்கே கதி கலங்கி போய் இருக்கேன் நீ என்னடா என்னா என் மேலயே சாய்ந்து தூங்கற... உனக்கு நினைவு தெரிந்தா இப்படி நடப்பியா? சத்தியமா அப்படி இருக்க மாட்ட இது எனக்கு கொஞ்ச காலம் கிடைக்கும் பொக்கிஷ நிமிடங்கள்... உனக்கு நினைவு தெரிந்த பிறகு என்னை எவ்ளோ கீழ் தரம நினைப்பாய் என்று எனக்கு தெரியாது ஆனா அப்போவும் எனக்கு என் ஆராதனா ஜெஸிலா தான் கண்-க்கு தெரிவாள். அவளுக்கு தான் இந்த செல்வா... கெட்டவனா தெரிவேனோ? என்றே அவளை பார்க்க அவளோ கதையில் வரும் தேவதை போல காட்சி அளித்தாள்.
     எளிமையான சேலையில்
     எழிலை கூட்டும் பெண் நிலா...
     ஒப்பனை இன்றி வானில்
     ஒளிவீசும் பிறைநிலா...
                 இவளின் மாசு மருவற்ற அழகிலும் அன்பிலும் கரைந்து இருக்க வேண்டும் என்று துடிக்கிறேன்.... என் அவஸ்தை புரிந்து ஏற்பாளா என்றே வண்டியை செலுத்த வீட்டில் வந்து நின்றாள்.
         ஆராதனா தனது வீட்டில் தங்கி இன்றோடு இரு மாதம் முடிய போகின்றது என்று வெற்றி நினைத்து கூட பார்த்து இருக்க மாட்டான்.
        கடற்கரைக்கு சென்ற பின்னர் சில நேரம் பெரிய பெரிய ஷாப்பிங் காம்ப்லெஸ் கூட்டிகொண்டு சென்றான். அவன் அழைத்து சென்ற இடம் எல்லாம் இதுவரை ஆராதனா செல்லாத இடமாகவே அழைத்து சென்றான்.
         சில இடம் ஏற்கனவே பார்த்தது போல இருக்கு என்று அவள் சொல்லி விட்டால் உடனே அந்த இடம் விட்டு கிளம்ப சொல்லிடுவான். அவனுக்கு அவன் வருத்தம்...
            தனியாக இருக்கும் தருணம் எல்லாம் தன்னோடு நடந்து வரும் அந்த உருவத்திற்கு வெற்றி செல்வனின் முகத்தை பொருத்தி பார்த்தாள். முகம் பொருந்தாமல் போனது. உயரம் அதுவும் அப்படியே... அப்போ நான் வேற யாருடனும் போய் இருக்கேனா? முதலில் ஸ்கூல் காலேஜில் போகலாம் என்றாலோ அவளுக்கு யாரையும் தெரியவில்லை அங்கிருந்தவர்களுக்கோ அவளை கண்ட முகமாகவும் இல்லை என்றதும் வெளியேறி விட்டாள்.
       சே என்னை சுற்றி ப்ரெண்ட்ஸ் கூடவா இருக்க மாட்டாங்க? செல்வா மட்டும் தான் எனக்கு உறவா?'' என்றே யோசிக்க செல்வா வீட்டிலும் அவனின் அறையை தவிர வேறு எங்கும் அவளின் புகைப்படம் இருப்பதாகவும் இல்லை.
           தன்னந்தனியாக சில நேரம் பக்கத்தில் வெளியே செல்ல செல்வாவிடம் சம்மதம் வாங்கி இருந்தாள். அதனால அடிக்கடி பக்கத்தில் தனக்கு என்ன தேவை என்றே அவளே வாங்கி வந்து சேர்ந்தாள்.
    யாரிடமும் கேட்டு பெறும் ஆள் அல்ல ஆராதனா.... ஆனால் வெற்றி செல்வனிடம் எதையும் கேட்டு வாங்கும் உரிமையை கொண்டு இருந்தாள். அவளின் மொத்தமும் செல்வாவாக மாறி இருந்த சமயம் உதய் ஒரு முறை அவளை பார்த்தான்.
              உதய் அருகில் சென்று பேசும் எல்லைக்கு செல்ல உடனே கூட்டத்தில் ஆராதனா காணாமல் போயிருந்தாள். அன்று முழுதும் உதய் மனம் அடித்து கொண்டது.
      ஆராதனாவுக்கு நினைவு திரும்பியதா? இப்பொழுது எங்கு இருக்கின்றாள். அவள் அணிந்த உடை அணிகலன்கள் எல்லாம் விலை மதிப்பு கொண்டு இருந்தனவே... அப்படி என்றால் ஆராதனா நல்ல இடத்தில தான் இருக்காளா? அவளுக்கு இப்போ நினைவு தெரிந்ததா இல்லையா? என்றே குழம்பி தவித்தான்.
            மற்றொரு பக்கமோ இன்னும் சில தினங்களில் நடக்கும் தனது திருமணம் நடக்குமா? இல்லை ஆராதனா மேல் கொண்ட காதல் இடையில் வந்து துரத்துமா? என்றே குழம்பி போனான். ஆராதனாவுக்கு நடந்த கொடுமை அவள் அறிந்து இருப்பாளா? நிச்சயம் இருக்காது... அப்படி அறிந்து இருந்தால் அவள் மனம் அப்படி மலர்ந்த பூக்கள் போல காட்சி அளித்திருக்குமா?
             அன்று வெற்றி சென்ற பின்னர் வழக்கமாக மதியம் சாப்பிட்டு பின்னர் போரடிக்க எழுந்து வெற்றி அறை நோக்கி நடந்தாள். அங்கே அவன் தனது உடமைகளை எல்லாம் சரி வர வைத்தே சென்று இருந்தான்.
          சோ ஸ்வீட் பாய் நீட்டா வச்சி இருக்கான்... என்றே அவனின் மெத்தையில் ஒரு புத்தகம் படித்த படி இருந்தாள். சோர்வில் அங்கயே உறங்கினாள். மாலையில் எழுந்தவள் கீழே லட்சுமி அம்மாவிடம் காபி சொல்லி விட்டு அறையை பூட்ட எண்ணி திரும்ப கப்போர்டில் சாவி தொங்குவதை கண்டாள்.
           எப்பொழுதும் அந்த க்போர்ட் முடியே இருக்க இன்று திறந்தே இருப்பதால் பார்க்க எண்ணி ஆவலாக அருகே வந்தாள்.
           அதில் ஆராதனா என்றே எழுதி இருக்கும் பைல்ஸ் பார்க்க யாராக இருக்கும் ஆராதனா என்றே பக்கம் திருப்பினாள். அவளின் புகைப்படம் அதன் கீழ் ஆராதனா என்றே இருக்க புருவம் முடித்து யோசித்து பக்கங்களை திருப்பினாள்.
         அதனை ஒட்டி ஒரு ஹாண்ட் பேக் இருக்க எடுத்து பார்த்தால் டிரைவ்விங் லைசென்ஸ்... சின்னதாய் ஒரு வாட்டர் பட்டேல்... ஒரு மினி பர்ஸ் அதில் சில பணம் என்றே இருக்க ஒரு கவரில் காய்ந்த மல்லிகை பூக்கள்... ஒரு ஸ்டிக்கர் போட்டு... என்றே இருந்தன. கூடவே ஒரு போன்.... அதனை ஆன் செய்ய முயன்றால் ஆனால் அதுவோ உயிர் இன்றி இருந்தன. அதற்கு ஜார்ஜ் போட முடியா சூழ்நிலையில் அதனை அப்படியே வைத்து விட்டு அந்த பைல்ஸ் படிக்க ஆரம்பித்தாள்.
           பெயர் ஆராதனா படிப்பு பிஎஸ்சி என்றும் தந்தை பெயர் பலராமன் தாய் மகேஸ்வரி என்று போட்டு இருந்தன. அப்போ என் பெயர் ஜெஸில் இல்லையா? ஆராதனா ஆரு... ஆரு... இப்படி யாரோ என்னை கூப்பிட்டது நினைவு இருக்கு யாரு? என்றே எண்ணியவள் திரும்ப படிக்கச் செய்தாள். அதில் ஏற்கனவே வெற்றி சொல்லியது போலவே ..... ஸ்கூல் பெயரும் ...... கல்லூரி பெயரும் இருக்க வெற்றி இதுவும் வெற்றி சொல்லியது தான். என்றே பக்கத்தை திருப்பினாள்.
         அதில் பிடித்த நிறம் உடை நடிகர் நடிகை பிடித்த உணவு மெனு காய்கறி பழங்கள் பிடித்த வேலை... என்றே இருக்க ஹ்ம் தனக்கு லட்சுமி அம்மா கேட்கும் பொழுது இது எல்லாம் தானாக சொல்லிய நினைவு வந்து சிரித்தாள். ஆக நினைவு தப்பினாலும் எனக்கு பிடிச்ச உணவு உடை என்றே தேர்ந்து எடுத்து இருக்கேன்... கிரேட் ஜெஸில்... என்றே கூறி கொண்டவள் சே இல்லை ஆரு... என்றே சொல்லி கொண்டாள்.
            அடுத்த இரு பக்கத்தில் பிடிக்காத விஷயம் எல்லாம் இருக்க தன்னை பற்றி யார் இப்படி தெரிந்து பைல் பண்ணி வச்சி இருப்பாங்க என்றே அதிர்ந்தாள். எதற்கா இருக்கும் என்றே திருப்ப... இதற்கு முன் இருந்த இடமும் இப்பொழுது இருக்கும் இடமும் மட்டும் முரண்டியது. மேலும் படித்த படி இருக்க அவளின் முகம் மாறியது. அதே முகத்தோடு கதவை திறக்கும் சப்தம் வந்த வழியே பார்க்க அங்கே முதலில் சிரிப்புடன் பார்த்த வெற்றி பின்னர் நடுக்கத்தோடு அவளை ஏறிட்டான்.
     ''எதுக்கு இப்படி பண்ணினீங்க? சொல்லுங்க ஏன் இப்படி பண்ணினீங்க?'' என்று ஆராதனா கேள்வியில் மிரண்டு யோசனை செய்ய துவங்கினான். போச்சு இவளுக்கு எல்லாம் தெரிந்து போச்சு... என்றே மவுனமாக தலையை குனிய செய்தான். 

   -தொடரும்

-பிரவீணா தங்கராஜ்.

Comments

Post a Comment

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1