ஸ்டாபெர்ரி பெண்ணே- 21

  🍓 21
                       இன்று வரவேற்பு என்றதும் எங்கிருந்து தான் பயம் வந்து ஒட்டிக்கொண்டது.
     ''செல்வா எனக்கு யாரையும் தெரியாது..... நான் தனியா என்ன செய்வேன்''
      ''நீ எப்படி தனியா இருப்ப உன் செல்வா உன்கூடவே இருப்பேன்''
      ''இல்லை உங்கள தெரிந்தவர்கள் வந்ததும் பேசுவ.. வாழ்த்து சொல்லுவாங்க... நீ அவங்களை கவனிப்ப...'' என்றே  பேசிக்கொண்டு போனவள் இதழில் கையினை வைத்து
      ''ஜெஸில் இந்த உலகத்திலே எனக்கு நீ தான் முக்கியம் ஜெஸில் உன்னை தனியா விட்டுட்டு எப்பவும் வேடிக்கை பார்க்க மாட்டேன்...''
       ''நிஜமா...'' என்றே கேட்க
      ''ஹ்ம்ம் என்றே நெற்றியில் இதழ் ஒற்றினான்.
                 ஆராதனா என்ன நினைத்தாளோ அவனின் நெஞ்சில் சாய்ந்து இமையை முடி நின்றாள்.
        நாழிகை நகர  ''ஹுக்கும்..'' என்றே கரகர குரலில் சுந்தர் செருமிக் கொண்டே வர ஆராதனா விலகி நின்றாள்.
     ''சார் எல்லாம் ரெடி நீங்க சிஸ்டர் வருவது தான் பாக்கி.... என்றே சொல்ல ஆராதனா கையை பற்றியே நடந்தான். வெற்றி கையை பற்றியதும் இதுவரை இருந்த தனிமை சென்று எனக்கு என் வெற்றிசெல்வன் இருக்கார் என்றே நடந்தாள்.
              எல்லோரையும் முறுவலுடன் கடந்து மேடையில் ஆராதனா ஏற்றி பின்னர் அவனும் கூடவே இருந்தான்.
            எங்கும் ஒளிர்வோடு கண்ணை கவரும் அலங்காரத்தோடு இருக்க ஆராதனா தான் கொஞ்சம் பயத்தோடு இருந்தாள். வந்தவர்கள் எல்லோரும் வாழ்த்தி புன்னகையோடு சென்றாலும் ஒரு வித பயம் இருக்க அதனை வெற்றி கை பற்றும் பொழுது இல்லாமல் போவதும் அறிந்தாள்.
         இவனின் ஒரு தொடுகை... என் உள்மனதில் பயங்கள் போக்கி விடுகின்றன.... என்றே அதிசயித்து பிரமித்தாள்.
              கொஞ்ச நேரம் போக மேடையின் முன் வந்து கொண்டு இருந்தான் உதய்...
          ஆராதனா மனம் கலங்கியது. சே என் உண்மை காதலை சுமந்து கொண்டு வெற்றி வருவான் என்று அறியாமல் அவசரத்தில் உதய் காதல் சொல்லியதும் ஒப்புக்கொண்டேன். இப்பொழுது அவன் விலகி போனதும் வெற்றி காதல் நானாக ஏற்றுக்கொண்டேன். உதய் என்னை என்ன நினைப்பான்...? என்றே வருந்தி பிடி தளர அதனை உணர்ந்த வெற்றி அவள் கண்கள் பார்க்கும் திசைக்கு சென்று மீண்டது. உதய் வருவதை உணர்ந்து வெற்றியே வரவேற்றான்.
      ''வாங்க உதய்... நீங்க தனியா வந்து இருக்கீங்க...? உங்க உட்பி அழைத்து வருவீங்க என்றே எதிர் பார்த்தேன்'' என்றே வெற்றி சொல்லியதும் ஆராதனா மனம் இதை எப்படி மறந்தேன்... என்னை முதலில் விலக்கியது உதய் தான் அவனின் விலகளில் தான் நான் வெற்றி காதலை உணர்ந்தேன். அப்படி உதய் மட்டும் என்னை தாய்மை அடைய முடியாது என்று தெரிந்தும் காதலிக்க துவங்கி இருந்தால் நான் உதய் காதலை எண்ணி அவன் பின் நின்று இருப்பேனோ என்னவோ...? நல்ல வேளை உதய் மறுத்ததும் எனக்கு நல்லது. இல்லை என்றால் என் மீது இப்படி காதலை அள்ளி வழங்கும் செல்வா எனக்கு கிடைத்து இருக்க மாட்டான் என்றே எண்ணி இருக்க உதய் பேசினான்.
     ''நீங்க தான் வா என்று வரவேற்கறீங்க ஆரு... மன்னிச்சுடுங்க ஆராதனா என்னை கண்டு முகம் சுருங்கி இருக்காங்க?''
      ''சே சே அப்படி இல்லை... அவள் கொஞ்சம் மிரண்டு இருக்கா..? எல்லோரும் தெரியாத ஆட்கள் அல்லவா?'' என்றே கூறியதும் கஷ்டப்பட்டு முறுவலித்தாள் ஆராதனா.
       ''சாரி ஆராதனா.... மன்னிப்பு எதுக்கு என்று சொல்ல தேவையில்லை... ஆனா... ஆராதனா உனக்கு வெற்றி நல்ல பொருத்தம்.... என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்'' என்றே கொடுக்க வெற்றியை பார்த்துக் கொண்டே வாங்கினாள்.
     ''ஜஸ்ட் ரிலாக்ஸ் ஜெஸில்... '' என்றே கையை அழுத்த அமைதியாக மெல்லிய குரலில் தேங்க்ஸ் உதய்... '' என்றே சொன்னாள்.
     ''அப்பறம் சாப்பிட்டு தான் போகணும் என்றே சுந்தரை அழைத்து அழைத்து போக சொல்ல சுந்தர் உதய் மற்றும் செல்வாவை பார்த்து திருதிருவென முழித்து கொண்டே அழைத்து சென்றான்.
        இந்த பாஸ் எப்படி உதய்யை இன்வைட் பண்ணார்.... கடவுளே இதெல்லாம் நின்று பார்க்க ஒரு கட்ஸ் வேணும் தான் வெற்றி சார் கடவுள் உங்க பக்கம்' என்றே முனங்கி கொண்டே சென்றான் சுந்தர்.
                  வெற்றி மனம் எல்லாம் தனது தேவதை கை பற்றிய நினைவில் வானில் இறக்கை இன்றியே பறந்தான்.
            விருந்து உபசாரம் எல்லாம் போய் கொண்டே இருந்தன. பபே சிஸ்டம் என்பதால் அவர் அவர் தேவையை அவர் அவர் அள்ளி உண்டனர். உணவுகள் ருசியாக இருந்தாலும் உதய் மனம் உண்பதில் ஆர்வம் காட்ட வில்லை. ஆராதனா தாய்மை அடையாவிட்டாலும் தானே மணந்திருக்க வேண்டும் என்றே எண்ணி குமைந்தான்(இப்போ பீல் பண்ணி என்ன பண்றது).
          ஆனால் அவன் கையை மீறி நிகழ்வுகள் போன பின் என்ன செய்ய என்றே திரும்பி நடந்தான். அப்பொழுது எதிரில் ஒருவன் மேலே மோதி விட
     ''சாரி சார்... நான் பார்க்கலை...'' என்றே உதய் மன்னிப்பு கேட்க
     ''யூ டாமிட்... நீ..நீயா... நீ எப்படி இங்க...?'' என்றே கேட்க உதய் புரியாமல் குழம்பி போனான்.
       உடனே அருகே இருந்த ஒருவன் ஓடி வந்து காதில் ''சார் இவன் வெற்றியோட கெஸ்ட்...'' என்றே முனங்க
      ''அவன் எப்படி... அவன் செய்ததுக்கு அவனை பழி வாங்க சொன்னேன்.. அவன் சார்ந்த யாரையாவது அவன் முன்ன காயப்படுத்தி.. அவன் இயலாமையை புகட்ட சொல்லி இருத்தேனே... என்ன ஆச்சு?'' என்றே சொல்லி கொண்டே போக இதனை உதய் புத்தி கேட்டாலும் யார் இவன் என்றே யோசிக்க செய்தான்.
         அவனுக்கு ஒன்றும் தோன்றாமல் அவனையே பார்த்து கொண்டே இருந்தவன். பின்னர் ஆராதனா வெற்றி அருகே இருப்பதை தாங்கி கொள்ள முடியாமல் வெளியேறினான்.
            ஆராதனா அருகே அந்த புதியவன் பரிசு கொடுத்து வாழ்த்து தெரிவித்து கிளம்பினான். அவனுக்கு உதய் பார்த்ததிலிருந்து எண்ணங்கள்  பாதையில் ஓடியது.
          உதய் வீட்டுக்கு போனதும்
     ''என்ன அவளை பார்த்து வாழ்த்தி விட்டு வந்தாச்சா.... அப்பறம் அங்க கல்யாண சாப்பாடு சாப்பிட்டியா?'' என்றே குத்தலாக கேட்க உதய் தனது தாயை சொல்லியதற்கு எதற்கும் பதில் சொல்லாமல் வந்து கதவை தாழிட்டான்.
       உதய் பெரும் போராட்டத்திற்கு பின் தன்னை சமன் செய்து தான் கல்யாணம் செய்ய போகும் பெண் மகிளா-வின் என்னை அழுத்தினான்.
      ''ஹலோ...''
      ''ஹலோ மகி''
     ''சொல்லுங்க ... கல்யாணத்துக்கு போக போறதா சொன்னிங்க... போய்ட்டு வந்திங்களா?''
      ''ஹ்ம்ம்...''
      ''நான் ஒன்னு கேட்கவா?''
      ''கேளு மகி''
       ''உங்களை பிடிக்கலை என்றே போன பெண்ணை தேடி ஏன் இன்னும் போறிங்க.... அத்தை என்கிட்ட நிறைய திட்டினாங்க... உங்களை..''
        ''மகி ஆரு... சே ஆராதனா என்னை பிடிக்கலை என்று சொல்லலை.. நான் தான் வேணாம் என்றே விட்டுட்டேன். ஏன் எதுக்கு என்று கேட்காதா...''
        ''ஆனா அத்தை.. என்கிட்ட...''
\        ''எல்லார் கிட்டயும் அப்படி தான் சொன்னேன். அதுக்கும் அவ என்னை திட்டலை... அவள் நல்லவள்... அவள் மனசு கேற்றவாறு தான் வாழ்க்கை அமைச்சுஇருக்கு''
      ''உங்களுக்கு...?''
     ''எனக்கும் நல்ல பெண் தான் கிடைச்சு இருக்க மகி... இல்லை என்றால் எனக்கு மனசு கஷ்டமா இருக்கு உன்னை கூப்பிட்டு இருப்பேனா? சொல்லு''
      ''ஹ்ம்ம்...''
      ''மகி.... என் அம்மா கல்யாணத்துக்கு பிறகு எப்படி இருந்தாலும் குடும்பத்தோட ஒன்றி இருப்பல?''
      ''நிச்சயமா... அத்தை பற்றி தெரியாதா... எல்லோரை மாதிரி கொஞ்சம் எதிர் பார்ப்பு அதிகம் கொண்டவங்க....உதய் ஆராதனா ரொம்ப அழகு அப்படி இருந்தும் எதுக்கு அவளை விடுத்து என்னை தேர்ந்து எடுத்தீங்க... ப்ளீஸ் எதுவானாலும் சொல்லுங்க எனக்கு காரணம் சொல்லிட்டீங்க என்றால் நிம்மதி யா இருக்கும்''
     ''அது.. அது... மகி நான் சொல்வதை நீ ஆராதனாவிடம் கேட்கவோ இல்லை என் அம்மாவிடம் சொல்லவோ கூடாது... அப்படினா சொல்றேன்''
      ''கண்டிப்பா சொல்ல மாட்டான்.. ஆராதனாவிடம் கேட்கவும் மாட்டேன்...''
      ''ஆராதனாவுக்கு ஒரு விபத்தில் வயிற்றில் பலமா அடிபட்டதால் தாய்மை அடையை முடியாது என்று டாக்டர் சொல்லிட்டாங்க... அப்போ அவளுக்கு நினைவு வேற போயிடுச்சு எனக்கு அது தெரிந்தும் அவளை புது மனுசியா     பார்க்கட்டும் தாய்மை அடையமுடியாது என்று தெரிஞ்சுக்க வேண்டாம் என்றே விட்டுட்டு வந்துட்டேன்... நான் கூட இருந்தா அவளுக்கு என் காதலித்தது நினைவு வர வாய்ப்பு இருக்கு என்றே அப்படி செய்தேன்.. அந்த சமயத்தில் தான் வெற்றி பார்த்து அவளை பாதுகாத்து காதலை சொல்லி இருக்கார். நினைவு இல்லை என்பதால் ஆராதனா வெற்றியை ஏற்றுக்கொண்டாள்.
       இப்போ ஒரு வாரம் முன்ன என்னை பார்க்க வந்தா என் கல்யாண விஷயம் தெரிந்து காரணத்தை கேட்டால் சொன்னேன் வாழ்த்தினா வெற்றி கல்யாணம் என்று அடுத்த நாளே பேப்பரில் பார்த்தேன்  இன்னிக்கு வரவேற்பு... நான் செய்தது தப்பு தான் ஆனா அப்போ என்னால எதையும் யோசிக்க முடியல...'' என்றே சொல்ல
     ''தப்பு பண்ணிட்டீங்க உதய்... நீங்க ஆராதனாவோட இருந்து இருக்கனும் உண்மை தெரிந்த பிறகு அவளே எப்படியும் உங்களை மணக்க ஒப்புக்கொண்டு இருக்க மாட்டாள் அதுக்கு பிறகு நீங்க முடிவு செய்து இருக்கலாம்... அதான் உண்மையான காதலுக்கு அழகு... சரி விடுங்க.. நடந்ததை யாராலும் மற்ற இயலாது... ஆராதனாவுக்கு வெற்றி செல்வன் என்பது கடவுள் முடிச்சு...''
     ''மகி உனக்கு என் மேல வெறுப்பு இருக்கா? சுயநலமா முடிவு எடுத்ததால்..?''
     ''ஹ்ம்ம் உண்மை சொன்ன கொஞ்சம் வெறுப்பு வந்துச்சு.. ஆனா நிதர்சனம் ஏற்றுக்கணும்.. எந்த ஒரு ஆண்மகனும் விரும்புற ஒரே பதவி அப்பா என்பதை தான் அப்படி பார்த்தால் உங்கள் கண்ணோட்டம் சரி... ஆனா மனதின் உண்மை காதல் உணர்ந்து யோசிச்ச நீங்க செய்தது தப்பு தான். இதே திருமணத்துக்கு பிறகு ஒரு பெண் தாய்மை அடையலை என்றால் விட்டுட்டு போவீங்களா?''
     ''இதே தான் வெற்றி என் முகத்தில் அறைந்தது போல கேட்டார்... மகி...''
      ''சரி விடுங்க.. உங்களுக்கு நான் எனக்கு நீங்க என்று எழுதி இருக்கு... ஆராதனா மேல எனக்கு கோவம் இருந்தது அது இப்போ இல்லை.... நீங்க என்கிட்ட இப்போ உண்மையை சொன்னதால் எனக்கு கொஞ்சம் நிம்மதி தான்... என்னை முழுதாய் மனதால் மனைவியாய் ஏற்றுக்கொண்டு சொல்லியது''
      ''தேங்க்ஸ் மகி...நீ துங்கு''
     ''ஹ்ம் என்றே வைத்தான். எதோ மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்தன. மகியிடம் இது சொல்லியதே போதும் ஆராதனாவிற்கு நடந்த கசப்பு வேண்டாம் நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்றால் இதை சொல்லாமல் இருப்பதே நல்லது என்று எண்ணினான்.
  இன்று வரவேற்பில் தன்னிடம் அப்படி நடந்தவன் யார்? அவனுக்கும் எனக்கும் என்ன பிரச்சனை? யார் அவன்...?'' என்றே ஓடி கொண்டு இருந்தன.

-தொடரும்

-பிரவீணா தங்கராஜ்.

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1