ஸ்டாபெர்ரி பெண்ணே-20
🍓20
உதய் அம்மா ரத்தினம் அதிகாலையில் உதையின் அறை கதவை உடைக்கும் அளவுக்கு தட்டினார்கள்.
''டேய்... டேய்... எவ்ளோ நேரம் கூப்பிடறது.... உதய்....'' என்றே தட்ட
''இரும்மா...'' என்றான். இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்லை.... என்றே முனங்கி கொண்டு
''என்னம்மா?'' என்றான் உதய்
''இங்க பாரு டா... ஆரு ஆரு என்று உருகினியே.... பார்த்தியா... எவனோ
பணக்காரன் கிடைச்சதும் தான் உன்னை உதறி தள்ளி இருக்கா...?'' என்றே பேப்பரை
காட்ட உதையோ வேகமாக வாங்கி பார்த்தான்.
நேற்று திருமணம் என்றும் அதனை இன்று அறிவிப்பதாக போடபட்டு
இருந்தன. ஆராதனா தங்கமும் வைரமும் சேர்ந்து இழைத்தது போல போட்டோவில்
இருக்க... கூட வெற்றி கம்பீரமாக நிற்பதும்... இன்னொரு சிறிய புகைப்படத்தில்
ஆராதனா வெற்றி இருவரும் ஒருவரை ஒருவர் கண்கள் கலைக்க பார்ப்பதும் இருந்தன.
உதைக்கு அதற்கு மேல் அதனை பார்க்க முடியவில்லை. ஹாலில் டேபிளில் வைத்தவன் அப்படியே அமர்ந்தான்.
''அவள் தானே டா இது.... சொல்லு...'' என்றே உலுக்க
''ஆமாம்... ஆரு.. ஆராதனா தான் இது... இப்போ என்ன?'' என்றான்.
''ஏன் டா உனக்கு கோவமே இல்லையா... அவள் உன்னை வேணாம் என்று சொல்லி வேறொருத்தன் கூட...''
''ம்மா நிருத்தறியா.... ஆராதனா ஒன்னும் என்னை வேண்டாம் என்று
சொல்லலை... நான் தான் சொன்னேன்... என் மேல தான் தப்பு... போதுமா... இனி அவளை
பற்றி ஒரு வார்த்தை சொல்லாதீங்க... அவள் நல்ல மனசுக்கு தான் நல்லது நடந்து
இருக்கு...'' என்றே அறைக்கு சென்றான்.
தான் ஒதுக்கிய கோவத்தில் வெற்றியை திருமணம் செய்து கொண்டாளா? அதுவும் அடுத்த நாளே....?
உதய் அம்மா வாயினுள் ஈ சென்றாலும் தெரியாத அளவுக்கு
இருந்தார்கள். பேப்பரை பார்த்து ஆராதனாவை பார்த்து பெருமூச்சு விட்டார்கள்.
தான் தான் வேண்டாம் என்றே சொன்னது. அவள் அழகுக்கு தன்னை மகன் மதிக்க
மாட்டான் என்றே பயந்து... ஆனால் இப்படி ஒரு அழகான மருமகளை கைவிட்டதும்
இப்பொழுது அவர்களுக்கு கவலை தான்.
உதய் வெற்றிக்கு கால் செய்து வாழ்த்தினான். வாழ்த்துக்களை ஏற்று
வெற்றி வரும் ஞாயிறு வரவேற்புக்கு அழைப்பு விடுத்தான். உதய் மறுக்க
தோன்றாமல் சரி என்றே சொன்னான்.
இதே வலி தானே நேற்று ஆராதனாவுக்கு இருந்து இருக்கும்... என்றதும் அமைதி கொண்டான்.
வெற்றி ரொம்ப வேகமா என் ஆராதனா மனசை மாற்றிட்ட... அவள் என் மேல
வச்சி இருக்கற அன்பு ஒரு கட்டாயத்தில் வந்தது என்று எனக்கு முன்னவே
தெரியும்... ஆனா நீ அவளிடம் உண்மை காதலை கொண்டு வந்துவிட்ட சமர்த்தியம்
அதிகம் தான்.
வெற்றிக்கு மலையை புரட்டி எடுக்கும் பொறுப்பாக வரும் போனை
எல்லாம் அட்டன் செய்து வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டு
இருந்தான்.
ஆராதனா போட்டோ எடுக்கும் பொழுது கூட இப்படி வரும் என்று
நினைத்து இருக்க மாட்டாள். ஆனால் அதனை பேப்பர் வடிவில் பார்த்துவிட்டு
மணிக்கணக்கில் அதனையே ரசித்தாள்.
போனில் நன்றி கூறிக்கொண்டே ஆராதனாவை கண்டு அவளிடம் வந்து அமர்ந்தான்.
''என்ன ஜெஸில் பேப்பரையே பார்த்துகிட்டு இருக்க?''
''செல்வா.... ரொம்ப நல்லா வந்து இருக்கு இல்லை''
''அதுதான் தெரியுமே... சரி ஷாப்பிங் போகலாமா...?''
''அது எதுக்கு செல்வா?''
''எதுக்கா? சரியா போச்சு... நாம வரவேற்புக்கு டிரஸ் எடுக்கம்மா...''
என்றான் அருகே நெருங்கி அமர்ந்து ஆராதனாவுக்கு நடுக்கம் வர மெல்ல
நெளிந்தாள்.
''என்னாச்சு ஜெஸில்....?'' என்றான்
''இல்லை நீங்க...'' என்றே அமைதியாக இருக்க ''சொல்லு ஜெஸில்...'' என்றே முகம் நோக்கி பார்க்க
''இவளோ கிட்ட வந்து பேசினா எனக்கு மூச்சு முட்டுது'' என்றே சொல்ல
''ஏன்...?''
''ஏன்னா... உங்க மூச்சு கற்று வெட்பமா என்மேல தாக்குது... என்னால உங்களை நிமிர்ந்து பார்க்க முடியலை..''
''என் ஜெஸில்-க்கு பயமா? ஹ்ம்ம் நீ என் கையை புடிச்சுகிட்டு ஊட்டி
விடும் பொழுது எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா ...?'' என்றே அவளின்
முகத்தில் கண்கள் இதழ்கள் என்றே பார்வையை மாற்றி மாற்றி பார்க்க அவளோ தலையை
நிமிர படாத பாடுபட்டாள்.
''ஜெஸில்.....?''
''ஹ்ம்ம்...''
''என்னை பாரு''
''முடியலை...''
''சரி எப்பவும் ஒரு கேள்வி முன்ன வச்சிக்கிட்டு இருப்பியே இப்போ அது எல்லாம் இல்லையா?'' என்றான் புன்னகையோடு.
''இல்லை.... ஒரு கேள்வி இருக்கு... கேட்கவா?'' என்றே சொல்ல
''ஏய் இன்னும் என்ன கேள்வி? அதான் எல்லாம் தெரிந்துடுச்சே... என்றான் முகத்தில் சாதாரணமாக... அவன் முகம் சாதாரணமாக மாறியதும்
''இருக்கே... ''
''சரி கேளு...''
''என் பேர் ஆராதனா தானே...?''
''ஹ்ம்ம் ஆமா''
''அப்போ எதுக்கு ஜெஸில் என்று கூப்பிடறீங்க?''
''அதுவா... உன்னை எல்லோரும் ஆராதனா என்றும் ஆரு என்றும் கூப்பிட்டு
இருப்பாங்க... பட் நான் உன்னை யாரும் கூப்பிடதே பேரில் கூப்பிடனும் என்றே
நினைத்து இருந்தேன். அதுக்கு ஏற்றார் போல நீ நினைவு இல்லாமல் இங்க வந்து
கேள்வி மேல கேள்வி கேட்டியா.. அப்போ தான் எனக்கு ஒரு மூவி நினைவு
வந்துச்சு...'' என்ன என்றே பார்வையில் ஆராதனா கேட்க
''இங்கிலிஷ் மூவி என்சான்ட்டெட் (ENCHANTED) அதுல கார்ட்டூன்
உலகத்துல இருந்து வந்த ஹீரோயின் நிஜ உலகத்துல இருக்கற ஹீரோகிட்ட சதா கேள்வி
கேட்டுட்டே இருப்பா அதான் அதையே வைத்து விட்டேன். அதுவும் இல்லாமல் அதுல
ஒரு ரியாக்ஷன் என்று இல்லாமல் அவளோட முகபாவனை என் ஜெஸில் மாதிரியே
இருக்கும் அதனால அதுல கூப்பிடறது கெஸில் பட் நான் ஜெஸில் என்றே கூப்பிட்டேன்''
''ப்பா.... உங்ககிட்ட ஒவ்வொன்றுக்கு ஒரு வரலாறு வச்சி இருப்பிங்க
போல.... '' என்றே சொல்ல பின்னர் இருவரும் ஷாப்பிங் கிளம்பினார்கள். ஆராதனா
எதை எப்படி எடுக்க என்றே தடுமாற சிம்பிள் அண்ட் கார்ஜிஸியஸ்ஸா தேர்ந்து
எடுத்தாள். அவனுக்கோ
''நீ எப்படி இருந்தாலும் எனக்கு ஓகே ஜெஸில்...'' என்றே கண் சிமிட்ட ஆராதனா சுற்றி முற்றி பார்த்து
''செல்வா நீ அக்கம் பக்கம் பார்க்காம என்னை பார்த்துட்டு இருக்க இது சரியில்லை... கிளம்பு'' என்றே அவனை தள்ள
''எவ்ளோ நாள் கனவா போயிடும் என்றே நினைச்சேன்.... தெரியுமா... எனக்கு... இந்த ஜென்மதுக்கு இது போதும் ஜெஸில்'' என்றே சொல்ல
''செல்வா பசிக்குது.... '' என்றே சொல்லியதும் உடனே உணவகத்துக்கு அழைத்து சென்றான்.
ஆராதனாவுக்கு இது ஆச்சரியம் தான் தானா இப்படி வாயை திறந்து
செல்வாவிடம் கேட்டது. இது போல தான் உரிமையோடு யாரிடமும் கேட்டு நினைவு
இல்லை அவளுக்கு... நிஜமாகவே செல்வாவிடம் அவளுக்கு ஜென்ம பந்தம் இருக்குமோ
என்றே நினைக்க துவங்கினாள்.
அதே தான் அவனும் சொன்னான்.
''நீ இப்படி உரிமையா கேட்கறது ரொம்ப பிடித்து இருக்கு ஜெஸில்.... என்னை எனக்காக வந்த பெண் நீ ஜெஸில்...'' என்றே சொல்ல
''போதும் செல்வா பேசாம சாப்பிடுங்க.. விட்டா பேசிட்டே இருப்பிங்க'' என்றதும் புன்னகைத்து கொண்டே உணவை உண்டான்.
-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.
LOVELY
ReplyDelete