ஸ்டாபெர்ரி பெண்ணே -11

 🍓11
         ஆராதனாவோ இடையில் கையை வைத்து நிற்க வெற்றி பேச ஆரம்பித்தான்.
      ''எதுவும் சொல்லாதீங்க... அதை கேட்க நான் தயாராயில்லை...'' என்றே சொல்ல, போச்சு எனக்கு என் பக்கம் இருக்கும் நியாயம் கூட சொல்ல விட மாட்டேங்கிறா... என்றே அமைதியாக இருக்க
     ''இப்படி ஜெஸில் ஜெஸில் என்று கூப்பிட்டா எனக்கு எப்படி நினைவு வரும்? என் பெயர் ஆராதனா தானே?'' என்றாள் அவள். அவளின் முகத்தில் இருந்து நினைவு திரும்பவில்லை ஆனால் எதையோ பார்த்து ஏதோ கேட்க செய்கின்றாள் என்றே அறிந்து கொண்டான். அதனால கொஞ்சம் நிம்மதியோடும் பயத்தோடும்
      ''எனக்கு எப்போவும் ஜெஸில் தான் அதனால அப்படி தான் கூப்பிடுவேன்...''
      ''ஹ்ம்ம் அப்போ யாரு என்ன ஆராதனா என்று கூப்பிடறது? சரி என்னை ஆரு என்று யார் யாரெல்லாம் கூப்பிடுவாங்க?'' என்றே கேள்வி கேட்க
       ''அதுலயே போட்டு இருக்குமே...'' என்றான்.
      ''இதுல படிப்பு அது இது என்று எல்லாம் இருக்கு நீங்க சொன்னது தான்... ஆனா நீங்க ஜெஸில் என்று கூப்பிட்டது தான் வித்தியாசமா இருக்கு...''
       ''சரி இதுல ஒரு அட்ரஸ் இருக்கு நாம இங்க இருக்கோம் எப்படி?''
       ''நாம கொஞ்ச நாள் முன்ன தான் இங்க வந்தோம்... நீ அதுவரை அங்க தான் படிச்சா இங்க வரும் பொழுது தான் ஆக்சிடேன்ட் ஆச்சு அதனால...''
       ''அதனால தான் டிரஸ் கூட இங்க இல்லை சரியா?'' என்றே கேட்டவளுக்கு
       ''ஹ்ம்ம்'' என்றே தலையை அசைத்தான்.
      ''செல்வா இந்த ஹாண்ட் பேக் என்னோடதா?''
       ''ஹ்ம்ம் ஆமாம்''
       ''இதுல ஒரு ஆபிஸ் id கார்டு இருக்கே அப்போ அதுல தான் வேலைக்கு போனேனா? என்றாள்.
         அதற்கும் ஹ்ம்ம் என்றே சொன்னான். இந்த மல்லிகை பூ எதுக்கு கவரில் இருக்கு என்றே கேட்க
    அவனோ சில பல மாதங்களுக்கு முன் ஆராதனா தலையில் இருந்து அப்பொழுது தான் வைத்து வந்த மல்லி சரம் கீழே விழ கீழே விழுந்ததை சூட கூடாது என்ற காரணத்தால் அவள் அதனை எடுக்கவில்லை. ஆனால் செல்வாவோ எடுத்து பாத்திரம் படுத்தியது.
      ''கேட்கறேன் சொல்லுங்க செல்வா''
      ''அது நீ வாங்கி சூட வச்சி இருந்த ஆனா மறந்துவிட்டாய் இவ்ளோ நாள் பேக்ல இருந்ததால் வாடிவிட்டது. என்றே பதிலளித்தான்.
       ''இந்த போன் கூட என்னோடதா?'' என்றே கேட்க செல்வாவுக்கு திக்கென்றது.
      ''ஹ்ம்ம் ஆமா போன் கீழே விழுந்து ஏதோ ஒர்க் ஆகலை... கொடு நான் ஜார்ஜ் போட்டு கொடுக்கறேன்'' என்றதும் யோசிக்காமல் கொடுத்து விட்டாள் ஆராதனா.
      ''நீ கீழே போ நான் டிரஸ் சேஞ்சு பண்ணிட்டு வர்றேன்'' என்றதும் தலையை சரி என்றே உலுக்கி சென்றாள்.
             சே எப்படி இதை மறந்தேன்... போனில் நிச்சயம் உதய் ஆராதனா சேர்ந்த போட்டோ இருக்கும் அப்பறம் கால் லிஸ்ட் போன் நம்பர் இது எல்லாம் டெலீட் பண்ணனும். என்றே போனை ஜார்ஜில் போட்டுவிட்டு கதவை தாழிட்டு குளித்தான். அதற்குள் பாதி ஜார்ஜ் ஏறியதும் ஓபன் செய்து வேக வேகமாக அவளின் எல்லா காண்டக்ட்ஸ் போட்டோ என்று ஒன்று விடாமல் அழித்தான்.
          பின்னர் நிம்மதி அடைந்தவுடன் ஜார்ஜ் ஏறிட அவனோ கீழே வந்து உணவை உண்டான்.
       ''ஆராதனா இந்த இன்னும் கொஞ்சம் போல குழம்பு ஊற்றி சாப்பிட்டு பாரு'' என்றே லட்சுமி அம்மா சொல்ல உணவை விழுங்க சென்றவன் மிரட்சியோடு பார்த்தான். ஆராதனா தான்
     ''என்ன செல்வா நீ ஜெஸில் என்று கூப்பிடு மற்றவங்க வாயில் ஒழுங்கா வரணும் அதுவும் இல்லாமல் என் பெயர் ஆராதனா தானே அதான் அவங்க அப்படி கூப்பிடறாங்க... நீ ஏன் இப்படி ரியாக்ஷன் கொடுக்கற'' என்றதும்
      ''ஒன்றுமில்லை.. ஜெஸில்...'' என்றே உணவை உண்டான்.
                 அலுவலகத்தில் அடுத்த நாள் சுந்தரை அழைத்து அந்த உதய் இப்போ என்ன செய்யறான்? அவனுக்கு மேரேஜ் முடிச்சதா இல்லையா?'' என்றான் கோவத்தோடு
      ''பாஸ்... சார்... நம்ம அவசரத்துக்கு கல்யாணம் செய்ய முடியுமா? அவருக்கு வருகின்ற 30 ஆம் தேதி கல்யாணம்...'' என்றான்.
      ''இன்னிக்கு என்ன தேதி?'' என்றான்.
      ''சார் இன்னிக்கு தான் இந்த மாசம் ஆரம்பிக்குதே... இன்னிக்கு இரண்டு தேதி...'' என்றே சொல்ல வெற்றி தான் மனதில் வலியோடு அங்கும் இங்கும் சுற்றினான்.
      ''என்னாச்சு சார்.....ஆராதனா மேடமுக்கு ஏதாவது நினைவு வந்ததா சொன்னாங்களா?''
       ''ஹ்ம்ம்.. கடற்கரையில் ஒரு உருவம் தன்னோட பேசிட்டு வருது ஆனா அது நான் இல்லையாம் ஏன்னா அது அவளின் உயரம் தான் இருக்குதாம். நான் அவளை விட உயரம் என்பதால் அந்த உருவம் நான் இல்லை வேற யாரா இருக்கும் என்று என்கிட்டயே கேட்கறா... அதுவாது பரவாயில்லை அவளோட பைல் என்னோட க்போர்ட் இருந்து எடுத்து அவளின் பெயரை தெரிந்து கொண்டா அதோட அவளின் ஹாண்ட் பேக் ல அவளோட போன் இருந்துச்சு... தேங்க் காட் அப்போ அவளிடம் பேசி வாங்கிட்டேன். சார்ஜ் போட்டு நானே தருகின்றேன் என்று சொல்லிட்டு வந்துட்டேன்''
      ''பாஸ் போனை கொடுக்காதீங்க... எ

ஏதோ ரிப்பேர் அது இது என்று சொல்லி சமாளிச்சுடுங்க...''
       ''இல்லை சுந்தர்... அவளிடம் நான் கொஞ்ச நாளா சில விஷயம் சொல்ல மாட்டேங்கிறேன் என்று அவளுக்கு தெரியுது. அதனால போனை கொடுக்காமல் இருந்தா அவள் சந்தேகம் அதிகமாகும்... ஏற்கனவே தனக்கு என்ன நடந்துச்சு என்று அவள் குழம்பி தவிக்கும் பொழுது எனக்கு உள்ளுக்குள் பதறுது... போனில் இருப்பதாய் எல்லாம் டெலிட் பண்ணிட்டு கொடுக்க முடிவு செய்து இருக்கேன்...'' என்றே போனை ஆன் செய்து எல்லா போட்டோவும் அழித்தான். பெரும்பாலும் ஆராதனா தனியாக இருந்தாலும் பாதிக்கு உதய் கூட தான் இருந்தான் அதனாலே ஒவ்வொன்றாக பார்த்து அழிப்பதை விட மொத்தமாக அழித்தான். அதே போல எண்ணையும் தான் சிம் வேறு மாற்றி வைத்தான். அதில் தனது எண் சுந்தர் எண் வீட்டின் எண் மட்டுமே பதிவு செய்து இருந்தான்.
           வெற்றி செய்த தவறு அதில் உள்ள எல்லாவற்றையும் அழித்தது. கொஞ்சம் போல அழித்து இருந்தால் அவளுக்கு நிஜமாகவே சந்தேகிக்கும் எண்ணம் வராது ஆனால் அவனோ அதனை செய்ய மறந்து இருந்தான்.
          இரவில் போனை அவளிடமே கொடுத்து விட்டான். ஆன் செய்து பார்த்தவள் எதிலும் தெளிவான ஒரு யூஸ் இல்லாமல் போகவே குழம்பினாள்.
      ''ஏன் ஒரு போட்டோ கூட இல்லை.. ஒரு எண்ணும் இல்லை?'' என்றே கேட்க
      ''கீழே விழுந்ததில் எல்லாம் ரீ ஸேஸ்ட் ஆகி போச்சு ஜெஸில்.... கேள்வி மேல கேள்வி கேட்காதே... ப்ளீஸ்... உனக்கா நினைவு வரும் பொழுது வரட்டுமே... எதுக்கு இப்படி ஸ்ட்ரைன் பண்ணி யோசிக்கற... தேடற...'' என்றே கேட்க
      ''எனக்கு என்ன பற்றி நான் வாழ்ந்த வாழ்க்கை பற்றி ஒன்றுமே தெரியாது செல்வா அப்டி இருக்க எதாவது ஒரு விஷயம் நான் எப்படி பட்ட கேரக்டேர்  என்றே யோசிக்கிறேன் உங்களுக்கு என்ன செல்வா'' என்றே கேட்டதும் அவன் மனம் முகம் இரண்டும் வாடி விடுவதை கண்டு கவலை கொண்ட ஜெஸில் வருந்திட வெற்றியோ
        ''ஏன் ஜெஸில் நல்லதோ கெட்டதோ எப்பவும் என்னை விட்டு போக மாட்டல சொல்லு ஜெஸில்...'' என்றான் வெற்றி.
       ''உன்னை விட்டு எப்பவும் போக மாட்டேன் செல்வா... ப்ராமிஸ்..... சரி எதுக்கு இப்படி கேட்கற?'' என்றே ஆராதனா கேட்க
        ''தெரிலை ஜெஸில் கேட்கணும் என்று தோணுச்சு'' என்றே எழுந்து கொண்டான்.
       இவ்விட்டில் காலையில் சேர்ந்து சாப்பிடும் வழமையும் இரவு சேர்ந்து சாப்பிடும் வழமையும் இருக்க அப்பொழுது பேசி கொள்ளும் இந்த நேரமும் வெற்றிக்கு ஏதோ மனம் பாரமாக இன்று தோன்றியது.  


-தொடரும்

 பிரவீணா தங்கராஜ்

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1