ஸ்டாபெர்ரி பெண்ணே- 25

 🍓25

   பெயர் ஜெகதீஷ் வயது 29..பார்கவி வயது 44.. என்றே தொடர்ந்து பெயர் போய் கொண்டு இருந்தன.
       ஆராதனா தான் ''யார் உங்களுக்கு தெரிந்தவர்களா?'' என்றே கேட்க
      ''ஹ்ம்ம் ஆமா..'' என்றே வெற்றி போன் செய்து சுந்தரை அழைக்க சுந்தர் ஜெகதீஷ் மும்பை சென்ற நிலவரம் மட்டும் சொன்னான். பின்னர் வெற்றி விமான விபத்து பற்றி சொல்ல
      ''சார் உங்க பிசினெஸ் பண்ண கேட்டீங்க இப்போ என்ன செய்ய சார்''
       ''அது விடு வேற ஏற்பாடு பண்ணிக்கலாம்'' என்றே வைத்தான்.
       ''சார் வெற்றி சார்... அவர் தானா...?''
       ''ஹ்ம்ம்...'' என்றே ஆராதனா பார்த்து இப்போ எதையும் பேசதே என்றே சொல்ல அமைதியாக மாறினான். பின்னர் கிளம்பும் நேரம்
         உதய் தான் மிகவும் பயந்து போனான். என்ன இது மனிதன் கொல்ல துடித்தவன் இறந்து விட்டான். அப்பவும் கூலாக இருக்கான் என்றே இருந்தான்.
          ''உதய் நீ என்ன நினைக்கிறாய் என்றே தெரியுது.. எனக்கு கடவுள் துணை இருக்கார்.. அதான் அவனை அவரே பார்த்துக்கிட்டார்'' என்றே சொல்ல
     ''சார் அதுக்காக கூட எத்தனை உயிர் சே... எனக்கு அதை கேட்டதும் சாப்பிட கூட முடியலை...''
     ''ஹ்ம்ம் எனக்கும் அதான் கவலை.. இது எதுவும் நம்ம கையில் இல்லையே... இது அதுக்காகவே தனக்கு சாதகமாக அமைந்த நிகழ்வு மட்டுமே... ஜெகதீஷ் கொல்ல எண்ணி இருந்தவனுக்கு கடவுளாக எழுதிய விதியில் நஷ்டமில்லையே  என்றவன்... உதய் கிளம்ப வெற்றி ஆராதனாவை தேடி அறைக்கு வந்தான்.                                                                        
                நாட்கள் கடக்க உதய் திருமண நாள் வந்து சேர்ந்தன. ஆராதனா வர மறுக்க வெற்றி தான் வற்புறுத்தி அழைத்து கொண்டு வந்தான்.
     ''ஐயோ செல்வா எனக்கு தலை சுத்துது... நேற்று வேற லட்சுமிஅம்மா கிட்ட செய்ய கற்றுக் கொண்ட பிஸிளோபாத் நானே செய்யறேன்னு செய்து சாப்பிட்டேன் வாயில் வைக்க முடியலை.... இருந்தும் சாப்பிட்டேன்... அது வேற காலையில் வாந்தி வந்துடுச்சு... ப்ளீஸ்...நான் வீட்டிலே இருக்கேனே...'' என்றே சொல்ல
     ''ஏன் ஜெஸில் குழந்தை மாதிரி காரணம் சொல்லாதே... அவன் நம்ம கல்யாணத்துக்கு வந்து இருந்தான். இப்போ நீயும் வர எதிர் பார்ப்பான்''
      ''நான் ஒன்னும் உதய் என் கல்யாணத்துக்கு வருவான் என்றே நினைக்கலை... எல்லாம் உன் வேலை.... போ என்னை கூப்பிடாத நீ வேணுமின்னா அவன் கல்யாணத்துக்கு போ...''
     ''ஏன் ஜெஸில் இப்படி பேசற.. அவன் உன்னை விரும்பி விலகி போயிட்டான். அதுக்காக அவன் கல்யாணத்துக்கு வர கூடாது என்று காரணம் தேடாதே... நடப்பில் எல்லார் மனதிலும் ஒரு காதல் வந்து இருக்கும் அதுக்காக அது வெற்றி பெறலை என்று காதலிச்சவனை பார்க்கவே கூடாது என்று எல்லாம் இல்லை... சொல்ல போன அவனை நீ உண்மையா விரும்பலை... எதோ அவன் லவ் பண்றேன்னு சொன்னதும் ஓகே சொல்லிட்ட... அவ்ளோ தான்'' என்றே புரிய வைக்க முயல
      ''செல்வா நிஜமாவே அவனை பார்த்து கல்யாணத்துக்கு வர கூடாது என்று யோசிக்கலை... எனக்கு வயிறு சரியில்லை டா.. தூக்கமா வருது''
      ''ஏன் டி இப்படி எல்லாம் சொல்ல உனக்கு சைல்டுஷீ ஷா இல்லை... டிவில தான் பொம்மை படம் பார்த்து காரணமும் சில்லியா சொல்லற கிளம்பு'' என்றே வற்புறுத்தினான்.
                 ஆராதனாவுக்கு செல்ல எந்த தயக்கமும் இல்லை... அங்கு உதய் அம்மா என்ன பேசுவார்களோ.. உதய் திருமணம் செய்ய போகும் பெண் தன்னிடம் நட்பாய் பேசினாலும் அவளின் மனதில் என்ன உள்ளதோ.. எல்லோரும் செல்வா போல இருக்க மாட்டார்கள். அது இவனுக்கு எப்படி உணர்ந்த... அதுக்கு மேல் இந்த தலை சுற்றல்.. நிஜமாவே தூக்க தூக்கமா வருது... இந்த செல்வா நம்ப மாட்டேங்கிறான்... என்றே புடவை உடுத்தி தயாராகினாள்.
                ஏற்கனவே வெற்றி உதய் பணி செய்யும் இடத்தில் அவனுக்கு நார்த் பக்கம் கிளையில் பணி மாறுதல் செய்து விட்டான் வெற்றி. இதை உதய் கூட அறியாமல் பார்த்து கொண்டான். அவனுக்கு ஆராதனா பற்றி உண்மை அறிந்த உதய் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பினை சென்னை கொடுக்கும் என்பதால் அப்படி அவன் செல்வாக்கை பயன்படுத்தி ஏற்பாடு செய்தான்.
         உதய் இன்று வரை சொல்லவில்லை என்றாலும் அடிக்கடி பார்க்கும் வாய்ப்பை தவிர்க்க எண்ணினான். ஆரதனாவுக்கு என்றும் தெரிய கூடாது என்ற நோக்கத்தில்.....
          அம்மண்டபத்தின் வாசலில் காரை பார்க் செய்து இறங்கினார்கள்.
                      உதய் அம்மா அப்பா இருவரில் அப்பா மட்டும் வரவேற்றார். உதய் அம்மா எதுக்கு வந்தாளோ என்ற பார்வை தான் பார்த்தார். செல்வாக்கு புரியாமல் இல்லை ஆனால் உதய் மனத்திற்காக வந்தான்.
            இருவரையும் கண்டதும் உதய் மகிழிச்சியில் திளைத்து மேடையில் இருந்த படி வரவேற்றான்.
        உதய் அக்கினியில் எழும்பிய புகையில் ஆராதனா கொஞ்சம் அவஸ்த்தையாக உணர்ந்தாள்.
         தாலி கட்டியதும் கிளம்பிட வேண்டும் என்றே சொல்லி தான் வந்தாள். அதற்காக காத்திருந்தாள்.
         உதய் தாலி அணிவிக்கவும் எல்லோரும் ஆசிர்வதித்து முடிக்க பரிசு கொடுக்க வெற்றி மேடையில் அழைத்தான் போட்டோ எடுக்க சொல்லவும் வேறு வழியின்றி ஆராதனா நின்றாள். அந்த போட்டோ ஒளி கண்களை கூச போட்டோ கிளிக் ஆனதும் ஆராதனா மயங்கி சரிந்தாள்.
            வெற்றி தான் தாங்கி பிடித்து ஜெஸில் ஜெஸில்...'' என்றே கன்னத்தை தட்ட
     உதய் அம்மா வேகமாக வந்து ''இதுக்கு தான் கல்யாணத்துக்கு இவளை அழைக்காதே என்றே சொன்னேன்.. பாரு கல்யாணம் நிறுத்த மயங்கி விழ பார்த்து இருப்பா அது முடியாம இப்போ விழுறா...'' என்றே சொல்ல வெற்றி முறைத்த முறைப்பில் கப் சிப் என்றே மவுனமாக மாறினாள்.
           அவளை கீழே அழைத்து வந்து சேரில் அமர்த்த திருமணத்திற்கு வந்த ஒரு மருத்துவர் அவளை சோதித்து அச்செய்தியை சொன்னார்.
          வெற்றி செல்வனுக்கு அச்செய்தியை கேட்டு தனது காதையே நம்பாமல் இருந்தான். ஆராதனாவோ அந்த மருத்துவரிடம் இருமுறைக்கு மேலாக தான் தாய்மை செய்தியை கேட்டு அப்படியா என்றே கேட்டு கொண்டே இருந்தாள்.
        இது எப்படி சாத்தியம் என்றே இருவரும்.. அதிர்ச்சியோடு ஆனந்தத்தில் திளைக்க மேடை விட்டு வந்த உதய்
     ''வாழ்த்துக்கள் ஆராதனா எனக்கு நிஜமாவே ரொம்ப சந்தோசமா இருக்கு... நீங்க எதுக்கோ ஹாஸ்பிடல் பார்த்துவிட்டு எனக்கு மறுபடியும் சொல்லுங்க.. உடனே போங்க...'' என்றே விரைவு படுத்தினான்.
       வெற்றிக்கும் அதுவே நல்லது என்றே தோன்றியது. ஏன் என்றால் ஆசை வளர்த்து பிறகு கவலை கொள்ள கூடாது என்றே எண்ண கிளம்பினார்கள். மகிளா முன் வந்து
      ''ஆராதனா நீங்க நிச்சயம் அம்மா தான் ஆகி இருப்பிங்க எனது வாழ்த்துக்கள்...'' என்றே கை கொடுக்க வெட்கத்தோடு கை கொடுத்து செல்வாவை பார்த்து கிளம்ப செய்தார்கள்.
           இருவருமே காரில் எதுவும் பேச வில்லை.. ஆசையாக பேசி பிறகு.... என்றே அமைதியாக மருத்துவமனைக்கு வந்தார்கள்.
        அங்கே ஆராதனாவிற்கு முன்பு மருத்துவம் பார்த்த டாக்டர் இருக்க வெற்றி கொஞ்சம் பயந்து விட்டான். முதலில் டாக்டர் வெற்றியை பார்த்ததும் நினைவு வந்து விட்டது. முதலில் வெற்றியை அழைத்து என்ன விஷயம் என்றே கேட்க அவன் தயங்கி தயங்கி சொல்ல ஆரம்பித்தான்.
              ஆராதனாவோ ''டாக்டர் ஒரு முறை எனக்கு அடிபட்டு பழசை மறந்து இருந்தேன்... அப்போ உங்களிடம் தான் ட்ரீட்மென்ட் பார்த்தேன். இப்போ எனக்கு பழசு நினைவு வந்துடுச்சு...'' என்றே சொல்ல டாக்டர் வெற்றியை கேள்வியாய் பார்க்க
      ''டாக்டர் அது வந்து அவள் திருடன் தள்ளி விட்டு கீழே விழுந்த வரை அவளுக்கு நினைவு வந்துடுச்சு'' என்றே அவசரமாக டாக்டரிடம் அவனும் ஒப்புவித்தான். அதிலே புரிந்து கொண்ட டாக்டர் பயப்படாதே நான் சொல்ல மாட்டேன்.. என்றே பார்வை பரிமாற்றம் செய்து கொண்டார். வெற்றி நிம்மதியாக மூச்சு விட்டான்.
     ''அதெல்லாம் எதுக்கு.. டாக்டர் அப்போ எனக்கு தாய்மை அடைய முடியாது என்றே சொன்னிங்க.. பட் இன்னிக்கு எனக்கு அதிகமா தலை சுற்றல்... வாந்தி மயக்கம் எல்லாம் இருந்தது... . உடல் வேற சோர்ந்து தூக்க தூக்கமா வந்துச்சு.. மயங்கிட்டேன்.. அப்போ ஒரு டாக்டர் கையை புடிச்சு அம்மாவாக போறதை சொல்லறார்... அது உண்மையா... என்றே தெளிவு படுத்திக்கொள்ள வந்தோம்'' என்றே முழு மூச்சாக சொல்லி முடித்தாள் ஆராதனா.
      ''கொஞ்சம் பொறுமா... நான் உன்னை தாய்மை அடைய முடியாது என்றே சொல்லலை.. பத்து சதம் தான் வாய்ப்பு இருக்கு என்றேன். நீ தொடர்ந்து மருந்தும் மாத்திரையும் உட்கொண்டாலே போதும் என்றேன். எதுக்கோ செக் செய்துடலாம் வா.... உனக்கு இப்போ எத்தனை நாள் ஆகி இருக்கு'' என்றே அழைத்து சென்றார்.
     ''35 டேஸ் தான் டாக்டர் ஆனா சிம்டம்ஸ் எல்லாம்......'' என்ற குரல் தோய்ந்து கதவு மூடியது.
         அரை மணி நேரம் செல்வா மனம் அதிகமாகவே துடித்தது. ஜெஸில் வேற இன்னும் வெளியே வரவில்லை.. என்றே கலங்கி போனான்.
         டாக்டர் எந்த முடிவும் என்னிடம் சொல்லுங்க என்று முன்னரே கூறி இருக்க காத்திருந்தான்.
            ஜெஸில் வெளியே வந்து அவனோடு அமர்ந்தாள்.
     ''எ..என்... என்னாச்சு ஜெஸில்...'' என்றே வார்த்தையினை கோர்த்தான்.
     ''வெளியே வெய்ட் பண்ண சொன்னாங்க செல்வா'' என்றே சோர்ந்தாள்.
          நிறைய பேருக்கு 50 60 நாட்கள் கூட தள்ளி சென்று அது பொய் என்றே சொன்ன செய்தியும் அறிந்த காரணத்தால் இந்த 35 நாட்கள் நம்ப இயலாமல் தான் இருந்தாள் ஆராதனா. இருப்பினும் டாக்டர் சொல்லும் வார்த்தைக்காக தவம் செய்தார்கள்.
           டாக்டர் இருவரையும் உள்ளே அழைக்க இருவரும் வந்து நின்றார்கள்.
      ''வெற்றி ஆராதனா காங்கிராட்ஸ் நீங்க அப்பா அம்மாவாக போறிங்க வாழ்த்துக்கள்... நிஜமாவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு... வெற்றி உங்கள் காதல் தான் இந்த பெண்ணுக்கு பெரிய மாற்றம் நிகழ்த்தி இருக்கு...'' என்றே சொல்ல
       வெற்றி ஆராதனாவை அணைத்து முத்த மழை பொழிய துவங்கினான்.  ஆராதனா அவனின் முத்த மழையில் திக்குமுக்காடி இருக்க கனைக்கும் சத்தம் எழுப்பினர் டாக்டர் நிஷாந்தினி...
      ''என்ன வெற்றி.. இது ஹாஸ்பிடல்... இருந்தாலும் உங்க அன்பில் எனக்கு வேடிக்கை பார்க்க சலிக்கவேயில்லை....'' என்று சொல்ல ஆராதனா வெட்கம் கொண்டு செல்வா நெஞ்சில் முகம் புதைத்தாள்.
      ''டாக்டர் இது எப்படி சாத்தியம்... நீங்க குறைந்த அளவு தானே ஹோப் தந்திங்க...?'' என்றே கேள்வி முன் வைக்க
       ''நீங்க காட்டும் அன்பும் உணவு முறையும் கூட உங்க ஒய்ப் கரு உருவாக செய்து இருக்கலாம்... இல்லை இதோ இப்போ அணைத்து அன்பை வெளிப்படுத்தினீர்களே.. அதோட மேஜிக் கூட இருக்கலாம்...'' என்றே சொல்ல
       ''தேங்க்ஸ் டாக்டர்... தேங்க்ஸ் எ லாட்...'' என்றே சொல்லி என்ன என்ன உணவினை தவிர்க்க வேண்டுமோ அதை எல்லாம் கேட்டு கொண்டும் எதை எதை சாப்பிட வேண்டுமோ அதனை தெரிந்து கொண்டும் இன்முகத்தையோடு கிளம்பினார்கள்.
                        அதே நேரம் வெற்றி போன் அழைப்பு வந்தன.

-தொடரும்.

-பிரவீணா தங்கராஜ்.

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1