ஸ்டாபெர்ரி பெண்ணே-3

 🍓 3
 
           உதய் ஆராதனா அழகை கண்டு விரும்பியவனா? அவளுக்கு இப்படி ஆனதும் சராசரி ஆண்மகனாக யோசிக்கின்றானா? என்றே யோசிக்க உதயிடம் பேச அருகே செல்ல அவனோ ஆராதனா இடம் நோக்கி சென்றான். அவனை தொடர்ந்து ஆனால் இடைவெளி விட்டே நின்று இருக்க உதய் ஆராதனாவிடம் பேச ஆரம்பித்தான்.
      ''சாரி ஆராதனா என் முன்னால உன்னை தூக்கிட்டு போய் இருக்காங்க ஆனா நான் உன்னை அந்த பொறுக்கிங்களை ஒன்னும் பண்ண முடியலை... அவனுங்களை சகா அடிக்கணும் என்று இருக்கு ஆனா என்னால முடியாது. என்னால தான் உன் பெண்மை போயிடுச்சு... நான் உன்னை காப்பாற்றி இருக்கனும்... எல்லாம் என்னாலே தான்.. ''என்றே தலையில் அடித்துக் கொண்டான்.
      ''சாரி ஆராதனா என்னால எல்லாம் மறந்து உன்னோட வாழனும் என்றாலும் நீ தாய்மை அடைய மாட்டேன்னு சொல்லிட்டாங்க என் அம்மாவுக்கு எல்லாம் எனக்கு வாரிசு வேண்டும் என்று இருப்பாங்க. உன்னால அப்படி தர முடியாத பட்சத்தில் அவங்க உன்னை எப்படியும் வெறுப்பாங்க. அதுக்கு பிறகு வேறொரு பெண்ணை தான் கல்யாணம் செய்ய சொல்லி என்னை வற்புறுத்துவங்க... 

உனக்கு தாலி கட்டி எல்லாம் தெரிந்தும் அந்த கஷ்டம் வேற கொடுக்க எனக்கு மனசு இல்லை ஆரு... அதுக்கு பதிலா உனக்கு நினைவு இல்லாமல் நீ புதுசா ஒரு வாழ்க்கை வாழ ஆரம்பி அது தான் நல்லது. நான் ஒரு சுயநலவாதி என்று நினைவு வந்து நினைச்சாலும் பரவாயில்லை... என்னை மன்னிச்சுடு ஆரு... நான் உன் வாழ்க்கையில் இருந்து போறேன்'' என்றே கைகளை பிடிக்க போனவன் அவள் எப்பொழுதும் பிடிக்க விடாமல் இருப்பதால் தானாக கையை இழுத்து கொண்டான்.
         நீ எப்பவும் கையை பிடிக்க விட மாட்ட இப்போ  நிஜமாவே நம்ம கைகளை பிடிக்க விடாம செய்துடுச்சு...  மன்னிச்சுடு ஆராதனை''  இதெல்லாம் கேட்டு கொண்டு இருந்த வெற்றிக்கு என்ன செய்வதே என்றே தெரியவில்லை.
          நல்லது என்று விட்டு விடவும் மனமின்றி அவனோடு போகவும் பேசவும் மனம் மறுத்தது. உதய் வேகமாக வெளியேறினான்.
      அதே நேரத்தில் சுந்தர் போன் செய்தான். ''பாஸ் டிவி நியூஸ் பாருங்க...'' என்றே சொல்ல டிவி ஆன் செய்தான் போனில்...
       நான்கு சக்கர வாகனத்தில் சென்ற இருவரை பிரேக் பிடிக்காத லாரி ஒன்று மோதியதில் கண்ணன் சுப்பு என்ற இவர்கள் அவ்விடத்திலே உயிர் இழந்தார்கள். இவர்கள் பற்றி தகவல் அறிந்தோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி என்றே முடிய வெற்றிக்கு அப்பொழுது தான் மீண்டும் சினம் வந்து அமைதி ஆனது.
        சுந்தர் மீண்டும் போன் செய்தான். ''பாஸ் இதுவரை நம்ம டீலின்ங்ல யாரையும் சகா அடிச்சது கிடையாது... இவர்கள் யார் எதுக்கு இவர்களை....?'' என்றே நிறுத்த
       ''ஆராதனாகிட்ட வம்புக்கு வந்த பசங்க.... அவளை அடிப்பட வச்சி ஹாஸ்பிடலில் சேர்த்து இப்போ தான் சரி ஆகி இருக்கா ஆனா அவளுக்கு பழைய நினைவு வரவில்லை... அதுக்கு தான்'' என்றே சொல்லி முடிக்க இது நாள் வரை சுந்தர் வெற்றியை ஆராதனாவை விரும்பு மனிதர்... இன்னொருவனுக்கு மனைவி ஆகும் பெண் என்றாலும் துரத்தி துரத்தி தூரத்திலே விரும்பும் மனிதர் என்றே நினைக்க இன்று ஆராதனவிற்கு இரு உயிர் பலியானதை நினைத்து திகிலாக உணர்ந்தான்.
              அடுத்த நாள் டாக்டர் ஆராதனாவை பார்க்க வர அங்கெ உதய்-க்கு பதில் வெற்றி நிற்க
      ''அவர் எங்கே?''
      ''கிளம்பிட்டார்...'' என்றதும்
      ''அதனே பார்த்தேன்... என்னடா மேரேஜ் பண்ணிக்க போறேன் என்று சொன்னவன் இதை கேட்டும் அமைதியா இருந்தானே என்று இந்த ஆண்களே அப்படி தான். வெறும் உடலுக்கு லவ் பண்ற ஆளுங்க சே...''
       ''மேடம் அப்படி சொல்லாதீங்க... அவருக்கு என்ன கவலையோ?'' என்று நிறுத்தினான்.
       ''நீங்க யாரு? ஆமா நீங்க இவர்களோடு தானே வந்து சேர்ந்திங்க? இந்த பொண்ணு உங்களுக்கு என்ன வேண்டும்?''
       ''எனக்கு அவ என்ன வேண்டும் என்று அவள் தான் முடிவு பண்ணனும். சாரி... அவளை ஒன் சைடு லவ் பண்றேன் அவளுக்கு தெரியாது'' என்றே பார்வையை வெறித்தான்.
       ''பண்றேன் என்று சொல்றிங்க இப்பவும் மா?'' என்றே ஆச்சரியமாக, 

        ''நான் சகற வரைக்கும் லவ் பண்ணுவேன் டாக்டர்...''
       ''அவளுக்கு என்ன பிரச்சனை என்று தெரிந்தா நீங்களும் அவரை போல ஓடுவீங்க'' என்றே ஆராதனா ரிப்போர்ட் பார்க்க
      ''அவள் பெண்மை அவளுக்கு தெரியாம இழந்து இருக்கா... அவளுக்கு தாய்மை கிடைக்காது.. அப்பறம் நினைவு மறந்து இருக்கா? அவ்ளோ தானே டாக்டர்'' என்றான்.
      ''என்ன சார் அவ்ளோ தானே என்று சாதாரணமா சொல்றிங்க? இது எல்லாம் எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா?''
      ''தெரியும்... இப்போ சொன்னது எல்லாம் விட பெரியது என் ஆராதனா இப்போ உயிரோட இருக்கறது எனக்கு அது போதும்'' என்றே சொல்ல டாக்டர் அவனை வினோதமாக பார்க்க ரிப்போர்ட் பார்த்து முடித்த டாக்டர்
      ''அவங்களை டிஸ்சார்ஜ் பண்ணிடலாம். அவங்க கொஞ்ச நாள் வீட்டில் பெட் ரெஸ்ட் எடுத்தாலே போதும் அப்பறம் நார்மலா ஆகிடுவாங்க... நான் கொடுக்கற மாத்திரை கண்டிப்பா கொடுங்க... அவர்களை அவங்க தினமும் சந்திக்கும் நிகழ்வுக்கு அழைச்சுக்கிட்டு போங்க சீக்கரம் நினைவு திரும்பும். அப்பறம் அவங்களுக்கு நடந்த நிகழ்வு சொல்லுவது சொல்லாததும் உங்க இஷ்டம்''
      ''தயவு செய்து நீங்க சொல்லிடாதீங்க டாக்டர் அவளுக்கு எதுவும் தெரிய வேண்டாம். புது மனுசியா பிறக்கட்டும்'' என்றே ரிப்போர்ட் வாங்கி கொண்டான்.
       அவனே மொத்த தொகையை கட்டி முடித்தான். மெல்ல எழுந்து அமர்ந்தவளை டாக்டர் வெற்றி சொல்லி கொடுத்தது போல
      ''உனக்கு ஒன்னுமில்லை... நீ ரோட்டில் வரும் பொழுது உன்கிட்ட திருட முயன்றவர்கள் தள்ளி விட நீ கீழே விழுந்து தலையில் அடிபட்டு சுயநினைவு இழந்து இருக்க வேற ஒன்றுமில்லை... இவர் தான் உன் கார்டியன் வெற்றி செல்வன்'' என்றே வெற்றியை அறிமுகப்படுத்த முதல் முதலாக அவனை பார்த்தாள் ஆராதனா...  'வெற்றி...' என்றே முனுமுனுத்து அவனை அளவெடுத்தாள்.
          தலையில் அடிபட்டு இருக்க அது தன்னால் என்றே அறிந்து கொண்டாள். ஆறடி உயரம்... அதற்கு ஏற்ற உடற்கட்டு.... முழுக்கை சட்டையினை மடித்து இருந்தான் அதில் அவனின் வலிய கரம் தெரிய அதில் உயர் ரக கை கடிகாரம் மின்னியது. கண்கள் மின்சாரத்தை குத்தகை எடுத்து போல இழுத்தது. அளவான நாசி அதன் கீழே நறுக்கி வைத்த மீசைகள் என்றே இருக்க  அவனை பார்த்த நினைவு இல்லை என்றே வருந்தினான்.

 இவனை போய் எப்படி மறந்தேன்? இப்படி கொள்ளை கொள்ளும் அழகோடு இருக்கும் இவனை ஏழேழு ஜென்மமும் மறக்க முடியுமா? இப்படி ஒரு அடிபட்டதால் மறந்து இருக்கேன் என்றே வருந்த அவளை அதிகம் யோசிக்க செய்யாமல் ''கிளம்பலாம்'' என்றே கூறிட அவனின் குரலில் வசிய சக்தி இருக்கும் என்றே எண்ணியுடன் நடந்தாள்.
              காரில் முன் பக்கம் ஏறி அமர்ந்து அக்காரினை வியப்பாக கண்டு இருந்தாள். என்னை அவரின் கார்டியன் என்று சொல்லி இருக்கார்.. அவருக்கு நான் என்ன உறவு என்றே சொல்லவில்லை... 

 என் அம்மா அப்பா யாருமில்லையா? அப்போ நான் எப்படி வளர்ந்தேன்... என்ன படிச்சேன்... எங்க இருக்கேன்.. இவர் யார்... என்கிட்ட எதுவும் பேசாம வருகின்றார்... இவரிடம் நான் அதிகம் பேசுவேனா? இல்லை இவரை போலவே அமைதியாக இருப்பேனா? என்றே கேள்விகள்  மனதில் துளைக்க அமைதியாக வந்தாள்.
               அவனுக்கோ தான் செய்கின்ற செய்கை சரியா தவறா.. என்பதைவிட ஆராதனா தற்பொழுது தன்னோடு வரவழைத்து கொள்வதே நிம்மதி என்று உணர்ந்தான். மற்ற அனைத்து விஷயமும் யோசிக்க தோன்றவில்லை... எதுவான பொழுதும் பார்த்து கொள்வோம் என்றே எண்ணி கொண்டான்.

தொடரும். 

பிரவீணா தங்கராஜ்.  

tag பண்ண ரொம்ப நேரமெடுக்கு. உங்களுக்கும் எனக்கும் எளிதாக ஒரு வழி உண்டு. blog ல follow னு இருக்கு அதை கொடுத்த notification தானா உங்களுக்கு வந்துடும். choice is urs 

என்னோட பதிவு தினசரி வந்திடும். எப்படியும் ரீடர் குரூப் ramanichanidaran group ஸ்டோரி ஷேர் பண்ணுவேன். 

என்னோட ஸ்டோரி மிஸ் link share சட்டுனு தெரியலைனா மேகதூதம் தமிழ் நாவல்கள் குருப் ல இருக்கும். அதுல 4 பேர் லிங்க் மட்டும் இருப்பதால் எளிதாக கண்டறியலாம். தவறாக எண்ணாதீர்கள் 2 kids வச்சிட்டு tag பண்ண கொஞ்சம் சிரமமா இருக்கு. online கிளாஸ் வேற இருக்குல.. try to understand thanks 

Comments

Post a Comment

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1