ஸ்டாபெர்ரி பெண்ணே-7
🍓7
விடியல் கதிரவனின் உதவியால் ஜன்னல் திரை மீறி முகத்தில் பட
எழுந்தான் வெற்றி அவனின் அருகில் பால் நீட்டி ஆராதனா நின்று இருந்தாள்.
வெற்றி நெஞ்சில் மேல அவளின் ஒற்றை ரோஜா இருக்க அதனை மறைக்க முயன்றான்.
''நீ எப்போ வந்த?'' என்றே எழுந்து டேபிளில் வைத்து முகம் அலம்ப
''முதலில் ப்ரெஷ் செய்து இந்த பால் பிரட் சாப்பிடுங்க...'' என்றே சொல்ல
''எனக்கு இது எல்லாம் பழக்கம் இல்லை ஜெஸில்..''
''ப்ளீஸ்...செல்வா நேற்று நீங்க சாப்பிடலை... அதுக்கு நான் தான்
காரணம் அதனால் முதலில் சாப்பிடுங்க'' என்றே அவனை கை பிடித்து அமர வைக்க
அதில் தானாக அமர்ந்து சாப்பிட்டான்.
''அந்த போட்டோ எடுத்துவிட்டியா?''
''எதுக்கு எடுக்கணும் செல்வா... இந்த வீட்டின் பெரியவங்க... அவங்க
போட்டோ அங்க தான் இருக்கணும். உங்களுக்கு அவங்க விட்டுட்டு போன கஷ்டம்
இருக்கும் தான் ஆனா அவங்க அன்பை புரிந்து கொள்ளுங்க. மாமா எவ்ளோ காதல்
அத்தை மேல வச்சி இருந்தா அவங்க செய்யாத தவறை எண்ணி அத்தை விஷம்
குடிச்சாலும் மாமாவும் அவங்க கண் எதிரில் விஷம் குடிச்சு அத்தைக்கு அவங்க
உண்மையா இருந்தேன் என்று கடைசி நொடியில் புரிய வச்சி இருக்காங்க. இதே மாமா
உயிரோட இருந்து காலம் முழுக்க தவிச்சாலும் அத்தைக்கு புரிய வைக்க முடியாம
போனா மாமா மனம் எப்படி பாடுபடும். இப்போ நமது வாழ்கை துணைவி ஸ்தானம்
அத்தைக்கு மட்டுமே இருக்கு என்றே உணர்த்தி விட்டார்''
''அப்போ அவங்க செய்தது சரி என்றே சொல்றியா ஜெஸில்?''
''உண்மையா விரும்பியவங்க சில தவறு இரண்டு பேருமே செய்துவிட்டாங்க...
உங்களை எண்ணி பார்க்கவில்லை தான் இருந்தாலும் அவங்க காதல் உணர்த்த அப்போ
மாமாவுக்கு வேற வழியில்லையே.... ஒருத்தருக்கு நன்மை தான்.... இறக்கும்
மனைவிக்கு தெரிவிக்க உங்களை மறந்துவிட்டார்.. அதுக்காக அவரின் கோவிக்க
முடியுமா? ஒன்றை புரிந்து கொள்ளுங்க செல்வா... ஒருத்தருக்கு நன்மை செய்யும்
பொழுது சில பொய் சொல்றது எப்படி தப்பில்லையோ... அதே மாதிரி ஒருவருக்கு
உண்மை தெரிவிக்க அவங்க உங்களை மறந்ததும் தவறில்லை செல்வா'' என்றே ஆராதனா
சொல்லி முடிக்க
''ஜெஸில் எனக்கு இதை மட்டும் சொல்லு... நமக்கு நெருக்கமானவங்க
நலத்துக்கு அப்போ பொய் சொல்றதும், உண்மையை மறைப்பதும், தப்பில்லை தானே?''
என்றே கேட்க ஆராதனா என்ன என்று யோசிக்காமல்
''ஆமா செல்வா.... சரி தான் தப்பில்லை'' என்றே முடிக்க அவளின் கைகளை எடுத்து தேங்க்ஸ் ஜெஸில் இது போதும்'' என்றே மகிழ்ந்தான்.
''சரி கீழே வாங்க உங்ககிட்ட இன்னும் சில கேள்விகள் இருக்கு'' என்றே
சிரித்தபடி போக வெற்றியோ போச்சு டா கேள்வியா கேட்பா போல இருக்கே...
இன்னிக்கு என்ன கேட்க போறாளோ? இந்த சுந்தர் கிப்ட் கொண்டு வந்துட்டான்னா?
தெரிலயே? என்றே சுந்தருக்கு டயல் செய்து முடித்து எடுக்காமல் போக குளிக்க
சென்றான்.
கீழே வந்த ஆராதனா ஹாலில் வெற்றிக்கு காத்திருக்க ''பாஸ் பாஸ் என்றே ஓடியபடி சுந்தர் இருந்தான். ஆராதனாவை கண்டதும்
''குட் மார்னிங் மேடம்...பாஸ் போன் செய்தார் சாரி எடுக்க
முடில...இப்போ எப்படி இருக்கீங்க மேடம்?'' என்றே கேட்க ஆராதனா அவனை
பார்த்து தெரிகின்றதா என்றே ஆராய அவளுக்கோ அவனை பார்த்த நினைவு இல்லை.
''உங்களுக்கு என்ன தெரியுதா? நாம முன்பு சந்திச்சு இருக்கோமா?''
என்றே கேட்க சுந்தரோ மனதில் உங்களை பற்றி டீடைல் கலெக்ட் பண்ணி முதலில்
படித்ததே நான் தான்... உங்களை சில நாள் பாலோவ் கூட பண்ணி இருக்கேன் சொல்ல
முடியுமா?' என்றே எண்ணி சிரிக்க
''ஹலோ முதலில் சிரிக்காம சொல்லுங்க?''
''மேடம் எனக்கு உங்களை தெரியும்.... உங்களுக்கு தான்..''
''மறந்து போச்சு... இல்லை இல்லை நினைவு இல்லை... சரி யார் நீங்க''
''மேடம் போன் செய்து பேசி இருக்கேன். நான் தான் சுந்தர் பாஸ் பிஏ... அன்னிக்கு...''
''ஓகே ஓகே நினைவு வந்துடுச்சு.... ஆமா எதுக்கு என்னை மேடம் என்று சொல்றிங்க?''
''பாஸ் ஓட... அது... மேடம் தான் கரெக்ட்...'' என்றே தலையை சொரிய
அவன் பாஸ் ஓட ஒய்ப் என்றா சொல்ல வந்தான் இல்லை லவர் என்றா ஐயோ பாதியிலே
மறைச்சுட்டானே என்று கடுப்பில்
''ஹலோ சுந்தர்.. நான் ஒன்னும் உங்க மேடம் இல்லை பேர் சொல்லி
கூப்பிடுங்க'' என்றே சொல்ல சுந்தரோ மனதில் ஆஹா பாஸ் ஏதோ பேர் சொன்னார்
எனக்கு அப்போ மனசில் பதியலை இப்போ ஆராதனா மேடம் பேர் சொல்ல சொல்றாங்க என்ன
பேர் சொல்லுவது... என்றே முழிக்க
''என்ன சுந்தர் பேர் தானே சொல்லி கூப்பிட சொன்னேன் இப்படி முழிக்கறிங்க?''
''அது வந்து மேடம் பாஸ் சொந்தம் எப்படி?'' என்றே தடுமாற
''முதலில் பாஸ் என்று சொல்வதை நிறுத்துங்க ஏதோ கொள்ள கூட்டத்துக்கு டான் மாதிரி நல்லாவே இல்லை...''
''ஐயோ அப்போ என்னனு கூப்பிட?''
''ஹ்ம்ம் பாஸ் தவிர்த்து வேற எப்படியாது வெற்றி இல்லை செல்வம் என்று...''
''பாஸ் எல்லோரும் வெற்றி என்று தான் தொழில்ல சொல்லுவாங்க ஆனா
அவர்க்கு கீழே வேலை செய்ற நான் அப்படி கூப்பிட்டா நல்லா இருக்காது'' என்றே
சுந்தர் சொல்ல ஆராதனா முறைக்க
''வேணுமின்னா சார் என்று கூப்பிடறேன்''
''கொஞ்சம் பெட்டர்... சரி என் பேர் சொல்லுங்க'' என்றே ஆராதனா கேட்டு முடிக்க மீண்டும் சுந்தர் திரு திருவென முழிக்க
''ஜெஸில் அவனை ஏன் பாடாய் படுத்தற?'' என்றே வெற்றி சொல்லி கொண்டு வர
சுந்தர் மனதில் ஜெஸில் சார் மேடம்க்கு வைத்த பேர் ஜெஸில்லா? அது சரி என்றே
இருக்க முதுகில் வெற்றி ஒரு அடி வைக்க ''ஆஹ் பாஸ் இல்லை சார்...'' என்றே
அலற
''எங்க வாங்கிட்டு வர சொன்னது'
''இதோ பாஸ்... இல்லை சார்'' என்றே கொடுக்க கிப்ட் பேக் செய்த அதனை வாங்கி ஆராதனைவிடம் கொடுத்து
''ஜெஸில் உனக்கு தான் பிரிச்சு பாரு என்றே வெற்றி கொடுக்க வாங்கி பிரித்தாள்.
''வாவ் லேப்டாப்... எனக்கு இதுல ஒர்க் பண்ண தெரியுமா?'' என்றே ஆராதனா கேட்க
''நீ பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சவ ஜெஸில்... எல்லாம் தானா நோண்டி பாரு புடிக்கும்... அப்பறம் போர் அடிக்காது...''
''செல்வா.... எனக்கு வீட்டில் இருக்க முடியலை... வெளியே கூட்டிட்டு போறேன்னு சொன்ன... எப்போ கூட்டிட்டு போவ?'' என்றால் அதனை தடவி பார்த்து ஆராய்ந்து.
''டாக்டர் கேட்டுட்டு சொல்றேன்'' என்றே சுந்தரிடம் போகலாம் என்றே சொல்லிட அவனும் கிளம்பினான்.
''மேடம் கிளம்பறேன்...'' என்றே சுந்தர் சொல்ல ஆராதனா முறைத்து
''என்னை உங்க சிஸ்டர் மாதிரி நினைங்க போங்க... '' என்றே சொல்ல
சுந்தர் வெற்றியை பார்க்க வெற்றி ஹ்ம்ம் என்றே கண்களில் அப்படி கூப்பிடு
என்றே சொல்லியதும்
''ஓகே சிஸ்டர் பை'' என்றே
''ஹலோ சுந்தர் அடிக்கடி வாங்க... என்றே சொல்லியதும் இருவரும் தலையை ஆட்டி கிளம்பினார்கள்.
''பாஸ்... எப்படி என்றே பேசும் பொழுது வெற்றி முறைக்க ''சரி சார்
எப்படி இவங்க கூட பேசறீங்க எனக்கு தலையே சுத்துது... எத்தனை கேள்வி எப்பா?
பதில் சொல்லவே முடியல...''
''எனக்கு அப்போ எப்படி இருக்கும் சொல்லு ஒரு நாளைக்கு ஓர் கேள்வியாவது
என்னை கேட்டு யோசிச்சு பதில் சொல்ல வைக்கறா... என்னைக்கு மாட்டா போறேன் தெரியலை'' என்றே தலையை உலுக்க
''சார் அது என்ன ஜெஸில்....'' என்றே கேட்க வெற்றியோ மென்புன்னகை
மட்டுமே தர அது சரி...... என்றே சுந்தர் சொல்லி கொண்டான் மனதில்...
''சார் அவங்க உங்களை செல்வா என்று உரிமையா பேசுவதை கேட்க ரொம்ப
சந்தோசமா இருக்கு... அவங்களுக்கு உங்க மேல ஏதோ நல்ல விதமா தோணுது... அது
காதலா மாறனும் சார்..''
''நீ சொல்வது பலிச்சுதுன்னா என் ஒரு மாசத்து டர்ன் ஓவர் பாதி உனக்கு
தான் சுந்தர்'' என்றே சொல்ல சுந்தர் தான் இப்பொழுது சிரித்து கொண்டான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
கேள்வி கேட்டே ஒரு வழி பண்ணறாப் பா.....
ReplyDeleteகாதல் படுத்தும் படு....""பாதி டர்ன் ஓவர்".... இதெல்லாம் ரொம்ப ஓவர்.
Ethukkey payanthaa yeppudi..ennum erukkey selva sir 😎😎😎
ReplyDelete