இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பஞ்ச தந்திரம்-13

பஞ்ச தந்திரம்-13     சூர்யா வந்தப் பிறகு அன்றைய இரவு ரொம்பவே ஹாப்பியா இருந்தோம்.         எங்களுக்கான வாழ்க்கை ஒளிமையமா தெரிந்தது. மிலிட்டரிக்கு நேரம் முடியற வரை அவரும் சும்மா தானே வீட்ல இருந்தார். இனிக்க இனிக்க தினமும் தேன் நிலவு தான்.       ஒரு பெண் எந்தளவு சந்தோஷமா வாழணுமோ அந்தளவு ரொம்ப சந்தோஷமா மனநிறைவா வாழ்ந்தேன்.     சூர்யா கூட அடிக்கடி கேட்பார். 'ஏன் ரஞ்சு.. அப்பா அம்மா மீறி கல்யாணம் பண்ணிட்டோம். ஏதாவது பீல் பண்ணறியா. அப்படின்னா சொல்லு... காஸ்மீர் போகறதுக்கு முன்ன காம்பர்மைன்ஸ் பண்ணிட்டு போறேன்'னு சொன்னார்.         நீங்க எதுவும் சமாதானம் பண்ண வேண்டாம். அவங்களா ஒரு நாள் வருவாங்க சொன்னேன். உறவுகள் தானா நம்மளை முழுமையா மாத்தும்னு நற்பினேன்.     ஆனா எங்க வீட்லயும் அவர் வீட்லயும் சுத்தமா சேர்த்துக்கலை. நானும் உடனே கன்சீவ் ஆகிட்டேன். ஒரு குழந்தை பிறந்தா எல்லா உறவும் வரும்னு சொல்வாங்க. ஒருவேளை வாயும் வயிறுமா இருந்தா வீட்டுக்கு முன்ன போனா சேர்த்துப்பாங்கனு கூட போனேன். வாசல் கதவை அடைச்சி நாயை விட்டு துரத்த பார்த்தாங்க. நான் வளர்த்த நாய் என்னை துரத்தலை நானா வந்துட்டேன்.  சூர்யாவும்

தாமரை கோலம் (9-5 இடைப்புள்ளி)

படம்
 தாமரை கோலம் 9-5 இடைப்புள்ளி

பூக்கோலம்(11-6 இடைப்புள்ளி )

படம்
 பூக்கோலம்  11-6 இடைப்புள்ளி 

சிறுகிழங்கு பொரியல்

படம்
  சிறுகிழங்கு பொரியல் தேவையான பொருள் : சின்ன வெங்காயம் - ஒரு கப் எண்ணெய் -தேவையான அளவு தாளிக்க கடுகு- சிறிதளவு உளுந்து- சிறிதளவு சிறுகிழங்கு-கால்கிலோ சீரகம்- ஒரு டேபிள் ஸ்பூன் மிளகுதூள், மஞ்சள் தூள் -சிட்டிகை அளவு காய்ந்த மிளகாய் -இரண்டு கறிவேப்பிலை கொத்தமல்லி -சிறிதளவு. உப்பு - தேவைக்கு ஏற்ப செய்முறை : சிறுகிழங்கில் நிறைய மண் இருக்கும் அதனால சிறுகிழங்கை நன்றாக அலசிடணும்.   சிலருக்கு தோலை ரிமூவர்ல எடுத்து அப்படியே செய்வாங்க. எனக்கு வேகவைத்து எடுத்து பண்ணறது பிடிக்கும். முதலில் சிறுகிழங்கை குக்கரில் நான்கு விசில் கொடுத்து வேகவைக்கவும். தொட்டாலே சிறுகிழங்கு தோல் உறிந்து கிழங்கு தனியாக வரும். பயப்பட வேண்டாம் கிழங்கு குழைந்துவிடாது. தோலுரித்து எடுத்து வைத்த சிறுகிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளலாம். அல்லது மசித்து கொள்ளலாம். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து போட்டு சின்ன வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் காய்ந்த மிளகாயை கிள்ளி  கருவேப்பிலை போட்டு வதக்கவும். வேகவைத்த சிறுகிழங்கு சேர்த்து மஞ்சள் தூளையும் போட்டு சற்று கிளறி விட்டு நாலாப்பக்கமும் மஞ்சள் தூள், கி

பஞ்ச தந்திரம்-2

படம்
  தந்திரம்-2     ஒரு காம்பவுண்டில் இங்கும் அங்கும் ஒரு செங்கல் பேத்து இருந்தது. அதில் மாறி மாறி கால் வைக்கும் பொருட்டு ஏணிபடிகள் போல இருக்க அதில் நைனிகா ஏறினாள்.     "ஏய்... என்ன பண்ணற?" என்று ரஞ்சனா கேட்டு நைனிகாவை நிறுத்தினாள். பாதியில் தொங்கிய நைனிகா கீழே இறங்கினாள்.      "இது நான் தங்கியிருக்குற ஹாஸ்டல். இது வழியா மேல வந்திங்கன்னா... ரூமுக்கு போயிடலாம்." என்று சாவி கொத்தை ஆட்டினாள் நைனிகா.      "மஞ்சரி அம்மா வயசானவங்க எப்படி ஏறுவாங்க? இதோ திரிஷா.." என்று கூறவும் "என் பெயர் திரிஷா இல்லை திரிஷ்யா" என்று இடைப்புகுந்து திருத்தினாள் திரிஷ்யா.     "சரி... திரிஷ்யா.. இவங்க சேரி கட்டியிருக்காங்க எப்படி ஏறுவாங்க?" என்று கேட்டாள் ரஞ்சனா.       நைனிகாவோ தோளைக் குலுக்கி வேற இடம் இருக்கா என்பது போல பார்த்தாள்.      "நான் அட்ஜஸ்ட் பண்ணி ஏறிடுவேன். எங்கவீட்ல மாடில வாட்டர் டேங்க்ல இது மாதிரி ஏணில ஏறி பழக்கம். ஆனா இது சுவர் சறுக்கிடாதா?" என்று திரிஷ்யா கேட்டாள்.     "தைரியமா ஏறுங்க" என்று நைனிகா பதில் தந்தாள்.     "அப்படியே