சிறுகிழங்கு பொரியல்

 



சிறுகிழங்கு பொரியல்

தேவையான பொருள் :
சின்ன வெங்காயம் - ஒரு கப்
எண்ணெய் -தேவையான அளவு தாளிக்க

கடுகு- சிறிதளவு


உளுந்து- சிறிதளவு
சிறுகிழங்கு-கால்கிலோ
சீரகம்- ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகுதூள், மஞ்சள் தூள் -சிட்டிகை அளவு
காய்ந்த மிளகாய் -இரண்டு
கறிவேப்பிலை கொத்தமல்லி -சிறிதளவு.
உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை :
சிறுகிழங்கில் நிறைய மண் இருக்கும் அதனால சிறுகிழங்கை நன்றாக அலசிடணும்.

  சிலருக்கு தோலை ரிமூவர்ல எடுத்து அப்படியே செய்வாங்க. எனக்கு வேகவைத்து எடுத்து பண்ணறது பிடிக்கும்.

முதலில் சிறுகிழங்கை குக்கரில் நான்கு விசில் கொடுத்து வேகவைக்கவும். தொட்டாலே சிறுகிழங்கு தோல் உறிந்து கிழங்கு தனியாக வரும். பயப்பட வேண்டாம் கிழங்கு குழைந்துவிடாது.
தோலுரித்து எடுத்து வைத்த சிறுகிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளலாம். அல்லது மசித்து கொள்ளலாம்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து போட்டு சின்ன வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின்னர் காய்ந்த மிளகாயை கிள்ளி  கருவேப்பிலை போட்டு வதக்கவும். வேகவைத்த சிறுகிழங்கு சேர்த்து மஞ்சள் தூளையும் போட்டு சற்று கிளறி விட்டு நாலாப்பக்கமும் மஞ்சள் தூள், கிழங்கில் பரவியதும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

   லேசாக பொன்னிநிறமாக மாறும் நேரம் மிளகுதூள் மற்றும் கொத்தமல்லி இழையை தூவி இறக்கிடலாம்.

    பருப்பு(சாதம்) குழம்பிற்கு ரசம் போன்றவற்றிற்கு இந்த சிறுகிழங்கு பொரியல் சுவைக் கூட்டும்.

   இதுவும் அதலக்காய் போன்று இந்த சீசனில் மட்டும் கிடைக்கும்.
   உருளைக் கிழங்கு சுவையை விரும்புவோர் இந்த கிழங்கின் சுவை மாறுபட்டிருக்கும்.
   
சிறுகிழங்கு, சேனைகிழங்கு, கருணைகிழங்கு, சேப்பங்கிழங்கு என்று நான்கும் நான்கு வகை.

கீழே படத்தை இணைத்துள்ளேன்.


சமைக்கும் முன்




சமைத்தப்பின்



கீழே கிழங்குகளின் வித்தியாசம் கண்டறிய மற்றவையை பெயர் போட்டு இணைத்துள்ளேன்.



பிடிகருணை இந்த கிழங்கை மசித்து புளிக்குழம்பு வைப்பாங்க.




சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்வார்கள். நல்லா மொறுமொறுனு வறுத்தா வறுக்கறப்பே காலியாகிடும்.


கருணை கிழங்கு நம்ம தலை சைஸ்ல இருக்கும். கட் பண்ணி தருவாங்க. புளிக்குழம்பு, வறுவல் குருமா, ரோஸ்ட் பொரியல் அனைத்தும் செய்வாங்க.


Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1