தீவிகை அவள் வரையனல் அவன்-23

 


🪔🔥-23


      அதிகாலை என்றுமில்லாத மகிழ்வு பொங்க எழுந்தாள். இத்தனை நாள் தேக்கி வைத்த வலி, பாரம் போனதன் விளைவாக இருக்கும். 


      நேற்று பழைய ஆருவோடு இசைந்தது மனம் என்று குத்தாட்டம் போட அதே புத்துணர்வோடு எழுந்து குளித்து முடித்து தன் கையால் ஆருக்கு காபி தயாரிக்க சென்றாள். 


    வெளியே நியூஸ் பேப்பரை விசிறி கிடக்க அதை எடுத்து தட்டில் வைத்து காபியை எடுத்து வைத்தவள். மற்ற பாலை ஆப் செய்ய காத்திருந்தாள்.


     ஆரவை எழுப்பி விட்டது சந்துருவின் போன் அழைப்பு. 


    எடுத்து காதில் வைத்து சவகாசமாக "என்னடா...?" என்றதும் சந்துரு அப்பக்கம், "டேய் சம்யு அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். நேற்று மண்டப வாசலில் காரிலே மயங்கி இருந்தார். அத்தை பார்த்துட்டு அவங்க ஒர்க் பண்ணற ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்காங்க. சம்யுவுக்கு கொஞ்சம் பதமா சொல்லி கூட்டிட்டு வா." என்றான். 


     "என்னடா எல்லாரையும் ஒன்று சேர்த்து வைக்கிறதா நினைப்பா. இங்க பாரு என்னை பொருத்தவரை அந்தாளு எப்பவோ இறந்துட்டார். அவர் நடிப்பார் அதை பார்க்க நான் ஒன்றும் கேனயன் இல்லை. ஏற்கனவே இது மாதிரி பிளான் போட்டுட்டார் வைடா..." என்று சினத்தில் கத்தினான் ஆரவ். 

  

      "ஆரவ்.... மரணத்தோட கடைசி வாசலில் இருக்கார். புரியாம பேசாதே... சம்யு பெயரை சொல்லிட்டு இருக்கார். அத்தை நேரிடையா பார்த்துட்டு தான் சொல்லறாங்க." என்று விளக்க முயன்றான். 


       "டேய்.... அவர்.." என்றவனின் பேச்சை இடைவெட்டி சுபாங்கினி பேச ஆரம்பித்தார். 


      "ஆரவ்... சம்யுக்தாவை அழைச்சிட்டு வா. அப்பா மகள் உறவை தடுக்க நீ யார். அதுவும் மரணவிளிம்பில் இருக்கறவரோடு. இங்க பாரு காலம் முடிந்தபிறகு ஒருமுறை பார்க்க விட்டு இருக்கலாம்னு சொல்லி கூட்டிட்டு போயி காட்டுற இடம் இல்லை அது. பதினெந்து நிமிஷத்தில வர்ற வழிப்பாரு." என்று கத்தவும் ஆரவ் எதையும் யோசிக்க முடியாது தவித்தான். 


     அவனின் எண்ணங்கள் பழைய நினைவுகளை புரட்டி முடிக்க, சம்யு மருத்துவமனையில் இருந்த கணம் தன்னை அரெஸ்ட் செய்து அழைத்து சென்றதும், அடித்ததும், ஜெயில் இருந்து சம்யுவின் ஆடியோ ஆதாரம் மற்றும் கையெப்பம் என்று வரிசையாய் காட்சி பிம்பங்களும், வைஷ்ணவி வைத்து சந்துரு வீட்டில் அவளுக்கு தீங்கிழைக்க எண்ணிய நாடகங்களும் மனக்கண்ணில் வந்துப்போக, பற்றாததற்கு சுவாமிநாதன் ஜெயில் பேசி சீண்டியது என்று வந்து நிற்க, கடைசியாக திவேஷிடம் யுக்தா பேசியதும் வந்து மோதியது. 


       'தராதரம் பார்த்து வரணும் காதல்... இல்லை இப்படி தான் இடம் பொருள் பார்க்காம அவமானப்படணும். இனி காதல் என்ற பேச்சுக்கு என் வாழ்வில் இடமில்லை. படிப்பு... அது எவ்வளவு முக்கியம் என்றும் புரிஞ்சிடுச்சு. நீயாவது உன் வேலையை பாரு.' என்ற சம்யுவின் வார்த்தை. 


   ஆரவ் ஏர்போர்ட்டில் சம்யுக்தா லண்டன் செல்வதாக சுவாமிநாதன் பெருமைப்பட்டு சொல்லி முடித்தார். இந்நேரம் மகள் விமானத்தில் ஏறியிருப்பாள் என்ற நம்பிக்கையில். ஆனால் பதினைந்து நிமிட தாமதம் என்று அமர்ந்து இருக்க, திவேஷ் கையை பிடித்து பேச அதற்கு பதிலாக பேசி முடித்தவள் யுக்தா என்று அழைக்க திரும்பியும் பார்க்காமல் சென்றது தோன்றியது. 


   மறக்க எண்ணி முயன்றவனின் நினைவில் வந்து மோதவும், மனம் முரண்பாடாக எரிச்சலில் சுழல, எதற்கும் சுவாமிநாதனின் உடல்நிலை பற்றி கூறிவிட்டு அவளை வேண்டுறென்றால் பார்க்க சொல்ல வேண்டுமென்று முடிவோடு  வெளியே வந்தான் ஆரவ். 


     சரியாக அதே நேரம் கிச்சனில் யுக்தாவின் இடைப் பற்றி தூக்கி ஒரு சுற்று சுற்றி, "ஐ மிஸ் யூ சம்யு..." என்று திவேஷ் கூற, அது ஆரவின் குரல் போலவே ஒலிக்க, "ஐ லவ் யூ" என்று முகம் காணாமலே அவன் நெஞ்சில் சாய்ந்தவள் அதன் பின்னே அது ஆரவாக இல்லை என்பதை தொடுதலில் உணர்ந்தாள். 


    திவேஷ் கையோடு பரிசு வேறு அவள் கையில் திணிக்க அனிச்சையாக அது கை மாறியிருந்தது. 


     திவேஷ் வந்ததை விட எதிர்பாரத தருணமாக சம்யுக்தாவை தூக்கி சுற்றும் வாய்ப்பு கிடைத்தது. 


     அவன் ஆரவ் எதிரில் பரிசை கொடுத்து ஏதேனும் தன்னால் இயன்ற பிரிவை மூட்ட வந்தவனுக்கு சரியாய் சூழ்நிலை அமைந்தது. 


      "என்ன சம்யு... கடைசியில் அதே தராதரமற்றவனிடம் தான் உன் வாழ்க்கை அழிஞ்சு போச்சே... பச்... ஆழ்ந்த அனுதாபங்கள். அப்பறம் என்ன இருந்தாலும் ஆரவ் அமைதியா எல்லாத்தையும் மறந்து உன்னை ஏற்றுப்பார்னு சொன்னேன். பார்த்தியா...?" என்ற நேரம் ஆரவ் அறைந்து இருந்தான்.


     திவேஷ் இதனை எதிர்பார்க்கவில்லை... சம்யுவை பார்க்க, அவளோ அவன் தீண்டியதில் அருவருப்பில் திரும்பி இருந்தாள். 


      "என்ன சம்யு இது... நீயா வீட்டுக்கு அட்ரஸ் கொடுத்து வர சொல்லிட்டு. இப்படி ஆரவ் வைத்து அடிக்க செய்யற. நான் பரிசு கொடுக்க வந்தது தப்பா..." என்று பேசியவன்,


"இதே ஆரவால உன் வாழ்வு மொத்தமும் அடங்கி போனதுனு சொன்ன... நீங்க ஒன்று சேர்ந்தா சொல்ல வேணடியது தானே. நான் லண்டனில் நாம இருந்த ஓட்டுதலில் எப்பவும் போல ஹக் பண்ணிட்டேன். ஐ அம் சாரி ஆரவ். சம்யு தனியா சந்திக்கலாம் பை." என்று நகர்ந்தான். 


       "அவன் கொடுத்த கிப்ட் எதுக்கு வாங்கின. நேற்று தான் என்னோட ஆபிஸ் ஆட்கள் பார்ப்பாங்க என்று பேசின. இங்க யாரு இருக்கா. 


     எப்பவும் போல ஹக் பண்ணிட்டேனு சொல்லறான். வாட் இஸ் திஸ்.... எது நடந்தாலும் ஆரவ் கேனயன் நம்மை ஏற்றுப்பான் அப்படி தானே.." என்று ஆரவ் ஒரெட்டு முன் வர, 


    "இல்லை ஆரவ்... அவன் இங்க எப்படி வந்தான் எதுக்கு கிப்ட் கொடுத்தான் தெரியலை. அவன் லண்டனில் தான் இருந்தான். இங்க எப்படி?" என்று விழி பிதுங்கி கலங்கி போனாள். 


      "சோ அவன் எங்க இருந்தானு தெரிஞ்சி வைத்திருக்க. பட் நான் இருக்கற இடம் தெரியாது. என்னை தேடி வரணும்னு தெரியலை அப்படி தானே.... 


      இப்ப தோன்றுது டி. ஜனனியை  கல்யாணம் பண்ணியிருந்தாலும் எனக்கென்ன என்று தானே இருந்து இருப்ப, நானா தாலி கட்டி, உன்னை இப்பவும் கெஞ்சிட்டு இருக்கேன். நீ உன் ஆபிஸ்ல இருந்த அதே திமிராவே தான் இருக்க." என்று பொருமினான். 


      "நான் திமிரா இருக்கேனா ஆரவ். நீ அறைந்த அதை ஏற்றுக்கிட்டு இருக்கேன். அத்தை செய்ய சொன்னதை செய்தேன். நீ என்ன தீண்டினப்ப பணத்தை வீசியெறிந்து தாம்பத்தியத்தை கொச்சைப்படுத்தினப்ப எல்லாம் அமைதியா தானே இருந்தேன். 


      இப்ப பேசறது சகிக்கலை ஆரவ். திவேஷ் முதலில் இருந்தே நம்ம லைப்ல குறுக்கே வர்றான் அது தெரிஞ்சும் நீ இப்படி பேசற... வலிக்குது ஆரவ். என்னை கஷ்டப்படுத்தாதே. நீ எங்க இருந்த என்று உங்க வீட்டுக்கு பல முறை வந்தவ நான். அத்தை ஒரு முறை விரட்டி இருக்காங்க. சந்துரு அப்பா விரட்டி இருக்கார். சும்மா என்னை சொல்லாதே. நான் இன்னமும் அதே சம்யு தான். நீ தான் காயப்பட்டதில் மாறியிருக்க. என்னை விரும்புவதில் தடுமாற்றம் இருக்கு. உனக்கு என் அப்பா பிடிக்கலை என்று தானே அவரு விட்டுட்டு அடியோட வந்துட்டேன். அப்பவும் என்னை காரணம் சொன்னா என்ன அர்த்தம் ஆரு. 

   

    திவேஷ் காலை சுத்தற பாம்பா இருந்தா நான் என்ன பண்றது. நீ கூட தான் எங்க அப்பா ஆபிஸ்ல ஜனனியை வேலைவிட சொல்லிட்டு உன்னோட ஆபிஸில் வேலைக்கு எடுத்து இருக்க. தப்பா எடுத்துக்க என்றால் நானும் எடுத்துக்கணும். பட்.." என்று தொடர்வதுக்குள்,


      "நிறுத்து டி. என்னடா... சைலண்டா இருக்கியே... பார்த்தேன். நான் ஜனனியை வேலைக்கு எடுத்தது வரை தெரிந்து இருக்க, என்ன ஸ்பை வைத்துயிருக்கியா...? உங்கப்பாவை விட்டு வந்ததா சொல்ற... அப்பறம் எதுக்கு டி திரும்ப டிராமா ஆடறான். எங்கம்மா வேலை செய்யற  ஹாஸ்பிடலில் அடமிட் ஆகி அட்டாக்னு படுத்திருக்கான்." என்று குரலை உயர்த்தினான். 


     "ப்ளிஸ்... ஆரு... நீ பேசறது சரியில்லை. அவன் இவன்னு பேசி உன் கேரக்டரை சீப்பாக்காதே. உன் மேல மரியாதை இருக்கு. சந்துரு அண்ணா சொன்னார். நீ அப்பா கொடுத்த எத்தனை கஷ்டத்துக்கும் பொறுமையா பிகேவ் பண்ணி இருந்த. இப்பவும் கொஞ்சம் மற்றவங்க மனநிலையில் இருந்து யோசி." என்றாள் சம்யுக்தா. 


      சம்யுக்தா போன் மணி அடிக்க சுபாங்கினி என்றதும் அட்டன் செய்தாள். 


    "எங்க இருக்க சம்யு?" என்றதும் 


     "வீட்ல அத்தை... என்னாச்சு...?" என்று ஆரவை பார்த்து கேட்டு முடித்தாள். 


    "வீட்டிலையா...? சம்யு உங்கப்பா சீரியஸா இருக்கார். நான் ஒர்க் பண்ற ஹாஸ்பிடலுக்கு உடனடியா கிளம்பி வா. ஆரவிடம் சொல்லி அரை மணி நேரமாகுது. என்ன பண்றிங்க." என்று கத்தவும். 


      "அத்தை.... வ... வர்றேன் அத்தை." என்றவள் ஆரவை பார்க்க, சுவாமிநாதன் பிளான் செய்து நடத்தும் நாடகம் அதற்கு இவள் செல்கின்றாளே என்ற சினம் அதிகமாகியது ஆரவிற்கு.


      "அதான் போறேன்னு சொல்லிட்டல.... கிளம்பு... அப்படியே திவேஷோட போடி. இனி இந்த வீட்டுக்கு வந்திடாதே. போனமுறை லண்டன்... இப்ப அமெரிக்கா போ." என்றவன் தாலியை கழட்டி வீசியெறிய அது பூஜையறை வாசலில் விழுந்தது. 


      எதிர்பாரா கோபம் அதை செய்து முடித்தப்பின் ஆரவிற்கே அதிகப்படியாக தோன்ற விறுட்டென்று வெளியேறினான். 


      சற்று நேரம் அந்த தாலியை விழியகற்றாமல் பார்த்தவளின் கண்கள் நீரோடையாய் வழிந்தது. 


     தாலியை எடுத்து தொட்டு பார்த்தால் அது தங்கத்தில் மினுமினுத்தது. அதை வருடி எடுத்தணிந்து கொண்டு விரைந்தாள். 


       ஆரவிற்கு கோபம் மட்டுப்படும் வரை காரில் பயணித்தவன். கடல் மணலருகே வண்டியை நிறுத்தினான். 


      ஆரவின் உள்ளக்கடலில் சினமே வந்து வந்து போக, அவன் கோபம் போலவே கடலலையும் வந்து வந்து மோதியது. 


     நீரில் உள்ளிறங்கி தன் நெஞ்சு பகுதி வரை நீரில் நின்றவன், "சாகவும் முடியலை டி. நான் இல்லாம நீ... நீ வாழ மாட்ட டி." என்றவன் அந்த கடலலை ஆர்ப்பரிக்கும் ஒலிக்கு நிகராக கத்தி முடித்தான். 


     "உன்னை பேசியதுக்கு மன்னிப்பியா... டி... அய்யோ... கடவுளே..." என்றவன் சுவாமிநாதனின் நிலை புரிபட, வீட்டுக்கு விரைந்தான். 


      அங்கே தாலி வீசியெறிந்த இடம் அங்கே அது இல்லாமல் போக, யுக்தாவை தேடினான். 


   அவளும் இல்லாமல் போக, சம்யுவின் போன் அலறவும் அதை எடுத்தாள். 


     "ஹலோ..."

    

     "ஆரவ்.... கொஞ்சம் சீக்கிரம் வா..." என்று அணைத்திட ஆரவ் உடைமாற்றி கிளம்பினான். 


    எப்படியும் சம்யுக்தா மருத்துவமனை சென்றிருப்பாளென நம்பி ஆரவ் அங்கு செல்ல, அங்கு சுபாங்கினி கையை பிடித்து மன்னிப்பு வேண்டிக் கொண்டிருந்தார் சுவாமிநாதன். 


     "சம்யு எங்கடா...?" என்றான் சந்துரு. 


      "இங்க வரலையா....?" என்றான் பதட்டத்தோடு. 


     "இல்லையே என்னாச்சு..." என்றதும் ஆரவ் நடந்தவையை சொல்ல சந்துரு தலையில் அடித்துக் கொண்டு வரவேற்பறையின் சேரில் அமர்ந்தான். 


      "ஆரவ் நீயாவது போய் பேசு." என்று சந்துரு கூற அவன் மாட்டேன் என்று மறுக்க, சுபாங்கினி வந்து, ஆரவ் தோளில் தட்டி... சம்யு எங்க? சரி முதல்ல அவரை பாரு. சிகிச்சை வேண்டாம்னு அலப்பறை பண்றார். போய் பேசு...." அனுப்ப, ஆரவ் என்ன சொல்ல அவர் மகள் இங்க வரவில்லையே.... என்று கவலையில் சென்றான். 


    சுவாமிநாதன் அருகே சென்றதும், எ....ன்...னை மன்னிச்சுடுங்க. உ...ங்க காத...லை பிரிக்...க முயன்..றது நானும் திவேஷும் மட்டும் தான். நடந்தவையில் எதுவும் சம்யுக்தாவுக்கு தெரியாது. 


     உங்களை போல திவேஷ் மிமிக்ரில பண்ணுவான். மருத்துவமனையில் ஜார்ஜ் போட்டிருந்த உங்க போனை திருடி உங்க போனில் இருந்து வந்ததா வாட்ஸப்ல சம்யுக்கு நீங்க அனுப்...பியத நாங்க அனுப்பியது. அதை பார்த்தும் சம்யுக்தா நம்பலை... சம்யுவுக்கு நீங்க கொடுத்த சிம் கூட நான் விபத்தில் போன் கிடைக்கலைனு சொல்லி அதை நான் தான் வச்சி இருக்கேன். அந்த கள்ளி செடி.. படம் போட்ட.. மெசேஜ் எல்லாம் நான் திவேஷ் அனுப்பியது. 


          அன்னிக்கு கூட திவேஷ் நீங்க வருவதை பார்த்து தான் ஏர்போர்ட்டில் பேசினான். அவன் விருப்பத்தை சொல்ல அதுக்கு பதில் சொன்ன சம்யுவோட பேச்சில் தான் நீங்க தவறா.. நினைச்சிக்கிட்டீங்க.. இப்ப கூட அவன் வந்து குழப்பம் செய்யணும் என்றே  வந்து இருக்கான். முன்ன விட இப்ப என் மேலயும் கோவம்.'' என்றவரின் மூச்சு விட சிரமம் பட்டு மயங்கி கொண்டே, சம்யுக்தாவை தண்டிக்கக்காதீங்க மாப்பி.. ள்ளை'' என்றவர் கைகள் அவன் காலில் தொட செல்ல அப்படியே பெட்டில் இருந்து கீழே விழ பார்த்தார். 


 ஆரவ் அவரை பிடித்து நிறுத்தி சிகிச்சை அளிக்க சொன்னான். 


இந்த யுக்தா எங்க போனாள்? என்றே ஆரவ் யோசிக்க அந்த இடமே அமைதியாக மாறியது. 


-வரையனல் தணிய தீவிகை ஒளிரும். 


-பிரவீணா தங்கராஜ்.


         hi 

சிரமமில்லாமல் சில கதைகள் யாரும் படிக்கலையா.... டேக் பண்ண சொன்னீங்க. ஆனா வியூஸ் இல்லையே. 25 members than read பண்ணறீங்க. என்ன காரணம் சொல்லிட்டு போங்க. 

சிரமமில்லமல் சில கொலைகள்-6

🩸-6 

ஆரோல் அங்கே துர் ஆவியினை ஓட்டும் பாஸ்டர் வீட்டில் பெற்றவரோடு சென்று தனக்கு நடந்தவையும், அவர்களுக்கு நடந்தவைகளையும் சொல்லி, தங்களுக்கு ஏன் அவ்வாறு தோன்றுகின்றதென கேட்க, பாஸ்டரோ ''இது ஒரு ஜென்மத்தின் தொடர்புகளாக இருப்பின் தங்கள் செய்த பாவ புண்ணிய கணக்கில் கடந்த ஜென்மங்களில் ஏதேனும் தவறு செய்து அதன் காரணமாக தோன்றலாம். 

''கடந்த காலத்தின் நடந்தவை என்ன என்பது நான் அறிய இயலாதவை. வேண்டுமெனில் உங்களுக்கு பாதுகாப்பு மந்திர ஜெப கயிரை தருகின்றேன். அதை அணிந்து கொள்ளுங்கள் பெரிய பாதர் வெளியூர் சென்றிருக்க அவர் வந்தபின்ன கேட்டுக்கலாம். முடிந்தால் போன ஜென்மத்தின் பாவங்களுக்கு ஒரு மன்னிப்பு கோரி ஒரு பிரேயர் செய்து கொள்வோம். பழி தீர்க்க வெறியோடு இருக்கும் அந்த ஆன்மா ஒரு வேளை மனம் இறங்கலாம்'' என்றே முடித்திட ஜார்ஜ் மேரி ஆரோல் மூவரோடு ஒரு சின்ன பிரேயர் வைத்து மண்டியிட்டு வணங்கி ஜெபித்தனர். 

கண்கள் மூடி இருக்க சிறிது நேரம் ஜெபித்தனர். அதில் யவனரதியாக மெர்லின் இளவரசி தோரணையில் கோவிலின் முன் அமர்ந்து எதையோ பருக, சில நொடிகளில் மெர்லின் அதாவது யவனரதி மயங்கி தள்ளாடினாள். 

"இவளை உயிரோட புதைத்து முடிங்க,'' என்றே கட்டளையிட்டது சாட்சாத் மேரியே தான். 

நகைகள் உடலில் சூழ்ந்து, தலைகணத்தோடு கூடவே கிரீடமும் கனமாக இருக்க நெற்றியில் அழகான விபூதி குங்குமம் கீற்றுக்கள் பளீரிட, கண்களோ ரௌதிரமாக இருக்க கண்டாள். ஜார்ஜ் ராஜ உடையோடு குழியில் மெர்லினை தள்ளி முடித்து மண்ணையும் தள்ளி விட, யவனரதி மயங்கி சரிய அம்மண்ணில் சரிந்து தலையை மண்ணில் ஒரு பக்கம் முட்டி கொடுத்து பதுகையாக கிடந்தாள். 

யாரோ ஒருவன் குரல் கேட்க திரும்பிட, 

காலங்கள் மாறிய கோலங்களாக ஒரு தெப்ப குளத்தில் அபரஞ்சியாக இம்முறை காட்சி அளிக்க ஆரோல், ஆடலாரசனாக நின்று "அபரஞ்சி அப்படி செய்ய வேண்டாம். பிளீஸ் அம்மா அவளை எனக்கு கட்டி கொடுங்க" என்றே ஆரோல் உருவத்தில் படிக்கறையில் சொல்ல, "அவனை அழைச்சிண்டு போங்க காரியத்தை கெடுத்திடுவான். அப்பறம் மொத்த பிளானும் சொதப்பிடும்'' என்றே மேரி உருவத்தில் சேலை அணிந்து சொல்ல ஜார்ஜ் ஆடலரசனை இழுத்து செல்ல, தண்ணீரில் மூழ்கும் அபரஞ்சி மூச்சுக்கு போராடி மூழ்கி, "சர்வேஷ்..." என்றே கடைசி குமிழ் வெளி வந்து முழ்கினாள். 

இந்த காட்சிகள் எல்லாம் மேரி ஜார்ஜ் மற்றும் ஆரோல் பார்த்து முடிக்க, அதே நேரம் தன் மகள் மயங்கினாள் என்றே தபித்தாள், கிறிஸ்டோபர் இருவரும் மகளை மனதத்துவ மருத்துவரிடம் அழைத்து வந்திருந்தனர். 

அவளின் ஆழ் மனதில் சர்வேஷ்வரன் என்ற பெயரே உச்சரிக்க, மருத்துவர் அது யார் உங்களுக்கு பழைய நினைவு ஏதாவது வருதா? என்றே தன் அன்னை வயதை கொண்ட தமிழ் பெண் மருத்துவர் மேக்னா கேட்டு முடிக்க, தொடர்பில்லாமல் அம்முவர் பார்த்த அதே நிகழ்வை மயக்கதில் கூறி முடித்தாள். 

மெர்லின் இங்கே கூறி முடிக்க சர்வேஷ் அவனிடம் அபரஞ்சி சொல்வதாக ஹாலில், இமை மூடி கேட்டு கொண்டு இருந்தான். 

டாக்டர் மேக்னா, ''இது பூர்வ ஜென்மம் என்றே சொல்லலாம். ஆனா அறிவியலில் இது சாத்தியாம என்றால் இப்பவும் சில ஏற்றுப்பாங்க, சிலர் மூடதனம் என்றே சொல்லிடுவாங்க

இதை மொத்தமாக உண்டு என்றும் சொல்லிவிட முடியாது, இல்லை என்றும் மறுத்துவிட முடியாது.

நாம் வாழும் இந்த அறிவியல் யுகத்தில் எல்லாவற்றையும் ஒரு ஆய்வகத்தில் ஆய்வு செய்து நிரூபிக்க வேண்டும். இன்று வரை அப்படி ஒரு நிரூபணம் செய்யப்படவில்லை. சில நிகழ்வு இருக்கு... ஆனாலும் அது நூறு சதம் என்றே சொல்லிட முடியலையே. 

உலகம் முழுவதும் , பூர்வ ஜென்மம், ஆன்மா பற்றிய பல கருத்துக்களும், நம்பிக்கைகளும் இருந்தாலும், இது வரை எதுவும் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை. அதனால இதுக்கு மருந்து என்று கொடுத்து பணம் பறிக்க நான் விரும்பலை. 

இங்க இருப்பது அவளுக்கு அந்த பெண் லிசா இறப்பும் அவளோட பெற்றோர் எண்ணமே வந்தா, ஒரு மாறுதலுக்கு நீங்க டூர் அழைத்து போங்க, அவளுக்கு மனசும் இதமா இருக்கும். இடம் மாறின மனம் மாறும். சில எண்ணங்களை மறக்கலாம். இல்லையா சில நிகழ்வு அவளுக்கு தாக்காமல் இருக்கலாம். '' என்றே பதில் தர, மெர்லின் தாய் தபித்தாள், தந்தை கிறிஸ்டோபர் பார்வையை பரிமாறி எங்கேனும் அனுப்பி பார்ப்போம் என்பதாய் சொன்னார்கள். 

மயக்கம் தெளிந்து எழுந்த மெர்லின் சர்வேஷ் இப்ப எங்கயாவது பார்த்தியா மா? என்றே கேட்க, 

''டாக்டர் இந்த நேம் ஆரோல் சொன்னது. உங்களுக்கு எப்படி தெரியும்?'' என்றே கேட்க, தபித்தாள் ஆரோல் குடும்பத்தோடு கூடவும் இனி இவளை பழக வைக்க கூடாது என்றே தீர்மானித்தார். 

கிறிஸ்டோபர் மெர்லினை அழைத்து, வெளியே வர, ''பாருங்க டாக்டர் அந்த பெயர் சர்வேஷ் அவ தானே சொன்னா இப்போ யாரு சொன்னது என்றே கேட்கறா.'' என்றதுமே 

''புரியுது தபித்தாள் ஆரோல் என்ற பையனிடம் இருந்து தள்ளி நிறுத்துங்க. கூடுமான வரையில் இவளை வேற நாட்டுக்கு சுற்றி பார்க்க அனுப்பி வைங்க மாற்றம் கிடைக்கும்'' என்றே சொல்லவும் சரியென்றே மெர்லினை தேடி போனாள். 

இங்கு ஆரோல் குடும்பதினர் பாவ மன்னிப்பு செய்து பிரேயர் வைத்தாலும், கண்ட காட்சியினை வியர்வையில் நனைந்து சொல்ல, ''பெரிய பாதரை வர சொல்றேன் எனக்கு இதுக்கு தீர்வு சொல்ல முடியலை. அவரிடம் போனில் தெரிவிக்கறேன். நாளைக்கு மாலைக்குள் சொல்லி உங்களுக்கு தெரியப்படுத்தறேன்.'' என்றதும் மூவரும் பேயறைந்தது போன்று திரும்பினர். 

தங்கள் குடும்பம் மெர்லினுக்கு இரு ஜென்மமாக பாவம் செய்தது என்ற வகை அளவுக்கு புரிந்தது. இதில் லிசா குடும்பமும் சேர்த்து இருந்து இருக்க வேண்டும். அதனால் தான் லிசா இறப்பு மற்றும் அவள் தாய் தந்தை இறப்பு என்றே நிகழ்ந்து இருக்கின்றன. 

நேரம் கடத்தினால் தங்கள் குடும்பம் உயிர் பிழைப்பது அறிதானது என்பதை தெளிவாக உணர்ந்து இருந்தனர். 

தங்கள் வீட்டில் இருக்க பிடிக்காமல் பீச் ஹவுஸ் தங்க சென்றனர். 

ஆரோல் மட்டும் மெர்லினுக்கும் இது எல்லாம் அறிந்து இருகின்றாளா? அல்லது நமக்கு தெரியாமல் அவளை கொன்ற எண்ணத்தால் எல்லோரையும் பழி வாங்குகின்றாளா? கண்டறிய வேண்டும் என்றே உறங்கினான். 

அடுத்த நாள் பொழுது புலர மெர்லினை சுற்றி பார்க்க செல்வதற்கு வேறு நாட்டில் பயணிக்க டிக்கெட் எடுக்க முனந்தனர் கிறிஸ்டோபர். 

லண்டன், ஆஸ்ட்ரேலியா மற்றும் கோவா என்று விமான டிக்கெட் பதிவு செய்திட முயன்றிட, அதில் அடுத்த நாள் இரவுக்கு என்ன விமானத்தில் டிக்கெட் கிடைகின்றதோ அதில் புக் செய்து காத்திருந்தார். 

ஏற்கனவே மகளோடு விடுமுறைக்கு பாரிஸ் சென்று வந்து இருந்ததால் விமானத்தில் பயணம் செல்ல எல்லா தேவைகளும் சரியாய் இருந்தது. அதனால் எந்த நாட்டிற்கு டிக்கெட் பதிவு கிடைக்கின்றதோ என்றே எண்ணியிருக்க, மெர்லின் வர வேண்டிய இடத்திற்கு கிட்டியது. 

ஆம் இந்தியா பயணம் செய்ய விமான டிக்கெட் கிடைத்து விட, அதனை எடுத்து கொண்டு வந்து சேர்ந்தார். 

திடீரென நீ இந்தியா செல் சுற்றி பார் என்றே உரைத்தால் யாருக்கேனும் புரிபடுமா? அப்படி தான் விழித்தாள் மெர்லின். 

இருந்தும் நடக்கும் சூழ்நிலையும் அவளுக்குள் என்னவோ செய்ய, மறுக்காமல் வாங்கி கிளம்பறேன் டாட். என்றே துணிமணிகளை எடுத்து வைத்தாள். 

அந்த கருப்பு உருவம் அவளை வட்டமிட்டு கொண்டு இருக்க, 'வர வேண்டும் யவனரதியே... உன் வருகையில் என் குழப்பம் தெளியும்' என்றே கருப்புகை மாயமாகி ஆரோல் இருக்கும் வீட்டுக்கு வந்து நின்றது. 

அங்கே அக்குடும்பம் இல்லாது போக, அருவுருவமான இளவழகன் தலை மட்டும் அந்தரத்தில் அண்டத்தில் மும்முறை சுற்றி வந்து, உடலோடு சேர்ந்து, 'யவனரதி இத்தேசத்தில் இருந்து சென்ற அடுத்த கணம் உங்களுக்கு முடிவு நெருங்கும்...' என சூளுரைத்தான்.

சர்வேஷ்வரன் ஹாலில் குறுக்கும் நெடுங்கும் நடந்தவன். யோசனையை விடாது தொடர்ந்து சிந்தனையில் கலந்து இருக்க, சாந்தனு மெல்ல அவனின் கையை பற்றி, "என்னடா... மறுபடியும் கொலையா?" என்றான். 

"ம்ம்... ஆமா அடுத்து நடக்கும். அதுவும் இந்த முறை இரண்டு பேர் ஒரே நேரத்தில்." என்றவன் மீண்டும் சிந்திக்க, சர்வேஷ்வரனை பிடித்து நிறுத்தினான் சாந்தனு. 

"யாருனு தெரிந்ததா? எதுக்குனு உனக்கு புரிஞ்சிடுச்சா?" என்று கேள்வி கேட்க, 

"புரியலை... யாருனும் தெரியலை. ஆனா இரண்டு ஜென்மமாக யவனரதியா அபரஞ்சியா வந்தவளை கொன்று இருக்காங்க. அதுக்கு அந்த இளவழகன் பழி வாங்கறான். அதுல என் பேர்ல இருக்கற சர்வேஷ்வரன் யாரு. நான் தான் அவன் என்றால் அப்போ இளவழகன் யாரு? நான் தான் சர்வேஷ்வரன் என்றால் எனக்கு ஏன் எதுவும் நினைவு வரலை. 

இதெல்லாம் பார்த்தா எனக்கு இரண்டு ஜென்மமா ஏதோ ஒரு விஷயம் நடந்து, அது நிறைவேறாமா இறந்து இருக்கேன்." என்று சர்வேஷ் சரியாக கணித்து சொன்னான்.

"சரி இரண்டு ஜென்மத்திலும் நடந்தது நினைவு இருக்கா?" என்றான் சாந்தனு.

"நினைவு இல்லை... இப்ப நடக்கிற லிசா மரணம் அவளோட குடும்பத்தை சேர்ந்தவங்க மரணம் எல்லாம் முன்ன யவனரதிக்கு ஏதோ பாவம் செய்து இருக்காங்க. அதாவது பாகிரதி யவனரதியை அழிக்க அவங்க குடும்பமும் சம்மந்தப்பட்டு இருக்கு. 

அதே போல அபரஞ்சி வாழ்வில் அழிச்சி இருப்பாளா என்று தெரியலை... இருந்தும் அபரஞ்சியா பிறந்தப்ப ஆடலரசன் குடும்பத்தை சார்ந்தவங்க கொன்று இருக்கணும். அதனால தான் இப்ப ஆரோல் குடும்பத்தை பழி வாங்க இளவழகன் துடிக்கிறான்." என்று சர்வேஷ் நிறுத்த, சாந்தனு சிலையாக நின்றான். 

"என்னடா சிலை மாதிரி நின்றுட்ட, நான் பைத்தியம் மாதிரி முன் ஜென்மம். அதுவும் இரண்டு ஜென்ம நிகழ்வை பற்றி கதை விடறேனு நினைக்கிறியோ? இல்லை... பைத்தியமென்றே முடிவு கட்டிட்டியா?" என்று கேட்டதும், 

"சே சே... அதெல்லாம் இல்லை. நான் உன்னை நம்பறேன். எனக்கு என்ன புரியலைனா. இதெல்லாம் தெரிஞ்ச உனக்கு, அந்த யவனரதி யாரு அபரஞ்சி யாரு அதே பொண்ணு தான் உன்னிடம் டெலிபதி மாதிரி கம்யூனிக்கேட் பண்ணறானா அவ பெயர் என்ன? எங்க இருக்கா? உன்னைத் தேடி வருவாளா? அவளுக்கும் உனக்கும் நடந்த விஷயம் நினைவு வராம, ஏன் மற்றவங்க நினைவு வர்றாங்க." என்றான் சாந்தனு.

"அதை தான் இவ்வளவு நேரம் யோசிச்சிட்டு இருந்தேன். அவன் அவனுக்கு காதலி தான் நினைவு வருவாயென்று படத்துல கதையில கேள்விப்பட்டு இருக்கேன். எனக்கு மட்டும் ஏன் ஏதோ ஒரு கருப்புகை வருதோ. அதுவும் முழு உருவமா வந்து தொலையுதா. தலையில்லாம வருது யாரா இருக்குமென்று கெஸ் பண்ண? எரிச்சலா இருக்கு. பட் சாந்தனு... அபரஞ்சி வர்றா டா. என்னை தேடி வர்றானு சர்வேஷ்வரனா என் உள்ளுனர்வு சொல்லுது." என்று வெட்கம் கொண்டான் சர்வேஷ். 

"அடேய்... இந்த ரணகளத்திலயும் உனக்கு வெட்கம் வருதா டா. எனக்கு அடுத்து என்ன நடக்குமோ என்று ஜர்க் ஆகுது. இதுல ஒரே நேரத்தில் இரட்டை மரணம் நடக்கப் போகுதுனு சொல்லற. எதுக்கோ உன்னை விட்டு தனியா வீடு பார்க்க கிளம்பறேன். இல்லை நீ என்னை போட்டு தள்ளிடுவ" என்று சாந்தனு ஓடினான். 

தன்னவள் அபரஞ்சி என்ற பெயரில் சர்வேஷ்வரன் கனவில் மிதந்தான்.

ஆனால் வருவது அபரஞ்சி என்ற மெர்லின் அல்லவா. அதுவும் மெர்லினாவுக்கு தான் யார் தன்னை சுற்றி நிகழும் சம்பவம் உணராதவளாக இருக்க, சர்வேஷ்வரன் யாரென கண்டறிந்து காதல் கொண்டு, முன் ஜென்ம கணக்கை சரிச்செய்வனரா? என்பது விதி செய்யும் சதியில் தெரியாமல் காத்திருக்க செய்தான் சர்வேஷ்வரன்.

-🩸🩸🩸🩸🩸

-பிரவீணா தங்கராஜ் 

hi 
read pandravanka valuable comments kodunka. fb la comments pandravankaluku thanks a lot 

தீவிகை அவள் வரையனல் அவன்-22

 


🪔🔥-22

    சாப்பிட அமர்கையில் அந்நிகழ்வு தோன்ற தான் செய்தது. அதனை மறக்க முனைந்து அவளை காண யுக்தா பாதி சாப்பாட்டை வைத்ததும் நகர்த்தி வைக்க அங்கே பரிமாறப்பட்டவை எல்லாமே அன்று உண்ட அதே வகைகள்.

    ஆரவ் யுக்தா கண்கள் சேர்ந்து தங்கள் பழைய நினைவை அசைப்போட்டது.

    ஊட்டி சென்ற முதல் நாள் மதியம் அளவுக்கு அதிகமாகவே யுக்தா தட்டில் உணவு அதிகமாகயிருக்க, "ஆரு... எனக்கு இது அதிகம். நிறைய சாதம் வேஸ்ட் ஆகிடும்" என்று சொல்லவும்,

      "நாம ஷேர் பண்ணிக்கலாம்." என்றவன் யுக்தாவின் இதழில் இருந்து உதிர்ந்த உணவோடு சேர்த்து சாப்பிட்டாரன்.

   ஒரு தட்டில் காதலர்கள் உண்டார்கள். ஆரவ் அவனாக எடுத்து ஊட்டவும் யுக்தா கண்கள் பனித்தது.

     "சந்தோஷமா இருக்கேன் ஆரு. அம்மா கையில் சாப்பிட்ட திருப்தி. உன்னிடம் கிடைத்து இருக்கு. லவ் யூ ஆரு." என்று நெஞ்சில் சாய்ந்தவள் கண்களை ஆரவ் துடைத்து விட்டான்.

       இன்றும் அதே நினைவோடு கண்கள் பனிக்க, ஆரவோ கையை உதறி எழுந்துக் கொண்டான்.

    யுக்தா இம்முறை கூடவே எழுந்துக் கொள்ளாமல் இருக்க, ஆரவ் தான் இழுப்புக்கு வராது நின்றான்.

      அங்கே சுபாங்கினி, சந்துரு, வைஷ்ணி என்று இடையில் கைவைத்து நிற்க, போட்டோக்காரரும் தலையில் கைவைத்து நின்றார்.

     "நம்ம கல்யாணத்துல இப்படி தான் ஊட்டி விட்டு சாப்பிடணும். நாம பண்ற சேட்டையில் போட்டோ எடுக்கறவன் தலையில் துண்டை போட்டு விழிக்கணும்" என்ற பேச்சும் யுக்தா அன்று பேசியது இன்று போல தோன்ற அவளோ உண்பதில் தீவிரமாக ஆரவ் அமர்ந்தான்.

       யுக்தா எடுத்து ஊட்ட புகைப்படக்காரருக்காக வாயை திறந்தான்.

     யுக்தாவின் பார்வை துளைத்து எடுக்க ஆரவ் அவன் பாட்டிற்கு சாப்பிட்டான்.
   
    என்ன இம்முறை புகைப்படக்காரர் விழித்து முழிக்க, சந்துருவோ "நீங்க போய் சாப்பிடுங்க அவன் இப்ப இந்த உலகத்தில் இல்லை" என்று அனுப்பி வைத்தான்.

    சுபாங்கினியோ மனம் நிறைவாக இடத்தை விட்டு அகன்றார்.

   வைஷ்ணவி வாயை பிளந்து நின்றாள்.

    "என்னங்க இது... அண்ணா ஒரு வாய் வாங்க அப்படி யோசித்தார். இப்ப என்ன இலையில் இருக்கறதை அண்ணி கொடுக்க கொடுக்க, சாப்பிட்டார். இதுல உற்றுனு முக ரியாக்ஷன் வேற... இதான் அன்னிக்கு சொன்னிங்களா..? அண்ணா அதெல்லாம் வேற கல்யாணத்தை ஏற்றுக்க மாட்டருனு?" என்று கேட்டதும் ஆரவ் திரும்ப, இலையை கண்டு விழிங்கினான். 

     "சந்துரு அண்ணா.... எனக்கு கொஞ்சம் போல ரைஸ்" என்று கேட்க சந்துரு வைக்கவும் உண்டவள் "ஐஸ்க்ரிம் எனக்கு ஸ்டாப்பெர்ரி பிளேவர் அண்ணா... அவருக்கு பிஸ்தா" என்றதும் ஆரவ் இதற்கு மேல் பொருக்காது யுக்தாவின் லெகங்காவில் முடிச்சிட்ட தன் உடையை அவிழ்த்து எழுந்து சென்றான். 

        யுக்தா இருந்து அதனை சுவைத்து முடித்தவள் கடைசி வாயை உண்ட கணம் ஆரவை பார்க்க, அவனோ இம்மியளவு இந்த பக்கம் திரும்ப மனமின்றி நின்றான்.

      அன்று கடைசி ஐஸ்க்ரிம் உண்ட பொழுது அவளின் உதட்டை பட்டும் படாமலும் ஒற்றி செய்தவையை எண்ணி வேகமாக மண்டப ஹாலை விட்டே வெளியேறினான்.

       சுவாமிநாதன் மகள் வெளிவரும் பொழுது பார்க்க காத்திருக்க, ஆரவ் மட்டும் விறுவிறுவென நடந்து செல்வதை கண்டு பயந்தார்.

       எப்படியும் ஆரவ் தன் மகளை கொலை செய்பவன் அல்ல... யுக்தா மீது அளவற்ற காதல் கொண்டவன். அதனால் அவனின் மிரட்டுதல் வெறும் குழந்தைக்கு விடுக்கும் மிரட்டலாக எண்ணியிருந்தார். 

     ஆரவ் தனித்து செல்வதை கண்டதும் மகளை அம்போவென விட்டு செல்கின்றானோ என்றே தவறாகயெண்ணி வருந்தினார்.

      ஏற்கனவே சம்யு பேசுவதில்லை... தன்னை பற்றி பிம்பம் கெட்டவனாக போன வருத்தம், மகள் பிறந்த நாளுக்கு கொடுத்த பரிசை கூட திருப்பி தந்தது. இதில் தன்னை அந்த வீட்டில் இருந்து வெளியேற்றி மகளின் உன்னத அன்பை இழந்ததென்ற வலியில் துடிக்க, இன்று ஆரவ் இப்படி தனியாக விட்டு வெளியேறுவதை கண்டதும் இதயம் இன்னமும் சுருக்கென வலியை நெஞ்சில் தைத்தது.

      ஆரவ் சென்றதால் மற்றவரும் காரில் கிளம்ப எண்ணி வெளியேற, சந்துரு கண்ணில் சம்யு அப்பாவின் கார் தென்பட்டது.

     "சம்யு உங்கப்பா இன்னும் போகலை...  ஆரவ் தான் இல்லையே... பேசிட்டு வா மா." என்றான் சந்துரு.

     அந்த பக்கம் திரும்பாமலே எங்கப்பா எப்பவோ இறந்துட்டார் அண்ணா. நான் இப்ப ஆரவ் மனைவி மட்டுமே.. வண்டியை எடுங்கண்ணா." என்று சொல்லி அந்தப்பக்கம் காணாது இருந்தாள்.

     சந்துரு அவர் முகம் வருத்தப்பட்டு அழைப்பதாக எண்ணி வண்டியை எடுத்தான்.

     சுபாங்கினி அதன் பின் பார்க்க, சம்யுவின் அப்பா முகம் தான் காணமுடிந்தது.

    கொஞ்சம் தள்ளி செல்ல செல்ல சுபாங்கினி மனத்திரையில் சம்யுக்தா அப்பாவை ஓட்டி பார்க்க, மாப்பிள்ளை வண்டியை நிறுத்துங்க. அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து இருக்கு. வண்டியை திருப்புங்க." என்றதும் சந்துரு சம்யுக்தாவை பார்த்தான்.

      "அய்யோ அத்தை ஏற்கனவே இந்த மாதிரி அட்டாக் வந்தது போல நடித்து இருக்கார். அதனால இதுவும் நடிப்பு. அண்ணா வண்டியை எல்லாம் நிப்பாட்ட வேண்டாம் வீட்டுக்கு போங்க. ஆருதான் மனசுல பழையதை போட்டு தவிச்சுட்டு இருப்பார்." என்று சம்யுக்தா சொல்லவும் சந்துரு நிறுத்தாமல் காரை ஓட்டினான்.

      "அய்யோ சம்யுக்தா... நிஜமாவே வியேர்த்து இருந்தது. மாப்பிள்ளை நீங்க நிறுத்துங்க... நான் ஒரு எட்டு பார்த்துட்டு வர்றேன். நிறுத்துங்க..." என்றதும் சந்துரு முழித்தவன் வண்டியை திருப்ப முயற்சிக்க, "அத்தை ப்ளிஸ்... என்னால ஆரவ் பட்டது போதும். புதுசா அவர் ஆடுற டிராமாவை பார்க்க வந்தேன். என் ஆரவ் நிஜமாவே என்னை விட்டு விலகிடுவார். தயவு செய்து வீட்டுக்கு போலாம். அவருக்கு ஒன்றும் ஆகாது எல்லாம் நடிப்பு." என்றதும் சந்துரு ஆரவ் வீட்டை நோக்கி காரை செலுத்தினான்.

    சுபாங்கினி செவிலி என்பதால் சுவாமிநாதனின் முகம் காட்டி கொடுத்த பிணியை அவளால் அறிந்திட முடிந்தது. அதை சொல்லி புரியவைக்க தற்போது தன்னால் இயலாதவொன்று என்று சம்யுக்தாவை இறக்கிவிட்டு  சந்துரு வீட்டில் இன்று தங்குவதாக சொல்லி கிளம்பினார் சுபாங்கினி.

      சந்துரு சம்யுக்தாவை விட்டுவிட்டு  சுபாங்கினியை அழைத்து செல்ல, வைஷ்ணவி சந்துருவிடம் என்ன என்று விசாரிக்க, "எதுக்கு அத்தை இப்ப மண்டப ஹால் வரை போகணும் அவர் இந்நேரம் போயிருப்பார்." என்றதும் வைஷ்ணவிக்கு புரிந்தது.

     "இல்லை மாப்பிள்ளை அவருக்கு பிரச்சனை என்று தெரிந்தும் சும்மா போக முடியாது. என் தொழில் டாக்டர் இல்லை ஆனா நர்ஸ். உடல்நிலை குறைவா இருக்கறவங்களை தேற்றி விடறது தான்.  நீங்க போங்க... அப்படி அது நாடகம் என்றாலும் பரவாயில்லை. அதை அப்பறம் பார்த்துக்கலாம்." என்றதும் சந்துரு அவ்விடம் வந்து சேர,  சுவாமிநாதன் கார் அங்கே நின்றிருந்தது.

    சந்துருவிற்கே ஒரு பதட்டம் ஒட்டிக் கொண்டது. சுவாமிநாதன் தலை ஒரு பக்கம் சாய்ந்து தன்னிலை மறந்தவராக கிடந்தது.

      கார் கதவை திறக்க சுவாமிநாதன் மயங்கி சரிந்தார். சுபாங்கினி உடனடியாக அருகே இருந்த மருத்துவமனையில் சேர்த்து விட முனைந்தார்கள். அது சுபாங்கினி பணிப்புரியும் மருத்துவமனையும் கூட.

     விரைவாக சிகிச்சை அளித்து பார்க்க அவர் ஐசியூவில் சேர்க்கப்பட்டார்.

      நான் இங்க இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. இது நான் ஒர்க் பண்ற இடம் எதுனாலும் நான் பார்த்துப்பேன்." என்று திடமாய் கூறவும் சந்துருவும் வைஷ்ணவி கருவுற்ற காரணத்தால் அழைத்து சென்றான்.

    என்ன இந்நேரம் சம்யுக்தாவிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று முடிவு எடுத்தார்கள். என்ன இருந்தாலும் வருத்தப்படுபவள் அல்லவா. 

     ஆரவ் ஹாலில் ரிசப்ஷன் உடையிலே இருக்க, சம்யு பதமாக பாதத்திற்கு வலிக்குமோ என்று மெல்ல அடியெடுத்து நடந்து சென்றாள்.

     "நில்லு... எதுக்கு அந்த கிப்ட் வாங்கின? நான் அன்னிக்கு அவளோ சொல்லியும் புரிந்துக்க முயற்சி பண்ணலைல நீ..." என்றான்.

      "இல்லை ஆரு... அப்.. அவர் ஆபிஸ் ஸ்தானத்தில் கொடுத்தா..."
   
     "ஏய்... ஆருனு சொன்ன பல்லை தட்டிடுவேன். அப்பானு சொல்ல வந்த அப்படியே வெளியே போடி. ஆபிஸ் பழக்கமா அப்படின்னா அதை என்னிடம் கொடுக்கணும். உன்னிடம் கொடுக்க காரணம். என்ன நீ போ.. பின்னாடியே வயது ஏற்றம், உடல்நிலை காரணம் காட்டி வந்து நான் மன்னிப்பு கேட்டு கொள்றேன்னு சொன்னானா அந்தாளு.

    இங்க பாரு... என் மனைவி ஸ்தானம் மட்டும் இருக்கறதா இருந்தா இங்க இரு. இல்லை தாலி கழட்டி கொடுத்துட்டு கிளம்பிட்டே இரு." என்றான்.

    "நான் ஆருன்னு தான் சொல்வேன்.  அந்தாளை இனி அப்படி அழைக்க மாட்டேன் போதுமா. அத்தோட இனி யாரிடமும் பரிசு வாங்க மாட்டேன்.

   நீ சொல்வது போல உடல்நிலை சுகவீனம் என்று முன்ன வந்தாலும் நான் ஏற்க மாட்டேன். எனக்கு என் ஆரு முக்கியம். எதுக்காகவும் இனி என் தாலியை கழட்டவோ, உன்னை விட்டு பிரியவோ நான் தயாராயில்லை." என்று அவளறைக்கு சென்று விட்டாள்.

    ஆரவ் ஸ்தம்பித்து நின்றான். கோபத்தில் தான் அந்தாளு என்ற வார்த்தை விட்டான். ஆனால் அது பெற்ற மகளுக்கு வலிக் கொடுக்கும் என்று தெரிந்தவன் தான். ஆனால்... என்னவோ சம்யு பேசியது ஆறுதலாய் உணர்ந்தான்.

     அவன் ஜெயில் அவமானப்பட்ட கணமும், வேலைக்கு சென்ற பொழுது ஏற்பட்ட மரியாதையின்மையும் அவன் வாழ்நாளில் சுவாமிநாதனுக்கு மரியாதை தரக் கூடாது என முடிவெடுத்தான்.

     சம்யுக்தா சோர்ந்து போனாள். தன் வாழ்வில் தாயற்ற நிலையில் ஒரு முறை கூட தந்தை அந்த வெற்றிடத்தை எண்ணி பார்க்க விட்டதில்லை. எல்லாமே தந்தை நிவர்த்தி செய்து இருக்கின்றார். இந்த பணம் வைத்து பார்த்த ஏற்றதாழ்வில் ஆரவை அதளபாதாளத்தில் வைத்து எடைப்போட்டு தன் வாழ்வை அழிப்பார் என்று எண்ணவில்லை.

  முதலில் மறுப்பார் பின்னர் கொஞ்சம் கெஞ்சலோடு எடுத்துரைத்து ஏற்க வைத்திடலாம் என்று தான் எண்ணினாள். ஆனால் ஆரவை காயப்படுத்தியதில், வைஷ்ணவியை படுத்தியதிலும்,  அதிகமாகவே சம்யுக்தா காயம் அடைந்துவிட்டாள்.

     அறையில் உடைமாற்றி இருந்தவள் மெல்ல திரும்ப அங்கே ஆரவ் இருக்க, நகைகளை சுபாங்கினி அறைக்கு எடுத்து சென்று வைக்க போனாள்.

    ஆரவ் கைபிடித்து "வாட்டர் ப்ளிஸ்..." என்று சொல்லி விடுவிக்க, திகைத்த விழியில் வெளியே வந்தவள் உதடு முறுவலித்தது.

      நீரை எடுத்து வந்தவளின் முகம் பார்த்து வாங்கி பருகியவன், அவள் கையை விடுவிக்காது கன்னம் ஏந்தி  "என்னை விட்டு எங்கையும் போக மாட்ட தானே.... நீ என் யுக்தா தானே" என்றவனின் வார்த்தையில் அவனை அணைத்து கொண்டாள்.

     "நான் உன் யுக்தா மட்டும் தான் ஆரு..." என்று அழுதவளை அணைத்து ஆறுதல் படுத்தினான்.

    முத்தத்தின் கவிதைனை மொத்தமாய் சொல்லி கொடுக்க இனிய மனதோடு சங்கமித்தாள்.

-வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

-பிரவீணா தங்கராஜ். 

 hi ரீட் அண்ட் கமெண்ட்ஸ் பண்ற எல்லாருக்கும் நன்றிகள். 

தீவிகை அவள் வரையனல் அவன்-21


🪔🔥-21

   தன்னை வார்த்தையில் அறைந்து சென்ற உணர்வில் நின்றான் ஆரவ். யுக்தா பேசியது அத்தனையும் உண்மை. அவளை காயப்படுத்தி நான் மகிழும் அளவிற்கு குணம் கெட்டவன் அல்ல. ஆனாலும் ஏன் இப்படி பணத்தை அவள் மேல் வீசி அப்படி நடந்துக் கொண்டேன்.

     சுவாமிநாதன் சம்யுக்தா மேல் எனக்கு கோபம் இருக்கு. அதற்காக சம்யுவிடம் நான் நடக்கும் முறை என்ன? அவளை நேற்று அடைந்து என் மனதின் வலியை மறைக்க அவளிடமே தஞ்சமானேன். காலையில் அவளிடம் காயப்படுத்தும் விதமாக நடக்கின்றேன். இது நான் அல்ல... நான் நிதானமாக யோசிப்பவன் ஆயிற்றே. நான் ஜனனியை மணக்க இருந்த நேரத்திலும் தெளிவாக நின்றேன். ஆனால் தற்போது  முரணாக நடப்பது என்றால் நான் இன்னமும் தெளிவாகாத கட்டத்தில் நிற்கின்றேன்.

     யோசித்தவனின் நினைவு கலப்பதற்காகவே குளித்து முடித்து வந்திருந்தாள் யுக்தா. டவலை தன் உடலால் மூடி இருந்தாலும், அவளின் தோள்வளைவில் ஆரவின் பற்தடம் கண்டு தானாக அவனுமே குளித்து அலுவலகம் கிளம்பினான்.

       யுக்தா சுபாங்கினியிடம் வந்து மகள் போல உறவாட, சுபாங்கினி அவளை சாப்பிட்டு முடித்த பின், "ஆரவ் உன்னை காயப்படுத்தறானா மா?"

    "அதெல்லாம் இல்லை அத்தை... ஆரவ் சரியாகிடுவார். எனக்கு நம்பிக்கை இருக்கு." என்றவள் ரிசப்ஷன் லெகங்கா அழகாக இருப்பதாக தெரிவித்து அகன்றாள்.

      ஆரவ் பத்திரிக்கையை சில அடித்து அந்த கட்டிடம் வந்து நினறான். சுவாமிநாதனின் அலுவலகத்திற்கு தான். ரிசப்ஷனில் ஜனனி போனில் "எஸ் சார்... ஓகே சார்" என்று பேசி வைத்தவள் ஆரவை கண்டதும் அதிர்ந்து நின்றாள்.

     இவர் எதுக்கு இங்க.... என்று குழப்பத்தோடு, "வாங்க ஆரவ்..." என்று வரவேற்க,

     "எக்ஸ்கியூஸ் மீ... நான் இங்க இந்த கம்பெனியோட முதலாளி பெண்ணை மணந்த மாப்பிள்ளையா  வந்திருக்கேனே தவிர ஆரவ் என்று நீங்க பேர் சொல்லற அளவுக்கு உங்க சொந்தக்காரனா வரலை. என் மாமனார் சுவாமிநாதனை பார்க்கணும். ரிசப்ஷனுக்கு பத்திரிக்கை வைக்கணும் அப்பறம் இந்த ஆபிஸ்ல டீல் சைன் பண்ணியிருக்கற ஒரு கோ-ஒர்க்கரா பத்திரிக்கை கொடுக்க வந்து இருக்கேன். போய் சொல்லு...ங்க." என்றான். பற்களில் வார்த்தைகள் கடிப்பட்டு வந்து விழுந்தன.

    ஜனனி அஞ்சியவளாக சுவாமிநாதனிடம் சொல்லி உள்ளே போக அனுமதித்தாள்.

     ஆரவ் மிடுக்கோடு வந்து பத்திரிக்கையை கொடுத்து, "எதிர்பார திருமணம் பத்திரிக்கையில் என்னோட பேருக்கு அருகே உங்க பொண்ணு பெயர் வராமலே திருமணம் முடிந்தது. கொஞ்சம் கவலையா போச்சு. அதான் ரிசப்ஷனுக்கு உங்களுக்கு கொடுப்பதற்காகவே பத்திரிக்கையை தனியா அடித்து வைச்சிருக்கேன்.

     இந்தாங்க..." என்று நீட்டினான். கார்டில் முத்து பதித்து விலையுயர்ந்த கார்டை தேர்வு செய்து வந்திருந்தான்.

      "ரிசப்ஷனுக்கு கண்டிப்பா... வராதீங்க. நீங்க வந்தா.... உங்களோடவே யுக்தா திரும்ப போவதாக பண்ணிடுவேன். என்னை மீறி உங்களோடு வந்தா யுக்தா பிணமாக தான் வருவா அது உங்களுக்கே தெரியும்னு நினைக்கிறேன்." என்றவன் பேச்சு நின்றது. கையில் கூல்டிரிங்ஸ் எடுத்து வந்து ஜனனி நீட்டினாள்.

     "இன்னுமா இந்த செக் புக் வேலை செய்யுது. நான் கூட வேலைவிட்டு அனுப்பி இருப்பீங்கனு நினைத்தேன்." என்றதும் சுவாமிநாதன் உடனடியாக, "இந்த பெண்ணை கூட உடனடியா வேலை விட்டு அனுப்பறேன். தயவு செய்து என் மகளின் மணக்கோலத்தை என் கண்முன்ன பார்க்க விடு. உன்னை கெஞ்சு கேட்கறேன். நான் செய்த தப்பு எல்லாம் மன்னிச்சுடு. என் மகள் மேல ஒரு தப்பும் இல்லை. அவளுக்கு பதிலா நான் தான் சூழ்நிலையை சாதகமா பயன்படுத்திக்கிட்டேன்." என்று கெஞ்ச, கல் போல நின்றான்.

       "விதியை பார்த்தீங்களா... கடந்த நாலு வருடத்துக்கு முன்ன நீங்க எங்க சந்திப்பை பிரிக்க நினைத்து இதயப் பாதிப்பு வந்ததா நடிச்சீங்க. அடுத்து வந்த சந்திப்பு பிறந்த நாளா போச்சு. அப்போ சின்ன கிப்டை கொடுக்க முடியாம தடுத்தீங்க.இப்ப அதே மாதிரி பிரிக்க நினைத்தீங்க. அவ என் மனைவியா மாறி இருக்கா. இப்போ நீங்க கிப்ட் கொடுத்தா ரிட்டன் ஆகுதாமே கேள்விப்பட்டேன். எல்லாம் எனக்கு சரியா அமைந்தாலும்... என்ன... எனக்கு தான் அப்ப இருந்த மனநிலை இப்ப இல்லை. அப்ப யுக்தா என்னவளா எணணிட்டேன். இப்ப சுவாமிநாதன் பொண்ணு மட்டும் தான் தோன்றுது. இதுக்கே அவளுக்கு தினம் தினம் கொடுமை பண்ணலாம். பச் ஒரு இரவுக்கு மட்டும் விலைப்பேசி உங்க மகளை அனுபவிக்க தான் முடிந்தது. என் தங்கைக்கு வேசி பட்டமா கட்ட பார்த்த... உன் மகள் தான் அடைந்ததுக்கு பணத்தை லட்ச கணக்கில் கொட்டிட்டேன்." என்று சுவாமிநாதனை வருந்தவைக்கவே பேசினான்.

     "மாப்பிள்ளை இப்படி..." சுவாமிநாதன் பேசுவதை கேட்டு பலமாக சிரித்தான்.

     "மாப்பிள்ளையா.... என்ன சுவாமிநாதன் உங்க ஸ்டேடஸ்க்கு என்னை அப்படி கூப்பிடலாமா. பாவம் கஷ்டப்படாதீங்க. எனக்கும் உங்களை மாமனாரா பார்க்க கொஞ்சமும் இஷ்டமில்லை...." என்றவன் ஜனனியை பார்த்து "உன்னையும் தான் மனுஷியா மதிக்கவே தோன்றலை" என்று கதவு வரை வெளியே வந்தவன். அங்கே நின்று "தயவு செய்து வராதீங்க. வந்தீங்க.... உங்க பொண்ணை கையோட உயிரற்ற உடலா தான் கொண்டு போவீங்க" என்று இடத்தை விட்டே புறப்பட்டான்.

      ஜனனிக்கு விஸ்வநாதன் வேலை நீக்க கடிதம் கொடுத்து அனுப்பி விட்டார்.

     தீடிரென பணிநீக்கம் ஏற்படும் என்று எண்ணாதவள் பிளாங் செக்கால் வந்த பணத்தை வைத்து நிம்மதியாக தான் கிளம்பினாள்.

     இருப்பவனுக்கு ஒரு வேலை இல்லாதவனுக்கு பல வேலை காத்திருக்க, ஜனனி கவலையின்றி கிளம்பினாள்.

      சுவாமிநாதன் ஆரவ் சென்றதும் நொடிந்து போனார். இந்த நாலுவருட காலத்தில் லண்டன் சென்ற தன் மகள் சம்யுக்தா படிப்போடு கொஞ்சம் இரும்பு மனதாகவும் அவளை  மாற்றி விட்டது.
  
    அவளின் இயல்பு மாறி பேசுவதை குறைத்து கொண்டாள். முன்பிருந்த குறும்புத்தனம் எல்லாம் மாறி அலுவலகத்தையே ரன் செய்யும் அளவிற்கு வந்து நின்ற பொழுது பெருமையாக உணர்ந்தார். ஆனால் சம்யு இயல்பாக சிரிப்பதை முற்றிலும் பார்க்க முடியவில்லை என்பதையும் கண்ணுற்றார்.

    வரன் தேடி வந்தால் சம்யுவிடம் பேசுவதற்குள் அதுவாக திவேஷால் ஆரவ் விஷயம் கசிந்து தானாக நின்றது. திவேஷ் தடுக்கவும் கோபம் என்னவோ ஆரவ் மேல் திரும்பியது.
    
     ஆரவ் திரும்ப வந்து திருமணம் என்றதில் அப்படியொன்னும் சம்யு வருந்தியதாக தெரியவில்லை. இறுக்கம் மட்டுமே இருந்தது. அதை ஏற்று மறக்க எண்ணினாலோ என்னவோ தான் ஜனனியிடம் பேரம் பேசி செக் கொடுத்து ஆடிய ஆட்டத்தில் ஆரவ் தாலி கட்டிய பின் சம்யு முகம் இறுக்கம் தளர்ந்தது.

     தன் மகள் சிரிப்பை சந்தோஷத்தை அவன் மட்டுமே தர வல்லமை பெற்றதை கண்டப்பின் சுவாமிநாதன் செய்த குற்றங்கள் பூதகரமாக கண்ணில் வந்து பயமுறுத்தியது. அதுவும் மாமியார் நாத்தனார் என்ன கொடுமை செய்கின்றனரோ... என்றே அஞ்சிப்போனார். ஒரு நாள் இரவுக்கு விலை பேசினானாமே... என் மகள் எத்தனை வலியோடு அவனோடு போராடுகின்றாளோ... கண்ணீர் மட்டுமே உகுந்தது.

       சம்யுக்தா ரிசப்ஷன் பேப்பரை தடவி பார்த்தார். அதில் வாசமிக்க நறுமணம் கமழ்ந்தது. நிச்சயம் பத்திரிக்கைக்கு மட்டும் தனியாக கவனமெடுத்து செலவு செய்தது புரிந்தது.
  
  ஆரவ் இந்த இடைப்பட்ட நாளில் உயர்ந்தது இதிலே தெளிவானது.

    மகளிடம் தான் தரம் இறங்கியது தான் தற்போது வேதனை தந்தது.

     லெகங்கா உடுத்தி ராணி போல நடந்து வந்தவளை பார்க்க இருவிழி பற்றாது நின்று இருந்தான் ஆரவ். ஆரவை தான் யுக்தா பார்க்காமல் நின்றாள்.

       அவளின் கவனம் தன் மேல் இல்லையே என்ற சிறு சினம் எட்டி பார்க்க, வந்தவரை அணுகுவதிலும் வாழ்த்து பெருவதிலும் கவனத்தை செலுத்தினான்.

     போட்டோக்காரனின் உபயத்தில் ஆரவ் கை யுக்தா மேல் படிந்தது. தோளில், இடையில், கன்னத்தில் என்று பற்றியபடி புகைப்படக்காரன் சொன்னபடி நின்று போட்டோவாக அந்நிகழ்வு பதிய, சம்யு மெல்ல மெல்ல ஆரவின் விழியோடு கலந்து முடிக்க, பூ மனம் கொண்ட தனது பழைய ஆரவ் கொஞ்சமாய் எட்டி பார்ப்பதை உணர்ந்தாள்.

     அவள் மகிழ்ந்து நிம்மதி கொண்ட தருணம் ஆரவின் கரத்தில் சிறையாய் இருந்த கைகள் வலியை உணர்ந்தாள்.

    என்ன இது என்பதாய் ஆரவை காண அவனோ வாசலில் பார்வை பதித்து கல்லை போல மாறி கொண்டிருந்தான்.

       சுவாமிநாதன் கடைசியாக வந்தார். ஆரவிற்கோ அவர் வந்ததன் சினம் எரிமலையாய் பிரவாகித்தது.

    "ஆரவ் கை வலிக்கு..." என்று யுக்தா முனங்க, "வலிக்கட்டும் டி. எனக்கு இப்பவும் வலிக்குது." என்றவனின் பேச்சில் வலியை பொறுத்துக் கொண்டாள்.

     சுவாமிநாதன் நேராக மேடைக்கு வந்து பரிசு பொருளை நீட்டியபடி, "நான் மாமனாரா வரலை. உன்னோட டீலை சைன் பண்ணி கொடுத்த ஒன் ஆப் த டீலரா வந்திருக்கேன். வாழ்த்துக்கள்..." என்று கை கொடுக்க, ஆரவ் யுக்தா கையை விடுவித்தான். ஆனால் சுவாமிநாதனுக்கு கொடுக்க மறுத்து திரும்பினான்.

    யுக்தாவிடம் "அப்பாவா பரிசு தரலை. இது பிசினஸில் உன் கணவருக்கு தெரிந்தவர் என்ற ரீதியில்" என்று நீட்ட வாங்கினாள்.

    அவள் வாங்க மறுப்பாள் என்ற ரீதியில் ஆரவ் அமைதியாக இருக்க, யுக்தாவோ வாங்கி வைஷ்ணவியிடம் நீட்டினாள்.

       வாங்கியவளின் பார்வை என்னவோ மேடையினை தவிர மற்றவர்களை தான் பார்த்து கொண்டிருந்தாள்.

    எப்படியும் புகைப்படக்காரனின் பதிவுகளில் இருந்து தன்னை அழித்திடுவான் என்றே போட்டோக்காரனிடம் கொடுத்து தனது செல்லில் புகைப்படத்தை எடுத்து தருமாறு கொடுத்து வந்ததால் அதனை வாங்கி கொண்டு சென்றார். வாசலில் சென்ற கணம் திரும்பி பார்க்க, ஆரவ் சம்யு கையை இழுத்து கொண்டு அறைக்கு செல்வதை தான்.

      மனம் ஒரு நிமிடம் அவன் என்ன செய்வானோ என்று பதறினாலும், முன்பு ஆரவ் சாப்பிடாமல் கொள்ளாமல் சம்யுவிற்காக இறக்கும் தருணம் வரை சென்றதை எண்ணி தவறாக நடக்காது என்றே நம்பி கிளம்பினார்.

        இங்கு ஆரவ் தன் மனையாளை திட்டிக்கொண்டு இருந்தான்.

     "என்னை அவமானம் செய்தவனின் கிப்ட் எதுக்கு வாங்கின. என்னை மேலும் மேலும் எதுக்கு கெட்டவனா மாற்றிடறீங்க. இல்லை.... இனி நீ இங்க இருக்காதே வெளியே போ." என்று தள்ளினான்.

    சுபாங்கினி நடுவே வந்து, "என்னடா இது... கை நீட்டற பழக்கம், கட்டியவளை கண் கலங்காம காப்பாற்ற தான் ஆம்பளை. அடிக்கறதுக்கு இல்லை. அவ அப்பா செய்த தப்புக்கு. இவளை பழிவாங்கறதை நிறுத்து. உருகி உருகி காதலிச்சவ தானே. இங்க பாரு ஆரவ்... அவ பிறந்த நாளுக்கு சொல்லணும்னு நினைத்தேன். பழி வாங்கவோ, பதிலுக்கு பதில் என்று ஆரம்பிக்கவோ இவ என்ன எதிரியா டா. உன்னோட பாதி. நடந்ததை மறக்கற வழியை பாரு.

      இப்ப நீ இருக்கற நிலைமை. சம்யு அப்பாவோட வலியால் நீ போராடி எட்டி நிற்கற. அப்படி பார்த்தா அவருக்கு நன்றி சொல்லு. இதோ உன் தங்கைக்கு சந்துரு மாதிரி கணவன் கிடைத்தது அவரால தான். கெடுதலில் என்ன நல்லது நடந்ததென பாரு ஆரவ். முடிஞ்ச கெட்டதை எண்ணி இருக்கற நல்ல வாழ்வை கெடுத்துக்காதே." என்று கூறி "சாப்பிட வாமா." என்று சம்யுக்தாவை அழைக்க, அவளோ ஆரவிடம், வந்தவர் உங்க அலுவலக சம்மந்தப்பட்டவர் மட்டுமே தான். அதானால தான் பரிசை வாங்கினேன். அதுவுமில்லாம வந்தவர் சிலர் நம்மை தான் பார்த்துட்டு இருந்தாங்க." என்று கிளம்பினாள்.

    அவள் கிளம்ப அவளின் லெகங்கா இழுக்கப்பட்டது. அது ஆரவின் உடையோடு கட்டியிருக்க, அவள் நின்றாள்.

   சந்துரு வந்து, மச்சான் யுக்தாவா தனியா போனாலும் முடியாது. நீ தனியா நின்றாலும் முடியாது. உங்களை சேர்த்து வைத்து விட்டது விதி, கல்யாணம் என்ற பந்தத்தில். அதனால சேர்ந்தே போங்க." என்று தோளை தட்ட, ஆரவ் கோபமாக முன்னே நடந்தான். சம்யு உடை இழுக்க தானாக அவளும் உடன் நடந்தாள்.

-வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

-பிரவீணா தங்கராஜ்.
     

    
    

     

சிரமமில்லாமல் சில கொலைகள்-5

 


🩸-5

   ஆரோல் தன் தாய் மேரி தந்தை ஜார்ஜிடம் ''மெர்லினா சுத்தி ஏதோ அசம்பாவிதம் நடக்குது டாட். புரியுதா இல்லையா? அன்னிக்கு எனக்கு இன்னிக்கு லிசா அப்பாவுக்கு ஏற்பட்டு இருக்கு'' என்று ஆங்கிலத்தில் புலம்ப, 

       ''அன்னிக்கு உனக்கு என்றால் அப்போ இதுக்கு முன்ன உனக்கு ஏதாவது விபரீதமா ஏதாவது நடந்து இருக்கா ?'' என்று மேரி கேட்க ஆரோல் தயங்கினான். 

  ஆம் லிசாவிடம் தவறாக நடக்க சென்றேன் அப்போ இப்படி விபரிதமாக ஒரு குரல் கேட்டது. அதுவும் என்னை கொல்ல செய்வதாக என்று உலர முடியுமா தன் தாயிடம்.  

       ''நோ மாம். அது அது சாகறதுக்கு முன்ன லிசா இப்படி தான் நிழல் தூரத்துது, கருப்பு புகை வாள் வச்சி மிரட்டுறதா சொல்வா'' என்றே சொல்லவும், 

         மேரி ஜார்ஜிடம், ''அன்னிக்கு லிசா அம்மா புதைக்கிறப்பா நமக்கு கண்ணில் தோன்றியதே அந்த நிகழ்ச்சி அது ஏன் நமக்கு தோன்றனும். நமக்கும் அந்த பொண்ணுக்கும் என்ன தொடர்பு? ஆனா அன்னிக்கு நாம இருவரும் சேர்ந்து புதைகிற மாதிரி காட்சி வந்துச்சு. எனக்கு தான் அப்படி தோணுச்சு என்று உங்களிடம் சொன்னா உங்களுக்கும் அப்படி தான் காட்சியா வந்ததுனு சொன்னிங்க. அது ஏன் நமக்கு வந்துச்சு? இதுல அந்த மெர்லின் மேல நமக்கு அப்படி ஒரு கோவம் எட்டி பார்த்தது. என்னவோ நம்மளை அவ தான் புதை குழியில் தள்ளி விட்டது போல.'' என்று மேரி கூறிய அடுத்த நொடி, 

      ''மா நமக்கும் மெர்லின் ஃபேமிலிகும் ஏதாவது சம்மந்தம் இருக்கா? எனக்கு அவளை கோவிலுக்குள் பார்த்தது போல தோணுது'' என்றான் ஆங்கிலத்தில் ஆரோல். 

         ''என்ன கோவிலா இங்க என்ன இருக்கு? நாம கிறிஸ்டியன் ஆரோல். வாரம் தவறாமா சர்ச் போறவங்க.'' என்று ஜார்ஜ் சொல்லவும், ஆரோலுக்கு படிக்கட்டில் மெர்லினை தமிழ் கலாச்சார உடையில் பார்த்தேனே என்றதை சொல்ல யோசித்தான். 

      லிசாவை இச்சை முகர சென்றதை சொல்ல இயலாது தான். ஆனால் மெர்லினாவை படிக்கட்டு கரையில் கோவிலில் கண்டதை சொல்லலாமே என்று வாயை திறந்தான்.

           மேரியிடமும் ஜார்ஜிடமும் ''நாம கிறிஸ்டியன் தான் ஆனா அன்னிக்கு அப்படி தான் வினோதமா காட்சி வந்துச்சு என்ன பண்ண? கோவிலில் அவளை படிக்கட்டில் பார்த்தேன், பேச முயன்றதும் ஒரு ஆண் தடுத்து தன்னை எச்சரித்தான் என்றே கூற, மேரி தான் என்னவோ யோசனையில் சென்றார். 

        ஜார்ஜ் தான் ''என்னவோ நாளைக்கு சர்ச் போயி ஒரு ஜபம் செய்து ஹோலி வாட்டர் வங்கிடுவோம்'' என்றே நகர்ந்தார். 

         ஆண்டர்சன் சர்ச்சிலே உறங்கினான். ஆனால் பாதி இரவில் தட்டு தடுமாறி எழுந்து இடங்களை ஆராய, அது தங்கள் வீடு போன்று தோன்றவும்,  பயத்தில் வேகமாக ஓடினான். 

         எதிரே பாஸ்டர் வந்து பிடிக்க அவரை இளவழகன் என்றே எண்ணி தள்ளிவிட, பாஸ்டர் அங்கு இருந்த மேஜையில் மோதி மயங்கி சரிந்தார். 

        ஆண்டர்சன் அதிவேகமாக தங்கள் வீட்டுக்கே வருவது அறியாது சித்தம் கலங்கி இருக்க, இளவழகன் அவன் வருகை அறிந்து கதவை திறந்து காத்திருந்தான். 

           ஆண்டர்சன் வந்து கதவை சாற்றி முடித்து மூச்சு வாங்க நிற்க, நீரை பருகினான். இனி நிம்மதியாக இருப்போம் என்ற நிமிடம், இளவழகனின் தலை மட்டும் முன் வந்து, ''என்ன மாமனே மீண்டும் வந்து விட்டாய், நல்லதே... பித்தம் கலங்கி சித்தம் சூடேறறும் வகையில் உமக்கு ஒரு செய்தி உண்டு. இனி நீ மீண்டும் மீண்டு வர வேண்டாம், உமக்கு மோட்சம் தனது விடுகின்றேன். இனி ஒரு பிறவி பிறக்க மாட்டாய்.'' என்றே கூற உடலாற்ற தலை வந்து பேச வழி தெரியாது மாடியில் ஓடினான். அங்கே ஒரு உருவம் நிற்க, அதனிடம் உதவி கேட்கும் வகையில் காலை பிடித்து, ''என்னை காப்பாற்றுங்க, அது பேய்... என்னை கொல்ல வருது.'' என்றே கதற,

     ''பேயை என்ன செய்த ஆண்டர்சன்? அது உன்னை ஏன் சுற்றுது?'' என்றே குரல் கேட்க, அது பாஸ்டர் குரலாக எண்ணி மன்னிப்பு கேட்கும் பொருட்டு, 

       ''நான் போன இரேண்டு ஜென்மத்திலும் கொலைக்கு உறுதுணையாக இருந்துட்டேன். யவனராதி சாகடிக்க கூட்டு சேரந்துட்டேன். அதுக்கு இளவழகன் பழி தீர்க்க வந்து இருக்கான்.'' என்றே கூற, 

       ''கொலைக்கு கூட்டு அல்ல மாமனே.. துரோகத்திற்கு கூட்டு சேர்ந்தாய். அதன் பலனே... ஜென்மம் தொடர அனுபவிக்கின்றாய். இனி உன் நிழலும் பூமிக்கு வேண்டாம், என்றவன் குனிந்து இருந்த ஆண்டர்சனய் தீண்ட, அதே நேரம் ஆண்டர்சன் நிமிர, தலையற்ற உருவத்தில் இளவழகன் தலை வந்து சேர்ந்த அடுத்த நிமிடம், இளவழகன் தீண்டலில் உடல் நெருப்பிலிட்ட புழுவாக துடித்தான். 

       ஆண்டர்சன் உடல் நெருப்பு பற்றியது போல கனலாக மாறியது. 

          இளவழகன் கருப்பு உருவம் புகையாக மாறி மேகத்தினூள் சென்று படிய கரிக்கட்டையாக ஆண்டர்சன் உடல் அங்கே கிடந்தது. 

             அடுத்த நாள் பாஸ்டர் வந்து  பார்க்க நெருப்பில் கருகிய உடலை தான் கண்டார். தன் நெற்றியில் சிலுவையை போட்டு விட்டு அங்கே போலீசுக்கும் தகவல் தந்தார். 

               மகளின்  கொலையில் , மனைவியின் இயற்கை இறப்பில், தாங்கி கொள்ள இயலாது தற்கொலை செய்து கொண்டதாக பாஸ்டர் வாக்கு மூலம் தர, அதனை ஆரோல் பார்த்து கொண்டிருந்தான். 

      மேரி ஜார்ஜ் ஆரோல் மூவரும் பிரட் டோஸ்ட் சாப்பிட அமர்ந்தவர்கள் இதனை கண்டு தங்கள் உணவினை பார்க்க அதிலோ இரத்த துளிகள் தடவி இருக்க கண்டு தூர எறிய, மூவரும் அதிர்ந்தார்கள். 

          டிவியில் ஆண்டர்சன் உடலை எடுத்து செல்வதை காட்ட, பாஸ்டர் பேசி முடிக்க டிவியை அணைத்தான் ஆரோல். ஆனால் அங்கே கருப்பு திரையாக மாறாமல் வெள்ளை திரையாக காட்சி அளித்து, கருப்பு புகையில் வந்து இளவழகன் தலையாக மாறி, ''தயாராகுங்கள் போருக்கு அல்ல. பிணமாக'' என்றே மறைந்தது. 

         ''ஆரோல் டிவி ஆப் பண்ண சொன்னேன் டா'' என்றே மேரி அலற,  

         ''மாம் அது தானா வந்து போச்சு.'' என்றே ஆரோல் சொல்ல, 

        ''இனி தாமதிக்க வேண்டாம். நாம என்ன ஏது என்று அறிந்து இதுக்கு முடிவு கட்டணும்.'' என்றே ஜார்ஜ் கூறவும் ஆரோல் மனம் இந்த நிகழ்வுக்கு எல்லாம் மெர்லின் காரணமா இருப்பாளோ என்றவன் மனம் அவளை தேடி அவள் வீட்டிற்கு போக முடிவெடுத்தான்.

    இங்கே சித்தப்பா உடல் தகனத்திற்கு வருவதாக சொன்ன மெர்லினாவை தபித்தாள் தடுத்து வீட்டிலே இருக்க சொன்னாள்.

      "மாம்... நான் வர வேண்டாமா? என்று கேட்க தபித்தாள் வேண்டாமென்று தலையசைத்து சென்றார்.

      கிறிஸ்டோபர் தபித்தாள் இருவரும் தங்கை கணவரை வழியனுப்பி ஜெபம் முடித்து அங்கே நிற்க, அதே நேரம் ஜார்ஜ் மற்றும் மேரி வந்து ஹோலி வாட்டர் வாங்கி கொண்டு பாஸ்டரிடம், முன் ஜென்மம் இருக்குமா? அப்படி இருந்தால் பழி பாவம் மனிதர்களை துரத்துமா? என்றே கேள்வியாக கேட்க,

         ''மனிதனின் பிறவியானது போன பிறவியின் பாவ புண்ணிய செயல் மூலமாகவே தான் இந்த பிறவியில் நமக்கு கிடைக்கும் நன்மை தீமையும், இதில் முன் ஜென்மம் என்பது இதிலே இருப்பதாக அறியப்படுகின்றது. பழி பாவம் இருக்கின்றதா? என்று கேட்டால்.... மனிதனின் இன்ப துன்ப நிகழ்வு வைத்து தான் முடிவு எடுத்து கொள்ளப்படுகின்றது'' என்று சொற்பொழிவு ஆற்ற,

         ''அது இல்லை பாஸ்டர் அது வந்து.. எப்படி சொல்றது?'' என்றே ஜார்ஜ் தயங்க,

        ''உயிர் போன பின்ன தயங்க முடியுமா? நீங்க இருங்க நான் கேட்கின்றேன்.'' என்று மேரி முன் வந்து, தங்களுக்கும் தனது மைந்தனுக்கும் கனவில் துரத்தும் நிகழ்வாக சொல்லி முடித்தாள். 

      பாஸ்டர்.. இந்துவா போன ஜென்மம் வாழ்ந்தது போல தோன்றுதே அது தப்பு தானே?'' அதனால தான்... என்றே இழுக்க, 

    ''இங்கு கடவுள் ஒருவர் தான் மேரி. மக்கள் வாழும் இடங்களை பொறுத்து தான் கடவுள்கள் வேறுபடுகின்றனர். உண்மையான இறைகொண்டவன், எந்த கடவுளையும் வேறுபடுத்தி பார்க்க மாட்டான். துர்ஆவி சுற்றி இருப்பதாக தோன்றினால் அதற்கு மனதூய்மை படுத்தி கொள்ளுங்கள். நல்ல விஷயம் தேடி சென்று செய்யுங்கள். மனமானது தன்னால் தீய எண்ணங்களை கலைந்து விடும்'' என்றே ஆங்கிலத்தில் சொல்லி முடிக்க அவரிடம் ஆசீர்வாதம் பெற்று மேரி ஜார்ஜ் வெளியே வந்தார்கள்.

           கிறிஸ்டோபர் மற்றும் தபித்தாள் யோசனையோடு பார்த்து அவர்களும் சென்றனர்.

       இங்கு அதற்குள் மெர்லினை தேடி வந்த ஆரோல் ''டெல் மீ தெ ட்ரூ மெர்லின். சம் ஒன் நியர் ஹியர்'' என்றே கேட்க மெர்லின் யோசித்து யோசித்து தனக்கு அப்படி உன்னை பார்த்தது போல தோன்றவில்லை என்றே கூற, ஆரோல் நம்ப மறுத்தான்.

         ஆரோல் மெர்லின் பேசி கொண்டு இருப்பதை இளவழகன் கையை கட்டி கொண்டு அங்கே நின்றது.

          ஆரோல் மெர்லினின் ''ஐ டோன் நோ ஆரோல்'' என்ற அதே பதிலை கேட்டு சலித்து திரும்பினான்.

            எதிர் இருக்கையில் அமர்ந்து கண்களை மூட பாவாடை தாவணியில் தலை நிறைய மல்லி பூ அணிந்து குளத்தின் நீரில்  கால் அலம்பியவாறு மீன்களுக்கு பொரியை தூவும் பெண்ணவளின் முகமாக மெர்லினாக தெரிய, அங்கே தனக்கும் மெர்லினுக்கும் இடையே ஒரு ஆண் மகன் வந்து நின்றான்.

              பாதம் முதல் உச்சி தொட்டு முகம் காண, ''நாழி ஆகுது அம்மா அங்கே கத்திண்டு இருக்கா. நீ என்ன பண்ற'' என்றே ஒருவன் கேட்க ''சர்வேஷ்வரா.. நீயாவது செத்த இங்க வாயேன் டா'' என்றே அழைக்கும் குரல் கேட்க, அந்த ஆடவன் செல்ல அங்கே கருப்பு உருவம் அபரஞ்சி கண்டது போதும் உமது பணியினை கவனிக்க செல்.'' என்றது அவ்வுருவம்.

       திடுக்கிட்டு எழுந்தான் ஆரோல். அது அந்த கருப்பு உருவம்... என்றே திரும்ப மெர்லின் அருகே இன்றும் இருக்க கண்டான்.

          திடுக்கிட்டு எழுந்து பார்க்க அதே அபரஞ்சி தான். நீயாக விட்டு சென்றால் உனது உயிர் பிழைத்து கொள்ளும். இல்லையேல் பாகீரதி நேர்ந்தவைகள் எல்லாம் உனக்கும் நேரும். உமது வம்சத்தில் நீ மட்டுமாவது இக்காலத்தில் உயிருடன் இருக்க பாருங்கள்'' என்றே கர்ஜிக்க ஆரோல் விழுந்தெடுத்து ஓடினான்.

        ''ஆரோல் என்னாச்சு... எதுக்கு இப்படி ஓடறான்'' என்றே யோசிக்க தபித்தாள் கிறிஸ்டோபர் எதிரே அதே கேள்வியோடு கேட்டு முடிக்க,

        ''தெரியலை மாம்'' என்றே சொல்லி சோகமாக அமர்ந்தாள்.

      ''என்னை சுற்றி என்ன நடக்குது. ஐயோ தொடர் இறப்பு கேட்டு ஒரு மாதிரி இருக்கு. என்ன தான் நடந்துக்கும்?'' என்றே புலம்ப, உமக்கு எதுவும் அறியாமலே போனது தான் துர்பாக்கியம் ரதி'' என்றே கூற அங்கே மெர்லினுக்கு இளவழகன் குரல் கொஞ்சமும் செவியில் சேரவில்லை.

         ''யவனரதி என்பதை தான் மறந்தாய்..  அபரஞ்சி என்பதையாவது நினைவு உள்ளதா ?'' என்றே கேட்க, ''சர்வேஷ்?'' என்றே மெர்லின் உச்சரித்து மயங்கி சரிந்தாள்.

            இங்கே தலயை பிடித்து கொண்டு சர்வேஷ் கோவத்தோடு அமர்ந்து இருந்தான். ஐயோ அந்த கருப்பு உருவம் எல்லாரையும் போட்டு தள்ளுது சாந்தனு. அது கொலை தற்கொலை இயற்கை மரணம் இல்லை மூன்று பேரும் மாயமா அந்த பேய் தான் கொன்றுடுச்சு?'' என்றே சாந்தனுவிடம் கத்தி கொண்டு இருந்தவன் உடனே தன்னை யாரோ சர்வேஷ் என்று அழைக்க உணர்ந்து, அவ அவ அபரஞ்சி குரல். ஐயோ அவளுக்கு என்னவோ ஆச்சு குரல் சோர்ந்து கேட்டுச்சு'' என்றே சர்வேஷ் கத்தி புலம்ப சாந்தனு சோபாவில் துண்டை தலையில் போட்டு பாவமாக ஒன்றும் விளங்காமல் வேடிக்கை பார்த்தான்.  

-🩸🩸🩸🩸🩸

-பிரவீணா தங்கராஜ்.

தீவிகை அவள் வரையனல் அவன்-20

 


🪔🔥-20


        இன்று சம்யுக்தாவிற்கு பிறந்த நாள் எப்படி மறந்தேன்? வருடம் வருடம் நினைவு வந்து கொல்லுமே... இன்று எப்படி மறந்தேன்... என்றவன் அன்னை தன்னையே பார்ப்பதை உணர்ந்து சோபாவில் அமர்ந்தான். 


       மனமோ அவளுக்கு பிறந்த நாளுக்கு பரிசு தரவில்லையா? புது டிரஸ் வாங்கிதராத காதலன். ஒரு கேக்கை கூட வாங்க வக்கில்லாத கணவனா? என்று உள்ளம் கேள்வி கேட்டதும் எழுந்தான். 


    அட சொன்னதும் எழுந்து கிப்ட் வாங்க போறியா ஆரவ் என்று அவனின் மூளை நக்கலாக கேட்டதும் தலையை தாங்கி அமர்ந்த நிலையிலே இமையை இறுக மூடினான். 


     சம்யுக்தா அதனை கண்டு மனம் வருந்தினாள். ஆரவ் மனதிற்கும் மூளைக்கும் இடையில் சிக்கி தவிப்பதை நன்றாகவே அவளுக்கு புரிந்தது. அவன் தாடை பற்றி திருப்பி 'என்ன ஆரு பிரச்சனை மனசுவிட்டு பேசு டா.' என்று கேட்க துடித்தாள். 


     அவளை விட அவள் மனம் புரிந்தவன் ஆரவ் தான். அவன் அறியாததா? அவனாக வருவான் என்று எண்ணியிருக்க, சுபாங்கினி "வாங்க மாப்பிள்ளை" என்று அழைப்பது கேட்டு யுக்தா திரும்ப ஆரவும் நிமிர்ந்தான். 


   கையில் கேக் அட்டைப்பெட்டி எடுத்து "பிறந்த நாள் வாழ்த்துக்கள் சம்யு" என்று சந்துரு கூறவும் "தேங்க்யூ அண்ணா" என்றாள். 


    வைஷ்ணவி கையில் பரிசாக ஆடையை எடுத்து வந்து நீட்டியபடி, "அண்ணி இந்தாங்க மாற்றிட்டு வாங்க. கேக் கட் பண்ணலாம்." என்றதும் சம்யு மென்னகை புரிந்து வாங்கிக் கொண்டு மாற்ற சென்றாள். 


    ஆரவிற்கு தான் சந்துரு எப்படி நினைவு வைத்திருந்தான் அதுவும் கேக் டிரஸ் பிரஸண்ட் வேற என்று அவனை இழுத்து தனியாக கேட்டு விட்டான். 


     "மச்சான் அத்தை வைஷ்ணவிக்கு போன் பண்ணினாங்க டா. வீட்டுக்கு டோர் டெலிவரியா கேக் அண்ட் கிப்ட் வந்ததாம். நம்ம சம்யு பெயருக்கு... முதல்ல என்னனு தெரியாம கேக்கை வாங்கி பிரித்து இருக்கா அதுல ஹாப்பி பெர்த்டே சம்யு குட்டி எழுதியிருந்ததை பார்த்ததும் தூக்கி எறிந்திடவும் தான் அத்தை பார்த்து இருக்காங்க. சம்யுவுக்கு பிறந்த நாள் கிப்டை திரும்ப அதே அட்ரஸ்க்கு எடுத்து போக சொல்லிட்டாளாம். சுவாமிநாதன் அனுப்பியிருப்பார் போல.


     அத்தைக்கு இதை பார்த்ததும் கஷ்டமா போச்சாம். ஒருமுறை உங்க வீட்டுக்கு பிறந்த நாளென வந்தாப்ப அன்னிக்கு அத்தை மனசு சங்கடமா நிறைய பேசினாங்களாம். அதான் சம்யுவுக்கு இந்த நேரம் கூட வேற உறவும் இல்லை நட்பும் இல்லை. வைஷ்ணவிகிட்ட சொல்லி கேக் டிரஸ் வாங்கிட்டு வர சொல்லியிருக்காங்க. அதான் நானும் ஒரு சின்ன கிப்ட்டோட வந்துடலாம்னு. ஏன்டா உனக்கு காலையில் நினைவு இல்லையா? அந்தளவு மறந்துட்டியா ஆரவ்." என்றதும் ஆரவ் கல்லாக மாறி இருந்தான். 


     இத்தனைக்கும் அவன் மாறியதற்கு காரணம் கடந்தகாலம் என்று இறுகிப் போனான். 


     அதற்குள் சேலை அணிந்து வந்து தயங்கி நின்ற சம்யுக்தாவை, "அண்ணி ப்ளவுஸ் கரெக்டா இருக்கா... அம்மா சொன்னதும் போய் வாங்கி தைய்த்து வந்தது." என்றாள் வைஷ்ணவி. 


      "சரியா இருக்கு வைஷூ. தேங்க்ஸ்... பிறந்த நாள் வாழ்த்து கூட யாரும் சொல்லாம இந்த தினம் முடியுமோனு நினைத்தேன். இப்ப சந்தோஷமா இருக்கு." சம்யு கூறியதும் ஆரவ் விடுக்கென நிமிர்ந்து பார்த்தான். 


    இங்கே தான் ஒருவன் மனதில் நித்தம் நித்தம் குமைந்திருக்க இவளுக்கு சந்தோஷமா? என்று பார்த்தான். அடுத்த கணம் யுக்தா கண்களை கண்டவன் பார்வையை அவளிடமிருந்து அகற்றிக் கொண்டான். 


      கேக் கட் செய்து முதல் துண்டை ஆரவ் புறம் திருப்புவாள் தட்டி விட எண்ணி இருக்க, அவளோ தன் மாமியாருக்கு ஊட்டி முடித்தாள். ஆரவ் ஒரு கணம் நெகிழ்ந்து விட்டான். 


     "எனக்கு அம்மா இல்லை. என்னால இந்த குடும்பம் எத்தனை துன்பத்தை அனுபவித்து இருக்கோம்னு புரியுது. அத்தனை துன்பம் அனுபவித்தும் இந்த குறிப்பிட்ட நாளில் என்னை புரிந்து கொண்டவங்க நீங்க. எனக்கு அத்தையா தெரியலை அம்மாவா தான் தெரியறீங்க." என்று கூறவும் சுபாங்கினி இத்தகைய பெண்ணையா அன்று கடுஞ்சொல் சொல்லி பிறந்த நாள் அதுவுமாக வீட்டில் இருந்து அனுப்பினோம் என்ற  குற்றவுணர்வு வந்தது. 


     "சந்துரு அண்ணா இந்தாங்க" என்று ஊட்ட வந்தவளின் கையை பற்றி திருப்பி ஆரவ் பக்கம் நகர்த்த ஆரவ் எதிர்பார்க்காததால் அவள் ஊட்ட சந்துரு திணிக்கவும் ஒரு கடி அதில் பதித்து இருந்தான். மீதியை வேறு யாருக்கும் உண்ண பிடிக்காது யுக்தாவே சாப்பிட்டு முடித்தாள். 


     அதே சந்தோஷத்தோடு இரண்டு பீஸ் கட் செய்து சந்துருவிற்கும் வைஷ்ணவிக்கும் கொடுக்க உண்டனர். 


      சந்துரு வைஷ்ணவி இருவரும் சேர்ந்து அந்த பிரசெண்டை நீட்டினர். யுக்தா குழப்பத்தோடு நிற்க, "வாங்கிக்கோ சம்யு" என்று சுபாங்கினி சொல்லவும் "தேங்க்ஸ் அண்ணா" என்று பிரிக்க, கண்ணை பறிக்கும் நகை இருந்தது. 


      "அண்ணா அண்ணிக்கு போட்டு விடு" என்று வைஷ்ணவி சொல்ல, ஆரவ் பார்த்த பார்வையிலே வைஷ்ணவி அமைதியாகி விட்டாள்.


    சுபாங்கினி ஆரவ் செய்கையை எண்ணி தனிபட்டு அவனிடம் பேச அக்கணமே முடிவெடுத்தார். 


     சற்று நேரம் இருந்து பேசிவிட்டு, உணவருந்தி, வைஷ்ணவி சந்துரு கிளம்பினர்.


    சந்துரு தான் போகும் பொழுது "அவன் சீக்கிரம் புரிந்துப்பான் மா. மனசுல இருக்கற வலி மறைய நேரமெடுக்கும் மா. இப்ப தானே உன்னை பார்த்து இருக்கான். கொஞ்சம் கொஞ்சமா உன் முகமே பழையதை மறக்க வைக்கும். தானா உன் ஆருவா வந்து பாசத்தை பொழிவான்." என்று கூறினான். 


    "உங்க ஆசிர்வாதம் அண்ணா. நிஜமானா ரொம்ப சந்தோஷம் தான்." என்று கூறி வழியனுப்பி விட்டாள். 


     ஆரவ் அப்பொழுதே அவனறைக்கு சென்று இருந்தான். 

     

      மனம் அத்தனை கோபத்தில் தகித்தது. அது யார் மேல் என்பது தான் அவனுக்கே எரிச்சலாக இருந்தது.


    சுபாங்கினியும் அவரது அறைக்கு உறங்க சென்று இருந்தார். 


     கதவை திறந்து தாழிட்டு, ஆடை மாற்ற முயன்றவள் ஆரவை கண்டு அதிர்ந்து நின்றாள். 


     தொப்பலாக நனைந்து வந்தவன் கண்கள் மட்டும் சிவந்து கோவப்பழமாக இருந்தது. 


      அவனை கண்டு ஒதுங்கி சென்று உடை மாற்ற நைட்டி எடுக்க முயன்றாள். 


    ஆரவ் அவளை கைபற்றி இழுத்தான் அவன் மீதே பூ போல மோதியவளை கண்கள் கலக்க சில நிமிடம் விழியில் கவிதை புரிந்தான். 


     அவளின் மெல்லிடையில் தன் வன்கரத்தை பதித்தவன். அவள் உதட்டிலும் முதல் முத்தத்தை பதித்தான். 


     உயிர் அமுதம் கிடைத்த மனநிலையில் இத்தனை நாள் வலிகளை மனழுத்தங்களையும் அதில் நிவர்த்தியானது. 


     ஆரவின் முத்தம் அதனோடு முடியாமல் நீண்டு கொண்டு செல்ல, சம்யுக்யா அவனின் கைகளுக்கு தடை விதிக்காமல் அவனுடன் கலந்தாள்.   


    இவனுக்கு அவள் மருந்தா? அவளுக்கு இவன் மருந்தா? என்பது அறியாது இருவருக்கும் அருமருந்தாய் மாறி நிம்மதியில் பயணித்து நித்திரையும் அடைந்தனர். 


    அதிகாலை ஆரவின் கைவளைவில் உறங்கும் சம்யுக்தாவை கண்டு ஆரவ் கொஞ்சம் கொஞ்சமாக நேற்றைய இரவு நடந்தவை ஓட்டி பார்த்தான். 


    மெல்ல ஆரவ் எழுப்பும் நேரம் தன் முட்டி கையால் அவளின் உள்ளங்கையை அழுத்தம் கொடுத்து விடவும் அதன் வலியில், "ஸ் ஆ அப்பா" என்று முணங்கவும் ஆரவ் மனம் சுவாமிநாதனை எண்ணி விட்டது. தேனை பருகும் பொழுது குரங்கை எண்ணிவாட்டான். மீண்டும் வேதாளம் ஆனான். 


    மெத்தையில் சற்று சள்ளி விழுந்தவள் ஆரவின் சினம் கண்டு எதற்கென்று புரியாமல் அவனை விழித்து நோக்கினாள். பாதி தூக்கத்தில் வலியில் முணங்கியதை அவளே அறியாமல் இருந்தாள்.


      மேலும் நமக்கு அடிப்பட்டால் அப்பா என்றோ, அம்மா என்றோ அனிச்சையாக குறிப்பிடும் வார்த்தையை அவள் உச்சரித்ததை ஆரவ் 'அப்பா' என்றதை மட்டும் உள்வாங்கி இருந்தான். 


     "அது எப்படி டி. இங்க நான் சித்திரவதை அனுபவிச்சிட்டு இருக்கேன். நீ மட்டும் எப்பவும் போல அதே சந்தோஷம் நிம்மதியோட மிடுக்கா இருக்க? எத்தனை வலி கொடுத்தும் உன்னை வீட்ல வைத்து இருக்கேன் பாரு." என்று வீறிட்டு கத்தினான். 


      நேற்று நடந்தவை கூட உணர வைக்க முடியாது அவன் கேள்விகள் குழப்பத்தை தரவும், அவனே தொடர்ந்தான். 


     "நான் உன்னை மிஸ்பிகேவ் பண்ணினேனா? உங்கப்பா நம்ம காதல் தெரிந்ததும் உனக்கு கொடுத்த அட்வைஸ்ல நான் மத்தியவாசி தெரிந்ததா? ஏன் நம்ம காதலிக்க ஆரம்பிச்சப்ப தெரியாதா? அது என்ன? என் வாயை அடைக்க எங்க வீட்டு பெண்ணோட மானத்தை கேவலப்படுத்தி சீப்பான ஆளா இருக்கான் உங்கப்பன். 


    தெரியுமா டி உனக்கு... உன்னால என் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறியதுன்னு. 


    எங்கம்மா வேலையிலிருந்து எடுத்தாங்க, வாடகை வீட்டை விட்டு வெளியேற வைத்தான். படிக்கிற படிப்பை கெடுக்க எண்ணி உன்னை கெடுக்க முயன்றேனும் அதனால நீ விபத்தே பரவாயில்லைனு வண்டில மோதியதா கேஸ் போட்டு உள்ள தள்ளியிருக்கார். 


    நீ அதுக்கு பளிச்சினு கையெழுத்து போட்டு கொடுத்து இருந்த? ஜெயிலில் தள்ளியும் உங்கப்பா வெறி அடங்கலைல என் தங்கை என்னடி பாவம் பண்ணினா? வேசி பட்டம் கட்ட பார்த்தான் அந்தாளு. 


    மனுஷனா டி... ஜெயில் வந்து என்னிடமே சொல்லி என் கையாளாகாத தனத்தை பார்த்து ரசிக்கிற சாடிஸ்ட்டா இருந்தான். சந்துரு இல்லைனா என் அம்மா தங்கை செத்து போயிருப்பாங்க.... எல்லாத்துக்கும் காரணம் நீ... ஆனா மேடம் ஹாயா லண்டனுக்கு படிக்க போயிட்டீங்க. 


    காதல் கன்றாவி உனக்கு தேவையில்லை. படிப்பும் பதவியும் உன் கம்பெனி ரன் பண்ற அளவுக்கு ஆளுமையும் தான் வேண்டுமென்றால் எதுக்கு டி என்னை மாதிரி ஒருத்தனை நடுவுல காதலிக்கறீங்க. 


     போ... தேர்ட் கிரேடு ஆளு தான் உன்னை உச்சி முதல் உள்ளங்கால் வரை ரசித்து ருசித்தது. 

   

    சே... உன்னோட இருந்ததை வலியோட கொடுக்க கூட என்னால முடியலை. 


    இந்தா... எனக்கு உன்னோட இருந்த ஒரு இரவுக்கு விலை." என்று கற்றை நோட்டு இருந்த பணப்பெட்டியை எடுத்து பணத்தை  அவள் மேல கொட்டினான். 


      சம்யு எதையும் பெரிதுபடுத்தவில்லை. ஆரவ் தாலி நெஞ்சில் சுமந்த பிறகு ஒவ்வொன்றாய் அறிந்து கொண்டுள்ளவள் தானே. என்ன கடைசியாக தன்னோடு இல்லறம் இனிக்க நடந்த தாம்பத்தியத்திற்கு பணத்தை மழையாக பொழிந்தது தான் சம்யுவிற்கு கண்ணீர் மழையை தோற்றுவித்தது. 


      மெல்ல அந்த கட்டுக்களை மீண்டும் பெட்டியில் அடுக்கி முடித்தவள். 


    "நான் அழுதா... என்னை விட நீ தான் ஆரு கஷ்டப்படுவ. ஏன்னா... என்னை விட என்னை விரும்புவது நீ தான். இது உனக்கும் தெரியும் ஆனா அதை ஒப்புக்க தான் எங்கப்பா செய்த தீவினை தடுக்குது. புரியுது ஆரவ். 


   நடந்தவைக்கு நான் எதற்கும் விளக்கம் தரப்போவதில்லை. என்னோட நிலைமையும் புரியவைக்க போறதில்லை. எப்படி நான் விரும்பியதை நீயா புரிந்து உன் வாட்ஸப் புகைப்படம் நான் பார்க்க நீ என் பெயரை சேவ் பண்ணி முடித்து இருந்தியோ, அதே போல என்னோட நிலைமை நீயா யோசிப்ப அப்போ புரிந்து யுக்தானு வருவ. அந்த நாள் ரொம்ப தூரம் இல்லை. ஆரு என்று கூப்பிடாதே அந்த அருகதையில்லைனு சொன்ன நீயே அப்படி கூப்பிடுடினு கேட்ப. அதுக்காக காத்திருக்கேன். 

  

     இந்த பணம் கொடுத்து நம்ம தாம்பத்தியத்தின் இனிமையை நீயே தாழ்த்திடாதே. என் பிறந்த நாளுக்கு நம்ம அனுபவித்த இனிமை தான் பரிசா எண்ணி இருக்கேன். அதை நீ வேண்டுமென்றால் தாழ்த்தி பேசி என்னை காயப்படுத்துவதா நினைச்சிக்கோ. ஆரவ் மனைவியா நான் உடலளவிலும் சேர்ந்ததால் சந்தோஷப்பட்டுக்கறேன்." என்று மெத்தையில் தன் சேலையை தேடிக் கொண்டிருந்தாள். 


    ஆரவ் அவளின் பேச்சில் அசையாது நின்றான். சம்யு சேலையெடுத்து போர்த்தி குளிக்க சென்றாள். 


-வரையனல் தனிய தீவிகை ஒளிரும். 


- பிரவீணா தங்கராஜ். 


      

   


தீவிகை அவள் வரையனல் அவன் -19

தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥-19

    இரண்டு தினம் ஒரு அறையில் விலகி செல்லும் ஞாயிறு- திங்கள் (சூரியன்-சந்திரன்)  போல எட்டி நின்றனர். 

      யுக்தா அறையில் இருக்கின்றாள் என்றாலே ஆரவ் அப்பக்கமே செல்லாது இருந்தான். 
    
    அவனுக்கு எதையும் மறக்கவோ மன்னிக்கவோ மனமில்லாது இயங்கினான்.  கூடுதலாக அலுவலகம் சென்று பணியை மேற்கொள்ள, அவனுக்கு கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆரவிற்கு மணப்பெண் மாயமானதை பகிரங்கமாக சிரித்து பேச, மனதால் நொடிந்து போனான். 

    ஒர் ஆண்மகனை அதுவும் மணமேடை வரை வந்து மணப்பெண் மாயமாகி திருமணம் நின்று இருந்தால் அவன் ஆண்மகனா என்ற கேள்வி தான் பெரிதாக எழும்பும். இவனுக்கு என்ன குறையோ அந்த பெண் அப்படி ஓடினாள். இந்த பேச்சு தான் விழும். அன்றே மண்டபத்தில் கிசுகிசுப்பாக எழுந்த குரல் இது தானோ? ஆரவ் இருந்த மனநிலைக்கு தான் மற்றவையை காதில் வாங்கவில்லை. அவனுக்கு சம்யுக்தா மயங்கியதில் பயந்து போனான். யுக்தாவை மணந்தாலும் கேலி பேச்சு என்னவோ குறையவே இல்லை. இதோ தான் கடந்து வந்த பிறகும் சலசலத்து கொண்டு இருக்கின்றதே. 

    கேசவிற்கே கொஞ்சம் கடினமாக இருந்தது. 

    வெளியே வந்தவன் முதலாளி ஆரவிற்காக, "லுக் நம்ம ஆரவ் சாருக்கு திடீரென மணப்பெண் மாறியது கொஞ்சம் அரசல் புரசலா பேசறீங்க. ஆனா சார் ss கம்பெனி எம்டியை திருமணம் செய்து இருக்கார். இது லவ் மேரேஜூம் கூட. விரைவா சார் ஒரு ரிசப்ஷன் வைப்பார். அப்போ ஊரே அதிசயப்படற மாதிரி விழா நடக்கும். இப்ப பொண்ணு மாறியதை பற்றி விவாதிக்காம வேலையை பாருங்க. இல்லை... வீட்டுக்கு இன்னிக்கே வேலைவிட்டு போறாதா மாறிடும் உங்களோட நிலைமை." என்று ஒரு தலைமை குரலில் அறிவித்து முடித்து அகன்றான். 

     கேசவ் ஜெயில் சந்தித்த மனிதன் தான் ஆரவ். 

    பஸ்ஸில் திருட்டு நடக்க, வேலைக்கு இன்டர்வியூ சென்றவனின் பாக்கெட்டில் திருடியவன் செயினை வைத்துவிட்டு தப்பிக்க, செயின் திருடனாக கேசவ் மாட்டி கொண்டான். எத்தனை முறை சொல்லியும் தண்டனை திருடன் என்ற விகிதத்தில் கொடுக்கப்பட்டு இருந்த பொழுது தன்னையும் மதித்து பேசியது ஆரவ் என்பதாலோ என்னவோ இருவருக்குள் சின்ன புரிதல் தெளிந்த நீரோடையாக இருக்கும். 

    ஆரவ் வெளிவந்த நாட்களுக்கு பின்னர் படித்து வேலைக்கு சென்று லோன் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாய் தான் முன்னேறினான். 

     தொழில் துவங்கி அமர்ந்த பின் கேசவ் சந்தித்ததும் அவனையும் கூடவே வைத்துக் கொண்டான். 
  
    அதன் விசுவாசம் வெடித்து விட்டது. 

   ஆரவ் ரிசப்ஷன் வைப்பானா என்று அறைக் கதவை திறக்க முற்பட, ஆரவ் கேசவை இயல்பாக பார்த்து புன்னகைத்து "தேங்க்ஸ் கேசவ்" என்று மட்டும் சொல்லி விட்டான். 

     சற்று நேரம் கழித்து கேசவ் தயங்கி ரிசப்ஷன் வைக்க டேட் பிக்ஸ் பண்ணவா சார்?" என்றான். 

       மற்றவருக்காக இல்லையென்றாலும் கேசவின் இந்த பேச்சுக்கு வைக்கலாம். அந்த சுவாமிநாதன் மகள் சேர்ந்து மணக்கோலத்தில் பார்க்க இயலாமல் தவிக்க வேண்டுமென்றே சரி என்றான்.

       நிலைமை சுமூகமாக கடப்பது போன்று இருந்தது. 

      வைஷ்ணவி சுபாங்கினி ஆரவ் விரும்பிய பெண் என்றதிலும் இயல்பாகவே இருக்கும் நற்குணத்தாலும் எல்லாம் மறந்து நகை உடை என்று விழாவை போல ரிசப்ஷன் நாளை கொண்டாட எண்ணினர். 

   சந்துரு தான் ஆரவிற்காக தேடி பிடித்து ஆடை விருப்பத்தை சொன்னான். ஆரவ் எதிலும் தலையிடவில்லை. 

     வீட்டிற்கு சென்றால் யுக்தாவை கண்டாளே மனம் முரண்படுகிறது. 

  மனமும் மூளையும் மோதி  கலப்படைந்து விடுகிறது. 

  அன்று யோகிதா யுக்தா வீட்டுக்கு வந்தாள். ஆரவ் யோகிதாவை கண்டு ஒன்றும் பேசாமல் நகர, யோகிதா கைபிடித்து மன்னிப்பு வேண்டினாள். 

   ஆரவ் அவனுக்கே உண்டான திமிரில் கையை உருவிக் கொண்டு வெளியேறினான். 

      சம்யுக்தா பொறுமையாக யோகிதாவிடம் "நீ என்ன சதி செய்த யோகிதா. ஆரவ் உன்னை முறைத்துட்டு போறார்?" என்றதும் யோகிதா கண்கள் குளமாக அழுதாள். 

     "நான் சொல்வேன் நீ என்னை தப்பா எண்ணிடாதே. உங்கப்பா தான் பண்ணின சொன்னார். 

     நீ... நீ மருத்துவமனையில் இருந்த, உங்கப்பா ஆரவ் மீது உன்னை மிஸ்பிகேவ் பண்ண தனியா அழைச்சிட்டு போக நீ தப்பித்து வந்து விபத்து ஏற்பட்டதா புகார் கொடுத்தது எங்களுக்கு தெரியாது. கேஸ் பதிவாகி சாட்சி விசாரிக்கணும் என்று போலிஸ் கேட்டார். முதல்ல திவேஷ் வைத்து சாட்சி ரெடி பண்ணினாங்க. ஆனா ஆரவ் சந்துரு அண்ணா அவர் பிரெண்ட் எல்லாம் அவருக்கு சாட்சி சொல்ல தயாரா இருப்பாங்க. திவேஷ் வேண்டாம் உங்க பொண்ணோட கிளோஸ் பிரெண்ட் சாட்சி சொல்ல வையுங்க யாரோ சொல்லவும் உங்கப்பா தான் எங்கப்பாவிடம் பேசி என் மனதை மாற்றினார். 

   உனக்கு லண்டனில் படிச்சு லண்டன் மாப்பிள்ளை பார்த்து வைத்ததிருப்பதாகவும் ஆரவ் அண்ணாவை திருமணம் செய்தா நீ குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவயென்று சொன்னதும், எனக்குமே அது சரியா தோணுச்சு டி.

      லண்டன் லைப்பில் என் பிரெண்ட் இருக்கணுமா? இல்லை நர்ஸ் அம்மா  வீட்டில் மாத சம்பளத்தில் ஆரவ் அண்ணாவுக்கு மனைவியா இருக்கணுமா என்று யோசித்தப்ப உங்கப்பா சொன்னது பெஸ்ட்னு பட்டுச்சு. நான் தான் ஆரவ் அண்ணாவுக்கு எதிரா நீ விபத்தில் மயங்கினப்ப ஆரவ் மிஸ்பிகேவ் பண்ண வந்தார் சொல்லிட்டு மயங்கிட்டயென்று கோர்ட்டில் பொய் சொன்னேன்." என்று சொல்லி சம்யுவை தீண்ட, சம்யு விழிகள் எரிமலையை போர்த்தி இருந்தது. 

    "தயவு செய்து இங்கயிருந்து கிளம்பு. இனி என்னை பார்க்கவோ பேசவோ வந்திடாதே." என்றாள் சம்யுக்தா.

     "சம்யு... நான் தான் உங்கப்பா சொன்னதால அப்படி பண்ணினேன்." என்று மேலும் பேச வந்தவளை, 

    "நான் இந்த நாலு வருடத்தில் எத்தனை முறை உன்னிடம் பேசியிருப்பேன். எப்பவாது ஒரு முறை உண்மை சொல்லியிருந்தா மன்னித்து இருப்பேன். இப்ப போய் சொல்லறியே... சீ... போடி" என்று சொல்லவும் யோகிதா சம்யுவின் கோபத்தில் வெளியேறினாள். 

     ஆரவ் தனியாக தியேட்டரில் அமர்ந்தான். அவனுக்கு அருகே சந்துரு வரவில்லை. ஆரவ் இங்கே வருவதாக சொல்லிவிட்டு வரவில்லை. தியேட்டரில் படம் அது பாட்டிற்கு சென்று கொண்டிருக்க, இமை மூடிக் கொண்டான். 

      என்றும் கிட்டும் அதே நிம்மதி. அத்தனை இரைச்சலிலும் அவனுக்கு தன் கைக்குள் அவள் கைகளை உணர்ந்தவன் காதில் மெல்லிய குரலில் 'ஆரு பயமா இருக்கு... பேய் கிட்ட வரமாதிரி இருக்கு. எந்திரிச்சு போயிடலாம்' என்ற யுக்தா குரல் கேட்கவும் இம்முறை விழியை திறந்து திடுக்கிட்டான். 

    தன் தோளில் சம்யு வாசம் வீசுவதாக தோன்ற பிரம்மையில் இருந்து விடுபட்டான். இங்கு வரும் பொழுது எல்லாம் தனக்கென் இந்த நிம்மதி வருகிறது என்பது தற்போது தான் அறிய முடிந்தது. 

    யுக்தா.... யாரை மறக்க முயன்றானோ அவளின் ஆறுதல் இந்த பெரிய ஹாலில் இரைச்சல் கொண்ட சினிமா தியேட்டரில், பலரும் வந்து சென்று அகன்றாலும் அகலாத நினைவுகளாக அவன் உள்ளத்தில் புதைந்து கிடைக்கின்றன. 

   அப்படியென்றால் இத்தனை நாட்களும் தனக்கு ஆறுதலாக இருந்தது காயத்தை கொடுத்தவளின் தோள் சாய்ந்த கணம் தானா? ஆரவிற்கு பேரதிர்ச்சி உடனே எழுந்து வெளியே சென்றான்.  

   பீச் வந்து மணற்கோட்டை கட்ட முயன்றான் முடியவில்லை. தன் மீதே கோபம் பன்மடங்காக மாறியது. 

      நேராக தன் வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தான். 

    இங்கு ஏர்போர்ட்டில் திவேஷ் கோபமாக மேல்மூச்சு வாங்க எக்ஸ்கலெக்ட்டர் வழியாக வந்துக் கொண்டிருந்தான். 

     தன் தந்தையை கண்டதும் அவரோடு காரில் ஏறி அமர்ந்தான். அவரை பேசவிடாது "எப்படி ஆரவ் வந்தான். சம்யுவை எப்படி ஆரவ் திருமணம் செய்ய சுவாமிநாதன் விட்டான். என்னப்பா நீங்க சம்யுவை கண்காணித்து வையுங்க சொன்னேன். அவள் கழுத்துல யாரையும் தாலி கட்ட விடாம, எத்தனை வரனை தடுத்துட்டு நிறுத்தியிருக்கேன். இப்ப என்னடாவென்றால் அந்த ஆரவோடவே திருமணம் நடந்து இருக்குனு சொல்லறீங்க. போச்சு... இத்தனை நாள் விலகி நாடகமாடியது எல்லாம் போச்சு." என்று கத்த துவங்கினான். 

      "டேய் அவன் அந்த பொண்ணை அடிச்சி இழுத்துட்டு போயிட்டான். உன் தில்லுமுல்லு எல்லாம் தெரியாது. அவன் கோபம் எல்லாம் சுவாமிநாதன் மேல தான்." என்றார் திவேஷ் தந்தை மனோகரன். 

     "நினைச்சிட்டு இருங்க.... திருமணமாகி ஒரு வாரம் ஆகுதா...? ஆரவ் பலமும் பலகீனமும் சம்யு மட்டும் தான். ஒருமுறை சம்யுவோட பழைய ஆரவா பேசிட்டான் அதுக்கு பிறகு முதல்ல இருந்து துருவி எல்லாம் தெரிஞ்சிப்பான். கடைசியில வந்து நிற்பான். அவனுக்கு அதிகமா காயம் தந்தது கடைசியா சம்யு நான் பேசிய பேச்சு என்றதில் வந்து நிற்கும். நான் அதுல தகிடுதத்தம் செய்தது தெரிந்தது என்னை உயிரோட விடமாட்டான். சுவாமிநாதன் கூட இப்ப மாமனார் போஸ்ட்ல இருக்கார்." என்றவன் தலை விண்ணென்று வலி தர எரிச்சலில் கிடந்தான். இதில் சம்யு-ஆரவ் வரவேற்பு நாளான நாளை இருப்பதை கண்டு உள்ளம் குமைந்தான்.  

      வீட்டிற்கு நேராக வந்தவன் தன் தாய் காணாமல் அறைக்கு வந்து சேர, அங்கே தன் வரவேற்பிற்காக சோளி எடுத்து இருந்ததை போட்டு பார்த்து கொண்டிருந்தாள் சம்யுக்தா. 

     சோளியின் டாப் பாட்டம் அணிந்தவள் அதன் மேலாடையை தேடி திரும்ப அங்கே ஆரவ் சினத்தோடு நிற்பதை கண்டு புரியாமல் விழித்தாள். 

     "என்ன பேசி புரிய வைக்க முடியாதுன்னு உடலால் வலைக்க முயற்சி பண்ணறியா? இவ்ளோ இறங்கி போவேனு நினைக்கலை டி" என்று பேச தான் நிற்கும் நிலையை வைத்து இப்படி சாடுகின்றானென்று சம்யுவிற்கு கோபம் பொங்கியது. 

      "ஆரு... நீங்க இந்த நேரம் வருவீங்கயென்று நான் எதிர்பார்க்கலை. மெயின் கதவு மூடிட்டு தான் நான் இங்க வந்து டிரஸ்ஸை எடுத்து  ரிசப்ஷனுக்கு சரியா இருக்கானு பார்த்தேன். நீங்க இப்படி திடுதிடுப்புனு வருவீங்கனு எனக்கு தெரியாது. நீங்களா வந்துட்டு என்னை குறை சொன்னா என்ன அர்த்தம். உங்க மனசுல என் மேல தப்பு என்ற கண்ணோட்டத்திலயே பார்க்கறீங்க." என்று சம்யுவும் அதே கோபத்தோடு சொல்லி முடித்து நின்றாள். 

     ஆரவ் அவள் மீது தானாக வந்து மனதை தொலைக்கின்ற கோபத்திலும் சம்யு எதிரத்து பேசியதிலும் ஒரு அறை விட முயன்றான். 

     இம்முறை ஆரவை அடிக்க விடாது தடுத்தாள் சம்யு. 

     இந்த அடிக்கிற வேளை வேண்டாம் ஆரவ். நாளைக்கு ரிசப்ஷன் என் கன்னம் தக்காளி மாதிரி ஆகணுமா. வர்றவங்க கேள்வி கேட்டு அதுக்கு வேற முழிக்கணும். அதுவும் இல்லாம என்னை அடிச்சிட்டு அப்பறம் நீ தான் விசனம்படணும்." என்று ஆரவ் கையை பிடித்து தன்னை காத்து தடுத்து ஆரவ் எதிரிலே உடை மாற்ற தயங்கி, நீங்க வெளிய போனா உடையை மாற்றணும்" என்று கூறவும் ஆரவ் ஹாலுக்கு வந்தான். 

    சம்யு அறை கதவை சாற்றி, உடை மாற்றி கொண்டிருந்தாள். 

      லேசான பூனம் சேலையினை உடுத்தி வெளியே வர, ஆரவ் திரும்ப அதே நேரம் சுபாங்கினி வரவும் ஏற்கனவே நடந்த நிகழ்வை போல தோன்ற, அதன் பின் தான் தேதியை பார்த்தான். 

   இன்று சம்யுக்தா பிறந்த நாள் என்று அறிந்ததும், ஆரவ் தேதியை கண்டு தன்னை காண்பதை பார்த்து சம்யுக்தாவிற்கு ஆரவிற்கு தன் பிறந்த நாள் தேதி அறிந்து விட்டானே. அப்படியென்றால் அவனுக்கு என் பிறந்த தேதி நினைவு இருக்கு. அவன் என்னை முற்றிலும் மறக்கவில்லையே என்று துள்ளியது சம்யுக்தாவின் உள்ளம். 

   -வரையனல் தனிய தீவிகை ஒளிரும். 

  - பிரவீணா தங்கராஜ்.

     

சிரமமில்லாமல் சில கொலைகள் -4

 


🩸-4

     ஆண்டர்சன் தன் வீட்டில் தனித்து இருக்க, அந்த சில்லென்ற காற்று கூட ஏதோ திகிலை தந்தது. கதவுகள் ஜன்னல்கள் மூடி வைத்து தனதறையில் படுக்க முனைந்தார்.

    எங்கிருந்தோ காற்று புயல் போல வீச கதவு ஜன்னல்கள் படபடவென அடிக்கும் ஓசை வரவும் தன் பூட்டி வைத்த கதவு ஜன்னலை தான் பார்த்தான்.
 
       பூட்டியவை ஓசையெழுப்பியது எண்ணி குழம்பியவனுக்குள் ஆண்டர்சன் என்ற ஆத்மாவும்  இல்லாது புகழேந்தி என்ற மானிடனின் ஆத்மா எண்ணங்களும் கலவையாக வந்து நின்றது.

      காற்றின் வேகமாக அடிப்பது போன்ற மாயையை தர ஆனால் கதவும் சாற்றி இருக்க, இம்முறை பொருட்கள் எல்லாம் மேலெழும்பி ஆண்டர்சனை சுற்றி சுற்றி வட்டமிட்டது.

      தன் மீது மோதிடுமோ என்று ஆண்டர்சன் நகர அவனை உரசாது வீட்டின் பொருட்கள் எல்லாம் மோதுவது போன்று வந்து வந்து விலகியது. அதிலும் அந்த கத்தி வந்து கழுத்தில் நிற்க ஆண்டர்சன் தொண்டைக்குழி ஏறியிறங்கி கண்கள் அச்சத்தில் திகைக்க, யாரோ காலிங் பெல் அழுத்தம் கேட்க, ஹாலுக்கு ஓடினான்.

     கதவு வெறுமென சாற்றியிருந்திட ஆண்டர்சனை காண வந்த பாஸ்டர் ஒருவர் மாடியில் இருந்து வரும் வழியில் விலகி விலகி எதையோ மோதுவதில் இருந்து தப்பிப்பவன் போன்று ஓடி வரும் ஆண்டர்சன் விநோதமாக தெரிந்தான். 

    பிடித்து நிறுத்த முயல, ஆண்டர்சனின் கண்களுக்கோ அது இளவழகன் தன்னை பிடிக்கும் பிம்பமாக தோன்ற அவனை தள்ளிவிட்டு ஓடினான்.

     ஓடியவன் வந்து சேர்ந்தது கேஸினோ இடமாக இருந்தது. அது குறிப்பிட்ட இடத்தில் அடிக்கடி ஆண்டர்சன் வருமிடம் என்பதால் தானாக அவன் வந்து சேர, வியேர்வை பூத்த முகத்தோடு அமர அங்கே மதுவோடு சூதாட்டமும் தொடர, தன் புகழேந்தி ஆத்மா எண்ணங்கள் களைய ஆண்டர்சனாக மனமாற்றதிற்கு சூதாட்டத்தில் மனதை செலுத்த, தொடர் வெற்றியாக குவிக்க மற்றவர்களோ புரியாமல் குழம்பினர். ஏன் என்றால் ஆண்டர்சனுக்கு மட்டுமே தொடர் வெற்றி உண்மையில் தொடர் தோல்வியில் ஆண்டர்சன் மகிழ்ந்து சிரித்து இருக்க, ஒருவன் தொடர் தோல்வியில் மகிழ்வது எப்படி அதுவும் செய்கை வித்தியாசமாக இருக்க, ஆண்டர்சனின் தனிப்பட்ட வாழ்வும் அறிந்தவர்கள், மகள் கொலையில், மனைவி உடல்நலக்குறைவில் அடுத்தடுத்து இறக்க இப்படி மாறுகின்றானோ என்று அவரை வீட்டிற்கு செல்ல சொல்ல அவனோ பயந்து பின் வாங்கினான்.

       தொடர் தோல்வியில் கேஸினோ இடத்தில் பணம் இன்றி வெளியே தள்ள அதே நேரம் ஆண்டர்சன்  வீட்டில் வந்த பாஸ்டர் வரவே அவர் பேசியபடி ஆண்டர்சனை தன் கிருஸ்துவ ஆலையத்திற்கு அழைத்து வந்து ஒரு ஜெபக்கூட்டம் வைத்தனர்.

      ஒரு அரைமணி நேரம் கழித்து ஆண்டர்சன் மனம் சமநிலை அடைந்து பாஸ்டரிடம் தன் வீட்டில் தனக்கு தோன்றிய மாய பிரம்மைகளை கூறவும் அந்நேரம் வந்த ஆரோல் குடும்பத்தினர் வந்து இருக்க, ஆண்டர்சனின் பேச்சை கேட்க நேரிட்டது.
 
      நேற்று ஆரோல் சொன்ன சில விஷயமும் ஜார்ஜ் மேரி இருவருக்கும் புரிய ஆண்டர்சனின் நிலை அறிந்து இவர்கள் பயத்தில் மிதந்தனர்.

       இளவழகன் ஆத்மா உருவமோ வெளிகேட்டின் வாசலில் இருந்தவன் ஆரோலின் தாய் தந்தை பயத்தை கண்டு விட்டு ஆண்டர்சன் வீட்டிற்கு மாயப்புகையாக மாறி சென்றான்.

    ஆண்டர்சன் வீட்டில் அந்த பளிங்கு வீட்டில் ஹாலில் செயற்கை ஊற்று பார்த்தபடி இருந்த இடத்தில் தன் கூர் நகத்தின் விரலில் சொடுக்கிட, அங்கே சிங்க நாற்காலி ஒன்று தங்கமுலாம் பூசியபடி இருளை கிழித்து மின்னியது.

     "வருவாய் மாமனே... நீயாய் வருவாய்... இவ்விடத்தில் காத்திருக்க யாம் தயார்" என்று சிரிக்க அவ்விடம் அந்த கொடூர சிரிப்பில் உலுக்கியது.

      இங்கு சர்வேஷ்வராவோ தன் எண்ணங்களும் தனக்கு நேரும் சில அனுமாஷ்ய செய்தியும் கொண்டு என்ன செய்வது என்று யோசித்தவன் சாந்தனுவை தொல்லை செய்து ஏன் தனக்கு இப்படி என்று ஏதேனும் மாந்தீரிகன் மற்றும் சாமியார் யாரேனும் தெரியுமா என்று கேட்க சாந்தனுவோ  சர்வேஷ்வரனின் குடைச்சல் தாங்காது குகூளில் தேடினான்.

    குகூளில் தேடிய ஒரு விஷேஷ சாமியாரை தேடி அழைத்து சென்றான்.

   வீட்டில் இருந்த அந்த ரூபி பிரேஸ்லேட்டை அலுங்காமல்  எடுத்தான்.

     "என்னது டா.... லஞ்ச் டவலில் மூடி வைத்து இருக்க?" என்று பிரிக்க, அதுவோ எதுவும் அற்ற பொருளாக தெரிய...

     "என்ன எடுத்த?" என்று கண்கள் கசக்கியபடி கேட்டான். சர்வேஷ்வரனுக்கு எரிச்சலாக, "என் கண்ணுக்கு மட்டும் தெரியற பிரேஸ்லேட் போதுமா டா." என்றதும் சாந்தனு பார்வை சர்வேஷ்வரனை நக்கலாக பார்த்து சென்றான்.

     சர்வேஷ்வரனோ அதனை கண்ணாடி பேழைக்குள் வைத்து மூடினான்.

    சர்வேஷ்வரன் தனது பைக்கின் முன் பகுதியில் ஒரு பையில் அந்த பிரேஸ்லேட் எடுத்து கொண்டு செல்ல, சாந்தனு பின்னிருக்கையில் அமர்ந்து "லெட் சீ குட்டி ஸ்டோரி..." என்று பாடிக்கொண்டே வர, வண்டியை நிறுத்தி திரும்பியவன்,

     "கொஞ்ச நேரம் சும்மா வர்றியா... நானே ஏககடுப்பில் இருக்கேன் இதுல நீ வேற..." என்றவன் குகூளின் ரூட்டில் வண்டியை செலுத்த, சாந்தனு சொன்ன இடம் வந்து சேர்ந்தான்.

       அந்த பெரிய ஆலயத்தின் உள்வாயில் வண்டியை பார்க் செய்து இறங்கினான்.

      மிக பவ்யமாக அந்த ரூபி பிரேஸ்லேட் எடுத்து கையில் ஒரு கண்ணாடி பேழையில் எடுத்து வர அது ஒளிவீசி அவ்விடமே ஜோலிக்க சர்வேஷ்வரனோ யாரின் பார்வையில் அக்கல் பார்வைக்கு புலப்படுகிறதா என்றே பார்க்க யாவருக்கும் அக்கல் இருப்பது புலப்படவில்லை என்பதில் ஏமாற்றம் கொண்டான்.

       வரிசையில் எண்ணிக்கையின் படி நின்றான். சாந்தனு தன் போனில் இஷ்டமான பாடலை கேட்க சர்வேஷ்வரன் எண்ணங்களோ, இந்த சாமியார் உண்மையானவனா? கண்டறிவானா? நமக்கு காரணம் காரியம் எதனால் என்று மெய்யுரைக்க செய்வானா? போன்ற பல கேள்விகள் குடைய நேரம் மட்டும்  நகர ஒர் மணி நேரத்திற்கு பின் அனுமதி கொடுக்க பெற்றது.

    சர்வேஷ்வரன் தனக்கு கனவில் பார்த்த கொலை நிஜமாகவே நியூயார்க்கில் நடந்தது என்றும், அங்கே திருடு போன பிரேஸ்லேட் தன்னிடம் எப்படி வந்தது என்றும், ஒர் பெண்ணின் குரல் இப்படி சொல்ல... உங்களுக்கு இந்த பிரேஸ்லேட் தெரியுதா?" என்று எடுத்து காட்ட, இதுவரை அமைதியாக இமை மூடி கேட்டதும் பொறுமையாக திறந்தார் அம்முனிவர் அரிஞ்செயன்.

      "நன்றாகவே புலப்படுகிறதே. உனக்கு கேட்ட குரல் உன்னவளின் குரல். ஜென்ம பந்தம் அப்பா. நீங்கள் இருவரும் சேர்வது விதி. அதற்கு தான் இந்த மாயை." என்று கூறவும் சாந்தனு மற்றும் சர்வேஷ்வரன் பதட்டமாகி பக்தியாக பணிந்து,

       "எதனால் இப்படி நடக்கிறது என்று தெரிஞ்சுகலாமா சாமி" என்று சர்வேஷ்வரன் வினவ,

    "அவள் வந்து உனை சேர விதியாவும் அறிவாய் மகனே. அதுவரை காத்திரு." என்று "உனக்கான பெண் வந்தபின் யாவும் விடைக்கிட்டும்." என்று ஆசிர்வதிக்க,

    "அவ வருவாளா சாமி" என்றான் சாந்தனு.

    "வந்தாக வேண்டுமே" என்று சிரிக்க பின்னால் இருந்த சிஷ்யன் இதற்கு மேல் ஏதும் கேட்க கூடாது என்று விரட்டினான்.  

  வணக்கம் வைத்து சில பல ரூபாய் தாள்கள் வைத்தும் இருவரும் வெளியே வந்தார்கள்.

     சாந்தனு தீவிரமாக யோசித்து "நிஜமா அப்போ நீ சொல்லறது உண்மையா டா" என்று சாந்தனு வினவியபடி வர, சர்வேஷ்வரன்

    "நான் என்ன கதையா சொல்லறேன். எனக்கு நடக்குது உனக்கு விளையாட்டா." என்று வெளியே அரசமரத்தடியில் விநாயகர் சிலையருகே சில தாடி வைத்த காவி வேட்டியர்கள் இருக்க சர்வேஷ்வரனும் அமர்ந்தான்.

    நீண்ட நேரமாக கையில் வைத்திருந்த கண்ணாடி பெட்டியை மெதுவாக கீழே வைத்து ஆசுவாசமாக, அந்த பிரேஸ்லேட்டை எடுத்து பார்த்தான். அதனை அந்த மரத்தடியில் வைத்து போனை எடுத்து பார்த்தான்.

     இன்று அமெரிக்க செய்தி சேனலில் அந்த பிரேஸ்லேட் பற்றி மரணத்தை பற்றியோ ஏதேனும் அறிய வருகிறதா என்றே தேடி பார்த்தான்.

      *சென்ட்ரல் பார்க்கில் கொலை செய்யப்பட்ட லிசா இறப்பு நடந்த அடுத்த நாளிலே அப்பெண்ணின் தாயார் டெய்சி ஹார்ட் அட்டாக்கில் இறந்தார்.* என்று பார்க்கவும் வியர்த்து போனான். ஏன்னென்றால் இதே போல ஒரு தாய் வயதினர் தான் அந்த கறுப்பு உருவம் ஏதோ விஷ ஊசியொன்றை செலுத்தி இறக்க செய்வதாக சர்வேஷ் மனக்கண்ணில் கனவில் கண்டது.

   அது உண்மையாக நிகழ்ந்து இருப்பதை அறிந்து விதிர்த்து போக, மீண்டும் கூட்டத்தில் கலந்து உள்ளே சென்று அந்த சாமியாரை காண போனான். சிஷ்ய சாமியார்களோ வழிவிட மறுக்க சர்வேஷ்வரன் அவர்களை தாக்கி அறைக்கு சென்றான்.

  அக்கணம் மயிலிறகை கொண்டு விசிறிய ஒருவன் "ஏன் அண்ணாத்த அவன் என்ன கல்லுனு சொல்லறான் நீ பார்த்தேனு கப்ஸா அடிக்கிற"என்றான்.

    "ஏலேய் கல்லு தெரியுதா கேட்கறான். தெரியலை எப்படி சொல்ல அதான் தெரியுதுனு உட்டேன் ரீலு. அருள்வாக்கு சொன்னேன்ல எப்படி பயபக்தியா போனான். அதான் நமக்கு வேண்டும்." என்றான் அரிஞ்செயன்.

      "அண்ணாத்த ஒரு வேலை கல்லு எங்க இருக்கு நான் பொய் சொன்னேன்னு அந்த பய கேட்டுயிருந்தா?"

    "அடேய் அவன் அப்படி கேட்டா ஆம் மகனே நீயே உண்மை சொல்ல தான் யாம் இவ்வாறு பொய்யை மறுக்காது கண்டேன் என்பேனு  தமிழில சொல்லிருப்பேன். இதுயெல்லாம் தொழில் இரகசியம் டா." என்றான் அரிஞ்செயன்.

     சர்வேஷ்வரனுக்கு ஏககடுப்பாக, சாந்தனு தன்னை தீண்ட திரும்பியவன் மீண்டும் அரிஞ்செயனை காண சிஷ்யனோ தலை சொரிந்து,

    "அப்பறம் என்ன ஒரு பெண் வருவா விதி உனை சேர வைக்கும் அது இது ஏதோ சொன்னிங்க." என்றதற்கு,

      "ஏலே மக்கு பயளே. அவனுக்கு கல்யாணம் பண்ற வயசுல.. கொஞ்ச நாள்ல எப்படியும் ஒரு பெண்ணை கட்டி வைப்பாங்க. இல்லையா வயது ஏற கல்யாணம்னு ஒரு பொண்ணு வரணும்ல. அதை தான் அப்படி அடிச்சு விட்டேன்." என்று நகைக்க, சர்வேஷ்வரன் கையில் அரிஞ்செயன் கொடுத்த தாயத்தை கழட்டி விசிறியடிக்க, அது அரிஞ்செயன் மற்றும் சிஷ்யன் மீது விழுந்தது.

    சாந்தனுவும் கழட்டி எறிந்தான்.

சர்வேஷ்வரன் சாந்தனு இருவரும் எரிச்சலோடு இடத்தை விட்டு அகன்றனர்.

    தங்கள் களவாடி சாமியார் என்று அறிந்த பின்னும் அதை கண்டுக்காமல் அடுத்த ஏமாற வருபவனை ஏமாற்ற தந்திரமாக கதைத்து கொள்ள ஒத்திகை பார்த்தனர்.

     சர்வேஷ்வரன் பைக்கை கோபமாக எட்டி உதைத்து ஸ்டார்ட் செய்ய விநாயகர் சந்நிதியில் உறங்கியிருந்த ஒரு தாடி வைத்த முனி எழுந்து சர்வேஷ்வரன் அருகே வந்தான்.

   சாந்தனு இடத்தையும் சர்வேஷ்வரனையும் பார்த்து விழித்து ஏறியமர

      "மகனே... உன் பொருளை நீ விடுத்து எங்கு செல்கின்றாய். நீ விட்டு ஒதுங்கினாலும் உன்னை வந்தே அடையும் பிடி" என்று சர்வேஷ்வரனின் கையில் பிரேஸ்லேட்டை கொடுக்க, தான் மறந்து வைத்த பிரேஸ்லேட்டை எப்படி இவர் கொண்டு வந்தார்? இவருக்கு இந்த பிரேஸ்லேட் கண்ணுக்கு தெரிகிறதா? என்று நம்பவும் முடியாமல் தவித்தான்.

      உள்ளே போலி சாமியார் என்பது நூறு சதம் அறிந்தபின் இதை எப்படி எடுத்துக் கொள்ள என்றே தவிக்க அந்த தாடி முனியோ கலகலவென சிரித்து,

     "உண்மைக்கும் பொய்மைக்கும் வேறுபாடு அறியாது தவிக்கின்றாயா? கலிகாலம் பொய் உண்மை போல தோன்றும். உண்மை பொய் போல தோன்றும். இது மாயமாக தோற்றுவிக்கலாம் அல்லது தற்காலம் அப்படி மாறி இருக்கலாம். ஆனால் உனக்கான விதி நீ எழுதியது. உன்னை வந்து அவள் அடையும் நேரம் உனக்கு இருள் கலைந்து ஒளி பிறந்து வழி கிடைக்கும். விடையும் பிறக்கும். அதுவரை உண்மை பொய் மாறி மாறி உன் வாழ்வில் விளையாடும் மகனே. எதையும் மனதில் போட்டு உழன்றுக் கொள்ளாதே. *அன்பே கடவுள்*" என்று ஆசிர்வதித்து அகல, சாந்தனு பேய் முழி முழிக்க, சர்வேஷ்வரன் தன் கண்ணாடி பேழையில் பிரேஸ்லேட்டை எடுத்து வைத்து அந்த தாடி வைத்த முனிவரை தேட அவரோ அவ்விடத்தில் இல்லாது போனார்.

    சாந்தனு தான் "டேய் இங்க இருந்து கிளம்பு. எனக்கு பயமா இருக்கு. பைத்தியம் பிடிக்குது." என்று தட்ட சர்வேஷ்வரன் அரசமரத்தடியில் தன்னிடம் கொடுத்த அம்முனிவரை தேடியபடி தனது பைக்கை கிளப்பினான்.

-🩸🩸🩸🩸🩸

- பிரவீணா தங்கராஜ்.

      இனி அடுத்த சண்டே பதிவு வரும். கட்டாயம் படித்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் நன்றி.

    கதை எப்படி இருக்கு என்ற கருத்தே என்னை ஊக்கப்படுத்தும். விரைவான பதிவை கொடுக்க உதவும்.

தீவிகை அவள் வரையனல் அவன் -18

தீவிகை அவள் வரையனல் அவன் -18

ஆரவ் அறைக்கு வந்து உறங்க முற்படும் நேரம் மெத்தை காலியாக இருந்தது. ஒரு நிமிடம் சுவாமிநாதனோடு சென்றிருப்பாளோ என்று எண்ணி மெத்தையருகே இதயம் நின்ற உணர்வில் அமர்ந்தான். 

   அடுத்த நொடி மெத்தையின் கீழ்புறம் தரையில் படுத்திருந்த யுக்தாவை கண்டபின் சீரான மூச்சு காற்று தேகத்தை தழுவியது எனலாம். 

    அவளை அள்ளி மெத்தையில் படுக்க வைக்க கைகள் பரபரத்தாலும், உள்ளுக்குள் இருந்த சினம், கசப்பை விழுங்கிய இதயம், அச்செய்கைக்கு தடையாக நின்றது. 

     கைகளை தலைக்கு தோதாக வைத்து இமை மூடி உறங்க முயன்றான். 

    அதே அடுத்த நாள் காலை அலாரம் வைத்து எழுந்தவள் குளித்து முடித்து,  காபி போட்டு பணியை மேற்கொள்ள, சுபாங்கினி தயக்கத்தோடு வாங்கி பருகினாள். 

      "எதுக்கு இவ்வளவு விரைவா எழுந்துக்கணும். நான் நேற்று சொன்னது வேற காரணத்திற்காக. அதுக்கு தான் மன்னிப்பு கேட்டுட்டேனே. போய் தூங்கு... காலை கவனி..." என்று இதமாக சொல்லவும் யுக்தா மனம் குளிர்ந்தது. 

   "பரவாயில்லை அத்தை... பழகிக்கறேன்." என்று அடுக்களையை சுத்தமிட, ஆரவ் வந்து நின்றான். 

    "நீ சந்துரு கூட போகலையா?" என்று வைஷ்ணவியிடம் கேட்டான்.

     "இல்லை அண்ணா. கூப்பிட்டார்... அம்மா தனியா இருக்கற பீல் வந்துச்சு அதான் இங்கயே இருந்துட்டேன்" என்று கூறி முடித்தாள். 

       சம்யு தேனீர் சூடுபடுத்தி ஆரவுக்கானதை அவள் நீட்ட அவனோ அதனை எடுத்து கொள்ளாது அன்னையிடம் கேட்க செய்தான். 

    இதை எதிர்பார்த்து இருந்ததால் சம்யுவிற்கு பெரிதாக தோன்றாமல் நகர்ந்திட, சுபாங்கினியோ தன் மைந்தனிடம், "ஆரவ் அவள் மேல தப்பில்லை. நான் தான்..." என்று கூறுவதற்குள்,

      "அம்மா யாருக்காகவும் அன்பை  சிபாரிசு பண்ணி பிச்சை போட வைக்க நினைக்காதீங்க. அன்பு கேட்டு பெற வைக்க வேண்டிய பொருள் இல்லை. யாருக்கு என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்." என்று காபியை மறுத்துவிட்டு சென்றான். 

    இவர்கள் பேச்சை கேட்டிருந்த சம்யுவோ, மனதில் 'ஆமா ஆரவ்... அன்பை பிச்சையா போட முடியாது தான். கேட்டு பெற எனக்கும் மனமில்லை. உனக்கு உன் காதலிக்கு என்ன செய்யணும்னு தெரியுமென்று அதை நான் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. நம்ம காதல் மீண்டும் தானா சேர்க்கட்டும். அதுவரை நான் உன்னை தேடி வந்ததை நான் சொல்ல மாட்டேன். நீயா புரிந்துக்கோ. என் முகம் பார்த்து என்னை புரிஞ்சிக்கிறவன் நீ. அப்படியிருக்க என் நிலை இப்ப மட்டும் சொல்லி தெரியணுமா என்ன?' என்றே எண்ணினாள்.

       வீட்டில் அன்று சமையல் முழுதுமே சம்யுக்தா செய்து முடித்தாள். 

     ஆரவ் வைஷ்ணவி சுபாங்கினி மூவரும் சாப்பிட அமர, சம்யுக்தாவையும் அமர வைத்தாள் சுபாங்கினி. 

      சம்யுக்தா மறுத்தாலும் அமர வைக்க, ஆரவோ "இங்க உங்கப்பா அளவுக்கு ஏழைப் பணக்காரன்னு பேதம் பார்க்கற கேவலமான புத்தி இந்த வீட்டில் இல்லை" என்று பேசியவன் தட்டில் செல்ப் சர்வீஸ் செய்தபடி சாப்பிட்டான். 

     வைஷ்ணவி பாதி சாப்பிட்டு கொண்டிந்தவள் வேகவேகமாக வாஷ் பேஷனில் இருக்கும் இடம் நோக்கி ஓடினாள்.  

    சாப்பிட்டவை அனைத்தையும் வாந்தி எடுத்து களைத்து நின்றாள். சோர்வில் கண்கள் சொருக, தள்ளாடி சாய, சுபாங்கினி தாங்கி பிடிக்க சரியாய் இருந்தது. 

     ஆரவ் தன் தங்கை உணவில் சம்யு  என்ன கலந்து இருப்பாளோ? என்று அஞ்சினான். 

     அதன் கோபத்தில், "ஏய் சாப்பாட்டில் என்ன கலந்த, என் தங்கைக்கு வேசி பட்டம் கட்டப் பார்த்தார் உங்கப்பா. இப்ப அது முடியாதுன்னு சாகடிக்க திட்டம் போட்டு கொடுத்தாரா. சொல்லுடி...." என்று கேட்கவும் சம்யுக்தா இல்லை என்று தலையை அசைத்து கண்ணீர் உகுக்கும் நேரம், 

       "அண்ணா... அண்ணியை திட்டாதே... இது.. இது..." என்று வைஷ்ணவி சொல்லவதற்குள்,  சுபாங்கினி கண்டறிந்து மகளின் முகம் தாங்கி 'அதுவா?' என்று அபிநயம் பிடித்து கேட்க கன்னம் ரோஜாப்பூவாக மலர்ந்து வைஷ்ணவி பதிலாய் தரவும் நெட்டி முறித்தார். 

    "டேய்... ஆரவ்... வைஷ்ணவி அம்மாவாக போறா டா." என்று சுபாங்கினி கூறி வைஷ்ணவிடம்  "மாப்பிள்ளைக்கு போன் போட்டு சொல்ல... உன் மாமியார் மாமனாருக்கும் சொல்லிடுமா. நான் போய் ஏதாவது இனிப்பு செய்ய போறேன்" என்று கிச்சனில் சென்றார். 

    வைஷ்ணவியும் சந்துருவிடம் தன் தாய்மை செய்தியை பகிர தனியாக சென்றாள். 

      ஆரவிற்கு அவசரப்பட்டு பேசியதை எண்ணி வருத்தமெல்லாம் படவில்லை மாறாக, உங்கப்பா செய்யற ஆள் தானே என்பது போல பார்வையை செலுத்தினான். 

    சம்யுக்தாவோ ஆரவ் நீயா பேசுவது என்பது போல வெட்டும் பார்வையை பதித்தாள். 

    இரு நொடிக்கு மேல் அவனை கேள்வி கேட்கும் பார்வையை அவள் வீசவில்லை. 

   ஆரவின் அறைக்கு சென்று முட்டி கட்டி அமர்ந்தவள். ஆரவ் தோள் சாய ஏங்கினாள். அது அவ்வளவு எளிதாக கிட்டுமா? 

    சந்துரு அப்பா அம்மா ஆரவ் வீட்டிற்கு படையெடுத்து வந்தார்கள். காரில் ஸ்வீட் எடுத்து ஓடி வந்தவன் ஆரவ் வழியில் தடுக்க நினைக்க, "டேய் டேய்... அவளை பார்த்துட்டு வந்துடறேன்" என்ற சந்துருவின் பேச்சில் வழி விடவும் வைஷ்ணவி அறைக்குள் நுழைந்தான் சந்துரு. 

      "அத்தை வந்து இருக்காங்களா?" என்று வைஷ்ணவி கேட்க அவள் அணைத்து தன் நெஞ்சில் சாய்த்திருந்தான் சந்துரு. 

    "என்ன...என்னங்க...?" என்று விழித்தவள் அவனின் அணைப்பில் கட்டுண்டு கிடந்தவாறு, "அத்தை மாமாகிட்ட ஆசிர்வாதம் வாங்கணும்." என்று சொன்னாள்.

     "ஏன்டி... இங்க ஒருத்தன் தேடி வந்து முன்ன நிற்கறேன் என்னிடம் முழுசா பேசறியா? எங்கம்மா தான் மெயினா தேடற. போன்ல என்னடானா எங்கம்மாவிடம் முதல்ல விஷயம் சொல்லற, என்னிடம் தானே முதல்ல சொல்லணும். ம்ம்ம்" என்று அழுத்தமாக அவளின் தாடை நிமிர்த்தி கேட்டான்.

        வைஷ்ணவியோ கண்ணீர் திவலைகள் கன்னத்தில் உருள நின்றாள். 

     "ஏய்... இப்ப என்ன கேட்டேன் திற்பரப்பு நீர்வீழ்ச்சி மாதிரி கண்ணுல தண்ணி கொட்டுது. அம்மாடி நான் எதுவும் கேட்கலை. அழுகையை நிறுத்து. அம்மா பார்த்தாங்க...  வாயும் வாயிறுமா இருக்கற உன்னை நான் அழ வைத்ததா எண்ணிடுவாங்க" என்றதும் அழுதபடி பேச ஆரம்பித்தாள்.

     "சந்துரு அத்தை மட்டும் அன்னிக்கு இல்லைனா. அந்த சேல்ஸ்மேன் என்னை கேவலமா பேசி விலைமாது பட்டத்தோட ஜெயிலில் அட்லிஸ்ட் போயி நின்று இருப்பேன். அத்தை மட்டும் உங்களை அங்க நிறுத்தி நம்ம திருமணம் என்ற வகையில் பேசப்போய் தானே நீங்க எனக்கு கிடைத்தது. அதான் எப்பவும் அத்தைக்கு நான் முன்னுரிமை தருகிறேன். தப்பா..." என்று இதை ஆயிரத்தி... சொச்சமாக மீண்டும் கூற சந்துரு தான் பெருமூச்சை வெளியிட்டான். 

    "இங்க பாரு உன் மாமியருக்கு நீ கோவில் கூட கட்டு. நான் தடுக்கலை. தயவு செய்து இதையே சொல்லாதே காதுல இரத்தம் வருது. ஆமா... இந்த குட்டி வயிற்றில் எங்க உட்கார்ந்து இருப்பா என் பொண்ணு?" என்று அவளின் வயிற்றில் கையை வைத்து கேட்டதும், அவன் தோளில் சாய்ந்தவள் நிறைவான காதலை ஏற்றாள். 

      சிறிது நேரம் கடக்க கதவு தட்டும் சத்தம் கேட்டதும் சந்துரு திறக்க, வைஷ்ணவி வேகமாக சந்துரு தாயாரின் காலில் பணிந்து வணங்கினாள். 

     "நல்லாயிரு மணிமுத்தா ஒரு பிள்ளையை பெற்று தா. ஆமா... எங்க இந்த வீட்டுக்கு வந்த மருமகள் காலெடுத்து வைத்ததும் நல்ல செய்தியை பேச வைச்சிட்டா. ஆரவ் பொண்டாட்டி எங்க?" என்றதும் ஆரவ் தனதறையை கண்டு அழைத்து வர சென்றான். 

    வைஷ்ணவி செல்ல இருந்தவளை சந்துரு தடுத்து இருக்க, கேள்வியாய் பார்த்தாள். அவனோ உன் அண்ணா போகட்டும். எத்தனை நாள் தள்ளியிருக்கணும். ஏதாவது நாலு விஷயம் பேச பழக பழைய நினைவு தானா உள்ள போட்டு தாக்கும்" என்றதும் வைஷ்ணவியும் விட்டுவிட்டாள்.

    ஆரவோ அறைக்குள் வந்தவன், "ஏன் மகாராணிக்கு தட்டுல வைத்து கூப்பிடணுமோ? சம்மந்தி வந்தா முகத்தை திருப்பறது எங்க வழக்கம் இல்லை. அதுவும் மாப்பிள்ளை வீட்ல பிள்ளையை பெத்தவங்களிடம் கூடுதல் மரியாதை எப்பவும் இருக்கும். தயவு செய்து வெளிய வந்து நிற்கறியா? இந்நேரம் ஜனனி மனைவியா இருந்தா நானே கைபிடிச்சி அழைத்து போய் நிறுத்தியிருப்பேன். உன்னோட பேசவும் பிடிக்கலை. தள்ளி போனா தானா பேச வைக்குது இந்த சூழ்நிலை" என்று பேசியிருக்கவும் சம்யுக்தா தானாக வெளியே வந்தாள்.

 "வாங்க பெரிம்மா வாங்க பெரிப்பா... வாங்க அண்ணா"  என்று விசாரிக்க, 

    "நீ வந்த நேரமோ என்னவோ. என் மருமக உண்டாயிருக்கா. இந்தா..." என்று ஜிலேபி எடுத்து ஊட்டிவிட்டார் சந்துரு அம்மா சிவகாமி. 

      "பெரிம்மா... ஒர் நபர் வீட்டுக்கு அறிமுகமாகி காலடி எடுத்து வைத்த நேரமெல்லாம் நல்லது கெட்டது நடக்காது. விதி... இன்னிக்கு இந்த நல்லது நடக்கும், அன்னிக்கு அந்த கெட்டது நடக்கணும்னு எழுதியிருக்கு அவ்ளோ தான். நீங்க இங்க இருங்க. நான் காபி எடுத்துட்டு வர்றேன்" என்று நகர்ந்தாள். 

     "அண்ணி சந்துரு எல்லாம் சொன்னான். பொண்ணு நல்ல பிள்ளையாக தான் இருக்கா. நீங்க பழையதை மனதில் வைத்து பார்க்காதீங்க. ஆரவ் உனக்கும் தான் பா." என்று அடுப்படியில் வந்தார் சிவகாமி. 

     சம்யுக்தாவை தோளில் தொட்டு திருப்பி, "உண்மை தான் இந்த புது மனிதர்கள் வந்ததால் நல்லது கெட்டது நடந்தது என்று ராசி பார்த்து பேதம் பார்க்கலை. இப்படி பேசினாவாது நீ வாயை திறந்து பேசுவ என்று தான் சகஜமா பேச முயன்றேன். மற்றபடி நீ சொல்லியது தான்." என்றதும் காபி பெரிம்மா என்று நீட்ட, வாஞ்சயாய் தலைநீவி வாங்கி பருகினார்.

      சந்துரு தந்தை தினகரன் வாழ்த்து சொல்லி பேசியபடி, மதியம் உணவருந்தி கலகலப்பாக அந்நாள் மாலை முடிவடைந்தது. 

      மாலை செல்லும் பொழுது சந்துரு கூடவே தன் மனையாள் வைஷ்ணவியை அழைத்து சென்றான். 

     ஆரவிற்கு சந்துரு தந்தை அவனிடம் பேசியது எல்லாம் ஒருவித  அசவுகரியத்தை தந்தது. 

    அது பெரிய வீட்டு பிள்ளை, தப்பு என்றாலும் நீ பொருத்துட்டு போ. சுவாமிநாதன் செல்வாக்கிற்கு தகுந்தவனாக வளர்ந்துவிட்டாய் மன்னித்து பேசி நட்பை உறவை மேம்படுத்திக் கொள்ளுங்கள் என்றது அவனுக்கு பிடித்தமில்லை. 

    என்ன இருந்தாலும் நடந்தவையை மறக்க தனி மனம் வேண்டும். அதுவும் தான் இல்லாத நேரத்தில் தங்கையை தாயை எந்த சூழ்நிலையில் நிறுத்திவிட்டார். இன்று நினைத்து பார்த்தாலும் சுவாமிநாதன் செய்கை எரிச்சலை கிளப்பியது. 

   சுவாமிநாதன் செய்ததற்கு இவள் என்ன செய்வாளென்று எண்ணினாலும் அன்று ஏர்போர்ட்டில் இவள் தானே திவேஷிடம் பேசினாள்,  அவனும் அதை தானே கூறினான். திவேஷ் கூறியது கூட பரவாயில்லை. ஆனால் யுக்தா பேசியதை அவள் வாயால் கேட்டானே... அதை தான் ஆரவ் உள்ளம் இதயச்சிறையில் அரித்துக் கொண்டே இருந்தது. 

- வரையனல் தனிய தீவிகை ஒளிரும். 

    -பிரவீணா தங்கராஜ் 

Read pandravankalukum comments pandravankalukum romba romba thanks. Keep supporting 😊
    
  
     

     
     

பஞ்ச தந்திரம் -18 (முடிவுற்றது)

 பஞ்ச தந்திரம்-18   திரிஷ்யா இரண்டு நாளுக்கு மேலாக நேரம் எடுத்துக்கொண்டாள்.    மஞ்சரியாக எதையும் கேட்கவில்லை ஏன் அப்படியொரு விஷயம் கூறி அவகா...