சிரமமில்லாமல் சில கொலைகள் -3

 


🩸-3

       டெய்சி மருத்துவமனையில் ஸ்டக்சரில் கொண்டு செல்ல அவ்விடம் பார்த்தவளுக்கு இதயம் தாறுமாறக துடித்தது.

     மூச்சிரைக்க திரும்பி "இவ்விடம்  வேண்டாம்" என்றாள். டெய்சியின் தமிழ் நியூயார்க் மக்களின் அறிவுக்கு சென்றடையவில்லை.

      ஆண்டர்சனுக்கு மட்டும் டெய்சியின் பேச்சு எங்கோ எதிரொலித்தது போன்ற உணர்வு. 

     சுவாசக்காற்றை பொருத்தி அங்கே டாக்டரும் செவிலியும் உயிரை காக்க போராட, அங்கே பனியில் உருவான புகையில் இருந்து கண்கள் அற்ற உருவம் மருத்துவ உடையணிந்து வாயினை பொத்தி அருகே வந்தது. அது டெய்சியினை சிகிச்சையளிக்கும் மருத்துவர் உடலில் சென்று கலந்தது.

    டெய்சி இதயம் வேகமெடுத்தது... உபகரணங்கள் பொருத்தி இதயத்துடிப்பை சரிபடுத்த முயன்றனர் செவிலியர்கள்.

     மருத்துவ உடையணிந்த மருத்துவரோ டெய்சி அருகே வந்து அவளுக்கு மட்டுமே கேட்கும் விதத்தில், அவ்வறையே அதிர உச்சபட்ச குரலில், "மனதின் எண்ணங்கள் நற்நாற்றம் வீச வேண்டும். அதுயில்லயேல் இதயம் தீய எண்ணங்களை தூவி மூளைக்கு கெடுதல் செய்தி அனுப்பி, விசுவாசமாக இருக்க வேண்டிய இடத்தில் உயிரை குடிக்க ஏற்றுவிக்கும். ஆதலால் இதயம் இருந்தாலொழிய தீய எண்ணத்தை விதைக்கும். இதோ இந்த திரவம் உன் மேனியில் செலுத்த, இதயத்திற்கு எடுத்து செல்லும் இரத்த செல்கள் ஸ்தம்பித்து உமது சுவாசத்தை நிறுத்தி ஒருவித விஷவாயுவை இதயத்தில் அனுப்பும். அக்கணம் இதயம்  வெடித்து இறப்பை ஏற்படுத்தும். எங்கோ கேட்ட செவி வழி செய்தி போன்று உள்ளதா அத்தையரே... இது தங்கள் ஞானத்தில் உதித்த சீரிய சிந்தனை தான்." என்று கூறியப்படி ஊசியினை செலுத்த ஊசியினை தட்டி விட டெய்சி பிராத்தப்பட்டாள்.

     மனிதன் உட்செலுத்த தடுக்கலாம். ஆத்மா என்றும் ஆவி என்றும்  அழைக்கப்படும் பேய்களிடம் சாதாரண டெய்சியின் செயல்கள் பலிக்குமா?

      ஊசியினை செலுத்த கண்கள் சொருக... இதயம் படபடப்பை கூட்ட, வியர்வை பூத்தது டெய்சிக்கு.

   கண்கள் இருளிடம் செல்ல, செவியில் குரல்கள் கிணற்றுக்கடியில் கேட்க, இதயம் விண்ணென்ற வலியில் சுணக்கம் தர, டெய்சி இரத்த செல்கள் வேகமாக ஓடியது.

    இதயம் தொட வருகையில் ஏனோ டிவியில் படத்தை நிறுத்தம் செய்வது போன்று இரத்தங்கள் செல்ல மறுத்து வேலை நிறுத்தம் செய்ய இரத்த செல்களின் உள்ளே இருந்து பச்சை நிற அமிலம் சுரந்து, அவை வாயுவாக மாறி இதயத்தில் அழுத்த அவ்விதயம் கருகி உருகுலைந்து பஸ்பமாக மாறியது.

     மற்றவரின் பார்வைக்கு இதயம் என்ற உறுப்பு மருத்துவ கருவிகள் உதவியால் அறியப்பட்டாலும், உண்மையில் இதயமற்ற உடலாக தான் அச்சதை பிண்டம் மாறியிருந்தது.

     மருத்துவ உடையில் வந்த இளவழகன் கொஞ்சம் கொஞ்சமாக மறைய அவன் சென்று வந்த மருத்துவனோ,

     "ஷி குட் நாட் சேவ் ஹர் லைப். ஷி இஸ் டெட்" என்று ஆண்டர்சனிடம் தெரிவித்து முகமூடியை கழற்றி சென்றார்.

     மகள் இறந்த துக்கம் தான் டெய்சி இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று உறுதியாக மீண்டும் ஒரு இரங்கல் கூட்டம் கூடியது.

     இம்முறை ஆண்டர்சன் இறந்துபோன இல்லாளை கண்டு சிலுவையிட, எங்கிருந்தோ ஒரு குரல் "அடுத்தது நீ... தயாராக இரு மாமானே... உமக்கு பித்தம் தலைக்கேறும் வரை யாம் காத்திருக்கின்றோம்" என்ற குரல் மட்டும் கேட்க வந்தவர்கள கண்டு கண்கள் தூழாவியது ஆண்டர்சனுக்கு.

     "தி லாஸ் ஆப் யுவர் டாட்டர் அண்ட் ஒய்ப் இஸ் இர்ரீபார்அபிள். ப்ரே டூ காட் அண்ட் லெட் தெம் கோ டூ ஹவென்" என்று ஒருவர் 'மகள் மனைவியின் இழப்பு திரும்ப ஈட்ட இயலாது. அவர்கள் சொர்க்கத்திற்கு செல்ல இறைவனை வேண்டு'  ஆறுதல் உரைக்க ஆண்டர்சன் காதில் இளவழகன் பேசியது ஒலிக்க, "நான் பித்துக்கொள்ளி ஆக மாட்டேன்" என்று உளர ஆண்டர்சன் வாய் மொழியோ, "ஐ அம் நாட் மேட் மேன்" என்று உச்சரித்தது.

     வந்தவர்கள் யாவரும் ஒரு வித விசித்திரத்தோடு கண்டு செல்ல அங்கிருந்த பாதரோ, அவனுக்கு ஆசிர்வதித்து சிலுவை கயிறை கழுத்தில் போட, ஆண்டர்சன் அக்குரல் அகல விழித்து நின்றான்.

     மெர்லினா அந்த டோமினேட் பீட்சா கடைக்கு வந்து லெமன் ஜூஸ் பருகி கொண்டிருந்தாள்.

    "உனக்கு தெரியுமா ஆரோல். லிசா இறந்து அடுத்த இரண்டாவது நாளே ஆன்டி இறந்தது கஷ்டமா இருக்கு." என்றாள் ஆங்கிலத்தில்.

    "எப்படி?" என்று இவனும் கேட்க.,

     "ஹார்ட் அட்டாக். அவளையே நினைத்து ஹர்டாகி டிப்ரஷன்" என்றதும்

     "இட்ஸ் ஓகே. காஸ்ட்ஸி அசிசரிஸ் போட்டுட்டு வந்தது அவ தவறு. திருடர்கள் கொன்றதற்கு நாம என்ன செய்ய முடியும். ஆன்டி கொஞ்சம் பீல் பண்ணிடாம ரியாலிட்டி அக்சப்ட் பண்ணியிருக்கலாம். உயிரோடயாவது இருந்திருப்பாங்க? என்ன செய்ய?" என்றான் ஆங்கிலத்தில்.

     பீலிங் சேட் ஆரோல். மாம் அண்ட் டாட் சம்திங் டிஸ்அப்பாயின்ட் ஆகிட்டாங்க" என்றதும் ஆரோல் அவளை தீண்ட, அமைதியாக இருந்தாள்.

அந்த அமைதியை பயன்படுத்தி ஆசையோடு தீண்டிய கணம், அங்கு போக் ஸ்பூன் ஒன்று பறந்து வந்து கையை பதம் பார்த்தது.

     'சம்திங் ராங்... மெர்லினாவை விசித்திரமாக பார்த்தான்.

       அன்று லிசாவை நெருங்கிய கணம் ஒரு அசரிரீ கேட்டதில் இருந்து மெர்லினாவை எங்கோ பார்த்தது போன்றும் அவளுக்கு தான் அடிபணிந்து போவது போன்றும் எண்ணங்கள் தனக்குள் தோன்றுவதால் அவளையே வைத்த கண் வாங்காது பார்த்து நின்றான்.

     ஒரு கணம் ராணியாக கேஸட்டில் நிற்பது போன்றும், ஒரு கணம் அலங்கரிக்கப்பட்ட தாவனியில் ஏதோவொரு ஆலையத்தின் படிக்கட்டில் தேங்காய் சில்லை கடித்து மீனுக்கு பொறி போடுவது போன்றும் காண்பதாக பிரம்மையே கண் முன் வந்து செல்ல, மெர்லினா இதுவரை அதுபோன்ற ஆடை அணிந்து அவன் கண்டது போல தோன்றவில்லை.

நியூயார்கில் ஆலயம் ஏது. அதுவும் படிக்கட்டு குளக்கரை என்று? அவன் பார்த்த கோவில்கள் முதலில் இந்த இடத்திலே இல்லையே என்று குழம்பினான்.

      தன்னை சுற்றி என்ன மாயங்கள் உள்ளதென அறிந்திடாத மெர்லினோ லெமன் ஜூஸ் பருகி முடித்து, ஆரோலை என்ன என்றவாறு புருவம் உயர்த்தி கேட்டாள்.

  அவளுக்கு போக் ஸ்பூன் ஆரோலை வந்து பயமுறுத்தியது கண்ணுக்கு அகப்படவில்லை.

     "நத்திங் யூ லுக் கார்ஜீயஸ்... சோ லேட் மீ சீ யூ" என்றதும் பளிர் புன்னகை சிந்தினாள் மெர்லினா.

     அப்புன்னகையில் ஆரோல் மனம் தரிக்கெட்டு போக பார்வையால் அவளை விழுங்க பார்த்தான்.

      "என்னவளை காணும் கண்களை பிடிங்கி கழுகுக்கு உணவளிக்கவா ஆடலரசா?" என்றதும் ஆரோல், அவனையும் அறியாது

   "வேண்டாம் சர்வேஷ்வரா..." என்றான். மெர்லினா திருதிருவென விழித்தவள், "உ இஸ் சர்வேஷ்வரன்?" என்றாள்.

       இங்கே சென்னையில் சர்வேஷ்வரன் தன் கேபினில் அமர்ந்து இருந்தவன், "நான் தான் சர்வேஷ்வரன்" என்றதும் அவன் முன்பு இலண்டனில் இருந்து வந்த ஒரு வயோதிக தம்பதி ஒருவரை ஒருவர் பார்த்து நிற்க, "சாரி... மகாபலிபுரம் அண்ட் ரிசார்ட் போக உங்களுக்கு கையிட் ரெடி" என்று போனை எடுத்து "லட்சுமணன் அண்ணா... இவங்களை தான் நீங்க கேப்ல கூட்டிட்டு அவங்க மகாபலிபரம் சுற்றி காட்டிட்டு அப்படியே அவங்க தங்க பீச் ரிசார்ட் புக் பண்ணிட்டேன். அங்க ஈவினிங் டிராப் பண்ணிடுங்க." என்று அறிமுகப்படுத்தினான்.

    அவர்கள் சென்றதும் தன்னிடத்தை சுற்றிச்சுற்றி பார்த்தான்.

    ஒரு பெண்ணோட குரலில் என் பெயர் கேட்டதே... யாரா இருக்கும் என்று தன் அலுவலக பெண்களை ஒவ்வொருத்தராக பார்த்தான். சிலர் இவன் பார்ப்பதை கண்டதும் கிசுகிசுக்க தன்னையே திட்டிக் கொண்டு கவனத்தை திருப்பி கொண்டான்.

     'யாரோ கூப்பிட்டாங்க... யாரா இருக்கும்.' என்றவன் மனம் என்னவோ போல பிசைந்தது.

      இங்கு ஆரோல் சர்வேஷ்வரன்... அண்ணா... இல்லை... உன்னோட லவ்வர் பேரா?" என்றான்.

      "யூ இடியட் நீ தானே அந்த நேம்மை சொன்ன. உனக்கு தான் தெரிந்து இருக்கும். என் லவ்வரானு கேட்கற" என்றதும் ஆரோல் அந்த வாய்ஸ் ஆடலரசன் சொன்னதே... அது யாரு நானா? சம்திங் ராங் என்றவன் மனம் மெர்லினாவிடம்

     "உனக்கு வேற பெயர் இருக்கா?" என்று கேட்க,

      "நோ... ஏன் இந்த பெயர் நல்லா இல்லையா. சர்வேஷ்வரன்... பெயருக்கு என்ன பொருத்தமா வைக்க?" என்று முறுவலிட்டு கேட்க,

    "அபரஞ்சி... தான் நல்லா இருக்கும்." என்றான் சென்னையில் சர்வேஷ்வரன். தன் பேனாவில் அபரஞ்சி என்று எழுதியவன் அதன் பின்னே நான் யாரிடம் பேசறேன். யாரோ ஒரு பெண் என்னிடம் பேசறா... ஆனா அவளுக்கு நான் பதில் சொல்லறேன். என் குரல் மட்டும் அந்த பெண்ணுக்கு கேட்கலை.

     கடவுளே.... இது என்னது.? அந்த லிசா நியூயார்க்ல இறந்தா ஆனா எனக்கு பாகிரதி இறந்தது மாதிரி கனவுல வந்தது. அந்த பிரேஸ்லேட் நியூயார்க்ல தொலைந்தது ஆனா சென்னையில் என்னிடம் இருக்கு. இதுல யவனரதி-இளவழகன் யாரு? யவனரதிக்காக இளவழகன் எதுக்கு  கொல்லணும்.

   இதுல அபரஞ்சி யாரு? சர்வேஷ்வரன் நான் தான். அப்ப எனக்கும் அந்த அபரஞ்சி என்ற பெண்ணுக்கும் என்ன தொடர்பு. காதலி என்றால் எனக்கு சந்தித்த உணர்வே இல்லையே. இப்ப யாரு எங்கிருந்து தான் பேசி இருப்பாங்க.' என்றவன் தனது இடத்திலிருந்து வீட்டை நோக்கி கிளம்பினான்.

     இவனை போலவே ஆரோலும் ஆடலரசன் யாரு ? நானா? நானா இருந்தா அப்ப மெர்லினா யாரு? ஏதோ சர்வேஷ்வரன் பேரை சொல்லி பயந்தேன். அவனோட காதலி தான் மெர்லினாவா? பட் மெர்லினாவுக்கு அந்த பெயரே நினைவு இல்லை.

    நிஜமாவே இந்த விநோதங்கள் எனக்கு மட்டும் நிகழுதா? இல்லை மெர்லினாவை சுற்றி இருப்பவர்களுக்கும் நிகழுதா? அப்படி மெர்லினாவை சுற்றி இருப்பவர்களுக்கு நிகழ்ந்தா அவளுக்கு தெரியாமலா போகுமா?" என்று தன் வீட்டை நோக்கி யோசனையில் காரை செலுத்தினான்.

     "அவளுக்கு தெரிய வரும் ஆடலரசனே அக்கணம் அவள் சர்வேஷ்வரனான என்னிடம் அடைக்கலமாக இருப்பாள்." என்று கரும்புகை அருவமாக வந்து அவனின் கார் முன் நிற்க சட்டென பிரேக்கிட்டு நிறுத்தினான்.

      கழுத்தை கையில் ஏந்தி காரினுள் ஏற ஆரோல் அதிர்ந்து கண்களை விரித்து அலறி, "இளவழகா... எம்மை கொய்துவிடாதே" என்று கையை உயர்த்தி வணங்க, அம்மாய அருவம்

      கடல் கடந்து தேசத்தில் பிறந்தால் எம்மால் உம்மை வஞ்சிக்க இயலாதா  ஆடலரசா? உமக்கு இந்தனை ஞானம்  இருக்க... உமக்கு முந்தைய ஜனனத்தில் ஜனித்த எமக்கு இருக்காதா?
   
    ஒன்றல்ல... இரண்டு ஜென்மம் கடந்து வந்து உள்ளோம். உம்மையும் யவனரதியையும் பழித்தவர்களை யாம் சும்மா விடுவோம் என்று எப்படி எண்ணி விட்டாய்? பிரபஞ்சம் அழிந்தாலும் எண்ணங்கள் அழியாது ஆடலரசனே... அது காற்றில் சுழன்று கொண்டிருக்கும் அறிவாயோ?" என்று அவ்விடமே நகைப்பதாக தோன்ற ஆரோல் தன் செவிப்பறையை மூடியபடி ஒடுங்கினான்.     

     ஒரு கை வந்து அவனை தட்ட, நிமிர்ந்து பார்க்க அஞ்சி கண்களை இறுக்க மூடினான். 

   "வாட் இட் டஸ் இஸ் பார்க் தி கார் இன் தி மிடில் அண்ட் ஹவ் தி இயர் சீல்டு எல்ஸ்வேர். வாட்ஸ் விராங் வித் யூ. நாட் பீலிங் வெல்" என்ற குரலில் ஆரோல் சுற்றி சுற்றி பார்த்தான். காரை நடுரோட்டில் வைத்து காதை மூடியதற்கு வேறு அபராதம் என்று நீண்டிடுவாரோ என்ற பயத்தில்

    "ஐ அம் பைன். சாரி பார் தி டிரப்பிள். எ பேட் டீரீம்" என்று ஆரோல் பதிலளித்து புறப்பட்டான்.

      மெர்லினாவோ, சர்வேஷ்வரன் என்ற பெயரை உச்சரித்தததும் அந்த பெயரை விரும்ப ஆரம்பித்து இருந்தாள். 'இது புதுசா இருக்கு... அந்த பெயர் இதற்கு முன்ன கேட்டேனா?' என்று யோசிக்க துவங்கினாள்.

     அவளின் அருகே காதல் பேசும் விழியோடு அவ்வுருவம் அவளை சுற்றி வட்டமிட்டது.

- 🩸🩸🩸🩸🩸

- பிரவீணா தங்கராஜ் 

அடுத்த பதிவு அடுத்த sunday வரும்.

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு