சிரமமில்லாமல் சில கொலைகள் -4

 


🩸-4

     ஆண்டர்சன் தன் வீட்டில் தனித்து இருக்க, அந்த சில்லென்ற காற்று கூட ஏதோ திகிலை தந்தது. கதவுகள் ஜன்னல்கள் மூடி வைத்து தனதறையில் படுக்க முனைந்தார்.

    எங்கிருந்தோ காற்று புயல் போல வீச கதவு ஜன்னல்கள் படபடவென அடிக்கும் ஓசை வரவும் தன் பூட்டி வைத்த கதவு ஜன்னலை தான் பார்த்தான்.
 
       பூட்டியவை ஓசையெழுப்பியது எண்ணி குழம்பியவனுக்குள் ஆண்டர்சன் என்ற ஆத்மாவும்  இல்லாது புகழேந்தி என்ற மானிடனின் ஆத்மா எண்ணங்களும் கலவையாக வந்து நின்றது.

      காற்றின் வேகமாக அடிப்பது போன்ற மாயையை தர ஆனால் கதவும் சாற்றி இருக்க, இம்முறை பொருட்கள் எல்லாம் மேலெழும்பி ஆண்டர்சனை சுற்றி சுற்றி வட்டமிட்டது.

      தன் மீது மோதிடுமோ என்று ஆண்டர்சன் நகர அவனை உரசாது வீட்டின் பொருட்கள் எல்லாம் மோதுவது போன்று வந்து வந்து விலகியது. அதிலும் அந்த கத்தி வந்து கழுத்தில் நிற்க ஆண்டர்சன் தொண்டைக்குழி ஏறியிறங்கி கண்கள் அச்சத்தில் திகைக்க, யாரோ காலிங் பெல் அழுத்தம் கேட்க, ஹாலுக்கு ஓடினான்.

     கதவு வெறுமென சாற்றியிருந்திட ஆண்டர்சனை காண வந்த பாஸ்டர் ஒருவர் மாடியில் இருந்து வரும் வழியில் விலகி விலகி எதையோ மோதுவதில் இருந்து தப்பிப்பவன் போன்று ஓடி வரும் ஆண்டர்சன் விநோதமாக தெரிந்தான். 

    பிடித்து நிறுத்த முயல, ஆண்டர்சனின் கண்களுக்கோ அது இளவழகன் தன்னை பிடிக்கும் பிம்பமாக தோன்ற அவனை தள்ளிவிட்டு ஓடினான்.

     ஓடியவன் வந்து சேர்ந்தது கேஸினோ இடமாக இருந்தது. அது குறிப்பிட்ட இடத்தில் அடிக்கடி ஆண்டர்சன் வருமிடம் என்பதால் தானாக அவன் வந்து சேர, வியேர்வை பூத்த முகத்தோடு அமர அங்கே மதுவோடு சூதாட்டமும் தொடர, தன் புகழேந்தி ஆத்மா எண்ணங்கள் களைய ஆண்டர்சனாக மனமாற்றதிற்கு சூதாட்டத்தில் மனதை செலுத்த, தொடர் வெற்றியாக குவிக்க மற்றவர்களோ புரியாமல் குழம்பினர். ஏன் என்றால் ஆண்டர்சனுக்கு மட்டுமே தொடர் வெற்றி உண்மையில் தொடர் தோல்வியில் ஆண்டர்சன் மகிழ்ந்து சிரித்து இருக்க, ஒருவன் தொடர் தோல்வியில் மகிழ்வது எப்படி அதுவும் செய்கை வித்தியாசமாக இருக்க, ஆண்டர்சனின் தனிப்பட்ட வாழ்வும் அறிந்தவர்கள், மகள் கொலையில், மனைவி உடல்நலக்குறைவில் அடுத்தடுத்து இறக்க இப்படி மாறுகின்றானோ என்று அவரை வீட்டிற்கு செல்ல சொல்ல அவனோ பயந்து பின் வாங்கினான்.

       தொடர் தோல்வியில் கேஸினோ இடத்தில் பணம் இன்றி வெளியே தள்ள அதே நேரம் ஆண்டர்சன்  வீட்டில் வந்த பாஸ்டர் வரவே அவர் பேசியபடி ஆண்டர்சனை தன் கிருஸ்துவ ஆலையத்திற்கு அழைத்து வந்து ஒரு ஜெபக்கூட்டம் வைத்தனர்.

      ஒரு அரைமணி நேரம் கழித்து ஆண்டர்சன் மனம் சமநிலை அடைந்து பாஸ்டரிடம் தன் வீட்டில் தனக்கு தோன்றிய மாய பிரம்மைகளை கூறவும் அந்நேரம் வந்த ஆரோல் குடும்பத்தினர் வந்து இருக்க, ஆண்டர்சனின் பேச்சை கேட்க நேரிட்டது.
 
      நேற்று ஆரோல் சொன்ன சில விஷயமும் ஜார்ஜ் மேரி இருவருக்கும் புரிய ஆண்டர்சனின் நிலை அறிந்து இவர்கள் பயத்தில் மிதந்தனர்.

       இளவழகன் ஆத்மா உருவமோ வெளிகேட்டின் வாசலில் இருந்தவன் ஆரோலின் தாய் தந்தை பயத்தை கண்டு விட்டு ஆண்டர்சன் வீட்டிற்கு மாயப்புகையாக மாறி சென்றான்.

    ஆண்டர்சன் வீட்டில் அந்த பளிங்கு வீட்டில் ஹாலில் செயற்கை ஊற்று பார்த்தபடி இருந்த இடத்தில் தன் கூர் நகத்தின் விரலில் சொடுக்கிட, அங்கே சிங்க நாற்காலி ஒன்று தங்கமுலாம் பூசியபடி இருளை கிழித்து மின்னியது.

     "வருவாய் மாமனே... நீயாய் வருவாய்... இவ்விடத்தில் காத்திருக்க யாம் தயார்" என்று சிரிக்க அவ்விடம் அந்த கொடூர சிரிப்பில் உலுக்கியது.

      இங்கு சர்வேஷ்வராவோ தன் எண்ணங்களும் தனக்கு நேரும் சில அனுமாஷ்ய செய்தியும் கொண்டு என்ன செய்வது என்று யோசித்தவன் சாந்தனுவை தொல்லை செய்து ஏன் தனக்கு இப்படி என்று ஏதேனும் மாந்தீரிகன் மற்றும் சாமியார் யாரேனும் தெரியுமா என்று கேட்க சாந்தனுவோ  சர்வேஷ்வரனின் குடைச்சல் தாங்காது குகூளில் தேடினான்.

    குகூளில் தேடிய ஒரு விஷேஷ சாமியாரை தேடி அழைத்து சென்றான்.

   வீட்டில் இருந்த அந்த ரூபி பிரேஸ்லேட்டை அலுங்காமல்  எடுத்தான்.

     "என்னது டா.... லஞ்ச் டவலில் மூடி வைத்து இருக்க?" என்று பிரிக்க, அதுவோ எதுவும் அற்ற பொருளாக தெரிய...

     "என்ன எடுத்த?" என்று கண்கள் கசக்கியபடி கேட்டான். சர்வேஷ்வரனுக்கு எரிச்சலாக, "என் கண்ணுக்கு மட்டும் தெரியற பிரேஸ்லேட் போதுமா டா." என்றதும் சாந்தனு பார்வை சர்வேஷ்வரனை நக்கலாக பார்த்து சென்றான்.

     சர்வேஷ்வரனோ அதனை கண்ணாடி பேழைக்குள் வைத்து மூடினான்.

    சர்வேஷ்வரன் தனது பைக்கின் முன் பகுதியில் ஒரு பையில் அந்த பிரேஸ்லேட் எடுத்து கொண்டு செல்ல, சாந்தனு பின்னிருக்கையில் அமர்ந்து "லெட் சீ குட்டி ஸ்டோரி..." என்று பாடிக்கொண்டே வர, வண்டியை நிறுத்தி திரும்பியவன்,

     "கொஞ்ச நேரம் சும்மா வர்றியா... நானே ஏககடுப்பில் இருக்கேன் இதுல நீ வேற..." என்றவன் குகூளின் ரூட்டில் வண்டியை செலுத்த, சாந்தனு சொன்ன இடம் வந்து சேர்ந்தான்.

       அந்த பெரிய ஆலயத்தின் உள்வாயில் வண்டியை பார்க் செய்து இறங்கினான்.

      மிக பவ்யமாக அந்த ரூபி பிரேஸ்லேட் எடுத்து கையில் ஒரு கண்ணாடி பேழையில் எடுத்து வர அது ஒளிவீசி அவ்விடமே ஜோலிக்க சர்வேஷ்வரனோ யாரின் பார்வையில் அக்கல் பார்வைக்கு புலப்படுகிறதா என்றே பார்க்க யாவருக்கும் அக்கல் இருப்பது புலப்படவில்லை என்பதில் ஏமாற்றம் கொண்டான்.

       வரிசையில் எண்ணிக்கையின் படி நின்றான். சாந்தனு தன் போனில் இஷ்டமான பாடலை கேட்க சர்வேஷ்வரன் எண்ணங்களோ, இந்த சாமியார் உண்மையானவனா? கண்டறிவானா? நமக்கு காரணம் காரியம் எதனால் என்று மெய்யுரைக்க செய்வானா? போன்ற பல கேள்விகள் குடைய நேரம் மட்டும்  நகர ஒர் மணி நேரத்திற்கு பின் அனுமதி கொடுக்க பெற்றது.

    சர்வேஷ்வரன் தனக்கு கனவில் பார்த்த கொலை நிஜமாகவே நியூயார்க்கில் நடந்தது என்றும், அங்கே திருடு போன பிரேஸ்லேட் தன்னிடம் எப்படி வந்தது என்றும், ஒர் பெண்ணின் குரல் இப்படி சொல்ல... உங்களுக்கு இந்த பிரேஸ்லேட் தெரியுதா?" என்று எடுத்து காட்ட, இதுவரை அமைதியாக இமை மூடி கேட்டதும் பொறுமையாக திறந்தார் அம்முனிவர் அரிஞ்செயன்.

      "நன்றாகவே புலப்படுகிறதே. உனக்கு கேட்ட குரல் உன்னவளின் குரல். ஜென்ம பந்தம் அப்பா. நீங்கள் இருவரும் சேர்வது விதி. அதற்கு தான் இந்த மாயை." என்று கூறவும் சாந்தனு மற்றும் சர்வேஷ்வரன் பதட்டமாகி பக்தியாக பணிந்து,

       "எதனால் இப்படி நடக்கிறது என்று தெரிஞ்சுகலாமா சாமி" என்று சர்வேஷ்வரன் வினவ,

    "அவள் வந்து உனை சேர விதியாவும் அறிவாய் மகனே. அதுவரை காத்திரு." என்று "உனக்கான பெண் வந்தபின் யாவும் விடைக்கிட்டும்." என்று ஆசிர்வதிக்க,

    "அவ வருவாளா சாமி" என்றான் சாந்தனு.

    "வந்தாக வேண்டுமே" என்று சிரிக்க பின்னால் இருந்த சிஷ்யன் இதற்கு மேல் ஏதும் கேட்க கூடாது என்று விரட்டினான்.  

  வணக்கம் வைத்து சில பல ரூபாய் தாள்கள் வைத்தும் இருவரும் வெளியே வந்தார்கள்.

     சாந்தனு தீவிரமாக யோசித்து "நிஜமா அப்போ நீ சொல்லறது உண்மையா டா" என்று சாந்தனு வினவியபடி வர, சர்வேஷ்வரன்

    "நான் என்ன கதையா சொல்லறேன். எனக்கு நடக்குது உனக்கு விளையாட்டா." என்று வெளியே அரசமரத்தடியில் விநாயகர் சிலையருகே சில தாடி வைத்த காவி வேட்டியர்கள் இருக்க சர்வேஷ்வரனும் அமர்ந்தான்.

    நீண்ட நேரமாக கையில் வைத்திருந்த கண்ணாடி பெட்டியை மெதுவாக கீழே வைத்து ஆசுவாசமாக, அந்த பிரேஸ்லேட்டை எடுத்து பார்த்தான். அதனை அந்த மரத்தடியில் வைத்து போனை எடுத்து பார்த்தான்.

     இன்று அமெரிக்க செய்தி சேனலில் அந்த பிரேஸ்லேட் பற்றி மரணத்தை பற்றியோ ஏதேனும் அறிய வருகிறதா என்றே தேடி பார்த்தான்.

      *சென்ட்ரல் பார்க்கில் கொலை செய்யப்பட்ட லிசா இறப்பு நடந்த அடுத்த நாளிலே அப்பெண்ணின் தாயார் டெய்சி ஹார்ட் அட்டாக்கில் இறந்தார்.* என்று பார்க்கவும் வியர்த்து போனான். ஏன்னென்றால் இதே போல ஒரு தாய் வயதினர் தான் அந்த கறுப்பு உருவம் ஏதோ விஷ ஊசியொன்றை செலுத்தி இறக்க செய்வதாக சர்வேஷ் மனக்கண்ணில் கனவில் கண்டது.

   அது உண்மையாக நிகழ்ந்து இருப்பதை அறிந்து விதிர்த்து போக, மீண்டும் கூட்டத்தில் கலந்து உள்ளே சென்று அந்த சாமியாரை காண போனான். சிஷ்ய சாமியார்களோ வழிவிட மறுக்க சர்வேஷ்வரன் அவர்களை தாக்கி அறைக்கு சென்றான்.

  அக்கணம் மயிலிறகை கொண்டு விசிறிய ஒருவன் "ஏன் அண்ணாத்த அவன் என்ன கல்லுனு சொல்லறான் நீ பார்த்தேனு கப்ஸா அடிக்கிற"என்றான்.

    "ஏலேய் கல்லு தெரியுதா கேட்கறான். தெரியலை எப்படி சொல்ல அதான் தெரியுதுனு உட்டேன் ரீலு. அருள்வாக்கு சொன்னேன்ல எப்படி பயபக்தியா போனான். அதான் நமக்கு வேண்டும்." என்றான் அரிஞ்செயன்.

      "அண்ணாத்த ஒரு வேலை கல்லு எங்க இருக்கு நான் பொய் சொன்னேன்னு அந்த பய கேட்டுயிருந்தா?"

    "அடேய் அவன் அப்படி கேட்டா ஆம் மகனே நீயே உண்மை சொல்ல தான் யாம் இவ்வாறு பொய்யை மறுக்காது கண்டேன் என்பேனு  தமிழில சொல்லிருப்பேன். இதுயெல்லாம் தொழில் இரகசியம் டா." என்றான் அரிஞ்செயன்.

     சர்வேஷ்வரனுக்கு ஏககடுப்பாக, சாந்தனு தன்னை தீண்ட திரும்பியவன் மீண்டும் அரிஞ்செயனை காண சிஷ்யனோ தலை சொரிந்து,

    "அப்பறம் என்ன ஒரு பெண் வருவா விதி உனை சேர வைக்கும் அது இது ஏதோ சொன்னிங்க." என்றதற்கு,

      "ஏலே மக்கு பயளே. அவனுக்கு கல்யாணம் பண்ற வயசுல.. கொஞ்ச நாள்ல எப்படியும் ஒரு பெண்ணை கட்டி வைப்பாங்க. இல்லையா வயது ஏற கல்யாணம்னு ஒரு பொண்ணு வரணும்ல. அதை தான் அப்படி அடிச்சு விட்டேன்." என்று நகைக்க, சர்வேஷ்வரன் கையில் அரிஞ்செயன் கொடுத்த தாயத்தை கழட்டி விசிறியடிக்க, அது அரிஞ்செயன் மற்றும் சிஷ்யன் மீது விழுந்தது.

    சாந்தனுவும் கழட்டி எறிந்தான்.

சர்வேஷ்வரன் சாந்தனு இருவரும் எரிச்சலோடு இடத்தை விட்டு அகன்றனர்.

    தங்கள் களவாடி சாமியார் என்று அறிந்த பின்னும் அதை கண்டுக்காமல் அடுத்த ஏமாற வருபவனை ஏமாற்ற தந்திரமாக கதைத்து கொள்ள ஒத்திகை பார்த்தனர்.

     சர்வேஷ்வரன் பைக்கை கோபமாக எட்டி உதைத்து ஸ்டார்ட் செய்ய விநாயகர் சந்நிதியில் உறங்கியிருந்த ஒரு தாடி வைத்த முனி எழுந்து சர்வேஷ்வரன் அருகே வந்தான்.

   சாந்தனு இடத்தையும் சர்வேஷ்வரனையும் பார்த்து விழித்து ஏறியமர

      "மகனே... உன் பொருளை நீ விடுத்து எங்கு செல்கின்றாய். நீ விட்டு ஒதுங்கினாலும் உன்னை வந்தே அடையும் பிடி" என்று சர்வேஷ்வரனின் கையில் பிரேஸ்லேட்டை கொடுக்க, தான் மறந்து வைத்த பிரேஸ்லேட்டை எப்படி இவர் கொண்டு வந்தார்? இவருக்கு இந்த பிரேஸ்லேட் கண்ணுக்கு தெரிகிறதா? என்று நம்பவும் முடியாமல் தவித்தான்.

      உள்ளே போலி சாமியார் என்பது நூறு சதம் அறிந்தபின் இதை எப்படி எடுத்துக் கொள்ள என்றே தவிக்க அந்த தாடி முனியோ கலகலவென சிரித்து,

     "உண்மைக்கும் பொய்மைக்கும் வேறுபாடு அறியாது தவிக்கின்றாயா? கலிகாலம் பொய் உண்மை போல தோன்றும். உண்மை பொய் போல தோன்றும். இது மாயமாக தோற்றுவிக்கலாம் அல்லது தற்காலம் அப்படி மாறி இருக்கலாம். ஆனால் உனக்கான விதி நீ எழுதியது. உன்னை வந்து அவள் அடையும் நேரம் உனக்கு இருள் கலைந்து ஒளி பிறந்து வழி கிடைக்கும். விடையும் பிறக்கும். அதுவரை உண்மை பொய் மாறி மாறி உன் வாழ்வில் விளையாடும் மகனே. எதையும் மனதில் போட்டு உழன்றுக் கொள்ளாதே. *அன்பே கடவுள்*" என்று ஆசிர்வதித்து அகல, சாந்தனு பேய் முழி முழிக்க, சர்வேஷ்வரன் தன் கண்ணாடி பேழையில் பிரேஸ்லேட்டை எடுத்து வைத்து அந்த தாடி வைத்த முனிவரை தேட அவரோ அவ்விடத்தில் இல்லாது போனார்.

    சாந்தனு தான் "டேய் இங்க இருந்து கிளம்பு. எனக்கு பயமா இருக்கு. பைத்தியம் பிடிக்குது." என்று தட்ட சர்வேஷ்வரன் அரசமரத்தடியில் தன்னிடம் கொடுத்த அம்முனிவரை தேடியபடி தனது பைக்கை கிளப்பினான்.

-🩸🩸🩸🩸🩸

- பிரவீணா தங்கராஜ்.

      இனி அடுத்த சண்டே பதிவு வரும். கட்டாயம் படித்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் நன்றி.

    கதை எப்படி இருக்கு என்ற கருத்தே என்னை ஊக்கப்படுத்தும். விரைவான பதிவை கொடுக்க உதவும்.

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு