உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...12

 


   💟(௧௨) 12
       

    தன் தந்தை உருவத்தில் துர்வன் சபைக்கு வர சபையே விழி விரித்து காண ராணியின்  கண்கள் கணவன் பிணி நீங்கி எழுந்து நடமாடுவதை கண்டு அதிசயமாக காண நேராக வந்த துர்வன் நாவலுர் வீரன் மடலை கொண்டு வந்தவனிடம்
      "தங்கள் அரசனை காண நான் வருவதாக கூறுங்கள்" என்று சொல்ல அவ்வீரன் பணிந்து சென்றான். கணவன்  பரிதி செங்குட்டவன் கண்டு
      "பிரபு தங்கள் பிணி நீங்கிவிட்டீர்களா... வனத்திற்கு சென்ற தாங்கள் சிரத்தில் மோதி ஆழ் நித்திரை சென்று விட்டீர்கள். உயிர் சுவாசம் சென்று வந்ததால் அரசவை வைத்தியர் ஏதோவொரு மூலிகை பறித்து வர சொன்னார் அது மேதினியில் கிட்டாமல் போக... துர்வன் தங்கள் பிணி நீங்க... நீங்க.." என்றே திக்கி திணறி செப்ப இயலாது தவிக்க
      "அறிந்து கொண்டோம் அன்..." அன்னை என்று சொல்ல வந்தவன் நிறுத்தி கொண்டு
     "இனி மாற்ற இயலாத நிலை... மற்றவையை யாமே பார்த்து கொள்கின்றோம்" என்று வேக நடையிட்டு செல்ல மாதங்கி போகும் பரிதியினை வியப்பாக தான் கண்டு களித்தார்.
              நாவலூர் அரசனை கான துர்வன் பரிதி செங்குட்டவன் தோற்றத்தில் சென்றிட அங்கே கூடியிருந்த அரசவை சபையில் சிறு நாட்டின் அரசபைக்கு மாமன்னனின் வருகையால் எல்லோரும் எழுந்து தலை வணங்க ருத்திரா மட்டும் எழுந்து நின்றாலோழிய தலை வணங்கவில்லை.
இத்தனை பெண்கள் மாயமான சங்கதி பேரரசனான இவருக்கு அறியாமல் இருக்குமா? அறிந்தும் நடவடிக்கை எடுக்க செய்யாதவருக்கு மரியாதை எதற்கு என்று ருத்திரா நிற்க பரிதி உருவத்தில் இருக்கும் துர்வனோ 'எமக்கு அவை மரியதை கூட தராத உம்மை எமது வால் கொண்டு வீழ்த்தும் கணம் உம் மறலி கலைய செய்து எமது இல்லாள் என்பதை செப்பி பலியிடுவேன் அக்கணம் மித்திரன் உடையவளாக நீ இல்லை என்பதை மறுகி வருந்த வேண்டும். அதை கண்டு யாம் ஆனந்தம் கொள்ள வேண்டும். இதில் உம்மை அழைத்து வருவதே மித்திரன் தான் என்பதை நிச்சயம் சொல்லியே ஆக வேண்டும்' என்று மனதில் வன்மம் ஏந்தி அரசவையில் அமர மித்திரன் அழைத்து வரப்பட்டான்.
            தன் தாய் வந்திருக்க வேண்டும் என்று வந்தவனுக்கு தந்தை வந்து நிற்க கை விலங்கு இருந்த போதும் ஆவல் பொங்க ஓடி வந்தான்.
உச்சி முதல் பாதம் வரை ஆராய்ந்து கட்டி தழுவ
      "எந்தையே இனி எல்லாவற்றிற்கும் விடை கிடைக்கும். தங்கள் பிணி நீங்கி விட்டீர்களா? துர்வனை பற்றி தாங்கள் அறிந்தீரா? எம்மை தண்டிப்பது தடுத்து காக்க வந்தீரா? துர்வன் எங்கே?" என்று கேள்விகணை துளைக்க பரிதி கண்களை ஏறிட்டவன் அதில் பரிதியின் உதடு மந்திரம் உச்சரிக்க மித்திரன் இது தனது தமையன் என்பதை உணரும் நொடி அவனின் கட்டுப்படாட்டில் மித்திரன் சென்று இருந்தான்.
        மித்திரன் கண்கள் தானாக இமை மூடி ருத்திராவை கண்டு பரிதியிடம் சரி என்று அங்கே பிழை செய்தவன் நிற்கும் வட்டத்தில் நின்றான்.
          "மன்னிக்கவும் எமது மைந்தன் செய்த தவறுக்கு இன்னொரு மைந்தன் உயிர் சுவாசம் அடங்க வேண்டும் என்றால் தங்கள் நியாயப்படி செய்யுங்கள். துர்வன் எம்மால் கண்டறிய இயலவில்லை. அவன் செய்த பாவத்திற்கு எமது மற்றொரு மைந்தன் உயிரை தாராளமாக எடுத்து கொள்ளுங்கள். நாங்களே எமது பெரிய புத்திரனை பிடித்து கொல்லும் எண்ணத்தில் தான் தேடி சுற்றுகிறோம்." என்று செப்ப ருத்திரா திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

           துர்வன் சாவதமாக எண்ணி அவளை ஆவலாக காண ருத்திராவோ தான் இவர் மகனை விரும்புவதை அறிந்து இப்படி நடக்கின்றார். எப்படியும் காப்பாற்ற நான் போராடுவேன் என்று எக்களிக்கின்றாரோ? என்றே மித்திரனை காண அவனோ சிற்பத்திற்கு உயிர் தொடுத்தவன் போல நின்று இருந்தான்.
முன்பு தன்னை கண்டு அலைபாயும் காதல் விழிகள் அதில் இல்லை. தன்னை சிறைப்பிடித்த கோவம் மட்டும் இருக்க ருத்திரா குழம்பி போனாள்.
தந்தையே மகனை கொன்று கொள்ள ஒப்புதல் அளிக்க அகத்தியன் இன்னல் கொண்டு மனதை கடினப்பட்டு
       "நாளை பவுர்ணமி இரவு சௌமித்திரதேவனுக்கு மரண தண்டனை வழங்க முடிவு செய்து உள்ளோம். மைந்தனே ஆனாலும் அவனை காப்பாற்ற வேண்டி யாசிக்காது அத்திசாரம்(இரும்பு) போல நின்று நியாயம் பேசி சிற்றரசரிடம் பகை போர் என்று இல்லாது எமது பேச்சிற்கும் கட்டுப்பட்டு வந்தமைக்கு நன்றி" என்று அகத்தியன் விழைந்ததும் பரிதியோ ஒரு எள்ளி நகைத்து ருத்திராதேவியை கண்டு கடக்க ருத்திரா மனம் விதிர்த்து ஒடுங்கியது.
               இரவு மித்திரனை கண்டு பேச எண்ணி யோசிக்க சபை கலந்தும் போனது.
மஞ்சரி தான் ருத்திரா அறைக்கு வந்து
       "தமக்கு களிப்புண்டாகியதா ருத்திரா? இந்த மேதினில் எவருமே தன் மனம் கவர்ந்த மன்னவனை இப்படி பலியிட இத்தனை ஆர்வம் கொள்ள மாட்டார்கள். மெய்யாகவே நீ மித்திரனை விருப்பம் கொண்டாயா?" என்றதும்
"மஞ்சரி நீயா கேட்பது. யாம் விருப்பமின்றி தான் எம் மனதை பறிக்கொடுத்ததா?"
    "ஐயமாக தான் உள்ளது உமது நடவடிக்கைகளில்"
    "மித்திரன் பார்வை தான் மாற்றம் உண்டாகி உள்ளது"
       " எமக்கு உம் மீது அல்லவா மாற்றம் கண்டு இருப்பதாய் தோன்றுகிறது"
       "எம்மை கொல்லாதே மஞ்சரி . வார்த்தைகள் கொன்றுவிடும் நீ அறியாததா... மித்திரனை வைத்து துர்வனை பிடிக்க எண்ணினேன் ஆனால் மித்திரன் தந்தை இப்படி செப்பி செல்வார் என்று கனவிலும் அறியேன் யாமே குழம்பி தான் தவிக்கின்றோம் நீயே சொல் மற்ற அத்தனை உயிரும் மாயமாகி பலியிட்டு இருக்க இன்னமும் மித்திரன் வாய் திறக்காமல் இருப்பது நியாயமா?" என்று சுணக்கத்தில் சொல்ல மஞ்சரிக்கும் யோசித்து
     " நீ தனிமையில் அவரிடம் அளாவி தன்மையாக கேட்டு பார் இன்று முடிவு கிட்டும்" என்று நம்பிக்கை அளிக்க ருத்திரா நேரம் பார்க்க அந்தி சாயும் நிலவின் தேஜசில் திங்களானது பிரகாசமாக ஒளி வீச நாளைக்குள் எண்ணிக்கை கூடினால் துர்வன் சக்தி பெற்று விடும் சூழ்நிலையாகிடும் என்று கருத்தில் தோன்ற ருத்திரா மித்திரன் இருக்கும் சிறைக்கு சென்று கொண்டு இருந்தாள்.
              அங்கே சென்று சிறையில் காவலாளியை கண்டு கண் அசைக்க தாழ் விடுவிக்கப்பட்டது.
    "மித்திரா..." என்ற குரலில் திரும்பியவன்
       "உம் வருகைக்காக தான் காத்திருந்தேன் ருத்திரா..." என்றவன் விழிகள் ருத்திரா விழியில் கலந்த நொடி மயக்கமாக மித்திரன் வளியோடு வளியாக மாயமாகி சிறையில் இருந்து வந்து அங்கே இருந்த புரவியில் ஏறி மீண்டும் மந்திரம் உச்சரிக்க வானில் பறந்தது.
         ருத்திரா மித்திரன் இருவரும் தன்னிருப்பிடம் வருவதை கண்டு துர்வன் வெற்றி மிதப்பில் களித்தான்.

Comments

Post a Comment

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...