தீவிகை அவள் வரையனல் அவன் - 15

 


 தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥 - 15

   அழகாக ஆரவ் தோளில் தன் தலை சாய்த்து உறங்கி கொண்டு வந்த யுக்தாவை பார்த்தான்.

    மனதினுள், 'ஆப்டர் மேரஜ் இதே போல என் தோளில் சாய்ந்தபடி நம்ம ஹனிமூனுக்கு வரணும்.' என்றவனின் எண்ணத்தில் இதழில் அரும்பாக மின்னியது புன்னகை.

   தன் கையில் அவள் கையை கோர்த்திருந்தவன் ஒரு கணம் பஸ்ஸில் மெல்ல அனைவரையும் ஒரு பார்வை பார்த்து யாரெனும் பார்க்கின்றனரா என்றே தெளிவுப்படுத்தி அவள் உள்ளங்கையில் முத்தமிட்டான்.

    அவனின் மீசை குத்தி கைகள் தானாக அனிச்சையாக இழுக்க, மெல்ல எழவும் செய்தாள்.

      "ஆரு..." என்றவள் சிணுங்கி மீண்டும் அவனது சட்டையில் சாய்ந்து கொள்ளவும், ஜன்னலில் வலது கையால் பிடித்தவனின் முகம் கர்வம் கொண்டது.

     இந்த பயணம் நீண்டுவிடாதா? என்பது போல இருக்க, நடுவில் உணவு உண்ண இறங்கினார்கள்.
 
      யோகிதாவோடு செல்ல போனவளை கைபற்றி இழுத்து தன்னருகே அமர்த்தி சாப்பிட செய்தான். கூடவே திவேஷ் சந்துரு எதிரே அமர, ஆரவ் பேச யுக்தா சிரிக்க சந்துரு இடையில் பேசி அவனும் கலந்திட, திவேஷ் ஏகக் கடுப்பில் இருந்தான்.

     போனையும் பறித்து வைத்து சந்துரு அலப்பறை செய்தான்.

    "ஏன்டா... படிக்கிற உனக்கு எதுக்கு டா.. இவ்வளவு காஸ்ட்லி போன். உங்கப்பா காசா... ஆமா பாஸ்வேர்ட் சொல்லு," என்று கூறவும்

     "அண்ண.. அண்ண... போனை கொடுங்க. நான் அமைதியா கூடவே உட்கார்ந்துக்கறேன்." என்று கெஞ்சினான் திவேஷ்.

       "என்ன பக்கி... ஓவரா... பம்முற... பாஸ்வேர்ட் சொல்லு". என்று கூறவும் பயந்தபடி சொன்னான்.

      குரோம் ஹிஸ்ட்ரி எடுத்து பார்த்து திவேஷை முறைத்தவன். "ஒன்னு கூட படிப்பு சம்மதமா பார்க்க மாட்டியா. எல்லாம் வேற மாதிரி இருக்கு." என்று சொல்லவும் திவேஷ்  தலைக்குனிந்து நிற்க, அந்த இடைப்பட்ட நேரத்தில் சிம்மை எடுத்துவிட்டு கொடுத்தான். தேங்க்ஸ் என்று வாங்கியவன் சிம் இல்லை என்றதும் சந்துருவை பார்க்க, அவனோ "பொறுமை டா. அப்பறமா தர்றேன். எனக்கு ஒரு டீ சொல்லேன்" என்று ஆர்டர் போட திவேஷே வாங்கி வந்து கொடுத்தான்.

     டீ கடையில் டெலிபோன் இருந்தும் நம்பர் மண்டையில் இல்லாமல் போக, திவேஷ் மனதில் பத்து நம்பர் நினைவு வைச்சி இருக்கலாம். சே. சம்யு அப்பா நம்பரை விட என் அப்பா நம்பர் கூட தெரியலை. இப்ப அப்பா நம்பர் தெரிந்து இருந்தா, அவரிடம் விஷயம் சொல்லி சம்யு அப்பாவிடம் தெரிவிச்சி இருக்கலாம். எதுக்கும் வழியில்லை. இவன் வேற கடுப்பா டீ மாஸ்டர் ஆகிடறான். இதுக்கு ஆரவே பெட்டர். பார்க்கற பார்வை அல்லுவிடும் ஆனா ஒரு வார்னிங்கோட முடியும். இவன் என்ன வேலை வாங்கறான். சாமி காப்பாத்து' என்றே வேண்டிக் கொண்டிருந்தான்.

      தலைமைக்கு வந்திருந்த ஆசிரியரும் ஆரவிற்கு நற்சான்று வழங்கும் ஆசிரியராக இருந்திட ஆரவின் நடவடிக்கை கண்டவர்கள். அவன் இயல்பாக பேசி பழகியதில் தவறாக எண்ணவில்லை.

     ஒருவர் மட்டும் கல்யாண சாப்பாடு போடு. என்று கேலி செய்து கிளம்பினார்.

        ஊட்டி வந்து இறங்கிய போது, சோம்பல் முறித்து பனிப்புகையினை ரசித்து குளிரில் கைகளை தேய்த்துக்  கொண்டு இறங்கினார்கள். யோகிதா சம்யு என்று பெண்கள் தங்குமிடம் அருகே வந்து சேர, "ஏய்... அண்ணா உன்னோட வந்து உட்கார்ந்தும் அப்படி இருந்தது. என்ன சொன்னார்? ஆமா திவேஷ் ஏன்டி லாக் பண்ணி சந்துரு அண்ணா ஓட்டினார்." என்று கேட்க,

     "திவேஷ் மூலமாக அப்பாவுக்கு எங்க லவ் மேட்டர் தெரிந்துடுச்சு. அப்பா என்னை கண்டிக்கலை. ஆனா வேவு பார்க்க திவேஷ் சுத்தறான். அதான் சந்துரு அண்ணா மடக்கி அடிமை மாதிரி கூடவே வச்சியிருக்கார்." என்று கூறவும் சிரித்து புத்துணர்வு அடைய தங்களுக்கு கொடுக்கப்பட்ட அறையில் சென்றனர்.

    இரு நாள் என்று அழைத்து வரப்பட்டவையில் முதல் நாள் மிக சந்தோஷமாக குளித்து முடித்து கிளம்பினார்கள்.

     சில இடங்களில் யோகிதாவுடனும், சில இடங்களில் ஆரவுடனும் போட்டோ எடுத்து கொண்டு இருக்க, அங்கே சில பூக்களை தடவி வருடி மலர்காட்சியை இரசித்தவாறு சம்யு வரவும், அவள் தீண்டலில் உயிர் பெற்ற மலராகவே காட்சியளித்தது ஆரவிற்கு.

    சில செடியை தீண்டிய சம்யுவோ முட்போன்ற கேக்டஸ் தீண்டவர, அதனை தொடாதே என்றதற்குள் சம்யு தீண்டி முட்கள் குத்தியது.

     ஆரவ் கண் முன் முள் குத்தியதை கண்டு பதறியவன் அவள் கைகளை பற்ற, அதே நேரம் மலர்காட்சியில் இருந்தவனோ, "பூச்செடியை தொடாமா பார்க்கணும் என்று பலகை இருக்கு பார்ப்பதில்லையா. அப்படியே தொட்டா இப்படி தான் குத்தும்." என்று கடைக்காரன் திட்ட செய்தான்.

     "இதுக்கு தான் நடுவுல நடுவுல கள்ளிச்செடி மாதிரி இருக்கற இதை வைச்சியா" என்றொருவன் பாராட்ட, ஆரவ் மலர்காட்சியில் அவனை அடிக்க துவங்கினான்.

      சற்று நேரத்தில் சந்துரு வந்து ஆரவை தடுக்க, சம்யுக்தாவும் ஆரவும் தனியே அழைத்து வந்தான். அங்கே மூவரை தவிர யாருமில்லாமல் போக ஆரவ் அதே கோபத்தோடு நின்றான். அவனிடம் சந்துரு

     "ஏன்டா. உனக்கு தான் தெரியும் இல்லை. மலர்காட்சியில் யாராவது பூவை டச் பண்ணுவாங்களா. நம்ம சம்யு மேல தான் தப்பு." என்றதும் ஆரவ் சந்துரு சட்டையை பிடிக்கவும், சம்யுக்தா இடைப்புகுந்து, "ஆரு... அண்ணா சொல்லறதில் என்ன தப்பு நான் யோசித்து இருக்கணும். நான் தான் தொட்டு இருக்க கூடாது." என்று தன் தவறை உணர்ந்து சம்யு கூறவும், சந்துரு ஆரவை நடவடிக்கை கண்டு அமைதியாக வெளியேறினான்.

     "ஒரு நாள் பூத்து மடிந்து போற அந்த பூ.. உன் கைபட்டு மோட்சம் அடைந்து இருக்கும். இவனுக்கு என்ன தெரியும். தப்பாம்... நீ பூவைத் தொடலாம். அந்த கள்ளிச்செடியை உடைச்சி போட்டுட்டு வர்றேன்." இன்று ஆரவ் கிளம்ப,

     "ஆரு.. நில்லு." என்றவனை தடுக்க இயலாது கன்னம் பற்றி திருப்பி யுக்தா முத்தமிட, ஆரவ் மௌன நிலையை அடைந்து இருந்தான்.

   சிறிது நேரம் யுக்தா அவன் கன்னத்தில் இதழ் பதித்த நிமிடம் எண்ணி அமைதியாக, "ஆரு... நீ சொன்ன மாதிரி அந்த செடி மோட்சம் பெற்றதுன்னே வைச்சிப்போம். கள்ளிச்செடிக்கு என் மேல கொள்ளை ஆசை அதான் அது என்னை முத்தமிட்டு இருக்கும். எனக்கு அது முட்போன்ற மீசையில் குத்தி இரத்தம் வருது. " என்றதும் ஆரவ் அவள் பேசிய தோரணையில் அவளை தன் பக்கம் இழுத்து இதழ் பதித்தான்.

     அந்நேரம் வந்த திவேஷ் அதனை மற்றுமொரு நண்பனின் போனில் படம் பிடித்து இருந்தான்.

      "இதை என் மெயிலுக்கு அனுப்பு." என்று அவனிடம் கொடுக்க, மற்றொருவனும் அதை செய்து விட்டான்.

      சம்யு ஆரவ் இருவருமே அதன் பின் ஒன்றாக இருக்க அஞ்சி யோகிதாவோடு அனுப்பி வைத்தான்.
  
  சம்யுக்தா வெளியே வந்த நேரம் அந்த கேக்டஸ் போட்டோ எடுத்து மெம்மரபளாக படம் பிடித்து வைத்தாள்.

    கூடவே அந்த போனில் கேக்டஸ் போட்டோ எடுத்து கொண்டாள். அவளுக்கு ஆரவிடம் இருந்து முதல் முத்தம் பெற்று தந்தது காரணத்திற்காக.

ஆரவோ சந்துருவிடம் மன்னிப்பு கேட்டு அவனோடவே இருக்க, சந்துரு தான் சிறிது கோபமாக இருந்தான்.

    இதில் திவேஷ் என்பவனை கண்டுக்கொள்ளாமல் போக அவனோ அலுவலக நம்பரை குகூளில் தேடி அங்கு தந்தை மூலமாக கான்பிரனஸ் கால் போட்டு சுவாமிநாதனுக்கு நடக்கின்றதை சுருங்க சொன்னான்.

    சுவாமிநாதன் கோபத்தில் எழுந்தவர் கையோடு தன் அடிபிடி ஆட்கள் மூலமாக ஊட்டியில் தெரிந்த சிலரிடம் ஆரவ் புகைப்படத்தை அனுப்பி அவனுக்கு மரணவாசலை காட்டி விட பணித்தார்.

     பணத்தை பாதளம் வரை அனுப்பி ஆரவை கொல்ல அடுத்த நாள் முடிவு செய்த பிறகே சுவாமிநாதன் மனம் நிம்மதியடைந்தது.

        அடுத்த நாள் மதியம் 'பிளாக் தண்டர்' போகும் வழியில் காத்திருந்தனர். எல்லோரும் செல்ல ஆரவ் கடைசியாக சந்துருவிடம் கைபற்றி கார் அதிவேகமாக வருவதை கண்ட, ஆரவ் சந்துருவை இழுத்து வலது பக்கமே ஒதுங்கிட செய்தான்.

    ஆனால் ஆரவ் கவனிக்கவில்லையென்று ஓடிவந்த சம்யுவை கார் மோதி விட, சம்யு தூக்கி எறியப்பட்டாள்.

    துடிதுடிக்க ஆரவ் தன்னை கையில் ஏந்தி கலங்கியது நிழல் போல ஆடியது.

   இதுவரை தான் சம்யுக்கு அறிந்து இருந்தாள். கண் விழித்தப் பொழுது உடலில் ஆங்காங்கே கட்டு தான் இருந்தன.

  ஆரவை அழைக்க, அவரோ அவன் இல்லை மா. உனக்கு அடிப்பட்டதை பார்த்து அவனுக்கு பிரச்சனை வருமென்று விலகிட்டான். ஏதோ கேஸ், வரும்னு பயந்தானோ, இல்லை நீ செத்துட்டனு நழுவ பார்த்தானோ,மருத்துவமனையில் சேர்த்தவன் பில்லை பார்த்தும், நீ தேறமாட்டேனும் ஓடிட்டான்.

    நான் வர்றப்ப திவேஷ் தான் கூட இருந்து கவனித்தான்.

    இங்க பாரு என்று வாட்ஸப்பில் சம்யு போனில் இருந்து அனுப்பியது என்று காட்ட, அதில் ஆரவின் நம்பரில் இருந்து வந்த பதில்கள் எல்லாம் அப்படி தான் இருந்தன.

   என் போனில் இருந்து அனுப்பினேன். முதல்ல பதில் வரலை. அதான் உன் போனில் அனுப்பினேன். பார்த்தியா மா பதிலை.

   பெரியவன் என்ற மரியாதை இல்லை. பணம் தர வக்கில்ல, ஓடி ஒளிந்து விட்டான். இதுல நீ பிழைத்ததும் ஊர்ல என்ன சொல்லியிருக்கான் பாரு.

      திவேஷோட உனக்கு காதல். அவனோட பழகிட்டே, இவனோட நீ காதலிச்சிருக்க அது தெரிந்து அவன் உன்னை விலகியதா பேசியிருக்கான் என்று பக்கம் பக்கமாக ஆரவ் இவளை பற்றி பேசியதாக ஆடியோவை காட்டினார்.

   கேட்டவள் தன் இருகாதுகளையும் பொத்தி விம்மி விம்மி அழுதாள்.
    ஆரவ் நம்பருக்கு அழைத்து பேச முயன்றதும் ஆரவ் யாரென கேட்பதற்கும் முன் 'உன் பொண்ணும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம். நம்பர் இருந்தா தானே போன் வாட்ஸப் தொல்லை பண்ணற, இன்னிக்கே சிம்மை உடைத்து போடறேன்' என்ற கத்தலோடு சம்யு பேசவிடாது கட் செய்தான்.

   தந்தை தான் சம்யு மனமாறுதலுக்கு லண்டன் படிக்க அனுப்ப முயன்றார். இரண்டாம் வருடம் அங்கு சென்று தொடர ஏற்பாடு செய்ததாக கூற, சம்யு முதலில் மறுத்தாள்.

     ஆனால் எதற்கும் ஆரவ் வீட்டில் சென்று பார்க்க போக, அங்கே ஆரவ் இல்லை. சந்துருவும் இல்லை. சுபாங்கினி மட்டுமே இருக்க, வாசலில் வந்த அடுத்த கணமே பொங்கி எழுந்து, கத்தி வீட்டுக்குள் காலை எடுத்து வைக்க விடவில்லை.

    என் பையனை ஆட்டி படைத்தது நீ. ஆனா கெட்டப் பெயர் என் பையனுக்கா. போடி வெளியே..." என்று சுபாங்கினி கத்தவும் சந்துரு தாய் தந்தையர் வந்து, சம்யுவை தான் வெளியே போக சொல்லி அனுப்பினார்கள்.

     தான் வந்தது ஆரவ் அறிந்து அடுத்த இரு தினத்தில் வருவான் என்று காத்திருந்தாள் பேதை.

   ஒரு வாரம் காத்திருந்தும் ஆரவ் வராமல் போக தந்தை சொன்னது போல எண்ணியிருப்பானோ என்று எண்ணினாலும், ஒரு பக்கம் ஆரவ் காதல் உண்மையானது என்று ஆழ்மனம் அடித்து சொல்ல ஒரு மாதத்திற்கும் மேல் ஆரவ் வரவில்லை என்ற வலியும் வேதனையும் ஆட்கொள்ள யோகிதாவும் ஆரவை பற்றி தவறாக பேச, தந்தை வற்புறுத்தலில் லண்டன் புறப்பட தயாராகி கிளம்பினாள்.

    அதோடு திரும்பி வந்த பின்னும் ஆரவை தேடும் பொழுது ஆரவ் சந்துரு வீட்டில் இல்லை. ஆரவை பற்றி அறியவும் முடியவில்லை.

     ஆரவ் தன் அலுவலகத்தில் சிசிடிவியில் காணும் பொழுது ஓடிச்சென்று அவனை கட்டியணைக்க துடித்த உணர்வை கட்டுப்படுத்தி, அவனை சந்திக்கும் சந்தர்பத்தை எதிர்நோக்க தயாராக இருந்தாள்.

   ஆரவ் யாரையோ போல் நடத்த, சம்யுக்தாவும் அப்படியே நடந்துக் கொண்டாள். இதில் அவள் பிழையில்லையே... அவனை அடுத்தடுத்த  நாள் சந்திக்க நேர்ந்தும் விலகி செல்லும் ஆரவை விரும்பி தேடி போக மனமில்லை.

     ஆரவிற்கு எது பிடிக்குமோ அது உயிராக இருந்தாலும், தருவதற்கு தயாராக இருக்க, திருமணம் என்ற செய்தி இடியாக தாக்கினாலும், ஆரவிற்கு பிடிக்காமல் எதுவும் நடக்கவில்லையே என்று ஒதுங்கி போனாள்.

   ஆனால் தந்தை ஆரவ் மீது பழியோடு ஜனனியை விலைப் பேசி திருமணத்தை தடைச் செய்ய முனைவார் என்று யுக்தா எண்ணியதில்லை.

   தந்தை ஆரவ் திருமணத்தை நிறுத்த முயன்றதும், முன்பு இலைமறையாக ஆரவ் தந்தை பற்றி பேசியதையும் இணைத்து பார்த்தால் தந்தை தான் பெரும் பிழை செய்து ஆரவை காயப்படுத்தியிருக்க வேண்டுமென கிரகித்தாள்.

     நல்ல வேளை ஆரவ் கையால் தாலி கிட்டியதே என்ற உவகை உள்ளமெல்லாம் நிறைய, நிம்மதியாக உறங்கினாள்.

-வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

- பிரவீணா தங்கராஜ்.
    






Comments

  1. Thank u sister ud seekrama update pannathuku story super

    ReplyDelete
    Replies
    1. nalaiku ud read post paniduven. quick ah monday friday tharen sis thanks for supporting

      Delete
  2. விபத்திற்கு பிறகு நடந்தது சிக்கிரம் பதிவிடுங்க!

    ReplyDelete
    Replies
    1. விரைவில் நாளை காலை பதிவு வரும்.

      Delete
  3. Tharama flashback irukku hero ku

    ReplyDelete
    Replies
    1. ஹம் அவ்வ்.. இருக்கு..

      Delete
  4. Wow ippa Sam Ku purinjidichchi aarav mela thappillanu.
    Waiting for aarav fb

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1