சிரமமில்லாமல் சில கொலைகள் -2

 


சிரமமில்லாமல் சில கொலைகள்

🩸-2

    சர்வேஷ் காபி பருகி முடித்து கனவு அது என்று தன்னையே நம்ப வைத்து கொண்டான்.

      சாந்தனு தனது காதலியை பார்க்க செல்வதாக கடற்கரைக்கு கிளம்பினான். போகும் பொழுது சர்வேஷை பார்த்து,

     "மச்சி நீயும் வர்றியா டா?" என்றான்.

     இருகையை மேலுயுர்த்தி "வேண்டாம்டா சாமி... நீங்க லவ் பேர்ட்ஸ்... நான் என்ன மண்ணை அள்ளி வீடு கட்டவா போடா." என்று அனுப்பி விட்டு டிவியை ஆன் செய்தான்.

     நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் பாடல் கேட்டவன் அடுத்து படத்தை மாற்றினான். 'கிங்காங்' நியூயார்க் நகரத்தை துவசம் செய்ய பத்து நிமிடம்  ஓட அனிமல் பிளனட் மாற்றினான். சிங்கமொன்று ஹைனாவை தூரத்த டிஸ்கவரி சேனல் மாற்றினான்.
 
      பெயர் அறியா பறவை நீரில் முங்கி அழகாக நீந்தி செல்ல பார்த்து இரசித்தவன் அது முடிய நியூஸ் மாற்றினான்.

    தமிழ் செய்திகளில் இருந்து டிராவல் கைய்டு என்ற ஆங்கில சேனலில் மாற்றினான். மீண்டும் பத்து நிமிடம் பார்த்து முடித்து மாற்றும் சமயம் பிபிசி செய்தி அலைவரிசை கண்ணில்பட்டது. அதில் நியூயார்க் சென்ட்ரல் பார்க்கில், இரவு  ஒரு பதினெட்டு வயது பெண் மர்மமான முறையில் கொலை செய்யபட்டதாக செய்தி ஆங்கிலத்தில் வரவும் ஒலியை கூட்டி டிவி அருகே அமர்ந்தான்.

முகத்தை மூடி ஆம்புலன்ஸில் ஏற்றிய பெண்ணின் சடலம் கை மட்டும் தெரிய அதில் சர்வேஷ் கனவில் பார்த்த அதே கிறுக்கல் இருக்க அதிர்ந்தான்.

    ஆங்கிலத்தில் 'பெண்ணின் பெயர் லிசா வயது 19 பிறந்த நாள் பார்ட்டிக்காக சென்றவர் நள்ளிரவில் கொடுரமாக கொலை செய்யப்பட்டார். கொலைக்கு காரணம் லிசா விலை உயர்ந்த ரூபிவைர பிரேஸ்லேட்டை அணிந்து வந்ததாகவும் அதனை திருடியவர் லிசாவை கொலை செய்து இருக்கலாம் என்று அறியப்படுகிறது. திருடியவர் யாரென அலெக்ஸ்பிரிட்டோ சிசிடிவியில் சோதிக்க அது செயல் இழந்து இருக்கின்றது. இது திட்டமிட்ட கொலை முயற்சியாக இருக்கலாம் அத்தனை சிசிடிவியும் செயலிழந்தது வரலாற்றில் விசித்திரம்' என்று முன்பு எடுத்த பிரேஸ்லேட் புகைப்படம் மற்றும் லிசாவின் புகைப்படமும் காட்டி ஒலிபரப்ப நம்ப இயலாது கண்களை தேய்த்து பார்த்தான்.

    கனவில் இறந்த அதே பெண் நிஜத்தில் அதே நியூயார்க் நகரில் அதே பார்க்கில் என்றதும், அப்பெண் தங்கியிருந்த ஹோட்டல் அறையை செய்தியில் விவரிக்க, சர்வேஷ் சர்வமும் ஒடுங்கி இருந்தான். 

      நேற்று உறக்கத்தில் தான் பார்த்தது கனவு என்று கடந்திட அந்நிகழ்வு கனவல்ல நிஜம் என்று அறிவுறுத்த தன் கைகள் நடுங்குவதை உணர்ந்தான்.  

     ஏன் என்றால் அப்பெண்ணை வாள் கொண்டு வெட்டியது அருவுருவமாக காட்டியது. அவ்வுருவம் தற்போது தனதருகே நிற்பதாக தோன்ற எச்சிலை கூட்டி விழுங்கி மெல்ல மெல்ல கண்கள் ஒரு நேர்க்கோட்டு பாதையாய் ஒரே திசைக்கு சென்று திரும்ப அங்கே உருவத்திற்கு பதிலாக கண்ணாடி மட்டுமே இருக்க, சோபாவில் அமர்ந்தான்.

    எங்கே தனக்கு தனியாக இருந்தால் பைத்தியமே பிடித்திடும் என்பதாக தோன்ற தனது கப்போர்ட் திறந்து ஆடை மாற்றி வெளியே செல்ல கிளம்பினான். 

    பெர்வியூம் எடுக்க சின்ன கப்போர்ட் திறக்க அங்கே அந்த ரூபி பிரேஸ்லேட் நகை இருக்க இரண்டடி பின்னால் நகர்ந்தான்.

    பின்னால் யார் மீதோ மோத வேகமாக நகர்ந்து திரும்பினான். அங்கே சாந்தனு "என்னடா?" என்ற கேள்வி தாங்கி நின்றான். அதன் பின் நிம்மதி அடைந்தவன்.

     "டேய் அந்த பிரேஸ்லேட் இங்க இருக்கு." என்றான் சாந்தனு.

      "எந்த பிரேஸ்லேட்?"

    "அதான் டா. இறந்தப்போன லிசாவோட பிரேஸ்லேட்?"

       "என்ன? லிசாவா? கனவுல எத்தனை பேர் டா.  யமுனாவோ ஜமுனாவோ சொன்ன மாதிரி இருக்கு. இது யாரு லிசா... மாடர்ன்னா இருப்பாளா?" என்றதும் சர்வேஷ் எரிச்சலாகி,

    "சாந்தனு கிண்டல் பண்ணாதே... நான் தூங்கினப்ப நடந்த நிகழ்வுல ஒரு பேய் ஒரு பெண்ணை கொன்றதே, அது நிஜமா நியூயார்க்ல நடந்து இருக்கு டா. கனவுல காடு மாதிரி இருந்தது. பாகிரதி சொன்னேன்னா... ஆனா நியூயார்க்ல லிசாவுக்கு நடந்து இருக்கு. இந்த யவனரதி இளவழகன் தான் யாரா இருப்பாங்க தெரியலை. ஆனா இறந்தது பாகிரதி என்ற லிசா  டா"

     "என்னடா மை டியர் லிசா படம் பார்த்தியா. பாகிரதி பெயர் பிடிக்கலைன்னு லிசான்னு ஸ்டைல்லா மாற்றிக்கிட்டியா?" என்று சாந்தனு விளையாட, சர்வேஷ் நெருப்பை விழுங்கியவன் போல நின்றான்.

     "ஓகே ஓகே... கூல் மச்சி. அது எங்கயோ என்னவோ நடந்துடுச்சு. இப்ப என்ன அதுக்கு. நீயேன் பதறுற?" என்றான் சாந்தனு டிவி ரிமோட்டை தட்டினான்.

       "அந்த பிரேஸ்லேட் என் கப்போர்ட்ல இருக்கு." என்றான். சாந்தனு "எங்க?" என்று கேட்கவும் தனதறைக்கு சென்று அதனை கைகள் நடுங்க எடுத்து காட்ட சாந்தனு கண் இமைக்காது பார்த்தான்.

   டிவியில் பிபிசி நியூஸ் மறுஒலிபரப்பை காட்டியது.

     அதில் அந்த பிரேஸ்லேட் புகைப்படம் காட்டி செய்தி வர, "பாரு அதே மாடல் அதே கலர்" என்று சர்வேஷ் வியேர்வை வடிய பதறினான்.

     "இந்த மாதிரி பிரேஸ்லேட் கிடைத்தா செம லக் மச்சி. ஆனா இருக்கணுமே... எங்க டா பிரேஸ்லேட்? வெறும் கையை நீட்டிட்டு இருக்க. காற்றுல படம் காட்டுற" என்றதும் சர்வேஷ்

      "டேய் கையில தான் இருக்கு. அதோட ஒளி கண்ணை கூசலை." என்று கேட்க,

     "மச்சான் கோவால இருந்து நேரா வந்தல இன்னும் மப்பு இறங்காம தான் இருக்க. பேசாம சாப்பிட்டு தூங்கு. அப்ப தான் காலையில் தெளியும்." என்றவன் அவனறைக்கு புகுந்தான்.

   சர்வேஷ் தன் கையில் ஒளி விசியிருக்கும் அந்த பிரேஸ்லேட்டை கப்போர்ட்டில் ஒரு கைதுண்டை விரித்து அதில் வைத்தான். சாந்தனு எட்டி பார்க்க சர்வேஷ் அங்கே எதையோ பத்திரமாக எடுத்து வைப்பது போன்ற மாயை மட்டுமே கண்டான்.

       "இவன் ஒருத்தன் உலறிட்டு வித்தியாசமா பண்ணிட்டு கடக்கான். என்னமா காற்றுல படம் காட்டறான்." என்று எண்ணி திருப்பவும் அவன் அறைக்கே புறப்பட்டான்.

    சர்வேஷ் தனதறையில் தனித்து இருக்க யாரோ அறையில் இருப்பதை போலவே உணர்ந்தான். இருந்தும் விலகி ஓட மனமின்றி கணினியை உயிர்பித்தவன் நியூஸ் ஓட விட்டு நிறுத்தி நிதானமாக பார்த்தான். அவனிடம் இருக்கும் அதே பிரேஸ்லேட். போட்டோவில் இருந்த லிசா தான் கனவில் இறந்தது. தனக்கு பிரம்மை எல்லாம் இல்லை. கனவில் நிகழ்ந்ததை நினைவில் நடந்து இருக்கு. இது சாத்தியமா என்று கனவை பற்றி கூகுளில் அலசினான்.

*கனவு என்பது மனிதனுக்கு உள்ள ஆறாவது அறிவால் நிகழ்த்தப்படுவது என்று அறிவியல் கூறுகிறது; முன்னோர் கூறிய சாஸ்திரங்களும் கூட இதை உண்மை என்றே கூறுகின்றன. கனவில் நடக்கும் விஷயங்கள் உறக்கத்தில் இருந்து எழுந்தவுடன் சிலருக்கு நினைவிருக்கும், பலருக்கு நினைவிருக்காது. ஆனால், கனவில் பல நல்ல விஷயங்களும் அதற்கு சம பங்கான கேடுவிளைவிக்கும் விஷயங்களும் தோன்றலாம். இந்த மாதிரியான கனவுகள் தோன்றுவதற்கு என்ன காரணம் மற்றும் ஏன் தோன்றுகின்றன என்று ஆராய்ந்து அறிந்தால், அதற்கேற்றவாறு நலத்தை பெறவும், கெட்டதை தடுக்கவும் நம்மால் முயற்சி எடுக்க இயலும்.

கனவில் இரண்டு வகைகள் உள்ளன; ஒன்று உங்கள் உடல் மற்றும் மன எண்ணங்கள் அடிப்படையில் தோன்றக்கூடியவை. மற்றொன்று உங்கள் பூர்வ ஜென்ம அல்லது உங்கள் ஆத்மாவின் ஆசை மற்றும் எண்ணங்களை உங்களுடன் இணைக்கக்கூடியவை. இதில் முதல் வகை கனவுகள், உங்களின் உடல் மற்றும் மனம் சார்ந்த நடவடிக்கைகளை, ஆசைகளை எடுத்துரைக்கும். இரண்டாம் வகையோ, பூர்வ ஜென்ம ஆசை அதாவது நிறைவேறா ஆசை மற்றும் பழி, ஆன்மாவின் இலட்சியம் போன்ற எண்ணங்களை உங்கள் மனதில் ஆழமாக பதியவைத்து அதை நிறைவேற்ற துடிக்கும்; இந்த ஜென்மத்திலும் முடியவில்லை என்றால் அடுத்த ஜென்மத்திற்கு அந்த ஆசைகளை கடத்தும்*

     இதை படித்ததும் சர்வேஷ் யோசிக்க துவங்கினான். எனக்கு கொலை செய்வதோ, திருடவோ ஏன் இந்த கனவு பற்றி எந்தவொரு எண்ணங்களும் மனசிலில்லை. அப்படின்னா...? சே சே... அடுத்த ஜென்மம் இருக்கா என்பதே கேள்விக் குறி இதுல நிறைவேறா ஆசை, பழிவெறி, இருக்குமா என்ன. சாந்தனு சொன்னது போல சாப்பிட்டு படுத்து தூங்கணும். கடைசியா வோட்கா குடித்தேன். அதோட தாக்கம் தான் போல. என்றவன் பிரெட் டோஸ்ட் பால் என்று சாப்பிட்டு சாந்தனுவிடம் குட் நைட் கூறிவிட்டு உறங்க சென்றான்.

    நியூயார்க்கில் லிசாவின் சடலம் புதைக்கப்பட்டு பைபிள் வரிகள் கூறப்பட்டு மலரோடு மண்ணை பூட்டிட மெர்லினா தனது பிறந்த நாளுக்கு வந்ததால் லிசா மரணம் ஏற்பட்டு விட்டது என்று கலங்கி நின்றாள்.

      கிரிஸ்டோபர் தபித்தாள் இறுதி சடங்கு வரை இருந்து புறப்பட்டனர்.

    செல்லும் மூவரை அங்கே சில கண்கள் குரோதத்துடன் கண்டது. ஆனால் பாவம் அவர்களை கொல்லும் வெறியோடு அருவுருவம் காண்பதை அவர்கள் அறியவில்லை.

    அதிகாலை சர்வேஷ் புத்துணர்வோடு அலுவலகம் கிளம்பினான்.

    சே... நிஜமாவே தூங்கி எழுந்திட்ட பிறகு பீல் பெட்டர்." என்று தனது கப்போர்ட் திறந்து பார்த்தான். ஆனால் அவனுக்கு குழப்பத்தை தரவே அந்த பிரேஸ்லேட் இன்னமும் காட்சியளிக்க வெறுப்போடு புறப்பட்டான்.

       லிசாவின் தாயார் டெய்சி நியுயார்க் நகரம் உறங்கி கொண்டு இருக்க லிசாவின் அறையில் அவளின் பொருட்களை ஓவ்வொன்றாய் பார்வையிட்டு வர, அங்கே மங்கலாய் ஒரு உருவம் தெரிய கண்டார்.

தலையினை கையில் வைத்தபடி, அச்சுறுத்தும் விதமாக அருகே வர வர டெய்சியோ தன்னிலை மாறி "இளவழகா? தாங்களா? எம் புதல்வியை கொய்தது தாங்களா? அவள் தங்கள் மீது உயிரை வைத்தது அறியவில்லையோ?'' என்றதற்கு,

     "உயிரை வதைத்தது மட்டமல்ல... உயிரை மாய்த்ததும் அறிவோம். உம் உயிரும் மெல்ல மெல்ல இதயத்தின் இரத்த பாசறைகள் முழுதும் இரத்தம் அடைத்து, இதயமற்ற நீ... இதயம் வெடித்து இறப்பாய். உன் இரத்தநாளத்தில் அன்று இராஜ விசுவாசம் வெளிபட்டு இருப்பதா என்பதை யாம் கண்ணுற்று இரசிப்போம் யவனரதி மீட்டு கரம் பற்றுவோம்" என்று அவ்வுருவம் அகல,

     "இங்க என்ன பண்ணற டெய்சி..." என்றதும் நெஞ்சில் கைவைத்து டெய்சி பேசிட இயலாது மூச்சிரைக்க ஆண்டர்சன் *** எண்ணை அழுத்த ஆம்புலன்ஸ் ஒலி செவியை கிழிக்க சிறிது நேரத்திற்கு எல்லாம் வந்திறங்கியது.

    டெய்சியை அதில் வைத்து அழைத்து செல்ல கண்கள் அசையாது ஒரே இடத்தை வெறிக்க, ஆண்டர்சன் மனைவி உயிரை எண்ணி பயத்தோடு பயணித்தார்.

   பதட்டமேயின்றி ஆம்புலன்ஸில் தலையற்ற நாயகன் இளவழகன் தேரோட்டி அழைத்து சென்றான்.

- நேரம் நெருங்கும்.

- பிரவீணா தங்கராஜ்

Try my best 🤭🤐
Thanks for comments and reading. Keep supporting.

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு