தீவிகை அவள் வரையனல் அவன் -16

 


தீவிகை அவள் 🪔 வரையனல் அவன் 🔥-16

அதிகாலை எழுந்த ஆரவ் உறங்கும் சம்யுக்தாவை கண்டு எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தாது எழுந்து வெளியேறினான்.

ஆரவ் எழுந்து காபி பருக வந்ததும், சுபாங்கினி தன் மைந்தன் அறைகுள் நுழைந்தார்.

அங்கே கலையாத மலர்கள் மஞ்சத்தில் இருக்க, எழிலோவியமாக சம்யுக்தா உறங்க கண்டு கொதித்தவர், குழாய் திறந்து வாலியில் நீர்பிடித்து வந்து, அந்நீரை சம்யுக்தா முகத்தில் கொட்டிக், சம்யு விதிர்த்து போய் எழுந்து அமர்ந்தாள்.

அத்தையின் வேலை என்றதும் என்ன செய்ய என்ற முழித்தது சிறிது நேரம் தான். தன்னை எழுப்ப அத்தையின் உக்தி இது என்று இந்த இரண்டு நாளில் அறிந்து கொண்டதால் அமைதியாக எழுந்து கொண்டாள்.

அதற்குள் ஆரவ் வர, தாயின் செயலுக்கு எதுவும் சொல்லாமல் கடந்தான்.

சின்னதாக மனதின் ஒரத்தில் சம்யுக்தாவுக்கு வலித்தது. ஆரவ் இப்படி செய்யாதீர்கள் என்று ஒரு முறை சொல்லாகவோ, ஒரு பார்வையாலோ சொல்வதாக தோன்றினாலும் ஆறுதல் அடைந்து இரைப்பாள். ஆனால் தந்தை எண்ண தில்லு முல்லு செய்தாரோ? ஆரவ் சினம் கரைப்புரளும் அளவிற்கு நடக்கின்றான் என்றே அறிவு எடுத்துரைக்க சிறிது மனதை திடப்படுத்தி தாங்கிக் கொண்டாள்.

சுபாங்கினி, 'ஆம்பள பையன் எழுந்து வந்துட்டான். இவளுக்கு என்ன தூக்கம். எங்க எல்லோரோட தூக்கம் பறிச்சது போதாதா' என்று முணங்கி செல்வது நன்றாகவே கேட்டது.

மற்றவையை புறம் தள்ளி விட்டு குளித்து முடிக்க போனாள். ஆனால் உடைமாற்ற வேறு உடை வேண்டுமே. என்ன செய்வது என்று புரியாமல் முதலில் பல் விளக்க சென்றாள்.

கையில் பற்பசை வைத்து தேய்க்க, பல் விளக்கிய உணர்வு வராது போக, அங்கே ஆரவ் பிரெஷ் இருப்பதை கண்டு அவனுடையதில் பற்பசை வைத்து தேய்த்தாள்.

கணவன் என்ற ஆனபின் இது மோசமில்லை என்றது மனம். ஆனால் தனக்கு போல ஆரவ் இதை கண்டால் சும்மா விடமாட்டான் என்று அவசரமாக முகம் அலம்பி திரும்ப, ஆரவ் கொதிக்கும் நிலையில் நின்றிருந்தான்.

அவன் கேட்பதற்குமுன் அவளாகவே, "நீங்க கட்டிய டிரஸோட வரச்சொல்லிட்டீங்க. அதான் எதுவும் கொண்டு வரலை. இங்க பிரஸ் டிரஸ் என்று எதுவும் எனக்கு இல்லையே." என்று தலைக்குனிந்து சொல்லி முடிக்க, சட்டென வெளியேறினான்.

அரை மணிநேரம் கடந்திருக்கும் அதற்குள் வெளியே சென்றவன் அவளுக்கு தேவையானதை வாங்கி வந்திருந்தான்.

பற்பசை முதல் டிரஸ், லோஷன், கீரீம், என்று கடைப் பரப்பினான்.

தனக்காக வாங்கியதை பெருமை கொள்ள பார்க்கும் நேரம்,

"இங்க உங்கப்பா வீட்டிலிருந்ததை விட வசதியில் குறை வைக்க மாட்டேன். ஆனா யுக்தாவோட ஆருவா எப்பவும் இருக்க மாட்டேன் டி. இது தான் உனக்கு நான் தரும் தண்டனை. கிளை தண்டனையா எங்கம்மா தருவாங்க." என்று வாங்கியதை எல்லாம் அவள் முகத்தில் விட்டெறிந்து சென்றான்.

யுக்தா பொருத்து போகும் ரகமா. அவள் நினைத்தால் இந்நொடி கூட தன் வீட்டை நோக்கி சென்றுக் கொண்டு இருக்க முடியும். ஆனால் அவள் வீடு என்று முடிவு எடுத்து இருப்பது ஆரவ் இருக்கும் இடத்தை. அப்படியிருக்க வேறங்கு செல்ல? நடப்பது நடக்கட்டும். ஆரவிற்கு என் உண்மை அன்பு காதல் புரிந்தால் அடியோடு மாறிடுவான். முதலில் தந்தை என்ன செய்தாரென்று அறிய வேண்டும் என்று அறையிலிருந்து குளித்து வெளியேறினாள்.

வைஷ்ணவி தான் காபி கலந்து நீட்டினாள். அவளுக்கு சந்துரு அறிவுறுத்தியது 'எக்காரணத்தை கொண்டும் சம்யுக்தாவை மட்டமாகவோ, கஷ்டப்படுத்தவோ கூடாது' என்பது தான். அதனால் கணவன் சொல் அறிந்து அமைதியாக இருந்தாள்.

சுபாங்கினி தான் நின்றாலும் குறை, நடந்தாலும் குறை என்பதாக கத்திக் கொண்டே அலைந்தார்.

ஆரவ் எதிலும் தலையிடவில்லை. கண்கள் மூடி சாய்ந்து கொண்டு இருந்தான்.

திருமணத்திற்கு உடுத்தியிருந்த பட்டு சேலையை எல்லாம் சம்யுவை துவைக்க சொல்லி சுபாங்கினி மாமியாராக அவதாரம் எடுக்க, சம்யு ஏன் இப்படி பண்ணறாங்க, என்று எண்ணினாலும் பதில் பேசாது துவைக்க செய்தாள்.

பட்டு என்பதால் சில் துணி சாயம் வர உடனடியாக தனிதனியாக எடுத்து வைத்து என்ன செய்வது என்று யோகிதாவிடம் போன் செய்து கேட்க, யோகிதா கூறிய பிறகு தனிதனியாக லிக்யூட்ஸில் முக்கி எடுத்து தனிதனியாக அலச மட்டும் செய்து காயப்போட்டாள்.

கிச்சனில் துணி துவைத்தாச்சு அத்தை என்று சம்யு சந்தோஷமாக சொல்ல, நன்றாக இருந்த தட்டை எல்லாம் எடுத்து போட்டு விளக்க கூறினாள்.

சம்யுவிற்கு எதிர்த்து பேச நா துறுதுறுக்க, ஆரவின் அமைதியில் அவளும் மறுக்காமல் விளக்கி முடித்தாள்.

என்றும் சாப்பிட்ட தட்டை கூட கழுவி வைக்காத சம்யுவிற்கு முதல் நாள் வேலை பளுவாக தான் தோன்றியது. அசதி உச்சம் தொடவும் சாப்பிடாது நின்றாள்.

தானாக உணவை கேட்டு பெற மனமில்லாமல் வெறும் வயிற்றோடு ஆரவ் அறையில் தஞ்சமானாள்.

ஆரவ் அறை தானே. இவளை தன்னவளாக பாவித்தால் மட்டும் அவர்கள் அறையாக மாறும்.

தான் காலையில் வாங்கி வந்த பொருட்கள் அப்படியே கேரிபேக்கில் அதிலிருந்து உடையை மட்டும் எடுத்தணிந்து இருப்பதால் மற்றவை அப்படியே இருக்க, ஆரவ் வந்து அதனை கண்டு, சந்துரு வீட்டிற்கு செல்ல சட்டை அணிய வந்தவன் தன்னவள் உறங்கும் அழகில் ஒரு கணம் சொக்கி தான் போனான்.

இருகைகளை கன்னத்திற்கு முட்டுக் கொடுத்து சோபாவில் ஒடுங்கி படுத்தவளை கண்டு மனம் ஒருநிலைக் கொள்ளாமல் தவித்து நிற்க, அவன் கண்ணில் பட்டது அவளின் கையில் இருந்த சாயங்கள். நீலமாக இருக்க வேண்டும் என்று யூகித்து அதனை கூர்ந்து பார்க்க, கையில் பாத்திரம் தேய்த்து பழக்கமில்லாத கைகள் சிவந்து இருந்தது.

இதெல்லாம் தன்னால் தான். நான் ஒரு வார்த்தை அம்மாவிடம் இப்படி செய்யாதீர்கள் என்று சொன்னாலே அம்மா யுக்தா வழியில் தலையிட மாட்டார்கள். ஆனால் சொல்லத்தான் இயலவில்லை.

நடந்தவைகள் கண்ணில் அப்படியே இருக்க, மறக்க இயலுமா. அப்படியே திரும்பி சந்துரு வீட்டிற்கு கிளம்பினான்.

போகும் வரை தன்னை இரசித்து சென்றவனை சம்யு உணராமல் இல்லை. தனக்கு உறக்கத்திலாவது ஆரு நிம்மதி தருகின்றானே என்ற முறுவல் பூக்க உறங்கினாள்.

சற்று நேரம் வீடே நிசப்பதமாக இருக்க, எழுந்து வந்தவள் கிச்சனில் பசிக்கிறதென பாத்திரம் திறந்து பார்க்க, கை குழந்தைக்கு வைத்திருக்கும் அளவிற்கு தான் உணவு இருந்தது. அதனை எடுத்து சாப்பிட்டு முடித்தவள். பாலை சூடுப்படுத்தி அருந்த துவங்கினாள்.

யாருமில்லை என்றதும் யோகிதாவிற்கு கால் செய்து நடந்தவையை விவரிக்க, அந்தப்பக்கம் அவளோ, இயல்பாக பேசிடாது தடையாக பார்ட்டி மது.

"சம்யு... உன்னிடம் நிறைய விஷயம் மறைத்துவிட்டோம். சில நேரம் வீட்டில் தனியா இருக்கறப்ப, குற்றமுள்ள நெஞ்சு கொல்லுதுடி. இன்னிக்கோ நாளை தெரியவந்தா, ஏன் யோகிதா நீயுமா என்று கேட்டுடாதே. எல்லாம் அங்கிள் சொல்ல சொன்னது மட்டும் தான். இதுல என் பங்கு ஒன்றுமில்லை. சென்னையில் இருந்தா நேர்ல வந்து மன்னிப்பு கேட்டு இருப்பேன். ஆனா சிங்கப்பூரில் இருக்கேன். இந்த வாழ்க்கை கொடுத்ததும் அங்கிள் தான்." என்று முடிக்க, கதவு திறந்து இருக்க, சுபாங்கினி வந்தவள் கிச்சனில் தீஞ்ச வாடை வரவும் முதலில் அங்கே சென்று பார்க்க, பால் பொங்கி வழிந்து சமையலறை முழுவதும் வடிந்து கிடந்தது. பாதி பால் சூடாக இருக்க, அதை விட கொதிநிலையில் சுபாங்கினி இருந்தாள்.

"அய்யோ சாரி அத்தை. பால் சூடுபடுத்தி குடித்தேன். ஆப் பண்ண மறந்துட்டு போன் பேசிட்டேன். இதோ இப்ப கிளின் பண்ணறேன்" என்று துடைக்க துணியை தேடினாள்.

சுபாங்கினியோ, "ஏன்டி ஒரு இடமா இருக்க தெரியாதா. வந்ததும் அடுப்படியில வந்து நாசம் பண்ணற, ஒரு பாலை பார்த்துக்க தெரியாது. சீக்கிரம் கிளின் பண்ணு." என்று அதட்ட, பயத்தில் சூடன பாத்திரம் கை நழுவ அது காலில் கொட்டி விட தாமரை பாதத்தில் பதம் பார்த்தது.

அதே நேரம் சந்துரு வைஷ்ணவியோடு ஆரவ் வர, இதனை கண்டவன் அமைதியாக கடக்க, சந்துரு அவனை நிறுத்தினான்.

"என்ன மனுஷன் டா நீ. நீ அவளை விரும்பினியா என்று சந்தேகம் வர்ற லெவலுக்கு இருக்கு உன்னோட ஒதுக்கம்." என்றவன் அத்தை சுபாங்கினியிடம் வந்து "சூப்பர் அத்தை நல்ல மாமியாரா பழி வாங்கறீங்க பேஸ் பேஸ்... ஒன்றை மட்டும் நல்லா புரிஞ்சிக்கோங்க. நீங்க காயப்படுத்துவதில் சரிபங்கு உங்க பையன் மனசுலயும் காயம் உண்டாக்கும். என்னடா அத்தனை கஷ்டம் அனுபவித்தும் அவனிடம் காதல் இருக்கானு கேட்கறீங்களா. அவனே இல்லையென்றாலும் அவன் மனசுல இருக்கு. என் நண்பன் ஒன்றும் பொழுது போக காதலிச்சவன் இல்லை. அப்படி உண்மையா காதலிச்சவனா இருந்தா அவன் உள்ளமும் வலிக்கும்." என்றவன் சம்யு அருகே வந்து,

"சாப்பிட்டியா மா." என்று கேட்க, "ம்ம்.. சாப்பிட்டேன் அண்ணா." என்று பதிலை கூறினாள்.

"ஏதுமா... காக்காவுக்கு வைக்கிற அளவுக்கு இருந்ததே அதுவா... போதுமா மா. இந்த வீட்டை பெருக்கி துடைத்து, நல்லா இருந்த பாத்திரம் விளக்கி, பட்டு புடவை துணியெல்லாம் அலசி செய்யாத வேலையெல்லாம் இன்னிக்கு செய்து பசியெடுத்து சாப்பிட்டது போதுமா?" என்ற பின் சம்யுக்தா மழுப்பலாக புன்னகை தொடுத்தாள்.

"வைஷ்ணவி அந்த பிரெட் ஜாம் கொண்டு போய் கொடு." என்றதும் வைஷ்ணவி அண்ணியிடம் நீட்ட,
"நான் சாப்பாடு எடுத்து வந்து தரலாம். ஆனா உன் ஆரு இருக்கறப்ப நான் தேவைப்படமாட்டேன் மா. அதான் தற்காலிகமா இதை தர்றேன். வாழ்க்கை இப்படியே இருக்காது. நான் வர்றேன்மா" என்றவன் வைஷ்ணவியை விடுத்து செல்ல, ஆரவ் அதே நிலையில் இருக்க, "மூவி பார்க்க வர்றியா?" என்றதும் அமைதியாக சந்துருவை பின் தொடர்ந்தான்.

யோகிதாவோ இங்கு சுவாமிநாதனுக்கு போனில் "அங்கிள் அவ நல்லதுக்கு லண்டன் மாப்பிள்ளை தான் பார்க்கணும். கொஞ்சம் உதவி பண்ணு மா சொல்லி இப்ப என் சம்யு வாழ்க்கையை இப்படி நாசம் பண்ணிட்டீங்களே. ஆரவ் அண்ணா சம்யு காதல் அது போக்குல விட்டு இருந்தா ராணி மாதிரி வாழ்ந்து இருப்பா. இப்ப பாருங்க.... அவளுக்கு துவைக்க கூட தெரியாது சாப்பிட்டியானு கேட்டா பதில் அரைநிமிஷம் கழிச்சு சாப்பிட்டேன் டி என்றாள். எனக்கு மனசே சரியில்லை அங்கிள். ஆனா நீங்க செய்த தப்பு முழுதா தெரிந்தா சம்யுக்தா மன்னிக்க மாட்டா. தயவு செய்து இனி எனக்கு போன் செய்யாதிங்க அங்கிள். எனக்கு உங்களோட பேசவே பிடிக்கலை" என்ற எதிர்பக்கம் முகத்தில் அறைந்தது போல போனை கட் செய்தாள் யோகிதா.
சுவாமிநாதனுக்கு செய்த தவறெல்லாம் எல்லாம் கண் முன் விரிந்தது. மகளும் தன் சொல்லுக்கு கட்டுப்படாமல் ஆரவ் பின்னால் சென்றதால், முன்பு தான் செய்த தவறுக்கு இன்று மகள் தண்டனை அனுபவிப்பாளோ என்று காலம் கடந்து அறிவு உதயமாக சீரும் பணமும் தட்டும் எடுத்து சென்றால் ஆரவ் மனம் இறங்குவானென்று வரிசை தட்டு பேக் செய்து எடுத்துச் செல்ல எண்ணினார்.

வீட்டில் சுபாங்கினி வைஷ்ணவி சம்யுக்தா மூவரும் மட்டுமே இருக்க, சம்யு கிச்சனை துடைத்து முடித்து கால் தாங்கி தாங்கி ஆரவ் அறைக்கு சென்றாள்.

வைஷ்ணவி ஹாலில் இருந்த கப்போர்டை திறந்து மருந்தை தேட, அவள் எதற்கு தேடுகின்றாளென அறிந்து சுபாங்கினி தன் அறையில் இருந்த முதல் பெட்டியில் இருந்து எடுத்து வந்து நீட்டினாள்.

"ஏன் மா. இதை அண்ணியிடம் நீயே கொடுக்கலாமே. ஈகோ தடுக்குதுன்னா சொல்லு நான் கொடுக்கறேன்'' என்றே வாங்க சுபாங்கினி கைகள் கொடுக்காமல் தன்னிடமே கைகளை பிடித்து ஆரவ் அறைக்கு சென்றார்.

சுபாங்கினி வரவும் காலில் "உப்... உப்..." என ஊதியபடியிருந்த சம்யு எழுந்து நின்றாள்.

"உட்காரு..." என்று சுபாங்கினி சம்யுவின் காலை எடுத்து அதில் மருந்தை தடவிவிட, "அய்யோ அத்தை நீங்க போய். கொடுங்க நானே போட்டுக்கறேன்." என்றதும்

"நான் ஒரு நர்ஸ். எனக்கு எல்லாரும் பேஷண்ட் மட்டும் தான்." என்று தடவி விட்டாள்.

-வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

-பிரவீணா தங்கராஜ்.




Comments

Post a Comment

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1