தீவிகை அவள் வரையனல் அவன்-23

 


🪔🔥-23


      அதிகாலை என்றுமில்லாத மகிழ்வு பொங்க எழுந்தாள். இத்தனை நாள் தேக்கி வைத்த வலி, பாரம் போனதன் விளைவாக இருக்கும். 


      நேற்று பழைய ஆருவோடு இசைந்தது மனம் என்று குத்தாட்டம் போட அதே புத்துணர்வோடு எழுந்து குளித்து முடித்து தன் கையால் ஆருக்கு காபி தயாரிக்க சென்றாள். 


    வெளியே நியூஸ் பேப்பரை விசிறி கிடக்க அதை எடுத்து தட்டில் வைத்து காபியை எடுத்து வைத்தவள். மற்ற பாலை ஆப் செய்ய காத்திருந்தாள்.


     ஆரவை எழுப்பி விட்டது சந்துருவின் போன் அழைப்பு. 


    எடுத்து காதில் வைத்து சவகாசமாக "என்னடா...?" என்றதும் சந்துரு அப்பக்கம், "டேய் சம்யு அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். நேற்று மண்டப வாசலில் காரிலே மயங்கி இருந்தார். அத்தை பார்த்துட்டு அவங்க ஒர்க் பண்ணற ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்காங்க. சம்யுவுக்கு கொஞ்சம் பதமா சொல்லி கூட்டிட்டு வா." என்றான். 


     "என்னடா எல்லாரையும் ஒன்று சேர்த்து வைக்கிறதா நினைப்பா. இங்க பாரு என்னை பொருத்தவரை அந்தாளு எப்பவோ இறந்துட்டார். அவர் நடிப்பார் அதை பார்க்க நான் ஒன்றும் கேனயன் இல்லை. ஏற்கனவே இது மாதிரி பிளான் போட்டுட்டார் வைடா..." என்று சினத்தில் கத்தினான் ஆரவ். 

  

      "ஆரவ்.... மரணத்தோட கடைசி வாசலில் இருக்கார். புரியாம பேசாதே... சம்யு பெயரை சொல்லிட்டு இருக்கார். அத்தை நேரிடையா பார்த்துட்டு தான் சொல்லறாங்க." என்று விளக்க முயன்றான். 


       "டேய்.... அவர்.." என்றவனின் பேச்சை இடைவெட்டி சுபாங்கினி பேச ஆரம்பித்தார். 


      "ஆரவ்... சம்யுக்தாவை அழைச்சிட்டு வா. அப்பா மகள் உறவை தடுக்க நீ யார். அதுவும் மரணவிளிம்பில் இருக்கறவரோடு. இங்க பாரு காலம் முடிந்தபிறகு ஒருமுறை பார்க்க விட்டு இருக்கலாம்னு சொல்லி கூட்டிட்டு போயி காட்டுற இடம் இல்லை அது. பதினெந்து நிமிஷத்தில வர்ற வழிப்பாரு." என்று கத்தவும் ஆரவ் எதையும் யோசிக்க முடியாது தவித்தான். 


     அவனின் எண்ணங்கள் பழைய நினைவுகளை புரட்டி முடிக்க, சம்யு மருத்துவமனையில் இருந்த கணம் தன்னை அரெஸ்ட் செய்து அழைத்து சென்றதும், அடித்ததும், ஜெயில் இருந்து சம்யுவின் ஆடியோ ஆதாரம் மற்றும் கையெப்பம் என்று வரிசையாய் காட்சி பிம்பங்களும், வைஷ்ணவி வைத்து சந்துரு வீட்டில் அவளுக்கு தீங்கிழைக்க எண்ணிய நாடகங்களும் மனக்கண்ணில் வந்துப்போக, பற்றாததற்கு சுவாமிநாதன் ஜெயில் பேசி சீண்டியது என்று வந்து நிற்க, கடைசியாக திவேஷிடம் யுக்தா பேசியதும் வந்து மோதியது. 


       'தராதரம் பார்த்து வரணும் காதல்... இல்லை இப்படி தான் இடம் பொருள் பார்க்காம அவமானப்படணும். இனி காதல் என்ற பேச்சுக்கு என் வாழ்வில் இடமில்லை. படிப்பு... அது எவ்வளவு முக்கியம் என்றும் புரிஞ்சிடுச்சு. நீயாவது உன் வேலையை பாரு.' என்ற சம்யுவின் வார்த்தை. 


   ஆரவ் ஏர்போர்ட்டில் சம்யுக்தா லண்டன் செல்வதாக சுவாமிநாதன் பெருமைப்பட்டு சொல்லி முடித்தார். இந்நேரம் மகள் விமானத்தில் ஏறியிருப்பாள் என்ற நம்பிக்கையில். ஆனால் பதினைந்து நிமிட தாமதம் என்று அமர்ந்து இருக்க, திவேஷ் கையை பிடித்து பேச அதற்கு பதிலாக பேசி முடித்தவள் யுக்தா என்று அழைக்க திரும்பியும் பார்க்காமல் சென்றது தோன்றியது. 


   மறக்க எண்ணி முயன்றவனின் நினைவில் வந்து மோதவும், மனம் முரண்பாடாக எரிச்சலில் சுழல, எதற்கும் சுவாமிநாதனின் உடல்நிலை பற்றி கூறிவிட்டு அவளை வேண்டுறென்றால் பார்க்க சொல்ல வேண்டுமென்று முடிவோடு  வெளியே வந்தான் ஆரவ். 


     சரியாக அதே நேரம் கிச்சனில் யுக்தாவின் இடைப் பற்றி தூக்கி ஒரு சுற்று சுற்றி, "ஐ மிஸ் யூ சம்யு..." என்று திவேஷ் கூற, அது ஆரவின் குரல் போலவே ஒலிக்க, "ஐ லவ் யூ" என்று முகம் காணாமலே அவன் நெஞ்சில் சாய்ந்தவள் அதன் பின்னே அது ஆரவாக இல்லை என்பதை தொடுதலில் உணர்ந்தாள். 


    திவேஷ் கையோடு பரிசு வேறு அவள் கையில் திணிக்க அனிச்சையாக அது கை மாறியிருந்தது. 


     திவேஷ் வந்ததை விட எதிர்பாரத தருணமாக சம்யுக்தாவை தூக்கி சுற்றும் வாய்ப்பு கிடைத்தது. 


     அவன் ஆரவ் எதிரில் பரிசை கொடுத்து ஏதேனும் தன்னால் இயன்ற பிரிவை மூட்ட வந்தவனுக்கு சரியாய் சூழ்நிலை அமைந்தது. 


      "என்ன சம்யு... கடைசியில் அதே தராதரமற்றவனிடம் தான் உன் வாழ்க்கை அழிஞ்சு போச்சே... பச்... ஆழ்ந்த அனுதாபங்கள். அப்பறம் என்ன இருந்தாலும் ஆரவ் அமைதியா எல்லாத்தையும் மறந்து உன்னை ஏற்றுப்பார்னு சொன்னேன். பார்த்தியா...?" என்ற நேரம் ஆரவ் அறைந்து இருந்தான்.


     திவேஷ் இதனை எதிர்பார்க்கவில்லை... சம்யுவை பார்க்க, அவளோ அவன் தீண்டியதில் அருவருப்பில் திரும்பி இருந்தாள். 


      "என்ன சம்யு இது... நீயா வீட்டுக்கு அட்ரஸ் கொடுத்து வர சொல்லிட்டு. இப்படி ஆரவ் வைத்து அடிக்க செய்யற. நான் பரிசு கொடுக்க வந்தது தப்பா..." என்று பேசியவன்,


"இதே ஆரவால உன் வாழ்வு மொத்தமும் அடங்கி போனதுனு சொன்ன... நீங்க ஒன்று சேர்ந்தா சொல்ல வேணடியது தானே. நான் லண்டனில் நாம இருந்த ஓட்டுதலில் எப்பவும் போல ஹக் பண்ணிட்டேன். ஐ அம் சாரி ஆரவ். சம்யு தனியா சந்திக்கலாம் பை." என்று நகர்ந்தான். 


       "அவன் கொடுத்த கிப்ட் எதுக்கு வாங்கின. நேற்று தான் என்னோட ஆபிஸ் ஆட்கள் பார்ப்பாங்க என்று பேசின. இங்க யாரு இருக்கா. 


     எப்பவும் போல ஹக் பண்ணிட்டேனு சொல்லறான். வாட் இஸ் திஸ்.... எது நடந்தாலும் ஆரவ் கேனயன் நம்மை ஏற்றுப்பான் அப்படி தானே.." என்று ஆரவ் ஒரெட்டு முன் வர, 


    "இல்லை ஆரவ்... அவன் இங்க எப்படி வந்தான் எதுக்கு கிப்ட் கொடுத்தான் தெரியலை. அவன் லண்டனில் தான் இருந்தான். இங்க எப்படி?" என்று விழி பிதுங்கி கலங்கி போனாள். 


      "சோ அவன் எங்க இருந்தானு தெரிஞ்சி வைத்திருக்க. பட் நான் இருக்கற இடம் தெரியாது. என்னை தேடி வரணும்னு தெரியலை அப்படி தானே.... 


      இப்ப தோன்றுது டி. ஜனனியை  கல்யாணம் பண்ணியிருந்தாலும் எனக்கென்ன என்று தானே இருந்து இருப்ப, நானா தாலி கட்டி, உன்னை இப்பவும் கெஞ்சிட்டு இருக்கேன். நீ உன் ஆபிஸ்ல இருந்த அதே திமிராவே தான் இருக்க." என்று பொருமினான். 


      "நான் திமிரா இருக்கேனா ஆரவ். நீ அறைந்த அதை ஏற்றுக்கிட்டு இருக்கேன். அத்தை செய்ய சொன்னதை செய்தேன். நீ என்ன தீண்டினப்ப பணத்தை வீசியெறிந்து தாம்பத்தியத்தை கொச்சைப்படுத்தினப்ப எல்லாம் அமைதியா தானே இருந்தேன். 


      இப்ப பேசறது சகிக்கலை ஆரவ். திவேஷ் முதலில் இருந்தே நம்ம லைப்ல குறுக்கே வர்றான் அது தெரிஞ்சும் நீ இப்படி பேசற... வலிக்குது ஆரவ். என்னை கஷ்டப்படுத்தாதே. நீ எங்க இருந்த என்று உங்க வீட்டுக்கு பல முறை வந்தவ நான். அத்தை ஒரு முறை விரட்டி இருக்காங்க. சந்துரு அப்பா விரட்டி இருக்கார். சும்மா என்னை சொல்லாதே. நான் இன்னமும் அதே சம்யு தான். நீ தான் காயப்பட்டதில் மாறியிருக்க. என்னை விரும்புவதில் தடுமாற்றம் இருக்கு. உனக்கு என் அப்பா பிடிக்கலை என்று தானே அவரு விட்டுட்டு அடியோட வந்துட்டேன். அப்பவும் என்னை காரணம் சொன்னா என்ன அர்த்தம் ஆரு. 

   

    திவேஷ் காலை சுத்தற பாம்பா இருந்தா நான் என்ன பண்றது. நீ கூட தான் எங்க அப்பா ஆபிஸ்ல ஜனனியை வேலைவிட சொல்லிட்டு உன்னோட ஆபிஸில் வேலைக்கு எடுத்து இருக்க. தப்பா எடுத்துக்க என்றால் நானும் எடுத்துக்கணும். பட்.." என்று தொடர்வதுக்குள்,


      "நிறுத்து டி. என்னடா... சைலண்டா இருக்கியே... பார்த்தேன். நான் ஜனனியை வேலைக்கு எடுத்தது வரை தெரிந்து இருக்க, என்ன ஸ்பை வைத்துயிருக்கியா...? உங்கப்பாவை விட்டு வந்ததா சொல்ற... அப்பறம் எதுக்கு டி திரும்ப டிராமா ஆடறான். எங்கம்மா வேலை செய்யற  ஹாஸ்பிடலில் அடமிட் ஆகி அட்டாக்னு படுத்திருக்கான்." என்று குரலை உயர்த்தினான். 


     "ப்ளிஸ்... ஆரு... நீ பேசறது சரியில்லை. அவன் இவன்னு பேசி உன் கேரக்டரை சீப்பாக்காதே. உன் மேல மரியாதை இருக்கு. சந்துரு அண்ணா சொன்னார். நீ அப்பா கொடுத்த எத்தனை கஷ்டத்துக்கும் பொறுமையா பிகேவ் பண்ணி இருந்த. இப்பவும் கொஞ்சம் மற்றவங்க மனநிலையில் இருந்து யோசி." என்றாள் சம்யுக்தா. 


      சம்யுக்தா போன் மணி அடிக்க சுபாங்கினி என்றதும் அட்டன் செய்தாள். 


    "எங்க இருக்க சம்யு?" என்றதும் 


     "வீட்ல அத்தை... என்னாச்சு...?" என்று ஆரவை பார்த்து கேட்டு முடித்தாள். 


    "வீட்டிலையா...? சம்யு உங்கப்பா சீரியஸா இருக்கார். நான் ஒர்க் பண்ற ஹாஸ்பிடலுக்கு உடனடியா கிளம்பி வா. ஆரவிடம் சொல்லி அரை மணி நேரமாகுது. என்ன பண்றிங்க." என்று கத்தவும். 


      "அத்தை.... வ... வர்றேன் அத்தை." என்றவள் ஆரவை பார்க்க, சுவாமிநாதன் பிளான் செய்து நடத்தும் நாடகம் அதற்கு இவள் செல்கின்றாளே என்ற சினம் அதிகமாகியது ஆரவிற்கு.


      "அதான் போறேன்னு சொல்லிட்டல.... கிளம்பு... அப்படியே திவேஷோட போடி. இனி இந்த வீட்டுக்கு வந்திடாதே. போனமுறை லண்டன்... இப்ப அமெரிக்கா போ." என்றவன் தாலியை கழட்டி வீசியெறிய அது பூஜையறை வாசலில் விழுந்தது. 


      எதிர்பாரா கோபம் அதை செய்து முடித்தப்பின் ஆரவிற்கே அதிகப்படியாக தோன்ற விறுட்டென்று வெளியேறினான். 


      சற்று நேரம் அந்த தாலியை விழியகற்றாமல் பார்த்தவளின் கண்கள் நீரோடையாய் வழிந்தது. 


     தாலியை எடுத்து தொட்டு பார்த்தால் அது தங்கத்தில் மினுமினுத்தது. அதை வருடி எடுத்தணிந்து கொண்டு விரைந்தாள். 


       ஆரவிற்கு கோபம் மட்டுப்படும் வரை காரில் பயணித்தவன். கடல் மணலருகே வண்டியை நிறுத்தினான். 


      ஆரவின் உள்ளக்கடலில் சினமே வந்து வந்து போக, அவன் கோபம் போலவே கடலலையும் வந்து வந்து மோதியது. 


     நீரில் உள்ளிறங்கி தன் நெஞ்சு பகுதி வரை நீரில் நின்றவன், "சாகவும் முடியலை டி. நான் இல்லாம நீ... நீ வாழ மாட்ட டி." என்றவன் அந்த கடலலை ஆர்ப்பரிக்கும் ஒலிக்கு நிகராக கத்தி முடித்தான். 


     "உன்னை பேசியதுக்கு மன்னிப்பியா... டி... அய்யோ... கடவுளே..." என்றவன் சுவாமிநாதனின் நிலை புரிபட, வீட்டுக்கு விரைந்தான். 


      அங்கே தாலி வீசியெறிந்த இடம் அங்கே அது இல்லாமல் போக, யுக்தாவை தேடினான். 


   அவளும் இல்லாமல் போக, சம்யுவின் போன் அலறவும் அதை எடுத்தாள். 


     "ஹலோ..."

    

     "ஆரவ்.... கொஞ்சம் சீக்கிரம் வா..." என்று அணைத்திட ஆரவ் உடைமாற்றி கிளம்பினான். 


    எப்படியும் சம்யுக்தா மருத்துவமனை சென்றிருப்பாளென நம்பி ஆரவ் அங்கு செல்ல, அங்கு சுபாங்கினி கையை பிடித்து மன்னிப்பு வேண்டிக் கொண்டிருந்தார் சுவாமிநாதன். 


     "சம்யு எங்கடா...?" என்றான் சந்துரு. 


      "இங்க வரலையா....?" என்றான் பதட்டத்தோடு. 


     "இல்லையே என்னாச்சு..." என்றதும் ஆரவ் நடந்தவையை சொல்ல சந்துரு தலையில் அடித்துக் கொண்டு வரவேற்பறையின் சேரில் அமர்ந்தான். 


      "ஆரவ் நீயாவது போய் பேசு." என்று சந்துரு கூற அவன் மாட்டேன் என்று மறுக்க, சுபாங்கினி வந்து, ஆரவ் தோளில் தட்டி... சம்யு எங்க? சரி முதல்ல அவரை பாரு. சிகிச்சை வேண்டாம்னு அலப்பறை பண்றார். போய் பேசு...." அனுப்ப, ஆரவ் என்ன சொல்ல அவர் மகள் இங்க வரவில்லையே.... என்று கவலையில் சென்றான். 


    சுவாமிநாதன் அருகே சென்றதும், எ....ன்...னை மன்னிச்சுடுங்க. உ...ங்க காத...லை பிரிக்...க முயன்..றது நானும் திவேஷும் மட்டும் தான். நடந்தவையில் எதுவும் சம்யுக்தாவுக்கு தெரியாது. 


     உங்களை போல திவேஷ் மிமிக்ரில பண்ணுவான். மருத்துவமனையில் ஜார்ஜ் போட்டிருந்த உங்க போனை திருடி உங்க போனில் இருந்து வந்ததா வாட்ஸப்ல சம்யுக்கு நீங்க அனுப்...பியத நாங்க அனுப்பியது. அதை பார்த்தும் சம்யுக்தா நம்பலை... சம்யுவுக்கு நீங்க கொடுத்த சிம் கூட நான் விபத்தில் போன் கிடைக்கலைனு சொல்லி அதை நான் தான் வச்சி இருக்கேன். அந்த கள்ளி செடி.. படம் போட்ட.. மெசேஜ் எல்லாம் நான் திவேஷ் அனுப்பியது. 


          அன்னிக்கு கூட திவேஷ் நீங்க வருவதை பார்த்து தான் ஏர்போர்ட்டில் பேசினான். அவன் விருப்பத்தை சொல்ல அதுக்கு பதில் சொன்ன சம்யுவோட பேச்சில் தான் நீங்க தவறா.. நினைச்சிக்கிட்டீங்க.. இப்ப கூட அவன் வந்து குழப்பம் செய்யணும் என்றே  வந்து இருக்கான். முன்ன விட இப்ப என் மேலயும் கோவம்.'' என்றவரின் மூச்சு விட சிரமம் பட்டு மயங்கி கொண்டே, சம்யுக்தாவை தண்டிக்கக்காதீங்க மாப்பி.. ள்ளை'' என்றவர் கைகள் அவன் காலில் தொட செல்ல அப்படியே பெட்டில் இருந்து கீழே விழ பார்த்தார். 


 ஆரவ் அவரை பிடித்து நிறுத்தி சிகிச்சை அளிக்க சொன்னான். 


இந்த யுக்தா எங்க போனாள்? என்றே ஆரவ் யோசிக்க அந்த இடமே அமைதியாக மாறியது. 


-வரையனல் தணிய தீவிகை ஒளிரும். 


-பிரவீணா தங்கராஜ்.


         hi 

சிரமமில்லாமல் சில கதைகள் யாரும் படிக்கலையா.... டேக் பண்ண சொன்னீங்க. ஆனா வியூஸ் இல்லையே. 25 members than read பண்ணறீங்க. என்ன காரணம் சொல்லிட்டு போங்க. 

Comments

Post a Comment

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு