தீவிகை அவள் வரையனல் அவன்-22

 


🪔🔥-22

    சாப்பிட அமர்கையில் அந்நிகழ்வு தோன்ற தான் செய்தது. அதனை மறக்க முனைந்து அவளை காண யுக்தா பாதி சாப்பாட்டை வைத்ததும் நகர்த்தி வைக்க அங்கே பரிமாறப்பட்டவை எல்லாமே அன்று உண்ட அதே வகைகள்.

    ஆரவ் யுக்தா கண்கள் சேர்ந்து தங்கள் பழைய நினைவை அசைப்போட்டது.

    ஊட்டி சென்ற முதல் நாள் மதியம் அளவுக்கு அதிகமாகவே யுக்தா தட்டில் உணவு அதிகமாகயிருக்க, "ஆரு... எனக்கு இது அதிகம். நிறைய சாதம் வேஸ்ட் ஆகிடும்" என்று சொல்லவும்,

      "நாம ஷேர் பண்ணிக்கலாம்." என்றவன் யுக்தாவின் இதழில் இருந்து உதிர்ந்த உணவோடு சேர்த்து சாப்பிட்டாரன்.

   ஒரு தட்டில் காதலர்கள் உண்டார்கள். ஆரவ் அவனாக எடுத்து ஊட்டவும் யுக்தா கண்கள் பனித்தது.

     "சந்தோஷமா இருக்கேன் ஆரு. அம்மா கையில் சாப்பிட்ட திருப்தி. உன்னிடம் கிடைத்து இருக்கு. லவ் யூ ஆரு." என்று நெஞ்சில் சாய்ந்தவள் கண்களை ஆரவ் துடைத்து விட்டான்.

       இன்றும் அதே நினைவோடு கண்கள் பனிக்க, ஆரவோ கையை உதறி எழுந்துக் கொண்டான்.

    யுக்தா இம்முறை கூடவே எழுந்துக் கொள்ளாமல் இருக்க, ஆரவ் தான் இழுப்புக்கு வராது நின்றான்.

      அங்கே சுபாங்கினி, சந்துரு, வைஷ்ணி என்று இடையில் கைவைத்து நிற்க, போட்டோக்காரரும் தலையில் கைவைத்து நின்றார்.

     "நம்ம கல்யாணத்துல இப்படி தான் ஊட்டி விட்டு சாப்பிடணும். நாம பண்ற சேட்டையில் போட்டோ எடுக்கறவன் தலையில் துண்டை போட்டு விழிக்கணும்" என்ற பேச்சும் யுக்தா அன்று பேசியது இன்று போல தோன்ற அவளோ உண்பதில் தீவிரமாக ஆரவ் அமர்ந்தான்.

       யுக்தா எடுத்து ஊட்ட புகைப்படக்காரருக்காக வாயை திறந்தான்.

     யுக்தாவின் பார்வை துளைத்து எடுக்க ஆரவ் அவன் பாட்டிற்கு சாப்பிட்டான்.
   
    என்ன இம்முறை புகைப்படக்காரர் விழித்து முழிக்க, சந்துருவோ "நீங்க போய் சாப்பிடுங்க அவன் இப்ப இந்த உலகத்தில் இல்லை" என்று அனுப்பி வைத்தான்.

    சுபாங்கினியோ மனம் நிறைவாக இடத்தை விட்டு அகன்றார்.

   வைஷ்ணவி வாயை பிளந்து நின்றாள்.

    "என்னங்க இது... அண்ணா ஒரு வாய் வாங்க அப்படி யோசித்தார். இப்ப என்ன இலையில் இருக்கறதை அண்ணி கொடுக்க கொடுக்க, சாப்பிட்டார். இதுல உற்றுனு முக ரியாக்ஷன் வேற... இதான் அன்னிக்கு சொன்னிங்களா..? அண்ணா அதெல்லாம் வேற கல்யாணத்தை ஏற்றுக்க மாட்டருனு?" என்று கேட்டதும் ஆரவ் திரும்ப, இலையை கண்டு விழிங்கினான். 

     "சந்துரு அண்ணா.... எனக்கு கொஞ்சம் போல ரைஸ்" என்று கேட்க சந்துரு வைக்கவும் உண்டவள் "ஐஸ்க்ரிம் எனக்கு ஸ்டாப்பெர்ரி பிளேவர் அண்ணா... அவருக்கு பிஸ்தா" என்றதும் ஆரவ் இதற்கு மேல் பொருக்காது யுக்தாவின் லெகங்காவில் முடிச்சிட்ட தன் உடையை அவிழ்த்து எழுந்து சென்றான். 

        யுக்தா இருந்து அதனை சுவைத்து முடித்தவள் கடைசி வாயை உண்ட கணம் ஆரவை பார்க்க, அவனோ இம்மியளவு இந்த பக்கம் திரும்ப மனமின்றி நின்றான்.

      அன்று கடைசி ஐஸ்க்ரிம் உண்ட பொழுது அவளின் உதட்டை பட்டும் படாமலும் ஒற்றி செய்தவையை எண்ணி வேகமாக மண்டப ஹாலை விட்டே வெளியேறினான்.

       சுவாமிநாதன் மகள் வெளிவரும் பொழுது பார்க்க காத்திருக்க, ஆரவ் மட்டும் விறுவிறுவென நடந்து செல்வதை கண்டு பயந்தார்.

       எப்படியும் ஆரவ் தன் மகளை கொலை செய்பவன் அல்ல... யுக்தா மீது அளவற்ற காதல் கொண்டவன். அதனால் அவனின் மிரட்டுதல் வெறும் குழந்தைக்கு விடுக்கும் மிரட்டலாக எண்ணியிருந்தார். 

     ஆரவ் தனித்து செல்வதை கண்டதும் மகளை அம்போவென விட்டு செல்கின்றானோ என்றே தவறாகயெண்ணி வருந்தினார்.

      ஏற்கனவே சம்யு பேசுவதில்லை... தன்னை பற்றி பிம்பம் கெட்டவனாக போன வருத்தம், மகள் பிறந்த நாளுக்கு கொடுத்த பரிசை கூட திருப்பி தந்தது. இதில் தன்னை அந்த வீட்டில் இருந்து வெளியேற்றி மகளின் உன்னத அன்பை இழந்ததென்ற வலியில் துடிக்க, இன்று ஆரவ் இப்படி தனியாக விட்டு வெளியேறுவதை கண்டதும் இதயம் இன்னமும் சுருக்கென வலியை நெஞ்சில் தைத்தது.

      ஆரவ் சென்றதால் மற்றவரும் காரில் கிளம்ப எண்ணி வெளியேற, சந்துரு கண்ணில் சம்யு அப்பாவின் கார் தென்பட்டது.

     "சம்யு உங்கப்பா இன்னும் போகலை...  ஆரவ் தான் இல்லையே... பேசிட்டு வா மா." என்றான் சந்துரு.

     அந்த பக்கம் திரும்பாமலே எங்கப்பா எப்பவோ இறந்துட்டார் அண்ணா. நான் இப்ப ஆரவ் மனைவி மட்டுமே.. வண்டியை எடுங்கண்ணா." என்று சொல்லி அந்தப்பக்கம் காணாது இருந்தாள்.

     சந்துரு அவர் முகம் வருத்தப்பட்டு அழைப்பதாக எண்ணி வண்டியை எடுத்தான்.

     சுபாங்கினி அதன் பின் பார்க்க, சம்யுவின் அப்பா முகம் தான் காணமுடிந்தது.

    கொஞ்சம் தள்ளி செல்ல செல்ல சுபாங்கினி மனத்திரையில் சம்யுக்தா அப்பாவை ஓட்டி பார்க்க, மாப்பிள்ளை வண்டியை நிறுத்துங்க. அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து இருக்கு. வண்டியை திருப்புங்க." என்றதும் சந்துரு சம்யுக்தாவை பார்த்தான்.

      "அய்யோ அத்தை ஏற்கனவே இந்த மாதிரி அட்டாக் வந்தது போல நடித்து இருக்கார். அதனால இதுவும் நடிப்பு. அண்ணா வண்டியை எல்லாம் நிப்பாட்ட வேண்டாம் வீட்டுக்கு போங்க. ஆருதான் மனசுல பழையதை போட்டு தவிச்சுட்டு இருப்பார்." என்று சம்யுக்தா சொல்லவும் சந்துரு நிறுத்தாமல் காரை ஓட்டினான்.

      "அய்யோ சம்யுக்தா... நிஜமாவே வியேர்த்து இருந்தது. மாப்பிள்ளை நீங்க நிறுத்துங்க... நான் ஒரு எட்டு பார்த்துட்டு வர்றேன். நிறுத்துங்க..." என்றதும் சந்துரு முழித்தவன் வண்டியை திருப்ப முயற்சிக்க, "அத்தை ப்ளிஸ்... என்னால ஆரவ் பட்டது போதும். புதுசா அவர் ஆடுற டிராமாவை பார்க்க வந்தேன். என் ஆரவ் நிஜமாவே என்னை விட்டு விலகிடுவார். தயவு செய்து வீட்டுக்கு போலாம். அவருக்கு ஒன்றும் ஆகாது எல்லாம் நடிப்பு." என்றதும் சந்துரு ஆரவ் வீட்டை நோக்கி காரை செலுத்தினான்.

    சுபாங்கினி செவிலி என்பதால் சுவாமிநாதனின் முகம் காட்டி கொடுத்த பிணியை அவளால் அறிந்திட முடிந்தது. அதை சொல்லி புரியவைக்க தற்போது தன்னால் இயலாதவொன்று என்று சம்யுக்தாவை இறக்கிவிட்டு  சந்துரு வீட்டில் இன்று தங்குவதாக சொல்லி கிளம்பினார் சுபாங்கினி.

      சந்துரு சம்யுக்தாவை விட்டுவிட்டு  சுபாங்கினியை அழைத்து செல்ல, வைஷ்ணவி சந்துருவிடம் என்ன என்று விசாரிக்க, "எதுக்கு அத்தை இப்ப மண்டப ஹால் வரை போகணும் அவர் இந்நேரம் போயிருப்பார்." என்றதும் வைஷ்ணவிக்கு புரிந்தது.

     "இல்லை மாப்பிள்ளை அவருக்கு பிரச்சனை என்று தெரிந்தும் சும்மா போக முடியாது. என் தொழில் டாக்டர் இல்லை ஆனா நர்ஸ். உடல்நிலை குறைவா இருக்கறவங்களை தேற்றி விடறது தான்.  நீங்க போங்க... அப்படி அது நாடகம் என்றாலும் பரவாயில்லை. அதை அப்பறம் பார்த்துக்கலாம்." என்றதும் சந்துரு அவ்விடம் வந்து சேர,  சுவாமிநாதன் கார் அங்கே நின்றிருந்தது.

    சந்துருவிற்கே ஒரு பதட்டம் ஒட்டிக் கொண்டது. சுவாமிநாதன் தலை ஒரு பக்கம் சாய்ந்து தன்னிலை மறந்தவராக கிடந்தது.

      கார் கதவை திறக்க சுவாமிநாதன் மயங்கி சரிந்தார். சுபாங்கினி உடனடியாக அருகே இருந்த மருத்துவமனையில் சேர்த்து விட முனைந்தார்கள். அது சுபாங்கினி பணிப்புரியும் மருத்துவமனையும் கூட.

     விரைவாக சிகிச்சை அளித்து பார்க்க அவர் ஐசியூவில் சேர்க்கப்பட்டார்.

      நான் இங்க இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. இது நான் ஒர்க் பண்ற இடம் எதுனாலும் நான் பார்த்துப்பேன்." என்று திடமாய் கூறவும் சந்துருவும் வைஷ்ணவி கருவுற்ற காரணத்தால் அழைத்து சென்றான்.

    என்ன இந்நேரம் சம்யுக்தாவிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று முடிவு எடுத்தார்கள். என்ன இருந்தாலும் வருத்தப்படுபவள் அல்லவா. 

     ஆரவ் ஹாலில் ரிசப்ஷன் உடையிலே இருக்க, சம்யு பதமாக பாதத்திற்கு வலிக்குமோ என்று மெல்ல அடியெடுத்து நடந்து சென்றாள்.

     "நில்லு... எதுக்கு அந்த கிப்ட் வாங்கின? நான் அன்னிக்கு அவளோ சொல்லியும் புரிந்துக்க முயற்சி பண்ணலைல நீ..." என்றான்.

      "இல்லை ஆரு... அப்.. அவர் ஆபிஸ் ஸ்தானத்தில் கொடுத்தா..."
   
     "ஏய்... ஆருனு சொன்ன பல்லை தட்டிடுவேன். அப்பானு சொல்ல வந்த அப்படியே வெளியே போடி. ஆபிஸ் பழக்கமா அப்படின்னா அதை என்னிடம் கொடுக்கணும். உன்னிடம் கொடுக்க காரணம். என்ன நீ போ.. பின்னாடியே வயது ஏற்றம், உடல்நிலை காரணம் காட்டி வந்து நான் மன்னிப்பு கேட்டு கொள்றேன்னு சொன்னானா அந்தாளு.

    இங்க பாரு... என் மனைவி ஸ்தானம் மட்டும் இருக்கறதா இருந்தா இங்க இரு. இல்லை தாலி கழட்டி கொடுத்துட்டு கிளம்பிட்டே இரு." என்றான்.

    "நான் ஆருன்னு தான் சொல்வேன்.  அந்தாளை இனி அப்படி அழைக்க மாட்டேன் போதுமா. அத்தோட இனி யாரிடமும் பரிசு வாங்க மாட்டேன்.

   நீ சொல்வது போல உடல்நிலை சுகவீனம் என்று முன்ன வந்தாலும் நான் ஏற்க மாட்டேன். எனக்கு என் ஆரு முக்கியம். எதுக்காகவும் இனி என் தாலியை கழட்டவோ, உன்னை விட்டு பிரியவோ நான் தயாராயில்லை." என்று அவளறைக்கு சென்று விட்டாள்.

    ஆரவ் ஸ்தம்பித்து நின்றான். கோபத்தில் தான் அந்தாளு என்ற வார்த்தை விட்டான். ஆனால் அது பெற்ற மகளுக்கு வலிக் கொடுக்கும் என்று தெரிந்தவன் தான். ஆனால்... என்னவோ சம்யு பேசியது ஆறுதலாய் உணர்ந்தான்.

     அவன் ஜெயில் அவமானப்பட்ட கணமும், வேலைக்கு சென்ற பொழுது ஏற்பட்ட மரியாதையின்மையும் அவன் வாழ்நாளில் சுவாமிநாதனுக்கு மரியாதை தரக் கூடாது என முடிவெடுத்தான்.

     சம்யுக்தா சோர்ந்து போனாள். தன் வாழ்வில் தாயற்ற நிலையில் ஒரு முறை கூட தந்தை அந்த வெற்றிடத்தை எண்ணி பார்க்க விட்டதில்லை. எல்லாமே தந்தை நிவர்த்தி செய்து இருக்கின்றார். இந்த பணம் வைத்து பார்த்த ஏற்றதாழ்வில் ஆரவை அதளபாதாளத்தில் வைத்து எடைப்போட்டு தன் வாழ்வை அழிப்பார் என்று எண்ணவில்லை.

  முதலில் மறுப்பார் பின்னர் கொஞ்சம் கெஞ்சலோடு எடுத்துரைத்து ஏற்க வைத்திடலாம் என்று தான் எண்ணினாள். ஆனால் ஆரவை காயப்படுத்தியதில், வைஷ்ணவியை படுத்தியதிலும்,  அதிகமாகவே சம்யுக்தா காயம் அடைந்துவிட்டாள்.

     அறையில் உடைமாற்றி இருந்தவள் மெல்ல திரும்ப அங்கே ஆரவ் இருக்க, நகைகளை சுபாங்கினி அறைக்கு எடுத்து சென்று வைக்க போனாள்.

    ஆரவ் கைபிடித்து "வாட்டர் ப்ளிஸ்..." என்று சொல்லி விடுவிக்க, திகைத்த விழியில் வெளியே வந்தவள் உதடு முறுவலித்தது.

      நீரை எடுத்து வந்தவளின் முகம் பார்த்து வாங்கி பருகியவன், அவள் கையை விடுவிக்காது கன்னம் ஏந்தி  "என்னை விட்டு எங்கையும் போக மாட்ட தானே.... நீ என் யுக்தா தானே" என்றவனின் வார்த்தையில் அவனை அணைத்து கொண்டாள்.

     "நான் உன் யுக்தா மட்டும் தான் ஆரு..." என்று அழுதவளை அணைத்து ஆறுதல் படுத்தினான்.

    முத்தத்தின் கவிதைனை மொத்தமாய் சொல்லி கொடுக்க இனிய மனதோடு சங்கமித்தாள்.

-வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

-பிரவீணா தங்கராஜ். 

 hi ரீட் அண்ட் கமெண்ட்ஸ் பண்ற எல்லாருக்கும் நன்றிகள். 

Comments

Post a Comment

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1