Posts

Showing posts from February, 2022

துளிர் விடும் விடியல்

Image
                                            துளிர் விடும் விடியல்       ஞாயிறு மதியம் கறிக்குழம்பு அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது. அதை விடத் திவ்யபாரதி மனம் கொதித்தது. மற்றவர்களுக்குத் திவ்யா என்று நெருக்கம்.      தன்னைப் படிக்க வைக்காமல் தந்தை திருமணம் பற்றிப் பேச்சை எடுப்பது எரிச்சலை தந்தது.     தான் ஒன்றும் பார்டர் பாஸ் அல்ல. அதே நேரம் பத்திரிகையில் இடம் பிடிக்கும் முதல் தரமும் அல்ல. அறுபத்தியிரெண்டு விழுக்காடு பெற்ற மத்திய ரகம்.      அளவுக்கதிகமாகப் படிக்க வைக்கக் கேட்கவில்லை. சின்னதாய் பெயருக்குப் பின்னால் ஒரு டிகிரி. அது மட்டும் போதும். அதற்குப் பின் கண்ணை மூடி தந்தை கூறும் வினோத்தை திருமணம் செய்ய அவளுக்கு ஒப்புதலே. ஆனால் படிக்கவிடாமல் இப்படிப் பதினெட்டு அடியெடுத்து வைத்து விட்டாளென உடனே சந்தையில் விற்பது போல வரன் வந்தால் விற்பதா?       படிக்கின்றேன் என்று கூறி அடம் பிடித்தாயிற்று. காதில் வாங்காமல் அவர் பாட்டிற்கு இருப்பது இன்னமும் வெறுப்பை அதிகரித்தது.      மதியம் உணவு உண்ண தந்தை வந்திருந்தார்.     பெரிதாய் வியாபாரியோ, பிஸினஸ் மேன் என்றெல்லாம் இல்லை. ஆட்டோவோட்டும்

காயத்ரி

Image
                                                    காயத்ரி     இரண்டு பக்கமும் கொரனா தடுப்பு வைத்து அந்த தெருவில் பெரிய வாகனங்கள் போக விடாமல் அடைத்தனர்.     அந்த மூன்றடுக்கு கட்டிடத்தில் ஹாட் ஸ்பாட் போட்டு முடித்திருக்க, ஆம்புலன்ஸில் ஒருவரை ஏற்றி சென்றனர்.   மற்றவர்கறையும் முகமூடி அணிந்து கடத்தி சென்றனர். பார்க்க அப்படி தான் தோன்றியது. கவலை தேய்ந்த முகத்தோடு மூன்று கட்டிட மனிதர்களும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றனர்.     ஒருவருக்கு வந்த கொரானா மற்ற குடுத்தினருக்கு பரவுவதாக ஆய்வு செய்ய தனியாக பெரியவர்களை அழைத்து சென்றது. இருவருக்கு தொற்று ஊர்ஜிதமாக அவர்களை அங்கேயே பிடித்து வைத்து கொண்டனர். மற்ற இருவருக்கு இல்லையென அனுப்பி வைத்தார்கள். மேலும் இருவருக்கு தொற்று உள்ளது தங்களாகவே தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் இங்கே அதிக வார்டு இல்லையென கூறி சென்றனர்.    காயத்ரி அவர் கணவன் சிவகுமார் ஆஸ்பிடலில் தனிதனிப்பிரிவில் சிகிச்சை எடுத்தனர்.      காயத்ரி சிவகுமார் அருகே செல்ல முடியவில்லையே என்று கவலை தோய்ந்து இருந்தார். வளர்ந்த இரு பெண்கள் ஓசூரில் கல்லூரி படிக்க சென்றிருந்தனர். இருவரும் சேர

தீர்ப்பெழுதிய பேனா

Image
                                   தீர்ப்பெழுதிய பேனா               ராமமூர்த்தி தன் மகள் ராதாவை அணைத்து அழுதுக்கொண்டு, "இந்த இடம் எங்களோட காட்டை வித்து, இருக்கிற கை காசு போட்டு, குருவி சேர்க்கிற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து, இந்த நிலத்தை வாங்கினோம். முன்ன சீண்டுவார் யாருமில்லாதப்ப வாங்கிப் போட்டது. இப்ப இந்த இடத்துல ஸ்கூலு, காலேஜி, காம்பிளக்ஸ், அடுக்குமாடி கட்டிடம் வரப்போகுதுனு தெரிந்ததும் இப்படி அநியாயமா கைக்கு மீறி காசு கேட்கறிங்க. இதை கட்டி முடிக்க இவ்ளோ ஆகும்னா... பேசாம ஒரு குடிசை வீடா போட்டுயிருப்பேனே சாமி. என்னை விட்டுடுங்க" என்று தழதழத்து கூறி முடித்தார்.    எதிரில் இருந்தவர்களோ "இங்க பாருங்க ராமமூர்த்தி ஐயா. நீங்க உங்க நிலத்தை கட்ட கொடுத்த காசுக்கு குடிசை வீடு தான் கிடைக்கும். இங்க நிமிர்ந்து பாருங்க. நாலடுக்கு வீடா மாற்றி கட்டியிருக்கேன். எங்களுக்கு எங்க பங்கா பணத்தை எடுத்து கொடுங்க. வாங்கிட்டு போயிட்டே இருப்போம். இல்லை மொத்தமா வேண்டும் இது என் நிலம் அப்படியிப்படி வீராப்பு பேசினா ஒரு செங்கல் கூட கிடைக்காது.    இதை கட்ட செலவான கோடிகளை கணக்கு எடுத