நீ என் முதல் காதல்-34
அத்தியாயம்-34 ம்ருத்யு தன் காரில் வாட்டர் பாட்டிலை தேடி முடித்து தண்ணீர் இல்லையென்றதை அறிந்து பாட்டிலை கவிழ்த்து "பச்'' என்று வாட்டர் பாட்டிலை வீசியெறிந்தான். "அதான் எதிர்க்க கடல் இருக்கே போய் தண்ணி குடிக்க வேண்டியது தான?" என்று ஸ்ரீநிதி குரலில் அவளை துளைக்கும்படி பார்வையிட்டான். தன் முதுகு பக்கம் இருந்த ஜிப்பை போடாமுடியாது துழாவி, இவனிடம் வம்பளந்து கொண்டிருந்தாள். "மீனா இருந்தா கடல் நீரை குடித்திருப்பேன். உன் ம்ருத்யுவா இருக்கறதால.... உன்னை தான் பருகணும்" என்று மீண்டும் உதட்டை முத்தமிட்டு முடித்தான். மறுபக்கம் தானாக கைகள் முதுகுப்பக்கமிருந்த அவளின் ஜிப்பை மாட்டி முடித்தான். "திரும்ப கழற்றியோனு நினைச்சேன்." என்று உதடு விடுபட்டதும் ஸ்ரீநிதி உள்ளுக்குள் போன குரலில் உதிர்த்தாள். "இரவு நமக்கு சாதகமா இருக்கலாம். பகல் நமக்கு பாதகமா போயிடுச்சே. என்ன தான் காருக்குள்ள நடக்கறது வெளியே தெரியாது என்றாலும் நேற்றிரவு சுத்தி இருட்டு மட்டும் கண்ணுக்கு தெரிந்தது. என் போக்கஸ் முழுக்க நீ மட்டும் இருந...