நீ என் முதல் காதல்-34

 அத்தியாயம்-34

   ம்ருத்யு தன் காரில் வாட்டர் பாட்டிலை தேடி முடித்து தண்ணீர் இல்லையென்றதை அறிந்து பாட்டிலை கவிழ்த்து "பச்'' என்று வாட்டர் பாட்டிலை வீசியெறிந்தான்.

   "அதான் எதிர்க்க கடல் இருக்கே போய் தண்ணி குடிக்க வேண்டியது தான?" என்று ஸ்ரீநிதி குரலில் அவளை துளைக்கும்படி பார்வையிட்டான்.
   தன் முதுகு பக்கம் இருந்த ஜிப்பை போடாமுடியாது துழாவி, இவனிடம் வம்பளந்து கொண்டிருந்தாள்.

  "மீனா இருந்தா கடல் நீரை குடித்திருப்பேன். உன் ம்ருத்யுவா இருக்கறதால.... உன்னை தான் பருகணும்" என்று மீண்டும் உதட்டை முத்தமிட்டு முடித்தான்.
   மறுபக்கம் தானாக கைகள் முதுகுப்பக்கமிருந்த அவளின் ஜிப்பை மாட்டி முடித்தான்.

     "திரும்ப கழற்றியோனு நினைச்சேன்." என்று உதடு விடுபட்டதும் ஸ்ரீநிதி உள்ளுக்குள் போன குரலில் உதிர்த்தாள்.

      "இரவு நமக்கு சாதகமா இருக்கலாம். பகல் நமக்கு பாதகமா போயிடுச்சே. என்ன தான் காருக்குள்ள நடக்கறது வெளியே தெரியாது என்றாலும் நேற்றிரவு சுத்தி இருட்டு மட்டும் கண்ணுக்கு தெரிந்தது. என் போக்கஸ் முழுக்க நீ மட்டும் இருந்த. இப்ப சுத்தி வெளிச்சம். காருக்குள்ள நடப்பது தவிர்த்து எனக்கு இந்த மேகம் கடல் காற்று, எல்லாமே தெரியுதே.நீ பக்கமிருந்தா, நீ மட்டும் தான் எனக்கு தெரியணும்." என்று பேசியவன் ஸ்ரீநிதிக்கு புதிதாக தோற்றமளித்தான்.

    "எனக்கு பசிக்குது. வீட்டுக்கு போகலாம்." என்று கூறியவள் தலையை கொண்டையிட ஆரம்பித்தாள்.

    ம்ருத்யு டீ-ஷர்டை எடுத்து அணியும் போது, அணில் கோடுகளாக கீறல் அவன் முதுகில் இரத்த வடுவாய் இருந்தது.

    ஸ்ரீநிதி மெதுவாய் முதுகை தீண்ட அதற்குள் ம்ருத்யு டீஷர்ட் அணிந்து விட்டான்.

   "என்னதுடா இது? நா...நானா?" என்று கேட்டு விட்டு திகைத்தாள்.
   "பின்ன நேத்து ராத்திரி வேற எந்த பேயும் வரலை. இந்த பிசாசு மட்டும் தான் என்னை பிராண்டியது.
   வேண்டாவெறுப்பா கீறியிருந்தா நேத்தே வீட்டுக்கு போயிருப்போம். நீ வேண்டுமின்னு கீறினியா. அதோட காயம்" என்று கண்சிமிட்ட, ஸ்ரீநிதியோ வாயடைத்து போயிருந்தாள்.

   "வீட்டுக்கு போகறவரை உனக்கு பொறுமையில்லை. முதல் கூடல் என்னை அறியாம கீறியிருப்பேன். இருக்கட்டும் இதான் உனக்கு பனிஷ்மெண்ட். இப்படி அவசரப்பட்டா  இதான் நடக்கும். பாட்டி ஒரு பழமொழி சொல்வாங்க. குக்கிங் முடியற வரை வெயிட் பண்ணினவனுக்கு  அது..அது.. என்னவோ சொல்வாங்களே" என்று இடது கையால் தலையை சொறிந்தாள்.

  "ஆக்கப்பொறுத்தவனுக்கு ஆறப்பொறுக்கலையானு சொல்வாங்க. மீல்ஸ் ரெடி பண்ணற வரை வெயிட் பண்ணினவன். அது சூடாறதுக்கு முன்ன சாப்பிட கை வச்ச கணக்கு' அம்மா சொல்வாங்க. மேபீ பாட்டி சொன்னது தான்." என்று ம்ருத்யு காரை இயக்கினான்.

   ஸ்ரீநிதியோ "அதேதான்" என்றவள் கார் கதவு பக்கம் திரும்பிக்கொண்டாள்.
'நானா? ம்ருத்யுவிடம் இணக்கமாய் நடந்தது. அவனை விட்டு விலக பிடிக்கவில்லை. அவன் மீது கோபமும் துளிர்க்காமல் இசைந்தேனா? என்ற ஆச்சரியத்தோடு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

  முதலில் வந்ததும் வயிற்றை நிறைத்து கொண்டு மீண்டும் ம்ருத்யு ஸ்ரீநிதியிடம் தேடலை துவங்கியிருக்க, ஷண்மதி வாய்ஸ் மெஸேஜில் 'நாங்க ரீச் ஆகிட்டோம்.' 'ரசீகாவோட பொண்ணு பங்ஷன் ஆரம்பிக்குது.' 'போட்டோஸ் செண்ட் பண்ணறேன்.'
   'நீங்க எப்ப வீட்டுக்கு போனீங்க?' என்றதற்கு பதில் கூட அனுப்பாமல் இரண்டு பேரும் முக்கியமான விஷயத்திற்குள் மூழ்கியிருந்தார்கள்.

  அதன் பின் அடிக்கடி மெத்தையில் மல்யுத்தம் நடைப்பெற்றது.
  
     ம்ருத்யு ஸ்ரீநிதி தங்களுக்கு பேசி புரிந்துக்கொள்ள வேண்டிய அவசியமேயில்லை. ஏற்கனவே ஒன்றுவிடாமல் லண்டனிற்கு வீடியோ கால் போட்டு மணிக்கணக்கில் பேசியவள் தானே.
   என்ன இருவருக்குள் இருக்கும் இந்த புது உணர்வு அவர்களுக்குள் இருந்த காதலின் உடன்பிறப்பான காமத்தை பற்றி பேசிக்க வைத்தது.
 
     நிறைய உடல் மொழியால் பேசிக்கொண்டார்கள் எனலாம். ம்ருத்யுவிற்கே ஆச்சரியம் இருந்தது. ஸ்ரீநிதியின் மாற்றம். ஆனால் அவளுக்கு தன்னிடம் முன்பே தயக்கமென்பது கிடையாது. காதல் என்று தான் அவனிடம் அவளுக்கு பிறக்கவில்லை.

   அந்த வருத்தம் கொஞ்சம் இருந்தது. ஜீவியை விரும்பியிருக்க, தன் மீது எந்த எண்ணமும் வரவில்லையா? என்றது தான்.

  அதை கேட்க வேண்டுமென்று மனம் உந்தியது. ஏதாவது கேட்டு ஏதாவது ஏழரையாக போய் விட்டால்?

    இப்ப கூட நான் இணைந்து வாழறது உனக்காக இல்லை. எங்கம்மா அப்பாவுக்காக. அதோட உன் பிளாஸ்பேக் கொஞ்சம் பாவப்பட்டுடுச்சு என்று கூறிவிட்டால்? அதே கலக்கத்தோடு வாழ்நாள் முழுவதும் இருக்க அவனால் முடியுவில்லை.

    அவளை பார்த்து பார்த்து பேச்சை தவிர்க்க, "என்னடா எதுக்கு அடிக்கடி லுக் விடற?" என்று வந்தாள்.

   "ஒன்னுமில்லை. ஏதாவது கேட்டு நீ ஏதாவது சொல்லிடுவ. அதுக்கு ஆசையை மறைச்சி வச்சி நான் பழைய ம்ருத்யுவா இருந்துக்கறேன்." என்றுரைத்தான்.

   "அதென்னடா பழைய ம்ருத்யு. அப்ப முன்ன நிறைய ஒளிச்சி மறைச்சி என்னோட பழகினியா?" என்று கேட்டாள் பிசாசு.

   "என் காதலை மட்டும் தான்டி உன்னிடம் மறைச்சேன். மத்தபடி நடிச்சி பழகலை." என்றான்.

  "அப்படின்னா இப்ப ஏதோ மறைக்கிறியா? ஏன்னா உன் முகம் அடிக்கடி தயக்கமாகுது" என்று கேட்டு  மெத்தையில் அவனருகே அமர்ந்தாள்.

   அவளது அருகாமை தனக்குள் முன்பு தான் மறைத்தாய் இன்றுமா? எதுவென்றாலும் மறைத்து பேசுவதை விட திறந்த புத்தகமாக கேட்டுவிடு என்று முடிவெடுத்தான்.

   "உனக்கு ஏன் ஸ்ரீ என் மேல லவ் வரலை?" என்று கேட்டான்.
  அதில் அத்தனை வலி கொட்டி கிடந்தது.

   கூடுதலாக 'ஜீவியை எல்லாம் லவ் பண்ணிருக்க. ஜீவியை விட நான் குறைந்தவனா உன் கண்ணுக்கு தெரிந்தேனா? நான் அழகா இருக்கேன். கேரக்டர் பிடிக்கலையா? அவன் உன்னை விட்டுட்டு ஓடுறதுல இருந்தான். அவனை பிடிச்சிருக்கு என்னை ஏன் ஸ்ரீ பிடிக்காம போச்சு. உனக்கு என் மேல லவ் என்று ஒரு பிரசண்ட் கூட இல்லையே. நான் உன்னோட ஒரு தடவையாவது சண்டைப்போட்டிருக்கேனா?" என்று தவிப்பாய் கேட்டான். அவன் என்ன கேட்க வருகின்றானென்று அவள் புரிந்துக்கொண்டாள்.
 
  அவன் தலையை வருடி, "டேய்... நான் என்ன சொல்லறது. நீ சின்ன வயசுலயிருந்து என் கூடவேயிருப்ப. உன்னை ரொம்ப பிடிக்கும் டா.

   எப்பவும் சின்னதுலயிருந்து கூடவே  வளர்றப்ப காதல் என்ற தாட்ஸ் எனக்கு வந்ததில்லை ம்ருத்யு. காதலிக்கற வயசும் அப்ப இல்லை.

  பெரியவளா ஒரளவு வளர்ந்தப்பவும் என் பிரெண்ட் பாவனா தான் அடிக்கடி என்னிடம் வந்து 'நீ ம்ருத்யுவை விரும்பறியா, அவனை உனக்கு பிடிக்குமா? எவ்ளோ பிடிக்கும் அப்படியிப்படின்னு நோண்டிட்டே இருப்பா. கடுப்புல ஏன்டி அவனை பத்தி கேட்கறனு ஒரு நாள் ஸ்கூல்ல திட்டினேன்.

   அப்ப உன்னை அவ விரும்பறதா தயங்கி தயங்கி சொன்னா. எனக்கு அவ உனக்கு ஜோடியா வர்றதுல சுத்தமா விருப்பம் இல்லை. அதனால பொய் சொன்னேன்." என்றாள்.

  ம்ருத்யுவுக்கு ஆர்வமாக 'என்னை காதலிப்பதாக பொய் சொன்னியா?" என்று கேட்டான்.

   "சீச்சீ நானா உன்னை விரும்பறதா எப்படி பொய் சொல்வேன். என் கெத்து என்னாகறது? சோ... ம்ருத்யு என்னை விரும்பறான். நான் இன்னமும் ஓகே சொல்லலை. இதென்ன படிக்கற வயசு தானே. படிப்புல முதல்ல கவனிப்போம். இல்லைன்னா எங்க மம்மி என்னை பனிஷ் பண்ணுவாங்கன்னு சொல்லிட்டேன்.
   அதுக்கு பிறகு அவ உன்னை ஏக்கமா பார்ப்பா. எனக்கு சிரிப்பா வரும். சரி என் பிரெண்ட் ம்ருத்யு தப்பிக்கட்டும்னு நானும் கமுக்கமா இருந்தேன்." என்றதும் ம்ருத்யு போலியாய் முறைத்தான்.

   "சோ நமக்கு பின்னாடி நாம லவ்வர்ஸ் என்ற டாக்கிங் நிறையவே இருக்கும் டா.
  அப்ப எல்லாம் உன்னை பார்க்கறப்ப லவ்வர்ஸா ஓகேஓகே என்று சுத்துவேன்.
  நீ படிக்க போனதும் தினமும் பேசுவ. எனக்கு உன்னை பிரிந்த பீலும் இல்லை. உன்னை பிரிந்தா தானடா பிரிந்த பீலிங் வரும் ஏதாவது யோசிக்கலாம்." என்றதும் ம்ருத்யு மனம் லேசாக பனிசாரலாய் மாறியது.

  "அதோட ஜீவியா வந்து லவ் பிரப்போஸ் பண்ணினான். அழகா ஒருத்தன் அவனா வந்து வழிந்து, நான் எது சொன்னாலும் தலையாட்டிட்டு இருந்தது நல்லாயிருந்ததுடா." என்று கூறவும் ம்ருத்யு மீண்டும் முறைத்தான். "டேய் அவன் லவ் பிரப்போஸ் பண்ணினான். நான் சிங்கிளா இருந்தேன் ஓகே சொல்லிட்டேன்." என்று கூலாக கூறினாள்.

   "நானா ஒருவேளை லவ் பிரப்போஸ் பண்ணினா அக்சப்ட் பண்ணிருப்பியா?" என்று பேராசையாக கேட்கவும் ஸ்ரீநிதி நாடையில் கைவைத்து, பிளஸ் ஒன் கழிச்சி அந்த லேப் இன்சிடெண்ட் நடந்தப்பிறகு நீ பிரப்போவஸ் பண்ணிருந்தா நிச்சயம் நோ சொல்லிருப்பேன். ஆனா அதுக்கு முன்ன சொல்லிருந்நா மேபீ, நம்ம பையனாச்சேனு ஓகே சொல்லிருப்பேன்." என்று தோளைக்குலுக்கி கூறவும் ம்ருத்யுவோ 'அச்சோ இத்தனை வருஷம் வேஸ்டாபோச்சே.' என்று மனதில் கருவினான்.

   "டேய் ம்ருத்யு செல்லம். பாஸ்ட் லவ், பிரசெண்ட் லவ், ப்யூச்சர் லவ் என்பதை விட, லைப் லாங்க எந்த லவ் இருக்குன்னு மட்டும் பாரு. ஓகேவா." என்று கொஞ்சினாள்.
 
    ம்ருத்யு முகம் ஓரளவு சாந்தமடைந்தாலும் லேசாய் வாடியிருக்க, அவன் கன்னம் பிடித்து அவனிதழை கொய்ய ஆரம்பித்தாள்.

   முத்தங்களை வழங்கி பித்தம் கொள்ள வைத்து, சோகங்களை தள்ளி வைக்க அவளாக கொடுத்த முதல் முத்த யுத்தத்தில் கீழ்யிதழ் என்று பருக அதனை தன்னை மறந்து ருசிக்க ஆரம்பித்தான்.

    மெது மெதுவாய் முன்னேற துடித்திட இமைத்திறந்து முடித்தவன் அவனது அறைக்கு வந்த ரிதன்யாவை கண்டு பேய் முழி முழிக்க, ஸ்ரீநிதியிடமிருந்து விடுபட துடித்தான்.

   ஸ்ரீநிதி விட்டால் தானே. அவன் விலகவும் கீழ் உதட்டை கவ்வி இழுத்தாள்.

  சீஸ் போல உதட்டை விடாமல் இருந்தவளிடம் தோளை தட்டி, ரிதன்யாவை சுட்டிக்காட்டினான்.

    ஸ்ரீநிதியோ அதன் பின்னரே விடுவித்தவள் "இங்க எதுக்குடி வந்த?" என்று அதட்டவும் பிரம்மை பிடித்தவள் தெளிந்தாள்.

    "கீழே போ" என்று விரட்ட, தலையை சொரிந்து ம்ருத்யுவையும் ஸ்ரீநிதியையும் மாறி மாறி பார்த்து கடந்தாள். 
   "டேய் வந்து சமாளி" என்று தோளைத் தட்டினாள்.

   "அடிங்க, தள்ளுடினு தள்ளிவிட்டா. சீஸ் கணக்கா உதட்டை இழுக்கற. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன். நீ ரிதுவை சமாளி." என்று மனையாளை அனுப்பினான்.

   "என்னால அவளை ரொம்ப நேரம் சமாளிக்க முடியாது. மரியாதையா நீ டூ செகண்ட்ல வர்ற" என்று விறுவிறுவென சென்றாள்.
   படிக்கட்டில் நகத்தை கடித்தபடி மெதுவாக அன்னைக்கு வேற இன்னிக்கு வேற. இவ எப்படி?" என்று ஜீவியை  முத்தமிட்டதை இதையும் ஒப்பிட்டு குழம்பினாள்.

   "எங்க வந்த? ஏன் வந்த? நேரா வந்துடுவியா?" என்று ரிது சோபாவில் அமரவும் ஸ்ரீநிதி குரல் வினாக்களை துளைத்தது.

  "அக்கா அத்தான் வீடு இங்கயிருக்கேனு ஆசையா ஸ்நாக்ஸ் சாப்பிட வந்தேன். அன்னைக்கு ஒரு படம் ஓட்டின. நீ இப்படி மாறுவனு நினைக்கலை. நீ எப்படி மாறின? நீயா தானே அத்தானை கிஸ் பண்ணின?" என்று அதிமுக்கிய சந்தேகத்தை கேட்டாள்.

    "பாடத்துல என்னைக்காவது டவுட் கேட்டுயிருக்கியா. இது ரொம்ப முக்கியம்." என்று தன் பிரைவேஸி பறிப்போன விதத்தில் எரிந்து விழுந்தாள்.

   "உன் லைப் அத்தான் லைப் நல்லாயிருக்கணும்னு நான் காட்கிட்ட ப்ரே பண்ணினேன். என்னிடம் ரீஸன் சொல்லு. நான் டவுட் கேட்டா தப்பா. இந்த கிஸ்ஸிங் சீன் எல்லாம் நாம இங்கிலிஷ் மூவில பார்க்கலையா? டிஸ்னில கிட்ஸ் மூவிலயே கார்டூன் பிக்சர்ல லிப் கிஸ் எல்லாம் ரொம்ப சாதாரணம். அப்படியிருக்க எனக்கு இந்த கிஸ் மேட்டர் பார்த்ததுல பெரிய ரியாக்ஷன் இல்லை. நீ எப்படி மாறின  எனக்கு அதை சொல்லு." என்று முதிர்ச்சியாக பேசி சுரண்டினாள்.

   "அம்மா தாயே ஜீவியை தலை முழுகிட்டேன். அவன் என் பாஸ்ட். என் பிரசெண்ட் ப்யூச்சர் என் ம்ருத்யு தான். அதனால ஆத்மார்த்தமா லவ் பண்ணறேன்.

   ஜீவியை சும்மா டச் பண்ணின மாதிரி தான் ம்ருத்யுவை வெறுப்பேத்த அன்னைக்கு அப்படி செய்தது. ஆத்மார்த்தமா பீலோட கொடுக்கலை. அதோட அது சும்மா. ஜென்ரல் ஹக் மாதிரி.
   ம்ருத்யுவோடது அப்படி இல்லை. நாங்க பேசி அன்டஸ்டாண்டிங் ஆகிட்டோம். எங்க லைப் ஸ்மூத்தா போகுது போதுமா" என்று விளக்கியவுடன் ரிதன்யா திருப்தியானாள்.

அவளை விட ம்ருத்யு ஸ்ரீநிதி பேச்சில் ஆனந்தம் அடைந்தான். நெஞ்சமெல்லாம் நிறைவு ததும்பியது. 

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்












Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1