நீ என் முதல் காதல்-32
அத்தியாயம்-32
ம்ருத்யுவோ "சொல்லறது ஒன்னுமே புரியலை அத்தை. எதுவானாலும் சொல்லுங்க." என்று கூற அங்கே நால்வர் கொண்ட இருக்கையில் அமர்ந்தாள் ஷண்மதி.
மற்ற மூவருமே அமரவும், ஷண்மதி ஸ்ரீநிதியை தான் வெறித்தாள்.
ஷண்மதி பார்வையின் அர்த்தம் புரிய "நான் அவனை காயப்படுத்துவேன். ஆனா பிறப்பை வச்சி இன்சல்ட் பண்ண மாட்டேன். ஒருத்தரோட பலகீனத்துல பலத்தை தேடுற முட்டாள் நான் இல்லை. உங்களுக்கு நான் இதை வைத்து அவனை ஹர்ட் பண்ணுவேன்னு தோனுச்சினா எழுந்து போறேன்." என்று வெடுக்கென எழுந்தாள் ஸ்ரீநிதி.
"உட்காரு. என்னை பார்க்குற? என் மகளுக்கு எப்படிப்பட்ட குணமென்று எனக்கு தெரியும். உனக்கு வேண்டுமின்னா நான் அரக்கியா தெரியலாம். ஆனா நீ எனக்கு எப்பவும் என் ஸ்ரீகுட்டி." என்றதும் அன்னைக்கு அருகேயிருந்த இருக்கையில் தொப்பென அமர்ந்தாள்.
ஒருவரை அன்பால் அடித்தால் நிச்சயம் வீழ்ந்திடுவார் தானே?!
ஷண்மதி பார்வை மகளை விடுத்து மருமகனிடம் நிலைப்பெற்றது.
"தமிழ்நாட்டு சி.எம் அரவிந்த் சேதுராமன் பத்தி என்ன நினைக்கிற?" என்றதும் ம்ருத்யு கண்கள் இடுங்க, நான் குப்பத்துல அரசு மருத்துவமனையில இருந்ததா பிளாஸ்பேக் போச்சு. சி.எம் பத்தி கேட்கறாங்க என்று சிந்தித்தவன், "தமிழ்நாட்டு சி.எம். அரவிந்தோட அப்பா சேதுராமன் முதல்வரா இருந்து இறந்ததும் நெப்போடிஸம் முறையில் முதல்வர் பதவிக்கு வந்தார். இந்த அரவிந்திற்கு இரண்டு ஒய்ப் இருக்காங்க." என்று தோளை குலுக்கினான். அவன் கேள்விப்பட்டது அதுமட்டுமே
ஷண்மதியோ உதடு எள்ளலாய் சிரிக்கவும், ம்ருத்யு "தாரா, ஷமிரா இரண்டு பேர்ல தான் என் அம்மாவா?" என்று கேட்டான். அரவிந்த் பற்றி கேட்கின்றார், படிப்பும் இலண்டனுக்கு படிக்க வைக்கும் வசதியுண்டு என்றாரே அப்படியென்றால் அரவிந்த தானே தந்தையாக இருக்க வேண்டும். என்ற ரீதியில் கேட்டான் ம்ருத்யு.
"உன்னோட பயோலாஜிக்கல் அப்பா அரவிந்த் தான் ஆனா அம்மா தாராவோ ஷமிராவோ இரண்டும் இல்லை. மூனாவது ஆனந்தி. ஆனா இந்த ஆனந்தியை உங்கப்பா கல்யாணம் செய்தவரோ கீப்போ கிடையாது." என்றதும் ம்ருத்யுவோ அதிர்ந்து நின்றான். ஒன்னுக்கு இரண்டு கல்யாணம் பண்ணி மூனாவதா? என்ற மலைப்பு.
"நீங்க விவரமா சொல்லுங்க அத்தை." என்று தலையில் கைவைத்து தாங்கினான். 'என்ன வரலாறுடா இது' என்ற வெறுப்பு.
ஆக்சுவலி அரவிந்தோட அம்மாவுக்கு குழந்தை பிறந்தப்ப அரவிந்தை தொண்டன் ஒருத்தன் பிரிச்சிட்டார். அதனால அரவிந்த் குப்பத்துல வாழற நிலை. அப்ப எல்லாம் அரவிந்த் கட்டுக்கடங்காத காளை. அடக்கி வளர்க்க, ஒழுக்கத்தோட வாழ யாரும் சொல்லித்தரலை. அதோட பாதிப்பு விருப்பம் இருக்கறவளோட தன் இல்லற சுகத்தை பகிர்ந்துட்டான்.
அப்படி தான் ஆனந்தி என்ற பொண்ணோட பழகினான்.
ஆனந்திக்கு வேறொருத்தனோட பிறகு கல்யாணமாகிடுச்சு. கல்யாணமான அடுத்த மாசமே கருவுற்றிருந்தா. டாக்டரிடம் கேட்டப்ப 'எம்மா நீ மூன்று மாசமா முழுகாம இருக்க'னு அரசு மருத்துவமனையில சொல்லிருக்காங்க. கல்யாணமானது ஒரு மாசம் ஆனா குழந்தை உருவானது மூன்று மாசம் என்றதும் ஆனந்தி பயந்துட்டா. ஆனந்திக்கு அரவிந்தோட இருந்தது நினைவு வரவும் கமுக்கமா பிள்ளையை பெத்துட்டலாம்னு அவளோட கணவரிடம் கருவுண்டானது மட்டும் சொல்லிருக்கா. மாசக்கணக்கை மறைச்சிட்டா.
குழுந்தையும் வளருச்சு. அடிக்கடி ஹாஸ்பிடல் போனா எந்த மாசம் குழந்தை உருவானதுனு ஸ்கேன்ல கண்டுபிடிச்சிடுவாங்கன்னு ஹாஸ்பிடலுக்கு போகவே மறுத்துட்டா.
ஆனந்தி கொஞ்சம் பயந்த சுபாவம். அதனால வலி வரவும் அவளா ஒரு கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல போய் குழந்தை பெத்திருக்கா. ஏழாவது மாசம் என்ற பொய்யோட குழந்தை பிறந்தது. டாக்டர் ஒன்பதாவது மாதமா இருக்கும்னு சந்தேகப்பட்டாங்க. ஆனா இதயநோயோட நீ குட்டியா எடைக் குறைவா பிறந்ததும் குறை மாசமா இருக்கலாம்னு முடிவுக் கட்டிட்டாங்க.
அதோட ஆனந்தி புருஷனிடம் குழந்தைக்கு இதயநோய் இருக்கு. சரிப்படுத்த நிறைய பணம் தேவைப்படும். குழந்தை உயிர் வாழறதே கொஞ்ச நாள் தான். விரைவில் செத்துடும். பெரிய ஹாஸ்பிடலா போய் பாருங்கன்னு சொல்லிருக்காங்க.
ஏழரை மாசம் இதயநோய் என்றதும் ஆனந்தி புருஷனுக்கு 'புள்ள செத்திடும். இதுக்கு என்ன செலவு பண்ணறதுனு குழந்தையை அனாதை ஆசிரமத்துல போட்டுடுடி. நம்ம கண்ணுக்கு தெரியாம உசுரு போகட்டும்னு பேசியிருக்கார். நீ குட்டியா எங்க கைக்கு வரணும்னு துடிச்சிருப்ப. அதனால உன் தோற்றம் உயிர் பிழைக்க வாய்ப்பு குறைவுனு முடிவுக்கட்டி கணவரோட பேச்சை கேட்டு மனசு கேட்காம ஆசிரமத்துல போட்டுட்டு போயிட்டா ஆனந்தி.
குழந்தை ஆசிரமத்துல கிடைச்சது மேம் என்று என் பி.ஏ திருவளவன் சொன்னதும் ஆசிரமத்துல குழந்தையை தேடி யாராவது வந்தா விசாரிச்சு என்னிடம் கூட்டிட்டு வாங்கன்னு அனுப்பியிருந்தேன். ஆனா அப்ப யாரும் வரலை.
ஒரு ஐந்து வருஷம் கழித்து ஆனந்தி வந்து ஆசிரமத்துக்கு முன்ன உட்கார்ந்து 'என் புள்ளை தொலைச்சிட்டேன் இங்க இருக்கா இங்க இருக்கானு பைத்தியமா சுத்தியிருக்கா.'
ஆனந்திக்கு அதுக்குபிறகு புள்ள வரம் கிடைக்கலை. அதோட பாதிப்பு பிறந்த குழந்தையையும் இங்க போட்டுட்டோமேனு தேடியிருக்கா. எப்பவும் நீ கிடைச்ச இடமென்றதால டொனேஷன் கொடுக்க போனப்ப இதெல்லாம் தெரிந்தது.
ஜான்சியை வச்சி ஆனந்தியை கூப்பிட்டு ஒருயிடத்துல ஹாஸ்பிடல்ல சேர்த்தேன். மனரீதியா புலம்ப ஆரம்பிச்சிருக்கா. குழந்தை பிறக்காதது. பிறந்த குழந்தையை தொலைச்சது. இதோட சேர்த்து இதயநோய் பலகீனம் இருக்க, புத்தி சுவாதினமாக மாறியிருக்க, கணவரும் விட்டு பிரிந்துட்டார்.
உனக்கு நினைவிருக்கா ம்ருத்யு உன்னோட பத்தாவது பெர்த்டே அப்போ நான் ஒரு மனநல காப்பகத்துக்கு கூட்டிட்டு போனேன். ஒரு ரூம்ல இருக்கற லேடியிடம் சாக்லேட் டிரஸ் கொடுக்க சொன்னேன். நீ பயந்து பின்வாங்கின. அவ தான் ஆனந்தி. ட்ரீட்மெண்ட் பண்ணறப்ப சதா புலம்பறப்ப அரவிந்த் கூட படுத்து குழந்தை உருவாச்சு. குறைபிரசவம்னு சொல்லி ஹாஸ்பிடல்ல விட்டுட்டேன்.
'என் குழந்தை காணோம்' 'என் குழந்தையை நானே தொலைச்சிட்டேன்' அப்படின்னு புலம்புவா." என்றதும் ம்ருத்யு தொண்டை குழி ஏறியிறங்கி பெற்ற அன்னைக்காக கலங்கினான்.
அந்த பிறந்த நாளன்று அத்தை ஹாஸ்பிடல் அழைத்து வந்ததும் பைத்தியங்களை காணவும் ம்ருத்யு பயந்து மிரண்டான். 'இங்க எதுக்கு அத்தை கூட்டிட்டு வந்திங்க. எனக்கு சுத்தமா பிடிக்கலை. இதுக்கு குட்டி குட்டி பசங்க இருக்கற ஆசிரமத்துல கூட்டிட்டு போயிருந்தா விளையாடியிருப்பேன் என்றானே.
பெற்றவளை காட்டவே அத்தை அழைத்து சென்றதை அந்த வயது பாலகன் ம்ருத்யு அறியாமல் போய்விட்டானே.
''ஆனந்தி அம்மா இப்ப எங்க? பார்க்க முடியுமா?" என்று வலிகளை விழுங்கி கேட்டான்.
"சாரி ம்ருத்யு உனக்கு பன்னிரெண்டு வயசாகறப்ப இறந்துட்டாங்க. ஆனந்தியை கட்டிக்கிட்டவன் யாருனு தெரியாது. ஆனா அரவிந்த் உன் அப்பா. அதுயெனக்கு தெரியும்.
அரவிந்த் உங்க தாத்தா சேதுராமன் இரண்டு பேருக்கும் ஒர் காரணத்துக்காக டி.என்.ஏ டெஸ்ட் எடுத்த டாக்டரிடம் டி.என்.ஏ கலெக்ட் பண்ணி உன்னோட மேட்ச் ஆகுதானு பார்த்தேன். ஆனந்தி பொய் சொல்லலை. அரவிந்த் குப்பத்துல இருந்தப்ப பழகின பொண்ணுங்களில் தாராவுக்கு அடுத்து ஆனந்தி தான்.
உன் அப்பா அரவிந்த் தான். தமிழ்நாட்டு சி.எம் அரவிந்த்சேதுராமனுக்கு இப்படியொரு பையன் இருப்பது நிச்சயம் தெரியாது. ஆனந்தி என்பவளோட ஒரு இரவை கழித்த ஆனந்தியை அவன் நினைவு வச்சிருப்பானா என்பதை டவுட்." என்றதும் ம்ருத்யுவிற்கு தந்தை என்ற அரவிந்தை சுத்தமாக பிடிக்கவில்லை.
ஷண்மதி தொடர்ந்தார் "உன் அப்பாவுக்கு இப்படியொரு புள்ள இருப்பது தெரிந்தா நிச்சயம் ஒதுக்க மாட்டான். அவன் புத்திசாலி டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து ஆனந்தி பத்தி நீ சொன்னா அவன் உன்னை ஏற்றுப்பான்." என்றதும் யுகேந்திரன் பதறினார்
"விளையாடத ஷண்மதி. என் ம்ருத்யு எங்கயும் போகமாட்டான். அவனுக்கு என் அக்கா தாரிகா அம்மா. ஆனந்தியில்லை. மாமா பைரவ் அப்பாவா இருக்கார் அந்த சி.எம் பதவில இருக்கற அரவிந்த் கிடையாது.
ம்ருத்யு அப்படி தானே டா?" என்று கேட்கவும், ''நான் என்ன சொல்வேன்னு உனக்கு தெரியாதா மாமா" என்று கட்டிக்கொண்டான்.
ஷண்மதி சொடக்கிட சூடான தேனீர் எடுத்து வந்து வைத்தார்கள். சற்று தூரத்தில் கப்பலில் தேனீரை வைத்து காத்திருந்தவர்கள்.
சூடான தேனீர் தொண்டையை நனைக்க, ம்ருத்யு தன் தந்தை தாயை பற்றி பேச மறுத்தான். வினா பிறப்பிக்கவில்லை.
இரண்டு மணம் புரிந்த அரவிந்த் மூன்றாவதாக ஒன்று இருந்து அல்லல்பட்டு இறந்திருக்க கூடுமென்று கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் ஒழுக்கம் என்பதை காற்றில் பறக்கவிட்டால் தன் ரத்தமும் இப்படி அவதியுரும் என்பதை அரவிந்த் காலம் தாழ்த்தி கூட அறியாது போனான்.
நல்லவேளை அவன் அறியாதது போவதும் நல்லதே. இல்லையென்றால் தன்னால் ஒருத்தி பித்துபிடித்து, பிள்ளை பெற்று தொலைத்து அவதியுற்றதும், அந்த பிள்ளை நிலை என்னவோ என்ற பதட்டம் புளங்காகிதம் அடையாது மனமென்னும் கடவுளிடமிருந்து தப்பித்தான். அதுவரை ஏதோ புண்ணியம் செய்தவனே.
"சோ அம்மா இறந்துட்டாங்க. நானா பார்க்கணும்னாலும் பார்க்க முடியாது. அப்பா... அந்தாளை போய் பார்ப்பேனா? ஒன்னுக்கு இரண்டு கட்டிட்டு மூனாவது ஒன்னு. தெரிந்து இத்தனை, தெரியாம எத்தனையோ? என் உடம்புல அவன் ரத்தம்" என்று எரிச்சலடைந்தான்.
"ம்ருத்யு கண்ணா... உனக்கு அப்பா பைரவ் அம்மா தாரிகா. நீ உன் மாமா யுகேந்திரனை ரோல்மாடலா கொண்டு வளர்ந்தவன். இப்ப உனக்கு மனைவி ஸ்ரீநிதி இருக்கா. அடுத்து பிசினஸ் ஆரம்பித்திருக்க. அதை பாருடா. எதையும் யோசித்து நீயா குழப்பிக்காத. நீ விரும்பிய ஸ்ரீநிதி கூடவேயிருக்கா." என்று ஷண்மதி கூறிவிட்டு யுகேந்திரனை கைப்பிடித்து மறுபக்கம் கப்பலின் திசைக்கு நகர்ந்தனர்.
ஸ்ரீநிதி ம்ருத்யு மட்டும் தனியாக இருந்தார்கள்.
ம்ருத்யுவோ கடலை வெறித்தான் அலையை பார்த்தான், சுற்றி அவன் உடலை தழுவிய காற்றை உணர்ந்தான். பெண்ணவளை மெதுவாக தான் ஏறிட்டான்.
ஸ்ரீநிதியோ போனில் cm அரவிந்த் பற்றி ஆர்டிக்கல் சத்தமின்றி வாசித்தாள்.
முதல் மனைவி தாரா-அரவிந்த் குழந்தையாக ப்ருத்விராஜன், இரண்டாம் மனைவி ஷமிரா-அரவிந்த் மகளாக தமிழ்.
cm தம்பி இந்திரஜித்-அவன் மனைவி சந்தோஷி அவர்கள் மகளாக மின்மினி என்று பெயர் வைத்திருப்பதாக குகூள் விக்கிபீடியா செய்தி வழங்கியது. ஸ்ரீநிதி வயிற்றை பிடித்து சிரித்தாள்.
"ம்ருத்யு உனக்கு ஒரு தம்பி ப்ருத்விராஜன் இருக்கான். தங்கை தமிழ், அதோட உங்கப்பாவோட தம்பி இந்திரஜித் சித்தப்பா பொண்ணு மின்மினி மூன்று பேர்டா." என்று சிரித்தாள்.
ம்ருத்யு முறைக்க, "பெயரை பார்றேன். அதுவா அமையுமாடா. உன் பெயர் ம்ருத்யு, அந்த பையன் பேரு ப்ருத்வி" என்றதும் ம்ருத்யு வேகமாய் திரும்பி அருகே வந்து, "என்னடி கலாய்க்கறியா? உனக்கு தான் என்னை பிடிக்கலைனா ஜீவி கூடவே போடி. அவனுக்கு தான் கல்யாணம் ஆகலையே." என்று எரிந்து விழுந்தான்.
ஸ்ரீநிதி சிரிப்பை விழுங்கிவிட்டு, "என்னடா பேச்சு தினுசா இருக்கு. முன்ன எல்லாம் வாய் முழுக்க பல்லா இளிச்சிட்டு சொல்லு ஸ்ரீ.' என்று பேசுவ. நான் என்ன பேசினாலும் தியாக செம்மலா சிரிப்ப. எங்கப்பா எங்க அம்மாவை விழுங்கற மாதிரி நீ என்னை விழுங்கிட்டு. இப்ப வேற மாதிரி மார்க்கமா பேசற? ஆஹ்?
மகனே ரத்தம் கித்தம்னு ஒன்னுக்கு இரண்டு மூன்று என்று எவளிடமாவது வாலாட்டினா நான் அரக்கி மகளா அவதாரம் எடுப்பேன். எங்கம்மா கொஞ்சம் தான் அரக்கி. நான் முழு பிசாசு. உன்னை தூக்கி கடல்ல போட்டு, சுறாவுக்கு இறாலா போட்டு இரையாக்கிடுவேன்.
நீ ஆசைப்பட்டு தான் என் கழுத்துல தாலி கட்டின. நான் என் லைப்பை எங்கம்மா டிசைட் பண்ணினவனோட வாழப்போறேன். அதை மீறி ஏதாவது எனக்கு துரோகம் பண்ணின?" என்று மிரட்டலை கொடுத்தாள்.
ம்ருத்யுவிற்கு கடைசியாக பேசும் ஸ்ரீநிதி பேச்சு பாஷை புரியாதவனாக குழம்பி பார்த்தான். அவள் என்ன சொல்ல வர்றா? என்று புரிபடாமல் இருந்தவனுக்கு அவள் பேச்சு நிதானமாக உள்ளே இதயத்தில் நுழைய உள்ளம் தேனாறாக பாய்ந்தது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Comments
Post a Comment