நீ என் முதல் காதல் -28

 அத்தியாயம்-28


   வீட்டிற்குள் நுழையும் போது யுகேந்திரன் வேகமாய் வந்து அணைத்து கொண்டார்.


    ஷண்மதியோ கையை கட்டிக்கொண்டு கூர்பார்வையை வீசிட, ம்ருத்யு கண்கள் ஸ்ரீநிதியை தேடியது. 


   "ரூம் உள்ளயிருக்கா இன்னும் அவளுக்கு டயர்ட் இருக்கு." என்று ஷண்மதி உரைக்கவும் ம்ருத்யுவிற்கு அப்பாடா என்றிருந்தது. 


   ம்ருத்யுவாக வாய் திறப்பது தற்போது அதிசயமென புரிந்து, "ஒரு விஷயம் ரகசியமா இருக்கற வரை தான் அதுக்கு மதிப்பு. எங்களுக்கு தெரிந்தது யாருக்கும் தெரியக்கூடாதுனு நினைச்சது. என் முட்டாள்தனம் என் மகள் ஸ்கூல்ல லேப் எரியுதுனு சொன்னதும் ஓடிவந்தேன். அன்னைக்கு இரண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி லேப் போகணும் எனக்கு ம்ருத்யு ஆன்சர் சொல்வான்னு ஸ்ரீநிதி பேசிட்டு இருந்தா. அதோட பாவனா இரண்டு பேரும் இன்னும் வெளிவரலை ஆன்ட்டினு மூச்சு வாங்க நெஞ்சுல கை வச்சி இரும்பிட்டு வந்தா. நெஞ்சுல கை வைக்கவும் சட்டுனு எனக்கு உன் நினைவு தான். சின்ன வயசுல பிறந்தப்பவே இதயப் பிரச்சனை இருந்ததால உனக்கு ஏதாவது ஆகிடுமானு தான் பயந்தேன். 


   என் பொண்ணு எப்படியும் சாமர்த்தியமா நடந்துப்பானு நம்பினேன்." என்றதும் ஸ்ரீநிதி அறைக்குள் இருந்தவாறு இமை முட அதில் இருபக்கமும் விழிநீர் வெளிவந்தது.


    "நடந்த ஒரு விஷயத்தால என் மக என்னை ரொம்ப நோட் பண்ணி, அவளோட மனசுல ஆழமா பதியும்னு நான் நினைக்கலை. எத்தனையோ முறை ம்ருத்யுவை விட உன்னை பிடிக்கும்னு செயலில் காட்டியும், அன்னைக்கு நான் முகத்துல காட்டின உணர்வால அவ மனசு ஆறலை. மேபீ இப்ப உண்மை தெரியவும் அவமனசு நிம்மதியடைந்திருக்கலாம். அப்பயும் நிம்மதியாகலைனா நான் அதுக்கு எதுவும் பண்ணமுடியாது. 


   ம்ருத்யு எனக்கு தேவை உன் நலன். என்ன பார்க்கற பெத்த பாசத்தை விட நம்ம நலனா? அப்படின்னு முழிக்காத. அது அப்படி தான்.


   நான் யுகேந்திரனை காதலிச்சதால அவருக்காக வேண்டுமின்னா உன்னை தூக்கி தாரிகா அண்ணிக்கு பக்கத்துல வச்சி அவங்க குழந்தையா மாத்தியது. 


   என் காதலன் யுகியோட மனசு சந்தோஷப்படனும் கவலைப்படக் கூடாதென்ற சுயநலம். ஆனா எப்ப உன்னை தாரிகா அண்ணி பக்கத்துல வச்சேன்னோ அப்பவே உன் பாதுகாப்புக்கும் உன் நலனிற்கும் நான் பொறுப்பு. 


   உனக்கு இதயத்துல பாதிப்பு என்றதும் அச்சோ இதுக்கு குழந்தை இறந்து பிறந்ததை முன்னயே தெரிந்திருக்கலாம். இப்ப கையில உன்னை வாங்கிட்டு அதை பறிக்கொடுக்கறது வேதனையாச்சேனு பரிதவிச்சேன். 

  உனக்கு எதுவும் ஆகக்கூடாதுனு பணத்தை வாறி இறைச்சி தான் மருத்துவ செலவு செய்தது. 


  உங்க மாமாவை கல்யாணம் செய்ய உன்னை லாக் பண்ணியதா தெரிந்தாலும் நான் உன்னை காப்பாத்தி உன்னை வாழ வச்சி அந்த எமனுக்கு சவால் விடணும்னு முடிவுப் பண்ணினேன். இப்ப வரை உன்னை பொத்தி பொத்தி பார்த்தாச்சு. என் மகளால உனக்கு ஏதாவதுனா நான் போன்ல சொன்னது தான். அவ எனக்கு தேவையில்லை. நீ நல்லாயிருக்கணும்." என்றவளின் போன் விடாமல் அடிக்க துவங்கியது. 

  

   "ரிதன்யா போன் பண்ணறா?" என்று கணவரை பார்த்தாள் ஷண்மதி. 


   "ஏற்கனவே இங்க பிரச்சனைனு சின்னவளுக்கு தெரியுது. நாம போகலைனா அவ வேற பயப்படுவா. இங்க ஸ்ரீநிதி தனியா விடவும் மனசில்லை ஷணு. ம்ருத்யுவும் தெளிந்தானானு தெரியலை" என்று ம்ருத்யுவை பார்த்து யுகேந்திரன் கூறினார். 


  ஷண்மதியோ தலைகவிழ்ந்து இருந்த ம்ருத்யு முகம் கண்ணீரை காட்டவில்லையென்றதும் அவன் முகத்தை நிமிர்த்தினாள். 


   "இல்லை அத்தை நான் எங்கயும் போகலை. அம்மா அப்பாவுக்கு என்னால எதுவும் தெரியக்கூடாது அவ்ளோ தான் எனக்கு வேண்டும். பைரவ் அப்பா தாரிகாம்மா இரண்டு பேரும் எனக்கு எந்த குறையும் வச்சதில்லை. இப்ப வரை நல்ல படிப்பு வசதி செல்லம் கொஞ்சறது எதுலயும் குறையில்லை. நாளைப்பின்ன நம்ம பையன் இல்லையானு என்னை பார்த்து கலங்கிடக்கூடாது." என்று உறுதி கூறினான். 

    

   "தட்ஸ் மை பாய்." என்றவள் ம்ருத்யுவை தட்டிக்கொடுத்து முடித்தாள் ஷண்மதி. 


  "யுகி நாம கிளம்பலாம். இது ஹஸ்பெண்ட் அண்ட் ஓய்ப் பிராப்ளம். இனி அவங்களே பார்த்துப்பாங்க. நாம போவோம்." என்று கூற யுகேந்திரனோ மகள் அறையை கண்டு கலக்கமாய் நின்றார். 


   "என்னை, உன்னைய விட என் ம்ருத்யு என் மகளை நல்லா பார்த்துப்பான். நீ கிளம்பு." என்று இயல்பாக கூற, ம்ருத்யுவிற்கு தொண்டை அடைத்தது. 


    மகளை விட நான் பெரிதென சொல்லாமல் சொல்லும் அத்தையை எந்த இடத்தில் தூக்கி வைப்பது. ஸ்ரீநிதியை நான் சீண்டாமல் இருந்தாலே போதுமென்று முடிவுக்கட்டினான். 


   ஷண்மதி யுகேந்திரன் மகளது அறைக்கு வந்து புறப்படுவதாக கூற, ஸ்ரீநிதியோ தலையசைத்தாள். 


   யுகேந்திரனாவது "ம்ருத்யுவை காயப்படுத்தாதடா." என்று கூறினார். ஷண்மதியோ எதுவும் கூறவில்லை ஆனால் மகளின் பார்வையில் மாறுதல் இருந்ததோ என்று சிந்தித்தபடி கிளம்பினார்கள். 


    ம்ருத்யு சோபாவில் வீற்றிருந்தவன் தன் பெற்றோர் புகைப்படத்தை போனில் உற்று உற்று முகத்தையே பார்த்தான். 


   ஜாடையென்ற ஒன்று சுத்தமாய் ஒட்டவில்லை. இந்நாள் வரை யுகி தாய்மாமா மாதிரி உயரம் நீண்ட கால் கைவிரல், தாயை போல நிறம் என்று நினைத்தான். 

   அனைத்தும் அப்படி இல்லையென்றதும் சோர்ந்துவிட்டான்.

   ஆனாலும் பைரவ் தாரிகா தான் தன் பெற்றோராக பாவித்தான். மணி எட்டாக ஸ்ரீநிதி மெதுவாய் எழுந்து வந்தாள். 

   அவள் வருவதை உணர்ந்தவன் போனை முகத்துக்கு நேராக வைத்திருந்தவன் கீழேயிறக்கி, அவளை காண, அவளோ கிச்சனில் பாத்திரத்தை உருட்டினாள். 


  "பச் டேப்ளட் போடணும். சாப்பாடு இல்லை." என்று கட்டுப்போட்ட கையால் தலையில் வைக்க வலி உண்டானது. 


    "இதுவேற" என்று முகம் சுணங்கி ஹாலுக்கு வந்தவள், டேப்ளட்டை ம்ருத்யு முன் கடை பரப்பினாள். 


    "வெறும் வயிற்றோட டேப்ளட் போடமுடியாது. பால் பிரட்டாவது எடுத்துட்டு வா" என்று ஏவினாள். 

  

   ம்ருத்யுவோ அவளை ஏறிட்டு விட்டு மெதுவாக போனை எடுத்து கிச்சனுக்கு செல்லும் கணம் வீட்டின் மணியோசை அடிக்க ஆரம்பித்தது.


     ஸ்ரீநிதியோ சோபாவில் அமர்ந்துவிட, "யாருனு பாரு" என்று அதட்டினாள்.


   ம்ருத்யுவோ கிச்சன் சென்றவன் திரும்பி வந்து கதவை திறக்க, கையில் பீட்சா பெட்டியில் உணவை வைத்துக்கொண்டு நின்றிருந்தான் போனில் ஆர்டர் தந்தால் உணவை கொண்டு வரும் அலாவுதின் பூதம். 


    "நான் ஆர்டர் பண்ணலையே... ஸ்ரீ நீ ஆர்டர் பண்ணினியா?" என்று ம்ருத்யு கேட்க, "இல்லலயே, பட் அம்மாவா இருக்கும்" என்று இருக்கும் பசிக்கு உரைத்தாள். 


    அதற்குள் ம்ருத்யு போனில் ரிதன்யா அழைத்தாள். 


   "சொல்லு ரிது." என்று குரல் உள்ளுக்குள் செல்ல, "அத்தான் அம்மா தான் புட் ஆர்டர் பண்ண சொன்னாங்க. ஆன்லைன் பேமெண்ட் பண்ணியாச்சு. புட் வந்துடுச்சா. டெலிவரி பாய் போன் பண்ணினார்." என்று வினா தொடுத்தாள். 


   "இப்ப தான் வந்திருக்கு. தேங்க்ஸ் உங்கக்கா பசி பசினு புலம்பினா. அத்தையிடம் தேங்க்ஸை சொல்லிடு" என்று கூறினான். 


   "அவ சமைக்க மாட்டாளா? அத்தான் சைனிஸ் புட் இத்தாலி புட் இந்தியன் புட் என்று எல்லாத்தையும் ஓவன்ல செய்வா. உங்களுக்கு தெரியாதா பிறகு என்ன மேடம் சமைக்க மாட்டாளா?" என்று சண்டை பிடித்தாள்.    

   ம்ருத்யு கதை கேட்டவனாக பீட்ஸா வாங்கிவிட்டு டெலிவெரி பையனை வழியனுப்பி வைத்தான்.


   பீட்சா பாக்ஸை ஸ்ரீநிதியிடம் கொடுத்து விட்டு, "அத்தை தான் ஆர்டர் பண்ணிருக்காங்க." என்று வைத்தான். 


    "ரிது யுகி மாமா சாப்பிட்டாரா?" என்று உள்ளுக்குள் சென்ற குரலில் கேட்டான் ம்ருத்யு. 


   "ம்ம்ம் அம்மா என்னைக்கும் இல்லாம இன்னைக்கு அப்பாவுக்கு பரிமாறிட்டு இருக்காங்க. அப்பா தான் பசிக்கலை வயிறு சரியில்லைனு டபாய்க்க பார்த்தார். அம்மா ரசமாவது சாப்பிடணும்னு ஆர்டர் போட்டாங்க." என்று சிரித்தாள். 


   "எங்கத்தையோட அன்பு எல்லாம் அதட்டலா தான் தெரியும். உன்னிப்பா கவனிச்சா பாசம் பிரவாகம் ஆகும்." என்று பேசினான்.


   "இப்ப சூடாறும் போதே சாப்பிடறியா? இல்லையா? எப்ப பாரு போன்?" என்று ஸ்ரீநிதி முனங்கினாள்.    


    ஸ்ரீநிதிக்கு எப்பொழுதும் ம்ருத்யு ரிதன்யாவோடு பேசுவதே பிடிக்காது. இதில் கல்யாணமானதும் மாறிடுமா? 


   "ரிது நான் அப்பறம் கால் பண்ணறேன்.'' என்று துண்டிக்கும் முடிவோடு இருக்க, "மம்மி கொஞ்ச நேரம் கழித்து ம்ருத்யு சாப்பிட்டானானு அடுத்து கேட்க சொன்னாங்க. சோ என்னோட அடுத்த கால் ஆப்டர் ப்யூ மினிட்ஸ்ல வரும் பை பை அத்தான்" என்று அவளே துண்டித்து விட்டாள்.


    ஸ்ரீநிதியை பார்த்து பீட்சா பாக்ஸை திறக்க, ஏற்கனவே ஒன்றை மொக்கிக் கொண்டிருந்தவளோ விக்கலில் மாட்ட, தண்ணீர் பாட்டிலை திறந்து அவள் முன் வைத்தான். 


    ஸ்ரீநிதி அவனை முறைத்தாலும் எடுத்து பருகினாள். ம்ருத்யு கொஞ்சம் தளர்ந்துவிட்டதால் அமைதியாக இருந்தானோ என்னவோ. 


  ஸ்ரீநிதி சாப்பிட்டு முடித்தவள் டேப்ளட்டை போட்டு முடித்தாள். ம்ருத்யு பீட்சாவையே அளவெடுத்து உண்ணாமல் நிற்க, ஸ்ரீநிதி ரிதன்யாவுக்கு வீடியோ கால் போட்டு "ரிது இங்க நான் சாப்பிட்டாச்சு. ஆச்சி எங்க?" என்று கேட்டாள். 


   வீடியோ காலில் ரிதுவோ "நீ முழுங்கிட்ட அத்தான் சாப்பிட்டாரா? என்று கேட்க, ஸ்ரீநிதியோ போனை திருப்பி உதடு கோணித்து காட்டினாள். 


   "என்ன அத்தான் கடகடனு சாப்பிடுங்க. இல்லை பீட்சா மெல்ல முடியாது." என்றதும் லேசான முறுவலை கஷ்டப்பட்டு உதிர்த்து விழுங்கினான்.


   ஸ்ரீவினிதாவோ "எப்படியிருக்க என்ன வீட்ல சமைக்கலையா? என்ன தான் பண்ணுவியோ?" என்ற குதர்க்கமான கேள்வியோடு பேச, சமையல் எல்லாம் போர் ஆச்சி. பேசாம வெளியவே சாப்பிடலாம் பெட்டர்" என்று தோளைக்குலுக்கினாள். 


"ஹாஸ்பிடலுக்கு தான் செலவு செய்யணும்." என்று ஸ்ரீவினிதா முனங்க, "அதெல்லாம் ஒரு பக்கம் பக்கத்துலயே பார்த்து வச்சிடணும். இனி ரணகளமா இருக்கும். ஒவ்வொன்னுத்துக்கும் டாக்டரை தேடணும்" என்று புலம்பினாள்.


   "என்னடி பேசற விட்டு விட்டு கேட்குது. சத்தமா பேசு" என்று ஸ்ரீவினிதா பேச, "நெட்வொர்க் இல்லை ஆச்சி. நாளைக்கு பேசலாம்" என்று ம்ருத்யு சாப்பிட்டு முடிக்கவும் அணைத்துவிட்டாள். 


   ம்ருத்யு பீட்சா அட்டைப்பெட்டியை கிச்சனுக்கு கொண்டு சென்று போட்டான். 


  அப்படியே வேறோரு அறைக்கு சென்றவனை வெறித்தாள். 


    திருமணமானப்பின் இந்த இடைப்பட்ட நாளில் தனியாக அறைக்கு சென்று தாழிடுவது இவள் வேலையே. ஆனால் இன்று ம்ருத்யு தனித்து சென்றதும் ஒரு வருத்தம் நெஞ்சுக்குள் பரவியது.


     ஸ்ரீநிதியை பொறுத்தவரை தற்போது ம்ருத்யுவிற்கு ஒரு ஆறுதல் துணை தேவை. ஒரு தோழியாக மன்னிப்பு கேட்டு அவனை தன் தோள் சாய வைத்து ஆறுதலுரைக்க வேண்டும். ஆனால் பிரச்சனையை கிளறிவிட்டதே தான் என்றதால் ஸ்ரீநிதி கை வலியோடு நின்றாள். 


     தோழனுக்கு தோழியாக ஆறுதல் உரைக்காத போது கணவனுக்கு மனைவியாக 

நஅரவணைக்க முடியுமா? 


-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ் 


   


  


       


   


   


   


    

   


    

   


   


  


Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1