🩸-21 Epilogue நியூயார்க் வந்தப்பிறகு மெர்லின் முதல் வேலையாக தன் மேற்படிப்புக்கு சீட் வாங்கி முடித்தாள். சாந்தனு இறந்த மூன்றாம் நாள் மெர்லின் அவள் பாட்டிற்கு உறங்க, அவள் மேனியில் ஏதோ ஊர்வதை உணர்ந்தாள். அரையுறக்கத்தில் அது தன்னை ஆட்கொள்ளும் திகிலோடு வியேர்த்து விழுந்தடித்து எழவும் இளவழகன் முன் நின்றான். "என்னாச்சு யவனா?" என்றான் இளவழகன். "ஏ...ஏதோ ஊர்ந்தது மாதிரி.... ப... பயமா இருக்கு இளா." என்றாள். "துர்வனின் முழுவுருவம் கண்டு குழம்பி போய்விட்டாய். சற்றே இதமான மனநிலைக்கு செல். ஆதவனை பற்றி முற்றிலும் மறந்து உன் தினசரி பணியினில் நாட்டம் செலுத்து." என்று போர்வையை போர்த்தி விட்டான். "இளா... எப்பவும் என் கூட இருப்ப தானே?" "என் ஆன்மா சாந்தி அடைந்த பொழுதிலும் நீ இருக்கும் வரை நானும் இருப்பேன் உன் துணையாக" என்று கிளம்பியது. இளவழகன் கண்களோ மெர்லின் அறையை விட்டு வந்ததும், அவன் கையை இறுகப் பற்றியிருந்தான். "என்ன ஆதவா... ஆன்மாவாக வந்தப்பின் என்னால் உன்னை ஒன்றும் செய்ய இயலாது என்று என்