சிரமமில்லாமல் சில கொலைகள்-17



🩸-17

       தன் கை வளையலை மாற்றி மாற்றிக் கண்ணில் வைத்தாள். சட்டெனக் கதவு தட்டும் சத்தம் கேட்டதும் பயந்து வளையலை தவற விட வளையல் அந்தரத்தில் நின்றது.

     தன்னருகே இளவழகன் இருப்பதை உணர்ந்தாள்.

      "தேங்க்ஸ்." என்றவள் எடுத்து, அச்சோ... உங்களுக்கு ஆங்கிலம் புரியுமா...."நன்றி" என்று பேச, கண்ணாடி மேல் "உன் மொழி புரியும் யவனா..." என்று எழுதியிருந்தது.

     கதவு தட்டப்பட்டுக் கொண்டே இருக்கவும் பயந்து திறந்தாள். திறந்தப் பின் தான் கண்ணாடியில் எழுதியதை பார்க்க அவை அழிக்கப்பட்டு இருந்தது.

      "என்னாச்சு ஏன் கதவை திறக்க இவ்ளோ நேரம்." என்று ஜாஸ்மின் அவ்வறையைச் சுற்றி பார்த்தாள்.

     "எதுக்கு இப்படி அவசரம். பாத்ரூமில் இருந்தேன்" என்று வரவும்

     "சாப்பாடு வந்துடுச்சு அதான்." என்றவள் அவளாக வேகமாக எல்லா உணவிலும் சாப்பிட்டு முடித்தாள். மெர்லின் அதுவரை தட்டில் சாதம் வைத்து யோசனையில் சுழன்றாள்.

    மல்லி... ஜாஸ்மின் மரிக்கொழுந்து... எல்லாமே பூவின் பெயர். அப்போ ஜாஸ்மின் அபரஞ்சியோட தோழி மல்லிகாவா? என்று பார்க்க மெர்லின் முகம் வியேர்த்துச் சொட்டியது.

     "என்னாச்சு வேர்வை வழியுது. சாப்பாடு எதுவும் ஒத்துக்கலையா?" என்று ஜாஸ்மின் கேட்டதும் "நோ நோ அப்பா அம்மா நினைவு" என்று சாப்பிட்டாள்.

     "ஜாஸ்மின் உங்க பேமிலி இல்லையா?" என்று மெர்லின் கேட்டதும் ஜாஸ்மின் முகத்தில ஒர் வறட்டுப் புன்னகை உதிர்த்தது.

      "குடும்பம் என்றால் நமக்காக ஒர் செயலை செய்யணும். எனக்குக் குடும்பம் சரியா அமையலை. சொல்லிக் கொள்வது போல எனக்கு யாருமில்லை." என்று பாலை கலக்கி குடித்து முடித்தாள்.

    மெர்லின் உணவு முடித்து அறைக்கு வந்தவள், "இளவழகன் சார்... ஜாஸ்மின் உங்க காலத்து மரிக்கொழுந்து மாதிரி இருக்காங்களா?" என்று கேட்டதும் இளவழகன் எண்ணங்கள் ஒப்பிட்டுப் பார்த்தது.

    எளிதில் கண்டறிய இயலவில்லை. ஆனால் சற்று ஆழ்ந்து யோசிக்க ஓப்புமை பெற்றது. ஜாஸ்மின் ஆண்கள் சிகையளவு தான் அவளின் சிகையும். என்றும் சட்டை பேண்ட் தான். எந்தவொரு அணிகலன்களும் அணிந்திருக்கவில்லை. முகமும் துடைத்தெடுத்தது போல இருக்கும்.

     மெர்லினோ மல்லியை வைத்துக் கணினியில் படமே வரைந்து முடித்திருந்தாள். ஜாஸ்மின் புகைப்படத்தோடு அவளுமே ஒப்பிட்டு முடித்துத் திரும்ப, இளவழகன் கோபத்தோடு "அவளைக் கொன்று தீர்த்துவிட்டு வருகிறேன்" என்று எழுத, "கொஞ்சம் பொறுங்கள். என்னைக் கொல்ல சித்தி சித்தப்பா மனிஷா ஆடலரசன் மாமா அத்தைக்குக் காரணம் இருந்தது. ஏன் அது எனக்குமே இப்ப தெரியுது. காரணமே இல்லாம குடும்பத்தைக் கொல்லறது எதுக்குனு தெரிய வேண்டாமா? எதையும் தெரியாம எப்படி முடிவெடுக்க?

     இங்க காரணக் காரியம் அறிந்தால் தான் நமக்கும் நல்லது. இப்ப மணி இரவாகிடுச்சு. நாளைக்குக் காலையில் பேச்சு கொடுத்து பார்ப்போம்" என்று உறங்க போர்வை எடுத்து முடிக்க இளவழகன் காற்றிலே ஒர் தலையணையைக் காலுக்கு எடுத்து வைத்தான்.
  
    "இளவழகன் சார் நீங்க என்னை இந்தளவு நோட் பண்ணயிருக்கீங்களா?" என்று கேட்க சில்லென்ற ஏசி தானாக ஆன் ஆனது.

    புன்னகை படர்ந்து உறங்க சென்றாள்.

      உறக்கத்தில் சர்வேஷ் செய்த செயல் தான் இம்சித்தது. அவளுக்கு அது பிடித்திருந்தது. எழுந்தால் இளவழகனிடம் தன் பிம்பம் காட்டி கொடுக்கும் என்று கண் மூடி கனவிலே காட்சியாய் ஓட்டி பார்த்தாள்.

    நேற்று வரை நீ காதலில் விழுவாய் என்றால் விசித்திரமாய் நோக்கியிருப்பாள். இன்றோ சர்வேஷ் கட்டுப்படாட்டில் மனதை தொலைத்தாள்.

    இங்குச் சர்வேஷோ அவன் பாட்டிற்கு உணவை விழுங்கி செல்லவும், மெர்லினாவை போலவே  படுத்து காட்சியை ஓட்டி பார்த்தான்.

      முத்தமிட்டது ஒர் போதையாகத் தோன்றி இரசவாதம் செய்தாலும் அவன் சற்று நேரம் கழித்து அபரஞ்சி காலத்துக்குத் தன் எண்ணத்தைச் செலுத்தினான்.

     தான் வளையல் அணிவித்தது யார் கூறியிருப்பார். நான் அபரஞ்சியை விரும்புவது யாருக்கெல்லாம் தெரியும் என்று பட்டியலை தயாரித்தான்.

     அத்தை மாமா அபரஞ்சி மல்லி மோகன் தவிர்த்து அம்மாவுக்குத் தெரியும். இதில் அம்மாவுக்குச் சொல்லியது யாராக இருக்கும். மல்லி மோகன் இந்தப் பெயரில் வந்து நின்றது.

     இதில் ஆடலரசனுக்குத் தன் அபரஞ்சி மேலே ஒருதலைக்காதல். இது எப்படி வந்தது.

      அதே போல இளவழகன் காலத்தில் என் காதல் யாரைக்குத் தெரியும் என்று ஆராய்ந்தான். மாமா கிருஷ்ணராஜனை தவிர யாருக்குமே தன் காதலை கூறவில்லையே... என்றவன் மனம் குழம்பியது.

    இல்லை இது என் காதல் சம்மந்தப்பட்டது அல்ல... அபரஞ்சியைப் பற்றியது. அல்லது என்னை யாரெனும் விரும்பியிருக்கக் கூடும்.

   என்னை விரும்புவது என்றால்... மனிஷா. ஆம் சர்வேஷ்வரனாகவும் இளவழகனாகவும் இருந்த காலத்தில் என்னை விரும்பி இருக்கின்றாள். ஆனால் இந்த ஜென்மத்தில் அவளை நேரில் பார்ப்பதற்கு முன்னே இளவழகன் கொன்று விட்டானே. அப்படியென்றால் பிரச்சனை இத்தோடு முடிந்திடுமே.

     அல்லது ஆடலரசன் அபரஞ்சியை விரும்பியவனாக இருந்தால்..... ஆமா இன்னமும் ஆடலரசன் மெர்லினை தேடி இங்கு வந்து கொண்டிருப்பதாக அல்லவா இளவழகன் சொன்னான்.

   ஒருவேளை இளவழகன் மனிஷா என்று கட்டி வைப்பார்கள் என்று அபரஞ்சி மேல் காதல் கொண்டு இருப்பானா? ஆனால் அப்படி ஒர் முறை கூடக் கண்டதில்லையே... காதல் என்ன ஊரரிய அறிந்தா செய்வது என்ற பதிலும் கிட்டியது.

      ஆடலரசனை நெருங்க விடாமல் தடுக்க வேண்டும்.

   அபரஞ்சியை விரும்பியது அவன் மட்டும் தான் என்றே எண்ணிக் கொண்டான்.

    அதிகாலை அலாரம் அடிக்க மெர்லின் உடலை முறுக்கி எழுந்தாள்.

    கதவு திறந்து பால்கனி வழியே எட்டி பார்த்தாள். அங்கே சாலையின் ஹாரன் சத்தம் அதிகமாக ஒளியை எழுப்பியது.

     இங்கு ஆடலரசனோ மெர்லின் தங்கியிருந்த ஹோட்டலிலே ஒர் அறையை எடுத்து காலையிலேயே பீரை வரவழைத்து அருந்தி கொண்டிருந்தான்.

மெர்லினை தேட வேண்டும் அவனுக்குள்ளும் சில கேள்விகளுக்கு விடை வேண்டும்.

சர்வேஷோ காலையிலே குளித்து முடித்து விசிலடித்துக் கிளம்பிக் கொண்டிருந்தான்.

சாந்தனு ஹாலிருந்து கவனித்து "என்னடா பாட்டும் கூத்துமா? எங்க வெளியே இவ்ளோ குயிக்கா போற?" என்றதும் "ஆசிரமம் டா." என்றான்.

செல்லும் பொழுது மறக்காமல் அந்தப் பிரேஸ்லேட்டை எடுத்தான். அதனை இம்முறை பெட்டியில் எடுத்து செல்லவில்லை. தனது கால் சட்டை பேண்டில் எடுத்துக் கொண்டான்.

சாந்தனுவிற்குக் குழப்பமாகவே இருந்ததது. இவன் எப்பவும் கொலை மரணம் இப்படிதானே புலம்புவான். இன்னிக்கு ஹாப்பியா இருக்கான்
வேற ஏதாவது காரணம் இருக்கா... என்றவன் சர்வேஷை பின் தொடர்ந்தான்.

சர்வேஷ் ஆசிரமம் வழி வரவும் சலிப்படைந்து தொடர்ந்தான். ஆசிரமம் வாசலுக்குள் சென்று நிறுத்தி செல்லவும், சாந்தனு "சே இவன் நேற்று வரலை என்று இன்று வந்திருக்கான். நான் தான் என்னவோ ஏதோனு இருக்கேன். நேற்று வந்த அந்த இருவர் இன்னிக்கு வருவாங்களா சந்தேகம் தான்.

சாந்தனு தனது இருப்பிடம் செல்ல திரும்பினான்.

சர்வேஷ் சற்று நேரம் ஆசிரமத்தில் இருந்து நேற்று தன்னைத் தேடியவரை கேட்டுக் கொண்டு கிளம்பினான்.

பைக்கை எடுத்து உயிர்பித்துக் காதில் ஹெட்செட் மாற்றி மெர்லினுக்கு அழைத்தான்.

"ஹாய்... எழுந்தாச்சா...?"

"இரண்டு நாளுக்கு முன்ன வரை மேம்... சொல்லுங்க மேம் பேசினவன் டா நீ. இப்ப என்ன உரிமையா ஹாய் எழுந்தாச்சானு குவெஸ்டின் கேட்கற." என்று மெர்லின் கேட்டதும்

"உரிமையானவள்னா தானா உரிமை எடுத்துக்கணும். அதுவுமில்லாம எனக்கா பிறப்பெடுதது வளர்ந்தவள் நீ." என்று சிரிப்பது மெர்லினின் போனில் வரை கேட்டது.

"சிரிக்காத... பத்திட்டு வருது"

"நான் ஹோட்டலுக்குத் தான் வர்றேன் சேர்ந்து சாப்பிடலாமா?"

"ஹோட்டல் சேஞ்சு பண்ணணும் ஜாஸ்மின் ரொம்பக் கேள்விக் கேட்கறாங்க." என்று பேசியதும் சர்வேஷ் அமைதியாக மாறினான்.

"ஜாஸ்மின்... யூ மீன் மல்லி...?" என்று கேட்டதும்.

"அப்படித் தான் தோன்றுது. இந்தக் காலத்தில் இருக்கற முகமே மாறி வித்தியாசமா இருக்கா."

"மிஸ்டர் இளவழகன் என்ன பண்ணிட்டு இருக்கார். போட்டுத்தள்ளலையா?" என்றான்.

"காரணமே இல்லாம சாகடிச்சு. என்ன பண்ண போறிங்க. எனக்குக் காரணம் தெரியணும். அப்பா அம்மா வேற கிளம்பி இங்க தான் வர்றாங்க. அவங்களைச் சேவ் பண்ணிட்டு பிறகு தான் கேட்கணும்." என்றாள்.

"உன்னை விரும்பின ஆடலரசன் இன்னமும் சாகலை. அட்த சேம் மல்லி என்ன எண்ணத்தில் இருக்கானு தெரியலை. மேபீ உன்னைத் தேடி நான் வருவேனு வெயிட் பண்ணுறாளோ...?"

"ஆமா அவ உன்னை விரும்பினா தேடி நீ வருவதற்குக் காத்திருக்கா... வந்து அவளையே கட்டிக்கோ." என்று எரிந்து விழவும் சர்வேஷ் சிரிப்பது கேட்டுக்கொண்டே இருந்தது.

"ஹலோ நான் இப்ப போறேன். ஜாஸ்மின் கூப்பிடறா." என்று கத்தரித்தாள்.

"டேக்கேர். நான் அங்க தான் வர்றேன்." என்று வேகத்தைக் கூட்டினான்.

இளவழகன் சாப்பிடும் ஒவ்வொரு பொருளையும் நுகர்ந்து விஷமற்றது என்று ஊர்ஜிதம் செய்தே அருகே வைத்தான்.

ஜாஸ்மினும் எல்லாவற்றிலும் சுவைத்து பார்த்து வைக்கவும் மெர்லின் அவளை விசித்திரமாகப் பார்த்தாள்.

"என்ன பார்க்கற உன்னை என்னை நம்பி அனுப்பி இருக்காங்க அதனால உன் உயிர் என் உயிரை விட முக்கியம்" என்று ஜாஸ்மின் பேசவும் இளவழகன் ஸதம்பித்து நின்றான்.

இதே வார்த்தையை மரிக்கொழுந்து கடைசியாகத் தன்னைச் சந்திக்கும் பொழுதும் கூறினாள்.

அதன் பின் தான் சென்று யவனரதி இருப்பிடம் அடைந்தோம்.

மரிக்கொழுந்தும் இறந்தது எப்படி? என்றவனின் கேள்வி பிறக்கவும் மெர்லின் தேடி செல்ல, அவசர அவசரமாக மெர்லின் தாய் தந்தையரை அறைக்குள் அழைத்து முடித்திருந்தாள்.

"ஆன்டி அங்கிள் இனி இங்க தங்கறது சேப்டி இல்லை. நீங்க வேறயிடத்துக்குப் போயாகணும். கேப் புக் பண்ணிட்டேன். சாப்பிட்டு உடனே போங்க." என்று வந்ததும் அவசரப்படுத்தினாள்.

"என்ன ஆபத்து. மல்லி உனக்கும் எங்க குடும்பத்துக்கும் என்ன தொடர்பு? சாகறது கூடப் பரவாயில்லை. ஆனா எதுக்கென்றே தெரியாம இறப்பது ரொம்பக் குழப்பமா இருக்கு" என்று மெர்லின் கேட்கவும் ஜாஸ்மின் மெர்லினை விழியகற்றாது பார்த்தாள்.

"அபரஞ்சி... உனக்கு என்னை அடையாளம் தெரிந்துடுச்சா.... நீ மல்லினு கூப்பிடறியே" என்று கண்ணீரோடு கேட்டு முடித்தாள்.

அதே நேரம் அழைப்பொலி கேட்கவும் இளவழகன் தன் மாயத்தில் பார்த்து அது சர்வேஷ் என்றதும் கதவை திறக்க வைத்தான்.

தானாகத் திறந்த கதவை கண்ட ஜாஸ்மின் மெர்லின் முன் வந்து நின்றாள்.

தன்னைக் காக்க முன் வரும் ஜாஸ்மினை கண்டு குழம்பி நிற்க, சர்வேஷ் கிருஷ்ணனை கண்டு காலில் விழுந்து வணங்க, அவருமே கட்டி அணைத்து முடித்தார்.

தபித்தாளிற்கோ "என்னயிது காலம் கடந்து திரும்பவுமா... சர்வேஷ்..." என்று நெற்றியில் ஆசிர்வதிக்க, ஜாஸ்மின் சர்வேஷை கண்டு ஒதுங்கி நின்றாள்.

மெர்லின் ஜாஸ்மின் நழுவுவதைக் கண்டு அவளை நிறுத்தி, உனக்கும் எங்க குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம். சொல்லு..." என்றதும்.

"நான் விரும்பினேன் அதான் காரணம்" என்று சர்வேஷை கண்டவள் அமைதியாக நின்றாள்.

-🩸🩸🩸🩸🩸

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு