சிரமமில்லாமல் சில கொலைகள்-21(final completed)

 


🩸-21 Epilogue

நியூயார்க் வந்தப்பிறகு மெர்லின் முதல் வேலையாக தன் மேற்படிப்புக்கு சீட் வாங்கி முடித்தாள்.
 
   சாந்தனு இறந்த மூன்றாம் நாள் மெர்லின் அவள் பாட்டிற்கு உறங்க, அவள் மேனியில் ஏதோ ஊர்வதை உணர்ந்தாள்.

     அரையுறக்கத்தில் அது தன்னை ஆட்கொள்ளும் திகிலோடு வியேர்த்து விழுந்தடித்து எழவும் இளவழகன் முன் நின்றான்.

     "என்னாச்சு யவனா?" என்றான் இளவழகன்.

      "ஏ...ஏதோ ஊர்ந்தது மாதிரி.... ப... பயமா இருக்கு இளா." என்றாள்.

     "துர்வனின் முழுவுருவம் கண்டு குழம்பி போய்விட்டாய். சற்றே இதமான மனநிலைக்கு செல். ஆதவனை பற்றி முற்றிலும் மறந்து உன் தினசரி பணியினில் நாட்டம் செலுத்து." என்று போர்வையை போர்த்தி விட்டான்.

     "இளா... எப்பவும் என் கூட இருப்ப தானே?"

    "என் ஆன்மா சாந்தி அடைந்த பொழுதிலும் நீ இருக்கும் வரை நானும் இருப்பேன் உன் துணையாக" என்று கிளம்பியது.

     இளவழகன் கண்களோ மெர்லின் அறையை விட்டு வந்ததும், அவன் கையை இறுகப் பற்றியிருந்தான்.

    "என்ன ஆதவா... ஆன்மாவாக வந்தப்பின் என்னால் உன்னை ஒன்றும் செய்ய இயலாது என்று என் யவனாவிடம் அத்துமீறி புழுவாய் ஊர்ந்து செல்ல துணிந்தாயா?" என்று காட்டு கத்தலில் கத்தினான்.

     எங்கும் நிசப்தமிருந்தாலும் இளவழகன் குரல் ஆதவனின் செவிப்பறையை மட்டும் கிழித்தது.

     ஆதவன் இளவழகனை போல நிறைவேறா ஆசையென்றதால் ஆன்மாவாக அலைந்த பொழுதிலும், அவனின் பேராசையோ யவனரதியை தீண்டிடவே சென்றது.

    இளவழகனை மீறி சாதிக்க இயலும் என்று இறுமாப்பாய் இருந்திட இளவழகனோ ஆன்மாவாக இருந்தாலும் கையை சிறையாக்கி அழைத்து வந்தான்.

    "உன் உயிரை உருவி இரத்தத்தை பஸ்மமாக்கி இதயத்தை கருகிட வைத்து வதைக்க எண்ணினேன். ஆனால் உன் பந்தத்தாலே உயிர் துறந்தாயே என்று விட்டுவிட்டேன். எப்பொழுது யவனரதியை மீண்டும் தீண்ட முயன்றாயோ இனி நீ ஆன்மாவாக கூட இப்பிரபஞ்சத்தில் அலையக்கூடாது." என்று பொற்காசுகளை பதுக்கும் பேழையில் ஆதவனின்(சாந்தனு) ஆன்மாவை போட்டு பூட்டினான். அவன் ஆன்மா விடுபடாமல் இருக்க, தன் தங்க வாளை அதில் இடையில் சொருகி முடித்தான்.

   "நீ வெளிவந்தால் இந்த இளவழகன் தங்கவாள் என்னிடம் வந்து  அறிவித்திடும்." என்று நியூயார்க் ஹட்சன் நதி வழியாக சென்றான்.

    இளவழகனின் எண்ணம் அறிந்த ஆதவன், "இளவழகனே என்னை விட்டுவிடு. நான் பேழையில் அடைப்பட விருப்பமில்லை." என்று அலறினான்.

      ஆதவனின் அலறல் செவிமடுக்காது ஹட்சன் நதியில் அந்த பேழையை ஒர் குறிப்பிட்ட இடத்திற்கு அடியில் சென்று விடுவித்தான்.

      "ஜலசமாதியில் நிரந்தரமாயிரு" என்று இளவழகன் மீண்டும் மெர்லினின் மெய் காவலாளியாக, நண்பனாக மாறியிருந்தான்.

     மெர்லின் பெற்றோர் அவளாக சர்வேஷ் பற்றி பேசுவாள் என்று  காத்திருக்க, மெர்லினோ படிப்பில் ஜாயின் செய்து கூடவே பார்ட் டைம் ஜாப்பாக தன் வரைந்ததை காட்சிக்கு வைக்கும் அளவிற்கும் வரைந்திருந்தாள்.

     அடிக்கடி ஜாஸ்மினோடு ஸ்கைப்பில் பேசி நட்பை தொடர்ந்தாள். ஆரோல் அங்கே ஜாஸ்மினோடு பார்கர் ஷாப் நிர்வாகம் செய்ய ஆரம்பித்திருந்தான். அதற்கு தங்க அவன் பணியுரிமை பெறவே அவனுக்கு சரியாய் இருந்தது.

    அவனுக்கு தன்னால் ஒர் பெண் இரண்டு ஜென்மம் காதலில் விழுந்த மலைப்பு, தானாக அவள் கூடவே நிழலாக தொடர முடிவே செய்து விட்டான்.

     வருடங்கள் கடந்தது சர்வேஷ் மட்டும் தனித்து நின்றான்.

     தபித்தாளே அன்று வாய் விட்டு கேட்டார்.

     "சர்வேஷ் பற்றி ஒர் வார்த்தை விசாரிக்கலையா மெர்லின். அவன் இருந்த இடத்திலருந்து வேற வீட்டுக்கு மாறிட்டான். தெரியுமா?" என்றார் தபித்தாள்.

    "அவரை பற்றி தெரிந்து என்ன பண்ண போறேன்." என்றாள் விட்டேர்த்தியாக.

     "அவன் உன்னை விரும்பியவன் மெர்லின்." என்று தபித்தாள் கூற கிறிஷ்டோபரோ, "இளவழகனா இருந்தப்பொழுதும் சரி, சர்வேஷா அபரஞ்சியை விரும்பிய பொழுதும் சரி உன்னை மணக்க துடிச்சவன் மா. இப்பவும் விரும்பியவன் அவனை பற்றி கேட்டறிந்து கொள்ள மாட்டியா?" என்றார்.

      "டேட்... இளவழகன் யவனரதியா என்ன விரும்பினார். எனக்காக இறந்தார். இதோ என் நண்பனா என்னோட தான் இருக்கார். உங்க கண்ணுக்கு தெரியலை. பட் என்னோட எப்பவும் அதே அன்போட இருக்கார். சர்வேஷ் அபரஞ்சியா இருக்கறப்ப நீங்களே தள்ளி தானே நிறுத்தினிங்க. இப்ப என்ன புதுசா... டேட்.. அத்தோட நான் அவனை பார்த்ததே ஒரு வாரம் இருக்குமா...?

   முதல் நாள் மிஸ்பிகேவ் பண்ணின ஆளை நிறுத்தி பேசி கை கொடுத்தேன். அடுத்த நாள் மீட் பண்ணி கையிடா வந்தார். தண்ணீரில் விழுந்தோம். அப்பவே..." நிறுத்தினாள்.

    அப்பவே முத்தமிட்டு தன் உரிமையை நிலைநாட்டினான்.

   பெற்றோர் தன்னை பார்க்கவும் தன்னிலை மறைத்து, "அடுத்த நாளே நீங்க வந்துட்டிங்க. இரண்டு ராளில் சாந்தனு ஆதவன்னு தெரிந்து எல்லாம் முடிஞ்சிடுச்சு. ஒர் ஐந்து நாளில் பெரிசா என்ன பாதிப்பு ஏற்படுத்தினார். அதுவும் காதல்னு" என்று சாப்பிட்டு அவள் பாட்டிற்கு எழுந்து கிளம்பினாள்.
 
      சர்வேஷ் கிறிஷ்டோபர் போனில் வீடியோ வழியாக அனைத்தையும் கேட்டு விட்டு சிரித்து கொண்டான்.

     "சர்வேஷ் கேட்டுச்சா... என்ன செய்ய பா." என்று தபித்தாள் அம்புஜமாக கவலைக்கொண்டார்.
 
     "பரவாயில்லை அத்தை. அவ காதலிக்கலைனா நீங்க அத்தையில்லைனு ஆகிடுமா. அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தேன். நீங்க கிடைச்சிங்களே போதும்." என்று நிறைவாக மனம் வருத்தப்படாது பேசி வைத்தான்.

     இரண்டரை வருடங்களுக்கு பிறகு....

       'வேஷ்டி கட்ட கூட தெரியாதவனுக்கு எல்லாம் கல்யாணம்' என்று சர்வேஷ் ஆரோலுக்கு கட்டி முடித்தான்.

      தபித்தாளோ ஜாஸ்மினுக்கு மடிசார் கட்டி புகைப்படம் எடுத்தார்கள்.

      மல்லியாக ஆடலரசனோடு கனவு கண்ட கோளம் என்று ஜாஸ்மின் ஆரோலிடம் கூறியிருக்க இந்த ஆசையை விட்டு வைப்பானேன் என்று ஆரோல் சர்ச் போவதற்கு முன் புகைப்படம் எடுக்க தான் இத்தனை போராட்டம்.
  
     "ஆன்டி மெர்லின் வருவா தானே? சர்ச் போக அடுத்து ரெடியாகிடுவேன். இன்னும் அவள் வரலையே?" என்று ஜாஸ்மின் கேட்டு முடிக்க,

      "அவ நேரா கல்யாணத்துக்கு வந்திடறதா சொன்னா மா. அதான் அவ நிழல் கூடயிருக்காமே" என்று அணிகலன்களை அணிவித்தார்.

    சில பல நிமிடம் ஜோடியாக புகைப்படங்கள் எடுத்து முடித்து ஆரோல் கோர்ட் அணிந்தும் ஜாஸ்மின் வெந்நிற கவுனை அணிந்தும் தயாரானாள்.

       சர்வேஷ் எட்டி எட்டி வந்தவர்களில் மெர்லின் தென்படுகின்றாளா என்று தேடினான்.

        நேரம் நெருங்கியதே தவிர அவளை காணவில்லை.

        சர்ச்சில் மோதிரம் மாட்டி பாதர் இருவரிடமும் சம்மதத்தை கேட்டு நிற்க, அங்கே தனியாக பாதையில் தேவதை போல சேலையில் பவனி வந்தாள். சர்வேஷ் இருக்குமிடம் பார்வை திருப்பாமல் தனித்திருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

      கூடவே இளவழகனும் வரவும் சர்வேஷ் அதை நன்றாகவே உணர்ந்தான்.

    அவளை கண்டு சாதரணமாக பார்வையை திருப்பி, கைகட்டி ஆரோல் ஜாஸ்மினை வேடிக்கை பார்த்தான். மனமோ குரங்காக அவளின் தற்போதைய தோற்றத்தில் அவன் மனம் முற்றிலும் இழுந்து தறிக்கெட்டு போனது.

     திருமணம் மோதிரம் மாற்றி இனிதாய் முடிந்தது. போட்டோ எடுத்து முடித்து

     மெர்லின் தன் சேலை மடிப்புகள் கலையாது நடந்தவள் சர்வேஷ் அருகே வரவும் மூர்ச்சையடைந்தான்.

     அனைவரும் அருகேயிருந்த நட்சத்திர ஹோட்டலில் உணவுக்கு ஹாலை புக் செய்திருக்க, ஜாஸ்மினின் தெரிந்தவர்கள் அலுவலக நட்புக்கள் வந்து உணவுண்டு களித்திட்டனர்.

        சர்வேஷின் அருகே தபித்தாளிடம் அமைதியாக வந்து, "அம்மா..." என்று கண்களை பொத்தவந்தாள்.

    தபித்தாளோ, "சர்வேஷ் ஆரோல் உன்னை விட சின்னவன் கல்யாணம் பண்ணிட்டான். நீ ஏன் தனிமரமா இருக்க. கல்யாணம் பண்ணிக்கலாமே." என்று வருத்தமாக கேட்டார். சர்வேஷ் வயது முப்பதை தொட்ட காரணத்தால் இப்படி கேட்டு விட்டார்.

      "அத்தை எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு. இரண்டு குழந்தைகள் இருக்காங்க" என்றான். இதை கேட்டு தபித்தாள் தன் மகள் இவனோடு வாழ கொடுப்பினை இல்லையே என்று வருந்தினாலும் அவன் மணம் முடித்தது எண்ணி திருப்தியடைய, மெர்லினோ அதிர்ந்து போனவளாய் மாறினாள்.

     "அவளை எனக்கு காட்ட மாட்டியா?" என்று கேட்டதும், "திருமணத்துக்கு வந்திருக்கா காட்டறேன் அத்தை." என்றதும் மெர்லின் இடத்தை விட்டு தங்கிருக்கும் ஹோட்டலுக்கே செல்லும் மனநிலையில் விருவிருவென நடந்தாள்.

    சேலை இம்முறை தடுக்க, அதே நேரம் இரு குழந்தைகள் அவள் மீது மோதியது.

    பூந்தளிர் கைகளில் எழ போராட, அக்குழந்தையை பிடித்து நிற்க வைத்து அந்த குழந்தையிடம் சர்வேஷின் சாயலை தேடினாள்.

     இது சர்வேஷ் குழந்தையாக இருக்குமோ? என்று அவள் சிந்தனை தறிக்கெட்டு ஓடியது.

     சர்வேஷோ எங்கே விட்டால் அவள் ஓடுவாளென பின் தொடர்ந்தவன், "அது என் குழந்தை இல்லை." என்று கூறியதும் மெர்லின் இயல்பாய் இருப்பதாய் காட்டி நகர, "என் ஓய்ப் பார்க்காம போற?" என்றான்.

      மெர்லினோ பல்லிடுக்கில், "இரண்டு ஜென்மம் காதலிச்சவனா டா நீ. இரண்டு வருஷம் காத்திருக்க முடியாது. அதுக்குள்ள இரண்டு குழந்தை வேற... தள்ளு... என்னை அழ வைக்காதே. ஐ ஹேட் யூ." என்று நகர்ந்தாள்.

     அவள் கரம் பற்றி அங்கே இருந்த ஒர் அறையில் அழைத்து சென்றான். இந்த இந்த போன்ல கேலரி ஓபன் பண்ணு. என் ஓய்ப் மனைவி போட்டோ இருக்கு." என்றான்.

      "ஒன்றும் தேவயில்லை. நீயே பார்த்துக்கோ. விடு என்னை." என்று திமிரி வெளியே செல்ல முயன்றாள்.

    அவனோ அவளை விடுவதாக இல்லை என்பதாய் கையை பற்றி தன் பக்கம் இழுத்தான்.

      அவள் அதிகம் விலக போராடவும் அதரத்தை தனதாக்கி அவளை பேசவிடாது நிறுத்தினான்.

     அவன் முத்தம் அவளை அமைதிப்படுத்தியது. சூழலை மறக்க வைத்தது.

      சற்று நேரம் கழிய கீழ்உதட்டை வருடி விடுவித்தான்.

      "இப்ப பாரு." என்று கொடுக்க, எந்திரம் போல போனில் கேலரி ஓபன் செய்தாள்.

     அதில் இருந்த புகைப்படத்தை எல்லாம் கண்டவள் விழி விரிந்து அவனை கண்டு நாணினாள்.

   தன் கள்ளத்தனத்தை கண்டு விட்டானே என்றும் அவன் தனக்கே என்ற நிம்மதியும் சேர, அவனை இறுக்கமாக அணைத்து கொண்டாள்.

     "எப்படியிருக்கு... பேமிலி போட்டோ." என்றான்.

      "திருட்டு பயல் நீ... இது எல்லாம் நான் வரைந்தது. இங்க எப்படி? இளவழகன்?" என்று அவனை தேட, இளவழகன் அங்கு இல்லை.

     "அவனே தான். உன்னை அனுப்பிட்டு நிம்மதியா இருக்கேனா அது இளவழகன் இருக்கான் என்ற தைரியம் தான் மெர்லின்.

     அவன் தான் நீ என்ன பண்ணற, ஏது பண்ணற உனக்கு என்ன ஆபத்து வந்தது, எப்படி ஹாண்டில் பண்ணற, எப்படி படிக்கிற எப்படி வரைகின்ற என்ன வரைகின்ற வரை அப்டேட் பண்ணுவான்.

     இளவரசியா இளவரசனா இருந்து நம்ம கல்யாணம் பண்ணிருந்தா இப்படி தான் இருக்கும். தத்ரூபமா வரைந்திருக்க டி" என்றான்.

    "இதுவா.... இளவழகன் என்ன தான் மெர்லின் என்று என்னை ஏற்றுக்கொண்டாலும் அவருக்கு யவனரதியோட வாழ முடியலை என்ற வலி கவலை இருந்தது. அதான் அவருக்காக இப்படி வரைந்தேன்..

    இது ஹோமகுண்டகம் அருகே இருந்தா எப்படின்னு, இது பொன்தாலி அணிந்து அவரோட நடக்கற மாதிரி, அவரோடு தனியா யவனா வெட்கப்பட்டு மறைந்து இருப்பது இதெல்லாம் இளவா-க்கு நான் வரைந்து தந்த சின்ன சின்ன சந்தோஷம்." என்று கூறினாள்.

    ஆம் இளா மெர்லின் தற்போது நண்பர்கள். யவனா இளா வாழ்க்கை எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்ற கற்பனையை தூரிகை மூலமாக ஓவியம் தீட்டினாள் மெர்லின். 

    இளா சொல்ல சொல் மனதில் கற்பனை செய்து அது போன்றே வரைந்தாள். இளவழகன் யவனாவை ஓடிபிடித்து தூக்கி, கொஞ்சி நிறை மாத கர்ப்பமாக, இளவழகன் அதற்கு வளையல் அணிவித்து. தொட்டிலில் ஆண்குழந்தை என்றும் அதன் பின் பெண் குழந்தையென்றும் வரைந்திருந்தாள்.

    இளவழகன் வாழ்ந்திருக்க வேண்டியதை ஓவியமாக வரைந்து அவனுக்கு கொடுத்தாள். இளவழகன் அந்த ஓவியத்தை எல்லாம் தன் இமை வழியே சர்வேஷிற்கு காட்டினான். அதை அவன் தன் மேமிராவில் பதியவைத்தான்.

     இது இளவழகன் என்ற நண்பனுக்காக என்று சர்வேஷ் எண்ணியிருக்க, மெர்லின் அதோடு அபரஞ்சி-சர்வேஷ் என்றும் வரைந்து அவர்கள் வாழ்க்கையையும் ஒவ்வொரு விதமாக காலம் மாற்றி  வரைந்து இருந்தாள்.

    குளத்தின் படித்துறையில் சர்வேஷ் அபரஞ்சி திருமண கோலத்திலும், சில ஓவியம் தன் பெண் குழந்தையோடு மீனுக்கு இரை போடுவதாகவும், அடுத்த முறை வயிற்றில் ஒர சிசுவோடு அபரஞ்சி அமர்ந்திருக்க, சர்வேஷ் தன் மூத்த பெண் குழந்தையோடு மீனுக்கு இரை போடுவதாகவும், என்று அவர்கள் காலய்யில் கண்ட வீட்டில் வைத்தும் கோவிலில் வைத்து தீட்டியிருந்தாள்.

    அதனாலே சர்வேஷ் மனம் அவள் மனதில் தான் இருக்கின்றோம் என்று நிம்மதியடைந்தான்.
  
    இரண்டு ஜென்மம் காத்திருந்தவனுக்கு அவள் சொல்லாமல் காத்திருக்க தெரியாதா என்ன?

    "எனக்கு ஒர் டவுட்?" என்றான்.

    "என்ன?" என்று மெர்லின் கேட்க "யவனா-இளாவா இருந்தப்ப நமக்கு முதலில் ஆண் குழந்தை வரைந்திருக்க, பிறகு பிண் குழந்தை வரைந்திருக்க. ஆனா அபரஞ்சி-சர்வேஷ் காலத்தில் பெண் குழந்தையை முதல்ல வரைந்திருக்க, அதுக்கு பிறகு வயிற்றில் கரு இருக்கு. அது ஏன்." என்றான்.

     "அதுவா.... ராஜா காலத்தில் ஆண் குழந்தைனா வாள் பயிற்சி செய்து என் மகனை இப்படி வளர்ப்பேன்னு அடிக்கடி இளா சொன்னான். அதான் அப்போ ஆண் குழந்தை முதல்ல வரைந்தேன்.

அபரஞ்சியா இருந்தப்ப நீ பெண் தான் பிடிக்கும்னு இருந்த அதான் பெண்குழந்தை." என்று விளக்கம் அளித்தாள்.

      "எனக்கு ரெண்டு குழந்தையும் பிடிக்கும்..." என்றவன் பார்வை அவள் உதட்டில் நிலைத்தது.

     "ஆறு மாதம் வெயிட் பண்ணுங்க. அங்க படிப்பை முடிச்சிட்டு இங்கயே வந்திடறேன். மத்த ரூல்ஸ் இருக்குல. இங்க குடியுரிமை வாங்கணும். ஆரோலுக்கு எத்தனை மாதம் ஆனது. வெயிட் பண்ணுங்க. இத போல நிறைவா திருமணம் செய்துப்போம்." என்று மெர்லின் இம்முறை அவன் உதட்டில் முத்தமிட்டு விடுவித்தாள்.

    தபித்தாள் கிறிஷ்டோபரிடம் தங்கள் திருமண வேலையை பார்க்க ஆரம்பித்திட கூறினான் சர்வேஷ்.

  மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீரை சுரந்தனர்கள்.

     "இளவா... இளவா..". என்று மெர்லின் பலமுறை கூப்பிட்டும் வராது போக சர்வேஷை கண்டாள். அவனோ "எங்க போயிருப்பான் தெரியலையே கொஞ்ச பொறு." என்று அறைக்குள் நுழைந்து இமை மூடி இளவழகன் என்று கூப்பிட, தலை மட்டும் கொண்ட இளவழகன் உருவம் தெரிந்தது. உடலோ சற்று தள்ளி ஒரு கையில் யாரின் உடலையோ இழுத்து வந்தது.

     தற்போது தான் அவ்வுடலை கொன்று இருப்பானோ என்னவோ கண்கள் மேல் சொருகி நாக்கு துண்டாக்கி அதிலிருந்து இரத்தம் கொட்ட துவங்கியிருந்தது.

     "யாரை டா சாகடிச்ச?" என்று பதறி ஆழ்ந்து நோக்கினான் சர்வேஷ்.

   தங்கள் சாமியார் என்று பார்த்த போலி சாமியரை தான் இளவழகன் கொன்றிருக்க, கண்களாலே "ஏன்..." என்றான் சர்வேஷ்.

     இளவழகன் காலத்து ஜோதிடனும் இவனே. அன்று பொய்யுரைக்காமல் இருந்தால் அனைத்தும் மாறியிருக்கலாம். செண்பா அவர்களின் பேச்சை கேட்டு பொய்யுரைத்தவனுக்கு இதுவே தண்டனை." என்று ஆற்றில் தூரயெறிந்தான்.

    சர்வேஷுக்கு என்ன சொல்லவென்று தெரியவில்லை. இளவழகனை கண்டிக்க இயலாது கொலைகளை வேடிக்கை மட்டுமே பார்த்து வியேர்த்திருந்தது அவனுக்கு.

     "இளவா... " என்று மெர்லின் பயத்தில் கூக்குரலிட "இங்கு தான் தங்களுக்கு தனிமை தந்து விலகியிருந்தேன்." என்று பவ்யமாக வந்து நின்றான்.
   
    'சர்வேஷோ நல்ல பண்ணற டா. ஆவியா இருந்துட்டு.' என்று மௌனமாய் தனக்குள் முணங்கினான்.

      மெர்லின் படிப்பு முடிய சர்வேஷுடன் திருமணம் என்று முடிவானது. என்றும் போல இளவழகன் மெர்லினுக்கு துணையாக அவள் வாழும் காலம் வரை நிழலாய் பாதுகாப்பான்.

     தம்பதியராய் சர்வேஷ்-மெர்லின் மாறும் நாட்கள் சில மாதங்களில் நிகழும். அதை இந்த ஜென்மத்தில் நடத்தி தன் கண்ணுற வாழ வைப்பான் இளவழகன் என்ற கருப்புருவம்.
  
      🩸🩸🩸 முற்றும் 🩸🩸🩸

   -பிரவீணா தங்கராஜ்.

    hi

   கதை முடிவுற்றது. கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. நிறை குறை இரண்டும் சொல்லுங்க. லாஜிக் மிஸ் பண்ணியிருந்தாலும் சொல்லுங்க. எடிட் பண்ண வசதியா இருக்கும். இது கேப் விட்டு கேப் விட்டு முன்ன பதிவு செய்தேன். எனக்கே லிசா பேரண்ட்ஸ் என்ன பெயரு, ஆரோல் பேரண்ட்ஸ் கு என்ன பெயருனு மறந்து ஒல்டு எபிக் படிச்சி தான் அகைன் எழுதினேன். தினசரி கேட்டதும் ஒர் இன்ட்ரஸ்ட்ல சரியா எழுதிட்டேனு நினைக்கிறேன்.  நான் எப்பவும் சுருக்கமா எழுதறேன். ஸ்பீடா போறேனு என் சக ப்ரெண்ட் எழுத்தாளர்கள் சொல்லறாங்க.
  பக்கம் பக்கமா எழுதறதை சில பேராலயே சரியா கொடுக்கறிங்க. சொன்னாங்க எனக்கு அதான் வருது போல.

   இயல்பாவே சோகம் எழுத யோசிப்பேன். வல்கறா எழுதவும் மாட்டேன்.

  படிக்கிறவங்களுக்கு எத்தனை சோகம் இருக்கலாம். ரிலாக்ஸ்காக படிக்க வந்தா நாமளும் கண்ணீரில் பிழிய கூடாது. அதே மாதிரி ஓவரா நாடக(சினிமா) தன்மையும் இருக்க கூடாதுனு நினைப்பேன்.

  ரியல்ல எப்படி நம்ம வாழ்க்கையில் நடந்தா எப்படி இருக்கும் என்ற கோணம் மட்டும் யோசிப்பேன்.

   பார்ப்பபோம் எழுத்து எண்ணங்களை பொறுத்து மாறும்.

உங்க ஆதரவும் உற்சாகமும் என்னை விடாது எழுத வைக்கும்.

நன்றி
பிரவீணா தங்கராஜ்.
   
 








Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு