சிரமமில்லாமல் சில கொலைகள்-18

 


🩸-18

     'நான் விரும்பினேன்' என்று ஜாஸ்மின் கூறியதும் இளவழகனும் சர்வேஷும் திரும்பி பார்க்க, ஜாஸ்மின் மெர்லினாவை பார்த்தாள்.
  
      நான் விரும்பிய விஷயம் மோகனுக்குத் தெரியாது. ஆனா மரிக்கொழுந்தா இருந்தப்ப நான் விரும்பியதை ஆதவனிடம் சொன்னேன்.

   ராஜக்குடும்பத்தில் காதலிச்சா வெற்றிப்பெறாதுனு அண்ணா என்னைச் சொல்லவிடலை.

      ராஜக் குடும்பத்தில் தங்கள் சுயநலத்துக்குத் தன் வீட்டு பெண்ணையே கூடப் பலிக்கொடுப்பாங்கனு பிறகு புரிஞ்சுது.

    மல்லியா இருக்கறப்ப காதல் வந்தாலும் அதை மறைக்கக் கற்றுக் கொண்டேன். 

      ஜாஸ்மின் போன் ஒலித்தது.

    "சாரி ஒன் செகண்ட்." என்று அட்டன் செய்தாள்.

      "மேம்... டூ யூ நோ ஆரோல். உங்க நேம் அண்ட் மெர்லின் நேமை கேட்டுட்டு ரூம் நம்பர் தெரிந்து வேகமாக அங்க தான் வர்றார். உங்களுக்கு அவரைத் தெரியுமா?" என்றதும் ஜாஸ்மின் உடனடியாக. "தேங்க்ஸ் பார் இன்பர்மெஷன் நான் பார்த்துக்கறேன்" என்று கத்தரித்தாள்.

    "ஆடலரசன் இங்க வந்துட்டு இருக்கார். தயவு செய்து உடனடியா கிளம்புங்க. லிப்டில் போக வேண்டாம் உடனடியாகப் போங்க." என்று பயந்தாள்.

      "நாம ஏன் போகணும் அவன் வரட்டும். என்னனு கேட்போம்" என்று மெர்லின் இனி ஓடப் போவதில்லை என்று சட்டமாக அமர்ந்தாள்.

     சர்வேஷ் கதவு அருகே காத்திருந்தான். ஆடலரசன் வரும் பொழுதே சற்று தள்ளாடியபடி வந்தான்.

     அவனுக்குத் தான் இருக்கும் இடத்தில் முதலில் மெர்லின் பெயரை கேட்டு பார்ப்போம் என்று அசட்டையாகக் கேட்டான். அவன் அதிர்ஷ்டம் கோவாவில் நாய் போல அலைந்தது போல இல்லாமல், உடனடியாக அப்பெயர் கொண்ட ஆட்கள் தங்கியிருக்கும் அறை எண் அறிய முடிந்தது.

    என்ன சுயநினைவோடு தான் பேச இயலாத நிலையில் நின்றான்.

     இதில் சர்வேஷ் அறைக்கு வந்ததும் ஒரடி தலையில் அடிக்க, திரும்பி பார்த்தவன் "சர்வேஷ்" என்று மயங்கினான்.
  
    இளவழகனோ கரும்புகையில் மெர்லினை மறைத்து பாதுகாப்பாக நின்றான்.

      ஆரோல் அரை மயக்கத்தில், "என்னை எதுவும் பண்ணிடாதே இளவழகா... என்னை விரும்பியவளை தான் நீ இரண்டு முறையும் காதலிப்பது சரியா?" என்று நியாயம் கேட்டுக் கொண்டிருந்தான்.
 
     "இவனைப் பிளேம்ஸ் போட்டப்பவே கையை உடைச்சிருக்கணும். பார்த்தியா என் எதிர்லையே கேட்டு நிற்கறான். பட் உன் காலத்தில் என்ன நடந்திருக்கும்?" என்று இளவழகனிடம் கேட்டான்.

    இளவழகனோ தனக்கு ஒன்றும் தெரியாதே என்று நின்றான்.

      "நீயெல்லாம் என்ன இளவரசன். இது கூடத் தெரியாம லவ் பண்ணிட்டு இருந்திருக்க" என்று சர்வேஷ் தலையிலடித்துக் கொண்டான்.

     "இல்லை.... ஆடலரசன் எண்ணம் எல்லாம் பாகீரதி மீது இருந்தது. ஆனால் பாகீரதி சாமர்த்தியமாகக் கவனத்தை யவனரதி மீது தள்ளிவிட்டது ஆடலரசன் அறியாதது.

    தீடிரென இளவழகன் யவனரதி என்றதும் ஆடலரசன் குழம்பி போனான். ஆனால் தங்கள் குடும்பமே யவனரதியை குழியில் புதைப்பதை அறிந்து பதறிவிட்டான்.

     ஆனால் எல்லாம் கைமீறிப் போனது. அபரஞ்சியைக் காப்பாற்ற கூட முயன்றார். ஆனால் உங்கள் அம்மா விடவில்லை. மனதில் அதே காதல் இருக்கும்." என்று ஜாஸ்மின் கண்ணீர் துளிகள் யாரும் அறியாமல் துடைத்தாள்.

   இளவழகன் கரும்புகை பார்த்து விட்டது. "அவனை விட்டு தள்ளிவிட்டு, இவள் யாரை விரும்பினால் என்று அறிவாய் சர்வேஷ்வரா" என்ற குரலில் சர்வேஷ் நடைப்பை அறிந்தவனாக.

     "நீ யாரை விரும்பின?" என்றதும் ஜாஸ்மின் தலைகுனிந்து நிற்க, ஆரோல் அரை நிலையில் தலையை நிமிர்த்திப் பதிலை கேட்க ஆர்வமானான்.

      ஜாஸ்மின் பதிலேதும் கூறாமல் ஆரோலை பார்த்து முடிக்கவும், ஆரோல் தன் பின்னால் யார் உள்ளார்கள் என்று திரும்பியவன் யாருமில்லை அப்படியென்றால் தன்னைத் தான் சொல்கின்றாளா? என்று தலையை உலுக்கி கண்களைக் கூர்த்தீட்டி பேசினான்.

      "நீ என்னையா சொல்லற... நீ... நீ யாரு.?" என்றான் குழற்வாக.

    "அபரஞ்சி கொடுத்த தீர்த்தம் அபரஞ்சி கொடுத்த பால் கொழுக்கட்டை, அபரஞ்சி கொடுத்த லெட்டர்னு நினைத்துக் கொண்டது எல்லாம் அபரஞ்சி இல்லை மல்லிகா. மல்லியான நான் தான் விரும்பினேன். 

   மரிக்கொழுந்தா இருக்கறப்ப உங்களிடம் காதலை சொல்ல முயன்றேன். ஆனா ஒர் இளவரசனை வைத்தியர் மகள் விரும்பியதா ஏற்றுக்க மாட்டாங்கனு அண்ணா சொல்லுச்சு.

     அதை மீறி மல்லியா பிறந்தப்ப உங்களிடம் என் காதலை சொல்லியும் நீங்க அபரஞ்சினு நினைத்துக் கொண்டு என்னைப் பார்க்கலை. ஒவ்வொரு முறையும் ஏமாற்றமா இருக்கும். அதனால் தான்  இந்த முறை ஏமாறப் பிடிக்கலை. என் கவனத்தை என் வாழ்க்கையை இறைவனோட காலடியில் காணிக்கையா வைச்சிட்டேன்.

       மெர்லின் சர்வேஷ் சேரணும்னு தினமும் பிராத்தனை செய்யறேன்.

       "எனக்கு ஜூரம் வந்தப்ப மண் சோற் சாப்பிட்டதாகக் கோவிலில் ஐயர் சொன்னாரே அந்தப் பொண்ணு நீ தானா? எனக்கு நான் விரும்பற மாதிரி அமெரிக்கவில் படிக்க அனுமார் சிலைக்கு நூற்றெட்டு முறை ஸ்ரீ ராமஜெயம் எழுதியது?

    எனக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் பொங்கல் புளியோதரை என் ஜன்னலில் வைச்சிட்டு போனது.?" என்று கேட்டதும் குரலே வராமல் ஜாஸ்மின் தான் என்று தலையை ஆட்டினாள்.

     சர்வேஷோ பாரு லவ் சொல்லலைனா கூட என்னவென்னவோ கொடுத்து எக்ஸ்போஸ் பண்ணியிருக்கா. நீயும் இருக்கியே. இதுல உன் கூடவே என் ஆவி சுத்துது. நீ என்னடானா என் லவ்ல இவ்வளோ கூட உணரலை" என்று தன் கையைச் சுருக்கி கேட்டான் சர்வேஷ்.

      "மல்லி..." என்று மெர்லின் கட்டிக்கொள்ள, "இப்ப இந்தச் சந்தோஷம் தேவையில்லாதது. நாம இங்க இருக்க வேண்டாம் அவன் இந்நேரம் நம்மளை தான் தேடிட்டு இருப்பான்." என்று மல்லிகா சொல்லி முடித்தாள்.

     "யா...யாரு...?" என்று திருப்பினான் சர்வேஷ். அதில் உச்சப்பட்ச கோபம் தாண்டவமாடியது.

      "எங்கண்ணா... மோகன்." என்றதும் அனைவரும் குழம்பி நின்றார்கள்.

      "ஆதவன்?" என்று இளவழகன் உருவம் உறுமியது.

      சர்வேஷ் அதனைக் கேட்டு, மோகன்னா இளவழகன் காலத்தில் முதல் முறை எங்களை எல்லாரையும் கொன்றது ஆதவனா?" என்று சர்வேஷ் கேட்டு முடித்தான்.

    "ஆமா... முதல்ல எங்கண்ணா ஆதவன் என்னிடம் இராஜ குடும்பத்தில் ஆசைப்படாதே என்று சொன்னப்ப. நான் கூட அளவுக்கு மீறி ஆசைப்பட்டுட்டோம்னு தான் என்னை நானே தேற்றிக்கிட்டேன். ஆனா யவனரதி-இளவழகன் திருமண அறிவிப்பு கேட்டதும் கோபப்பட்டு வீட்டையே இரண்டா மாற்றிட்டான்.

     எனக்கு முதலில் புரியலை. கேட்கவும் பயம். பிறகு தான் தெரிஞ்சது. ஆதவன் யவனரதியை விரும்பியது. யவனரதி எப்பவும் என்னோட விளையாடுவ. எங்க வீட்டுக்கு வருவ. அதில் மலர்ந்த காதல்.

   வைத்தியர்மகன் இராஜா மகளை விரும்பியதால் என்னை ஆடலரசனுக்குக் கட்டி வைக்க அதுக்கு மனசில்லை. உறவு முறை மாறும் தானே. அதை மனதில் வைத்து இப்படி நடந்து இருக்கு.

      இளவழகனுக்கும் யவனரதிக்கும் திருமணம் என்றதும் எங்கண்ணா கடத்திட்டு போயாவது யவனரதியை திருமணம் செய்து காட்டில் வாழ ஆசைப்பட்டுச்சு. அதோட நோக்கம் தான் அன்னிக்கு கோவிலுக்குப் போக இருந்த யவனரதியை பின் தொடர்ந்தான். ஆனா தன் மோதுவது இராஜ இடம் என்பதை அறிந்து அங்க வைத்தியரானா என் அப்பா தயாரித்த விஷத்தை எடுத்துக் கொண்டு முதலில் அரண்மனையில் இருந்த எல்லோருக்கும் கொடுத்துடுச்சு.

   யவனரதி கோவிலுக்குப் போய் வந்தப்பிறகு தான் உணவு சாப்பிடும்னு தெரிந்ததால அவளைக் காண போனான்.. ஆனா அங்க போவதற்குள் பாகீரதியோட அம்மா செண்பாவின் திட்டம் மூலமாக யவனரதி தீர்த்தம் குடிக்கவும் உயிர் போயிடுச்சு.

    வீட்டுக்கு வந்த பின் ஆதவன் அண்ணா கள் உண்டு புலம்பி இருந்ததைக் கேட்டேன். ஆடலரசனும் சாகடிச்சிட்டு அனைவரையும் சாகடித்துக் கள்ளுன்டு புலம்பவும் நானே விஷம் வைத்து ஆதவன் உயிரை எடுத்தேன். ஆடலரசன் இல்லாத உலகத்தில் நானும் இருக்கப் பிடிக்காமல் நானும் விஷம் அருந்திட்டேன்.

       மறுப்பிறவியா எடுத்தப்ப எனக்கு நினைவு இல்லை. சாதரணமா தான் அபரஞ்சியோடு தோழியா பழகினேன்.

      மோகன் அண்ணா மூலமாகச் சர்வேஷ் அபரஞ்சி விரும்புவது தெரியும். அதனால ஆடலரசன் மேல அபரஞ்சி விரும்ப மாட்டா அதே போல  ஆடலரசனும் விரும்பாதுனு இருந்தேன். எனக்குக் காதல் வந்தப்ப அவருக்குச் சிலதை நானா கொடுக்க முடியாம அபரஞ்சி போகறப்ப வைத்தேன். அவர் அபரஞ்சி தான் தன்னை விரும்புவதா எண்ணிட்டார். அபரஞ்சி எது கேட்டாலும் ஆடலரசன் ஓடி வருவார். அப்போ கூட எனக்கு அபரஞ்சியை விரும்பறாருனு தெரியாது.

   மோகன் அண்ணா தான் ஒர் முறை அண்ணனும் தம்பியும் விரும்பறாங்க. இதுல மனிஷா வேற சர்வேஷை விரும்பறா... எங்க போய் முடிய போகுதோ என்று பேசியது. அப்ப தான் கஷ்டமா போச்சு.

    எனக்கும் ஆடலரசனிடம் நேர்ல சொல்ல தைரியம் இல்லை. வீட்லயும் மோகன்அண்ணாவுக்கு நான் விரும்பியது தெரியவும் அவசரமா மாப்பிள்ளை பார்த்துடுச்சு. இதுல என்னனா நான் விரும்பியுது அதுக்கும் தெரியாதுனு தான் நினைத்தேன்.

    ஆனா நான் திருமணம் ஆனப் பின்ன மனிஷாவுக்கும் சர்வேஷுக்கும் திருமணம் ஆகும். அண்ணா விரும்பிய பெண்ணைத் தம்பிக்கு கட்டி வைக்க மாட்டாங்க. அதுக்குள்ள அங்கிளிடம் பேசி அபரஞ்சியைக் கட்டிக்க ஆசைப்பட்டுச்சு.

   என்னைப் பெண் பார்க்க வந்துட்டு போகவும் அபரஞ்சி வந்தா... அந்த வளையலை மாட்டிக்கிட்டு. எங்கண்ணா மோகனுக்கு வெறியே வந்துடுச்சு.

    என்னிடம் விழாவுக்குச் செய்த பாயசம் கொடுத்து எல்லாருக்கும் கொடுக்கச் சொல்லிடுச்சு. அதுல பயிருக்கு வாங்கின விஷம் கலந்து கொடுத்தது.

     அதோட திட்டமே அபரஞ்சி குடும்பத்தில எல்லாரும் இறந்துட்டா தனி ஆளா என் கூட வந்து தங்குவா. நான் கல்யாணம் ஆகறப்ப அதுக்கும் அபரஞ்சிக்கும் திருமணம் பேசி முடிக்க நினைத்தது.

     எல்லாருக்கும் ஊற்றிக் கொடுத்தேன். ஆடலரசனுக்குப் பாயசம் கொடுக்கறப்ப நானும் அதோட கிளாஸ்ல குடிச்சிட்டேன்.

     கோவிலில் அபரஞ்சி தண்ணீரில் முழ்கியப் பிறகு ஓவ்வொருத்தரா இரத்தம் வாந்தி எடுத்தப்ப தான் எனக்குள் மரிக்கொழுந்தா இறந்த என் வாழ்வு நினைவு வந்துச்சு.

    உயிரை கையில் பிடிச்சி இறக்க கூடாதுனு வைராக்கியத்தோட வீட்டுக்கு வந்தேன். எங்கண்ணா கோவில் தீர்த்தம் எப்பவும் வாங்கிக் குடிக்கும். அதுல விஷம் கலந்துட்டேன். அதுவும் என் கண் எதிர்ல குடிச்சி அதோட உயிரும் போகறவரை என் உயிரை இழக்காம போராடினேன். 

      இந்த முறை மெர்லினை பார்க்கறப்ப தான் எனக்கு என் கடந்த கால வாழ்க்கை முறை நினைவு வந்தது.

     இந்தமுறை என்னோட அண்ணா என் கூட இல்லை. ஆனாலும் மெர்லின் ஆரோலை பார்த்துட்டு வந்துட்டேன். மனிஷா இறந்ததும் ஆரோல் மெர்லின் சேர்ந்து போனதை தெரிந்த ஒருவர் மூலமா அறிந்து கொண்டேன்.

      சர்வேஷ் இல்லை... அதனால இவங்க சேரட்டும்னு வந்துட்டேன். ஆனா எல்லாரும் இறக்கறாங்கனு ஆன்டி சொன்னதும் பயம் வந்துடுச்சு.

    இங்க அனுப்ப வேண்டாம்னு சொல்லவும் முடியலை. சரி இரண்டு ஜென்மத்திலும் பகையா இருந்தது எங்கண்ணாவும் உங்க உறவுகளும்.

   உங்க உறவுகள் இறப்பை கேள்விப்பட்டேன். அதனால மோகனால பிரச்சனை வந்தா. இந்தமுறையும்  கொல்ல தயங்க மாட்டேன். ஆனா இந்த முறை என் தோழி மெர்லின் வாழணும்.

    அவளுக்குப் பிடித்த சர்வேஷ் அத்தானோட வாழணும். அப்ப தான் இந்த இரண்டு ஜென்மத்தோட காத்திருப்புக்கு பலன்." என்று பேசவும் இளவழகன் ஆன்மாவோ அதை ஆமோதிப்பதாகத் தலையசைத்தது.

       "சரி வாங்க ஆசிரமம் போவோம். என்னைத் தேடி நேற்று ஒர் பெண்ணும் ஆணும் வந்துயிருக்காங்க அட்ரஸ் வாங்கி இருக்கேன். அங்க போவோம். மேபீ அது மோகனா இருக்கலாம்." என்றதும் மற்றவர்கள் ஒருவருக்கொருவர் பார்வை பாரத்து கொண்டனர்.

     "எல்லோரும் போக வேண்டாம். மாமா அத்தை ஆரோல் நீ இங்கயே இருங்க." என்றான் சர்வேஷ்.

     "மன்னிக்கணும் நான் மெர்லின் கூடத் தான் இருப்பேன். அங்கிள் ஆன்டி ஆரோல் வேண்டுமென்றால் இங்க இருக்கட்டும். ஹோட்டல் மாற நினைத்ததே இவரால தான். புதுசா குழப்பம் செய்து மெர்லினுக்கு ஆபத்து ஏற்படுத்துவாரோனு பயந்தேன்.

     இப்ப அவருக்கு அபரஞ்சி தன்னைக் காதலிக்கலைனு தெரிந்து தெளிந்து தான் இருக்கார். இதே ரூமில் பாதுகாப்பா இருக்கட்டும். உங்க ரெண்டு பேரோட நானும் வருவேன்." என்றாள் ஜாஸ்மின்.

    "ஏற்கனவே இந்தக் கருப்புருவம் கூடவே சுத்துது. இதுல நீ வேறயா... நாங்க இரண்டு ஜென்ம லவ்வர்ஸ். பேசிக்க நிறைய இருக்கும் நந்தி மாதிரி வர்றேனு சொல்லற" என்றான் சர்வேஷ்.

      "ஜாஸ்மின் வந்தா நானும் வருவேன். நீங்க மட்டும் தான் இரண்டு ஜென்ம காதலர்களா... நாங்களும் தான் பா. என்ன என்னை விரும்பறவளை எனக்குத் தெரியலை." என்றதும் ஜாஸ்மின் கண்ணீர் உகுத்து நின்றாள்.

    "சரி சரி வாங்க போகலாம் இந்த அட்ரஸ் மயிலாப்பூர் நியர்ல இருக்கு." என்று சர்வேஷ் கூறவும் "அந்த அட்ரஸை காட்டுங்க" என்று ஜாஸ்மின் வாங்கிப் பார்த்தவள்.

    "இந்த அட்ரஸா...?" என்று ஜாஸ்மின் அப்படியே அமர்ந்தாள்.

  -🩸🩸🩸🩸🩸

- பிரவீணா தங்கராஜ்

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு