சிரமமில்லாமல் சில கொலைகள்-16

 


🩸-16

     போலிஸ் வண்டியின் சத்தம் கேட்க  மெர்லின் கண்கள் அதைத் தழுவி விட்டு சர்வேஷ் கைகளில் இருந்து தன் கையை உருவினாள்.

     "நான் கிளம்பணும் நேரமாச்சு." என்று நடந்தாள்.

     "இங்க என்ன நடக்குது. நேரமாச்சுனு கிளம்பற" என்றான் சர்வேஷ்.

     "என்ன செய்யணும். கண்ணுக்கு தெரியற எதிரியையே ஒன்றும் பண்ண முடியாது. இதுல யார் எதிரினே தெரியாம என்ன செய்ய. அதான் கண்ணுக்கு தெரியாத இந்த இளவழகன் இருக்கார்ல. பிறகென்ன" என்று தன் ஹீல்ஸ் செருப்பை அணிந்து தன் வெள்ளை டாப்ஸின் முழுக்கையை மடித்துக் கொண்டு நடந்தாள்.

     கூடவே சர்வேஷ் கிளம்பினான். இளவழகனோ மெர்லின் அருகே பாதுகாப்பு வீரனாக நடந்தான்.
   
     "எங்க தங்கியிருக்க? காலையில் பிக் அப் பண்ணிய ஹோட்டலா?" கேட்டான் சர்வேஷ்.

     "ஆமா." என்று மெர்லின் திமிராகப் பதிலளித்துச் செல்லும் வண்டிகளைப் பார்த்து வழியில் நடந்தாள்.

      கேப் புக செய்து காத்திருக்க, சர்வேஷோ மனதில் 'இரண்டு ஜென்மமா இவளை விரும்பி இருக்கேன். ஏதாவது ரியாக்ட் பண்ணறாளா? அமைதியா கிளம்பறதிலயே இருக்காளே. ஆளை பாரு வெள்ளை முயல் மாதிரி இருக்கா.

     அபரஞ்சியா இருந்தப்ப அடக்கமா இருந்தா. இப்ப என்ன எரிஞ்சி விழறா? யவனரதி கூடப் பேசினவரை கொஞ்சம் கொஞ்சிலாம் பேசினா." என்று ஆசையாகப் பார்த்தான்.

     மெர்லினோ இரண்டு ஜென்மமா என்னை விரும்பியவனின் வாழ்க்கையே அழிந்து இருக்கு. இனியும் இது தொடர கூடாது. எத்தனை உயிர்...?

     கடவுளே எனக்கு என்னவோ இது தொடரும்னு இருக்கு. உறவுகள் முழுக்க இறந்தும் மிஞ்சி இருப்பது யாரு என்பதாய் மெர்லின் யோசித்தாள்.

    சர்வேஷ் கேப் புக் செய்திடவும் இருவரும் ஏறியமர்ந்தனர். மெர்லின்  பேசவில்லை. ஆனால் சர்வேஷ் பேச முயற்சித்துத் திரும்பிக்கொள்வது கண்டிருந்தாள்.

     நிசப்தமான பயணத்தைக் கலைத்தது ஜாஸ்மினின் அழைப்பு.

    "சொல்லு ஜாஸ்மின்?" என்றாள் மெர்லின்.

     "என்ன சொல்லறது. நீ எங்க இருக்க? அங்கிள் ஆன்டி போன் பண்ணினாங்க. நான் ஜெபத்துல இருந்தேன் எடுக்கலை. நீங்க எங்கனு கேட்டுட்டு இருக்காங்க. நீ கிளம்பிட்டியா?" என்று கேட்டாள்.

    "அய்யோ... இங்க டவர் இல்லை. அதுவுமில்லாம நான் சைலண்டில் போட்டிருந்தேன். கொஞ்சநேரம் முன்ன தான் பார்த்தேன். சாரி." என்றதும் "சீக்கீரம் வா" என்ற குரலில் அதீத எரிச்சல் மேலோங்கியது.

சர்வேஷ் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தவன் "அங்கிள் ஆன்டி இங்க இல்லை, யார் போன்ல?" என்றான்.

"லுக் மிஸ்டர் சர்வேஷ் இது ஒன்றும் ஆதிகாலம் இல்லை. நான் உலகம் தெரியாம இருக்க. உங்களை விட எல்லா விஷயத்திலும் மெச்சூர்டு இருக்கு. இந்தக் கேள்வி கேட்டு ஏதோ நாயகன் நாயகியை காப்பாத்தற பிஸினஸ் எல்லாம் வேண்டாம். ஐ நோ வாட் ஐஅம் டூயிங்." என்று வெட்டிதெறிப்பது போலப் பேசினாள்.

இளவழகன் மெர்லினின் செய்கையில் அதிர்ந்தான். "கொழுப்பு... பிடிச்சவ" என்று சர்வேஷ் திட்டுவது இளவழகன் காதிலும் விழுந்தது.

இவளா நான் மனதை தொலைத்த யுவதி யவனரதி. காலம் மாற்றம் பெண்ணை மாற்றிடுகிறதே. அன்பு இரக்கம் என்பது வற்றிவிட்டதா? ஆடவன் கேள்விக்கு ஏகத்தாளமான பதிலா... வாழ்க கற்காலம். என் யவனரதி துடுக்கு பேச்சினாலும் குறும்பு பார்வையிலும் என்னை வீழ்த்தியவள். என்று எண்ண சர்வேஷ் மனம் 'மொசக்குட்டி மூஞ்சை பாரு' என்று திரும்பிக் கொண்டான்.

ஜாஸ்மின் பாவம் என் கூட இருக்காங்க. அதால அவங்களுக்கு எதுவும் ஆகக்கூடாது. எப்படியாவது தனியா வேற ஏரியா ஹோட்டலில் தங்கிடணும்.

ஹோட்டல் வரவும் மெர்லின் இறங்கி பாதித் தொகை கொடுக்க, மீதியை அவரிடம் வாங்கிக்கோங்க. என்று நகர, அவள் கையைப் பிடித்து நிறுத்தினான்.

"என்ன திமிரா... பிடி." என்று அந்தப் பாதித் தொகையையும் அவளிடம் திருப்பிக் கொடுத்து, டிரைவரிடம் அவனே முழுத்தொகை கொடுத்து அவன் பாட்டிற்குக் கிளம்பினான்.

இளவழகன் துணையாக மெர்லின் கூடச் செல்லவும் சர்வேஷ் தலையிலடித்துக் கொண்டான்.

என் ஆன்மா கூட எனக்குச் சப்போர்ட் இல்லை. மயக்கி வைச்சிருக்கா மகராசி என்று புலம்பினான்.

இளவழகன் கவனம் மெர்லினை சுற்றி வர யாரோ மெர்லின் அருகே வருவதை உணர்ந்து திரும்பியது.

மெர்லினின் வாயை பொத்தி சுவரோடு நிற்க வைத்தான் சர்வேஷ்.

முதலில் தன்னை யார் தீண்டுவது என்று அஞ்சி பயந்தவள் சர்வேஷ் என்றதும் அலட்சியமாக அவன் கையைத் தட்டி விட்டாள்.

"எதுக்கு இங்க வந்த? என்ன வேண்டும் உனக்கு?" என்று எரிச்சலில் கேட்டாள். மூச்சு வாங்க நின்றவன் கொஞ்சம் பொறு என்று சைகை செய்தான்.

அவனுக்குத் தண்ணீடமிருந்த நீரை எடுத்து நீட்டவும் வாங்கிப் பருகினான். அது அமெரிக்க வடிவமைப்பு போன்ற நீர் குடுவை சில்லென்று இருக்க இதமாகப் பருகி முடித்தான்.

"என்ன?" என்று இடையில் கை வைத்து அசட்டையாகக் கேட்ட மெர்லினை பார்த்து, மெதுவாக ஆரமபித்தான்.

இளவழகன் காலத்துல நான் விரும்பறதே உனக்குத் தெரியலை. பட் கல்யாணம் வரை பேச்சு போய் இறந்துட்டோம்.

அபரஞ்சி காலத்துல நீயும் என்னை விரும்பிட்ட பட் இருவரும் ஒர் சின்னப் பார்வையோ காதலா பார்த்துக்கலை.

இப்ப...." என்று சுற்றி முற்றி பார்த்தான். சிசிடிவி இருக்கவும் அவளைத் தரதரவென வேறுபக்கம் இழுத்து வந்தவன் சிசிடிவி இல்லையென ஊர்ஜிதம் செய்து கொண்டான்.

"இப்ப...? அதுக்கு என்ன?" என்று கைகட்டி படிக்கட்டுப் பக்கம் பார்த்தாள். அவனோ, "அதான்... இப்ப நீ லவ்வும் பண்ணலை. எனக்கு ஏதாவது என்றால் திரும்ப மறுப்பிறவி எல்லாம் எனக்கு வேண்டாம். அதுக்குப் பதிலா ஒரே ஒர் கிஸ் பண்ணிக்கறேன்" என்று முத்தமிட்டான்.

விழிகள் விரிந்து அவனின் செய்கயை புரிந்து தடுப்பதற்குள் அதரத்தை சிறையாக்கி ருசித்து இருந்தான். தற்காலத்தின் சர்வேஷ்.

இளவழகனோ இது சரியா... தவறா என்ற ரீதியில் சர்வேஷை காண அவனோ வேறு உலகத்தில் சஞ்சரித்து முடித்து அவளை விடுவித்தான்.

"இது போதும்... இந்த ஜென்மத்துக்கு... இனி வாழ்வா சாவா எதுனாலும் பார்த்துப்பேன். அப்பறம் நான் உன்னைச் சந்திச்சதை யாரிடமும் பகிராதே. அது உனக்கு ஆபத்து தான். உன் நிழலையும் சந்தேகப்படு. பை டியர் இதைச் சொல்லி கிஸ் பண்ண தான் வந்தேன்." என்று ஓட்டமெடுத்தான்.

இளவழகன் கரும்புகையோ இரு ஜென்மம் கட்டிக்காத்த நற்பெயர் இந்தக் கலியுக காதலனால் அழிந்திடுமோ என்று மெர்லினை கண்டு நிற்க, "மெர்லினோ இடியட் ஸ்டுபிட் ...." என்று முணங்கினாலும் சர்வேஷ் சென்று விட்டதை அறிந்து அங்கிருந்த கண்ணாடியில் தன் லிப்ஸ்டிக் இடம் கலந்து இருக்க டிஸு கொண்டு சிரித்தபடி துடைத்தாள்.

அவளின் சிரிப்பு இளவழகனுக்குப் பெண்ணவளின் மனயெண்ணங்களை வெளிப்படுத்த, இரண்டு ஜென்மத்தின் காதலில் முதல் முறை அபரஞ்சி மனம் அறிந்தான்.

ஆனால் யவனரதி....? தன் காதலை உணரவில்லையே...? என்றவனின் கவலை புறம் தள்ளி மெர்லின் கூடப் புறப்பட்டான்.

கதவை திறந்து உள்ளே வரவும் ஜாஸ்மின் அவளைப் பிடித்துக் கண்களை ஆழ நோக்கினாள்.

''ஆன்டி அங்கிள் இந்தியாவுக்குப் புறப்பட்டு வந்துட்டு இருக்காங்க. இன்னிக்கு எப்படிப் போச்சு நாள். புது அனுபவம் இருக்கா?" என்று கேட்டதும்

"பச் அஸ்யூஸ்வல்... நத்திங் இன்ட்ரஸ்டிங்." என்று கைப்பையைத் தூரயெறிந்து குளியலுக்குச் சென்றிருந்தாள்.

குளித்து முடித்து வந்தவளின் கையைப் பற்றி ஜாஸ்மின் புருவமுடிச்சோடு "எதுவும் நடக்கலை... நத்திங் இன்ட்ரஸ்டிங் அப்படித் தானே...?" என்று மீண்டும் கேட்க மெர்லினுக்குச் சற்றே நடுங்கியது.

கையை உருவிக்கொண்டு "இது அங்க வாங்கியது. ஜஸ்ட் லைக் தட். அவ்ளோ தான்." என்றாள்.

"இது கோல்டு மாதிரி இருக்கு?" என்று அடுத்தடுத்த கேள்வியை இறக்கினாள் ஜாஸ்மின்.

"நோ... இது ஜஸ்ட் கோல்டு கலர் ஓன்லி. வாட்டர் படவும் போயிடுமாம். பட் கலெக்ஷன் நல்லா இருக்கு அதனால வாங்கினேன்." என்று நழுவினாள்.

"இது வளையல். இதோட ஜோடி வளையல் எங்க?" என்று கேட்டாள். அதில் அதட்டல் கூடுதலாக இருந்தது.

"இல்லை... இது பிரேஸ்லேட் மாடல். ஒன்று தான். கொஞ்சம் கையை விடறியா... அம்மாவிடம் பேசணும்" என்று கூறவும் விடுவித்த ஜாஸ்மின் "அவங்க பிளைட் ஏறியிருப்பாங்க. இப்போ போனை எடுக்க மாட்டாங்க." என்று அறைக்குள் சென்றாள்.

தனியாக நின்ற மெர்லின் அவளது அறை கதவை தாழிட்டாள்.

எத்தனை கேள்வி அம்மா அப்பா கூட இத்தனை கேட்டதில்லை. இந்த ஜாஸ்மின் எனனவோ கார்டியன் மாதிரி கேள்வியா குடையறா என்று அலுத்துக் கொண்டு கண்ணாடியில் வளையலையும் தன்னையும் கண்டவள் கண்ணீர் உகுக்க, இதே போல ஒர் பிரேஸ்லேட் தானே இளா நீ அன்று பாகீரதிக்குப் பரிசளிக்கச் செய்தாய் என்று கண்ணீர் உகுத்தியவள். இல்லை அது பாகீரதிக்கு பரிசளிக்க நீ எடுத்து வந்திருக்க மாட்டாய். எனக்காகக் கொண்டு வந்து இருப்பாய் அவள் அதனைத் தனக்குயென மாற்றி என் மனதை உன்னிடம் சரியாமல் மாற்றி இருப்பாள். அப்படித் தானே இளவழகனா? என்ற கண்ணாடியை பார்த்துக் கண்ணீர் கோடுகளோடு கேட்டு முடித்தாள்.

இளவழகனுக்கோ தன் காதலை யவனரதி உணர்ந்து விட்டாளே... என் காதலை தடுக்க அன்றும் சூழ்ச்சி தான் நடந்துள்ளது அதனால் தான் என் யவனரதி எட்டி நின்று இருக்கின்றாள் என்று ஆனந்தம் கொண்டான்.

ஏனோ இன்றே கூடத் தன் ஆன்மா சாந்தி அடைந்திருக்கும். இது போதும் அவள் காதல் தனக்கு உள்ளதென என்ற நிம்மதியில் ஆனால் இளவழகனின் மனம் யார் அந்தக் கள்வன் உறவை உயிர்காதலை அழித்து இரு ஜென்மம் ஆன்மாவாக(பேயாக) அலைய வைத்துத் தன்னை வதைத்தது. அவனை உயிர் உருவும் வரை என் ஆன்மா நிம்மதியுராது என்று திடமாக நின்றது.

சர்வேஷோ "முத்தம் முத்தம் முத்தமா மூன்றாம் உலக யுத்தமா ஆசை..." என்றவன் பாடல் அப்படியே நின்றது.

"வாடா ராசா... ஆடி பாடி வந்துட்டு இருக்க, டிராவல்ஸ் போன் பண்ணினா நீ ஏதோ தண்ணிரில் விழுந்து அப்செட் ஆகிட்டனு டிரைவர் சொல்லறான். நீ என்னடானா பாடிட்டு ஆடிட்டு வர்ற." என்று கத்தினான்.

"சாரி டா மச்சான். கொஞ்சம் சந்தோஷமா இருந்துட்டேன். ஆமா... என்ன தேடி எதுக்குப் போன் போட்ட?" என்றான்.

"அதுவா.... எப்பவும் மாதம் இரண்டாம் வாரம் மாலை ஆசிரமத்துக்குப் போய் ஆட்டம் போடுவோம். இன்னிக்கு நீ வரலை. என்னாச்சு... எப்பவும் இந்த நாளை மறக்காம குழந்தைகளோட நேரம் ஒதுக்குவ." என்றான்.

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்க தான் அதனால மாதத்துக்கு இரண்டாம் வாரம் போவேன். இன்னிக்கு மறந்துட்டேன். பட் சாந்தனு எனக்குப் பதிலா நீ போனது சந்தோஷம் டா. என்னை எல்லாரும் கேட்டாங்களா...?" என்றான்.

"பின்ன கேட்காமலா... நீ தான் அங்க ஆடி பாடி சேட்டை பண்ணுவியே... இன்னிக்கு ஒரு பொண்ணு உன்னைத் தேடி வந்ததா சொன்னாங்க. ஒரு வேளை அந்த அபரஞ்சி தான் அவளா இருக்குமோனு தான் உன்னைத் தேடினேன்." என்றான்.

"அபரஞ்சியா இருக்காது. ஓகே... நீ அந்தப் பொண்ணைப் பார்த்தியா.?" என்றான்.

"இல்லை டா... அது கூட ஒரு ஆளும் வந்தான் கொஞ்சம் ஒரு மாதிரி அதனால பார்க்க முடியலை. திரும்பி இருந்தா அப்படியே கேட்டுட்டு பத்து நிமிடத்துல போயிட்டா." என்றான் சாந்தனு.

"பொண்ணா.... ஒர் ஆளா? ஒரு மாதிரினா...?" என்று சர்வேஷ் விழித்தான்.

"ம்ம்... உன் தலையற்ற கரும்புகையைத் தேடி வந்தது போலத் தாடி வைத்த புதர் மனிதன். உன்னைப் போட்டு தள்ள வந்துருப்பான்." என்று விளையாட்டாய்க் கூறினான்.

-🩸🩸🩸🩸🩸

-பிரவீணா தங்கராஜ்.

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...