தனிமை
வரமும் சாபமும் கொண்டது தனிமை
நினைவுகளின் ஜாலத்தில் முழ்குவது இனிமை
நேரங்கள் கடந்திட தவிப்பது முதுமை
காதலில் பைத்தியம் பட்டம் கொடுத்திட
துணையின் அருகில் கெஞ்சிடும் இளமை
தத்தளிக்கும் மனதிற்கு தனிமையொரு புத்துணர்வு
கசந்திடும் நினைவுகளும் சுவைத்திட தோழமை
நம்மை செதுக்க செம்மைபடுத்தும் வலிமை
வரமும் சாபமும் என்றும் கொண்டதே தனிமை
- பிரவீணா தங்கராஜ்
Comments
Post a Comment